Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

lohan-radwatha-1.webp?resize=600%2C375&s

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார். உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (15) தனது 57ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1443145

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcRm49BJZZ7wc3fs989xew1

யாழ்ப்பாணத்தில் பல குண்டு வீச்சுகளுக்கும் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கும் பொறுப்பாக இருந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தையின் மகனும், பின்பு மகிந்தா அமைச்சரவையில் அமைச்சராக இருந்து கைத்துப்பாக்கியை காட்டி தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிய இலங்கையின் கடைந்தெடுத்த சிங்கள இனவாதிகளில் ஒருவரான ரொஹான் ரத்வத்தை இன்று சிறையிலையே காலமானார்.

Prashanthan Navaratnam

Edited by தமிழ் சிறி

பாவம் புண்ணியம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்பது இவனது மரணத்தின் மூலம் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படுகின்றது.

ஒரு பூச்சியை கூட இம்சிக்க விரும்பாத பலர் நோய் வந்து, புற்றுநோய் வந்து, விபத்துகளில் சிக்கி நாட்கணக்காக வலியால் துடி துடித்து வருடக்கணக்கில் அதை அனுபவித்து இறந்து போவதை இப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். ஆனால் இந்த மனிதப் படுகொலையாலியோ சில மாதங்கள் மட்டுமே ஈரல் பிரச்சனைகளால் அவதியுற்று, உயர்தர சிகிச்சைகளும் பெற்று இறந்து விட்டான்.

1 hour ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcRm49BJZZ7wc3fs989xew1

யாழ்ப்பாணத்தில் பல குண்டு வீச்சுகளுக்கும் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கும் பொறுப்பாக இருந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தையின் மகனும், பின்பு மகிந்தா அமைச்சரவையில் அமைச்சராக இருந்து கைத்துப்பாக்கியை காட்டி தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிய இலங்கையின் கடைந்தெடுத்த சிங்கள இனவாதிகளில் ஒருவரான ரொஹான் ரத்வத்தை இன்று சிறையிலையே காலமானார்.

Prashanthan Navaratnam

2001 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, 10 முஸ்லிம் இளைஞர்களை கட்டுக்கஸ்தோட்டையில் வைத்து படுகொலை செய்தவன் இவன். தகப்பன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தமையாலும் அரசியல் செல்வாக்காலும் உயர் நீதிமன்றத்தால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவன்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 17 ஆம் திகதி!

16 AUG, 2025 | 10:10 AM

image

உடல்நலக் குறைவு காரணமாக காலமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் சடலம் கண்டி – மஹய்யாவ பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. 

லொஹான் ரத்வத்த உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) காலமானார்.  

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்த தனது 57 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 17 ஆம் திகதி கண்டியில் உள்ள நித்தவெல மயானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/222659

  • கருத்துக்கள உறவுகள்

லொஹான் ரத்வத்தவின் மரணம் முழு நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு ஆகும் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

16 AUG, 2025 | 02:19 PM

image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் மரணம் கண்டி பிரதேசத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லொஹான் ரத்வத்த உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (15) காலமானார்.  

லொஹான் ரத்வத்தவின் சடலத்தை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை (15) சென்றுள்ளனர். 

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 17 ஆம் திகதி கண்டியில் உள்ள நித்தவெல மயானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/222675

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

533484110_1216229053853284_7886546209969

536282217_1216227567186766_7027281070129

535599528_1216229093853280_7585647551893

535323888_1216229107186612_6549050464052

535796688_1216229047186618_3217702142338

535156543_1216229153853274_6591382014855

535086571_1216229100519946_5811094605569

🔴 ராஜபக்‌ஷ குடும்பத்தினரால் முன்னின்று நடாத்தப்பட்ட லொஹான் ரத்வத்தவின் இறுதிச்சடங்கு!
சுகயீனம் காரணமாக மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதி சடங்கு நேற்று கண்டியில் நடைபெற்றது. இதன்போது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்னின்று குறித்த இறுதிச்சடங்கை நடத்தி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Vaanam.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.