Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

108 தம்பதியினருக்கு இலவச திருமணம்!

adminAugust 25, 2025

Weding.jpg?fit=794%2C542&ssl=1

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 தம்பதியினருக்கு  திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் இ ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது .

தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடாத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த 108 தம்பதியினரையும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்தோம்.

அன்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு 108 தம்பதியினரையும் வாழ்த்தி , அன்று மதியம் ஆலயத்தில் நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

https://globaltamilnews.net/2025/219610/

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு

நகை கடைகள் சீலை கடைகளுக்கு நல்ல வியாபார உதவிகள் 😂

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

வரவேற்கப்பட வேண்டிய முயற்சி. செயலுக்கும் மணமக்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

108 ஜோடிகளுக்கு திருமணம்

adminAugust 28, 2025

IMG_8083.jpeg?fit=1170%2C878&ssl=1

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் இருந்த 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது

இந்த 108 தம்பதியினரும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டனர்.

https://globaltamilnews.net/2025/219730/

https://www.facebook.com/share/v/1AS7LQ8zPH/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்

111 ஜோடிகளுக்கு திருமணம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஓரே நேரத்தில் இன்று (28) 111 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகத்திற்கும் உட்பட்ட திருமணம் செய்யாத மற்றும் பதிவுத் திருமணம் செய்து தாலி கட்டாதவர்கள் உள்ளிட்ட 111 ஜோடிகளுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட துரை தம்பதியினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணத்தின் போது அரைப்பவுண் தாலி, கூறை சேலை மற்றும் இதர செலவுகளையும் குறித்த சிங்கப்பூர் தம்பதிகள் வழங்கி குருமார்களின் ஆசியுடன் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று அனைத்து தம்பதியினரும் சுபமுகூர்த்த வேளையில் தாலி கட்டிக்கொண்டனர்.

திருமணத்திற்காக 111 தம்பதிகளையும் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண பிரதேச செயலர் ச.சுதர்சன், யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் ஆகியோர் மேற்கொண்டார்.

சிங்கப்பூர் தம்பதிகள் தமது மகளுக்கு திருமணம் செய்ததையடுத்து இவ்வாறு ஏனையவர்களுக்கும் தமது சொந்த நிதியினூடாக திருமணம் செய்து வைக்க எண்ணிய உயரிய சிந்தனையை மணமக்கள் மனதார வாழ்த்தி நின்றனர். எமது சமூகத்தில் அதிக பணவசதி படைத்தவர்கள் வாழ்ந்துவரும் சூழலில் இவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய தம்பதிகளுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன.

https://web.facebook.com/Deranatamil/posts/1328599389269338?ref=embed_post

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/top-picture/cmev77kds002pqplpm33otrtn

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஓரே நேரத்தில் இன்று (28) 111 ஜோடிகளுக்கு

முதன் முறையாக ஒரே தரத்தில் என்பதன் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால், ஒரே நேரத்தில் பலருக்கு செல்வ சந்நதி ஆலயத்தில் திருமணம் முடித்து வைப்பது புதிய விடயம் இல்லை. இப்படியான திருமண வைபவம் செல்வ சந்நிதி ஆலயத்தில் நீண்டகாலம் நடைபெற்று வருகின்றது. இந்த தடவை சமூக ஊடகத்தின் கவனத்தை பெற்றுள்ளது போல் தெரிகின்றது. ஆனால், முன்பு கொடையாளி எவராவது அனைத்து திருமண தம்பதியினருக்குமான திருமண செலவை ஏற்றுள்ளார்களா என தெரியவில்லை. இப்படியொரு தானம் கிடைப்பதும், கொடுப்பதும் மிகப்பெரியதொரு ஆசீர்வாதம்!

  • கருத்துக்கள உறவுகள்

மிகப்பெரியதொரு ஆசீர்வாதம் என்பது பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது மட்டுமல்ல அவர்களுக்கு பிறக்கின்ற முதல் பிள்ளைக்கு பிறந்த தின கொண்டாட்டத்தை மண்டபம் எடுத்து நடத்தி வைத்தால் மட்டுமே மிகப்பெரிய ஆசீர்வாதம் என்பது கிடைக்கும் என்று உடான்ஸ் புனித நூல் தெரிவித்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.