Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்

08 August 2025

1754621602_5127041_hirunews.jpg

காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

ஹமாஸைத் தோற்கடிக்கவோ அல்லது கடத்தப்பட்டவர்களைத் திரும்பப் பெறவோ முடியாது என்று அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலானோர் நம்பியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அலுவலகம் கூறியுள்ளது. 

எனினும் இந்த நடவடிக்கை பேரழிவு விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது. 

அத்துடன் பணயக்கைதிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளது. 

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பிரதேசத்திற்குள் கூடுதல் உதவிகளை அனுமதிக்கவும், தமது நட்பு நாடுகள் உட்பட சர்வதேச அழுத்தத்தை, இஸ்ரேல் எதிர்கொள்ளும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்தநிலையில், காசா நகரத்தை ஆக்கிரமிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐந்து கொள்கைகள் ஆகியவற்றை விபரிக்கும் ஒரு அறிக்கையை நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

இது அமைச்சரவை பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது. 

ஹமாஸ் அமைப்பை நிராயுதமாக்குவது. 

அனைத்து பணயக்கைதிகளையும் - உயிருடன் இருப்பவர்களையும் மற்றும் இறந்தவர்களையும் திருப்பி அனுப்புதல். 

காசா பகுதியை இராணுவ மயமாக்குதல். 

காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடு. 

ஹமாஸ் அல்லது பாலஸ்தீன அதிகார சபை அல்லாத ஒரு மாற்று சிவில் அரசாங்கத்தை நிறுவுதல் என்பன இந்த ஐந்து அம்சத் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

https://hirunews.lk/tm/413568/israeli-defense-cabinet-approves-plan-to-capture-gaza-city

  • கருத்துக்கள உறவுகள்

காசா நகரத்தினை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் - இஸ்ரேல் நிராகரிப்பு

Published By: RAJEEBAN

09 AUG, 2025 | 11:22 AM

image

காசா நகரத்தினை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் உலகம் நாடுகள் வெளியிட்டுள்ள கண்டனத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

இஸ்ரேலை கண்டித்து தடைகளை விதிக்கப்போவதாக எச்சரிக்கும் நாடுகளால் எங்கள் உறுதிப்பாட்டை குலைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் தெரிவித்துள்ளார்.

காசாவை முழுமையாக கைப்பற்றும்  இஸ்ரேலின் திட்டத்திற்கு ஐநாவும் உலக நாடுகள் பலவும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

ஜேர்மனி இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை நிறுத்தியுள்ளது.

மோதல் மேலும் விரிவடைவது மேலும் பாரிய இடம்பெயர்வை உருவாக்கும்,மேலும் கொலைகளை மேலும் துயரத்தை அர்த்தமற்ற அழிவை இரத்தக்களறியை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் இது தவறான நடவடிக்கை மேலும் இரத்தக்களறியை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/222146

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2025 at 07:27, கிருபன் said:

இந்த நடவடிக்கை பேரழிவு விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது. 

On 8/8/2025 at 07:27, கிருபன் said:

பணயக்கைதிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளது. 

1 hour ago, ஏராளன் said:

இஸ்ரேலை கண்டித்து தடைகளை விதிக்கப்போவதாக எச்சரிக்கும் நாடுகளால் எங்கள் உறுதிப்பாட்டை குலைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் தெரிவித்துள்ளார்

உலகிலே அமெரிக்காவோ,ரஸ்யாவோ,சீனாவோ, ஐரோப்பாவோ வல்லரசுகளல்ல என்பதை இஸ்ரேல் நிரூபித்து வருகிறதா? மாற்றங்கள் எப்போதும் என்நேரமும் நிகழ்வது. ஆனால், இஸ்ரேலைப் பாதுகாக்கும் உரிமை உண்டென்று உலக நாடுகள் தடவிக் கொடுத்ததன் விளைவாக, அதனைப் பலஸ்தீனர்களை அழிப்பதற்கான முன்மொழிவாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது. தற்போது உலகம் ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கொப்பாகியுள்ளது. அழிவுகரமான ஆயுதங்களை மக்கள்மேல் கொட்டிக் கொடிகட்டிப் பறக்கும் உலக நாடுகள் இருக்கும்வரை போரழிவுகளும் தொடரவே செய்யும். காலத்துக்குக் காலம் இனங்களின் பேரழிவு தொடர்கிறது.

முள்ளிவாய்காலில் தமிழின அழிவுக்கு வித்திட்ட உலகுக்கு மனித உரிமை என்று பேசும் தகமை இல்லை. ஐ.நா என்பதெல்லாம் வெற்றுக்காகிதங்களே. ஒரு பயனும் கிடையாது. ஈழத் தமிழினமும் இறுதி நம்பிக்கையாக ஐ.நாவைப் பார்க்கிறது. ஆனால், ஐ.நாவால் வெளித்தெரியும் பலஸ்தீனப் பேரழிவையே தடுக்க முடியவில்லை. வெளியே முழுமையாகத் தெரியாத ஈழத் தமிழினத்தின் இன அழிப்பை எப்படிக் கையாளும்?

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

காசாநகரை முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - இஸ்ரேலிய தலைநகரில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: RAJEEBAN

10 AUG, 2025 | 09:51 AM

image

காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலிய பிரதமர் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும், பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

GumIxILWQAA83ln.jpg

காசாநகரை முழுமையாக கைப்பற்றும் நடவடிக்கை இராணுவரீதியிலான தீர்மானம் இல்லை, இது நாங்கள் மிகவும் நேசிக்கும் மக்களிற்கான மரண தண்டனை என ஹமாசிடம் பணயக்கைதியாக உள்ள ஒம்ரி மிரானின் மனைவி  ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி இதில் உடனடியாக தலையிடவேண்டும் என மன்றாடினார்.

இந்த அரசாங்கம் இனவெறிபிடித்தது, அவர்கள் நாட்டின் நலனிற்கு எதிராக அனைத்தையும் செய்கின்றனர் என 69 வயது ரமி டார் தெரிவித்திருந்தார். அவரும் டிரம்ப் பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

வெளிப்படையாக தெரிவிப்பது என்றால் நான் எதிலும் நிபுணத்துவம் உள்ளவல் இல்லை, ஆனால் இரண்டு வருட யுத்தத்தின் பின்னர் வெற்றி என எதுவும் இல்லை என தனது கணவர் இரண்டு பிள்ளைகளுடன் பேரணியில் கலந்துகொண்ட 45 யனா தெரிவித்தார்.

GumIxHvWwAATf0Z.jpg

இரண்டு தரப்பும் மேலும் உயிர்களை இழப்பது ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே என அவர் கருத்து  தெரிவித்துள்ளார்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள்  பணயக்கைதிகளின் படங்களுடன் காணப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் இஸ்ரேலிய அரசாங்கம் குறித்து சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், பெஞ்சமின் நெட்டன்யாகு மேலும் யுத்தத்தை தீவிரப்படுத்துவதை  அமெரிக்க ஜனாதிபதி தடுத்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

GumIxHsW4AATAyp.jpg

இஸ்ரேலிய இராணுவத்தினால் கொல்லப்பட்ட காசா சிறுவர்களின் படங்களுடனும் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்பட்டனர்.

https://www.virakesari.lk/article/222200

  • கருத்துக்கள உறவுகள்+

1000 இற்கும் மேற்பட்ட அப்பாவி இஸ்ரேலியர்களை கொடூரமாக கொன்று குவித்த பாலஸ்தீன பயங்கரவாதிகள் முற்றாக துடைத்தழிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் கங்கணம் கட்டி நிற்கும் செயலானது வரவேற்கத்தக்கது.

விரைவில் முழு இஸ்ரேலையும் மீட்டிட வாழ்த்துக்கள். எக்காலத்திலும் புனித இஸ்ரேலிய மண்ணில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருக்கக் கூடாது.

நான் மக்கள் கொல்லப்படுவதற்கு மிகவும் வருந்துகிறேன், எனினும் பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்பட்டே ஆக வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் திட்டங்களுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம்

11 August 2025

காசா நகரத்தை "கட்டுப்பாட்டில் கொண்டு வரும்" இஸ்ரேலின் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கான, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கண்டித்துள்ளனர். 

எனினும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான "சிறந்த வழி" இது மாத்திரமே என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். 

இந்தநிலையில் திட்டமிட்ட தாக்குதல் நகர்வு மிக விரைவில் ஆரம்பிக்கும் என்றும் அது நகரும் என்றும் "காசாவை ஹமாஸிடமிருந்து விடுவிக்கும்" என்றும் நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். 

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளே பட்டினியால் வாடுகின்றனர். 

மாறாக இஸ்ரேல்,காசா மக்களை பட்டினியில் வைத்திருப்பதாக கூறப்படுவதை அவர் மறுத்துரைத்தார். 

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அவசரக் கூட்டத்தில் இஸ்ரேல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் இந்த திட்டத்தினால், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளன. 

இஸ்ரேலின் இந்த திட்டம், பணயக்கைதிகளை பாதுகாக்க எதுவும் செய்யாது, மேலும் அவர்களின் உயிருக்கு மேலும் ஆபத்தையே விளைவிக்கும் என்று அந்த நாடுகள் எச்சரித்துள்ளன. 

எனினும் அமெரிக்கா இஸ்ரேலைப் பாதுகாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. 

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், தமது நாடு அயராது உழைத்து வருவதாக அமெரிக்க தூதர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையில் இஸ்ரேல் முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர். 

இந்த திட்டம், பணயக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் தமது அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.

https://hirunews.lk/tm/413994/various-countries-condemn-israels-plans

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.