Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட 'அரட்டை ' எனும் செயலியின் அதிகரித்து வரும் பயன்பாடு பேசு பொருளாகியுள்ளது. அமெரிக்கா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, உலக நாடுகள் பலவும் சொந்தக் காலில் நிற்பது பற்றி அதிகம் சிந்தித்துச் செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் சேவையான WhatsApp இற்குப் பதிலாக அரட்டை எனும் செயலியினைப் ( Arattai App) பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். WhatsApp, Snapchat போன்ற செயலிகளைப் போன்றே அரட்டையும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டினைச் சேர்ந்த சோகோ நிறுவனத்தால் ( Zoho corporation) உருவாக்கப்பட்ட செயலி இதுவாகும். சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயற்படுகின்றது. இச் செயலியின் பெயர் தமிழ்ச் சொல்லாக இருப்பதுடன், 'அ' என்ற எழுத்தினை அடையாளமாகவும்கொண்டுள்ளது. நாமும் பயன்படுத்துவோமே! இச் செயலி வெற்றி பெற்றால் , அது ஒரு வகையில் தமிழின் வெற்றியாகவும் அமையும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிராமணரான ஸ்ரீதர் வேம்பு தனது தகவல் பரிமாற்ற செயலிக்கு 'அரட்டை' என்று தமிழில் பெயர் வைக்கிறார்.

தமிழைப் பேசிப் பிழைத்த திராவிடவாதியான கருணாநிதி குடும்பம் தங்களின் தொலைக்காட்சிக்கு சன் டிவி என்று பெயர் வைத்தது.

சங்க காலத்திலிருந்து தமிழ் வளர்க்கும் பிராமணர்களை தமிழர்கள் அல்லாதவர்கள் என்று போலியாகக் கட்டமைக்கும் ஆரிய திராவிட இனவாத அரசியல் ஒழிக்கப்படவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாட்சப் செயலிக்கு மாற்று. Zoho ஸ்ரீதர் வேம்பு அவரது பதிவு வாட்சப் செயலிக்கு மாற்று. Zoho ஸ்ரீதர் வேம்பு அவரது பதிவு

🟢 அரட்டை (Arattai) மெசஞ்சர் அப்டேட் 🟢

இது எங்கள் நிதானமான பொறியியல் முயற்சியின் இன்னொரு சிறந்த உதாரணம்.

நாங்கள் நேரம் எடுத்துக்கொண்டது காரணம்:

• குறைந்த விலை போன்களில் கூட செயல்பட வேண்டும்

• குறைந்த இன்டர்நெட் வேகத்திலும் (8 kbps வரை சோதித்து வருகிறோம்) நன்றாக இயங்க வேண்டும்

• மிகச்சிறந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும்

• அதே நேரத்தில் மிக எளிதாக பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்

ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து அப்டேட் செய்கிறோம்.

நீங்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்கள் (features) இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும். அதோடு, அதிகமான பயனர்களை தாங்கும் சர்வர் அடிப்படை (infrastructure) வளர்ச்சியில் முதலீடு செய்து வருகிறோம்.

நான் தினசரி நேரடியாக எங்கள் எஞ்சினீயர்களுடன் இதைப் பற்றி கலந்துரையாடி வருகிறேன்.

📢 இது முடிந்தவுடன், ஒரு பெரிய மார்க்கெட்டிங் பிரச்சாரம் (big marketing campaign) நடத்த இருக்கிறோம். அது உங்களுக்கு பிடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை.

🌍 எங்கள் அரட்டை மெசஞ்சர் உலகின் சிறந்த மெசேஜிங் அனுபவத்தை (best messaging experience) வழங்கும் என்ற எங்கள் உறுதி தொடர்கிறது.

👉 மேலும் அப்டேட்களுக்கு காத்திருங்கள்!

--Sridhar Vembu CEO ZOHO

Download link:-
https://chat.arattai.in/app/download

  • கருத்துக்கள உறவுகள்

556574423_4269176773406621_6816231938195

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரட்டை அப்பை நான் தவிர்கிறேன்

  1. இது வாட்சப்பின் மார்கெட்டின் ஒரு பங்கையாவது பிடிக்க இறக்கப்பட்ட இந்தியாவின் அப். முடிந்தளவு made in India வை நான் தவிர்ப்பதுண்டு.

  2. இதில் தகவல் பாதுகாப்பு உத்தரவாதம் எப்படி இருக்கும் ? இந்திய தயாரிப்பு தரம் நாம் அறிந்ததே. நாளைக்கே உங்கள் தகவல் முழுவதும் dark web இல் கூவி, கூவி விற்கப்படும்.

  3. இந்த வேம்பு மாமா ஒரு அக்மார்க சங்கி.

தமிழர்கள் நஞ்சை கூட நஞ்சு என தமிழில் பெயர் வைத்தால் முண்டியட்டித்து வாங்கி குடிக்கும் கூட்டம் என்பதை அறிந்தோ என்னமோ அரட்டை என்ற பெயரோடு வருகின்றனர்.

தூக்கி எறிவோம் அரட்டையை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
BBC News தமிழ்
No image preview

அரவிந்த் ஸ்ரீனிவாஸ்: பெர்ப்ளெக்சிட்டியை நிறுவிய சென்னை த...

கூகுள் நிறுவனத்தின் குரோமை விலைக்கு கேட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பெர்ப்ளெக்சிட்டி நிறுவனர்களில் ஒருவரான இவர், தொழில்நுட்ப உலகில் சாதித்தது என

கூகுள் குரோமை விலைக்கு கேட்ட சென்னை தமிழர் - 31 வயதில் கோடீஸ்வரரான இவர் யார்?

10 hours ago, goshan_che said:

இந்த வேம்பு மாமா ஒரு அக்மார்க சங்கி.

மகாகவி பாரதியாரும் சங்கி என்று புறக்கணிப்பீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, goshan_che said:

முடிந்தளவு made in India வை நான் தவிர்ப்பதுண்டு.

முடிந்த அளவு எண்டால் அது எந்த அளவு? 😂

உங்கட வீட்டு சாவியை ஒருக்கால் தரமுடியுமா? ஒருக்கால் வீட்டுக்குள்ள இருக்கிற தட்டுமுட்டு சாமான்களை செக் பண்ணி பார்க்க வேணும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

கூகுள் குரோமை விலைக்கு கேட்ட சென்னை தமிழர் - 31 வயதில் கோடீஸ்வரரான இவர் யார்?

இவர் சங்கி என்று எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை.

1 hour ago, புலவர் said:

மகாகவி பாரதியாரும் சங்கி என்று புறக்கணிப்பீர்களா?

அபத்தமாக கதைக்க கூடாது.

ஶ்ரீதர் வேம்பு ஒரு பிராமணர் எனவே புறக்கணிக்க வேண்டும் என நான் எழுதினேனா? இல்லை.

பிராமணர் எல்லோரும் சங்கிகள் இல்லை, சங்கிகள் எல்லோரும் பிராமணரும் இல்லை.

1 hour ago, குமாரசாமி said:

முடிந்த அளவு எண்டால் அது எந்த அளவு? 😂

உங்கட வீட்டு சாவியை ஒருக்கால் தரமுடியுமா? ஒருக்கால் வீட்டுக்குள்ள இருக்கிற தட்டுமுட்டு சாமான்களை செக் பண்ணி பார்க்க வேணும். 🤣

தட்டுமுட்டு சாமான் என் அதிகார எல்லைக்கு அப்பால் பட்டது 🤣.

நான் சொல்வது படங்கள், கிரிகெட், வாகனங்கள், விடுமுறை, தொழில்நுட்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

தட்டுமுட்டு சாமான் என் அதிகார எல்லைக்கு அப்பால் பட்டது 🤣.

உப்பிடித்தான் உங்கை/இஞ்சை எண்டு கனபேர் பொதுவெளியிலை சாமியும் இல்லை சாம்பிறானியும் இல்லை எண்டு முழங்கிப்போட்டு வீட்டுக்க போனால் கப்சிப்.😂

9 hours ago, goshan_che said:

நான் சொல்வது படங்கள், கிரிகெட், வாகனங்கள், விடுமுறை, தொழில்நுட்பம்.

சினிமா பாட்டுக்கள் கேட்பதில்லையோ? எதுக்கும் குசினிக்கை போய் புட்டுக்குழல் எந்த நாட்டு தொழில்நுட்பம் எண்டதை ஒருக்கால் பாருங்கோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

உப்பிடித்தான் உங்கை/இஞ்சை எண்டு கனபேர் பொதுவெளியிலை சாமியும் இல்லை சாம்பிறானியும் இல்லை எண்டு முழங்கிப்போட்டு வீட்டுக்க போனால் கப்சிப்.😂

சினிமா பாட்டுக்கள் கேட்பதில்லையோ? எதுக்கும் குசினிக்கை போய் புட்டுக்குழல் எந்த நாட்டு தொழில்நுட்பம் எண்டதை ஒருக்கால் பாருங்கோ 🤣

#முடிந்தளவு

அதே சமயம் சங்கிகளது என கண்டால் - படம், பாடல்களையும் எதையும் அடியோடு ஒதுக்கி விடுவேன்.

புட்டுகுழல் உட்பட 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

#முடிந்தளவு

முடிந்தளவு என்றால்யாழ்களத்தில் எழுதுவதற்கு மட்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா?ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே!அப்படியா?ஒருகருத்தை எதிர்பதாயின் அந்தக்கருத்துக்களை செவிமடுக்க வேண்டும் அதன்பின் அதன்குறைநிறைகளை விமர்சிக்க வேண்டும்'.அதை விடுத்து பிராமனன் என்றால் இப்படித்தான் என்று சங்கி பட்டம் கட்டி விட்டு ஒதுக்கக் கூடாது. கமலும் பிராமணர்தான் ஆனால் கடவுள்நம்பிக்கை அற்றவர்.ஆனால் எடுக்கும் படங்கள் எல்லாவற்றிலும் கடவுள்பற்றிய காட்சிகளை வைத்து விடுவார்.இவர்பற்றி மவண்ணன் ஒரு உரை ஆற்றி இருக்கின்றார் கேட்டுப்பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=YkyXQ8tNzZw

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

முடிந்தளவு என்றால்யாழ்களத்தில் எழுதுவதற்கு மட்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா?ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே!அப்படியா?ஒருகருத்தை எதிர்பதாயின் அந்தக்கருத்துக்களை செவிமடுக்க வேண்டும் அதன்பின் அதன்குறைநிறைகளை விமர்சிக்க வேண்டும்'.அதை விடுத்து பிராமனன் என்றால் இப்படித்தான் என்று சங்கி பட்டம் கட்டி விட்டு ஒதுக்கக் கூடாது. கமலும் பிராமணர்தான் ஆனால் கடவுள்நம்பிக்கை அற்றவர்.ஆனால் எடுக்கும் படங்கள் எல்லாவற்றிலும் கடவுள்பற்றிய காட்சிகளை வைத்து விடுவார்.இவர்பற்றி மவண்ணன் ஒரு உரை ஆற்றி இருக்கின்றார் கேட்டுப்பாருங்கள்.

மீண்டும் சொல்கிறேன் - அபத்தமாக கதைக்க கூடாது.

வேம்பு அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதே ஆர் எஸ் எஸ் வேலைதிட்டத்தை தமிழ் நாட்டில் முன்னெடுக்கவே.

இதன் ஒரு அங்கம்தாம் இந்த அரட்டை.

அதனால் பிராமணர் என்பதால் அவரை நான் எதிர்க்கவில்லை.

வேம்புவை பற்றி - அவரின் முன்னைய பேட்டிகள் பற்றி கொஞ்சம் வாசித்திருந்தால் -

வேம்பு பிராமணர் என்பதால் மட்டும் அவரை சங்கி என்கிறேன் என்ற அரைவேக்காட்டு புரிதல் ஏற்பட்டிராது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புலவர் said:

முடிந்தளவு என்றால்யாழ்களத்தில் எழுதுவதற்கு மட்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா

இல்லை.

உங்கள் தரவழியள் போல் “புறக்கணி சிறிலங்கா” எண்டு போட்டு ஹொலிடே போகும் ஆளில்லை நான்.

1987 இல் இருந்து என் வாழ்வில் இந்திய தயாரிப்புகளை தவிர்த்தே வருகிறேன். ஆனால் தவிர்க்க முடியாதவற்றை (எடுத்து காட்டு : உறவினர் மருத்துவம்) தவிர்க்க முடிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நான் இந்திய தயாரிப்புகளை தவிர்ப்பது இட்டு யாருக்கும் உபதேசம் செய்யவில்லை.

ஆனால் சங்கி, இதில் security, data ரிஸ்க் உள்ளது என்பது உபதேசம்தான்.

மக்களே,

உங்கள் உரையாடல்கள் அனைத்தையும், இதை தரவிறக்குவதன் மூலம் உங்கள் phone இன் ஏனைய security settings இற்கும் ஒரு back door access ஐ இந்திய புலனாய்வுக்கு அமைத்து கொடுக்க விரும்புகிறீர்களா?

அப்படியாயின் தாரளமாக அரட்டை அடியுங்கள்.

உபயம் - புலவர் 🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாட்ஸ் அப்பில் இருக்கும் பாதுகாப்பும்,உத்தரவாதங்களும் வேம்புவில் இல்லை என இந்தியர்களே சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அ ஐ இறக்கி பாவிக்கும் அளவுக்கு எங்களுக்கு இந்தியர் நம்பக்கூடிய ஆட்களா? இலங்கை தமிழருக்கு எப்படி அள்ளிவைக்கலாம் என்று றோ நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு திரியுது. அ ஐ றோ ஊடுறுவாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? எங்களுக்கு சைனாக்காரனின் திக்தொக்தான் வேணும். 🇨🇳

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/p/1ZR8ABCqth/?mibextid=wwXIfrமிஸ்டர் வேம்பு, சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனம் உங்களிடம் இருக்கிறது.

உலகம் முழுவதும் 180 நாடுகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருக்கு நீங்கள் நேரடியாக வேலை வாய்ப்பு கொடுத்து வருகிறீர்கள். இவ்வளவு வலிமையும் வெற்றியும் படைத்த நீங்கள் சிலிக்கான் வேலியின் உயரமான கண்ணாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் அமர்ந்து உலகத்தை ஆட்சி செய்திருக்கலாம், அல்லது சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் பல் அடுக்கு கட்டிடங்களின் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து உங்களது நிறுவனங்களை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

ஆனால், இதையெல்லாம் விட்டு, ஏன் தென்காசி அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமான மத்தளம்பாறையில் ஏ.சி கூட இல்லாத அறையில் அமர்ந்திருக்கிறீர்கள்?

அதற்கு மிஸ்டர் வேம்பு சிரித்தபடி சொன்னார்:

“இந்தியாவின் கிராமங்களில் இன்னும் ஆயிரக்கணக்கான படித்த, திறமை வாய்ந்த இளைஞர்கள் பசியோடு, வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் தான் நாட்டின் உண்மையான அறிவாற்றல். அந்தச் சிந்தனை சக்தியை, அந்த பயன்படுத்தப்படாத பிரஸ் மூளையை, அந்த நுண்ணறிவை, நகரங்களின் குரல் சத்தத்துக்குள் புதைத்து விடாமல், மண்ணின் வாசனையோடு வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அந்த வயல்களின் நடுவே, அந்த மலைகளின் நிழலில் அமர்ந்திருக்கிறேன், அங்கிருந்துதான் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்னும் நம்பிக்கையில்.”

I believe that Sanatana Dharma and Brahminical culture are the main reasons for his humble nature.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

இதை பகிர்ந்த அதே ஆள்தான் மேலே பாரதியாரை எல்லாம் இழுத்து சாம்பு மவன் வேம்பு, சங்கி இல்லை என எழுதினார் என்பதை சபையோர் கருத்தில் எடுக்க வேண்டும்🤣.

NTK = RSSS

என்பது இதைத்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸ்அப்-க்கு சவால் அளிக்குமா அரட்டை செயலி? - இந்திய செயலியின் சாதக பாதகங்கள் என்ன?

இரண்டு பெண்கள் செல்போனை பார்த்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தை, மேலும் இந்தச் செயலி நாட்டில் கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கை முறையாக உள்ளது.

கட்டுரை தகவல்

  • செரிலான் மோலன்

  • பிபிசி நியூஸ்,மும்பை

  • நெயாஸ் ஃபாரூக்கி

  • பிபிசி நியூஸ், டெல்லி

  • 14 நிமிடங்களுக்கு முன்னர்

வாட்ஸ்அப் என்ற மாபெரும் போட்டியாளருடன் இந்தியத் தயாரிப்பு மெசேஜிங் செயலி ஒன்று போட்டியிட முடியுமா?

கடந்த சில வாரங்களாக, இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ (Zoho) உருவாக்கிய 'அரட்டை' (Arattai) என்ற மெசேஜிங் செயலி நாட்டில் திடீர் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் ஏழு நாட்களில் இந்தச் செயலி 70 லட்சம் பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

இருப்பினும், அதற்கான தேதிகளை அது குறிப்பிடவில்லை. சந்தை ஆய்வுகளை மேற்கொள்ளும் சென்சார் டவர் (Sensor Tower) நிறுவனத்தின்படி, ஆகஸ்ட் மாதத்தில் அரட்டையின் பதிவிறக்கங்கள் 10,000க்கும் குறைவாகவே இருந்தன.

தமிழில் 'அரட்டை' என்று பொருள்படும் இந்தச் செயலி, 2021 இல் சாதாரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பலர் அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அமெரிக்க வர்த்தக வரிகளால் இந்தியாவில் ஏற்படும் தாக்கத்தின் விளைவாக, மத்திய அரசு தற்சார்பு இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அந்த செயலியின் பிரபலம் திடீரென அதிகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் கடந்த சில வாரங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லும் செய்தி இதுதான்: இந்தியாவில் உருவாக்குங்கள், இந்தியாவில் செலவிடுங்கள்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இரண்டு வாரங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் அரட்டை செயலி பற்றிப் பதிவிட்டு, மக்களை "தொடர்பில் இருக்க மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். அதன் பின்னர், மேலும் பல அமைச்சர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் அரட்டை குறித்துப் பதிவிட்டுள்ளனர்.

அரசின் இந்த முயற்சி "அரட்டை செயலியின் பதிவிறக்கங்கள் திடீரென அதிகரிக்க நிச்சயமாக உதவியது" என்று ஸோஹோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

"வெறும் மூன்று நாட்களில், ஒரு நாளைக்கான புதிய பதிவுகள் 3,000 இலிருந்து 3,50,000 ஆக அதிகரித்ததைக் கண்டோம். எங்கள் செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது, அந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது," என்று ஸோஹோ தலைமைச் செயல் அதிகாரி மணி வேம்பு பிபிசியிடம் தெரிவித்தார். இது, பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய உள்நாட்டுத் தயாரிப்பைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் காட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

செயலியில் உள்ள பயனர்கள் பற்றிய விவரங்களை நிறுவனம் வழங்கவில்லை. இருப்பினும், இந்தியாவில் 50 கோடி மாதாந்திர பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப்பின் எண்ணிக்கையிலிருந்து அரட்டை செயலி இன்னும் வெகுதொலைவில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியா வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தை. மொத்தமாக குட் மார்னிங் வாழ்த்துகளை அனுப்புவது முதல் தங்கள் வணிகங்களை நடத்துவது வரை மக்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதால், இது கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கை முறையாகவே நாட்டில் உள்ளது.

அரட்டை செயலி மற்றும் வாட்ஸ்அப் செயலியின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்சார் டவர் சந்தை ஆய்வு நிறுவனத்தின்படி, செப்டம்பர் மாதம் அரட்டையின் மாதச் செயலில் உள்ள பயனர்களில் 95%க்கும் அதிகமானோர் இந்தியாவில் இருந்தனர்.

அரட்டை, வாட்ஸ்அப்பைப் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது பயனர்கள் செய்திகளை அனுப்பவும், குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது. இரண்டு செயலிகளும் வணிகத்திற்கான ஒரு தொகுப்பு கருவிகளை வழங்குகின்றன. மேலும், வாட்ஸ்அப்பைப் போலவே, அரட்டையும் குறைந்த விலை போன்களிலும் ,மெதுவான இணைய வேகத்திலும் சீராகச் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

பல பயனர்கள் சமூக ஊடகங்களில் அரட்டையைப் பாராட்டி உள்ளனர். சிலர் அதன் இன்டர்பேஸ் மற்றும் வடிவமைப்பு பிடித்திருப்பதாகக் கூறினர். மற்றவர்கள் அது பயன்பாட்டில் வாட்ஸ்அப்பை ஒத்துள்ளது என்று உணர்ந்தனர். பலர் அது இந்தியத் தயாரிப்புச் செயலி என்பதில் பெருமிதம் கொள்வதுடன், மற்றவர்களையும் அதைப் பதிவிறக்கம் செய்ய ஊக்குவித்தனர்.

அரட்டை, மிகப்பெரிய சர்வதேசப் போட்டியாளர்களை மாற்றீடு செய்யக் கனவு காணும் முதல் இந்தியச் செயலி அல்ல. கடந்த காலத்தில், கூ (Koo) மற்றும் மோஜ் (Moj) போன்ற இந்தியத் தயாரிப்புச் செயலிகள் முறையே எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் டிக்டாக்கிற்கு (2020 இல் இந்திய அரசு சீனச் செயலியைத் தடை செய்த பிறகு) மாற்றாகப் பேசப்பட்டன. ஆனால், ஆரம்ப வெற்றிக்குப் பிறகு அவை பெரிதாக வெற்றி பெறவில்லை. ஒரு காலத்தில் வாட்ஸ்அப்புக்கு மிகப்பெரிய போட்டியாளராகப் பேசப்பட்ட ஷேர்சாட்டும் (ShareChat) கூடத் தனது எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தொழில்நுட்ப எழுத்தாளரும், ஆய்வாளருமான பிரசாந்தோ கே ராய் கூறுகையில், வாட்ஸ்அப்பின் பரந்த பயனர் தளத்தைப் பிளப்பது அரட்டை செயலிக்குக் கடினமானதாக இருக்கும். குறிப்பாக, மெட்டாவின் கீழ் உள்ள வாட்ஸ்அப் தளத்தில் அதிக எண்ணிக்கையிலான வணிகங்கள் மற்றும் அரசாங்க சேவைகள் செயல்படுகின்றன.

அரட்டையின் வெற்றி புதிய பயனர்களை ஈர்ப்பதில் மட்டுமல்ல, அவர்களை தக்கவைத்துக் கொள்வதிலும் தான் உள்ளது. இதை தேசிய உணர்வால் மட்டும் செலுத்த முடியாது என்று அவர் கூறுகிறார்.

"தயாரிப்பு நன்றாக இருக்க வேண்டும், ஆனால் அப்படி இருந்தாலும், உலகில் ஏற்கனவே கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள ஒரு செயலியை இது மாற்றுவதற்குச் சாத்தியம் அதிகமில்லை," என்று ராய் மேலும் கூறுகிறார்.

கூ செயலி அறிமுகப்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2020 இல் தொடங்கப்பட்ட கூ (Koo) செயலி X-க்கு மாற்றாகப் பேசப்பட்டது, ஆனால் அந்தச் செயலி கடந்த ஆண்டு மூடப்பட்டது.

அரட்டையில் உள்ள தரவுப் தனியுரிமை (Data Privacy) குறித்தும் சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் செயலி வீடியோ மற்றும் குரல் அழைப்புகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை (E2EE) வழங்கினாலும், செய்திகளுக்கு இந்த அம்சத்தை தற்போது தரவில்லை.

"பாதுகாப்புக் காரணங்களைக் கூறி, செய்திகளின் மூலத்தைக் கண்டறிய அரசாங்கம் விரும்புகிறது, இதை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் இல்லாமல் எளிதாகச் செய்யலாம்," என்று இந்தியாவில் தொழில்நுட்பக் கொள்கை குறித்துப் பதிவிடும் இணையதளமான மீடியாநாமாவின் (MediaNama) நிர்வாக ஆசிரியர் சசிதர் கே.ஜே. கூறுகிறார். ஆனால், இது மக்களின் தனியுரிமையை அபாயத்திற்குள்ளாக்குகிறது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

அரட்டை செயலி, உரைச் செய்திகளுக்கான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குவதற்காக தீவிரமாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது.

"நாங்கள் ஆரம்பத்தில் E2EE உடன் இந்தச் செயலியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டோம், இது இன்னும் இரண்டு மாதங்களில் நடந்திருக்கும்," என்று மணி வேம்பு கூறினார். "இருப்பினும், காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது. மேலும், சில முக்கியமான அம்சங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை முடிந்தவரை விரைவாகக் கொண்டு வர முயற்சிக்கிறோம்."

வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் அழைப்புகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குகிறது. ஆனால், அதன் கொள்கையின்படி, சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் சூழ்நிலைகளில் அரசாங்கங்களுடன் மெட்டா தரவைப் (செய்தி அல்லது அழைப்புப் பதிவுகள் போன்றவை) பகிர முடியும்.

இந்தியாவின் இணையச் சட்டங்களின்படி, சமூக ஊடகத் தளங்கள் சில சூழ்நிலைகளில் மத்திய அரசுடன் பயனர் தரவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோருகின்றன. ஆனால், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து இந்தத் தரவைப் பெறுவது கடினமானது மற்றும் நேரம் எடுக்கும் செயல்.

மெட்டா மற்றும் எக்ஸ் போன்ற உலகளாவிய பெரு நிறுவனங்கள், நியாயமற்றவை என்று அவர்கள் கருதும் அரசாங்கக் கோரிக்கைகள் அல்லது விதிகளை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட மற்றும் நிதி ஆதாரங்களை கொண்டுள்ளன.

2021 இல், சமூக ஊடகம் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் உள்ள உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் இந்தியாவில் வழக்குத் தொடர்ந்தது. அவை வாட்ஸ்அப்பின் தனியுரிமைப் பாதுகாப்புகளை மீறுவதாகக் கூறியது. உள்ளடக்கத்தை முடக்குவதற்கான அல்லது நீக்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு எதிராக எக்ஸும் சட்ட சவால்களை எழுப்பியுள்ளது.

எனவே, பயனர்களின் தனியுரிமை உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அரசாங்கக் கோரிக்கைகளை இந்தியத் தயாரிப்பு அரட்டை செயலியால் தாங்கி நிற்க முடியுமா என்று நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தொழில்நுட்பச் சட்டம் குறித்துச் சிறப்பு கவனம் செலுத்தும் ராகுல் மத்தன் கூறுகையில், அரட்டையின் தனியுரிமைக் கட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துடன் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தைப் பகிர்வது குறித்த ஸோஹோவின் நிலைப்பாடு பற்றி மேலும் தெளிவு வரும் வரை, பலர் அதைப் பயன்படுத்த தயக்கம் காட்டலாம்.

மத்திய அமைச்சர்கள் இந்தச் செயலியை விளம்பரப்படுத்துவதால், ஸோஹோ அரசுக்கு கடமைப்பட்ட்டிருப்பதாக அந்த நிறுவனம் உணருவதற்கு வாய்ப்புள்ளது என்று ராய் கூறுகிறார். மேலும், நாட்டின் சட்டங்கள் மற்றும் சட்ட அமலாக்கக் கோரிக்கைகளுக்கு இணங்கச் சொல்லும்போது, ஒரு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் அதை வலுவாக எதிர்ப்பது எளிதல்ல என்றும் அவர் கூறுகிறார்.

அத்தகைய கோரிக்கைகள் வந்தால் அரட்டை என்ன செய்யும் என்று கேட்டபோது, நிறுவனம் "நாட்டின் தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதோடு, தங்கள் தரவின் மீது பயனர்கள் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்" என்று விரும்புவதாக மணி வேம்பு கூறுகிறார்.

"முழு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வெளியிடப்பட்டவுடன், பயனர் உரையாடல்களின் உள்ளடக்கத்தை நாங்கள் கூட அணுக முடியாது. எந்தவொரு சட்டப்பூர்வ கடமைகளைப் பற்றியும் நாங்கள் எங்கள் பயனர்களுடன் வெளிப்படையாக இருப்போம்," என்று அவர் கூறினார்.

வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற பழக்கத்தை ஏற்படுத்தும் பெரு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் போது, நிலைமை இந்தியச் செயலிகளுக்கு எதிராகவே உள்ளது என்று அனுபவம் காட்டுகிறது. அரட்டை செயலியால் இதில் வெற்றி பெற முடியுமா - அல்லது அதற்கு முன் இருந்த பல செயலிகள் போல மங்கிவிடுமா - என்பதைக் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjr5rg8wz8vo

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Arattai App | Whatsapp | Zoho CEO Sridhar Vembu Interview | அரட்டை With ஸ்ரீதர் வேம்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.