Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த சில  வரிகள்.

1. சில சூழ்நிலைகள் கடந்துசெல்ல உடல் வலிமையை  விட மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது .
இந்த  சோகங்கள்  துக்கங்கள் எல்லாம் ஒரு நாள் மாறிவிடும்.ஆனால் உடனே  மாறிவிடாது. 

2.ஒரு பெண் தன்னை ஒருவரிடம் ஒப்படைக்கும் வரை தான் அவள் வாழ்க்கை  அவள் கையில் . அதன் பிறகு அவள்  ராணியாக வாழ்வதும் நடைப்பிணமாக வாழ்வதும் ஆணின் கையில் தான் உள்ளது .  

3. குடும்ப நலன் கருதி யாரோ  ஒருவர் மௌனமாகி போவதால் தான் ...பல பிரச்சினைகள் பெரிதாகாமல் இருக்கின்றன.  

4  வாழவேண்டிய வயதில் வசதி இருக்காது ...வசதி வரும்போது வயது இருக்காது ...இதுதான் வாழ்க்கை

5. எல்லா உறவுகளுக்கும் மனம் ஏங்காது  எல்லார்   தீண்டல்க்கும் பெண்மை வளையாது. விரும்பிய ஒருவருடன் தான் உணர்வுகளும்  காதலும்

6. குடும்பத்துடன் நேரம் செலவிடாத மனிதன் ஒருபோதும் உண்மையான மனிதனாக இருக்க முடியாது  .

7.பிடிக்காத   விஷயத்தை கண்டு கொள்ளாமல், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல் தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல்  இருந்தாலும் உடலும் மனமும் ஆரோக்கியமாக  இருக்கும்

8.சில மனிதர்கள் கற்றுத்தரும்  பாடங்கள்   எந்த புத்தகத்திலும் இருப்பதில்லை

பெண்ணின் பேச்சில் நியாயம் இருக்கும் வரை  அவளின் சத்தம்  கொஞ்சம் அதிகம் தான் இருக்கும்./ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடக்கி விழுந்து விட்டால்  எழுந்து ஓடுவதற்கு உங்கள் கால்களை    தயார் செய்யுங்கள். விழுந்தே கிடக்காதீர்கள் 

யாருடைய மௌனத்தையும் திமிர்  என எண்ணி விடாதீர்கள் ஒரு வேளை அது அவர்களின் வலியின் வெளிப்பாடு  கூட   இருக்கலாம்  .

ஏமாந்து நிற்கும் போது தான்  எண்ணுகிறோம் இவ்வளவு   நாட்களாக  எவ்வளவு முட்டாள்களாக   இருந்திருக்கிறார் என்பதை .

முதலில்  தாங்க முடியாததாக   தோன்றும் பின் பரவாயில்லை போல   தோன்றும் அடுத்து  கடந்து  விட முடியும்   என  நம்பிக்கை தோன்றும் அடுத்து இதற்காகவா இத்தனை வருந்தினோம் என மனம் ,  லேசான தாகி   விடும். வேண்டியது என்னவோ   கொஞ்சம் பொறுமையும் வலியை தாங்கும்   வலிமையும் தான் .

இந்த வார்த்தையை   என்னால் மறக்கவே முடியாது ..ரொம்ப அசிங்கப்படுத்திட்டிங்க என்னவெல்லாம் பேசினார் தெரியுமா ? என்று யாரோ எப்போதோ பேசுவதை மனதில் பூட்டி வைத்து வருத்தப்படுவது வேண்டாத வேலை.

பக்குவ மற்றவர்களும் ,அவசரக்காரர்கள் ,புத்தி கெட்டவர்களும் உணர்ச்சிவசப்பட்டு பேசியத்தை கல்வெட்டாய் மனதில் வைத்திருக்க கூடாது .அவர்களுக்கு அவ்வளவுதான்   அறிவு பக்குவம் என   கடந்து செல்ல   வேண்டும்.

மன வலி என்பது நாமே நம்மை    ஒரு கயிற்றால் கட்டி
வைப்பது   போல்
மனவலியை   சுமப்பவர்   கவனம் சிதறும்
அடுத்த வேலையை செய்ய விடாது சோர்வடைய செய்யும் 

பணம் செலவு செய்வதில் எது தேவையான செலவு என்பதை விட
எது தேவையற்ற செலவு  என்பது மிகப்பெரிய  தெளிவு     

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு பிடித்தவர்கள் " நீ பேசுவதை நிறுத்து .".என சொல்லும்போது ,நாம் பேச நினைக்கும் வார்த்தைகளை  தடுக்கும் போது , நம்மை பேச  விடாமல் குரலை நசுக்கும் போது, நம்மிடம் பேச என்ன இருக்கு என எண்ணும் போது,  ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.  நம் குரல் வெறுக்க பட்டு விட்டது.இனி அன்பாக பேசினால் பிடிக்காது என்ன பேசினாலும் தப்பா தெரியும். 

எந்த சூழலிலும் யாரையும்   நம்பாதீர்கள்  . என்றால் இப்போது மனிதர்கள் கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் துரோகம்   செய்யக் கற்றுக் கொண்டு விட்டார்கள் 

வீட்டில் தாய் செய்யும் வேலைக்கு  சம்பளம் கொடுக்கும் அளவுக்கு  பணக்காரன் இந்த பூமியில் இன்னும் பிறக்கவில்லை .

இறந்துபோன மீன்கள்தான்   தண்ணீர் வழியாக போகும் . ஆனால் உயிருள்ள மீன்கள்  தண்ணீரை எதிர்த்து தான் செல்லும் அதனால் உங்கள் பிரச்சினைகள் போராடி வெல்லுங்கள்.   

மூன்றாவது வகுப்பு  படிக்காதவன் ,   மூன்று ஜி யு வலேரி     கடை வைத்து நடத்துகிறான் . மூன்று  டிகிரி முடித்தவர் ...பெட்டிக் கடை போடலாம்  என யோசிக்கிறான்.   

தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என் வருந்தாதே நீ தனியாக போராடுவதே வெற்றி தான்.  சுமைகளை கண்டு துவண்டு விடாதே இந்த உலகை சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்

ஒரு நாளுனுக்கு பிடித்து போல உன்  வாழ்க்கையும் மாறும் .  அது நாளையாக கூட இருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/8/2025 at 20:28, நிலாமதி said:

எனக்கு பிடித்த சில  வரிகள்.

பலாப்பழம்போல் பல பதிவுகளை கள உறவுகள் பதிந்து வருகிறார்கள். பழத்தை அப்படியே எடுத்துக் கடிக்காமல், அதனைப் பிளந்து தடலைப்பிரித்து உள்ளே தும்பு, பால், நரம்பு நீக்கி, விதை நீக்கிவரும் சுளைகளை எடுத்து சுவைக்கும்போது வரும் இன்பம் சொல்ல வார்த்தை இல்லை. அதுபோன்று உறவுகளின் பதிவுகளில் உள்ள வரிகளைக் களைந்தெடுத்துப் பதிந்து மகிழ்வித்த நிலாமதி அவர்களுக்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள்!!🙌😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் ஊக்கம் என்னை மேலும் ஆக்குவிக்கும்.

நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிலாமதி said:

அருமையான தத்துவங்கள்.

5 hours ago, Paanch said:

பலாப்பழம்போல் பல பதிவுகளை கள உறவுகள் பதிந்து வருகிறார்கள். பழத்தை அப்படியே எடுத்துக் கடிக்காமல், அதனைப் பிளந்து தடலைப்பிரித்து உள்ளே தும்பு, பால், நரம்பு நீக்கி, விதை நீக்கிவரும் சுளைகளை எடுத்து சுவைக்கும்போது வரும் இன்பம் சொல்ல வார்த்தை இல்லை. அதுபோன்று உறவுகளின் பதிவுகளில் உள்ள வரிகளைக் களைந்தெடுத்துப் பதிந்து மகிழ்வித்த நிலாமதி அவர்களுக்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள்!!🙌😁

உங்கள் உவமைகள் புல்லரிக்க வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2025 at 21:56, நிலாமதி said:

தங்கள் ஊக்கம் என்னை மேலும் ஆக்குவிக்கும்.

நன்றி அண்ணா

👍🙌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருட்டுக்குப் பயந்தால்  தூங்க முடியாது கஷ்டத்துக்கு பயந்தால் வாழ முடியாது. உழைக்க பயந்தால் வாழ முடியாது.  வாழக் கற்றுக் கொள் வாழ்க்கை ஒரு முறைதான் வாய்ப்பு தரும்.

ஒரு காலத்தில் என் பிள்ளைகள் கூட தனியே  நடக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் என் மனைவி என் கை பிடித்து  தான் நடக்க ஆசைப்படுகிறாள். 

காடு மலை தாண்டி ஆவது கல்வி   கற்று விடு. கட்டியவன் கை விடடாலும்   நாம்  கற்றுக்கொண்ட கல்வி ஒருபோதும் நம்மைக் கைவிடாது.

எவ்வளவு கஷ்டங்கள் இருப்பினும்  "  நீ நல்லாய் இருப்பாய் ""என்று  யாரோ ஒருவர் சொல்லும்  வாழ்த்து தான் நம்மை இன்னும் உயிர்ப்போடு   ஓடச் செய்கிறது

உடலில் இருக்கும் உறுப்புகள் இயங்கும்   வரை அதன் அருமை தெரியாது .எப்போது பழுதடைந்து போகிறதோ அப்போது   தான். அதனருமை பெருமை புரியும்  . 

வாழ்க்கை சற்று கடினமான தேர்வு தான் பலர் அதில் தோல்வியுற காரணம் ,அவரவர்க்கு தனித்தனி கேள்வித்தாள் என   அறியாது  பிறரைப் பார்த்து நகலெடுப்பது தான்  

சந்தோசத்தையும் சோகத்தையும் தாங்கி கொண்டு நம்மை எழுந்து நடமாட வைக்கும். நம் மனம் தான் சிறந்த   நண்பன்

உதவிக்கு யாரும் இல்லை எண்ணாதே.தைரியமாய் போராடு உதவிக்கு நான் இருக்கிறேன் .இப்படிக்கு தன்னம்பிக்கை 

அனைத்தும் ஒரு நாள் கடந்து போகும் எனக் காத்திருந்தேன் . ஆனால் எதுவும்   கடந்து போகாது பழகிப்போகும் என உணர்த்தி விட்டது   காலம். காலத்துக்கேற்ப மாறவில்லை   என்றால் அதுவாகவே நம்மை மாற்றி விடும். 

icon-envelope-tick-green-avg-v1.png

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மெளனங்களும் திமிர்  அல்ல சில மௌனங்கள்   சொல்ல முடியாத ஆறாத காயங்கள்

சரியோ தவறோ உன் வாழ்க்கை எனும் புத்தகத்தை   எழுதும் எழுதுகோல் உன் கையில் இருக்க வேண்டும் மற்றொருவர் கையில் கொடுத்தால் கிறுக்கி தள்ளி விடுவார்கள்.

சரி பாதியாக வாழ்வது இல்லை வாழ்க்கை. சரியும் போது  சாயும் தோள் கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை 

வாழ்க்கையை சற்று தனித்து வாழும் கற்றுக் கொள்ளுங்கள்  ஏனெனில் நம்மோடு இருப்பவர்   எப்போது காற்றில்   மறைந்து போவார்   என்பது தெரியாது. 

வலியுடன் வாழ்க்கை எல்லோருக்கும் இருக்கிறது சிலர் கடந்துபோவார்கள் சிலர் மறந்து போனார்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்  தன்னம்பிக்கை குறிக்கோள்  திட்டமிடல் 

எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்ட மென்று கடவுளிடம்  கேட்டேன் அதற்கு கடவுள்   சொன்ன பதில்   இந்தக் கஷ்டமெல்லாம்   உன்னை சுற்றியிருப்பவர் முகத்திரையை   கிழிக்கும் ஆயுதம் என்று   புரிந்தால் நீ அறிவாளி . 

மனதில் வைத்துக் கொள்    உறக்கம் இரக்கம் என்பது அளவோடு இருக்க வேண்டும். அதிகம் தூங்கினால்   சோம்பேறி என்று எண்ணுவார்கள்  அதிகம் இரங்கினால் ஏமாளி என எண்ணி எடை போட்டுவிடுவார்கள். எனவே அளவோடு வைத்துக் கொள் 

தொலைவில் இருக்கும் வரை நாயும் நரியும் ஒன்றாகத்தான் தெரியும் அருகில் இருந்தால் மட்டுமே நாயின்   நன்றியும் நரியின் தந்திரமும் புரியும். 

உனக்கான தேடலை உன்னால் மட்டுமே கண்டறிய முடியும் . உனக்கானமாற்றத்தை  உன்னால் மட்டுமே  விதைக்க முடியும் உனக்கானவாழ்வின்     முடிவை உன்னால் மட்டுமே   எடுக்க முடியும் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.