Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரூர் சம்பவத்தில் த.வெ.க நிர்வாகிகளின் செயல்பாடுகளால் காட்டமான நீதிபதி செந்தில்குமார், "தலைமைப் பண்பே இல்லை" என விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் அரசியல் ரீதியான கருத்துக்கள் பலவாறு பரவும் அதேவேளையில், சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கரூர் சோகம் - விஜய்

கரூர் சோகம் - விஜய்

அந்த வரிசையில், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்தச் சம்பவத்தில் த.வெ.க நிர்வாகிகளின் செயல்பாடுகளால் காட்டமான நீதிபதி செந்தில்குமார், "தலைமைப் பண்பே இல்லை" என விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், இந்தச் சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்த நீதிபதி, சம்பவம் தொடர்பான ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்குமாறு கரூர் போலீஸுக்கு உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

மேலும் இன்றைய விசாரணையில், சம்பவம் நடந்த பிறகு எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்ட ட்வீட்டை அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியதைக் கவனித்த நீதிபதி செந்தில்குமார், வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

கரூர் சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras High Court orders Special Investigation Team headed by Asra Garg to investigate Karur incident - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says '"கரூரில் மனிதனால் உருவாக்கப்! பேரழிவு (Man made Disaster) நிகழ்ந்துள்ளது" சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்; அரசு அமைதியாக இருக்க கூடாது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார்'

மகா பிரபுவே வணக்கங்கள் பல.🙏🙂↕️

திருநெல்வேலிகாரன்

##########################

எலி, ஏன்... ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது என்று பார்த்தேன்.

இப்படிப் பட்டவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

ஒரு கட்சிக்கு சார்பானவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 5 people and text that says '"கரூரில் மனிதனால் உருவாக்கப்! பேரழிவு (Man made Disaster) நிகழ்ந்துள்ளது" சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்; அரசு அமைதியாக இருக்க கூடாது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார்'

மகா பிரபுவே வணக்கங்கள் பல.🙏🙂↕️

திருநெல்வேலிகாரன்

##########################

எலி, ஏன்... ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது என்று பார்த்தேன்.

இப்படிப் பட்டவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

ஒரு கட்சிக்கு சார்பானவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.

ஒரு பூப்புனித(?) நீராட்டில் முதல்வர், உயர் நீதிமன்ற நீதிபதி கலந்து கொள்ளும் போது, அழைத்தவர்கள் கூட இப்படி ஒரு படத்தை வேண்டி கேட்டு எடுத்திருக்கலாம்.

ஒரு அரசியல்வாதி, இன்னொருவரை இனத்தின் வைரி என சொல்லிப்போட்டு, ஒண்டவீட்ட அண்ணன் செத்ததை, தேர்தலில் வென்றதை எல்லாம் சாக்கு சொல்லி போய் சந்திப்பது போல அல்ல இது.

அல்லது ஏ1 அக்யூஸ்டை சிறையில் இருந்து வந்ததும் சந்தித்துவிட்டு, பின்கதவால் ஓடியது போலவும் அல்ல இது.

ஒரு நீதியரசர் தனிப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது, ஒரு முதல்வர் வந்தால் முகத்தையா திருப்ப முடியும்.

இதை வைத்தே இவர் திமுக அனுதாபி என கூற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

ஒரு பூப்புனித(?) நீராட்டில் முதல்வர், உயர் நீதிமன்ற நீதிபதி கலந்து கொள்ளும் போது, அழைத்தவர்கள் கூட இப்படி ஒரு படத்தை வேண்டி கேட்டு எடுத்திருக்கலாம்.

ஒரு அரசியல்வாதி, இன்னொருவரை இனத்தின் வைரி என சொல்லிப்போட்டு, ஒண்டவீட்ட அண்ணன் செத்ததை, தேர்தலில் வென்றதை எல்லாம் சாக்கு சொல்லி போய் சந்திப்பது போல அல்ல இது.

அல்லது ஏ1 அக்யூஸ்டை சிறையில் இருந்து வந்ததும் சந்தித்துவிட்டு, பின்கதவால் ஓடியது போலவும் அல்ல இது.

ஒரு நீதியரசர் தனிப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது, ஒரு முதல்வர் வந்தால் முகத்தையா திருப்ப முடியும்.

இதை வைத்தே இவர் திமுக அனுதாபி என கூற முடியாது.

557621124_10231837362897297_512726858299

முன்னாள் திமுக MLA சங்கரவள்ளியின் மகன் தான் நீதிபதியாம்.. அதனால் நியாயமா இருப்பார் என்று நம்புகிறேன்.

Sooriya Prakash
################# ##################

557596972_3228496693972620_7252265041467

நீதியரசர் இல்ல விழாவில் கலந்து கொண்ட நம்ம முதல்வர். நீதிதான் மறைந்தது விஜய் மறையவில்லை அவரின் புகழ் பலமடங்கு ஏறிக்கொண்டுள்ளது.

Er. K. Arumugam

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தவெகவை லெஃப் & ரைட் வாங்கிய நீதிபதி செந்தில் குமார் : கோர்ட்டில் நடந்தது என்ன? முழு விவரம்!

judge.jpg

தமிழக வெற்றிக் கழகம் என்ன மாதிரியான கட்சி என்று நீதிபதி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் பெருந்துயரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அந்த வகையில் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ், ‘அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கரூரில் நடந்த துயரச் சம்பவத்துக்கு காரணமான பொறுப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி செந்தில்குமார் முன்பு இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ‘இந்த துரதிருஷ்டமான சம்பவத்தை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துள்ளது. இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் என அனைவரும் இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் காவல்துறை எடுத்த நடவடிக்கை போதுமானதாக தெரியவில்லை. சம்பவம் நடந்த பிறகு அக்கட்சித் தலைவர் அங்கிருந்து பறந்து மறைந்து விடுகிறார்’என்று விஜய் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக நீதிபதி கோபத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ‘அரசு மீது குற்றம் சாட்டுவது எளிது. தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் முதலில் டிசம்பரில் தான் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென, செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் நடத்தப்போவதாக 23ஆம் தேதி அனுமதி கேட்டு கடிதம் வழங்கினர்.

முதலில் கரூர் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டனர். அதைத்தொடர்ந்து மூன்று இடங்களை தேர்வு செய்து விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த இடங்களில் வேலுசாமிபுரம் தான் சிறந்த இடம் என்பதால் அங்கு போலீசார் அனுமதி வழங்கினர்.

பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை பிரச்சாரக் கூட்டம் நடத்திக் கொள்ள 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் தனது எக்ஸ் பக்கத்தில், கரூரில் 12 மணிக்கு விஜய் வந்து உரையாற்றுவார்’ என்று தெரிவித்திருந்தது.

இதை நம்பி காலை முதலே மக்கள் வேலுசாமிபுரத்துக்கு வர தொடங்கி விட்டனர்.

தவறான நேரத்தை சொல்லி மக்களை கட்சியினர் தவறாக வழிநடத்தினர்’ என்று வாதங்களை முன் வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி செந்தில்குமார், ‘அப்படி என்றால் கூட்டத்தை மதிப்பிடுவதில் போலீஸ் அதிக எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருந்திருக்க வேண்டும் தானே?’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘விஜய் பிரச்சாரம் செய்த அதே வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அவரது கூட்டத்துக்கு 137 போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் தமிழக வெற்றிக் கழக கூட்டத்துக்கு 559 போலீசார் வரை பணியில் அமர்த்தப்பட்டனர்’ என்று பதிலளித்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘தவெக பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து சென்று இருசக்கர வாகனங்கள் பேருந்தின் கீழ் சிக்கிக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதை பேருந்து ஓட்டுநரும் பார்த்திருக்கிறார். ஆனால் பேருந்தை நிறுத்தவில்லை. இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? (Hit and run case). ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? போலீசார் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை? இதை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்?

அரசு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கருணை காட்டுவது போல் தெரிகிறது. அந்தக் கூட்டம் தொடர்பான வீடியோக்களை அனைவரும் பார்த்து இருக்கிறார்கள். எல்லாம் யூடியூபில் பரவுகிறது. இது ஒரு கட்டுப்பாடற்ற கும்பல்.

41 பேர் இருந்ததற்காக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறும் போது, பேருந்தின் கீழ் வாகனங்கள் சிக்கியது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்வதிலிருந்து உங்களைத் தடுத்தது எது? ‘ என்று கேள்வி எழுப்பினார்

இதற்கு கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல், ‘நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம். எங்களை டிஸ்கரேஜ் செய்யாதீர்கள்’ என்று கூற நீதிபதி நான் உங்களை டிஸ்கரேஜ் செய்யவில்லை என்றார்.

மேலும் நீதிபதி, ‘இது எந்த மாதிரியான கட்சி. கட்சியில் உள்ள அனைவரும் அந்த இடத்தை விட்டு விட்டு ஓடி இருக்கிறார்கள். அந்தக் கட்சிக்கு ஏன் காவல்துறை எந்த நோட்டீசையும் அனுப்பவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்தது எது? கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் கூட ஏற்பாடு செய்யாதது ஏன்?

காவல்துறையினர் பொறுப்பாக இல்லை என்றால் யார் பொறுப்பாக செயல்படுவார்கள்’ என்று கூறி கரூர் நகர காவல் ஆய்வாளரை இவ்வழக்கில் பிரதிவாதியாக சேர்த்தார்.

இந்நிலையில் மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரன் ஆஜராகி, கட்சித் தலைவர் ஜோசப் விஜய் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி , அரசு வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவிடம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் ‘ எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர், ‘இது மனிதனால் உருவாக்கப்பட்ட பெரிய பேரழிவு. 41 அப்பாவி உயிர்கள் இழந்ததை பார்த்து நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது. நாங்கள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். நீதிமன்றம் அதன் பொறுப்பை தட்டிக்கழிக்காது.

இந்த நிகழ்வின் தொடர்ச்சியான விளைவுகளையும் முழு உலகமும் பார்த்திருக்கிறது.

சம்பவம் நடந்த பிறகு அந்த இடத்தை விட்டு கட்சித் தலைவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பலியாகி இருக்கும் நிலையில், அந்தக் கட்சி ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது அக்கட்சித் தலைவரின் மனநிலையை காட்டுகிறது. தலைவருக்கு தலைமை பண்பே இல்லை ‘ என்று தவெக-வை லெப்ட் & ரைட் வாங்கியுள்ளார் நீதிபதி.

தொடர்ந்து, கரூர் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பதிவிட்ட எக்ஸ் பதிவும் நீதிபதியிடம் காட்டப்பட்டது.

இதனை பார்த்து நீதிபதி, ‘ஒரு சின்ன வார்த்தை கூட பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?. போலீசார் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அரசு தரப்பில், ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி, ‘ஒரு புரட்சியை ஏற்படுத்துவது போல பதிவிட்டுள்ளார். இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தார்.

இறுதியாக கரூர் பெருந்துயரத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, இந்த குழுவில் மாவட்ட எஸ்பி-ஐ இணைத்து உத்தரவு பிறப்பித்தார்.

கரூர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் உடனடியாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீசருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளார் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஜோதிராமன் முன் இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பிலும், அரசு சார்பிலும் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து அரசு வாதத்தை ஏற்று இருவருக்கும் முன் ஜாமீன் வழங்க மறுத்து, மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் இருவரும் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம்.

https://minnambalam.com/judge-senthil-kumar-strongly-condemns-tvk-in-karur-stampede-tragedy-case/

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் – ஐகோர்ட்டு கண்டனம்!

Minnambalam-2025-10-03T182231.242.jpg

கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் தொடர்ந்த பொதுநல வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி 3 வழக்குகளும், அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. மேலும் தவெக நிர்வாகிகள் நிர்மல்குமார், புஸ்ஸி ஆனந்த் தரப்பில் தொடங்கப்பட்ட முன்ஜாமின் மனுக்கள், ஆதர்வ் அர்ஜூனா மனு உள்ளிட்ட 9 வழக்குகள் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் எந்த வித பொதுக் கூட்டங்களையும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நடந்த கூடாது என்று உத்தரவிட்டனர். பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் பட்சத்தில் மட்டும்தான் அனுமதி வழங்க வேண்டும் என்றும், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்த பிறகே பொது கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை இந்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில் சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து மனுவை முடித்து வைத்தது.

இதைத்தொடர்ந்து இழப்பீடு கோரிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதில் விஜய் மற்றும் அரசு தரப்பு 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த துயர சம்பவம் குறித்து விசாரணையின் போது நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தரப்பில் முன்ஜாமின் கோரிய மனு குறித்த விசாரணையின் போது பாதுகாப்பை பொருத்தவரை அரசுக்கு தான் முழு பொறுப்பு உள்ளது என வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் தலைமறைவானது ஏற்கத்தக்கது அல்ல விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.

விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் முன் ஜாமின் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் முன் ஜாமின் வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்த நீதிமன்றம் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் என இருவரின் முன் ஜாமின் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

https://minnambalam.com/high-court-branch-orders-in-karur-stampede-case/

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

557621124_10231837362897297_512726858299

முன்னாள் திமுக MLA சங்கரவள்ளியின் மகன் தான் நீதிபதியாம்.. அதனால் நியாயமா இருப்பார் என்று நம்புகிறேன்.

Sooriya Prakash
################# ##################

557596972_3228496693972620_7252265041467

நீதியரசர் இல்ல விழாவில் கலந்து கொண்ட நம்ம முதல்வர். நீதிதான் மறைந்தது விஜய் மறையவில்லை அவரின் புகழ் பலமடங்கு ஏறிக்கொண்டுள்ளது.

Er. K. Arumugam

இது மிக நியாயமான சந்தேகம்👍. அதான் அப்படி கறார் காட்டி இருக்கார் ஜட்ஜ் ஐயா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.