Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

ஒரு நாள் காலையில் இங்கு வீட்டின் பின் வளவுக்குள் நிற்கும் கொய்யா மரமொன்றின் அடியில் ஒரு கறுப்பு பூனை படுத்திருந்தது.

மீண்டும் பூனையா? அதுவும் கறுப்புப்பூனையா? உங்களின் வீட்டில் பூனைகள் எங்கிருந்து வந்து ஒட்டிக்கொள்கின்றன?

6 hours ago, ரசோதரன் said:

இந்தியாவில் சமீபத்தில் நடந்த விமான விபத்து பற்றியும் ஒரு யோசனை வந்தது.

உதுதான் சொல்லுறது இரவில் பயணம் செய்யக்கூடாதென்று. எல்லோரும் தூங்கும்போது நாமும் தூங்கி விட வேண்டும். இல்லையென்றால் உப்பிடித்தான் பகலில் வராத நினைவுகள் எல்லாம் வந்து பயமுறுத்தும்.

  • Replies 83
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    2. மணல் தெய்வம் ---------------------------- 'மண் அப்புச்சாமிக்கு என்ன பெயர்?' அப்படி ஒரு கடவுள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மண்ணுக்கு என்று ஒரு கடவுள் எங்கள் வழக்கத்தில் இருக்கின்றதா? உலகில் எந்த

  • ரசோதரன்
    ரசோதரன்

    3. புலம் பெயர்ந்த இலக்கியம் --------------------------------------------- காத்திரமான, நீண்ட காலத்தில் நிலைத்து நிற்கப் போகும் பல உண்மைகளும், விடயங்களும், ஆக்கங்களும், மனிதர்களும் அவர்கள் அல்லது அவைகள

  • ரசோதரன்
    ரசோதரன்

    5. இன்னொரு பாலம் -------------------------------- எளிமையான பல நம்பிக்கைகளின் ஒரு தொகுப்பாகவே எங்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. அந்த நம்பிக்கைகளில் பலவற்றை நாங்கள் சாதாரண சூழ்நிலைகளில் கேள்வ

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

அனபான கள நட்புகளுக்கும், உறவுகளுக்கும் மிக்க நன்றி. உங்களின் ஆதரவும், தொடர் வாசிப்பும், கருத்துகளுமே என்னை தொடர்ந்து எழுத வைத்தது

எல்லோரையும் இலவசமாக அவுஸ் கொண்டுபோய் பத்திரமாக கொண்டுவந்து சேர்த்ததற்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பூனையாயினும் ஒரு நல்ல ஆத்மா தான் நிம்மதியாய் வாழ்வை முடிக்க ஒரு இடத்தை தெரிந்துவைத்திருக்கும் . .......அதன் கணிப்பு வீண் போகவில்லை . .....நிஜமாகவே ஒரு நல்ல இடத்தைத்தான் தெரிந்தெடுத்து வைத்திருக்கு ......கதையும் மிக மிக நன்றாய் இருந்தது . ......! 👍

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2025 at 00:51, ரசோதரன் said:

சிங்கம் மற்றும் பல காட்டு மிருகங்கள் தங்களின் இறுதி முடிவும், அந்த நாளும் தெரிந்தவுடன், கூட்டத்தை விட்டு தனியே போய் விடுமாம். அப்படியே தனியே எங்கோ போய், அவை தங்கள் வாழ்க்கைகளை தனியே முடித்துக் கொள்ளுமாம்.

நாங்கள் விலங்குகளுக்குச் சளைத்தவர்கள் இல்லை. எங்களிடமும் வடக்கிருந்து மரணிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இப்போ எல்லாம் மருந்து மாத்திரைகளில் வாழ்வு போய்க் கொண்டிருப்பதால் திசைகளை எல்லாம் மறந்துவிட்டோம்.

On 27/9/2025 at 00:51, ரசோதரன் said:

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்ககான விருது இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் பற்பல விருதுகள் உலகெங்கும். நான் தான் படத்தை சரியாகப் பார்க்கவில்லை போல. எனக்குள்ளும் ஒரு புளூ சட்டை மாறன் தூங்கிக் கொண்டிருக்கின்றார்

“கப்பலில் வந்த கொண்டையினரை திறக்க கதாநாயகன் வெளிப்படுவார். அவர் கையில் ஒரு புத்தகம் இருக்கும். பார்த்தால் அவர் அந்த நாட்டு மொழி பேசுவார். எல்லோரும் ஆச்சரியமாக அவரைப் பார்க்க”, சும்மாதானே கொண்டையினருக்குள்ளே இருக்கிறேன் என்று நாலு நாளா உங்கள் மொழியை படித்தேன் என்று அவர் சொல்லுவார்”.புஸ்பா 2 படத்தில் இந்தக் காட்சியைச் சொல்லி “யாருக்கு கதை விடுறீங்கள்?” என்று புளூச் சட்டை மாறன்  டைரக்டரை வாங்கியிருப்பார். படத்தைப் பார்த்தால் அந்தக் காட்சி ஒரு கனவுக் காட்சி. ஆக படங்களை பார்க்க வைக்க ஒரு புளூச்சட்டை மாறன் தேவைதானே.

On 27/9/2025 at 00:51, ரசோதரன் said:

அனபான கள நட்புகளுக்கும், உறவுகளுக்கும் மிக்க நன்றி. உங்களின் ஆதரவும், தொடர் வாசிப்பும், கருத்துகளுமே என்னை தொடர்ந்து எழுத வைத்தது.....................🙏.

நீங்கள் கதை சொன்னவிதத்தில் கூடவே நானும் உங்களுடன் பயணித்ததை நீங்கள் கவனிக்கவில்லைப் போலும். நன்றாகச் சொன்னீர்கள். பலதையும் கோர்த்து ஆக்கபூரவமான விசயங்களையும் சேர்த்துச் சொன்னீர்கள். ஏன் எங்களையும் கூட உங்களுடன் சேர்ந்து எழுத வைத்தீர்கள். நன்றி யசோதரன். ஆனாலும் பூனைகளும், பொலிஸுகளும் உங்களை ஏன் நாடி வருகிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை

Edited by Kavi arunasalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

ஆனாலும் பூனைகளும், பொலிஸுகளும் உங்களை ஏன் நாடி வருகிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை

முகராசி போல................. நீங்களே முன்னர் சொல்லியிருக்கின்றீர்கள்...........🤣.

ஆபத்தில்லாதவன் என்று தெரிந்து தான் அருகில் வருகின்றார்களாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது கதையா பயண அனுபவமா. தலைப்பிலேயே கதை என்று இருப்பதால், கதை என்றே எடுத்துக் கொள்ளவேணுமோ.

இப்படி பல விடயங்களை கோர்த்து எழுதும் போது வாசிப்பில் ஒரு உற்சாகம். அடுத்து என்ன கதை சொல்லப் போகிறார் என்று. சும்மா அங்கே போனேன் இங்கே போனேன் என்று சொல்லாமல், தங்கள் பழைய அனுபவங்களையும் கோர்த்து எழுதவது மிக நன்றாகவே இருந்தது.

அந்த வாசிகசாலைக்குப் போகவேண்டும் என்று மிக ஆவலாக உள்ளது. எப்போதும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

விமானத்தில் படம் பார்க்காமல் எப்பிடி. எப்படி பயணம் செய்கிறீர்கள். இப்படி எழுதுபவர்களின் மனநிலயே வேறை போல. அதுதான் அவர்களால் எழுத முடிகிறது. நாம இரசிக்க மட்டும்தான் போல. நான் எப்போதும் யோசிப்பதுண்டு. எப்படி இவர்களின் கண்களில் மட்டும் இப்பிடியான விடயங்கள் விழுகிறது. இப்பிடியான அனுபவங்கள் எப்படி அவர்களுக்கு மட்டும் வாய்க்கிறது. நாமும்தான் பயணம் போறம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

நாம இரசிக்க மட்டும்தான் போல. நான் எப்போதும் யோசிப்பதுண்டு. எப்படி இவர்களின் கண்களில் மட்டும் இப்பிடியான விடயங்கள் விழுகிறது. இப்பிடியான அனுபவங்கள் எப்படி அவர்களுக்கு மட்டும் வாய்க்கிறது. நாமும்தான் பயணம் போறம்.

மிக்க நன்றி செம்பாட்டான். உங்களுக்கு இது பிடித்திருந்தது மிக்க மகிழ்ச்சி.

உங்களின் எழுத்து நடை மிகவும் இரசிக்கத்தக்கது. நாங்கள் பலரும் அதை ஆடுகளத்தில், கள போட்டிகளில் பார்த்திருக்கின்றோம். மற்றைய பகுதிகளிலும் நீங்கள் எழுதுங்கள்..........🫱‍🫲.

கொஞ்சம் சோம்பேறித்தனம், எதையுமே அவ்வளவு பொருட்டாக எண்ணாத ஒரு மனம் இருந்தால், பலவற்றையும் கோர்த்து எழுதுவது சுலபமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

மிக்க நன்றி செம்பாட்டான். உங்களுக்கு இது பிடித்திருந்தது மிக்க மகிழ்ச்சி.

உங்களின் எழுத்து நடை மிகவும் இரசிக்கத்தக்கது. நாங்கள் பலரும் அதை ஆடுகளத்தில், கள போட்டிகளில் பார்த்திருக்கின்றோம். மற்றைய பகுதிகளிலும் நீங்கள் எழுதுங்கள்..........🫱‍🫲.

கொஞ்சம் சோம்பேறித்தனம், எதையுமே அவ்வளவு பொருட்டாக எண்ணாத ஒரு மனம் இருந்தால், பலவற்றையும் கோர்த்து எழுதுவது சுலபமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

கொஞ்சம் சோம்பேறித்தனம் என்று நீங்கள் சொல்கிறீர்களா. ஜயகோ. நீங்கள் சொல்லும் விடயங்களை வைத்துக் கணக்குப் போட்டால் சோம்பலுக்கும் உங்களுக்கும் காததூரம் என்பது என்முடிவு.

விளையாட்டுகளோடேயே நின்று கொள்ளுவம் என்று பார்க்கிறேன். இங்கு எழுதப்படும் விடயங்களை, அளிக்கப்படும் எதிர்வினைகளைப் பார்த்துப் பார்த்து, தள்ளியே இருப்பதே மேல் என்று நினைக்கிறேன். வேறு இடங்களில் எழுதுவதற்கு உண்மையிலேயே பயமாக்கிடக்கு. ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, செம்பாட்டான் said:

கொஞ்சம் சோம்பேறித்தனம் என்று நீங்கள் சொல்கிறீர்களா. ஜயகோ. நீங்கள் சொல்லும் விடயங்களை வைத்துக் கணக்குப் போட்டால் சோம்பலுக்கும் உங்களுக்கும் காததூரம் என்பது என்முடிவு.

விளையாட்டுகளோடேயே நின்று கொள்ளுவம் என்று பார்க்கிறேன். இங்கு எழுதப்படும் விடயங்களை, அளிக்கப்படும் எதிர்வினைகளைப் பார்த்துப் பார்த்து, தள்ளியே இருப்பதே மேல் என்று நினைக்கிறேன். வேறு இடங்களில் எழுதுவதற்கு உண்மையிலேயே பயமாக்கிடக்கு. ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி.

🤣.........................

விளையாடுவதில் அல்லது வாசிப்பதில் சோம்பேறித்தனம் கிடையாது தான், செம்பாட்டான், ஆனால் லௌகீகக் கடமைகள் என்று ஒரு பெரிய நிரலே எங்களிடையே இருக்கின்றதல்லவா...............

'இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும்...............' என்று நான் இழுக்க, 'என் தலைவிதி.........' என்று அவர் சலித்துப் போக, காலம் போய்க் கொண்டிருக்கின்றது. பல வீடுகளிலும் இதுவே தான் நிலைமை என்றாலும், இந்த வீட்டு விடயத்தில் ஆகக் குறைந்த புள்ளிகள் எடுப்பவர் யார் என்று ஒரு கணக்கெடுத்தால், முதல் இடங்களில் ஒன்று எனக்கு உறுதி............🤣.

விளையாடுவதலாலும், வாசிப்பதிலாலும் ஒரு சதம் பிரயோசனம் கிடையாது என்பது எங்கள் சமூகத்தில் எப்போதும் இருக்கும் அபிப்பிராயம்தானே.

ஒன்றும் தயங்காதீர்கள், இங்கு பல உறவுகள் மிகவும் ஊக்கப்படுத்துவார்கள்.............👍.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.