Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-188.jpg?resize=750%2C375&ssl

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!

மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது.

குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

ஆர்ப்பாட்டங்களின் போது பல அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“Unite the Kingdom” அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் சுமார் 110,000 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், போராட்டத்தின் வான்வழி காட்சிகள் மத்திய லண்டன் வீதிகளின் சில கிலோ மீட்டர்கள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிவதைக் காட்டியது.

இது அதிகாரிகளால் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் 26 அதிகாரிகள் காயமடைந்ததாகவும், அதில் நான்கு பேர் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மேலதிக படைகள் வரவழைக்கப்பட்டன.

அதிகாரிகள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்தனர் மற்றும் சட்ட ஒழுங்கை மீட்டெடுக்க உதவும் வகையில் பொருத்தப்பட்ட பிரிவுகளின் ஆதரவுடன் செயல்பட்டனர்.

ஆரம்ப கட்ட தகவலின்படி மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த அணிவகுப்பு இங்கிலாந்தில் மிகவும் பரபரப்பான கோடையின் உச்சக்கட்டத்தை அடையாளப்படுத்தியது.

புலம்பெயர்ந்தோர் வசிக்கும் ஹோட்டல்களுக்கு வெளியே போராட்டங்களால் குறிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானியாவின் யூனியன் கொடியையும், இங்கிலாந்தின் சிவப்பு மற்றும் வெள்ளை செயிண்ட் ஜார்ஜ் சிலுவையையும் ஏந்திச் சென்றனர்.

போராட்டக்காரர்கள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை விமர்சிக்கும் கோஷங்களை எழுப்பினர் மற்றும் “அவர்களை வீட்டிற்கு அனுப்புங்கள்” என்று கூறும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

பிரித்தானியாவில் குடியேற்றம் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.

னெனில் நாடு சாதனை எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கைகளை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு இதுவரை 28,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கால்வாயைக் கடந்து சிறிய படகுகள் மூலமாக அங்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1447097

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி: லண்டனில் ஈலோன் மஸ்க் பேசிய பேரணியில் வன்முறை : நடந்தது என்ன?

55 நிமிடங்களுக்கு முன்னர்

சனிக்கிழமை லண்டனில் 'யூனைட் தி கிங்டம்' என்ற பெயரில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் பேரணி ஒன்றை முன்னெடுத்தார். சுமார் 1.5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த பேரணியில் வன்முறை வெடித்தது.

சிலர் போலீசார் மீது பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களை வீசியதாகவும், இதன் காரணமாக 26 போலீசார் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது? முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1wgd9w9x11o

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் கனடாவிலும் இரண்டு பிரிவுகளாக இப்படி ஒரு நிகழ்வு நடந்தாக அறிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, தமிழ் சிறி said:

“Unite the Kingdom” அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் சுமார் 110,000 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், போராட்டத்தின் வான்வழி காட்சிகள் மத்திய லண்டன் வீதிகளின் சில கிலோ மீட்டர்கள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிவதைக் காட்டியது.

எங்கடை ரமில் றோயல்ஸ்காரர் இனி கொஞ்சம் கவனமாய் திரியுங்கோ. என்னாலை சொல்லக்கூடியது அவ்வளவு தான்.😂

நோர்வேயில கூட பெரிய ஆட்சி மாற்றம் நடந்திருக்காம்.அடுத்த ஆட்சிமாற்றம் ஜேர்மனியிலை எண்டு நினைக்கிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

எங்கடை ரமில் றோயல்ஸ்காரர் இனி கொஞ்சம் கவனமாய் திரியுங்கோ. என்னாலை சொல்லக்கூடியது அவ்வளவு தான்.😂

நோர்வேயில கூட பெரிய ஆட்சி மாற்றம் நடந்திருக்காம்.அடுத்த ஆட்சிமாற்றம் ஜேர்மனியிலை எண்டு நினைக்கிறன்.

அப்ப... உங்கடை "பவுசு" காட்டுற மச்சானை, ஊரிலை பார்க்கலாம் எண்டுறியள். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Tesla-Inc-elon-musk-by-Frederic-Legrand-

பிரித்தானிய நாடாளுமன்றம் குறித்து எலோன் தெரிவித்த கருத்துக்கு எதிராக வலுக்கும் கண்டனம்!

‘பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தைக்  கலைக்க வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு, அந்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிபோவதாகவும், அவர்களை திருப்பி அனுப்பும் படியும் வலியுறுத்தி, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில், ‘யுனைட் தி கிங்டம்’ என்ற பெயரில் லண்டனில் பேரணி நடந்தது. இதில், 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இதற்கு போட்டியாக, ‘பாசிசத்துக்கு எதிரான அணிவகுப்பு’ என்ற பெயரில், ‘ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்’ என்ற குழு போராட்டம் நடத்தியது. இதில், 5,000 பேர் பங்கேற்றனர்.

இரு தரப்பும் மோதலில் ஈடுபடாமல் தடுக்க 1,000க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில், 26 பொலிஸார் காயமடைந்தனர். இது தொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

யுனைட் தி கிங்டம் பேரணியில், நேரலை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் உரையாற்றினார்.

அப்போது, ‘பிரித்தானியாவின்  நாடாளுமன்றத்தைக்  கலைக்க வேண்டும். அங்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும். இடதுசாரி கட்சிகள் கொலைகார கட்சிகள்’ என, உரையாற்றியிருந்தார்.

இந்நிலையில், எலோன் மஸ்க்கின் இக் கருத்து பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் எலோன் மஸ்கிற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் ‘வன்முறையைத் துாண்டும் வகையில் பேசிய எலான் மஸ்க்கை கண்டிக்க வேண்டும் எனவும் அவரது பேச்சு பொருத்தமற்றது எனவும் அவருக்கு எதிராக தடை விதிக்கப்பட வேண்டும்’ எனவும்  கொதித்தெழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1447302

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி.

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி | Uk Anti Immigration Protesters At India Food Stall

புலம்பெயர்தலுக்கு எதிராக பிரித்தானியாவில் நடந்த பிரம்மாண்ட பேரணிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நடந்த ஒரு விடயம் சமூக ஊடகங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது. 

புலம்பெயர்தலுக்கு எதிராக பிரித்தானியாவில் நடந்த பிரம்மாண்ட பேரணிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நடந்த ஒரு விடயம் சமூக ஊடகங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது. 

லண்டனே ஸ்தம்பித்தது போன்ற ஒரு பிரம்மாண்ட காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் நடுவே ஒரு வேடிக்கை காட்சி கமெராவில் சிக்கியது.

ஆம், புலம்பெயர்தலுக்கு எதிராக பேரணி நடத்தியவர்களில் சில பிரித்தானியர்கள், சாலையோர இந்திய உணவகம் ஒன்றிற்குச் சென்று பஜ்ஜி வாங்கி சாப்பிடும் காட்சியை சிலர் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்கள்.

அத்துடன், பேரணியில் ஈடுபட்ட சிலர், ஆப்கானிஸ்தான் உணவகம் ஒன்றின் முன் வரிசையில் நிற்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாக, அவற்றை பார்வையிட்டவர்கள், பிரித்தானியர்களுக்கு, புலம்பெயர்ந்தோர் வேண்டாமாம், ஆனால், அவர்களுடைய சாப்பாடு மட்டும் வேண்டுமாம், என்னும் ரீதியில் கேலியும் கிண்டலும் செய்துவருகிறார்கள்! 

Lankasri News
No image preview

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்...

புலம்பெயர்தலுக்கு எதிராக பிரித்தானியாவில் நடந்த பிரம்மாண்ட பேரணிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நடந்த ஒரு விடயம் சமூக...
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேரணி : இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

15 Sep, 2025 | 02:02 PM

image

இங்கிலாந்தில் வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ரொபின்சன் தலைமையில் லண்டனில் ஒரு பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பேரணியின் போது, போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 26 பொலிஸார் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் அமைதியாகப் பேரணியை நடத்தாமல் வன்முறையில் ஈடுபட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், போராட்டக்காரர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், இங்கிலாந்து சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு என்பதை மறந்துவிடக் கூடாது. நமது நாட்டின் கொடி நமது பன்முகத்தன்மையைக் குறிக்கிறது. அதை மதிக்காமல், இன ரீதியான மிரட்டலை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஏனையவர்களை அச்சுறுத்துவதன் மூலமாகவோ அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளைத் தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இடம்பெற்ற போராட்டத்தால் புலம்பெயர்ந்தோர் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

546748353_4160024417599967_2463588479830

https://www.virakesari.lk/article/225137

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15/9/2025 at 07:25, தமிழ் சிறி said:

அப்ப... உங்கடை "பவுசு" காட்டுற மச்சானை, ஊரிலை பார்க்கலாம் எண்டுறியள். 😂

என்ரை மச்சான் பெரிய சுழியன்.அவனை ஆராலையும் அசைக்கேலாது.🤣 லண்டன் காற்று வைரம் நிறைஞ்ச காற்றாம்.😂

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் போராட்டங்கள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது?

லண்டன், டாமி ராபின்சன், இந்தியா, இலங்கை, தெற்காசிய சமூகம், பிரிட்டன், குடியேற்றம், புலம்பெயர்ந்தோர்

பட மூலாதாரம், EPA / Shutterstock

படக்குறிப்பு, 'ஸ்டாண்ட் அப் டு இனவெறி' பிரச்சாரக் குழுவின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கட்டுரை தகவல்

  • Nadia Suleman

  • South Asia Regional Journalism

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

லண்டனில் தொடங்கிய மற்றொரு தீவிர வலதுசாரி கூட்டம், பல தசாப்தங்களில் பிரிட்டன் கண்டிராத வகையில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக மாறியது.

2025 செப்டம்பர் 13-ஆம் தேதி, தீவிர வலதுசாரியான டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த "யுனைட் தி கிங்டம்" பேரணிக்காக 1,10,000-க்கும் மேற்பட்டோர் மத்திய லண்டனில் கூடினர்.

யூனியன் ஜாக், பிரிட்டனின் செயின்ட் ஜார்ஜ் கிராஸ், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொடிகளை ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக சோதித்தனர்.

முதலில் "சுதந்திர பேச்சு விழா"( "festival of free speech") என்று அறிவிக்கப்பட்ட இந்தப் பேரணி, விரைவில் இனவாத சதிக் கோட்பாடுகளை நோக்கி நகர்ந்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரமாக மாறியது.

மிகப்பெரிய அளவில் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், வன்முறை வெடித்தது. அதில், 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்தனர்.

இந்த நிகழ்வு, குடியேற்றம் எவ்வளவு தூரம் ஒரு பிரச்னையாக மாறியுள்ளது என்பதை நினைவூட்டுவதாக அமைந்தது. இது அடையாளம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்த ஆழமான முரண்பாடுகளையும் வெளிப்படுத்தியது.

லண்டன், டாமி ராபின்சன், இந்தியா, இலங்கை, தெற்காசிய சமூகம், பிரிட்டன், குடியேற்றம், புலம்பெயர்ந்தோர்

பட மூலாதாரம், Christopher Furlong/Getty Images

படக்குறிப்பு, செப்டம்பர் 13, 2025 அன்று, மத்திய லண்டனில் குறைந்தது 110,000 பேர் கூடி 'யூனைட் தி கிங்டம்' பேரணியை நடத்தினர்.

வார இறுதியில் லண்டனில் ஏன் 110,000 பேர் அணிவகுத்துச் சென்றனர்?

குடியேற்றம் மீதான கோபம் மற்றும் நாட்டின் எல்லைகளில் அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்ற கருத்தின் மீதான நம்பிக்கையால், லண்டனில் பெருமளவில் மக்கள் திரண்டனர்.

பல ஆர்ப்பாட்டக்காரர்கள், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து, அகதிகளுக்கு தஞ்சமளிக்கும் விதிகளை கடுமையாக்குவதன் மூலம், பிரிட்டன் தனது "கட்டுப்பாட்டை மீட்டெடுக்க வேண்டும்" என்று கூறினர்.

பிரித்தானிய கலாசாரம் அழிந்து வருவதாகவும், அதைப் பாதுகாக்கவே தாங்கள் வந்ததாகவும் சிலர் தெரிவித்தனர்.

பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. குடியேற்றத்திற்கு எதிராகப் பேசும் சாதாரண மக்களுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை என்று பலரும் குறிப்பிட்டனர்.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை குறிவைத்து, கோஷங்கள் மற்றும் பதாகைகளுடன் பெரிய அரசியல் மாற்றத்திற்கான கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன.

ராபின்சனைத் தவிர, அமெரிக்க கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க் காணொளி மூலம் பங்கேற்றார்.

லண்டன், டாமி ராபின்சன், இந்தியா, இலங்கை, தெற்காசிய சமூகம், பிரிட்டன், குடியேற்றம், புலம்பெயர்ந்தோர்

பட மூலாதாரம், Mark Kerrison/In Pictures via Getty Images

படக்குறிப்பு, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தெற்காசிய சமூகம் பிரிட்டனின் இரண்டாவது பெரிய இனக்குழுவாகும்.

பிரிட்டனில் குடியேறிய தெற்காசிய சமூகத்தை இது எவ்வாறு பாதிக்கிறது?

2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிரிட்டனில் தெற்காசிய மக்கள் இரண்டாவது பெரிய இனக்குழுவாக உள்ளனர். இதில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர், சிங்களர்களும் நேபாளிகளும் சிறிய அளவில் உள்ளனர்.

போராட்டங்கள் கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் அகதிகளுக்கு தஞ்சமளிக்கும் கொள்கைகளை நோக்கி இருந்தாலும், பல தலைமுறைகளாக பிரிட்டனில் வாழும் இந்த தெற்காசிய சமூகங்கள் இதன் தாக்கத்தை உணர்கின்றன.

குறிப்பாக இஸ்லாம் மற்றும் சீக்கிய சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரங்கள் அதிகரித்து வருகின்றன.

2024-ல் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள் புதிய உச்சத்தை எட்டியதாக 'டெல் மாமா' அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

கடந்த வாரம், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் இளம் சீக்கிய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை காவல்துறை "இன ரீதியாக தூண்டப்பட்ட தாக்குதல்" எனக் கருதுகிறது.

கடந்த சில மாதங்களாக, தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு குழுக்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள், சமூகத்தில் பயத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளன.

கடந்த வார இறுதி போராட்டங்களில், "வீட்டிற்கு திரும்புங்கள்", "சட்டவிரோதமாக வந்தவர்களை நாடு கடத்துங்கள்" என்ற பதாகைகள், வெறுப்பு மற்றும் எதிர்ப்பு உணர்வுகளை மேலும் தூண்டுவதாக இருந்தன.

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவது ஏன் ?

புலம்பெயர்ந்தோர் நீண்ட காலமாக பிரிட்டனின் மக்கள் தொகை, கலாசாரம் மற்றும் பொருளாதார அடையாளத்தை தகவமைத்து வருகின்றனர். ஆனால், பிரெக்ஸிட்-க்குப் பிறகு, தீவிர வலதுசாரி குழுக்கள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான விரோதப் போக்கை அதிகரித்துள்ளன.

ரிஷி சுனக் அரசாங்கத்தின் கீழ் நிகர இடப்பெயர்வு புதிய உச்சத்தை எட்டியது, இது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பிரிட்டனின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் படி, 2022-ல் நிகர இடம்பெயர்வு (சட்டப்பூர்வமாக வருவோருக்கும் வெளியேறுவோருக்கும் இடையிலான வித்தியாசம்) 7,45,000 ஆக இருந்தது.

இது பிரெக்ஸிட்-க்கு முந்தைய அளவை விட மூன்று மடங்கு அதிகம்.

மார்ச் 2025-ல் முடிவடைந்த ஆண்டில், 1,09,343 பேர் பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பித்தனர், இது சமீப ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கைகளில் ஒன்று.

விண்ணப்பதாரர்களில் அல்பேனியர்கள் முதலிடத்தில் இருந்தனர், பின்னர் ஆப்கானியர்கள், பாகிஸ்தானியர்கள், இரானியர்கள் மற்றும் வங்கதேசத்ததவர்.

லண்டன், டாமி ராபின்சன், இந்தியா, இலங்கை, தெற்காசிய சமூகம், பிரிட்டன், குடியேற்றம், புலம்பெயர்ந்தோர்

பட மூலாதாரம், Rasid Necati Aslim/Anadolu via Getty Images

படக்குறிப்பு, காவல்துறையினரின் கூற்றுப்படி, போராட்டத்தின் போது வன்முறை வெடித்து, அதில் இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்தனர்.

வளங்களின் பங்கீடு மற்றும் பொது பாதுகாப்பு குறித்த கவலைகளை தூண்டியுள்ள தவறான தகவல்கள், குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரசாரங்களை மேலும் தீவிரமாக்கியுள்ளன.

லண்டன், பர்மிங்காம் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள மக்கள்தொகையில், கிட்டத்தட்ட 40% புலம்பெயர்ந்தவர்கள். இதனால், அவர்கள் வாய்ப்புகளையும் வளங்களையும் கைப்பற்றுவதாக ஒரு உணர்வு பரவியுள்ளது.

தீவிர வலதுசாரிகள் இதை நாடு "முற்றுகையில்" இருப்பதற்கான அடையாளமாக சித்தரிக்கின்றனர்.

அதேநேரம், பொருளாதார அழுத்தங்கள், அதிகரிக்கும் செலவுகள், வீடுகள் பற்றாக்குறை, அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவை குடியேற்றத்தை எளிதாக குற்றம் சாட்டக்கூடிய இலக்காக மாற்றியுள்ளன.

தெருக்களில் வரையப்பட்ட யூனியன் ஜாக் கொடிகள், லண்டனில் நடைபெறும் அணிவகுப்புகள் போன்ற தேசியவாத சின்னங்கள் இந்த பதற்றங்களை வெளிப்படையாக காட்டுகின்றன.

லண்டன், டாமி ராபின்சன், இந்தியா, இலங்கை, தெற்காசிய சமூகம், பிரிட்டன், குடியேற்றம், புலம்பெயர்ந்தோர்

பட மூலாதாரம், Vuk Valcic/SOPA Images/LightRocket via Getty Images

படக்குறிப்பு, ஸ்டாண்ட் அப் டு ரேசிசத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி சுமார் 5,000 மக்களை ஈர்த்தது,

இந்த சூழல் இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளதா ?

மிகப் பெரிய பிளவுகளையும், பதற்றமான கட்டத்தையும் நோக்கி பிரிட்டன் செல்கிறது என்பதை வார இறுதி நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

'ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சுமார் 5,000 மக்களை ஈர்த்தது. இது ராபின்சன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஒரு சிறிய பகுதி தான்.

இனவெறி எதிர்ப்பு இயக்கத்துடன் ஒப்பிடுகையில், குடியேற்ற எதிர்ப்பு இயக்கம் வேகமாக வலுவடைவதை இந்த வித்தியாசம் வெளிப்படுத்துகிறது.

லண்டனில் இவ்வளவு பெரிய பேரணி நடக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அதில், 26 அதிகாரிகள் காயமடைந்தனர், 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் நடந்த பல போராட்டங்களால், புகலிட விடுதிகளை விரைவாக மூடும் திட்டங்களை வேகப்படுத்துமாறு பிரிட்டன் அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

மறுபுறம், புகலிட விடுதிகள் மூடப்படும் போது, தொடர்பில்லாத குழுக்கள் ஒரே வீட்டில் வசதிகளைப் பகிர்ந்து கொள்ள நேரிடலாம். இது புதிய எதிர்வினையைத் தூண்டலாம் என்ற கவலை நிலவுகிறது.

பிரிட்டனின் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு, குடியேற்ற எதிர்ப்பு உணர்வுகள் வெறும் குரலாக இல்லாமல், முக்கிய அரசியல் பாதையாக மாறிவரும் சூழலைச் சமாளிப்பதே பெரும் சவாலாக மாறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c89dp8q3qqxo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.