Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1

கார்த்திக் டிசம்பர் 22, 2024

மூலம் : யமுனா ஹர்ஷவர்த்தனா

தமிழாக்கம் : கார்த்திக்

திருமதி. யமுனா ஹர்ஷவர்த்தனா அவர்கள் எழுதி கிரி ட்ரேடிங் நிறுவனம் வெளியிட்ட ” Once upon a Time Thousands of years ago “ என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. மஹாபாரத கதைகளின் தொகுப்பே இந்த நூல்.

ஆனை முகத்தோனுடன் ஓர் ஒப்பந்தம்

உலகின் தலைச்சிறந்த காவியத்தை எழுதுவதற்கான நேரம் அது , வரலாற்றை சந்ததியருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நேரம். மீனவப் பெண்ணான சத்யவதிக்கும், பராசர முனிவருக்கும் பிறந்த கரிய நிறத்தை கொண்ட ரிஷி கிருஷ்ண த்வைபாயனா அந்தப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார்.

பரந்த வேதங்களை படிப்பதற்கும் அடுத்த தலைமுறைகளுக்கு தொகுத்து வழங்கவும் வசதியாக தொகுத்து மூன்றாக வகைப்படுத்தியதால் வேத வியாசர் என்றழைக்கப்படும் கிருஷ்ண த்வைபாயனா இந்த மிகப் பெரிய வேலையை எப்படி செய்து முடிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். வரலாறு மிக நீண்டதாக ஐந்து தலைமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது;விவரிப்பு மிக கடினமானதாக நூற்றுக்கணக்கான நபர்கள் மிக முக்கிய பாத்திரங்களில் கொண்டதாகவும் இருந்தது. கதாபாத்திரங்களின் உளவியல், சூழ்நிலைகளின் உளவியல் ; விவரிப்பின் மூலம் சொல்லப்படவேண்டிய சூழ்நிலைகள் என அவர் முன் இருந்த பணி கடினமாய் இருந்தது. கதை விவரிப்பு சுருக்கமாய் கச்சிதமாய் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எதையும் விட்டுவிடக்கூடாது. ஏனெனில், இந்த காவியம் , மனிதர்களை என்றும் வழிநடத்தக் கூடியது , இந்தக் காவியத்தில் இருக்கும் எண்ணற்ற பாத்திரங்களின் மூலம் ஒவ்வொருவரும் தன்னை மீட்டெடுப்பர், இந்த கதை, ஒருவரின் வாழ்வின் பாதையையே மாற்றக் கூடிய ஒன்றாகும். முன்னிருந்த வேலை கடினமானது. மீண்டும் நினைவுப்படுத்தி, நியாயப்படுத்தி தொகுத்து அதை எழுதுவது என்பது மனிதனால் ஆகக் கூடிய விஷயமில்லை என்பது வியாசருக்கு தெரியும். எனவே தெய்வத்தின் உதவியை நாட முடிவு செய்து ஆனைமுகனை பிரார்த்தித்தார்.

mahabharatham.jpg?resize=600%2C400&ssl=1

” கணேசா ! பிரணவ வடிவானவனே ! என்னுடைய தாழ்மையான வணக்கங்களை ஏற்றுக்கொள். மனிதகுலத்தின் நன்மைக்காக , மஹாபாரதம் எழுதப்பட்டு காப்பற்றப்படவேண்டியது நம்மின் கடமையாகும். இதற்காய் , உன் உதவி வேண்டி வந்துள்ளேன். கருணை வடிவானவனே ! மஹாபாரதம் எழுத ஒப்புக் கொண்டு என்னை சிறப்பிப்பாயாக…”

“வ்யாஸா ! நீ என்னிடம் இந்த உதவி கேட்டதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன். ஆனால்,எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், உன் குடும்பக் கதையை உன்னருகில் உட்கார்ந்து நீ சொல்வதாய் என்னால் காத்திருக்க இயலாது, எனக்கு அவ்வளவு நேரமும் இல்லை ” என்றார் கணேசர்.

சிறிதும் இடைவெளி இன்றி கதையை சொல்லி செல்ல இயலாது. ஏனெனில் வரிகளை யோசிக்க அவருக்கு நேரம் வேண்டும் என வியாசர் அறிவார். விக்னேஸ்வரன்* மிகக் கடினமான நிறைவேற்றுவதற்கு கடினமான நிபந்தனையை விதிக்கிறார் என்பதையும் வியாசர் அறிவார். ஆனால் பல வருட தவத்தின் பயனாக கிடைத்த இந்த வாய்ப்பை வீணடிக்க அவர் விரும்பவில்லை. எனவே அவர் விநாயகரிடம் வேண்டினார், ஞான ஸ்வரூபனே நீ இல்லாமல் உலகில் ஞானம் என்பது இல்லாமல் போய்விடும். உங்கள் ஞானத்தின் உதவியால் நான் வரிகளை தொகுத்து சொல்கிறேன். இந்த எளியவன் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டு எழுதும் வரையில் நான் இடையில் நிறுத்த மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.

கஜானனர் இதற்கு ஒத்துக்கொண்டார். வியாசர் சொல்ல சொல்ல, அவர் தந்தத்தை ஒடித்து அதை எழுதுகோலாகக் கொண்டு பனை ஓலைச் சுவடிகளில் எழுதத் துவங்கினார். இடையில் வியாசர் கொஞ்சம் கடினமான வரிகளைக் கோர்த்து தர அதை புரிந்து கொண்டு விநாயகர் எழுத ஆகும் இடைவெளியில் அடுத்த அடுத்த வரிகளை அமைத்துக் கொள்ள வியாசருக்கு உதவியது. இதைப் புரிந்து கொண்ட விநாயகரும் சிரித்துக் கொண்டே எழுதினார்.

நாம் இன்று படித்து, கேட்டு கற்று மகிழும் மஹாபாரதம் இந்த விதமாகத்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வியாசர் மூஷிக வாகனனுக்கு சொல்லி எழுதப்பட்டது. ஞானத்தின் அதிபதி மற்றும் வேதத்தை தொகுத்த ரிஷியின் இந்த கூட்டணி நமக்குள் ஒத்துழைப்பு மற்றும் இரக்கத்தின் விதைகளை தூவட்டும்.


மிக சரியான மனிதர்

அக்காலத்தில் முனிவர்கள் எல்லோரும் கடுமையான தவங்கள் மூலம் மிக பெரிய பேறு அடைய விரும்பி தவம் இருந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் பிறக்கும் பொழுதே எல்லாவகையிலும் சிறந்தவராக பிறந்தார் , சுகர், வியாசரின் மகனான இவர் பிறப்பிலேயே பிரம்மத்தை பற்றிய ரகசியத்தை அறிந்திருந்ததால் சுக ப்ரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார்.

ஒருநாள் , உலகத்தின் அறிவு பொக்கிஷத்தை காப்பாற்ற தனக்கொரு மகன் வேண்டுமென உணர்ந்த வியாஸர் சிவனை நோக்கி தவமிருக்கத் துவங்கினார். அதே சமயத்தில் விண்ணுலகத்தில் இருந்து ஓர் கிளி அங்கே பறக்க அதை அவர் பார்த்தார். அதன் மூலம் அக்கிளி , மிக அழகான அதே சமயம் தெய்வீக களைப் பொருந்திய ஒரு குழந்தையை தந்தது. அந்தக் குழந்தை சுக தேவர், கிளிகளின் கடவுள் என அழைக்கப்பட்டது.

சுகருக்கு , வியாஸர் வேதங்களையும் மற்ற விஷயங்களையும் கற்றுத் தர துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் சுகர். மகனை, தந்தையே பரிட்சித்து சான்று அளிக்க முடியாத காரணத்தால், மிதிலையின் அரசராக இருந்த ஜனகரிடம் 1 அவரை அனுப்பி வைத்தார் வியாசர் .

சுகர் வரப்போவதை முன்பே தனது ஞான திருஷ்டியால் அறிந்த ஜனகர், தனது கோட்டை காவலாளிகளை அழைத்து, அவர் சொல்லும் வரை சுகரை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கட்டளையிட்டார். அதேபோல், கோட்டை வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட சுக ப்ரம்ம ரிஷியும், மூன்று நாட்கள், உணவையோ, சொட்டு நீரோ மற்றும் துறக்கமோ இன்றி காத்திருந்தார். நான்காம் நாள், ஜனகரே கோட்டை வாயிலுக்கு வந்து பிரம்மாண்ட ஊர்வலமாய் அவரை அழைத்து சென்றார். உள்ளே அழைத்து வரப்பட்ட சுக பிரம்மத்தை சிறந்த அழகிகள் குளிப்பாட்டி அவருக்கு அறுசுவை விருந்தும் அளித்தனர். இவை எதையும் சிந்தையில் கொள்ளாத இளம் ரிஷி தனக்களிக்கப்பட்ட விருந்தை ஏற்றுக்கொண்டார்.

இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஜனகர் ” மகனே ! இப்பொழுது என்னுடன்அரசவைக்கு வருவாயாக ! ” என அழைத்தார்.

ஜனகரின் அரசவை வளர்ந்து வரும் நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிப்பது போல் இருந்தது. மிக அழகான நாட்டியப் பெண்மணிகள் நாட்டியமாடிக் கொண்டும் அருமையான பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தனர்.

அரசர் , சுகர் கையில் ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதன் விளிம்பு வரை எண்ணையை ஊற்றி , அரசவையை சுற்றி வந்து அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சொன்னார். அமைதியாக , அந்த கிண்ணத்தை கையில் ஏந்தி ஒரு சொட்டு எண்ணையும் சிந்தாமல் சென்று அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார்.

அதைக் கண்டு மகிழ்ந்த ஜனகர் , சுகரை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ” என்னருமை மகனே ! இனி நீ கற்பதற்கு என்ன உள்ளது ? கஷ்டங்களோ , அரண்மனையின் செல்வச்செழிப்போ இல்லை உணர்வுகளை தூண்டு விஷயங்களோ உன்னை தீண்டவில்லை. நீ ஏற்கனவே ஒரு ப்ரம்மஞானி2 ” எனக் கூறினார்.

சுகர் எப்பொழுதும் இந்த உலக பிரஞை அற்று இருந்ததால் அவரை வியாசர் மிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஒருமுறை சுகர் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். வியாசரும் அவரை பின்பற்றி சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சில இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். சுகர் சென்றபொழுது அவர்கள் நாணம் அடையவில்லை. மாறாக அவர்கள் தங்கள் குளியலை தொடர்ந்தனர். ஆனால், அவரை தொடர்ந்து வியாசர் வந்தபொழுது , அவர்கள் உடனடியாக குளத்தில் மூழ்கி தங்களை மறைத்துக் கொண்டனர். இதைக் கண்ட ரிஷி ஆச்சர்யம் அடைந்து ”அழகான இளம் வாலிபன் நிர்வாணமாக நடந்தது உங்கள் உணர்வுகளை சீண்டவில்லை. ஆனால் முழுவதும் உடையணிந்த வயோதிகனான நான் வரும்பொழுது , வெட்கம் கொண்டு உங்களை மறைத்துக் கொண்டீர்களே.. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா ” என வினவினார்.

அதற்கு அவர்கள் ” தவ ஸ்ரேஷ்டரே ! அவர் முழு ஞானம் அடைந்தவர் . ஆண் பெண் பாலின பேதத்தை கடந்து விட்டார். ஆனால் தாங்கள் அப்படி இல்லையே ! நாங்கள் எவ்வாறு வெட்கம் கொள்ளாமல் இருக்க இயலும் ” என பதில் உரைத்தனர்.

சுகர்தான், பின்பு மஹாபாரத்தையும் , ஸ்ரீமத் பாகவதத்தையும் உலகிற்கு பரப்பினார். இவ்வுலகிற்கு தேவையான ஞானத்தை காத்து மற்றவர்களுக்கு அளித்தார்.

  1. ஜனகர் : சீதையின் தந்தை அல்ல. அவ்வம்சத்தில் வந்த அனைவருக்கும் இந்த பட்டம் உண்டு. எனவே இவர் அவ்வம்சத்தில் வந்த மற்றொரு அரசர்

  2. ப்ரம்மஞானி : பிரம்மத்தை கற்றறிந்தவர்.


சஞ்சீவனி – உயிர் தரும் மந்திரம்

இது பாண்டவ / கௌரவர்களின் காலத்திற்கு மிக முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போரில் அசுரர்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே வந்தனர். காரணம், அவர்களுடைய குரு சுக்ராச்சாரியாருக்கு இறந்த உயிர்களை மீட்டுத் தரும் சஞ்சீவனி மந்திரம் தெரிந்திருந்தது. அந்த மந்திரம் அறிந்தாலொழிய இப்போரில் வெற்றி பெறுவது என்பது இயலாது என்பதை அறிந்த தேவர்கள் பலத்த ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் குரு பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவனை சுக்ராச்சாரியாரிடம் அனுப்பி இம்மந்திரத்தை கற்று வரக் கூறினர்.

கசன், சுக்ராச்சாரியாரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டான். பிரகஸ்பதியின் மேல் இருந்த மரியாதை மற்றும் கசனின் பணிவான நடவடிக்கையின் காரணமாய் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சுக்ராச்சாரியார். ஒரு சீடனாய் தன் கடமைகளை சுக்ராச்சாரியாரின் விருப்பத்திற்கேற்ப செய்து வந்தான். நாளடைவில் அவரது மகள் தேவயானிக்கும் மிக நெருக்கமாகிவிட்டான் கசன்.

வஞ்சக எண்ணம் கொண்ட அசுரர்கள் கசனின் நோக்கத்தை சந்தேகிக்க துவங்கினர். அதனால் சுக்ராச்சாரியார் அறியாமல் அவனை கொல்லவும் முடிவெடுத்தனர். ஒருநாள், அவனை கடத்தி சென்று கடலில் மூழ்கடித்து அவனது பிணத்தை சுக்ராச்சாரியார் முன் கொண்டுவந்து கிடத்தினர். அவர் கேட்டபொழுது எதோ ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் அவர்களது கெட்ட எண்ணத்தை அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார், சஞ்சீவனி மந்திரம் ஜெபித்து அவனை உயிர்ப்பித்தார்.

அடுத்த முறை அவனை கொன்று அவனது உடலை நாய்க்கு உணவாக இட்டனர் அசுரர்கள். இதை அறிந்த தேவயானி, சுக்ராச்சாரியாரிடம் முறையிட, மீண்டும் அவர் சஞ்சீவனி மந்திரம் ஜெபித்தார். இம்முறை நாயின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்தான் கசன்.

மூன்றாம் முறை அசுரர் அவனை மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்தனர். பின்பு அந்த சாம்பலை, மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கு அளித்தனர். அதை குடித்தப்பின் தான், நடந்ததை உணர்ந்தார். இப்பொழுது அவருக்கு தேவர்களின் தந்திரமும் புரிந்தது.

சாம்பலாய் மதுவில் கலந்து அவரது வயிற்றில் இருந்த கசனுக்கு அவர் சஞ்சீவனி மந்திரத்தை போதித்தார்.பின் கீழே படுத்து அவர் அம்மந்திரத்தை ஜபிக்க , அவரது வயிற்றை கிழித்துக் கொண்டு உயிர் பெற்று வந்தான் கசன். அவனது குணத்திற்கு , அவனை உயிர் பெற்றவுடன் முதல் காரியமாய், அவனை உயிர்ப்பித்த குருவை சஞ்சீவனி மாத்திரம் ஜபித்து உயிர்பித்தான். பின்பு தேவர்களிடம் சென்று சேர்ந்தான்.

இதன் பின், சுக்ராச்சரியாரின் சாபத்தால் மது அருந்துபவர்கள் அவர் பட்ட கஷ்டம் போலவே அனுபவிப்பார்கள். சுக்ராச்சாரியாரின் உதிரத்தில் உயிர்பித்ததால், கசன் தேவயானிக்கு சகோதரன் முறை ஆகிவிட்டான். எனவே அவனை விடுத்து யயாதி என்ற மன்னனை மணமுடித்தாள் தேவயானி. இந்த யயாதியே பாண்டவர் / கௌவரவர்களுக்கு முன்னோடி ஆவான்.

https://solvanam.com/2024/12/22/பல்லாயிரம்-ஆண்டுகளுக்கு/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிற்றின்பம் மற்றும் உணர்திறன்

ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன்

தமிழாக்கம் : கார்த்திக்

அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி , அசுரர்களின் அரசனான வ்ரிஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையின் தோழி ஆவாள். ஒருநாள், அவர்கள் தோழியருடன் வனத்தில் இருந்த குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அடித்த காற்றில் அவர்களின் ஆடைகள் கலந்து விட்டன.

தவறுதலாக , இளவரசி சர்மிஷ்டை , தேவயானியின் உடைகளை அணிந்துகொண்டாள். இதை கண்ட தேவயானி ஒரு சீடனின் மகள் எவ்வாறு குருவின் மகளின் ஆடைகளை அணியலாம் என விளையாட்டாக கேட்டாள். இதனால் கோபம் அடைந்த சர்மிஷ்டை , ” என் தந்தை அளிக்கும் பிச்சையில் வாழ்பவரின்மகள் தானே நீ ? “ என அவளை அவமானப்படுத்தினாள். தான் விளையாட்டாக சொன்னது வினையானதை எண்ணி அவளை சமாதானப்படுத்த தேவயானி செய்த முயற்சிகள் வீணாகின. மேலும் மேலும் கோபம் அடைந்த சர்மிஷ்டை ,தேவயானியை அறைந்து அங்கிருந்த நீரற்ற கிணற்றினுள் தள்ளி , அங்கிருந்து தனது மற்ற தோழியருடன் சென்று விட்டாள்.

images-5.jpg?resize=600%2C400&ssl=1

சிறிது நேரம் கழித்து அப்பக்கம் வந்த யயாதி என்னும் மன்னன், தேவயானியின் குரல் கேட்டு அவளை கிணற்றிலிருந்து காப்பாற்றினான். ப்ராமண பெண், ஷத்ரிய வம்சத்தை சேர்ந்த ஒரு ஆணை மணப்பது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தாலும், தனது வலது கரத்தை பிடித்து காப்பற்றியதால், தன்னை அவன் மணக்க வேண்டும் என தேவயானி வற்புறுத்த அவனும் அதற்கு இசைந்தான். தன் தந்தையிடம் பேசி திருமணத்திற்கு ஒப்புதலும் வாங்கினாள்.

அது மட்டுமில்லாது , சர்மிஷ்டை அவரை பிச்சைக்காரர் என கூறியது தவறு என்று கூறி அதை சரி செய்ய சர்மிஷ்டை , அவளது தோழியாக தன்னுடன் அனுப்பப்படவேண்டும் எனவும் வாதாடினாள். சுக்ராச்சாரியாரும், தனது சீடனும் அரசனும் ஆன வ்ரிஷபர்வாவிடம் இந்த கோரிக்கையை வைத்தார். என்ன நடந்தது என அறியாத அரசனும், குருவின் வார்த்தையை மீற முடியாத காரணத்தினால் இதற்கு இசைந்தான்.

நாட்கள் செல்ல செல்ல, சர்மிஷ்டையும், யயாதியும் நெருங்கி பழகத் துவங்கினர். தேவயானிக்கு தெரியாமல் ரகசியத் திருமணமும் செய்துகொண்டனர். ஒருநாள், அவர்களின் திருமணம் பற்றி தெரியவர, தேவயானி தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள். கோபம் கொண்ட சுக்ராச்சாரியாரும், அரசன் தனது இளமையை இழந்து உடனடியாய் முதுமை அடைவான் என சாபமிட்டார்.

இதனால், பயம் கொண்ட யயாதி, சாபத்தை திரும்பப் பெறுமாறு அவரிடம் கெஞ்சினான். என்ன இருந்தாலும் மருமகன் என்பதால், ” அரசனே ! சாபத்தை திரும்பப் பெற இயலாது என்றாலும் , உனது முதுமையை யாராவது பெற்றுக் கொள்ள சம்மதித்தால் , நீ அவர்களின் இளமையை அடையலாம்” என ஒரு விமோசனம் கூறினார்.

விரைவிலேயே முதுமை அடைந்த யயாதி, தொடர்ந்து ஆட்சி செய்தான், இருந்தாலும் அவனது உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே அவனது ஐந்து மகன்களை அழைத்து ஒவ்வொருவரிடமும் தனது முதுமையை பெற்றுக் கொள்ள கூறினான். மேலும் அதற்கு ஈடாக அவன் முதுமையை ஏற்போரை அரசனாக்குவதாகக் கூறினான். அனைவரும் அதற்கு மறுத்துவிட, அவனின் இளைய மகன் புரு , தந்தையின் முதுமையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினான்.

அதன் பின் , முதுமையை ஏற்ற புரு அரசனாக ஆட்சி புரிய, இளமையை அடைந்த யயாதி அனைத்து இன்பங்களையும் அனுபவித்தான். அது போதாதென்று குபேரபுரி சென்று அங்கும் இன்பம் அனுபவித்தான். இவ்வாறு பல வருடங்கள் சென்றபின் எத்தனை வருடம் எத்தனை விதமாய் இன்பம் அனுபவித்தாலும் இச்சைகளை திருப்தி செய்ய இயலாது என்பதை உணர்ந்தான். அதன் பின், தன் நாட்டிற்கு திரும்பியவன், புருவிற்கு இளமையை திரும்பி அளித்துவிட்டு , முதுமையை ஏற்று அரசாட்சி புரியத் துவங்கினான். அவனுக்குப் பின், புரு அரசபீடத்தை அடைந்தான். அவனின் வம்சத்தவர்களே மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்கள் ஆவர்.


சாபக்காலத்தில் கிடைத்த வரம்

அரசனாக பதவியேற்றப் பின் பாண்டு, பல்வேறு நாடுகளுக்கு திக்விஜயம் செய்து அந்நாடுகளை வென்று தன் சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். பாண்டுவின் இந்த செயல், பீஷ்மரின் பொறுப்பை குறைத்ததுடன், பாரதவர்ஷம்* முழுவதும் குரு வம்சத்தின் வலிமையை பரப்பியது. தன் திக்விஜயம் முடிந்தபின் தன்னிரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரியுடன் வனப்பகுதிக்கு சென்று இனிமையாக பொழுதுபோக்கினான் பாண்டு. அளவற்ற சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் தங்கள் நேரத்தை அங்கே செலவழித்தனர்.

ரிஷியின் சாபம்

அதே காட்டில் ரிஷி ஒருவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் பெற்ற வரத்தின் காரணமாய் அவர் விரும்பிய வடிவு எடுக்கும் வல்லமை பெற்றவர். ஒருநாள் அவரும் அவர் மனைவியும் மானாக மாறி இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பக்கம் வந்த பாண்டு மானைக் கண்டு அம்பெய்தினான். அவரது அம்பு பட்டு அந்த ரிஷி மரண காயம் அடைந்தார். அவர் அடிபட்டவுடன் அவரது மனைவியும் அவரும் மனித உருவை அடைந்தனர்.

பாண்டுவின் மேல் கோபம் கொண்ட ரிஷி ” பாண்டுவும், அவன் மனைவியுடன் சேரும் சமயத்தில் அவன் இறக்க நேரிடும்” என சாபம் அளித்தப் பின் இறந்து விட, சோகத்தால் தாக்கப்பட்ட அவரது மனைவியும் அங்கேயே இறந்துவிட்டார்.

இரண்டு அப்பாவிகளை கொன்றது அவன் மனதை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே தன் மனைவிகளுடன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தவன், இருவரிடமும் நடந்ததை விவரித்தான். அதனால் அவன் பெற்ற சாபத்தை பற்றியும் கூறினான். இந்த சம்பவத்தால், ஆசைகள் நீங்கியவன் அதற்கு மேல் தொடர்ந்து ஆட்சி செய்ய விரும்பவில்லை. தூதுவனை அழைத்து நடந்ததை பீஷ்மருக்கும் நாட்டு மக்களுக்கும் விளக்குமாறு கூறியவன் , அவனுடன் தனது பரிவாரங்கள் மற்றும் அவனிடம் இருந்த நகைகள் முழுவதையும் குடுத்து அனுப்பினான். மாத்ரி மற்றும் குந்தியும் அவர்களிடம் இருந்த அரச உடைகளை கொடுத்தனுப்பி விட்டு சாதாரண உடைகளை அணிந்தனர்.

குந்தியின் வரம்

அதன் பின் மூவரும் காட்டினுள் சாதாரண வாழ்க்கை வாழத் துவங்கினர். சிறிது காலத்திற்கு பின் , தனக்கு வாரிசு உண்டாக்க முடியாமல் போனது குறித்து பாண்டுவிற்கு வருத்தம் உண்டாகியது. இதை பற்றி அறிந்த குந்தி, அவள் கன்னிப் பெண்ணாக இருந்த பொழுது , மகரிஷி துர்வாசர் அவளுக்கு கூறிய புனித மந்திரங்களை பற்றி பாண்டுவிற்கு கூறினாள். எந்த கடவுளை நினைத்து சொல்கிறோமோ, அந்தக் கடவுளின் குணங்களுடன் கூடிய குழந்தையை அளிக்க வல்லது அம்மந்திரம். இதைக் கேட்டு மகிழ்ந்த பாண்டு, அந்த மந்திரங்கள் மூலம் குழந்தை பெற சம்மதம் கூறினான்.

முதலில் தர்ம தேவதையை வேண்டி, யுதிஷ்டிரரையும் , பின் வாயு தேவனை வேண்டி பீமனையும் பின் மழைக் கடவுளான இந்திரனை வேண்டி அர்ஜுனனையும் பெற்றாள். குந்தியிடம் இருந்து மந்திரங்களை கற்றுக் கொண்ட மாத்ரி மருத்துவக் கடவுளான அஸ்வினி தேவர்களை வேண்டி நகுல சகாதேவர்களை பெற்றெடுத்தாள்.

காட்டினுள் முனிவர்களின் கண்காணிப்பில் இளவரசர்கள் நன்கு வளர்ந்து வந்தனர். இளவரசர்களுக்குண்டான வாழ்வில்லை என்ற போதும் அங்கே மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனால் அத்தகைய மகிழ்வான வாழ்வு எப்பொழுதும் நீடித்து இருப்பதில்லையே.. ஒரு நாள் மாத்ரியுடன் இருந்தபொழுது , அங்கிருந்த சுற்றுப்புறங்களும் காலமும் பாண்டுவை தூண்ட அவன் மாத்ரியை அணுகினான். சாபத்தின் விளைவாய் தன் உயிரையும் விட்டான்.

குந்தி வந்தவுடன், மாத்ரி நடந்ததை அவளுக்கு விளக்கி விட்டு, பாண்டுவின் இறப்பிற்கு தானும் ஒரு காரணம் என்று கூறி , அவனுடன் உடன்கட்டை ஏறிவிட்டாள். இளவரசர்கள் ஐவரையும் வளர்க்கும் பொறுப்பு குந்தியின் மேல் விழுந்தது.


நீதிபதிக்கு வழங்கப்பட்ட நீதி

ஒருமுறை , அரசரின் காவலர்கள் ஒரு திருட்டுக் குழுவை துரத்தி கொண்டு சென்றனர். அந்த திருடர்கள் காட்டிற்குள் புகுந்தனர். அங்கே மரத்தின் கீழே ஒரு முனிவர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்ததை கண்டு அங்கே இருந்த அவரது ஆசிரமத்தில் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை பாத்துக்க வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின் அங்கே வந்த காவலர்கள், ரிஷியிடம் அந்த கொள்ளையர்களை பற்றி விசாரித்தனர். அப்பொழுதுதான் தியானத்தில் இருந்து எழுப்பப்பட்ட ரிஷிக்கு அங்கே நடந்த எந்த விஷயமும் தெரியவில்லை எனவே அவர்களின் கேள்விக்கு அவர் எந்த பதிலும் தரவில்லை. அதற்குள் அவர் ஆசிரமத்தை சோதனையிட்ட காவலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அங்கே பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு, கொள்ளைக் கூட்ட தலைவன்தான் ரிஷி வேடம் போட்டிருப்பதாக எண்ணி அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அரசனின் முன் விசாரணைக்கு இது வந்தபொழுது, அரசன் அந்த ரிஷியை கழுவில் ஏற்ற உத்தரவிட்டான்.

அதைத் தொடர்ந்து ரிஷி மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டார். ஆனாலும் அவரது தவ வலிமையால் உயிர் இழக்கவில்லை . இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மற்ற ரிஷிகள் அங்கு கூடத் துவங்கினர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மன்னனும் அங்கே விரைந்தான். அங்கே சென்ற பின் விஷயத்தை முழுவதும் அறிந்த மன்னன், தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு ரிஷியை கழுவில் இருந்து விடுவித்து மீண்டும் மன்னிப்புக் கேட்டான். மன்னன் மேல் எந்த கோபம் இல்லாத ரிஷியும் அவரை மன்னித்தார். ஏனெனில் மன்னனாக அவன் தன் கடமையை செய்ததாக அவர் கருதினார்.

ரிஷி, தனக்கு ஏன் இந்த நிலை வந்தது என அறிய விரும்பினார் , அதற்காக அவர் தர்மராஜனை காண சென்றார். ” நான் இது வரை எந்த உயிரினத்தையும் துன்புறுத்தியதில்லை. அப்படி இருக்க , இத்தகையதுன்பத்தை நான் அனுபவிக்க என்ன காரணம் ” ? என தர்மராஜனிடம் அவர் வினவினார்.

” ரிஷிகளில் சிறந்தவரே ! நீங்கள் சிறுவனாக இருந்த பொழுது நிறைய பூச்சிகளையும் , புழுக்களையும் கொன்று மகிழ்ந்துள்ளீர்கள். அதன் விளைவே, நீங்கள் இந்த துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது ! “

இதைக் கேட்டவுடன் மிக கோபம் கொண்ட ரிஷி ” ஓ தர்மராஜா ! அறியா வயதில் தெரியாமல் செய்த தவறுகளுக்கு இத்தகைய கொடிய தண்டனையா ? தர்மராஜனே , நீ தர்மத்தை அறிவாயோ ? நீ மீண்டும் பூமியில் பிறக்கவேண்டியவன் . எனவே மனித பிறவி எடு” என தர்மராஜனுக்கு சாபம் இட்டார். மேலும், அப்பொழுதில் இருந்து சிறு வயதில் சிறுவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள் கர்மப் பலனில் சேராது என்றும் கூறினார்.

ரிஷி மாண்டவ்யரின் சாபத்தின் விளைவாய், தர்மராஜா , வேத வ்யாஸருக்கும் அம்பாலிக்காவின் வேலைக்காரிக்கும் மகனாக பிறந்து ” விதுரன் ” என அறியப்பட்டார். திருதராஷ்டிரனின் அமைச்சராக இருந்த விதுரன், எல்லா காலத்திலும் தர்மத்தின் பக்கமே இருந்தார். பாஞ்சாலி அரசவையில்அவமானப்படுத்தும் பொழுது அதன் பின்விளைவுகளை அறிந்த விதுரர் , இளவரசர்களை கட்டுப்படுத்த திருதராஷ்டிரனிடம் கெஞ்சியும் பலனின்றி போனது !!!

https://solvanam.com/2025/01/12/பல்லாயிரம்-ஆண்டுகளுக்க-2/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழிவாங்கும் தீ – அம்பை

அஷ்ட வசுக்கள்

அஷ்ட வசுக்கள் அவரவர் மனைவியுடன் மலைப்பிரதேசத்தில் மகிழ்வாக நேரம் கழித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மகரிஷி வசிஷ்டரின் ஆசிரமத்தை கண்டனர். அந்த சமயத்தில் ரிஷி அங்கில்லை. ஆசிரமத்தின் அருகே தெய்வ பசு நந்தினி மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டனர். அஷ்ட வசுக்களில் ஒருவர் அந்த பசுவின் தெய்வீக வடிவை கண்டு மயங்கி அதை புகழ்ந்து பேச துவங்கினார். அவரது மனைவியும் கருணை வடிவாய் இருந்த அந்த சாதுவான பசுவை பார்த்து மயங்கி அந்த பசுவை தங்களுடன் எடுத்த செல்ல விரும்பினார். ஆனால் மற்ற வசுக்கள் இதை எதிர்த்தனர். மனைவி விரும்பி கேட்டதால் அந்த ஒரு வசு மற்றவர்களை இதற்கு சம்மதிக்க வைத்து, நந்தினியை அங்கிருந்து கவர்ந்து சென்றனர்.

வசிஷ்டர், ஆசிரமத்துக்கு திரும்பிய பிறகு நந்தினியை இவர்கள் கடத்தி சென்றது அறிந்து கோபம் கொண்டார். வசுக்களை வரவழைத்து அவர்களை சபித்தார்.

 நீங்கள் உங்கள் நிலைக்கு தகுதி இல்லாத செயலை செய்தீர்கள் ! எனவே நீங்கள் மனிதனாக பிறக்கவேண்டும் “

அவரது சாபம் கேட்டவுடன் அனைத்து வசுக்களும் பயந்து, நந்தினியை திரும்ப ஒப்படைத்து சாபத்தில் இருந்து விடுவிக்க கோரினர். ஒருமுறை சபித்தால் அதை மீண்டும் பெற இயலாது. இருந்தும், நந்தினி மீண்டும் வந்ததால் கோபம் தணிந்த வசிஷ்டர் ” அந்த ஒரு வசு மட்டுமே நந்தினியை திருட எண்ணியதால் , அவன் மட்டுமே மனிதனாக பிறந்து முழு வாழ்வும் வாழ்ந்து பின் இறப்பை சந்திக்க நேரிடும். மற்ற அனைவரும் பிறந்ததுமே சாபத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் வசுக்கள் ஆவீர்கள் ” என சாபத்தை மாற்றினார்.

இதன் பின், வசுக்கள் கங்கையை சென்று சந்தித்து, தங்களின் சாபத்தை பற்றிய விவரத்தைக் கூறி பூலோகத்தில், தங்களது தாயாக இருக்க வேண்டினார்கள். அவர்கள் மேல் கருணை கொண்ட கங்கையும் அதற்கு சம்மதித்தாள் . பூலோகத்திற்கு வந்து, சந்தனு ராஜாவை சந்தித்து அவரை மணந்துக் கொண்டாள். ஆனால் அதற்கு முன் , தான் செய்யும் எந்த செயலைப் பற்றியும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்ற நிபந்தனை விதித்து அதற்கு அரசன் சம்மதத்தைப் பெற்றாள்.

முதல் ஏழு வசுக்கள் பிறந்த பொழுதும், பிறந்தவுடனேயே அவர்களை கங்கை நதியில் வீசி அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தாள் . ஏழு குழந்தைகளை அவள் கங்கையில் வீசிய பொழுதும் எதுவும் கேட்காத சந்தனு, அவள் எட்டாவது குழந்தையை வீச முயன்றபொழுது, அவளை தடுத்து அவளது செய்கைகளுக்குக் காரணம் கேட்டார்.

சந்தனுவிடம் தன் உண்மை தோற்றத்தை காட்டிய கங்கை, தனது செய்கைகளுக்கு உண்டான காரணத்தையும் விளக்கி கூறினாள். பின், ” நீ எனக்கு அளித்த சத்தியத்தை மீறியதால், இனி என்னால் உன்னுடன் வாழ இயலாது. இப்பொழுது இக்குழந்தையை என்னுடன் அழைத்து செல்கிறேன். உரிய காலம் வரும் நேரத்தில் அவன் உன்னிடம் வந்து சேர்வான் ” எனக் கூறி அக்குழந்தையுடன் அங்கிருந்து சென்றாள். அதன் பின், பதினாறு வருடங்கள் கழித்து அனைத்தும் கற்ற இளம் வாலிபனாய் அரசனிடம் திரும்பி வந்தது அக்குழந்தை. தேவவிரதன் என அழைக்கப்பட்ட அந்த இளைஞன், அனைவராலும் மதிக்கப்பட்டு, பயத்துடன் பார்க்கப்பட்டான் . அவன் அனைவருக்கும் கவலைப்பட்டு அனைவரையும் பார்த்துக் கொண்டாலும், மகிழ்ச்சி என்பதே வாழ்வு முழுவதும் அறியாமல் இருந்தான்.


பழிவாங்கும் தீ – அம்பை

சத்யவதியின் மகன் விசித்திரவீர்யனுக்கு திருமண வயது வந்ததும் அவனுக்கு உரிய மணமகளை தேடும் வேலையை துவங்கினார் பீஷ்மர். அந்த சமயத்தில் , காசி ராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா மற்றும் அம்பாலிகாவிற்கு சுயம்வரம் நடைபெற்றது. குணவதிகளும் அழகிகளுமான அவர்களை விசித்திரவீர்யனுக்கு திருமணம் செய்ய முடிவுசெய்தார் பீஷ்மர். சுயம்வரத்திற்கு சென்ற இவரை, இவரது நோக்கம் தெரியாமல் அங்கு வந்திருந்த மற்ற இளவரசர்கள் கிண்டல் செய்தனர். ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் சுயம்வரத்திற்கு வந்ததால் இந்த கேலி நிகழ்ந்தது. இதனால் கோபம் அடைந்த பீஷ்மர் அவர்கள் அனைவரையும் சண்டைக்கு அழைத்தார். மிக எளிதாக எந்தவித கஷ்டமும் இன்றி அந்த இளவரசர்கள் அனைவரையும் தோற்கடித்து, மூன்று இளவரசிகளையும் அங்கிருந்து அழைத்து சென்றார்.

அம்பை, ஸுபால ராஜன் சால்வனை விரும்பியதையும், சுயம்வரத்தில் அவனுக்கு மாலையிட விரும்பியதையும் பீஷ்மர் அறியவில்லை. அஸ்தினாபுரம் திரும்பும் வழியில் , சால்வன் இவரை வழிமறித்து போருக்கு அழைத்து தோல்வியடைந்தான். அஸ்தினாபுரம் வந்தபின்பே, அம்பை , தனது மனதில் இருப்பதை பீஷ்மரிடம் கூறினார். தான் தவறு செய்ததை உணர்ந்த பீஷ்மர், தக்க பாதுகாப்புடன் அவளை சால்வன் இருக்குமிடத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் சால்வனோ, பலர் பார்க்க பீஷ்மர் என்னை தோற்கடித்தார். எனவே என்னால் உன்னை திருமணம் செய்ய இயலாது என கூறினான்.

இதனால் மனம் உடைந்த அம்பை, கோபத்துடன் மீண்டும் பீஷ்மரிடம் திரும்பி வந்து, நடந்ததை கூற, அவர் விசித்திரவீரியனிடம் அம்பையை திருமணம் செய்யக் கூறினார். அவனோ, மனதில் வேறொரு ஆணை நேசிக்கும் பெண்ணை தான் திருமணம் செய்ய இயலாது எனக் கூறி மறுத்துவிட்டான்.

மீண்டும் சிலகாலம் கழித்து சால்வன் மனம் மாறியிருப்பான் என எண்ணி , அம்பையை அங்கே அனுப்ப, அவன் மீண்டும் மறுத்துவிட்டான். இதனால் கடுங்கோபம் கொண்ட அம்பை, நீங்கள்தான் இந்த நிலைக்கு காரணம் எனவே நீங்களே என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பீஷ்மரிடம் சண்டையிட்டாள்.

ஆனால், ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டதால் பீஷ்மர் அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். தனது வலிக்கும் வாழ்வின் பிரச்சனைக்கும் பீஷ்மர் மட்டுமே காரணம் என எண்ணிய அம்பை அவரை அழிக்க சபதம் பூண்டாள். சுப்ரமணியரை நோக்கி தவம் இருந்து, என்றும் வாடாத தாமரை மாலையை வரமாகப் பெற்றாள். அந்த மாலையை அணிந்தவர் பீஷ்மரை அழிக்க இயலும் என்பதே வரமாகும்.

அந்த மாலையுடன் வலிமை மிகுந்த பல அரசர்களிடம் சென்று பீஷ்மரை தோற்கடிக்க உதவிக் கோரினாள். ஆனால் பீஷ்மரை பகைத்துக் கொள்ள எவரும் விரும்பாததால் அனைவரும் மறுத்துவிட, அம்பை துருபதனிடம் சென்றாள். துருபதனும் மறுத்துவிட, அவனின் அரண்மனை வாசலில் தாமரை மாலையை தொங்கவிட்டு காட்டுக்கு சென்றாள் அம்பை. அங்கே இருந்த சில முனிவர்கள் அவளை பரசுராமரை அணுகுமாறு கூற, பரசுராமரிடம் சென்றாள். முதலில் சால்வனிடம் பேசி அவளை திருமணம் செய்துகொள்வதாய் அவர் கூற, இனி தன் வாழ்வில் இல்லறத்திற்கு இடம் இல்லையென்றும், பழி வாங்குவது மட்டுமே தன் லட்சியம் என அவள் மறுத்துவிட , பீஷ்மரை போருக்கு அழைத்தார் பரசுராமர். நீண்ட நாட்கள் இருவருக்கும் வெற்றி தோல்வி இன்றி சண்டை நீடிக்க, இறுதியில் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு அங்கிருந்து விலகினார் பரசுராமர்.

இதனால், மனம் உடைந்த அம்பை மீண்டும் சிவனை நோக்கி கடுமையான தவமிருக்க துவங்கினாள். இறுதியில் அவள் தவத்தை மெச்சி காட்சியளித்த சிவன், அடுத்த பிறவியில் அவள் பீஷ்மரை கொல்ல முடியும் என வரமளித்தார். இதனை கேட்டவுடன், தீ மூட்டி, அதில் இறங்கினாள் அம்பை.

அடுத்த பிறவியில் துருபதனின் மகளாக பிறந்தாள் . சிறு வயதிலேயே அம்பை முன்பு வாயிலில் தொங்க விட்டு சென்ற தாமரை மாலையை எடுத்து அணிந்து கொண்டாள் . இதை அறிந்த துருபதன், பீஷ்மரின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க, அவளை காட்டிற்கு அனுப்பி வைத்தார். காட்டில் போர்கலைகளை கற்றவள், அங்கிருந்த யட்சனின் உதவியுடன் ஆணாக சிகண்டியாக மாறினாள்.

images-11-1.jpg?resize=600%2C400&ssl=1

மகாபாரத யுத்தத்தில் சிகண்டி பெண்ணாக பிறந்தவள் என அறிந்திருந்த பீஷ்மர் அவளை தாக்கவில்லை. பத்தாம் நாள், யுத்தத்தில், அர்ஜுனனுக்கு சாரதியாக கிருஷ்ணரின் இடத்தில் சிகண்டி இருக்க, அர்ஜுனன், சிகண்டி இருவருமே அவர் மேல் கணைகளை தொடுத்தனர். பிதாமகர், அர்ஜுனனின் அம்புகள் வலிமையாகவும் துன்புறுத்துவதாகவும் இருந்ததாகக் கூறினார். அவருடைய நீண்ட துன்பகரமான வாழ்வு அங்கு முடிவுக்கு வந்தது.


பதிலுக்கு பதில்…

துரோணரும், துருபதனும் அவர்களின் இளம் வயதில் ரிஷி பாரத்வாஜரின் குருகுலத்தில் பயின்றுவந்தனர். அப்பொழுது இருவரும் மிக நெருங்கிய தோழர்களாய் இருந்தனர். அந்த நேரத்தில், துருபதன் துரோணருக்கு ஒரு வாக்கு அளித்தார். அவர் நாட்டின் அரசராக ஆகும் பொழுது, அவரது சாம்ராஜ்யத்தின் பாதியை துரோணருக்கு அளிப்பதாக கூறினார். குருகுலம் முடிந்து இருவரும் பிரிந்தனர். துருபதன் நாளடைவில் பாஞ்சால நாட்டின் அரசன் ஆனான். துரோணர், கிருபரின் சகோதரி கிருபையை மணந்து அஸ்வத்தாமன் என்ற மகனை பெற்றார். உலகிலேயே சிறந்த வில்லாளி ஆக வேண்டும் என்ற ஆசையில் பரசுராமரிடம் மேலும் பயின்றார்.

வித்தையில் சிறந்தவராக இருந்தாலும், போதுமான வருமானம் இல்லாததால் மிக வறுமையில் சிக்கி தவித்தார் துரோணர். ஒருமுறை, அஸ்வத்தாமன் அவனது அம்மாவிடம், ” அம்மா என் நண்பன் பால் பருகியதாகக் கூறினான். பால் என்றால் என்ன ? ” என கேக்கும் அளவிற்கு அவர்கள் வறுமையில் இருந்தனர். இதனால் வேதனையுற்ற கிருபை துருபதனின் வாக்கை துரோணருக்கு நினைவூட்டி அவரிடம் சென்று உதவி கேக்க சொன்னாள்.

இளம்பிராயத்து நினைவுகளும் துருபதனுடன் கழித்த இன்பமான நினைவுகளும் மனதில் தோன்ற பாஞ்சாலத்திற்கு சென்றார் துரோணர். அங்கே அரசவையில் துருபதனை நண்பனாய் நினைத்து பேச, அதிகாரத்தில் இருப்பதால் அகந்தையில் துருபதன் துரோணரை பிச்சைகாரன் என்றும் அரசரை நேரடியாக சந்தித்து பேச அருகதை இல்லை என்றும் அவமதித்தான்.

இதனால் கோபம் கொண்ட துரோணர், இதற்கு பழி வாங்க உறுதி பூண்டார். சில காலம் கழித்து , துரோணர் குரு வம்சத்து ஆச்சாரியாராக ஆனார். குரு வம்ச இளவரசர்களின் குருகுல காலம் முடிந்ததும், அவர்களிடம் குரு தட்சணையாக துருபதனை பிடித்து வர சொன்னார். இளவரசர்கள் அவர்களின் முதல் போரை எண்ணி சந்தோசத்துடன் சென்றனர்.

முதலில் போருக்கு சென்ற கௌரவர்களை எளிதாக தோற்கடித்தான் துருபதன். அதன்பின், யுதிஷ்டிரன் இல்லாமல் சென்ற பாண்டவர்கள், துருபதனை எளிதில் வீழ்த்தினர். அர்ஜுனன் அப்பொழுதே தீர செயல்கள் செய்து தான் சிறந்த போர் வீரன் என நிரூபித்தான். எதற்காக இந்த யுத்தம் என புரியாமலே அவர்களிடம் கைதியானான் துருபதன்.

தன் மாணவர்களின் சாமர்த்தியத்தை கண்டும், தன் சபதம் நிறைவேறியதை கண்டும் துரோணர் மகிழ்ந்தார். பின் துருபதனை நோக்கி ” நீ என்னை பிச்சைக்காரன் என்று அழைத்தாயே நினைவிருக்கிறதா ? இன்று உனது ராஜ்ஜியம் என்னிடம். இப்பொழுது, உன் உயிரை காப்பாற்றக் கூடியது என்று எதுவும் உன்னிடம் இல்லை. இப்பொழுது மற்ற பிச்சைக்காரர்கள் போன்றுதான் நீயும். உன்னை இப்பொழுதே கொன்றுவிட்டு உன் ராஜ்யத்தை நான் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், எனக்கு உன் நட்பே மீண்டும் வேண்டும். அதனால், பாதி ராஜ்யத்தை திருப்பி அளிக்கிறேன் ” என்றார்.

தன் சபதம் நிறைவேறியதும் துரோணரின் கோபமும் தணிந்தது. ஆனால் அந்த சம்பவம் அப்படி நல்லபடியாக முடியவில்லை. துருபதனின் உள்ளிருந்த கோபம் வெளிப்படாமல் உள்ளுக்குள்ளே நீறு பூத்த நெருப்பாய் இருந்தது. அது பழி வாங்கத் துடிக்கும் , சண்டையிடவும் கொல்லவும் பிறந்த ஷத்ரிய வம்சத்தின் கோபம் அது. பிராமணரை கொல்லும் ஒரு மகனும், அர்ஜுனன் போன்ற ஒரு வீரனை மணக்கக் கூடிய மகளும் வேண்டும் என்று அப்பொழுதே மனதில் உறுதி கொண்டார். தன்னை கைது செய்து கொண்டுவந்தாலும் அர்ஜுனனின் வீரத்தை பாராட்டாமல் இருக்க இயலவில்லை அவரால்.

திருஷ்த்துட்யும்னன் , ஆச்சாரியார் துரோணரை கொன்றான், திரௌபதி அர்ஜுனனை மணந்து அதன் மூலம், பஞ்சபாண்டவர்களுக்கும் மனைவியானாள்.

https://solvanam.com/2025/01/26/பல்லாயிரம்-ஆண்டுகளுக்க-3/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலில் துறவி

ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன்

தமிழாக்கம் : கார்த்திக்

நாரதரின் அறிவுரையின் படி , திரௌபதி பாண்டவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு வருடம் சுழற்சி முறையில் இருப்பாள் என்றும் இதை மீறுபவர்கள் ஒரு வருடம் தலைமறைவாய் இருக்க வேண்டுமென்ற விதிமுறைக்கு ஒத்துக்கொண்டனர். ஒரு நாள் , மாலைவேளையில் ஒரு பிராமணர் அர்ஜுனன் இடம் வந்து திருடப்பட்ட அவரது பசுக்களை மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டார்.

அப்பொழுது அர்ஜுனனின் ஆயுதங்கள் யுதிஷ்டரரின் வீட்டில் இருந்தன. அவர்களது சுழற்சி முறைப்படி, திரௌபதி அப்பொழுது யுதிஷ்டிரருடன் இருந்தாள். அதனால் அர்ஜுனன் தயங்கினான். இருந்தும், அந்த பிராமணர் திரும்ப திரும்ப வேண்டியதால் யுதிஷ்டரரின் வீட்டிற்கு சென்று ஆயுதங்களை எடுத்துக் கொண்டு திருடப்பட்ட பசுக்களை மீது தந்தான். அதன்பின், தர்மரிடம், ” அண்ணா ! நாம் ஏற்றுக்கொண்ட விதிமுறையை நான் மீறிவிட்டேன். எனவே , நான் நிபந்தனையை காப்பாற்ற, ஒரு வருடம் புனித யாத்திரை செல்கிறேன்” எனக் கூறினான்.

தர்மரோ, அந்த சூழ்நிலை இந்த விதிமீறலுக்கு இடம் அளித்தது. எனவே பார்த்தனின் தவறு இதில் எதுவும் இல்லை என கூறினார். ஆனாலும், தான் சொன்னதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தான் அவன். அங்கிருந்து பாரதம் முழுக்க வலம் வரத் துவங்கினான். முதலில் கிழக்குக் கடற்கரையோரமாக தனது யாத்திரையைத் துவங்கி பாரதத்தின் தென்கோடி முனையை அடைந்தான். அங்கிருந்து மேற்குக் கடற்கரையோரம் பிரயாணித்து துவாரகையை அடைந்தான்.

அங்கு வந்தவுடன் சுபத்ரையின் நினைவு வந்தது. அழகான துணிச்சலான பெண் ஆன சுபத்திரையை சந்திக்க ஆவல் கொண்டான். உடல் முழுதும் சாம்பல் பூசிக்கொண்டு துறவியாய் அங்கிருந்த கோவில் ஒன்றில் தவம் செய்யத் துவங்கினான்.

விரைவில் நகரம் முழுவதும் புதிதாய் வந்துள்ள யதியை பற்றிய செய்தி பரவியது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்த செய்தி வந்தவுடன் யதியின் அடையாளங்களைக் கொண்டு அது யாத்திரையில் இருக்கும் அர்ஜுனன் என புரிந்துக் கொண்டார். மேலும், சுபத்திரையின் கவனத்தை தன் பால் ஈர்க்கவே இதை செய்கிறான் எனவும் புரிந்து கொண்டார்.

அர்ஜுனனை நேரில் சந்தித்து அவனின் உண்மை நோக்கத்தை அறிந்து கொண்டார். சுபத்திரையை அர்ஜுனன் மேல் காதல் கொள்ள செய்யவேண்டும் என இருவரும் திட்டமிட்டனர். ஷத்ரியர்களிடையே பெண்ணின் விருப்பத்தை கொண்டு கல்யாணம் செய்து கொள்வது பழக்கத்தில் இருந்த ஒன்றாகும்.

துவாரகை வந்துள்ள யதியை பற்றிய நல்ல செய்திகளாக பலராமனின் காதுகளை எட்டுமாறு செய்தார் கிருஷ்ணர். இவர்களின் சதி ஆலோசனை பற்றி ஏதும் அறியாத பலராமனோ , யதியின் அறிவிலும் தேஜஸிலும் கவரப்பட்டு , சுபத்ராவின் தோட்டத்தில் தங்கவும், அவரது தேவைகளை கவனிக்கவும் சுபத்ராவை பணித்தான். இதற்கு கிருஷ்ணர் பலத்த எதிர்ப்பை தெரிவித்தார். இளம் வயதுடைய ஆணையும் பெண்ணையும் ஒன்றாக தங்க அனுமதிப்பது தவறு என அவர் சொல்ல, பலராமரோ கிருஷ்ணர் எதிர்பார்த்தவாறே அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

விரைவிலேயே , எது நடக்கவேண்டுமோ அது நடந்தது. வந்திருக்கும் யதி, அர்ஜுனன்தான் என்பதை சுபத்ரா அறிந்து கொண்டாள். அர்ஜுனன், சுபத்ரையின் கனவுக் காதலன். விரைவில் இருவரும் காதலிக்கத் துவங்க , நாடகம் அடுத்த கட்டத்தை அதாவது திருமணத்தை நோக்கி நகர்ந்தது.

இந்த விஷயத்தில் கிருஷ்ணர் உதவிக்கு வந்தார். பலராமரை அவர் குடும்பத்துடன் அருகில் இருந்த தீவில் நடைப்பெற்ற 15 நாள் பூஜைக்கு அழைத்து சென்றார். உடல்நலமின்மையை காரணம் காட்டி சுபத்ரா மட்டும் பின்தங்கினாள். அவர்கள் அங்கிருந்து சென்ற பன்னிரெண்டாம் நாள் நல்ல முகூர்த்த தினமாய் அமைந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் விட்டு சென்ற தேரில் சுபத்ரையுடன் அர்ஜுனன் அங்கிருந்து கிளம்பினான்.

யதி யாரென்றும் அதன் பின் நடந்தவையும் கேள்விப்பட்ட பலராமன் மிகுந்த கோபத்துக்கு உள்ளானார். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரின் பேச்சை மீறி இருவரையும் ஒரே இடத்தில தங்க அனுமதித்தது பலராமன் அல்லவா ? இப்பொழுது அவர் யாரை குற்றம் சொல்ல இயலும் ?


194895-aabzzwgwei-1697010367.jpg?resize=

இடும்பவனம் & இடும்பி

ஒருமுறை கௌரவர்களின் சதியில் இருந்து தப்பி, யார் கண்ணுக்கும் படாமல் வெகு தூரம் சென்றனர். பீமன் தனது ஒரு தோளில் அன்னை குந்தியை சுமந்து சென்றான். மற்றொரு தோளில் தனது சகோதரர்களில் ஒருவனை மாற்றி மாற்றி சுமந்து சென்றான். நீண்ட தூரம் சென்ற பிறகு ஒரு அடர்ந்த வனத்தை அடைந்தனர். அருகிலேயே நீர் நிறைந்த தாமரை குளம் ஒன்றும் இருந்ததால் அங்கே ஓய்வெடுக்க முடிவு செய்தனர். நீண்ட தூரம் அனைவரையும் சுமந்து வந்ததால் களைத்திருந்த பீமன், குளத்தில் களைப்பு தீர நீராடி வந்த பொழுது, அவனது தாயும் சகோதரர்களும் களைப்பில் உறங்கி இருந்தனர். அவர்களை எழுப்பி குளத்தில் இருந்து நீரை தாமரை இலைகளில் கொண்டு வந்து தந்து பருக செய்தவன் மீண்டும் அவர்களை தூங்க சொல்லி அவர்களுக்கு காவலாக அமர்ந்து கொண்டான்.

அந்த வனமானது கொடிய ராக்ஷஷனான இடும்பனுக்கு சொந்தமான இடும்பவனம் ஆகும். இடும்பனுக்கு நர மாமிசம் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். எப்பொழுதெல்லாம் அந்த வனத்தில் மனிதர்கள் நுழைகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களை அடித்து சாப்பிடுவது அவனுக்கு பிடித்த ஒன்றாகும். இப்பொழுதும் பாண்டவர்கள் நுழைந்தவுடன் மனித வாசனை அவனுக்கு வந்தது. உடனே தனது தங்கையான இடும்பியிடம் ” தங்கையே ! எனக்கு உணவின் வாசனை அடிக்கிறது. கண்டிப்பாய் இந்த காட்டில் மனிதர்கள் நுழைந்திருக்க வேண்டும். நீ உடனடியாக சென்று அவர்களை பிடித்து வா ! இன்று விருந்தை நாம் மகிழ்வுடன் உண்போம் !” எனக் கூறினான்.

அங்கிருந்து வந்த இடும்பி பாண்டவர்களை பார்த்தாள் . பார்த்தவுடன் அவர்களின் கருணை ததும்பும் முகம் அவளை ஈர்த்தது. அவர்களுக்கு காவலாய் அமர்ந்திருந்த நன்கு பலம் பொருந்திய ஓநாய் போன்ற உடலைக் கொண்டிருந்த பீமனையும் பார்த்தாள். அவனைப் பார்த்தவுடன் அவன் பால் ஈர்க்கப்பட்ட இடும்பி, அவர்களை உணவாக அவள் அண்ணனிடம் கொண்டு செல்லும் எண்ணத்தை மறந்தாள். பீமன் தன்னை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அழகிய பெண் வடிவத்தை எடுத்து அவன் அருகே சென்றாள் . பீமனும் அவளைப் பார்த்தவுடன் அவள் மேல் காதல் கொண்டான்.

அவளை பார்த்து ” அழகிய பெண்ணே ! நீ யார் ” என வினவினான்.

அவள் திரும்ப அவனிடம் ” முதலில் நீங்கள் யார் என நான் அறிந்து கொள்ளலாமா ? அங்கே மலர் போல் உறங்கும் அழகிய பெண்மணி யார் ? யாரிந்த இளம் வாலிபர்கள் ?” என கேட்டாள்.

” நான் பீமன் , அரசன் பாண்டுவின் மகன். அங்கே இருப்பவர்கள் என் சகோதரர்கள் . என் மூத்த சகோதரனும் என் இளைய சகோதரர்களும். அது என் அம்மா . நீ தேவதையா ?” என பதில் உரைத்தான் பீமன்.

அதற்கு இடும்பி ” என் பெயர் இடும்பி, இந்த காட்டை ஆளும் இடும்பனின் சகோதரி. அவன் உன்னை கண்டால் உன்னை தின்றுவிடுவான். உன்னை என்னால் இழக்க இயலாது. உங்கள் அனைவரையும் நான் காப்பாற்ற விரும்புகிறேன். உங்கள் எல்லோரையும் அந்த மலை சிகரத்துக்கு தூக்கி சென்றுவிட்டால் உங்களை அவனால் கண்டுபிடிக்க இயலாது ” என காதல் வேகத்தில் கூறினாள்.

” என்னைப் பற்றி அவ்வளவு தாழ்வாக எண்ணாதே பெண்ணே ! உன் அண்ணன் வரட்டும் அவனை நான் கொல்கிறேன் ” என்று பெருமிதத்துடன் கூறினான்.

விரைவில் பசியினால் பொறுமை இழந்த இடும்பனின் கர்ஜனை கேட்டது. அதைக் கேட்டவுடன் இடும்பி நடுக்கத்துடன் குந்தி அருகே சென்று அமர்ந்து கொண்டாள். மரத்தின் பின்னிருந்து வந்த இடும்பன், தன் தங்கை அழகிய உருவம் எடுத்து மனிதர்களுடன் அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் கோபம் கொண்டான்.

பீமன் அவனை சண்டைக்கு அழைத்தான். உடனே இருவருக்கும் இடையே மிக கடுமையான சண்டை துவங்கியது. அந்த சப்தத்தில், உறங்கி கொண்டிருந்த குந்தியும் மற்ற சகோதரர்களும் விழித்துக் கொண்டனர். தன்னருகே அமர்ந்திருந்த இடும்பியிடம் அவளை பற்றி கேட்டு வியப்படைந்தாள் குந்தி. யுதிஷ்டிரன் பீமனிடம் ” சண்டையை வளர்த்துக் கொண்டே செல்லாதே ! இரவு கவிழ்ந்தவுடன் ராக்ஷர்களின் பலம் அதிகமாகி விடும் ” எனக் கூறினான்.

உடனே பீமன், இடும்பனை தன்னுடைய பலம் வாய்ந்த கைகளால் உருத்தெரியாமல் நசுக்கி எறிந்தான். அதன் பின், பாண்டவர்களும், குந்தியும் தங்கள் பயணத்தை தொடர முடிவு செய்து அங்கிருந்து கிளம்பினார்கள். வேறு வழித் தெரியாத இடும்பியும் அவர்களை பின் தொடர்ந்தாள் . இதைக் கண்ட குந்தி ” மகளே ! நீ என் எங்களைப் பின் தொடர்கிறாய் ” என வினவினாள்.

இடும்பி நாணத்துடன் பீமனை பார்த்து பின் ” நீங்கள் அவருடைய அம்மா ..” என கூற, குந்தி பீமனை அவன் மனதில் இருப்பதை சொல்ல சொன்னாள் . மிக பெரிய உருவம் கொண்ட பீமன், வெட்கத்துடன் தரையை பார்த்தும் தன் புன்னகையை மறைக்கவும் முயன்றான்.

விரைவில் ஒரு அழகிய இடத்தை அடைந்தனர் அவர்கள். அங்கே இடும்பி அவர்கள் தங்க ஒரு குடிசை நிர்மாணித்தாள் .

அதன் பின், பீமன் இடும்பியை மணந்து அங்கே மகிழ்வாக வாழ்ந்தனர். மகன் பிறந்தவுடன் அவனுக்கு ” கடோத்கஜன்” என பெயரிட்டு அவனை தாயுடன் விட்டுவிட்டு தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.


பழிக்கு பழி

அரக்கு மாளிகை தீயில் இருந்து தப்பிய பாண்டவர்கள் ஏகசக்கரம் என்ற நகரில் பிராமணர்களாக வேடம் பூண்டு ஒரு பிராமணரின் வீட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர் . தினமும் அந்நகரத்தில் பிக்ஷை எடுத்து உண்டு வந்தனர் .

அத்தகைய சமயத்தில் ஒரு நாள் , சகோதரர்கள் நால்வரும் பிக்ஷை எடுக்க வெளியே சென்றிருக்கையில் பீமன் மட்டும் தன் தாய் குந்தியுடன் வீட்டில் இருந்தான் . அப்பொழுது அந்த வீட்டின் உரிமையாளரின் பகுதியில் எதோ குழப்பமான விவாதம் நடப்பது அவர்கள் காதில் விழுந்தது .

“அன்பே! நீ கூறுவதுபடி , நீ எங்களை விட்டு பிரிந்து சென்றால் நான் என்ன செய்வேன்? நம் குழந்தைகள் என்ன செய்வார்கள்? நம் சிறு மகளை நாம் காப்பாற்ற வேண்டும். மேலும் , நம் குலத்தையும் காப்பாற்ற வேண்டும்.” என அந்த வீட்டின் உரிமையாளர் தன் மனைவியிடம் கூறினார் .

“நாதா! நான் போய்தான் ஆக வேண்டும். நீங்கள் செல்ல நான் அனுமதிக்க இயலாது. கணவன் இல்லாமல் , குழந்தைகளை எப்படி ஒரு பெண் பாதுகாக்க இயலும் ? மேலும் , அப்பாவி குழந்தைகள் தந்தை இல்லாமல் எங்ஙனம் வளர்வார்கள்? எனக்கு இறப்பை பற்றிய எந்த கவலையோ பயமோ இல்லை. நான் இறந்த பிறகு நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை கவனமாக வளருங்கள்” என்று அவருடைய மனைவி பதில் கூறினாள்.

இதைக் கேட்ட அவர்களின் சிறு பெண் ” நான் சிறு பெண்தான் . இருந்தாலும் , நான் சொல்வதை இருவரும் கேளுங்கள் . நீங்கள் இறந்துவிட்டால், சிறு குழந்தைகளான நானும் என் தம்பியும் என்ன செய்வோம்? என்னை செல்ல நீங்கள் அனுமதித்தால் , உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும்” என கூறினாள்.

இதைக் கேட்ட பெற்றோர் இருவரும் அவளை அனைத்துக் கொண்டனர் . நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் சிறு மகன் கையில் ஒரு தடி எடுத்துக் கொண்டு வந்து ” ஏன் எல்லாரும் அழுகிறீர்கள்? யாரும் பயப்பட வேண்டாம். நான் சென்று அந்த அரக்கனை கொன்று விடுவேன் ” என கூறியதைக் கேட்டு அந்த துயரமான நிலையிலும் அனைவரும் சிரித்தனர் .

அந்த சமயத்தில் அங்கே வந்த குந்தி ” நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என நான் அறிந்து கொள்ளலாமா ? ” என வினவினாள்.

“சகோதரி ! பகாசுரன் என்ற அசுரன் பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து இந்த நகரின் ராஜாவை கொன்று நகரைக் கைப்பற்றிக் கொண்டான் . பின், வெறி கொண்டவனாய் நகரத்தில் இருக்கும் மக்களை கொல்ல துவங்கினான் . அவனது அராஜகத்தை சமாளிக்க முடியாத மக்கள் அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர் . அதன்படி , ஒவ்வொரு வாரமும் , வண்டி நிறைய உணவுப் பொருட்களுடன் ஒரு மனிதரை அனுப்புவதாய் ஒத்துக் கொண்டனர். அதன்படி , ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒருவர் உணவு கொண்டு செல்லவேண்டும் . அந்த உணவுடன் , உணவு எடுத்து செல்லும் நபரையும் பகாசுரன் விழுங்கி விடுவான் . இந்த வாரம் உணவு எடுத்து செல்ல வேண்டியது எங்கள் குடும்பத்தின் முறை. “

” மக்களை காப்பாற்ற வலிமையான அரசரோ இளைஞர்களோ இல்லாதபட்சத்தில் வலிமையற்ற சாதாரண மனிதர்களாகிய நாங்கள் என்ன செய்ய? ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியாத எங்களால் என்ன செய்ய முடியும்? பேசாமல் , நாங்கள் நால்வருமே அவனுக்கு உணவாக செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறோம்” என அவர் நிலைமையை குந்திக்கு விளக்கினார் .

“சகோதரரே! நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு ஐந்து மகன்கள் . அவர்களில் ஒருவன் இந்த முறை அசுரனுக்கு உணவெடுத்து செல்லட்டும் ” என குந்தி கூற அதை அந்த பிராமணர் மறுத்தார் .

“என்னுடைய மகன் பீமன் மிகவும் பலம் பொருந்தியவன் . ஏற்கெனவே அவன் பல அசுரர்களுடன் சண்டையிட்டு அவர்களை கொன்றிருக்கிறான். எனவே நீங்கள் அதை எண்ணி பயப்பட வேண்டாம். உங்களுக்கு பதில் அவன் செல்வான்” என குந்தி உறுதி அளித்தாள்.

குந்தியின் உத்தரவின் படி இரண்டு வண்டிகள் நிறைய உணவுப் பொருட்களுடன் பகாசுரன் இருந்த குகை நோக்கி சென்றான் பீமன் . அந்த குகையை அடைந்தவுடன் வண்டியை நிறுத்திய பீமன் வண்டியில் இருந்த உணவுப் பொருட்களை சாப்பிடத் துவங்கினான் . பகாசுரனுடன் சண்டையிடும் பொழுது அந்த உணவு கீழே விழுந்து வீணாகிவிடும். மேலும், அவனைக் கொன்றவுடன் குளிக்காமல் உண்ண இயலாது என அவ்வாறு செய்தான் .

உணவின் சுவை நாசியில் ஏற தன் குகையில் இருந்து வெளிவந்த பகாசுரன் , தனக்கான உணவுப் பொருட்களை மானிடன் ஒருவன் உண்பதைக் கண்டு கோபம் கொண்டு தாக்கத் துவங்கினான் . துவக்கத்தில் , அவனது தாக்குதலை கண்டுகொள்ளாத பீமன், ஒரு கையால் உணவருந்திக் கொண்டே மறு கை கொண்டு அசுரனுடன் சண்டையிட்டான் . உணவுகளை முழுவதும் உண்ட பின் , அங்கிருந்த மரத்தைப் பிடுங்கி அசுரனை தாக்க பதிலுக்கு அசுரன் எறிந்த கற்களை விளையாட்டாக தடுத்தான் . பின் பகாசுரனை தூக்கி தரையில் எறிந்து கொன்று அந்நகர மக்களுக்கு விடுதலை தந்தான் .

https://solvanam.com/2025/02/09/காதலில்-துறவி/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணலில் கட்டப்பட்ட பாலம்

ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன்

தமிழாக்கம் : கார்த்திக்

பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் லோமேஸர் என்ற முனிவர் அவர்களுடன் வழிகாட்டி சென்றார் . ஒருமுறை , கங்கைக் கரையில் அமைந்திருந்த ஒரு ஆசிரமத்திற்கு அவர்களை அழைத்து சென்று அந்த இடத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கத் துவங்கினார் . அந்த இடமானது , பரத்வாஜ முனிவரின் மகனான யவக்ரீதா தன் அழிவை தேடிக்கொண்ட இடமாகும் .

அந்த இடமானது பரத்வாஜ முனிவரின் நண்பரான ரைபயா என்ற முனிவரின் ஆசிரமம் . அங்கே ரைபயாவும் அவரது மகன்களான பரவஸு மற்றும் அர்வவஸு வேதங்களைக் கற்றுணர்ந்து மிகவும் புகழுடன் வாழ்ந்த வந்தனர் . பரத்வாஜ முனிவரோ இந்த உலக சுகதுக்கங்களை விடுத்து இறைவனுடன் கலப்பது பற்றியே சிந்தனையாக இருந்தார் . ரைபயா மற்றும் அவரது மகன்களுக்கு கிடைத்த புகழை கண்டு பொறாமைக் கொண்டான் யவக்ரீதா. தானும் அது போன்ற புகழைப் பெற வேண்டி இந்திரனை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டான் .

images-1-1-1.jpg?resize=600%2C400&ssl=1

அவனது கடுமையான தவத்தைக் கண்டு மனமிரங்கிய இந்திரனும் அவன் முன் தோன்றி எதற்கு இத்தகைய தவம் இயற்றுகிறாய் என கேட்டான். அதற்கு யவக்ரீதா “இந்திரனே ! இந்த உலகில் உள்ள வேதங்களை எல்லாம் கற்றுணர்ந்தவன் ஆக விரும்புகிறேன் . ஆனால், ஒரு குருவிடம் சென்று இவற்றை கற்க நான் விரும்பவில்லை . எனவே, எனக்கு அந்த வேதங்களின் அறிவை கொடுப்பாயாக” எனக் கேட்டான் .

அதைக் கேட்ட இந்திரனோ “வேதங்களை அறிய அவற்றை கற்பதே ஒரே வழி . எனவே , இந்த தவத்தை விடுத்து ஒரு குருவிடம் சென்று அவற்றைக் கற்றுக்கொள்” எனக் கூறி மறைந்தான் .

ஆனால் , தன் முயற்சியை கைவிட விரும்பாத யவக்ரீதா, மீண்டும் முன்னை விட கடுமையான தவத்தை மேற்கொள்ள துவங்கினான். இம்முறையும் இந்திரனிடம் மீண்டும் அதே வரத்தை கேட்க , இந்திரனும் முன்பு சொன்ன அதே பதிலைக் கூறினான் .

பின் ஒரு நாள் காலையில் யவக்ரீதா குளிக்க ஆற்றங்கரைக்கு சென்றான். அங்கே ஒரு முதியவர் கரையில் இருந்த மணலை எடுத்து ஆற்றில் போட்டுக் கொண்டிருந்தார் . அவர் என்ன செய்கிறார் என புரியாத யவக்ரீதா அவரிடம் வினவினான் . அதற்கு அந்த முதியவர் “ஆற்றில் இந்த மணலைப் போடுவதன் மூலம் , இக்கரையில் இருந்து அக்கரை செல்ல பாலம் எழுப்புகிறேன்” என பதில் உரைத்தார் .

அதைக் கேட்ட யவக்ரீதா சிரித்துக் கொண்டே “கையில் மணல் எடுத்து பாலம் கட்டப் போகிறாயா? உனக்கு இது முட்டாள்தனமாக தெரியவில்லையா? ” என கேலியாக கேட்டான்.

“வேதங்களை கற்காமலேயே அந்த அறிவு வேண்டும் என நினைப்பதை விடவா இது முட்டாள்தனம்?” என திருப்பிக் கேட்டார் முதியவர்.

அந்த முதியவர் வேறு யாருமில்லை . இந்திரன்தான் முதியவரின் வடிவில் யவக்ரீதாவிற்கு பாடம் புகுத்த வந்திருந்தான். தன் தவறை உணர்ந்த யவக்ரீதா, இந்திரனின் காலில் விழுந்து “நான் நன்கு கற்றறிந்தவன் ஆக ஆசிர்வதிப்பீர்களாக” என கேட்டான். இந்திரனும் அவனது மனமாற்றத்தால் மகிழ்ந்து “நீ வேதங்களை நன்கு கற்றறிந்து புகழுடன் வாழ்வாயாக” என ஆசிர்வதித்தார்.


அழிவை உண்டாக்கிய தற்பெருமை

யவக்ரீதாவின் கதையை லோமேஸர் தொடர்ந்து சொல்லலானார் . இந்திரனிடம் ஆசி பெற்ற யவக்ரீதா மெல்ல மெல்ல வேதங்களைக் கற்று தேர்ந்தான். இந்திரனின் ஆசியால்தான் தான் தனக்கு வேதங்களின் அறிவு கிட்டியதாக எண்ணி கர்வமடைந்தான். தனது மகன் செல்லும் பாதையை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த பரத்வாஜர் அவனை அழைத்து அவனை எச்சரித்தார். ரிஷி ரைபயாவையும் அவரது மகன்களையும் குறைத்து எடை போடுவது அவனது அழிவுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியது அவனது மனதில் பதியவே இல்லை .

ஒரு நாள் காலையில் , பரவஸுவின் அழகிய இளம் மனைவி , ரைபயாவின் ஆசிரமத்திற்கு அருகே நடந்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன், தனது உணர்வுகளையும் மனதையும் அடக்க முடியாத யவக்ரீதா, மிருகமாய் மாறினான். தனிமையான இடத்திற்கு அவளை இழுத்து சென்று அவளை மானபங்கப்படுத்தினான்.

ஆசிரமத்திற்கு திரும்பி வந்த ரிஷி ரைபயா, அங்கே தனது மருமகள் அலங்கோலமாய் அழுது கொண்டிருப்பதைக் கண்டு அவளிடம் விசாரிக்கத் துவங்கினார். அவள் நடந்ததை சொல்ல, அதைக் கேட்ட ரிஷி ரைபயா மிகவும் ஆத்திரம் கொண்டார். தனது ஜடாமுடியில் இருந்து இரு முடிகளை பிடுங்கி மந்திரம் ஜெபித்து அங்கே இருந்த அக்னியில் வீசினார். அந்த அக்னியில் இருந்து அழகிய பெண் ஒருத்தியும் , கோர உருவம் கொண்ட அரக்கியும் உருவானார்கள். யவக்ரீதாவை கொல்ல அவர்களுக்கு உத்தரவிட்டார் ரைபயா.

யவக்ரீதா காலை நேர கடன்களை கழித்துக் கொண்டிருக்கையில் , அவனை நோக்கி வந்த அந்த அழகிய பெண் அவனை மயக்கி அவன் தண்ணீர் வைத்திருந்த கமண்டலத்தை அவனிடமிருந்து பறித்து சென்றது. இப்பொழுது அந்த அரக்கி தன் ஈட்டியால் யவக்ரீதாவை கொல்ல வந்தது. யவக்ரீதா மந்திரங்கள் மூலம் அந்த அரக்கியை விரட்ட இயலும் என்றாலும், அதற்கு முன் அவன் தன்னை நீரால் சுத்திகரித்துக் கொள்ளவேண்டும். அவனின் கமண்டலம் பறிபோனதால், அருகில் இருந்த குளத்தை நோக்கி ஓடினான். ஆனால்,அவன் அதனருகே சென்றவுடன் அந்த குளம் வறண்டுவிட்டது. பின், அருகில் இருந்த ஓடையை நோக்கி ஓட அதுவும் அவன் அங்கே சென்றவுடன் காய்ந்து போனது. தன் உயிரை காத்துக் கொள்ள, அவனது தந்தை பரத்வாஜர் தவம் புரிந்துக் கொண்ட குடிலை நோக்கி ஓடினான். ஒவ்வொரு இடமாய் ஓடியவனின் சிகை அவிழ்ந்து முகம் வியர்த்து அடையாளம் தெரியாமல் மாறி இருந்தான். பாரத்வாஜரின் குடிலை காத்து நின்ற வயதான காவலாளிக்கு யவக்ரீதாவின் இந்த கோலம் அடையாளம் தெரியவில்லை. யாரோ பாரத்வாஜரின் தவத்தை கெடுக்க வருவதாக எண்ணி அவனை தடுத்து நிறுத்த அவன் பின்னாலேயே வந்த அந்த அரக்கி , தன் ஈட்டியால் யவக்ரீதாவை கொன்றது.

https://solvanam.com/2025/02/23/மணலில்-கட்டப்பட்ட-பாலம்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்கென நினைத்தாயோ ?

ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன்

தமிழாக்கம் : கார்த்திக்

பாண்டவர்கள் வனத்தில் வசித்து வந்த காலத்தில் அவர்களை சந்திக்க ரிஷி மார்கண்டேயர் அங்கே வந்தார். அப்பொழுது அவரிடம் யுதிஷ்டிரன் பெண்களை பற்றி உயர்வாக பேசினான். அந்த சமயத்தில் அவர்களுக்கு மார்க்கண்டேயர் ஒரு கதையைக் கூறினார். முன்னொரு காலத்தில் கௌசிகன் என்றொரு ப்ராமண பிரம்மச்சாரி வசித்து வந்தார். கடுமையான விரதங்கள் மூலம் தனது பிரம்மச்சரியத்தை காத்து வந்தார். ஒருநாள் மரத்தடியில் அவர் த்யானத்தில் இருந்த பொழுது அங்கே பறந்த கொக்கு ஒன்று அவரது தலையில் எச்சமிட்டது. அதனால் கோபமடைந்த கௌசிகன் கோபத்துடன் எரித்து விடும் எண்ணத்துடன் அதை பார்த்தார். அடுத்த நொடி அந்த கொக்கு எரிந்து சாம்பலானது. தான் நினைத்தது உடனே பலித்ததை எண்ணி பெருமை அடைந்தார்.

அடுத்த நாள், தனது தினசரி வழக்கப்படி பிக்ஷை எடுக்க சென்றார். அவர் சென்ற வீட்டுப் பெண்மணி, தனது வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்ததனால் அவரைக் காத்திருக்க சொன்னாள். அவள் வேலையை முடிக்கும் தருணத்தில் அவளது கணவன் வந்து விட அவனை கவனிக்க சென்று விட்டாள். அவனுக்கு உணவளித்தப் பின், கௌசிகனுக்கு பிக்ஷை இட வந்தாள். வெகுநேரம் காத்திருந்ததால் கோபமடைந்த கௌசிகன் அவளை கோபமாய் பார்க்க அவளோ ” நீ கோபத்துடன் பார்த்தால் எரிந்து விட நான் என்ன கொக்கா? நான் எனது தர்மத்தை சரியாக கடைப்பிடிக்கும் பெண்” என்றுக் கூறினாள்.

images-5-1.jpg?resize=600%2C400&ssl=1

தான் கொக்கை எரித்தது இவளுக்கு எவ்வாறு தெரிந்தது என கௌசிகனுக்கு ஆச்சர்யம். அதைக் கண்ட அந்த பெண் “பார்த்தால் கற்றறிந்தவர் போல் இருக்கிறீர்கள். ஆனால் , எது தர்மம் என அறியாமல் உள்ளீர்களே? உண்மையான தர்மத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் பக்கத்துக்கு நகரத்தில் வசிக்கும் தர்மவியாதரை சென்று சந்தியுங்கள்” எனக் கூறினாள்.

வியப்புடன் நகரத்திற்கு சென்ற கௌசிகனுக்கு அடுத்த ஆச்சர்யம் காத்திருந்தது. தனிமையான குடிலில் தவம் செய்து கொண்டிருக்கும் ஒருவரை எதிர்ப்பார்த்து சென்றவருக்கு தர்மவியாதர் கசாப்பு தொழில் செய்பவர் என தெரிந்ததும் அவர் என்ன தர்மத்தை தமக்கு சொல்லி விட முடியும் என்ற யோசனை தோன்றியது.

கௌசிகனை கண்டதும் “தர்மம் அறிந்த பெண்மணி அனுப்பியவர்தானே தாங்கள்? சற்று காத்திருங்கள். என் வேலையை முடித்துவிட்டு வருகிறேன்” எனக் கூறி தனது வேலையை கவனிக்க துவங்கினார். மீண்டும் ஆச்சரியப்பட்ட கௌசிகன் அவருக்காக காத்திருந்தார். தன் வேலையை முடித்துக்கொண்டு கௌசிகனை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றார் தர்மவியாதர். அங்கே சென்றும் எதுவும் கூறாமல் , அங்கே இருந்த அவரது வயதான பெற்றோருக்கு பணிவிடை செய்யத் துவங்கினார். அதுவரை தன்னைப் பற்றி மட்டும் எண்ணி வந்த கௌசிகனுக்கு உண்மையான தர்மம் என்னவென்று புரிந்தது. தனது வீட்டிற்கு திரும்பியவர் தனது பெற்றோரை கவனிக்கத் துவங்கினார்.


தங்கக் கூண்டில் இருந்து விடுதலை

வனவாசத்தின் பொழுது ஒருமுறை ரிஷி விபாண்டகர் வசித்த ஆசிரமத்தின் வழியாக சென்றனர் பாண்டவர்கள். அப்பொழுது அவர்களுக்கு விபாண்டகரின் மகனான ரிஷி ரிஷ்யஸ்ருங்கரை பாரிய கதையை லோமேஸர் அவர்களுக்கு கூறினார். விபாண்டகர், தன் மகனுடன் துறவிகளுக்கு உண்டான வாழ்வை வசித்து வந்தார். பொதுமக்களிடம் இருந்து மிகவும் தள்ளி தனியாக வசித்து வந்த காரணத்தினால் ரிஷ்யஸ்ருங்கர் மற்ற யாருடனும் பழகியதே இல்லை. தன் தந்தையிடம் இருந்து கற்று தேர்ந்த ஞானத்துடன், பிரம்மச்சரிய வாழ்வை கடைப்பிடித்ததால் உண்டான தூய்மை மற்றும் புனிதத்தினால் அவர் மிக அதிக சக்தி உடையவராக இருந்தார்.

அருகில் இருந்த அங்க தேசத்தில் ஒரு முறை கடுமையான வறட்சி ஏற்பட்டு அதனால் பஞ்சம் உண்டானது. அங்க தேச அரசனான ரோமபாதா, கற்றறிந்த ஞானிகளிடம் இதற்கு தீர்வை கேக்க, அவர்கள் ரிஷ்யஸ்ருங்கரை நாட்டுக்கு வரவழைக்க சொன்னார்கள். ரிஷ்யஸ்ருங்கர் எங்கு சென்றாலும் அங்கே மழை வரும். எனவே அவரை எப்பாடுபட்டாவது அழைத்து வர கூறினார்கள்.

அதன் பின், ரிஷ்யஸ்ருங்கரை அழைத்து வர ரோமபாதா திட்டம் தீட்டினான். நாட்டின் மிக சிறந்த அழகிகளை அழைத்து ரிஷ்யஸ்ருங்கரை தன் நாட்டுக்கு அழைத்துவர உத்தரவிட்டான். உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தால் அரசனின் கோபத்திற்கு உள்ளாக நேரிடலாம். அதே நேரத்தில், அதற்கு கட்டுப்பட்டு ரிஷியிடம் சென்றால் அவர் சபிக்க நேரிடலாம். எனவே பயந்து கொண்டே தகுந்த திட்டம் தீட்டினர் அந்த அழகிகள்.

ஒரு மிகப் பெரிய படகொன்றை தோட்டங்கள் நிறைந்த ஆசிரமம் போல அலங்கரித்து ரிஷ்யஸ்ருங்கரின் ஆசிரமம் அருகே கொண்டு சென்றனர். அந்த நேரத்தில் ரிஷி விபாண்டகர் எங்கோ வெளியே சென்றிருக்க, அதை உபயோகப்படுத்திக் கொண்ட அழகி தன்னை ஒரு இளம் பெண் துறவி போல் உருமாற்றிக் கொண்டு ரிஷ்யஸ்ருங்கரை காண சென்றாள். அது நாள் வரை , வேறு மனிதரையே பார்த்து அறியாத ரிஷ்யஸ்ருங்கர், அந்த இளம் துறவியை பார்த்தவுடன் மயங்கினார். அதை பயன்படுத்திக் கொண்டவள் ஆசை வார்த்தைகளாலும், மலர்களாலும் தன் தொடுகையாலும் அவரை தன் வசப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

சிறிது நேரம் கழித்து தன் ஆசிரமம் திரும்பிய விபாண்டகர் எப்பொழுதும் தெளிந்து இருக்கும் தன் மகனின் முகமானாது இப்பொழுது குழம்பி எதோ ஒன்றில் மயங்கி இருப்பது போல் இருப்பதைக் கண்டு, ரிஷ்யஸ்ருங்கரிடம் என்ன நடந்தது என விசாரித்தார்.

நடந்ததை உள்ளவாறு அவர் விவரிக்க, கோபம் கொண்ட விபாண்டகர் அந்த இளம் பெண் துறவியை தேடி காடு முழுவதும் சுற்றினார். ஆனாலும் அவள் அகப்படவில்லை. சிலநாள் கழித்து விபாண்டகர் ஆசிரமத்தில் இல்லாத சமயத்தில் மீண்டும் அந்த படகு அங்கே வந்தது. இம்முறை ரிஷ்யஸ்ருங்கர் படகில் அந்தப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த சமயத்திலேயே படகை அங்கிருந்து நகர்த்தி சென்றனர். அந்தப் படகு அங்க தேசத்தில் நுழைந்து, ரிஷ்யஸ்ருங்கர் கரையிலே காலடி வைத்தவுடன் நாடு முழுவதும் மழை பெய்து மண்ணை நனைத்தது. ரிஷ்யஸ்ருங்கருக்கு ராஜ உபச்சாரம் தந்து கௌரவித்த ரோமபாதா, தன் மகள் சாந்தாவையும் அவருக்கு மணம் செய்து வைத்தான்.

நடந்ததை அறிந்த விபாண்டகர் கோபத்துடன் அங்க தேசத்தை நோக்கி சென்றார். இதை முன்பே எதிர்பார்த்திருந்த அரசன், அவர் வரும் வழியில் அவருக்கு உபசாரங்கள் செய்வித்து மனம் குளிர்விக்க ஏற்பாடுகள் செய்திருந்தான். கோபத்துடன் தன் பயணத்தை துவங்கிய ரிஷி , அவனின் உபச்சாரங்களால் மனம் குளிர்ந்தார்.

தன் அரண்மனைக்கு வந்த ரிஷி விபாண்டகரை அவருக்கு உரிய மரியாதைகள் செய்வித்து நடந்ததை அவருக்கு விளக்கினான் ரோமபாதா. பின், மணமக்களை ஆசிர்வதித்த விபாண்டகர், ஆண் குழந்தை பிறக்கும் வரை அரணமனையில் இருந்துவிட்டு அதன் பின் ஆசிரமம் திரும்ப ரிஷ்யஸ்ருங்கருக்கு உத்தரவிட்டார்.

அவர்களுக்கு ஆண் மகவு பிறந்ததும் கானகம் சென்ற தம்பதியர், அதன் பின் துறவு வாழ்க்கை வாழ்ந்தனர்.

https://solvanam.com/2025/03/23/கொக்கென-நினைத்தாயோ/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொலையாளியை ஜீரணித்தவர்

மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா

தமிழாக்கம் : கார்த்திக்

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபொழுது அவர்களுடன் பயணித்த ரிஷி லோமேசர், ஒரு கட்டத்தில் அவர்களுடன் பயணிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அறிவுறுத்தினார். அவரின் ஆலோசனைப்படி தங்களுடன் பயணித்த பலருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு ஒரு சிறு குழுவுடன் தங்களது யாத்திரையை பாண்டவர்கள் தொடர்ந்தனர். அப்பொழுது ரிஷிகளில் சிறந்தவரான அகஸ்தியரின் வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு ரிஷி லோமேசர் கூறலானார்.

அகஸ்தியர் வனத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது ஒரு இடத்தில் சிலர் ஆவிகளாய் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டார். அவர்கள் அவ்வாறு தொங்கிக் கொண்டிருப்பதன் காரணத்தை அவர்களிடம் வினவினார்.

“அகஸ்தியா! நாங்கள் உன் முன்னோர்கள். நீ இன்னும் திருமணம் செய்து கொள்ளாதக் காரணத்தினால், எங்களுக்கு நீத்தார் கடன் செய்ய உனக்கு பிள்ளை இல்லை. நீ திருமணம் செய்து பிள்ளை பெறும் வரை நாங்கள் இப்படித்தான் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்” என பதில் உரைத்தனர்.

சில காலம் கழித்து குழந்தைப் பேறு இல்லாத விதர்ப அரசன் அவரிடம் வந்து குழந்தை பெற ஆசி வழங்குமாறு வேண்டினான். இணையற்ற அழகும் , சிறந்த குணமும் கொண்ட பெண் பிறப்பாள் என அகஸ்தியர் ஆசிர்வதித்தார். அந்த பெண்ணுக்குத் திருமண வயது ஆனவுடன் தனக்கே அவளை மணமுடித்து தரவேண்டும் என நிபந்தனை விதித்தார்.

அவ்வாறே தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு லோபாமுத்ரா என பெயரிட்டு வளர்த்து வந்தான் விதர்ப்ப அரசன். இணையற்ற அழகியாய் விளங்கிய லோபாமுத்ராவை திருமணம் செய்து கொள்ள பல தேசத்து அரசர்கள் விரும்பினாலும் அகஸ்தியர் மேல் இருந்த பயத்தால் யாரும் பெண் கேட்டு செல்ல துணியவில்லை. அகஸ்தியர் ஒரு நாள் விதர்ப்ப தேசத்துக்கு சென்று லோபாமுத்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டினார். அவரது வயதையும் அவர் வாழும் எளிய வாழ்வையும் எண்ணி அவருக்கு தனது மகளை மணமுடிக்க தயங்கினான் அரசன். ஆனால் லோபாமுத்ராவோ அவரது ஞானத்தையும் அறிவையும் எண்ணி அவரை மணமுடிக்க சம்மதித்தாள்.

தனது ஆடம்பரமான உடைகளை துறந்து துறவிகள் அணியும் காவி உடை அணிந்து அகஸ்தியருடன் சென்று எளிய வாழ்வை வாழத் துவங்கினாள். நாளடைவில் இருவரிடையே அன்பு பெருகத் துவங்கியது. ஆனால், தன் விருப்பத்தை நேரடியாக சொல்ல நாணி, குடியிருக்க நல்ல வீடும், உடுத்திக் கொள்ள ஆடம்பர உடைகளும் வேண்டும் என அவரிடம் கேட்டார்.

அகஸ்தியரும் பல அரசர்களிடம் சென்று தானம் கேட்டார். ஆனால், அன்றைய சூழலில் அவர் கேட்கும் தனத்தை தர எந்த அரசரிடமும் வழியில்லாமல் இருந்தது.

வில்வலன் மற்றும் வாதாபி என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். தங்களுக்கு பிடிக்காதவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். வாதாபி ஆடாய் மாற அவனை வெட்டி கறியாக விருந்துப் படைப்பர். விருந்தினர் உண்டவுடன், வில்வலன் “வாதாபி! வெளியே வா!” என அழைக்க விருந்தினரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான் வாதாபி. விருந்தினரின் செல்வம் அனைத்தையும் அபகரித்துக் கொள்வர் இருவரும்.

images-10-1.jpg?resize=600%2C400&ssl=1

ஒரு முறை அகஸ்தியர் அவ்வழியே வர, அவரை விருந்துக்கு அழைத்தான் வில்வலன். அவரும் சம்மதித்து விருந்தை உண்டார். அவர் உண்டு முடித்தவுடன் வாதாபி வெளியே வருவான் என வில்வலன் காத்திருக்க அவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. வாதாபியை தான் ஜீரணித்து விட்டதாக அகஸ்தியர் கூறினார். அதைக் கேட்டு பயந்த வில்வலன், அவரை சரணடைந்து தான் கைப்பற்றிய செல்வங்கள் அனைத்தையும் அவருக்கு சமர்ப்பணம் செய்து உயிர் பிச்சைப் பெற்றான். தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற அவருக்கு தேவையான செல்வமும் கிடைத்தது.

சிலகாலம் கழித்து, லோபாமுத்ராவிற்கு அழகிய ஆண் மகவு பிறந்தது. அதன் மூலம், அவர்களது முன்னோர்களின் கடன் தீர்க்க வழியும் பிறந்தது.


சிறுமையும் பெருந்தன்மையும்

ரிஷி ரைபாயாவிற்கு இரு மகன்கள் இருந்தனர். ப்ரத்யும்னன் என்ற அரசன் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்தை நடத்தி வைக்க அவரது மகன்களான பரவசு மற்றும் அர்வவசு இருவரையும் அனுப்பித் தர வேண்டினான். ரைபாயாவும் சம்மதித்து தனது மகன்களை யாகம் நடத்த அனுப்பினார்.

யாகம் நடத்த முன்னேற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்த சமயத்தில், பரவசுவிற்கு தனது மனைவியை காண வேண்டும் என ஆவல் எழுந்தது. எனவே, தனது ஆசிரமத்திற்கு திரும்பி சென்றான். அவன் ஆசிரமத்தை நெருங்கிய நேரம், சூரியன் முழுவதும் வராத கருக்கல் நேரம். ஏதோ ஒரு கொடிய வனவிலங்கு ஆசிரமத்தை நெருங்குவது போல் தோன்ற, தன் கையில் இருந்த கனத்த தடியை அந்த உருவத்தை நோக்கி வீசினான். அதை நெருங்கி பார்த்தப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது மரவுரி தரித்திருந்த தன் தந்தையை தான் தவறுதலாக கொன்றுவிட்டது.

அப்பொழுதுதான் பாரத்வாஜ முனிவரின் சாபம் நினைவிற்கு வந்தது. பரத்வாஜ முனிவரின் மகன் யவக்ரீதா செய்த தவறுக்காக ரிஷி ரைபயா அவனை கொன்றார். மகனை இழந்த கோபத்தில் உன் மகனின் கையாலே இறப்பாய் என ரிஷி ரைபயாவிற்கு சாபமிட்டிருந்தார். அது இப்பொழுது உண்மையாகிவிட்டிருந்தது.

வேகவேகமாய் தந்தையின் இறுதி சடங்குகளை முடித்த பரவசு, அர்வவசு தங்கி இருந்த இடத்திற்கு சென்று நடந்ததை விவரித்தான். பின், தந்தையை கொன்ற பாபம் விலக நாம் பரிகாரம் செய்ய வேண்டும். அதே நேரத்தில், அரசன் நடத்தும் யாகமும் தடையின்றி நடக்க வேண்டும் எனக் கூறி அதற்கு ஒரு தீர்வையும் கூறினான். அரசனின் யாகத்தை தன்னால் தனியாக நடத்த முடியும் ஆனால் அர்வவசுவால் அவ்விதம் செய்ய முடியாது எனக் கூறி தனக்காக காட்டிற்கு சென்று பரிகாரம் செய்யக் கூறினான்.

அவன் மேல் எந்தவித சந்தேகமும் கொள்ளாத அர்வவசு அதற்கு சம்மதித்து பரிகாரம் செய்ய சென்றான். இங்கே பரவசு யாகத்தை துவங்கினான். செய்ய வேண்டிய பரிகாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிய அர்வவசுவை பார்த்தவன் பொறாமையில் பொசுங்கினான். காரணம் , தான் செய்ய வேண்டிய பரிகாரத்தை வேறொருவரை செய்ய சொன்னதால் அவன் பாவம் தீரவில்லை. அதன் விளைவாய், அவன் மனதில் தீய எண்ணம் மூண்டது. அர்வவசுவை பார்த்து “தன் தந்தையை கொன்றவன் வருகிறான். யாகம் நடக்கும் இந்த புண்ணிய இடத்தில் இத்தகைய தீய குணம் உள்ளவனை எப்படி அனுமதிக்கலாம்?” எனக் கூறினான்.

அர்வவசுவின் விளக்கங்களை கேட்க அங்கே யாரும் தயாராக இல்லை. தனது சகோதரனுக்காக பரிகாரம் செய்ததே அவனுக்கு எதிராய் திரும்ப அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டான்.

அங்கிருந்து திரும்பிய அர்வவசு, காட்டிற்குள் சென்று அகோரமாக தவம் புரியத் துவங்கினான். பலகாலம் அவன் புரிந்த தவத்தினால் மகிழ்ந்த தேவர்கள் பிரசன்னமாகி அவனிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்டனர். தவத்தினால் மனதில் இருந்த க்ரோதம் நீங்கியிருக்க “தேவர்களே! எனது தந்தையை தாங்கள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். மேலும் , என் சகோதரனின் மனதில் உள்ள க்ரோதங்கள் நீங்கி , அவனது பாபங்களையும் நீக்க வேண்டும்” என கேட்டான். அவனது பெருந்தன்மையை கண்டா தேவர்களும் அவன் கேட்ட வரத்தை வழங்கின

https://solvanam.com/2025/04/13/கொலையாளியை-ஜீரணித்தவர்/

  • கருத்துக்கள உறவுகள்

மஹாபாரதக் கதை சிறப்பாகத் தொடர்கின்றது . ...... தொடருங்கள் கிருபன் ...... ! 👍

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த காலத்தில் அவர்களின் பசியையும் அவர்களை தேடி வருவோரின் பசியையும் போக்க அக்ஷயபாத்திரம் மிக உதவியாக இருந்தது. அது யுதிஷ்ட்டிரனுக்கு சூரியன் அன்பளிப்பாக வழங்கியது. ஆனால் , ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே அது உணவை அளிக்கும். அன்றைய தேவை முடிந்து அதை தேய்த்து வைத்துவிட்டால் மறுநாளே அதன் மூலம் உணவை வரவழைக்க முடியும்.

ஒருமுறை, ஹஸ்தினாபுரத்தில் இருந்த கௌரவர்களின் அரண்மனைக்கு தனது சீடர்களுடன் வருகை தந்தார் ரிஷி துர்வாசர். மிக கோபக்காரர் என்று பெயர் பெற்றவர் அவர். அவரை மிக மரியாதையுடன் நடத்திய துரியோதனன், அவருக்கும் அவரது சிஷ்யர்களுக்கு சிறந்த விருந்தை அளித்தான். அதனால் மனமகிழ்ந்தார் துர்வாசர். அவர் கிளம்பும் சமயத்தில், அவரிடம் அவர்கள் வனத்தில் இருக்கும் பாண்டவர்களையும் சந்தித்து அவர்களுக்கும் ஆசி வழங்க வேண்டும் என வேண்டிக் கொண்டான். அப்படியே செய்வதாக அவரும் வாக்களித்தார். வனத்தில் இருக்கும் பாண்டவர்களால் அறுசுவை விருந்து அளிக்க இயலாது. துர்வாசரின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்பது துரியோதனின் எண்ணம்.

அவனுக்கு அளித்த வாக்குப்படியே ஒரு நாள் உச்சி பொழுது கடந்தபின், வனத்தில் இருந்தது பாண்டவர்களின் வசிப்பிடத்தை அடைந்தனர் துர்வாசரும் அவரது சீடர்களும். திரௌபதியை அழைத்த துர்வாசர் அவர்கள் அனைவரும் மிகுந்த பசியுடன் இருப்பதாகவும் நீராடி வருவதற்குள் உணவை தயார் செய்து வைக்குமாறும் கூறிவிட்டு அருகில் இருந்த நீர்நிலைக்கு சென்றனர்.

அன்று அனைவரும் உணவு அருந்திவிட்டக் காரணத்தினால் அக்ஷயபாத்திரத்தை தேய்த்து கழுவி வைத்து விட்டாள். என்ன செய்வதென்று புரியாமல், எப்பொழுதும் துணைக்கு அழைக்கும் கிருஷ்ணனை நோக்கி பிரார்த்தித்தாள். சில நிமிட நேரத்தில் அங்கே வந்த கிருஷ்ணன்,” திரௌபதி! என்னை எதற்கு அழைத்தாய்? எதுவாக இருந்தாலும் சில நிமிடங்கள் காத்திருக்கட்டும். நான் மிகுந்த பசியில் உள்ளேன். ஏதாவது உணவு கொண்டு வா!” என்றான். தானே உணவு இல்லாத பிரச்சனைக்கு அவனை அழைக்க அவனோ உணவு கேட்டால் எங்கே செல்ல என நடந்ததைக் கூறினாள் பாஞ்சாலி. அதைக் கேட்டு சிரித்த கிருஷ்ணன் “கவலைப்படாதே! அந்த பாத்திரத்தைக் கொண்டு வா!” எனக் கூறினான்.

அவள் கொண்டு வந்த அக்ஷயபாத்திரத்தை கவனமாக பார்த்தவன் அதில் ஓரத்தில் ஒட்டியிருந்த ஒரு துணுக்கு சோற்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு “அனைவரின் பசியும் ஆறட்டும்” எனக் கூறினான். பாத்திரத்தை ஒழுங்காகக் கழுவாமல் கிருஷ்ணனுக்கு எச்சில் உணவை அளித்தமைக்கு தன்னையே நொந்துக் கொண்டாள் அவள்.

அந்த ஒரு துணுக்கை சாப்பிடப்பின் பீமனை அழைத்த கிருஷ்ணன் ஆற்றுக்கு சென்று ரிஷியையும் அவரது சீடர்களையும் அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

அவன் ஆற்றுக்கு சென்றே அதே நேரம் குளித்துக் கரையேறிய சீடர்கள் அனைவரும் அப்பொழுதுதான் உணவருந்தியது போன்று உணர்ந்தனர். அதை அவர்கள் கூறியதை கேட்ட துர்வாசரும் தனக்கும் அவ்விதமே இருப்பதாக கூறி, இந்நிலையில் பாண்டவர்களை சந்திக்க வெட்கி, பீமனிடம் தங்கள் வயிறு நிறைந்து விட்டதாகாக் கூறி அங்கிருந்தே அனைவரையும் ஆசிர்வதித்து விடைபெற்றனர்.

கிருஷ்ணனின் அருளால் தங்களுக்கு வந்த ஆபத்தை வென்ற பாண்டவர்கள் அவனை வணங்கினர்.


அஷ்டவக்கிரர்

Ashtavakra-1.jpg?resize=600%2C400&ssl=1

பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது பல ரிஷிகள் இருந்த தவம் செய்த இடங்களுக்கு சென்றனர். அவர்கள் சென்ற இடத்தின் புனிதத்தையும் அங்கிருந்த ரிஷிகளின் வரலாற்றையும் அவர்களுக்கு ரிஷி லோமேசர் உபதேசித்தார். அவர்கள் உத்தாலக்கரின் ஆசிரமத்துக்கு சென்ற பொழுது அவரின் வரலாற்றை கூறினார்.

உத்தாலக்கருக்கு இருந்த பல சிஷ்யர்களில் ஒருவர் ககோலா. காகோலா மிக அறிவு கூர்மை வாய்ந்தவர் எனக் கூற முடியாதெனினும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பவர். அவரது நடவடிக்கைகளால் மகிழ்ந்த உத்தாலக்கர், தனது மகளை அவருக்கு மணமுடித்தார்.

ககோலாவின் வேத அறிவு எந்த அளவிற்கு மோசமானதென்றால், அவரின் தவறான உச்சரிப்பினைக் கேட்டு தாயின் வயிற்றில் கர்ப்பப்பையில் இருந்த கரு நெளியுமாம். அப்படி பல முறை நெளிந்ததால் பிறக்கும் பொழுதே உடல் எட்டு இடங்களில் கோணலுடன் பிறந்தார். அதனால் ” அஷ்டவக்கிரர் ” என அழைக்கப்பட்டார்.

ஒருமுறை யாரிடமும் எந்த ஆலோசனையும் செய்யாமல். ஜனகரின் அரசவையை சேர்ந்த வந்தி என்ற அறிஞரிடம் வாதத்திற்கு சென்றார் ககோலா. அந்த வாதத்தில் தோற்பவர் கடலில் மூழ்கி உயிரிழக்க வேண்டும் என்பதே பந்தயம். அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே ககோலா தோல்வியுற்று தனது உயிரை நீத்தார். அவருக்கு முன் பல அறிஞர்கள் இவ்விதம் தங்கள் உயிரை நீத்துள்ளனர்.

உடலில் குறியுடன் பிறந்தாலும், அஷ்டவக்கிரர் மிகுந்த ஞானத்துடனும் அறிவுடனும் விளங்கினார். இளம் வயதிலேயே வேத, வேதாந்தங்களை கரைத்துக் குடித்து ஞானியாக விளங்கினார்.

இதற்கு இடையில், மிதிலாவின் அரசனான ஜனகர் மிகப் பெரிய யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். யாகம் நடைபெற்றக் காலத்தில் அவரது அரசவையில் பலவித விவாதங்கள் நடைபெறும் எனவும் அறிவித்தார். தனது தருணத்தை உணர்ந்த அஷ்டவக்கிரரும் அங்கே சென்றார்.

அரசு ஊர்வலம் வந்துக் கொண்டிருந்த பாதைக்கு சென்றவர், அரச பரிவாரங்களுக்கு நடுவே நடக்க துவங்கினார். அதைக் கண்ட காவலாளிகள் அவரை ஒதுங்க சொல்ல “எளியவர்களுக்கும், முடியாதவர்களுக்கு வழி விட வேண்டியது அரச தர்மம் இல்லையா?” என வினவினார்.

ஜனகர் அந்த நாளின் மிகப் பெரிய ஞானிகளில் ஒருவர். இல்லற தர்மத்தில் இருந்தாலும் அதில் மூழ்கி விடமால் தாமரை இலை தண்ணீர் போல் வாழ்ந்தவர். அஷ்டவக்கிரர் சொன்னதைக் கேட்டவுடன் அவரது சிறப்பை அறிந்துக் கொண்ட ஜனகர், அவருக்கு வழி விட்டார். மேலும், அவர் மிதிலைக்கு வந்ததன் காரணத்தை அறிந்துக் கொண்டே வந்தியுடன் விவாதத்திற்கு ஏற்பாடும் செய்தார்.

சில நாட்கள் நீடித்த அந்த விவாதத்தின் முடிவில் அஷ்டவக்கிரர் வந்தியை தோற்கடித்தார். தோல்வியை ஒப்புக் கொண்ட வந்தியும் நதியில் மூழ்கி தனது உயிரை நீத்தார். தனது தந்தையின் மரணத்திற்கு பழி வாங்கிய அஷ்டவக்கிரர், பிற்காலத்தில் ஒரு முனிவரின் வரத்தால் தனது உடல் குறை நீங்கப் பெற்றார்.

https://solvanam.com/2025/05/11/பெரும்-பசியை-ஆற்றிய-ஒரு-ப/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏகலைவன்

மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா

தமிழாக்கம் : கார்த்திக்

துரோணாச்சாரியாரின் கண்காணிப்பின் கீழ் கௌரவர்களும் பாண்டவர்களும் தீவிர பயிற்சி பெற்று வந்தனர். அப்பொழுது அர்ஜுனனுக்கு மட்டும் அவர் தனிக்கவனம் கொடுப்பதாக துரியோதனன் குற்றம் சாட்டினான். அதை பொய் என்று நிரூபிப்பதற்காகவும், அர்ஜுனனின் திறமையை மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் அவர்களுக்கு ஒரு போட்டி ஒன்றை துரோணர் ஏற்பாடு செய்தார்.

அங்கே இருந்த மரத்தின் உச்சி கிளையில் தொங்கிக் கொண்டிருந்த பழத்தை ஒரே கணையில் வீழ்த்த வேண்டும் என்பதே போட்டி. அங்கிருந்த அனைவரும் முயன்றும் யாராலும் அப்பழத்தை வீழ்த்த இயலவில்லை. அர்ஜுனன் அதை ஒரே அம்பில் வீழ்த்தினான். அப்பொழுது அவர்களிடம் நீங்கள் கணையை தொடுக்க குறி வாய்த்த பொழுது உங்கள் கண்ணில் பட்டது என்ன என துரோணர் கேட்டார். ஒவ்வொருவரும் , கிளை, இலை பின் பழம் என சொல்ல அர்ஜுனனோ தன் கண்களுக்கு அப்பழம் மட்டுமே தெரிந்தது எனக் கூறினான்.

இந்த ஒரு பதிலிலேயே அங்கிருந்தவர்களில் மிக சிறந்த வில்லாளி யாரென்று அனைவருக்கும் புரிந்தது.

பிரதம சீடனை மிஞ்சிய வேடுவ இளவரசன்

images-4-1-1.jpg?resize=600%2C400&ssl=1

ஒரு நாள் இளவரசர்கள் அனைவரையும் அருகில் இருந்த வனத்திற்கு கூட்டி சென்றார் துரோணர். அவர்களுக்கு முன்பு அவர்களின் நாய் சென்றது. திடீரென்று சப்தம் வந்த திசையை நோக்கி குரைத்துக் கொண்டே சென்றது அந்த நாய். சில நிமிடங்களுக்குப் பின் அதன் குரைப்பு அடங்கிவிட, என்ன ஆனதென்று அனைவரும் அங்கு சென்றனர். அங்கே அந்த நாயின் வாய் அம்புகளால் கட்டப்பட்டிருந்தது. ஆனால் துளி இரத்தமும் சிந்தவில்லை. அந்த வித்தையை கற்றவர் யார் என்று அனைவரும் யோசிக்க அப்பொழுது அங்கே வந்த நிஷாத நாட்டு இளவரசன், துரோணரை வணங்கி “என் பெயர் ஏகலைவன்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரை வணங்கினான்.

அப்பொழுதுதான் முன்பு நடந்த சம்பவம் அவரது நினைவிற்கு வந்தது. சில காலம் முன்பு அவரிடம் வந்த ஏகலைவன் தன்னை சிஷ்யனாக ஏற்கும்படி வேண்டினான். ஆனால் குரு வம்சதிற்கு குருவாக இருந்த காரணத்தினால் நிஷாத நாட்டு இளவரசனை அவரால் சிஷ்யனாக ஏற்க முடியாது என மறுத்துவிட்டார்.

“குருவே! உங்கள் உருவத்தை மண்ணால் செய்து வைத்து தினமும் உங்களை வணங்கி வில் பயிற்சி செய்துவந்தேன். உங்கள் கருணையால் நான் நன்கு கற்று வருகிறேன்” என அவன் கூறினான்.

அவன் கூறியதை கண்டு வியந்த துரோணர், இப்படி ஒரு வில்லாளி இருப்பது என்றும் குரு வம்சத்திற்கு ஆகாது என மனதில் நினைத்துக் கொண்டார். பின் அவனிடம் “நீ நன்கு கற்று தேறி வருவது மகிழ்ச்சியே! ஆனால் , குரு தக்ஷிணையாக என்ன தரப்போகிறாய்?” எனக் கேட்டார்.

ஏகலைவனும் பணிவுடன் அவர் விரும்பும் தக்ஷணையை தருவதாகக் கூறினான்.

“அப்படியானால் உனது வலது கை கட்டை விரலை எனக்குத் தருவாயாக” என கேட்டார்.

அவர் கூறியவுடன் எந்தவித கோபமோ வருத்தமோ தயக்கமோ இன்றி தனது வலது கட்டை விரலை வெட்டி அவரது காலடியில் சமர்ப்பித்தான் ஏகலைவன்.


தோல்வியான வெற்றி

சிறு வயதிலேயே தனது சகோதர்கள் அனைவரையும் விட பெரிய உடலையும், அதிக பலத்தையும் பெற்றவனாக பீமன் இருந்தான். தன் பலத்தை தன் சகோதரகளைக் காப்பாற்ற பயன்படுத்திய அதே சமயத்தில் கௌரவர்களை துன்புறுத்தவும் உபயோகித்தான். இதனால் எரிச்சலடைந்த துரியோதனன், பீமனை கொல்ல சதி திட்டம் தீட்டினான்.

ஒருமுறை கங்கைக் கரையில் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில் , பீமனின் உணவில் விஷத்தைக் கலந்து விட்டான். அது தெரியாத பீமன் அந்த உணவை உண்டு மயங்கிவிட, மற்ற சகோதரர்களின் உதவியுடன் அவனை கயிற்றில் கட்டி, கங்கையின் ஒரு பக்கத்தில் தள்ளிவிட்டான். பீமன் வீழ்ந்த இடத்தில கொடிய நாகங்கள் வாழ்ந்து வந்தன. பீமனை அவை கடிக்க, அவற்றின் விஷம் ஏற்கனவே அவன் இரத்தத்தில் கலந்திருந்த விஷத்தின் முறியடிக்க, பீமன் புத்துயிர் பெற்று எழுந்தான். தாங்கள் கடித்தும் அவன் இறக்காதது கண்டு அதிர்ச்சியடைந்த பாம்புகள் தங்கள் தலைவனான வாசுகியிடம் சென்று முறையிட்டு பீமனை அங்கே கொண்டு வந்தன.

பீமனைக் கண்டவுடன் அவன் குரு வம்ச இளவரசன் என அடையளாம் கண்டுகொண்ட வாசுகி , பீமனின் உடல் நலம் தேற அவர்களின் அபூர்வ மருந்தை அவனுக்கு கொடுத்தது. அதைக் குடித்தவுடன் பீமனுக்கு ஆயிரம் யானை பலம் வந்தது போல் உடல் புத்துணர்வு பெற்றது. அந்த மருந்து மேலும் கிடைக்குமா என அவன் கேட்க, மேலும் ஏழு குவளை மருந்து அவனுக்கு தரப்பட எட்டு குளிகை மருந்தை குடித்து புதிய பலம் பெற்றான் பீமன். அதைக் குடித்தவுடன் அவனுக்கு தூக்கம் சொக்க, ஒரு வார காலம் வாசுகியின் அரண்மனையில் தங்கி ஓய்வெடுத்தான். பின், அவனிடம் விடைபெற்று கரைக்கு திரும்பினான்.

இறந்துவிட்டான் என கௌரவர்கள் நினைத்த பீமன், புத்துணர்வுடனும் புதிய பலத்துடனும் வருவது கண்டு துரியோதனன் தன்னைத் தானே நொந்து கொண்டான்.

https://solvanam.com/2025/05/25/ஏகலைவன்/

On 10/8/2025 at 07:03, கிருபன் said:

இதன் பின், சுக்ராச்சரியாரின் சாபத்தால் மது அருந்துபவர்கள் அவர் பட்ட கஷ்டம் போலவே அனுபவிப்பார்கள். சுக்ராச்சாரியாரின் உதிரத்தில் உயிர்பித்ததால், கசன் தேவயானிக்கு சகோதரன் முறை ஆகிவிட்டான். எனவே அவனை விடுத்து யயாதி என்ற மன்னனை மணமுடித்தாள் தேவயானி. இந்த யயாதியே பாண்டவர் / கௌவரவர்களுக்கு முன்னோடி ஆவான்.

https://solvanam.com/2024/12/22/பல்லாயிரம்-ஆண்டுகளுக்கு/

அட பாவி சுக்ராச்சாரியாரே.. நீவீர் தான் இதற்கெல்லாம் காரணமோ.. அசுரர்களை தண்டிக்க வெளிக்கிட்டு அப்பாவி குடி காதலர்களை ஏன் தண்டிக்க சாபம் இட்டீர்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அட பாவி சுக்ராச்சாரியாரே.. நீவீர் தான் இதற்கெல்லாம் காரணமோ.. அசுரர்களை தண்டிக்க வெளிக்கிட்டு அப்பாவி குடி காதலர்களை ஏன் தண்டிக்க சாபம் இட்டீர்?

இது போன்ற திரிகளில் என் தம்பி மினக்கெட மாட்டாரே இன்று என்ன செய்கிறார் என்று பார்க்கவந்தால் கதை தண்ணியில போகுது....🤣

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவறாக விதிக்கப்பட்ட சாபம்

மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா

தமிழாக்கம் : கார்த்திக்

தான் யார், தனது பிறப்பு எப்படிப்பட்டது என்பது தெரியாத காரணத்தால் ஒருவன் தன் பிறப்பில் இறந்து அவமானங்களை சந்திக்கவேண்டிய நிலையை யோசித்துப் பாருங்கள்! சூரியபுத்திரனான கர்ணன், சிறு வயதில் இருந்தே இந்த ஒரு காரணத்திற்காக பல அவமானங்களை சந்தித்தான்.

குந்தி, தனக்கு ரிஷி துர்வாசர் கொடுத்த வரத்தை விளையாட்டுத்தனமாக பரிசோதித்து பார்க்க அதன் விளைவாக பிறந்தவன்தான் கர்ணன். பிறப்பிலேயே குந்தி அவனை பிரிந்துவிட தேரோட்டியின் மகனாக வளர்ந்தான் கர்ணன். தேரோட்டியின் மனைவியான ராதை அவனை பாசமுடன் வளர்த்ததனால் ராதேயன் என அழைக்கப்பட்டான். சத்ரியனாக பிறந்தாலும் தேரோட்டியின் வீட்டில் வளர்ந்த காரணத்தினால் சூத புத்திரன் எனவும் அழைக்கப்பட்டான்.

அனைத்து வகையான ஆயுத பிரயோகமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் குரு துரோணாச்சார்யரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். ஆனால் , அவரோ தான் குரு வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கற்றுத் தருவேன் எனவும், கர்ணன் சூத புத்திரன் என்பதால் தன்னால் அவனை சீடனாக ஏற்றுக் கொள்ள இயலாது எனவும் மறுத்துவிட்டார் அவர். அதனால். கர்ணன் துரோணரின் குருவும், சத்ரியர்களை வெறுத்தவருமான ஸ்ரீ பரசுராமரை அணுகினான்.

அவரிடம் தான் ஒரு பிராமணன் என சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு தனக்கு அஸ்திர பிரயோகம் கற்றுத் தரும்படி வேண்டினான். அவனது பணிவான வேண்டுகோளைக் கண்டு அவரும் அவனை தனது சீடனாக ஏற்றுக் கொண்டு, அவனுக்கு பயிற்சி தரத் துவங்கினார். அவனது நடவடிக்கைகளால் கவரப்பட்டு மிகுந்த சக்தி வாய்ந்த ஆயுதங்கள் எனக் கருதப்பட்ட பிரம்மாஸ்திரம் மற்றும் பார்கவாஸ்திரங்களையும் அவனுக்குப் பயிற்றுவித்தார்.

parashuram-and-karna-the-gurus-curse-and

ஒருநாள், காட்டில் சென்று கொண்டிருக்கையில் களைப்பாய் உணர்ந்த பரசுராமரை உறங்க விரும்பினார். உடனிருந்த கர்ணன், தனது தொடையில் தலை வைத்து உறங்குமாறு கூறினான். அதை ஏற்று, அவனது தொடையில் தலை சாய்த்து உறங்கினார். அவர் உறங்கத் துவங்கி சிறிது நேரத்தில் ஒரு வண்டு அவனது தொடையைக் கடிக்க, தான் அசைந்தால் குருவின் தூக்கம் களைந்து விடுமோ என வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனது தொடையை கடித்து ஊடுருவி மறுபக்கம் வழியே வெளிவந்தது வண்டு. அந்த காயத்தில் இருந்து வெளிவந்த அவனது ரத்தம் தரையில் ஓடத் துவங்கியது. அப்பொழுதும் அவன் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

தரையில் ஓடிய அவனது இரத்தம் பரசுராமரை நனைக்க அதனால் உறக்கம் களைந்து எழுந்தார். அங்கே கர்ணனின் தொடையில் இருந்து ரத்தம் பெருகி ஓடுவதை கண்டவர் என்ன நடந்தது என்பதை உணர்ந்துக் கொண்டார்.

கோபத்துடன் எழுந்த அவர் “ராதேயா! சத்ரியர்கள் மட்டுமே இத்தகைய பெரும் வலியை பொறுத்துக் கொள்ள இயலும். பிராமணர்களால் இத்தகைய வலியை எப்பொழுதும் பொறுத்துக்கொள்ள இயலாது. உண்மையை கூறு யார் நீ?” என வினவினார்.

ஆயுத பிரயோகம் கற்றுக் கொள்ள வேண்டியே தான் பிராமணன் என பொய் சொன்னதாகக் கூறி அவரிடம் மன்னிப்பு வேண்டி நின்றான் கர்ணன்.

“என்னிடம் பொய் கூறி நீ கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தும் உனக்கு மிக தேவையான சமயத்தில் மறந்து போகும்!” என சாபமிட்டார்.

அவன் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தும் அவனுக்கு தேவையான நேரத்தில் மறந்து போனது.


துரியோதனனின் நம்பிக்கை

துரியோதனன் என்னும் பெயரை கேக்கும் பொழுதும் நம் முன் பல எதிர்மறை எண்ணங்கள்தான் தோன்றும். துரியோதனன் என்னும் பெயரின் அர்த்தமே மோசமான வீரன் என்பதாகும். ஆனாலும், அவனிடம் சில நல்ல குணங்கள் இருக்கத்தான் செய்தன. தன் மரணம் வரை போரிட்ட உண்மையான சத்ரியன். மிக சிறந்த “கதை” வீரன் மற்றும் பலராமனுக்கு பிடித்த சீடனும் கூட. அதே போல், நட்பை மிகவும் மதித்து கர்ணனுக்கு வேண்டியதை செய்தவன்.

குரு வம்ச இளவரசர்களான கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் குருகுல காலம் முடியும் தருணத்தில் அவர்கள் கற்றுக் கொண்ட வித்தைகளை மக்கள் முன் வெளிப்படுத்தும் வண்ணம் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். வில்வித்தையில் சிறந்த அர்ஜுனன் தன் அஸ்திர திறமையால் மக்களை கட்டிப் போட்டிருந்தான்.

அந்த நேரத்தில், அவனைப் போன்றே இளமையாகவும், சிறந்த வலிமையுடனும் தோன்றிய ஒருவன் அங்கே வந்தான். அதுவரை அர்ஜுனன் செய்த அனைத்து வித்தைகளையும் இவனும் எளிதாக செய்தான். அர்ஜுனனை தன்னுடன் நேருக்கு நேர் மோதுமாறு அழைத்தான். அதே நேரத்தில் கிருபாச்சாரியார், அர்ஜுனனுடன் மோதும் முன் அவனது பிறப்பை பற்றி கூறுமாறு கேட்டார்.

இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த துரியோதனன் எழுந்து ” அவன் செய்த வித்தைகளை பார்த்து அவன் சத்திரியன் எனத் தெரியவில்லையா? அவன் யார் எங்கிருந்து வருகிறான் என்பது இங்கே முக்கியமில்லை. அவனது திறமை மட்டுமே முக்கியம். இருந்தும் அவன் இளவரசனாகவோ அல்லது அரசனாகவோ இருப்பது முக்கியம் என்றால் , இங்ஙனமே அவனை அங்க தேச அரசனாக நியமிக்கிறேன்” என்றான்.

பின், அவனது தந்தை மற்றும் பீஷ்மரின் அனுமதி பெற்று, அங்கேயே கர்ணனை அங்க தேச அரசனாக நியமிக்கும் சடங்குகளை துவங்கினான். அந்த சடங்குகள் முடிந்த தருணத்தில் அங்கே ஒரு வயதான தேரோட்டி பயந்து கொண்டே வந்தார். அவரைக் கண்டதும் கர்ணன் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவரது காலில் விழுந்து வணங்கினான். அதைக் கண்டா பீமன் இடி சிரிப்புடன் ” நீ தேரோட்டியின் மகனா? உன் தந்தையின் சாட்டைகளை எடுத்துக் கொள். அங்க தேசத்தை ஆள மட்டுமல்ல , அர்ஜுனனின் அம்புகளால் கொல்லப்படுவதற்குக் கூட உனக்கு தகுதியில்லை” என்றான்.

இதைக் கேட்ட துரியோதனன் “விருகோதரா! இத்தகைய வார்த்தைகளை நீ பேசுவது அழகல்ல. அவனது கவசத்தையும், குண்டலங்களையும் பார். இந்த உலகையே ஆளத் தகுதி வாய்ந்தவன் அவன். நதி மூலமும் ரிஷி மூலமும் பார்ப்பது தவறு” எனக் கூறினான்.

அதே சமயத்தில் விழா முடிய , துரியோதனன் தன் நண்பனை அழைத்துக் கொண்டு சென்றான்.

https://solvanam.com/2025/06/22/தவறாக-விதிக்கப்பட்ட-சாபம/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகைவனுக்கும் அருள்வாய்!

மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா

தமிழாக்கம் : கார்த்திக்

பணிவே உயர்வைத் தரும்

பீமன் பிறக்கும் பொழுதே அதிக வலுவுடன் பிறந்தவன். அவன் வளர வளர அவனது தேகமும், தேகத்தின் வலிமையையும் பெருகியது. அதற்கேற்றாற்போல் அவனது பெருமையும் பரவத் துவங்கியது. ஒருவரது பெருமை அதிகம் பரவினால் அவருக்கு சிறிதளவாவது அகந்தை வரும். பீமனுக்கும் தனது வலிமை குறித்து அகந்தை இருந்தது.

வனத்தில் வசித்து வந்த சமயத்தில், ஒருமுறை தனியாக காட்டில் சென்று கொண்டிருந்தான் பீமன். அடர்ந்த வனத்தின் குறுகிய பாதைகளில் அவன் சென்றுகொண்டிருந்த பொழுது அவனது பாதையை மறித்த வண்ணம் தனது நீந்தல் வாலை நீட்டிய வண்ணம் ஒரு வயதான குரங்கு ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது.

பீமன் வந்த சப்தத்தை கேட்டு விழித்த அந்தக் குரங்கு அவனை உற்றுப் பார்த்து “புகழ் பெற்ற வீரன் பீமன் அல்லவா நீ? உன்னை வணங்குகிறேன்” எனக் கூறியது.

குரங்கு பேசுவதைக் கேட்டு வியந்த பீமன் “நான் யாரென நீ தெரிந்து வைத்திருப்பதில் சந்தோசம் அடைகிறேன். நான் யாரென தெரிந்து கொண்டாய் அல்லவா? இப்பொழுது உன் வாலை நகர்த்திக் கொண்டு எனக்கு வழி விடு. உன்னை போன்ற உயிரினத்தை தாண்டி செல்வது என்னை போன்ற வீரனுக்கு அழகல்ல” என கூறினான்.

“ஓ பீமா! எனக்கு வயதாகி விட்டது. மேலும், நோய் வாய்ப்பட்டுளேன். எனவே தயைக் கூர்ந்து நீயே என் வாலை நகர்த்தி விட்டு செல்வாயாக” என அவனைக் கேட்டது.

Bhima-and-Hanuman-A-Story-from-Mahabhara

பீமன், அந்த குரங்கின் வாலை தொட அசூயை பட்டு, தனது இடது கை சுண்டு விரலால் அதன் வாலை நகர்த்த முயன்றான். ஆனால், அதன் வால் ஒரு அங்குலம் கூட நகரவில்லை. அதைக் கண்டு வியப்படைந்தாலும், அதை மறைத்துக் கொண்டு தன் இடது கையால் அதை நகர்த்த முயன்றான். அப்பொழுதும் அதன் வால் அகல மறுத்தது. பல யானைகளின் பலம் கொண்டவன் என புகழப்பட்ட பீமனுக்கு அது மிகப் பெரிய அவமானமாக இருந்தது. இருந்த பொழுதும், இம்முறை தனது இரு கரங்களையும் கொண்டு அதன் வாலை தூக்கி நகர்த்த முயன்றான். அவன் பலமுறை பலவிதமாய் முயற்சித்தும் இம்மி கூட அசையவில்லை. அப்பொழுதுதான் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பது சாதாரண குரங்கில்லை என்பது அவனது சிற்றறிவுக்கு புரிந்தது.

அவனது அகந்தை முற்றிலும் அழிந்த நிலையில் “பலவானே! யார் நீங்கள்? உங்களின் சுய ரூபத்தை எனக்கு காட்டுவீர்களாக! என்னை இனியும் சோதிக்க வேண்டாம்!” எனப் பணிவாக வேண்டினான்.

அவனின் பணிவான வேண்டுதலைக் கேட்ட குரங்கு தனது வேடத்தைக் களைந்தது. பீமனை சோதிக்க குரங்கின் வடிவில் வந்தது வாயு புத்திரனான ஹநுமானே! “பெருமையைக் கை விடு! இறைவனிடம் சரண் அடை! நீ வெற்றிப் பெறுவாய்! என்னுடைய முழு பலமும் பாண்டவர்களுக்கு கிட்டும்! அர்ஜுனன் தேர் கொடியில் நான் வீற்றிருப்பேன்!” என ஹனுமான் அவனை ஆசிர்வதித்தார்.


பகைவனுக்கும் அருள்வாய்!

பாண்டவர்களின் வனவாசத்தில் இருந்த சமயத்தில் ஒரு பிராமணர், அரசன் திருதிராஷ்டிரனை பார்க்க சென்றார். வந்த பிராமணரை வரவேற்று அவருக்கு உபசாரங்கள் செய்த அரசன் பாண்டவர்களின் நலம் பற்றி அவரிடம் விசாரித்தான். அவரும் வனவாசத்தின் பொழுது பாண்டவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை விவரித்து, எவ்வாறு அர்ஜுனன் சிவனிடம் இருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்றான் என்பதைப் பற்றியும், வனத்தில் அவர்களுக்கு பிரச்சனை வரும் சமயங்களில் எல்லாம் எவ்வாறு பீமன் காப்பாற்றுகிறான் என்பதை பற்றியும் விவரித்தார். பாண்டவர்கள் படும் கஷ்டங்களை கேட்ட மன்னனின் மனம் தடுமாறியது. அதே நேரத்தில், கௌரவர்களும், கர்ணனும் அவர்களுக்கு கிடைத்த திவ்ய அஸ்திரங்களை பற்றி கேட்டு மனம் குமைந்தனர்.

பாண்டவர்களின் வனவாசம் முடிய குறுகிய காலமே இருந்ததால் அவர்களை எப்படியாவது சூழ்ச்சியில் சிக்கவைத்து மீண்டும் வனவாசத்திற்கு அனுப்புவதில் சகுனியும் மற்றவர்களும் குறியாக இருந்தனர். எனவே இந்தமுறை அவர்களே நேரில் செல்ல நினைத்து பாண்டவர்கள் அப்பொழுது தங்கி இருந்த காம்யக வனத்திற்கு அருகில் இருந்த த்வைதவனத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். நேராக அரசனிடம் சென்று த்வைதவனத்தில் ஆநிரைகளை கணக்கெடுக்க செல்ல அனுமதி வேண்டினர். அவர்களின் உண்மை நோக்கம் அறிந்த மன்னர் முதலில் அனுமதிக்க மறுத்தாலும், அவர்களின் தொடர் வேண்டுகோளால் வேறு வழியின்றி அனுமதித்தார்.

அவர் அனுமதி கிடைத்தவுடன், துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாதனன் மற்றும் தன் படைகள் சூழ த்வைதவனத்திற்கு விரைந்தான். அங்கே வந்தவுடன் ஏரிக்கு அருகே பாண்டவர்கள் முகாம் அமைந்துள்ளதாக தகவல் கிடைக்க, தங்கள் முகாமையும் அங்கேயே அமைக்க துரியோதனன் உத்தரவிட்டான்.

அவனது உத்தரவை ஏற்று அங்கே சென்று கூடாரங்கள் அமைக்க முயன்றனர். ஆனால் அங்கே இருந்த கந்தர்வர்களின் படை அவர்களை விரட்டி அடித்தது. தங்கள் முயற்சியில் தோற்ற வீரர்கள் திரும்ப சென்று துரியோதனனிடம் முறையிட்டனர். தன் வீரர்கள் துரத்தி அடிக்கப்பட்டதில் கோபம் கொண்ட துரியன், தன் நண்பர்களையும் படையையும் அழைத்துக் கொண்டு கந்தவர்களை எதிர்த்து சண்டையிட சென்றான்.

கௌரவர்களுக்கும் கந்தவர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. கந்தவர்களின் தெய்வீக அஸ்திரங்களை கௌரவர்களால் சமாளிக்க இயலவில்லை. ஒரு கட்டத்தில் அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாத கர்ணன் போர்க்களத்தில் இருந்து ஓட்டம் பிடித்தான். துரியோதனன் எதிரிகளிடம் தனியாக சிக்கிக் கொள்ள, கந்தர்வர்கள் அவன் தலைமுடியை பிடித்து இழுத்து தங்கள் தலைவனிடம் கொண்டு சென்றனர்.

பல கௌரவ வீரர்கள் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்து பாண்டவர்களின் கூடாரத்திற்கு சென்று யுதிஷ்டிரனிடம் முறையிட்டனர். அதை கேட்ட பீமன், அவர்களுக்கு இது தேவைதான். இதை நாம் கண்டுகொள்ள வேண்டாம் எனக் கூறினான். மற்ற அனைத்து சகோதரர்களும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின் , தர்மனின் கட்டளைப்படி , அர்ஜுனன், நகுலன், சகாதேவன் புடை சூழ கந்தவர்களை எதிர்க்க பீமன் சென்றான்.

இரு தரப்பினரிடையே கடுமையான யுத்தம் துவங்கியது. கந்தர்வர்கள் தங்களிடம் இருந்த அனைத்துவிதமான திவ்ய அஸ்திரங்களை கொண்டு பாண்டவர்களை எதிர்க்க, அர்ஜுனனோ அவர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கினான். இதை கண்டு வியந்த கந்தர்வர்கள் தங்கள் தலைவனிடம் சென்று முறையிட அங்கே வந்தான் சித்ரசேனன். சித்ரசேனனை கண்டு அர்ஜுனன் வியந்தான். அர்ஜுனன் இந்திரனின் சபைக்கு சென்ற சமயத்தில் அவனது நடன குருவாக இருந்தது சித்ரசேனனே.

நீண்ட நாள் கழித்து சந்தித்த இருவரும் மகிழ்ந்து நலம் விசாரித்தனர். அதற்கு சித்ரசேனன் “துரியோதனன், தனது நண்பர்களுடன் இணைந்து உங்களுக்கு தொந்தரவு தரப்போவதாக அறிந்தோம். அதனால் இந்திரன் என்னை படைகளும் இங்கே அனுப்பி உங்களுக்கு பாதுகாப்பு தரக் கூறினார்” என தான் வந்த நோக்கத்தை விளக்கினான். பின், அவர்களிடம் இருந்து துரியனையும் மற்றவர்களையும் விட்டுவிட்டு தர்மரிடம் அழைத்து சென்றான் அர்ஜுனன்.

துரியோதனனுக்கு அறிவுரை கூறியப் பிறகு அவனை விடுவித்து அஸ்தினாபுரத்திற்கு திரும்பி செல்ல அறிவுறுத்தினான் தர்மன்.

https://solvanam.com/2025/07/13/பகைவனுக்கும்-அருள்வாய்/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீசக வதம்

மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா

தமிழாக்கம் : கார்த்திக்

பன்னிரண்டு வருட வனவாசத்திற்கு பிறகு ஒரு வருடம் மறைந்து வாழ வேண்டிய சூழலில், பாண்டவர்கள் தங்களது திரைமறைவு வாழ்விற்கு தேர்ந்தெடுத்த நாடு விராட நாடு. யுதிஷ்டிரன் அரசவையில் மன்னருக்கு ஆலோசனை கூறுபவனாகவும், பீமன் வல்லபன் என்ற பெயரில் மல்யுத்த வீரனாகவும் சமையல் கலைஞனாகவும், அர்ஜுனன் அவன் பெற்ற சாபத்தை உபயோகப்படுத்தி இளவரசியின் நடன குருவாகவும், நகுலன் குதிரைகளை பார்த்துக் கொள்பவனாகும், சகாதேவன் ஆடு மாடுகளை மேய்ப்பவனாகவும் தங்களை மாற்றிக் கொண்டு விராட நாட்டில் வசித்து வந்தனர். திரவுபதி இராணியின் தோழியாக தன்னை மாற்றிக் கொண்டாள்.

இராணியின் சகோதரனான கீசகன் அந்நாட்டின் படைத் தளபதியாக இருந்தான். உண்மையில் அவனே விராட நாட்டை ஆண்டான். அரசன் பெயரளவிலேயே இருந்தான். இந்நிலையில் கீசகன், திரவுபதியின் மேல் மையல் கொண்டு அவளை அடைய முயன்று வந்தான். முதலில், அவனை பற்றி மற்றவரிடம் சொல்ல தயங்கி கொண்டு தன் கணவர்கள் கந்தர்வர்கள் என்றும், அவள் அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள் என்றும் பயமுறுத்தினாள். ஆனால் கீசகனோ அதற்கு பயப்படவில்லை. தன் சகோதரியை வற்புறுத்தி இரவில் தன் மாளிகைக்கு அனுப்ப வைத்தான். முதலில், பல காரணங்களை சொல்லி தவிர்த்தாலும், மகாராணியின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவளும் சென்றாள்.

Keechaka-Vadham-Bhima-Killing-Keechaka-1

அங்கே , கீசகன் அவளை பலவந்தப்படுத்த முயல, அவனிடம் இருந்து தப்பி அரசவைக்கு சென்று அரசனிடம் முறையிட்டாள். அவனோ தன் இயலாமையை காரணம் காட்டி தன்னால் எதுவும் செய்ய இயலாது என கை விரித்து விட்டான். அன்று இரவு எப்படியோ கீசகனிடம் இருந்து தப்பிய திரவுபதி சமையல் அறையில் இருந்த பீமனிடம் சென்று முறையிட்டாள். இருவரும் சேர்ந்து கீசகனை பழி வாங்க திட்டம் தீட்டினர்.

அதன்படி, மறுநாள் காலையில் கீசகனை சந்தித்த திரௌபதி முதல் நாள் இரவு நடந்தவைக்கு மன்னிப்பு கேட்டாள். பின் , கீசகனை இப்பொழுது புரிந்து கொண்டதாகவும் அன்று இரவு இளவரசிகளின் நடன அவை யாரும் இல்லாமல் இருக்கும் என்றும் அங்கே வருமாறும் கூறினாள். அவள் மேல் மோகம் கொண்ட கீசகனும் இரவு தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு அங்கே சென்றான். அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு இருட்டில் பீமன் சேலை அணிந்து பெண் போல் இருந்தான். இதை அறியா கீசகன் அருகே சென்று தோளில் கை வைக்க திடமான உடல் வாகைக் கண்டு திடுக்கிட்டான். பீமனும் தன் வேடத்தைக் கலைக்க துவந்த யுத்தம் துவங்கியது.

இருவரும் சம பலம் கொண்டவர்கள். மேலும் மிக சிறந்த மல்யுத்த வீரர்கள். அவர்களுக்கு இணையாக பலராமனை மட்டுமே சொல்ல இயலும். ஆதலால், வெகுநேரம் சண்டை நீடித்தது. இறுதியில், கீசகனை கொன்ற பீமன், அவன் உடலை சதைப்பிண்டமாக மாற்றி அங்கேயே விட்டுவிட்டு சென்றான். பின், குளித்து அலங்கரித்து நிம்மதியாக உறங்கினான்.

மறுநாள் காலை, கீசகனின் மரண செய்திப் பரவியதும், தன்னை தவறாக அவன் அணுகியதால் தன் கந்தர்வ கணவர்கள் அவனை கொன்றுவிட்டதாகக் கூறினாள். அதன்பின் அவள் விராட நாட்டில் இருந்தவரை அவளை யாரும் துன்புறுத்தவில்லை.

https://solvanam.com/2025/07/27/கீசக-வதம்/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.