Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

08 AUG, 2025 | 08:40 AM

image

இந்திய தேர்தல் ஆணையம்  மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளா

rahul.jpg

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் "வாக்கு திருட்டு" நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அவர், 5 வழிகளில் இந்த மோசடி அரங்கேறி உள்ளதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி பெங்களூரு மத்திய தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் நடத்திய விசாரணையின் கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில், பெங்களூரு மத்திய தொகுதியில் பா.ஜ.க 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது; பெங்களூரு மத்திய தொகுதியில் 1,00,250 போலி வாக்குகளை உருவாக்கி தேர்தல் திருடப்பட்டதாகக் கூறினார். மகாதேவபுரா தொகுதியின் தரவுகளை ஆய்வு செய்யவே பல மாதங்கள் ஆனது என்றும் அவர் கூறினார்.

மகாதேவபுரா தொகுதியில் பெரும் வித்தியாசம்

பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதாகவும், மகாதேவபுரா தவிர மற்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். மகாதேவபுராவில் 1,14,046 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால், மக்களவைத் தொகுதியை அது கைப்பற்றியது.

ஒரு தொகுதியிலிருந்து மட்டும் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசம் எப்படி வந்தது என்று நாங்கள் ஆய்வு செய்தோம். இது மிகப்பெரிய சமநிலையற்ற தன்மை. மகாதேவபுரா தொகுதியை ஆய்வு செய்தபோது, 6.5 லட்சம் மொத்த வாக்குகளில் 1,00,250 வாக்குகள் 5 வெவ்வேறு வழிகளில் திருடப்பட்டதைக் கண்டறிந்தோம்” என்று அவர் கூறினார்

5 விதமான முறைகேடுகள் - அம்பலப்படுத்திய ராகுல்காந்தி

ராகுல் காந்தி, இந்த வாக்குகள் 5 வழிகளில் திருடப்பட்டதாக விளக்கினார். போலி வாக்காளர்கள் (Duplicate voters) ஒரே நபரின் பெயர் மற்றும் புகைப்படம் பல வாக்குச் சாவடிகளில் இடம்பெற்றது. போலியான மற்றும் செல்லாத முகவரிகள் (Fake and invalid addresses) முகவரி இல்லாத அல்லது சரிபார்க்க முடியாத வாக்காளர்கள். ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் (Bulk voters in a single address) சிறிய வீட்டில் பல குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். செல்லாத புகைப்படங்கள் (Invalid photos) வாக்காளர் பட்டியலில் புகைப்படங்கள் இல்லாத அல்லது அடையாளம் காண முடியாத அளவுக்கு சிறிய புகைப்படங்கள் உள்ள வாக்காளர்கள். படிவம் 6 தவறான பயன்பாடு (Misuse of Form 6) புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் படிவம் 6ஐ பயன்படுத்தி முதியவர்கள் மீண்டும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டது.

ஆதாரங்களுடன் விளக்கிய ராகுல்காந்தி

இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர் என கூறினார்.

போலி வாக்காளர்கள்: குர்கிரத் சிங் டாங் என்ற ஒருவரின் புகைப்படம் 4 வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் இருந்ததாக சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இதேபோல் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்ற பெயரில் கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

போலியான முகவரிகள்: “ஹவுஸ் எண் 0”, தந்தையின் பெயர் “ilsdfhug,” “dfoigoidf” போன்ற செல்லாத தகவல்கள் கொண்ட 40,009 வாக்காளர்கள் இருந்தனர்.

ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள்: ஒரு சிறிய வீட்டில் 80 வாக்காளர்கள் வசிப்பதாகவும், “153 Beire club” என்ற மதுபானக் கடையில் 68 வாக்காளர்கள் வசிப்பதாகவும் ராகுல் காந்தி படங்களுடன் விளக்கினார்.

படிவம் 6 தவறான பயன்பாடு: 70 வயதுடைய ஷகுன் ராணி என்ற பெண், புதிய வாக்காளர் படிவம் 6ஐப் பயன்படுத்தி 2 முறை பதிவு செய்து, 2 வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களித்துள்ளார். புதிய வாக்காளர்கள் எனப் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

தேர்தல் ஆணையம் மீது குற்றம்

“இது ஒரு தொகுதியில் நடந்த கிரிமினல் குற்றம். இது போன்ற குற்றங்கள் நாடு முழுவதும் பெரிய அளவில் நடந்து வருவதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இது தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக இணைந்து செய்த சதி,” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் ஆதாரங்களை அழித்து வருவதாகவும், நீதித்துறை இதில் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/222092

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போலி வாக்காளர் சர்ச்சை: ராகுல் காந்தியின் 5 குற்றச்சாட்டுகளும் தேர்தல் ஆணையத்தின் பதிலும்

ராகுல் காந்தி

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ராகுல் காந்தி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

7 ஆகஸ்ட் 2025

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (2025 ஆகஸ்ட் 7) செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் "வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் மோசடி" நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டினார்.

"இயந்திரம் மூலம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வழங்காதது, மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவைத் 'திருட' பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பதற்கான சான்றாகும்" என்று ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் 'தவறாக வழிநடத்துவதாக' இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், அவர் தனது புகாரை கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தான் சொல்வது உண்மை என்று ராகுல் காந்தி நம்பினால், அவர் பிரமாணப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டு புகார் அளிக்க வேண்டும், அல்லது அவர், இந்திய மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.

மகாராஷ்டிரா தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி கூறியதை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிராகரித்தார்.

"ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார், பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். கடந்த முறை மகாராஷ்டிராவில் 75 லட்சம் வாக்குகள் அதிகரித்ததாகக் கூறினார், இப்போது ஒரு கோடி வாக்குகள் அதிகரித்ததாகக் கூறுகிறார். பொய்யான தகவல்களைச் சொல்லி தனது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார்" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, மகாராஷ்டிராவில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மக்களவைத் தேர்தலின் போது கர்நாடகாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக ஆதாரங்களை ராகுல் காந்தி வழங்கினார்.

வாக்காளர் பட்டியல் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய முக்கிய கூற்றுக்கள் பற்றிய ஒரு பார்வை.

தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI

1: 'மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி' குற்றச்சாட்டு

முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்:

  • மகாராஷ்டிராவில், ஐந்து மாதங்களில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதற்கான சந்தேகத்தை எழுப்பியது, இந்த சந்தேகத்தை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் பகிரங்கமாகக் கூறியிருந்தோம்.

  • மகாராஷ்டிராவின் மக்கள் தொகையை விட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

  • ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, வாக்கு சதவிகிதத்தில் திடீரென ஒரு பெரிய ஏற்றம் ஏற்பட்டது.

  • சட்டமன்றத் தேர்தல்களில் எங்கள் கூட்டணி முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டது, ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதே கூட்டணி வெற்றி பெற்றது. இது மிகவும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது.

  • மாநில அளவில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதைக் கண்டோம். இது குறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தோம்.

  • மாநிலத்தில் 40 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

2: கர்நாடகா தேர்தல் குறித்து ராகுல் காந்தி என்ன சொன்னார்?

ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள்:

  • கர்நாடக மக்களவைத் தேர்தலில், உள் கருத்துக் கணிப்புகள் 16 இடங்களை வெல்லும் என்று கணித்திருந்தன, ஆனால் காங்கிரசுக்கு 9 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

  • கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் மற்றும் மொத்த வாக்காளர்கள் இருப்பதை தங்கள் ஆய்வில் காங்கிரஸ் கண்டறிந்தது.

  • கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில், 6.5 லட்சம் வாக்குகளில், 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் 'திருடப்பட்டுள்ளன'.

  • வெவ்வேறு வாக்குச்சாவடிகளிலும் வெவ்வேறு மாநிலங்களிலும் வாக்களித்த சுமார் 11 ஆயிரம் வாக்காளர்கள் கர்நாடகாவில் வாக்களித்தனர்.

  • இந்த வாக்காளர்களின் பெயர்கள், வாக்குச்சாவடி எண்கள் மற்றும் முகவரிகளின் பட்டியல் எங்களிடம் உள்ளது.

வாக்குச் சாவடி, ராகுல் காந்தி

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

3: 'போலி வாக்காளர்'

ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு:

  • பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளின் வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  • ஒரே வாக்காளர், பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா தொகுதியிலும், கிழக்கு லக்னௌவிலும், மும்பையில் கிழக்கு ஜோகேஸ்வரி தொகுதியிலும் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

  • தனது ஆய்வுக் குழு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை அடையாளம் கண்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார். அவர்களின் முகவரிகள் தவறானவை அல்லது முகவரிகள் இல்லை அல்லது அந்த முகவரிகளில் அவர்கள் வசிக்கவில்லை.

  • ஒவ்வொரு வீட்டு முகவரியிலும் 80 மற்றும் 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தனி வீடுகளில் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது.

  • புதிய வாக்காளராகப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் படிவம் 6, பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற 33,692 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

4: ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகள்

ராகுல் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்:

  • ஹரியானாவில், மொத்தம் இரண்டு கோடி வாக்காளர்கள் இருந்த எட்டு தொகுதிகளில் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையிலான வித்தியாசம் வெறும் 22,779 வாக்குகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

  • இங்கு ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் திருடப்பட்டன.

  • 90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொன்ன கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் கட்சி சுமார் 60 இடங்களைப் பெறும் என்றும் தெரிவித்தன.

  • கிட்டத்தட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தையும் பாஜக தவறாக நிரூபித்து, பெரும்பான்மையை எளிதாகக் கடந்து 48 இடங்களை வென்றது.

5: தேர்தல் ஆணையம் பற்றி ராகுல் காந்தி என்ன சொன்னார்?

"2024 மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் மோதி ஆட்சியில் நீடிக்க வேண்டுமானால் 25 இடங்களைத் திருட வேண்டியிருந்தது. அந்தத் தேர்தலில், பாஜக 33 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 25 இடங்களை வென்றது" என்று ராகுல் காந்தி கூறினார்.

"இந்திய ஜனநாயகத்தை அழிக்காமல் பாதுகாக்க பாடுபடுங்கள் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் சொல்கிறோம். இந்தத் தகவல்கள் அனைத்தும் எங்கள் கூற்றுக்கு முக்கிய சான்றாகும். கர்நாடகாவின் தகவல்கள் மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு வாக்காளர் பட்டியலும் இப்போது ஒரு சான்றாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.

"இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், இந்தியக் கொடிக்கும் எதிரான குற்றம் என்பதைவிட குறைவானதில்லை. இது, ஒரு சட்டமன்றத்தில் நடந்த குற்றத்திற்கான சான்று. இந்த வடிவத்தை அவதானித்தால் இதனை நாங்கள் முழுமையாக உறுதியாக நம்புகிறோம். இதை நாங்கள் சரியாக கவனித்து ஆய்வு செய்திருக்கிறோம்."

"தேர்தல் ஆணையம் எங்களுக்குத் தரவுகளைத் தரவில்லை, சிசிடிவி காட்சிகளை அழிக்கப் போவதாக அவர்களே கூறினார்கள்... அதனால்தான் அவர்கள் அந்தக் காட்சிகளை அழிக்க விரும்பினார்கள்" என்று ராகுல் காந்தி கூறினார்.

தேர்தல் ஆணையம், பாஜக, வாக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுவதாக சில தரவுகளை வெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

ராகுலின் குற்றச்சாட்டுகள் குறித்து நிபுணரின் கருத்து என்ன?

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது என்று கூறும் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான அதிதி ஃபட்ணீஸ், "இது தேர்தல் ஆணையத்தை சுற்றிவளைக்கும் ஒரு செயல். தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை ஏற்கவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு கையாள்வது என்பதுதான் தேர்தல் ஆணையத்திற்கு சோதனையாக இருக்கும்" என்று கூறினார்.

"தேர்தல் ஆணையம் போன்ற பாரபட்சமற்ற நிறுவனம் ஒன்றிற்கு எதிராக முதன்முறையாக இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம் நேர்மையற்ற செயலைச் செய்ததால் பல வாக்காளர்களின் கைகளில் இருந்த வாக்கு என்ற ஆயுதம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையம் அவரிடம் பிரமாணப் பத்திரம் கேட்டுள்ளது, எனவே இது தர்க்கரீதியானது என்று நினைக்கிறேன். ராகுல் காந்தியிடம் வலுவான ஆதாரம் ஏதேனும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்க மாட்டார்."

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளின் நேரம் குறித்து கருத்து தெரிவித்த அதிதி ஃபட்ணீஸ், பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்த பிரசாரம் அதாவது SIR தொடர்பாக சர்ச்சைகள் தொடரும் நேரத்தில், எதிர்க்கட்சிகள் இதை ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்குகின்றன.

'பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அரசியல் பிரச்னைகளில் ஒன்றாக மாறும்' என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிரா, தேர்தலில் வாக்கு திருட்டு, ராகுல் காந்தி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

பாஜக என்ன சொன்னது?

மகாராஷ்டிரா தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி கூறியதை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நிராகரித்தார்.

"ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்லி வருவதோடு, பொய்யான அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். இதை நான் எதிர்க்கிறேன். கடந்த முறை மகாராஷ்டிராவில் 75 லட்சம் வாக்குகள் அதிகரித்ததாக அவர் கூறினார், இப்போது ஒரு கோடி வாக்குகள் அதிகரித்ததாகக் கூறுகிறார். பொய்களைச் சொல்லி தனது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார். அவரது கட்சி தனது இருப்பை இழந்துவிட்டது என்பது அவருக்குத் தெரியும். அடுத்த தேர்தலில் பொதுமக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள்" என்று மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி கூறினார்.

"மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தோற்றீர்கள். மக்களவைத் தேர்தலில் மேலும் அதிக இடங்களை இழந்தீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பாக செயல்பட்டது. கர்நாடகாவில், சட்டமன்றத்தில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வந்தாலும் மக்களவை தேர்தல் முடிவுகள் பாதகமாக இருந்தன. மகாராஷ்டிராவில் சட்டமன்றத்திலும், மக்களவையிலும் நீங்கள் வெற்றி பெறவில்லை. இப்போது, நாட்டிற்கும் உலகிற்கும் நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள்?"

"தர்க்கமும், புத்திசாலித்தனமும் முக்கியம். இந்தியாவில் தேர்தல்கள் முறையாக நடத்தப்படுவதில்லை என்று உலகிற்குச் சொல்ல முயற்சிக்கிறீர்களா? ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் சென்று இந்திய அமைப்புகளை அவதூறு சொகிறார். தேர்தல்களில் மோசடி நடத்தப்பட்டது உண்மையாக இருந்தால், ஜார்க்கண்டில் உங்கள் வேட்பாளர்கள் எப்படி வெற்றி பெற்றனர்? ஜம்மு காஷ்மீரில் நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள்?"

ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்புப் பற்றி பேசிய பாஜக எம்.பி சம்பித் பத்ரா, "இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் குறித்தும் பேசினார். ராகுல் காந்தி அரசியலமைப்பு நிறுவனம் ஒன்றை தாக்கிப் பேசுவது இதுவொன்றும் முதல் முறை அல்ல. தான் வெற்றி பெற்ற மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை அவர் ஏன் நம் முன் முன்வைக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cewyd0v218no

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிலேயே தேர்தல் நேரங்களில் அண்டா குண்டா குக்கர் பணம் என்று பகிரங்கமாகவே கொடுக்கிறார்கள்.

ஆனாலும் எங்காவது யாரையாவது பிடித்தார்களா என்றால்

அது ஓரிரு எதிர்க் கட்சிகளாகவே இருக்கும்.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில்

தேர்தல் ஆணையம் ஊழலில் ஊறிவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் காந்தி கிளப்பிய ‘வாக்கு திருட்டு’ விவகாரம்: தேர்தல் ஆணையம், பாஜக எதிர்வினை என்ன?

Published By: RAJEEBAN

10 AUG, 2025 | 01:05 PM

image

புதுடெல்லி: கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து மிகப் பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். இது குறித்த தரவுகளை வெளியிட்ட அவர், ஐந்து விதமாக ‘வாக்குகள் திருட்டு’ நடந்துள்ளதாக விவரித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி அணுகுண்டு வீசிவிட்டார் என்று பரபரப்புகள் கூடிய நிலையில், அவரது குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். கூடவே, ‘இது ராகுலின் உச்சபட்ச விரக்தியின் வெளிப்பாடு மட்டுமே’ என்று அவரை பாஜக கிண்டல் செய்துள்ளது. 

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே திட்டமிடப்படுகின்றன. இதற்கு, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதிக்கு கிடைத்த முடிவுகளே சாட்சி.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 16 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணிக்கை கிடைத்தது. ஆனால், நாங்கள் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். வெற்றி வாய்ப்புள்ள 7 தொகுதிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம். இந்த தோல்வி குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம்.

இந்த விரிவான ஆய்வில், பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து ஐந்து விதமாக வாக்குகள் திருடப்பட்டது தெரியவந்தது. 1. போலி வாக்காளர்கள், 2.போலி முகவரி, 3.ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், 4.தவறான புகைப்படங்கள், 5.படிவம் 6 தவறாக பயன்படுத்தப்படுவது என 5 விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில், 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் நடந்திருந்தால், நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள்.

மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 11,965 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போலி மற்றும் தவறான முகவரிகள் மூலம் 40,009 வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் 40,009 வாக்காளர்களுக்கு போலியான வீட்டு முகவரி இடம்பெற்றுள்ளது. இதில் சிலருடைய வீட்டு முகவரயின் கதவு எண் ‘பூஜ்ஜியம்’ என்று இருக்கிறது.

வாக்குகளை யார் திருடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்பு, எங்களிடம் ஆதாரம் இல்லை, ஆனால் இப்போது எங்களிடம் நூறு சதவீதம் ஆதாரம் உள்ளது. அனைத்துத் தரவுகளும் கிடைத்துள்ளன. இந்த வாக்குத் திருட்டு பல தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இப்போது சாக்குப்போக்கு சொல்லக் கூடாது. அவர்கள் எங்களுக்கு சிசிடிவி காட்சிகள் மற்றும் மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும். இது எனது கோரிக்கை மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் ஆகும்” என்று வெகுண்டெழுந்திருக்கிறார் ராகுல் காந்தி.

பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி தரவுகள் - ஆதாரங்கள் என ஆய்வு முடிவுகளைச் சுட்டிக்காட்டி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தேர்தல் ஆணையம் எதிர்வினை: கர்நாடகாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், கர்நாடக மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி இது குறித்து ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ‘கர்நாடகாவில் தகுதியற்ற வாக்காளர்கள் பலர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பல தகுதியுடைய வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் நீங்கள் கூறியுள்ளீர்கள். அவ்வாறு நீக்கப்பட்ட மற்றும் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை 1960 தேர்தல் விதி 20 (உட்பிரிவு 3)-இன் கீழ், உங்களின் கையொப்பத்துடன் அனுப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அப்படி அனுப்பினால் மட்டுமே தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

இதேபோல், மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராகுலுக்கு எழுதிய கடிதத்தில், “வாக்காளர் பட்டியல் பத்தி 3-ன்படி, தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நீங்கள் கூறியதை புரிந்துகொள்ள முடிகிறது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 20(3)(b)-ன் கீழ் இந்தக் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள சத்தியப் பிராமணத்தில் கையொப்பமிட்டு திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கிடையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை உச்சபட்ச விரக்தி என்று சாடியுள்ளது பாஜக. டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா, “ராகுல் காந்தியும், காங்கிரஸும் அவர்கள் வெற்றி பெற்ற இடங்களில் எந்த பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்துவதில்லை. இதுபோன்ற குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பொங்கும் போக்கை தேசம் கவனித்து வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் 99 இடங்களில் காங்கிரஸ் வென்றது. அதைக் கொண்டாடவும் செய்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்கிறது. ராகுல் சொல்வது போல் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவில் சமரசம் செய்திருந்தால், 99 இடங்களில் வெற்றி கிடைத்தது எப்படி? ராகுல் காந்தி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில்தான் காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் ஃப்ரீடம் பார்க்கில் இன்று ‘வாக்கு அதிகாரப் பேரணி’ நடைபெறுகிறது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். ‘நமது வாக்கு, நமது உரிமை, நமது போராட்டம்’ என்ற கோரிக்கையுடன் இப்பேரணி நடைபெறுகிறது. பேரணியாக சென்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/222229

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறந்துபோன’ வாக்காளர்கள் உடன் தேநீர் விருந்து: தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி பதிவு

14 AUG, 2025 | 09:54 AM

image

புதுடெல்லி: இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிஹார் மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களுடன் தேநீர் பருகினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி. இந்த தனித்துவ அனுபவத்தை தனக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பிஹாரை சேர்ந்த ஏழு பேர் குழு புதன்கிழமை அன்று ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் தங்கள் பெயர் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தியிடம் அவர்கள் தெரிவித்தனர்.

பிஹாரில் அண்மையில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை அடுத்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயரில் தங்களது பெயரும் இருப்பதாக இறந்தவர்கள் என காரணம் காட்டி நீக்கப்பட்ட 7 வாக்காளர்கள், ராகுல் உடனான சந்திப்பில் அவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் வாக்கு அளிக்கும் தங்களது உரிமையை திரும்ப பெற உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

“வாழ்வில் எண்ணற்ற சுவாரஸ்ய அனுபவங்களை பெற்றது உணவு. ஆனால், இறந்து போனவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. இந்த தனித்துவமான அனுபவத்தை அளித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி!” என்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதோடு அவர்களுடன் உரையாடிய வீடியோவையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

இதை காங்கிரஸ் கட்சியும் கண்டித்துள்ளது. நீக்கப்பட்ட இந்த ஏழு பேரும் தேஜஸ்வி யாதவின் சட்டப்பேரவை தொகுதியை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. “இது தேர்தல் ஆணைய அதிகாரிகளின் பிழை அல்ல. திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வாக்குரிமை பறிப்பு செயல். வாக்கு திருட்டு அம்பலமான நிலையில், தற்போது பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் முடிவு தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் என காரணம் காட்டி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வாக்காளர்கள் அல்ல அது ஜனநாயகத்துக்கு கொடுக்கப்பட்ட இறப்பு சான்று” என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கம்: பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த உத்தரவை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/222543

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம்': தேர்தல் ஆணையம் இந்த 4 கேள்விகளுக்கு பதில் தந்ததா?

செய்தியாளர் சந்திப்பு, ராகுல் காந்தி, வாக்கு, தேர்தல் ஆணையம், பாஜக

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய ராகுல் காந்தி, வாக்குகளை திருடுவதாக தேர்தல் ஆணையத்தையும் பாஜக அரசாங்கத்தையும் குற்றம் சாட்டினார்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர்கள் இணைந்து பிகாரில் உள்ள சசாரமில் இருந்து 'வாக்காளர் உரிமை யாத்திரை'யைத் தொடங்கினார்கள். பிகாரின் பேரணியில், தேர்தல் ஆணையம் 'வாக்கு திருட்டு' செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சசாரமில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் தேசியத் தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து 'வாக்குகளைத் திருட' செயல்படுவதாகவும், 'பிகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பது வாக்குகளைத் திருடுவதற்கான முயற்சி' என்ற ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொன்னது.

"சட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து உருவாகின்றன, எனவே அந்த அரசியல் கட்சிகளுக்கு இடையே தேர்தல் ஆணையம் எவ்வாறு பாகுபாடு காட்ட முடியும்?" என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேள்வி எழுப்பினார்.

தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கியை வைத்து அரசியல் செய்வதாக என்று கூறிய அவர், "ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ தேர்தல் ஆணையத்திற்கு அனைவரும் சமம்" என்றும் அவர் கூறினார்.

வாக்குத் திருட்டு என குற்றம் சுமத்தும் ராகுல் காந்தி, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகிறார்.

தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பேசிய காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பில் நேரடியாக பதிலளிக்கப்படவில்லை என்று கூறியது.

தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI

1. பீகார் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன்?

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை சசாரத்தில் நடைபெற்ற பேரணியில் பேசியபோது, பிகார் தேர்தலுக்கு சற்று முன்பு, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குரிமையைப் பறிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

"பிகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதன் மூலம், புதிய வாக்காளர்களைச் சேர்த்தும், பிற வாக்காளர்களைக் குறைத்தும், பிகார் தேர்தல் முடிவைத் திருட வேண்டும் என்பது அவர்கள் (பாஜக-ஆர்எஸ்எஸ்) செய்யும் சதியின் இறுதி குறிக்கோள். ஆனால், அவர்கள் இந்தத் தேர்தலைத் திருட நாங்கள் விடமாட்டோம்" என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்தார்.

பிகாரில் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை, திருடப்பட்டதாகவோ அல்லது அவசரமான முறையில் செய்யப்பட்டதாகவோ கூறி எதிர்க்கட்சியினர் குழப்பத்தை உண்டாக்குவதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "வாக்காளர் பட்டியலை எப்போது திருத்த வேண்டும்? தேர்தலுக்கு முன்பா அல்லது பின்பா? தேர்தலுக்கு முன் என்பதே வெளிப்படையான பதில். இதைச் சொல்வது தேர்தல் ஆணையம் இல்லை, ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பும் வாக்காளர் பட்டியலைத் திருத்த வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது. இது, தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ பொறுப்பு" என்று தெரிவித்தார்.

வெள்ளத்தால் பிகார் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் செயல்முறை ஏன் செய்யப்படுகிறது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியது. இது தவிர, தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பிலும் பத்திரிகையாளர்கள் இதே கேள்வியை எழுப்பினார்கள்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், "பிகாரில் 2003ஆம் ஆண்டில் ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் நடத்தப்பட்டது. அப்போது அது வெற்றிகரமாக நடத்தப்பட்டது, இந்த முறையும் அது வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது" என்று கூறியது.

வாக்குச் சாவடி, ராகுல் காந்தி

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

2. வாக்காளர் எண் (EPIC) பிரச்னை ஏன்?

வாக்காளர் எண் தொடர்பாக இரண்டு வகையான 'பிரச்னைகளை' தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது-

ஒருவாக்காளர் எண் - பல நபர்கள்

ஒரே நபர் - பல வாக்காளர் எண்கள்

நாட்டில் சுமார் மூன்று லட்சம் பேரின் வாக்காளர் எண்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. இதன் பிறகு, வாக்காளர் எண் ஒரே மாதிரியாக இல்லாதபடி அவர்களின் எண்கள் மாற்றப்பட்டன.

"ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களின் வாக்காளர் பட்டியலில் இருக்கும்போதும், அவரது வாக்காளர் எண் வேறுபட்டிருக்கும் போதும் இரண்டாவது வகை நகல் ஏற்படுகிறது. அதாவது, ஒரு நபர், பல வாக்காளர் எண்" என்று ஞானேஷ் குமார் கூறினார்.

ஒரு நபர் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டாலும், பழைய வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயரை நீக்காததால் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.

தனது செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான சில உதாரணங்களை அளித்த ராகுல் காந்தி, இதுபோன்ற வாக்காளர்களின் பெயர்களை பிற இடங்களிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையர், "ஒரே பெயரில் பலர் இருப்பதால், ஒருவரின் வேண்டுகோளின் பேரில் தேர்தல் ஆணையத்தால் யாருடைய பெயரையும் நீக்க முடியாது. அதை அவசரமாகச் செய்ய முடியாது. ஒரு நபர் விரும்பினால், அவரே பெயரை நீக்கலாம் அல்லது சிறப்பு தீவிர திருத்த செயல்முறை (SIR) மூலம் அதை சரிசெய்யலாம்" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்

3.'போலி வாக்காளர்கள் மற்றும் வீட்டு எண் பூஜ்ஜியம்' குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன?

2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் மோசடி நடந்ததாகவும், இது பாரதிய ஜனதா கட்சிக்கு பயனளித்ததாகவும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

அதிலும் குறிப்பாக, பெங்களூருவில் உள்ள மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், பல வாக்காளர் அடையாள அட்டைகளில் முகவரி போலியாக இருப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். போலி வாக்காளர்கள் (உதாரணமாக பல மாநிலங்களில் வாக்காளராகப் பதிவுசெய்யப்பட்ட ஒரே நபர்) மற்றும் தவறான முகவரிகள் (உதாரணமாக ஒரு சிறிய அறையில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள்) ஆகியவற்றிகான உதாரணங்களைக் கொடுத்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை 'ஆதாரமற்றது' மற்றும் 'பொறுப்பற்றது' என்று கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. 'வாக்கு திருட்டு' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது கோடிக்கணக்கான வாக்காளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தேர்தல் பணியாளர்களின் நேர்மையின் மீதான தாக்குதல் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

மகாராஷ்டிராவில் வரைவுப் பட்டியல் சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட போது, ஏன் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய தேர்தல் ஆணையம், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் தவறுகள் தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் கூறுகிறது.

வீட்டு எண்ணை பூஜ்ஜியம் என்று குறிப்பிட்டிருப்பது தொடர்பான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டைப் பற்றி கூறிய தேர்தல் ஆணையம், "வீடு இல்லாதவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால், அவர்கள் இரவில் தூங்க வரும் இடமே (சில நேரங்களில் சாலையோரங்களில் அல்லது சில நேரங்களில் பாலத்தின் கீழ்) அவர்களின் முகவரியாக பதிவு செய்யப்படும். அவர்களை போலி வாக்காளர்கள் என்று குறிப்பிட்டால், அது அந்த ஏழை சகோதர சகோதரிகள் மற்றும் வயதான வாக்காளர்களை கேலி செய்வதாக இருக்கும்" என்று பதிலளித்தது.

"கோடிக்கணக்கான மக்களின் வீடுகளின் எண்கள் பூஜ்ஜியமாக உள்ளன, ஏனெனில் பஞ்சாயத்து, நகராட்சி அவர்களுக்கு வீட்டு எண்ணை ஒதுக்கவில்லை. நகரங்களில் அங்கீகரிக்கப்படாத காலனிகள் உள்ளன, அங்கு அவர்களுக்கு வீட்டு எண் கிடைக்கவில்லை. அவர்கள் தங்கள் படிவத்தில் எந்த முகவரியை நிரப்புவார்கள்? தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, அத்தகைய வாக்காளர் யாராவது இருந்தால், தேர்தல் ஆணையம் அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு கற்பனை எண்ணை வழங்கவேண்டும். வீட்டு எண் இல்லாமல் கணினியில் ஒருவரின் முகவரியை நிரப்பும்போது, அது பூஜ்ஜியமாகத் தோன்றும்."

ஒருவர் வாக்காளராக வேண்டுமானால், 18 வயது பூர்த்தியடைய வேண்டும், முகவரி மற்றும் குடியுரிமை தேவை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.

4. தேர்தல் ஆணையம், ராகுல் காந்தியிடம் மட்டுமே பிரமாணப் பத்திரம் கேட்பது ஏன்?

தேர்தல் ஆணையம் தன்னிடம் மட்டும் பிரமாணப் பத்திரத்தை கேட்பதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

பிகார் பேரணியிலும் ராகுல் காந்தி இந்தப் பிரச்னையை எழுப்பினார். "தேர்தல் ஆணையம் என்னிடம் மட்டுமே பிரமாணப் பத்திரம் கேட்டுள்ளது, வேறு யாரிடமும் கேட்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு, பாஜகவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியபோது, அவர்களிடமிருந்து பிரமாணப் பத்திரம் எதையும் கேட்கவில்லை. ஆனால் இப்போது என்னிடம் மட்டும், நான் வைத்திருக்கும் தரவு சரியானது என்று பிரமாணப் பத்திரம் கொடுக்கச் சொல்கிறார்கள். நான் கொடுக்கும் தரவு தேர்தல் ஆணையத்துடையது என்னும்போது, அவர்கள் ஏன் என்னிடமிருந்து பிரமாணப் பத்திரம் கேட்கிறார்கள்?" என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி குற்றம் சாட்டும் பகுதியின் வாக்காளராக இல்லாததால், அவர் பிரமாணப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.

"முறைகேடுகள் பற்றிப் பேசும் ஒருவர், அந்த சட்டமன்றத் தொகுதியின் வாக்காளராக இல்லை என்றால், சட்டப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு சாட்சியாக உங்கள் புகாரை தாக்கல் செய்யலாம், வாக்காளர் பதிவு அதிகாரியிடம் ஒரு உறுதிமொழியையும் அளிக்க வேண்டும். அந்த உறுதிமொழி, நீங்கள் புகார் அளித்த நபரின் முன் பதிவு செய்யப்பட வேண்டும். இந்தச் சட்டம் பல ஆண்டுகள் பழமையானது, அனைவருக்கும் பொருந்தக்கூடியது" என்று ஞானேஷ் குமார் கூறினார்.

"பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த இரண்டைத் தவிர மூன்றாவது வழியே கிடையாது. ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படாவிட்டால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அர்த்தம்" என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறுகிறார்.

'வாக்குத் திருட்டு'

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்

'வாக்குத் திருட்டு' என்ற குற்றச்சாட்டு முடிவுக்கு வருமா?

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கூறியுள்ளார்.

"மகாதேவ்புராவில் நாங்கள் அம்பலப்படுத்திய ஒரு லட்சம் வாக்காளர்கள் குறித்து ஞானேஷ் குப்தா (தலைமை தேர்தல் ஆணையர்) பதில் ஏதேனும் அளித்தாரா? இல்லை" என்று பவன் கெரா கூறினார்.

"ஞானேஷ் குமார் எங்கள் கேள்விகளுக்கு இன்று (17-08-2025) பதிலளிப்பார் என்று நம்பினோம்... அவர் பேசியது (பத்திரிகையாளர் சந்திப்பில்) பாஜக தலைவர் ஒருவர் பேசுவது போல் இருந்தது" என்று அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பில் மூத்த பத்திரிகையாளர் பரஞ்சோய் குஹா டாகுர்தாவும் கலந்து கொண்டார். அவரின் கருத்துப்படி, தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை.

பிபிசியிடம் பேசிய பரஞ்சோய் குஹா டாகுர்தா, "பத்திரிகையாளர் சந்திப்பில் சில கேள்விகளுக்கு தெளிவாக பதிலளிக்கப்படவில்லை. உதாரணமாக, மகாராஷ்டிராவில் 40 லட்சம் புதியவர்களை சேர்த்தது உண்மையா என்ற என்னுடைய கேள்விக்கு, அப்போது யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று ஆணையம் கூறியது. மாநிலத்தின் மக்கள் தொகையைக் காட்டிலும் வாக்காளர் பட்டியலில் அதிகமான பெயர்கள் ஏன் இருந்தது எப்படி என்று நான் கேட்ட மற்றொரு கேள்விக்கு எனக்கு பதில் கிடைக்கவில்லை" என்றார்.

"இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லை, எனவே எதிர்க்கட்சிகள் 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டில் இருந்து இப்போதைக்கு பின்வாங்கப் போவதில்லை."

குறைந்தபட்சம் பிகார் தேர்தல் வரை எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா குப்தா நம்புகிறார்.

"பிகார் வரைவுப் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இது மிகப்பெரிய எண்ணிக்கை, எதிர்க்கட்சிகள் இதை தொடர்ந்து ஒரு பிரச்னையாக மாற்றுகின்றன. இன்று (ஆகஸ்ட் 17) பிகாரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பேரணி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மகாராஷ்டிரா குறித்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள் இன்னும் அப்படியே உள்ளன. எனவே, தேர்தல் ஆணையம் என்ன சொன்னாலும், எதிர்க்கட்சிகள் பிகார் தேர்தலில் அதை நிச்சயமாக ஒரு பிரச்னையாக மாற்றும்" என்று ஸ்மிதா குப்தா கூறுகிறார்.

மூத்த பத்திரிகையாளர் பிரமோத் ஜோஷி, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை ஒரு அமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான கேள்வியாகக் கருதுகிறார், எனவே இந்தப் பிரச்னை அவ்வளவு எளிதில் முடிவுக்கு வராது என்று கூறுகிறார்.

பிபிசியிடம் பேசிய பிரமோத் ஜோஷி, "ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கம் இரண்டிற்கும் எதிரானவை. தேர்தல் ஆணையம் மட்டுமே பதில்களை வழங்கியுள்ளது. ராகுல் காந்தி ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் கூறுகிறது, ஆனால் ராகுல் காந்தி அவ்வாறு செய்ய மாட்டார் என்றே நினைக்கிறேன். இந்த விஷயமும் அரசியல் அடிப்படையிலேயே போராடப்படும், மேலும் இந்தியா கூட்டணி அவ்வளவு எளிதில் உடன்படாது" என்றார்.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், GETTY IMAGES

இந்திய தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் நேரம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது ஏன்?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (2025 ஆகஸ்ட் 7) செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மக்களவைத் தேர்தல்களிலும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களிலும் 'வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான மோசடி' நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அதன்பின் கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து, வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாத 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. 'வாக்குத் திருட்டுக்கு' எதிராக இந்தியா கூட்டணி பிகாரில் பேரணி நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

"தேர்தல் ஆணையம் இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முன்வந்ததில்லை. இன்று, பிகாரில் இந்தியா கூட்டணி ஒரு பேரணியை நடத்திய சமயத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. இன்னும் முக்கியமானது என்னவென்றால், இந்த மாதம் 14ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தை கடிந்துகொண்ட உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 19 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் இந்தப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இயந்திரம் படிக்கக்கூடிய தேடலை மக்கள் செய்யக்கூடிய வகையில் அதைக் கொடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது" என்று பரஞ்சோய் குஹா டாகுர்தா கூறுகிறார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் பதிலை அரசியல் சூழலில் பார்க்க வேண்டும் என்று பிரமோத் ஜோஷி நம்புகிறார்.

"நாம் நேரத்தைப் பற்றிப் பேசினால், தேர்தல் ஆணையத்தின் பதிலும் நிச்சயமாக அரசியல் சார்ந்ததுதான். ராகுல் காந்தி அல்லது அவரது கட்சி பிகாரில் இதை அரசியலாக்குவது போல, அதே தேதியில், தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் சார்பாக தனது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது" என்று பிரமோத் ஜோஷி விளக்குகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg4jz5g1n0o

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இந்திய வாக்காளர் ஆவணங்களில் இடம் பெற்ற' பிரேசில் பெண் - வைரலானது பற்றி கூறியது என்ன?

ராகுல் காந்தி, வாக்கு, தேர்தல் ஆணையம், பாஜக

பட மூலாதாரம், Congress Party

படக்குறிப்பு, புதன்கிழமையன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பில் இடம்பெற்ற லாரிசா நேரியின் புகைப்படம்

கட்டுரை தகவல்

  • லூயிஸ் பெர்னாண்டோ டோலிடோ , லண்டன்

  • கீதா பாண்டே மற்றும் யோகிதா லிமாயே, இந்தியா

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் தேர்தல் மோசடி தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டில் இடம் பெற்றிருந்த ஒரு பெண்ணின் புகைப்படம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அந்தப் பெண் பிரேசில் நாட்டைச் சேர்ந்த சிகையலங்கார நிபுணர் லாரிசா நேரி.

இதுவரை இந்தியாவிற்கே வந்ததில்லை என்று பிபிசியிடம் தெரிவித்த அந்தப் பெண், "ஏதோ தவறு நடந்திருக்கலாம், யாரோ குறும்பு செய்து விளையாடுகிறார்கள்" என்று நினைத்ததாகக் கூறுகிறார்.

பின்னர் தன்னுடைய சமூக ஊடகக் கணக்குகளில் செய்திகள் வந்து குவிந்தன, பலரும் இன்ஸ்டாகிராமில் டேக் செய்யத் தொடங்கினார்கள் என்று அவர் கூறுகிறார்.

"முதலில் அது தவறான செய்தி, என்னை வேறு யாரோ என தவறாக புரிந்துக் கொண்டார்கள் என நினைத்தேன்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"பின்னர் என் முகம் பெரிய திரையில் தோன்றும் வீடியோவை எனக்கு அனுப்பினார்கள். அப்போதும், அது செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யப்பட்டது அல்லது ஏதோ நகைச்சுவை என்று தோன்றியது. ஆனால் நிறைய பேர் ஒரே நேரத்தில் செய்தி அனுப்பத் தொடங்கிய பின்தான், அது விளையாட்டல்ல, உண்மை என்பதை உணர்ந்தேன்" என்கிறார் லாரிசா நேரி.

தென்கிழக்கு பிரேசிலில் பெலோ ஹொரிசாண்டே நகரில் வசிக்கும் நேரி, இந்தியாவிற்கு ஒருபோதும் வந்ததில்லை. என்ன நடக்கிறது என்பதே புரியாமல், விஷயத்தைத் தெரிந்து கொள்ள கூகுளில் அவர் தேடிய போதுதான் அவருக்கு எல்லாம் புரிந்தது.

கடந்த ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுவைத்து வாக்குத் திருட்டு செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்தது.

பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு, ஹரியாணா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ஆகஸ்ட் மாதம் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை பகிர்ந்தார். அதில், தகுதி இல்லாத வாக்காளர்களின் பெயர்களுடன் ஒரு உறுதிமொழியை கையெழுத்திடுமாறு அவரிடம் கேட்டிருந்ததாகவும், அதன் மூலம் தேவையான நடவடிக்கைகளை தொடங்க முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என தெரிவித்தார்.

ஆனால், அவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை, நேரியின் புகைப்படத்துடன் வாக்காளர் அட்டை இருப்பது குறித்தும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை அறிவதற்காக அதிகாரிகளை பிபிசி தொடர்பு கொண்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பு, ராகுல் காந்தி, வாக்கு, தேர்தல் ஆணையம், பாஜக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய ராகுல் காந்தி, வாக்குகளை திருடுவதாக தேர்தல் ஆணையத்தையும் பாஜக அரசாங்கத்தையும் குற்றம் சாட்டினார்

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் மீது "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார் .

அவரது சமீபத்திய கூற்றுகளில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் தரவை தங்களது குழு ஆராய்ந்ததாகவும், அதில் சுமார் 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் பேரின் அடையாள அட்டையில் ஒழுங்கற்ற தரவுகளை கொடுத்திருக்கின்றனர் என்றும், ஒரு வாக்காளர் எண் - பல நபர்கள்; ஒரே நபர் - பல வாக்காளர் எண்கள் மற்றும் போலியான முகவரிகள் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் ராகுல் காந்தி கூறினார்.

ஹரியாணா தேர்தலில் தனது கட்சியின் தோல்விக்கு வாக்காளர் பட்டியலில் நடந்ததாகக் கூறப்படும் மோசடியே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி தனது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, பெரிய திரை ஒன்றில் பல ஸ்லைடுகளைக் காட்டினார். அவற்றில் நேரியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

தேர்தல் ஆணையம், செய்தியாளர் சந்திப்பு, ராகுல் காந்தி, வாக்கு,  பாஜக

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.

"இந்தப் பெண்மணி யார்? அவரின் வயது என்ன? இவர் ஹரியானாவில் 22 முறை வாக்களித்துள்ளார்," என்று ராகுல் காந்தி கூறினார்.

பிரேசிலிய புகைப்படக் கலைஞர் மேத்தியஸ் ஃபெரெரோ எடுத்த ஒரு பெண்ணின் ஸ்டாக் புகைப்படம், பல வாக்காளர் பதிவுகளில் வெவ்வேறு பெயர்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். நேரி என்ற பிரேசிலிய மாடல், சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி என பல்வேறு பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக அவர் விவரித்தார்.

"அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான்" என 29 வயதான லாரிசா நேரி என பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். "ஆம், எனது சிறு வயது புகைப்படம், அதில் இருப்பது நான் தான்."

தான் சிகை அலங்கார நிபுணராக பணியாற்றுவதாகவும், மாடல் அல்ல என்றும் கூறிய லாரிசா நேரி, அந்தப் புகைப்படம் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் 21 வயதாக இருந்தபோது தனது வீட்டிற்கு வெளியே எடுக்கப்பட்டது என்றும் தெளிவுபடுத்தினார்.

"நான் அழகாக இருப்பதாக சொன்ன புகைப்படக் கலைஞர், என்னைப் புகைப்படம் எடுத்தார்" என்று கூறினார்.

புகைப்படம் எடுக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகு, கடந்த இரண்டு நாட்களில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அதிலும் பெரும்பாலும் பத்திரிகையாளர்கள் என பலரின் கவனம் தன் மீது குவிந்ததால் நேரி பயந்துவிட்டார்.

"நான் பயந்துவிட்டேன். இது எனக்கு ஆபத்தானதா, அதைப் பற்றிப் பேசுவது யாருக்காவது தீங்கு விளைவிக்குமா என்று எனக்கு எதுவுமே தெரியவில்லை. யார் சரி, யார் தவறு என்றும் எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் சம்பந்தப்பட்ட தரப்பினரை எனக்குத் தெரியாது," என நோரி கூறுகிறார்.

"எனது வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த செய்திகளைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை, காலையில் வேலைக்குச் செல்லவில்லை. நான் வேலை செய்யும் இடத்தின் எண்ணை கண்டுபிடித்து பல பத்திரிகையாளர்கள் போன் செய்து கொண்டிருந்தார்கள்".

"அவர்கள் நான் வேலை செய்யும் இடத்தில் தொந்தரவு செய்ததால், சலூன் பெயரை என் சுயவிவரத்திலிருந்து நீக்கிவிட்டேன். என் முதலாளியும் என்னிடம் பேசினார். சிலர் அதை ஒரு மீம் போல நினைக்கிறார்கள், ஆனால் அது என்னை தொழில் ரீதியாக பாதிக்கிறது."

தேர்தல் ஆணையம், செய்தியாளர் சந்திப்பு, ராகுல் காந்தி, வாக்கு,  பாஜக

பட மூலாதாரம், Congress Party

படக்குறிப்பு, ஹரியானாவில் சீமா, ஸ்வீட்டி மற்றும் சரஸ்வதி உள்ளிட்ட பல பெயர்களில் நேரி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக காந்தி கூறினார்

நேரியின் புகைப்படத்தை எடுத்த மேத்தியஸ் ஃபெரெரோவும் திடீர் கவனத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். சமீப காலம் வரை, இந்தியா என்றால், 2009-ஆம் ஆண்டு ஒளிபரப்பான Caminho das Índias என்ற பிரேசிலிய பிரைம் டைம் நிகழ்ச்சி மட்டுமே தெரியும் என்று அவர் கூறுகிறார்.

ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள நாடு ஒன்றில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை அவரால் இன்னும் சரியாக புரிந்துக் கொள்ளமுடியவில்லை.

இந்தியாவில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்பு தன்னைத் தொடர்பு கொண்ட சிலர், புகைப்படத்தில் உள்ள பெண் யார் என்று கேட்டதாக பிபிசியிடம் தெரிவித்த அவர், "நான் பதில் சொல்லவில்லை. யாரின் பெயரையும் என்னால் அப்படி சொல்லிவிடமுடியாது. இவரை (நேரியை) நான் பல வருடங்களாகப் பார்க்கவில்லை. இதெல்லாம் மோசடி என்று நினைத்து, அந்த எண்களை நான் பிளாக் செய்தேன்." என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

இருப்பினும், ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு இந்தப் பிரச்னை பெரிதாக வெடித்தது.

"இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் என்னிடம் கேள்வி கேட்டார்கள், அது மிகவும் மோசமாக இருந்தது. என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன், என்னுடைய இன்ஸ்டாகிராமை செயலிழக்கச் செய்தேன். பின்னர் என்ன நடக்கிறது என்பதை கூகுள் மூலம் உணர்ந்தேன், ஆனால் முதலில் எதுவுமே புரியவில்லை."

சில வலைத்தளங்கள் அனுமதியின்றி நேரியின் புகைப்படத்துடன் தனது படங்களை வெளியிட்டதாக ஃபெர்ரெரோ கூறுகிறார். "மீம்ஸ்-களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள், அதை ஏதோ ஒரு 'கேம்-ஷோ' நகைச்சுவை போல சித்தரிப்பது அபத்தமாக இருந்தது."

2017-ஆம் ஆண்டில், ஃபெரெரோ ஒரு புகைப்படக் கலைஞராக பணியாற்றத் தொடங்கும் போது, தனக்கு நன்கு பரிச்சயமான நேரியை புகைப்படப் படப்பிடிப்பிற்கு வருமாறு அழைத்தார். அப்போது எடுக்கப்பட்ட நேரியின் புகைப்படங்களை ஃபெர்ரெரோ பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டதாகவும், நேரியின் ஒப்புதலுடன் புகைப்பட வலைத்தளமான Unsplash-இல் வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

"அந்தப் புகைப்படம் பெரிய அளவில் வைரலானது... சுமார் 57 மில்லியன் பார்வைகளைப் பெற்றது," என்று அவர் கூறினார்.

அவர் இப்போது தனது Unsplash கணக்கிலிருந்து இணைப்பை நீக்கிவிட்டார், ஆனால் அதே படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட நேரியின் மற்ற புகைப்படங்களைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களை எங்களுக்கு அனுப்பினார்.

பாஜக, தேர்தல் ஆணையம், 'வாக்குகளைத் திருடுகின்றன', பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம், ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI

"புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் பயந்துபோய் அவற்றை நீக்கிவிட்டேன். நான் புகைப்படம் எடுத்த ஒருவருக்கு இவ்வாறு நடப்பதை நினைத்து அச்சமடைந்தேன், அத்துமீறப்பட்டதாக உணர்ந்தேன். நிறைய பேர் என்னிடம் வந்து, 'ஏதாவது தவறு செய்துவிட்டதாக நினைக்கிறாயா?' என்று கேட்கிறார்கள், ஆனால் நான் தவறேதும் செய்யவில்லை. தளம் திறந்திருந்தது, மில்லியன் கணக்கானவர்களைப் போலவே நானும் பதிவேற்றினேன்" என்று சொல்கிறார்.

அவர் இப்போது நேரியுடன் இருக்கும் தனது புகைப்படங்களுடன் கூடிய பேஸ்புக் பதிவை, தனியுரிமை அமைப்பைப் பயன்படுத்தி தனிப்பட்ட (Private) புகைப்படமாக மாற்றியுள்ளார்.

"நமது ட்விட்டர், பேஸ்புக், தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் மக்கள் திடீரென பெருமளவில் நுழைவதைப் பார்க்கும்போது, பீதி ஏற்படுகிறது. அதன் முதல் எதிர்வினை எல்லாவற்றையும் மூடிவிட்டு, பின்னர் புரிந்துகொள்வதுதான். சிலர் அதை வேடிக்கையாக நினைத்தார்கள், ஆனால் எனக்கு அது வித்தியாசமாக இருந்தது."

ஃபெர்ரெரோவோ அல்லது நேரியோ இதுவரை இந்தியாவுக்குச் வந்ததில்லை, உலகின் ஏதோ ஓர் இடத்தில் நடந்த ஒன்று அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு தலைகீழாக மாற்றும் என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

இவை அனைத்தும் தேர்தல் மோசடியைக் கண்டறிய உதவியதா, அது நேர்மறையானதா? என்று ஃபெர்ரெரோவிடம் கேட்டோம்.

"ஆமாம், அது நேர்மறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு உண்மையில் விவரங்கள் எதுவுமே தெரியாது," என அவர் கூறினார்.

இதுவரை தன்னுடைய நாட்டை விட்டு வெளியே எங்குமே செல்லாத நேரி, "இது எனது அன்றாட வாழ்விலிருந்து வெகு தொலைவில் உள்ளது. பிரேசில் தேர்தல்களைக் கூடப் பின்தொடராத நான் வேறொரு நாட்டின் தேர்தலைப் பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை" என்று சொல்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgmxevpxdexo

  • கருத்துக்கள உறவுகள்

தென் மானிலங்களில் பா ஜ க விற்கு பெரிதான வரவேற்பு இல்லை, ஆனால் வட மானிலங்களில் பா ஜ க மிக பலமாக உள்ளது, வட மானிலத்தவர்கள் மேலை நாடுகளினால் இந்த பா ஜ க அரசினை கவிழ்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கிறார்கள், இந்திய எல்லைகளில் நெருக்கடிகளை உருவாக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு இனிமேல் வரவே வராது என கூறுகிறார்கள்.

தென் மானிலங்களிலும் சில கூட்டாட்சி மூலம் பா ஜ க வருங்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலின் போது பகிரங்கமாக பணம் பொருட்கள் கொடுப்பது உலகத்துக்கே தெரிந்த விடயம்.

ஆனால் தேர்தல் கண்காணிப்பு குழுவுக்கு மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

தேர்தலின் போது பகிரங்கமாக பணம் பொருட்கள் கொடுப்பது உலகத்துக்கே தெரிந்த விடயம்.

ஆனால் தேர்தல் கண்காணிப்பு குழுவுக்கு மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது

மக்களின் வாக்குரிமையை அரசே துஸ்பிரயோகம் செய்கின்றது என்ற குற்றச்சாட்டு இன்று நேற்று அல்ல இந்தியாவில் பல வருடங்களாகவே கூறப்படுகின்றது

கேட்டால் உலகில் பெரிய ஜனநாயக நாடு என்பார்கள்

https://yarl.com/forum3/topic/304384-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.