Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரி20 உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷ் குழாம்

05 Jan, 2026 | 05:12 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுடனான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ரி20 உலகக் கிண்ணத்துக்கான 15 வீரர்கள் கொண்ட குழாத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இந்தியாவுடன் அரசியல் முறுகல் நிலை ஏற்பட்டதாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்பிஸுர் ரஹ்மானை நீக்குமாறு இந்திய கிரிக்கெட் சபை அறிவித்ததாலும் பங்களாதேஷின் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியை கோரவேண்டும் என பங்களாதேஷ் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருள் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் இந்த முறுகல் நிலைக்கு மத்தியில் 15 வீரர்கள் கொண்ட ரி20 உலகக் கிண்ண குழாத்தை பங்களாதேஷ் அறிவித்துள்ளது.

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அரை இறுதிக்கு முன்னேறாமால் இருக்கும் பங்களாதேஷ் அந்த வரலாற்றை மாற்றி அமைக்க முயற்சிக்க உள்ளது.

ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் தலைவராக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

லிட்டன் தாஸுடன் தன்ஸித் ஹசன், சய்வ் ஹசன் ஆகியோர் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களாகவும், தௌஹித் ஹிர்தோய், ஷமிம் ஹொசெய்ன், நூருள் ஹசன் ஆகியோர் மத்திய வரிசை வீரர்களாகவும் அணியில் இடம்பெறுகின்றனர்.

பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில் வேகப்பந்துவீச்சாளர்களான முஸ்தாபிஸுர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத், சுழல்பந்துவிச்சாளர்களான மெஹிதி ஹசன், நசும் அஹ்மத், ரிஷாத் ஹொசெய்ன் ஆகியோர் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் சம்பியன்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுடன் நேபாளம், இத்தாலி ஆகிய அணிகளை சி குழுவில் பங்களாதேஷ் எதிர்த்தாடும்.

பங்களாதேஷின் போட்டிகள்

பெப்ரவரி 7: எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (கொல்கத்தா)

பெப்ரவரி 9: எதிர் இத்தாலி (கொல்கத்தா)

பெப்ரவரி 14: எதிர் இங்கிலாந்து (கொல்கத்தா)

பெப்ரவரி 17: எதிர் நேபாளம் (கொல்கத்தா)

பங்களாதேஷ் குழாம்

லிட்டன் தாஸ் (தலைவர்), தன்ஸித் ஹசன், பர்விஸ் ஹொசெய்ன் ஈமொன், சய்வ் ஹசன், தௌஹித் ஹிர்தோய், ஷமிம் ஹொசெய்ன், குவாஸி நூருள் ஹசன் சொஹான், ஷாக் மெnஹித ஹசன், ரஷாத் ஹொசெய்ன், நசும் அஹ்மத், முஸ்தாபிஸுர் ரஹ்மான், தன்ஸிம் ஹசன் ஷக்கிப், தஸ்கின் அஹ்மத், ஷய்ப் உதின், ஷொரிபுல் இஸ்லாம்.

bang_t20_wc_players_list.png

https://www.virakesari.lk/article/235288

  • 2 weeks later...
  • Replies 61
  • Views 2.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    பெப் 07 தானே ஆரம்பம். கிறிஸ்மஸுக்கு முன்னர் கேள்விக்கொத்து தயாரிக்கலாம். மழையால்☔️ எத்தனை போட்டிகள் தடைப்படும் என்றும் ஒரு கேள்வி போடலாம்.🤣 20 பேர் வரை கலந்துகொண்டால்தான் சுவாரஸ்யம்😁

  • கந்தப்பு
    கந்தப்பு

    கிருபன் சிறப்பாக கடந்த T20 போட்டியினை நடாத்தியதினால் அவரை மீண்டும் இம்முறையும் போட்டியை நடாத்தும் படி வேண்டிகொள்கிறேன்.

  • சிம்பாவே அணி இலங்கையணிக்கு சவாலாக உருவெடூத்துள்ளது, சிம்பாவே அணியும் இலங்கை அணி போல நிண்டகாலமாக விளையாடும் அணிதான், புதிதாக வரும் அணிகள் வெகு வேகமாக முன்னேறிவருகிறார்கள் சில அணிகள் பின் தங்கி விடுக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரி20 உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷின் நிலைப்பாடு குறித்து ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது

19 Jan, 2026 | 06:00 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு சென்று ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க பங்களாதேஷுக்கு ஜனவரி 21வரை (நாளைமறுதினம்) ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது.

டாக்காவில் கடந்த சனிக்கிழமை (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போது பங்களாதேஷுக்கு ஐசிசி இந்த காலக்கெடுவை விதித்தது என அறியக்கிடைத்ததாக கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது.

ஐசிசிக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் இடையில் ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தின்போது, தனது ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளை  விளையாடத்  தயார் எனவும் ஆனால் அவை இந்தியாவுக்கு வெளியே விளையாடப்படவேண்டும்   எனவும்  பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மீண்டும் தெரிவித்திருந்தது.

ரி10 உலகக் கிண்ணத்தை இணை வரவேற்பு நாடாக நடத்தும் இலங்கை அவர்களது மாற்று இடமாகும்.

இந்தியாவுக்கு பயணிப்பதிலும்  அங்கு விளையாடுவதிலும் பாதுகாப்பு கரிசனைகள் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் சி குழுவில் இடம்பெறும் பங்களாதேஷின் போட்டி அட்டவணை மாற்றப்படமாட்டாது என ஐசிசி உறுதிபடத் தெரிவித்துள்ளது.

தங்களது கரிசனை குறித்து ஜனவரி 4ஆம் திகதி பங்களாதேஷ் முதல் தடவையாக ஐசிசியுடன் தொடர்பாடலில் ஈடுபட்டதிலிருந்து இந்த பிணக்கு கடந்த 3 வாரங்களாகத் தொடர்கிறது.

பங்களாதேஷ் தனது ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை கொல்கத்தாவில் பெப்ரவரி 7ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

அதே மைதானத்தில்தான் இத்தாலியை பெப்ரவரி 9ஆம்  திகதியும் இங்கிலாந்தை பெப்ரவரி 14ஆம் திகதியும் பங்களாதேஷ் சந்திக்கவுள்ளது.

நேபாளத்துக்கு எதிரான பங்களாதேஷின் கடைசி போட்டி மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஒருவேளை, ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற இந்தியா செல்வதை  பங்களாதேஷ்   முற்றாக மறுத்தால் 1996இல் அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும்   நடந்த கதியை பங்களாதேஷ் எதிர்கொள்ள நெரிடும் என கருதப்படுகிறது.

அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி 1996 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இலங்கைக்கு செல்ல முடியாது என விடாப்பிடியாக இருந்தன. இதனை அடுத்து அவுஸ்திரேலியா, மேற்கிற்தியத் தீவுகள் ஆகியவற்றுடனான இலங்கையின் போட்டிகளுக்கு போட்டியின்றி தலா 3 வெற்றிப் புள்ளிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை அடுத்து 1996 உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே இலங்கை 6 வெற்றிப் புள்ளிகளை சம்பாதித்துக்கொண்டது.

அந்த வருடம் தோல்வி அடையாத அணியாக இலங்கை உலக சம்பியனாகி இருந்தது.

1801__bangladesh.png

https://www.virakesari.lk/article/236459

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரி20 உலகக் கிண்ண நெருக்கடி: பங்களாதேஷுக்கு ஆதரவாக ஐசிசிக்கு பாகிஸ்தான் கடிதம்

21 Jan, 2026 | 05:44 PM

image

(நெவில் அன்தனி)

ரி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷின் பங்கேற்பு குறித்து இன்றுவரை காலக்கெடு விதித்திருந்த ஐசிசி, அதன் நிலைப்பாட்டை இன்று வெளியிடத் தயாராகி வருகிறது.

இந் நிலையில்,  இந்தியாவில் விளையாடுவதில்லை என்ற பங்களாதேஷின் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனுப்பியுள்ளது.

இந்தக் கடிதத்தின் நகல்களை ஐசிசி பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கும் பாகிஸ்தான் அனுப்பிவைத்துள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக பங்களாதேஷின் உலகக் கிண்ணப் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது.

இந் நிலையில், அதன் கோரிக்கை தொடர்ப்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க இன்றைய தினம் பணிப்பாளர் சபை கூட்டத்திற்கு ஐசிசி அழைப்பு விடுத்திருந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனுப்பிவைத்துள்ள இந்தக் கடிதம் பலரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருக்கக்கூடும்.

ஆனால், ஐசிசியின் தீர்மானத்திற்கு அந்தக் கடிதம் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரியவருகிறது.

இந்தியாவுடன் ரி20 உலகக் கிண்ண  இணை ஏற்பாட்டாளரான இலங்கையில் பங்களாதேஷின் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக போட்டி அட்டவணையை மாற்ற முடியாது என்பதில் ஐசிசி உறுதியாக இருக்கிறது.

இவ்விடயத்தில் உறுதியாக இருக்கும் ஐசிசி, தனது நிலைப்பாட்டை பங்களாதேஷுக்கு கடந்த வார கலந்துரையாடலின்போது அறிவித்திருந்தது.

https://www.virakesari.lk/article/236629

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு வெளியே டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்த வங்கதேசம் கோரிக்கை – ஐசிசி பதில் என்ன?

வங்கதேச கிரிக்கெட்

பட மூலாதாரம்,Getty Images

டி20 உலகக் கோப்பையில் தாங்கள் பங்கேற்கும் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே நடத்த வேண்டும் என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (BCB) கோரிக்கை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், போட்டிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட மைதானங்களிலேயே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசியிடம் வங்கதேசம் கோரிக்கை விடுத்திருந்தது.

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இந்த மேல்முறையீட்டிற்குப் பிறகு, அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆய்வு செய்ததாகவும், இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய மாற்றங்களைச் செய்வது சாத்தியமில்லை என்று முடிவு செய்யப்பட்டதாகவும் ஐசிசி தற்போது கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/live/c5y34pvmg43t?post=asset%3Adcd7eb0c-8836-41a7-a9ab-f95644057b3b#asset:dcd7eb0c-8836-41a7-a9ab-f95644057b3b

ஐசிசி ரி20 ஆடவர் உலகக் கிண்ணத்திற்காக வெளியிடப்பட்ட போட்டி அட்டவணையை தொடர சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தீர்மானம்

Published By: Vishnu

21 Jan, 2026 | 09:19 PM

image

(ஐசிசி ஊடக அறிக்கை)

ஐசிசி ஆடவர் ரி20  உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நடைபெறும் எனவும் பங்ளாதேஷ் அணியின் போட்டிகள் திட்டமிட்டவாறு இந்தியாவில் நடைபெறும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை புதன்கிழமை (21) மாலை உறுதிப்படுத்தியது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரியதைத் தொடர்ந்து, எதிர்கால வழிமுறை குறித்து கலந்தாலோசிக்க கூட்டப்பட்ட ஐசிசி பணிப்பாளர்கள் சபை கூட்டத்திற்குப் பிறகு வீடியோ-கலந்துரையாடல் மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதென ஐசிசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போட்டி நடைபெறும் எந்த இடங்களிலும் பங்களாதேஷ் வீரர்கள், ஊடகவியலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை குறித்த சுயாதீன மதிப்பாய்வுகள் உட்பட நடத்தப்பட்ட அனைத்து பாதுகாப்பு மதிப்பீடுகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உலகக் கிண்ணம் நெருங்கிவரும் காலப்பகுதியில் மாற்றங்களைச் செய்வது சாத்தியமில்லை என்றும், நம்பக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத சூழ்நிலையில் அட்டவணையை மாற்றுவது எதிர்கால ஐசிசி நிகழ்வுகளின் மகத்துவத்தை பாதிப்பதுடன் உலகளாவிய நிர்வாக அமைப்பாக அதன் நடுநிலைமையைக் குறைத்து மதிப்பிடச் செய்துவிடும் என்ற ஒரு நிலையை ஏற்படுதக்கூடும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த முட்டுக்கட்டையைத் தீர்க்கும் முயற்சியில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஐ.சி.சி நிர்வாகம் தொடர்ச்சியான கடிதத் தொடர்புகளில் மற்றும் சந்திப்புகளில் ஈடுபட்டது. அத்துடன் போட்டிகளுக்கான பாதுகாப்புத் திட்டம் குறித்த விரிவான தகவல்களையும்  பங்களாதேஷ் கிரிக்கெட்   சபையுடன் ஐசிசி பகிர்ந்து கொண்டது. இதில் கூட்டாட்சி மற்றும் மாநில சட்ட அமுலாக்கல் ஆதரவு ஆகியவை அடங்கும்.

இது தொடர்பாக ஐ.சி.சி. பேச்சாளர் தெரிவிக்கையில்,

'கடந்த பல வாரங்களாக, போட்டியில் பங்களாதேஷின் பங்கேற்பை தெளிவான நோக்கத்துடன் உறுதிப்படுத்துவதற்காக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் நிலையான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஐசிசி ஈடுபட்டது. இந்த காலகட்டத்தில், ஐ.சி.சி சுயாதீன பாதுகாப்பு மதிப்பீடுகள், விரிவான திறந்தவெளி பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் வரவேற்பு நாட்டின் (Host country) அதிகாரிகளிடமிருந்து முறையான உத்தரவாதங்கள் உள்ளிட்ட விரிவான உள்ளீடுகளைப் பகிர்ந்து கொண்டது. இவை அனைத்தும் இந்தியாவில் பங்களாதேஷ் அணியினரின் பாதுகாப்பு அல்லது உயிர்களுக்கு நம்பக்கூடிய அல்லது உறுதிப்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தொடர்ந்து முடிவு செய்தன.

'இந்த முயற்சிகளுக்கு மத்தியிலும்  பங்களாதேஷ் கிரிக்கெட் சபை   தனது நிலைப்டில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தது. போட்டியில் பங்கேற்பதை அதன் வீரர்களில் ஒருவரின் உள்நாட்டு லீக்கில் ஈடுபடுவது தொடர்பான ஒற்றை, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தொடர்பில்லாத சம்பவத்துடன் மீண்டும் மீண்டும் தொடர்பு படுத்தியது. இது போட்டியின் பாதுகாப்பு கட்டமைப்பிலோ அல்லது ஐ.சி.சி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதை நிர்வகிக்கும் நிபந்தனைகளிலோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

'ஐ.சி.சி.யின் இடம் மற்றும் திட்டமிடல் முடிவுகள் புறநிலை அச்சுறுத்தல் மதிப்பீடுகள், வரவேற்பு  நாட்டு அதிகாரிகளின் உத்தரவாதங்கள் மற்றும் போட்டியின் ஒப்புக்கொள்ளப்பட்ட பங்கேற்பு விதிமுறைகள் ஆகியவற்றால் வழிநடத்தப்படுகின்றன, அவை உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் 20 அணிகளுக்கும் ஒரே விதமாகப் பொருந்தும். பங்களாதேஷ் அணியின் பாதுகாப்பைப் பாதிக்கும் எந்தவொரு சுயாதீனமான பாதுகாப்பு கண்டுபிடிப்புகளும் இல்லாத நிலையில், ஐ.சி.சி. போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது. அவ்வாறு செய்வது உலகெங்கிலும் உள்ள மற்ற அணிகள் மற்றும் ரசிகர்களுக்கு குறிப்பிடத்தக்க தளவாட மற்றும் திட்டமிடல் விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் ஐ.சி.சி நிர்வாகத்தின் நடுநிலைமை, நியாயத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆபத்துடன் கூடிய நீண்டகால சவால்களையும் உருவாக்கும்.

'ஐ.சி.சி நல்லெண்ணத்துடன் செயல்படுவதற்கும், நிலையான தரநிலைகளை நிலைநிறுத்துவதற்கும், உலகளாவிய விளையாட்டின் கூட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது' என்றார். -- (என்.வீ.ஏ.)

https://www.virakesari.lk/article/236634

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

ஐசிசி ஆடவர் ரி20  உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நடைபெறும் எனவும் பங்ளாதேஷ் அணியின் போட்டிகள் திட்டமிட்டவாறு இந்தியாவில் நடைபெறும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை புதன்கிழமை (21) மாலை உறுதிப்படுத்தியது.

நல்ல முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ் விளையாடுவது இன்னும் இழுபறியில் உள்ளது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டி-20 உலக கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தானும் வௌியேறுகிறதா?

Jan 24, 2026 - 07:47 PM

டி-20 உலக கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தானும் வௌியேறுகிறதா?

இந்தியாவுக்குச் செல்ல மறுத்த பங்களாதேஷ் அணியை 2026 டி20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ள நிலையில், இத்தொடரில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்தும் தற்போது நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. 

இது குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். 

பங்களாதேஷ் நீக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கருத்துத் தெரிவித்த நக்வி, ஐ.சி.சி இந்தியாவுக்குச் சாதகமாக இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாகவும், பங்களாதேஷிற்கு இழைக்கப்பட்டது அநீதியாகும் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். 

உலகக்கிண்ணப் பங்கேற்பு தொடர்பான எமது நிலைப்பாடு பாகிஸ்தான் அரசாங்கம் எனக்கு வழங்கும் அறிவுறுத்தலுக்கு அமையவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் தற்போது நாட்டில் இல்லை. அவர் திரும்பியதும் இறுதி முடிவை அறிவிப்பேன். இது அரசாங்கத்தின் முடிவு. நாங்கள் ஐ.சி.சி-க்கு அல்ல, அரசாங்கத்திற்கே கட்டுப்படுவோம் என்று அவர் கூறினார். 

கடந்த ஒரு வாரமாக, போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரிய பங்களாதேஷிற்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்கி வருகிறது. 

கடந்த வாரம் நடைபெற்ற ஐ.சி.சி கூட்டத்தில், பங்களாதேஷின் நிலைப்பாட்டிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மட்டுமே ஆதரவு வழங்கியது. 

இத்தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடத்தப்படுகின்ற போதிலும், பங்களாதேஷின் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே திட்டமிடப்பட்டிருந்தன. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அறிவுறுத்தலின் பேரில் ஐ.பி.எல். 2026 குழாமை விட்டு பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜனவரி 3ஆம் திகதி உத்தரவிடப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, இந்தியாவில் விளையாடுவது தமக்கு பாதுகாப்பானதல்ல என பங்களாதேஷ் கூறியிருந்தது. 

பங்களாதேஷின் கோரிக்கையைத் தொடர்ந்து நிராகரித்த ஐ.சி.சி, அட்டவணையை அப்படியே ஏற்பது அல்லது தொடரிலிருந்து நீக்கப்படுவது என இவ்வாரத் தொடக்கத்தில் நிபந்தனை விதித்தது. 

பங்களாதேஷ் தமது முடிவில் உறுதியாக இருந்ததால், இன்று அவர்களைத் தொடரிலிருந்து நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தைச் சேர்ப்பதாக ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 

இந்த முடிவை விமர்சித்த நக்வி, "பங்களாதேஷிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி இரட்டை நிலைப்பாட்டை எடுக்க முடியாது. ஒரு நாட்டுக்கு, இந்தியா அவர்கள் நினைத்ததைச் செய்யவும், மற்றவர்கள் அதற்கு நேர்மாறாகச் செய்யவும் வற்புறுத்த முடியாது. இதனால்தான் நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். பங்களாதேஷ் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய பங்குதாரர், அவர்கள் உலகக்கிண்ணத்தில் விளையாட வேண்டும், என்றார். 

பங்களாதேஷிற்கு ஆதரவாக பாகிஸ்தான் உலகக்கிண்ணத்தைப் புறக்கணிக்கக்கூடும் என செய்திகள் வெளியாகிய போதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதனை உறுதிப்படுத்த மறுத்துள்ளது. 

பாகிஸ்தான் அரசாங்கம் விளையாட வேண்டாம் எனக் கூறினால், ஸ்காட்லாந்திற்குப் பிறகு ஐ.சி.சி ஒருவேளை 22வது அணியைக் கொண்டுவர வேண்டியேற்படும். முடிவு அரசாங்கத்திடமே உள்ளது என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmkse9c1z04d1o29nq7abgj45

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக்கோப்பையை புறக்கணித்தால் பாகிஸ்தான் நெருக்கடியில் தள்ளப்படுமா?

பாகிஸ்தான், ஐசிசி, டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,AFP via Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது தொடர்பான அனைத்து வாய்ப்புகளும் கைவசம் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃபைச் சந்தித்த பிறகு பேசிய அவர், இந்த விவகாரத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

"பிரதமருடனான சந்திப்பு நல்லபடியாக இருந்தது. ஐசிசி விவகாரம் பற்றி அவரிடம் விளக்கினேன். அனைத்து வாய்ப்புகளையும் கைவசம் வைத்துக் கொண்டு இதனை தீர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்," என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விமர்சித்திருந்தது. பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கின்றன.

இந்தத் தொடரில் வங்கதேசம் சேர்க்கப்படுவதற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தத் தொடரில் கலந்து கொள்ளுமா என்பது உறுதியற்ற நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் அரசு அதுகுறித்து முடிவு எடுக்கும் என மொஹ்சின் நக்வி கூறியுள்ளார்.

பாகிஸ்தான், ஐசிசி, டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,X

படக்குறிப்பு,பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃபை சந்தித்த புகைப்படத்தை மொஹ்சின் நக்வி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்குமா?

மொஹ்சின் நக்வியின் கருத்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கோபமடைந்துள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்துள்ள செய்தியின்படி, இந்தத் தொடரில் விளையாட பாகிஸ்தான் மறுத்தால் ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.

வங்கதேசம் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், இந்தத் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் மொஹ்சின் நக்வி பேசியதாக பாகிஸ்தான் செய்தித்தாளான டான் தெரிவிக்கிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

"ஐசிசி வாரிய கூட்டத்திலும் நான் இதையே தான் கூறினேன். ஒரு நாடு தனக்கு வேண்டுகிற முடிவை எடுப்பதோடு மற்ற நாடு என வருகிறபோது அதற்கு நேர்மாறாக செயல்படுவது என்கிற இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படக்கூடாது. வங்கதேசம் ஒரு முக்கிய் பங்குதாரர். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது," என அவர் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்குமா என்கிற கேள்விக்குப் பதிலளித்த நக்வி, "இந்த முடிவை பாகிஸ்தான் அரசு எடுக்கும். பிரதமர் திரும்பி வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்." என்றார்.

பாகிஸ்தானின் மாற்றுத் திட்டம் பற்றிய கேள்விக்கு, "முதலில் முடிவு வரட்டும். எங்களிடம் பிளான் ஏ,பி,சி மற்றும் டி உள்ளன." என்று பதிலளித்தார்.

எனினும் இந்தத் தொடரிலிருந்து பாகிஸ்தான் விலகினால் கணிசமான இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும்.

பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்குமா?

பாகிஸ்தான், ஐசிசி, டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,பாகிஸ்தான் பங்கேற்பது தொடர்பான முடிவை அந்நாட்டு அரசு எடுக்கும் என மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் விளையாட மறுத்தால் ஐசிசி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என கிரிக்கெட் வாரிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"சர்வதேச அணிகளுடன் முத்தரப்பு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதற்கு வெளிநாட்டு வீரர்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட மாட்டாது. ஆசிய கோப்பை தொடரிலிருந்தும் பாகிஸ்தான் வெளியேற்றப்படலாம்," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசியிடம் இருந்து பாகிஸ்தானுக்கு வரும் ஆண்டு வருமானமும் இதனால் பாதிக்கப்படலாம். "பாகிஸ்தான் விளையாட மறுத்தால் ஐசிசியின் வருவாய் பகிர்வு நிறுத்தப்படலாம்," என வாரிய அலுவலர்கள் தெரிவிப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு, நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கான வருவாய் பகிர்வு முடிவு செய்யப்பட்டபோது ஐசிசியின் ஒட்டுமொத்த வருமானம் 600 மில்லியன் டாலராக இருந்தது.

2024-2027 காலகட்டத்தில் பிசிசிஐ-க்கு 38.5% வருவாயும், இங்கிலாந்திற்கு 6.89% வருவாயும், ஆஸ்திரேலியாவிற்கு 6.25% வருவாயும் பகிர்ந்து கொடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 5.75% வருவாய் பகிர்வுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நான்காவது இடத்தில் இருக்கிறது. இதன் தோராயமான மதிப்பு 34.51 மில்லியன் டாலர்.

முந்தைய சுழற்சியில் பாகிஸ்தானின் பங்கு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஐசிசியின் வருவாய் பகிர்வு விதிமுறைகளில் தெளிவு இல்லை என பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என பாகிஸ்தான் கூறுகிறது. தற்போது உலக கோப்பையிலிருந்து விலகிக் கொண்டால் ஐசிசியில் இருந்து வழங்கப்படும் வருவாய் நிறுத்தப்படலாம். இது மேலும் நிதி நெருக்கடியை உருவாக்கக்கூடும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமை நல்ல நிலையில் இல்லை என்கிறார் மூத்த விளையாட்டு செய்தியாளரும் எழுத்தாளருமான நீரு பாட்டியா.

"ஐசிசி வருவாய் பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமாகிறது. இந்தத் தொடரை பாகிஸ்தான் புறக்கணித்தால் இத்தகைய பெரிய அளவிலான தொகை கிடைக்காது. அது இல்லை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்படுவது கடினமாகிவிடும்." என்றார்.

"இன்று பாகிஸ்தான் புறக்கணித்தால் எதிர்வர இருக்கும் ஐசிசி உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டில் இருந்தும் விலகும் நிலை உருவாகும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் விளையாடாவிட்டால் ஐசிசிக்கு இழப்பு ஏற்படுமா?

பாகிஸ்தான், ஐசிசி, டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,AFP via Getty Images

இந்தத் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்க மறுத்தால் ஐசிசிக்கும் இழப்பு ஏற்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் 2027 வரை பாகிஸ்தானில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை முறையே பிடிவி (பாகிஸ்தான் தொலைக்காட்சி) மற்றும் மைகோவிற்கு ஐசிசி வழங்கியது.

ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கான தொகையை ஐசிசி வெளியிடவில்லை. எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தம் முறிக்கப்பட்டால் ஐசிசிக்கு இழப்பு ஏற்படும். ஆனால் அந்த தொகை எவ்வளவு என்பதை கணக்கிடுவது கடினம்.

குறிப்பாக உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் விளையாடவில்லை என்றால் அது ஐசிசி வருவாயை கடுமையாகப் பாதிக்கும். பாகிஸ்தான் விளையாடினால் நிச்சயம் இந்தியா உடன் ஒரு போட்டி இருக்கும். ஐசிசிக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் போட்டிகளில் அதுவும் ஒன்று.

ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மிகவும் முக்கியமாகிறது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான பசித் அலி தனது தி கேம் பிளான் என்கிற யூடியூப் சேனலில் பேசுகையில், "பாகிஸ்தான் விளையாடவில்லை என்றால் போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனம் பெரும் சிக்கலைச் சந்திக்கும். பாகிஸ்தான் வெளியேறினால் எந்த அணி அதன் இடத்தை நிரப்பும். வேறு ஒரு அணியுடன் இந்திய அணி விளையாடினால் அந்தப் போட்டி இந்தியா-பாகிஸ்தான் அளவிற்கு பார்வையாளர்களை ஈர்க்குமா?" எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ரூ.10,000 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளில் கூட்டமைப்பின் (எஃப்ஐசிசிஐ) தரவுகள் தெரிவிக்கின்றன.

ஐசிசிக்கு இழப்பு ஏற்படுவது யதார்த்தமானது எனக் கூறும் நீரு பாட்டியா, "இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப்பிலும் இழப்பு ஏற்படும்." எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அந்த ஆபத்தான முடிவை எடுக்குமா?

பாகிஸ்தான், ஐசிசி, டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,AFP via Getty Images

இழப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்தத் தொடரிலிருந்து விலகும் ஆபத்தான முடிவை பாகிஸ்தான் எடுக்குமா என்கிற கேள்வி எழுகிறது.

"வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு எங்களின் முழு அனுதாபங்களும் உள்ளன. ஐசிசியின் கடுமையான நடத்தையால் நாங்களும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். ஆனால் உலக கோப்பையில் விளையாடப் போவதில்லை என்கிற கேள்விக்கே இடமில்லை." என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக நேஷனல் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.

"ஐசிசி உறுப்பு நாடுகள் விளையாடும் ஒப்பந்தத்திற்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். கடந்த ஆண்டு பிசிசிஐ உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். 2027 வரை அனைத்து ஐசிசி நிகழ்வுகளையும் கலப்பு முறையில் நடத்தும் முடிவுக்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நேரத்தில் அதிலிருந்து விலகிச் செல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை," என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரை புறக்கணிக்கும் யோசனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான வாசிக் அக்ரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

"வங்கதேசம் விளையாடவில்லை என்பதற்காக பாகிஸ்தான் உலக கோப்பையை ஏன் புறக்கணிக்க வேண்டும்? பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு வங்கதேசம் என்ன செய்துள்ளது? இதில் எந்த அர்த்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தான் தன் மீது கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டில் கவனம் செலுத்தி உலக கோப்பை வெல்ல வேண்டும்," என்றார் வாசிம் அக்ரம்.

இந்த நேரத்தில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் முடிவை பாகிஸ்தானால் சமாளிக்க முடியாது என்கிறார் நீரு பாட்டியா.

"ஐசிசி தொடரில் கலந்து கொள்வதன் மூலம் பங்கேற்பாளர் கட்டணம் பெற முடியும். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகவும் முக்கியமானது. பாகிஸ்தானில் நடைபெறும் உள்நாட்டு போட்டிகளுக்கு நிறைய அணிகள் வருவதில்லை. அதனால் ஐசிசி தொடர் என்பது அவர்களுக்கு மிகப் பெரிய நிகழ்வு. பாகிஸ்தான் அந்த முடிவை எடுத்தாலும் ஐசிசியில் அதன் நிலை பலவீனப்பட்டு போகும். ஏனென்றால் பாகிஸ்தானிற்கு ஆதரவாக எந்த உறுப்பினரும் வர மாட்டார்கள்." எனத் தெரிவித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg1zdpnyvmo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்கும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடாது

Published By: Vishnu

01 Feb, 2026 | 09:29 PM

image

(நெவில் அன்தனி)

இந்த வருட ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் எனவும் ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாது எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

pak_will_not_play_india_in_the_t20_wc.pn

சுமார் ஒரு வாரம் நீடித்த நிச்சயமற்றத் தன்மைக்கு பின்னர் பாகிஸ்தான் அரசாங்கம் தனது அணியை ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற அனுமதிக்க இன்று முடிவுசெய்தது.

ஆனால், பெப்வரி 15ஆம் திகதி இந்தியாவை எதிர்த்தாடாமல் இருக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.

தனது பரம வைரியான இந்தியாவை பி குழுவுக்கான முதலாவது சுற்றில் பாகிஸ்தான் எதிர்த்தாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

'ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் பங்குபற்றுவதற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக பெப்ரவரி 15ஆம் திகதி அட்டவணை படுத்தப்பட்டுள்ள போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களம் இறங்காது' என பாகிஸ்தான் அரசாங்கத்தின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து பங்களாதேஷ் விலகியதை அடுத்து ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்கும் நிலை தோன்றியதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரிபை கடந்த திங்களன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரும் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி சந்தித்தார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விடயம் குறித்து பிரதமரிடம் விளக்கியதாக இந்த சந்திப்பின் பின்னர் குறிப்பிட்ட நக்வி, இது தொடர்காக வெள்ளிக்கிழமை அல்லது திங்களன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்தை இணைத்ததை அடுத்து பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அயல் நாடுகளான இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் அரசியல் உறவுகளில் கசப்புணர்வு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணத்தைக் காட்டி இந்தியாவுக்கு செல்ல முடியாது என பங்களாதேஷ் அறிவித்தது. அதன் பின்னர் பங்களாதேஷுக்கு பதிலாக உலகக் கிண்ணத்தில் ஸ்கொட்லாந்து இணைத்துக்கொள்ளப்பட்டதாக ஜனவரி 24ஆம் திகதி ஐசிசி அறிவித்தது.

தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் பங்களாதேஷ் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதனை நிராகரித்த ஐசிசி, உலகக் கிண்ணப் போட்டி நெருங்கிவரும் நிலையில் இடத்தை மாற்றுவதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்திருந்தது.

https://www.virakesari.lk/article/237579

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தின் சவாலை முறியடித்து பாகிஸ்தானுக்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார் பாஹீம் அஷ்ரப்

07 Feb, 2026 | 05:20 PM

image

(எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று சனிக்கிழமை (07) நடைபெற்ற பத்தாவது ஐசிசி ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் நெதர்லாந்தின் சவாலை முறியடித்து 3 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் பாகிஸ்தான் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

போட்டியின் 18ஆவது ஓவர் முடிவில் தோல்வியின் விளிம்பிலிருந்த பாகிஸ்தான் அணியை பாஹீம் அஷ்ரப்பின் கடைசிநேர அதிரடி மீட்டெடுத்தது.

பாகிஸ்தானில் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

19ஆவது ஓவரில் வன் பீக்கின் பந்துவீச்சில் 6, 2, 6, 0, 6, 4 என 24 ஓட்டங்களைக் குவித்த பாஹீம் அஷ்ரப் அணியை வெற்றிப்பாதையில் இட்டார்.

அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பாஹீம் அஷ்ரப் கொடுத்த இலகுவான பிடியை ஓ'டௌட் தவறிவிட்டது ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக திருப்பு முனையாக அமைந்தது.

இங்கிலாந்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் விளையாட்டரங்கில் 2016 நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் முதல் நான்கு பந்துகளில் கார்லோஸ் ப்றத்வெய்ட் குவித்த சிக்ஸ்களை பாஹீம் அஷ்ரப்பின் அதிரடி நினைவுபடுத்தியது.

நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. சய்ம் அயூப் (24), அணித் தலைவர் சல்மான் அலி அகா (12) ஆகிய இருவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

மறுபக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சாஹிப்ஸதா பர்ஹான் 47 ஓட்டங்களைப் பெற்றதுடன் பாபர் அஸாமுடன் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அதுவே முழுப் போட்டியிலும் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

பர்ஹான் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் பாபர் அசாம் (15) களம் விட்டகன்றார்.

உஸ்மான் கான், ஷதாப் கான், மொஹம்மத் நவாஸ் ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்தனர்.

இதன் காரணமாக 17ஆவது ஓவரில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் கடைசி 3 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 33 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன் காரணமாக நெதர்லாந்தின் கை ஓங்கி இருந்தது.

எனினும் லோகன் வன் பீக் வீசிய 19ஆவது ஓவரில் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய பாஹீம் அஷ்ரப் 24 ஓட்டங்களை விளாசி ஆட்டத்தின் பிடியை பாகிஸ்தான் பக்கம் திருப்பினார்.கடைசி ஓவரில் ஷஹீன் ஷா அப்றிடி, பாஹீம் அஷ்ரப் ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவைப்பட்ட மிகுதி 4 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பாஹீம் அஷ்ரப் 29 ஓட்டங்களுடனும் ஷஹீன் ஷா அப்றிடி 5 ஓட்டங் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் போல் வன் மீக்கரன் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆரியன் டட் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

நெதர்லாந்தின் முன்வரிசை மற்றும் மத்திய வரிசை வீரர்களில் நால்வரே சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினர்.

இதன் பலனாக 15ஆவது ஓவரில் நெதர்லந்து 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.

ஆனால், அதன் பின்னர் கடைசி 6 விக்கெட்கள் 21 ஓட்டங்களுக்கு சரிந்தது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (37), பாஸ் டி லீட் (30), மைக்கல் லெவிட் (24), கொலின் அக்கமன் (20) ஆகியோரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சல்மான் மிர்ஸா 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சய்ம் அயூப் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்ரார் அஹ்மத் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: பாஹீம் அஷ்ரப்.

MF1A4395.jpg

_G6A5741.jpg

_G6A6339.jpg

(பட உதவி: எஸ். நாதன்)

https://www.virakesari.lk/article/238093

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெட்மயர் அதிரடி அரைச் சதம், ஷெப்பர்ட் ஹெட்-ட்ரிக்குடன் 5 விக்கெட் குவியல்; மேற்கிந்தியத் தீவுகள் 35 ஓட்டங்களால் வெற்றி

Published By: Vishnu

07 Feb, 2026 | 07:37 PM

image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (07) நடைபெற்ற சி குழுவுக்கான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

0702_shimron_hetmyer.png

ஷிம்ரன் ஹெட்மயர்  குவித்த அதிரடி அரைச் சதம், ரொமாரியோ ஷெப்பர்ட் பதிவு செய்த ஹெட்-ட்ரிக் என்பன மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிபெறச் செய்தன.

0702_romario_shepherd.png

இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு ஸ்கொட்லாந்து தகுதிபெற்றிருக்கவில்லை. ஆனால், இந்தியாவில் தங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என தெரிவித்து பங்களாதேஷ் விலகிக்கொண்டதால் பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்து சி குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஸ்கொட்லாந்து ஓரளவு திறமையை வெளிப்படுத்தியது.

இன்றயை போட்டியில் முதலில் துடப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்ளைப் பெற்றது.

ப்றெண்டன் கிங் (35), அணித் தலைவர் ஷாய் ஹோப் (19) ஆகிய இருவரும் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால்,  இருவரும்  4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர்.

ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 2 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 64 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் ரோவ்மன் பவல் 24 ஓட்டங்களையும் ஷேர்பெய்ன் ரதர்பர்ட் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்றட் கியூரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சபியான் ஷெரிப், ஒலிவர் டேவிட்சன், மைக்கல் லீஸ்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் (42), டொம் ப்றூஸ் (35) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

ஆனால், ரிச்சி பெறிங்டன் உட்பட கடைசி 7 விக்கெட்கள் வெறும் 32 ஓட்டங்ளுக்கு சரிந்ததால் ஸ்கொட்லாந்து தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் அவர்கள் இருவரைவிட ஜோர்ஜ் மன்சே (19), மார்க் வொட் (15), மெத்யூ க்ரொஸ் (11) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முதலாவது ஹெட் - ட்ரிக்கையும் முதலாவது 5 விக்கெட் குவியலையும் ரொமாரியோ ஷெப்பர்ட் பதிவு செய்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

அத்துடன் அவர் ஒரே ஓவரில் நால்வரை ஆட்டம் இழக்கச் செய்தார்.

3 ஓவர்கள் பந்துவீசிய ரொமாரியோ ஷெப்பர்ட் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சிரேஷ்ட வீரரும் முன்னாள் தலைவருமான ஜேசன் ஹோல்டர் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஷிம்ரன் ஹெட்மயர்

https://www.virakesari.lk/article/238095

அமெரிக்காவுடனான போட்டியில் அரைச் சதம் குவித்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டு வெற்றிக்கு வித்திட்ட சூரியகுமார்  யாதவ்

Published By: Vishnu

07 Feb, 2026 | 11:33 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (07) இரவு நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் சூரியகுமார் யாதவ் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது.

0702_suriyakumar_yadav.jpg

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.

ஆனால், இந்த மொத்த எண்ணிக்கையை இந்தியா இலகுவாக அடையவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானை சுப்பர் ஓவரில் ஐக்கிய அமெரிக்கா வீழ்த்தியது போன்று இந்தியாவும் எதிர்நோக்குமோ என்ற ஒரு நிலை இந்தப் போட்டியில் காணப்பட்டது.

இப் போட்டியின் 13ஆவது ஓவரில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்ற பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது.

அதிரடிக்கு பெயர்பெற்ற அபிஷேக் ஷர்மா (0), இஷான் கிஷான் (20), திலக் வர்மா (25), ஷிவம் டுபே (0), ரின்கு சிங் (6), ஹார்திக் பாண்டியா (5) ஆகிய ஆறு பேரும் ஆட்டம் இழந்திருந்தனர்.

இதன் காரணமாக இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக அமெரிக்கா விளங்கியது.

ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் மறு பக்கத்தில் சூரியகுமார் யாதவ் தலைவருக்கே உரித்தான பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டெடுத்தார்.

ஆரம்பத்தில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் ஆடுகளத்தின் தன்மையை நன்கு புரிந்துகொண்ட பின்னர் அதிரடியில் இறங்கினார்.

13ஆவது ஓவர் நிறைவில் 22 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்றிருந்த யாதவ், 20 ஓவர்கள் நிறைவில் அடுத்த 27 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்று 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இதில் 10 பவுண்டறிகளும் 4 சிக்ஸ்களும் அடங்கி இருந்தன.

இதனிடையே 14 ஓட்டங்களைப் பெற்ற அக்சார் பட்டேலுடன் 8ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களை சூரியகுமார் யாதவ் பகிர்ந்திருந்தார்.

பந்துவீச்சில் ஷெட்லி வன் ஷோக்வைக் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹர்மீத் சிங் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் மத்திய வரிசையில் மிலிந்த் குமார் (34), சஞ்சய் கிரிஷ்ணமூர்த்தி (37), ஷுபம் ரஞ்சேன் (37) ஆகிய மூவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

மிலிந்த் குமார், சஞ்சய் கிரிஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இந்த இணைப்பாட்டமானது முழு போட்டியிலும் சிறந்த இணைப்பாட்டமாக பதிவானது.

எனினும் அமெரிக்க துடுப்பெடுத்தாட்டதில் மற்றைய 8 பேரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை.

பந்துவீச்சில் மொஹம்மத் சிராஜ் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சூரியகுமார் யாதவ்

https://www.virakesari.lk/article/238097

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் அவசியமான வெற்றியை ஈட்டியது நியூஸிலாந்து

Published By: Digital Desk 3

08 Feb, 2026 | 04:24 PM

image

(நெவில் அன்தனி)

சென்னை சேப்பாக்கம், எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மிக முக்கிய ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் நியூஸிலாந்து 5 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்டது.

இந்த ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மிகவும் கடினமான குழு என வருணிக்கப்படும் டி குழுவில் இடம்பெறும் நியூஸிலாந்துக்கு இந்த வெற்றி மிகவும் அவசியமான வெற்றியாக அமைந்திருக்கும் என்பது உறுதி.

தென் ஆபிரிக்காவும் இந்தக் குழுவில் இடம்பெறுகிறது.

இன்றைய போட்டியில் நியூஸிலாந்தின் வெற்றியில் டிம் சீபேர்ட் குவித்த அரைச் சதமும் க்ளென் பிலிப்ஸின் சிறப்பான துடுப்பாட்டமும் நியூஸிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டன.

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் சார்பாக குல்பாதின் நய்ப் குவித்த அரைச் சதம் பயனற்றுப்போனது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைக் குவித்தது.

ஆப்கானிஸ்தான் சார்பாக துடுப்பெடுத்தாடிய அனைவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். அவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்பாதின் நய்ப் 35 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களைக் குவித்தார்.

அவரை விட சிதிக்குல்லா அத்தல் (29), ரஹ்மானுல்லா குர்பாஸ் (27), டார்விஷ் ரசூல் (20) ஆகியோர் தங்களது அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் லொக்கி பேர்கசன் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

மிகவும் கடினமான 183 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 17.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மொத்த எண்ணிக்கை 14 ஓட்டங்களாக இருந்தபோது இரண்டாவது ஓவரில் முஜீப் உர் ரஹ்மானின் அடுத்தடுத்த பந்துகளில் பின் அலன் (1), ரச்சின் ரவிந்த்ரா (0) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர்.

ஆனால், பில் சீபேர்ட், க்லென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 46 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.

க்லென் பிலிப்ஸ் 25 பந்துகளில் 7 புவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 42 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சீபேர்ட் 42 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

மார்க் சப்மன் 28 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும் அணித் தலைவர் மிச்செல் செட்னர் ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன்: பில் சீபேர்ட்.

https://www.virakesari.lk/article/238162

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தின் கடும் சவாலுக்கு மத்தியில் கடைசிப் பந்தில் 4 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது இங்கிலாந்து

08 Feb, 2026 | 07:56 PM

image

(நெவில் அன்தனி)
மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் சி குழு முதல் சுற்று போட்டியில் நேபாளத்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட இங்கிலாந்து கடைசிப் பந்தில் 4 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

0802_sam_curran__eng_vs_nepal_bowled_the

இணை உறுப்பு நாடான நேபாளம் இந்தப் போட்டியில் ஓர் அனுபவம் மிக்க அணி போல் விளையாடி பூரண அந்தஸ்து பெற்ற நாடுகளுக்கு சவால் விடுக்க முடியும் என்பதை னது ஆட்டத் திறனால் நிரூபித்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.
அதிரடிக்கு பெயர் பெற்ற முன்வரிசை வீரர்களான பில் சோல்ட் (1), டொம் பென்டன் (2), ஜொஸ் பட்லர் (26) ஆகிய மூவரும் பிரகாசிக்கத் தவறினர். (57 - 3 விக்.)

0802_jacob_bethell_eng_vs_nepal.png

இந் நிலையில் ஜேக்கப் பெத்தெல், அணித் தலைவர் ஹெரி ப்றூக்  ஆகிய இருவரும் ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணிக்கு உரமூட்டினர்.
ஜேக்கப்  பெத்தெல்  35 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 55  ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து சாம் கரன் (2) ஓட்டங்களுடன் வெளியேறினார்.
மொத்த எண்ணிக்கை 157 ஓட்டங்களாக இருந்தபோது ஹெரி ப்றூக் களம் விட்டகன்றார். அவர் 32 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

0802_will_jack_eng_vs_nepal.png
  
வில் ஜெக்ஸ் 18 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்று  மொத்த எண்ணிக்கையை 184 ஓட்டங்களாக உயர்த்தினார்.
பந்துவீச்சில் திப்பேந்த்ரா சிங் அய்ரீ 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நந்தன் யாதவ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.


மிகச் சிறப்பாக தனது இன்னிங்ஸை ஆரம்பித்த நேபாளம் 23 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆரம்ப வீரர் ஆசிப் ஷெய்க் (7) ஆட்டம் இழந்தார்.
மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 5 ஓட்டங்கள் மாத்திரம் சேர்ந்தபோது குஷால் புர்த்தெல் 29 ஓட்டங்களுடன் வெளியேறினார். (42 - 2 விக்.)
தொடர்ந்து அணித் தலைவர் ரோஹித் பௌடெல், சிரேஷ்ட வீரர் திப்பெந்த்ரா சிங் அய்ரீ ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.
திப்பேந்த்ரா சிங் அய்ரீ 29 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

அய்ரீயைத் தொடர்ந்து ரொஹித் பௌடெல் 39 ஓட்டங்களுடனும் ஆரிவ் ஷெய்க் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

0802_lokesh_bam_nepal_vs_eng.png   

லோக்கேஷ் பாம் துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடி நேபாளத்தின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். 

ஆனால், கடைசி ஓவரை சாம் கரன் கட்டுப்பாட்டுடன் வீசி இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்தார்.
லோக்கேஷ் பாம் 18 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்கள் உட்பட 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் லியாம் டோசன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன்: வில் ஜெக்ஸ்

https://www.virakesari.lk/article/238172

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கமிந்து, குசல், தீக்ஷன, ஹசரங்க அசத்தலான ஆற்றல்கள், ரி20 உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை

09 Feb, 2026 | 12:26 AM

image

(நெவில் அன்தனி)

அயர்லாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழுவுக்கான தனது ஆரம்பப் போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களால் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தில் தனது வெற்றிக்கணக்கை ஆரம்பித்தது.

கமிந்து மெண்டிஸின் அதரிடி துடுப்பாட்டம், குசல் மெண்டிஸின் பொறுமையான அரைச் சதம், மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அயர்லாந்துக்கு எதிராக இலங்கை ஈட்டிய நான்காவது நேரடியான வெற்றி இதுவாகும்.

உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் கடைசி நேரத்தில் அழைக்கப்பட்ட கமிந்து மெண்டிஸின் அதிரடி ஆட்டம் இலங்கை அணிக்கு உற்சாகத்தை கொடுத்ததுடன் வெற்றிக்கும் வித்திட்டது.

'உலகக் கிண்ணத்திற்கு நான் கடைசி நேரம் அழைக்கப்பட்டிருந்தாலும் தெரிவாளர்களே அந்தத் தீர்மானத்தை எடுத்தனர். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எனது முழுமையான பங்களிப்பை வழங்கி அணியை வெற்றிபெறச் செய்வது எனது குறிக்கோள். இன்றையத் தினமும் அதனைத் தான் செய்தேன். அதேவேளை குசல் மெண்டிஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடியதுடன் தீக்ஷன, வனிந்து ஆகியோர் மிகவும் அவசியமான நேரத்தில் விக்கெட்களை சரித்தனர். எல்லா பாராட்டுகளும் அவர்களுக்கே' உரியது என போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கமிந்து மெண்டிஸ் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதால் இலங்கை அணி 14ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களையே பெற்றிருந்தது.

காமில் மிஷார (14), பெத்தும் நிஸ்ஸன்க (24), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பவன் ரத்நாயக்க (5), துனித் வெல்லாலகே (10) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

அதனைத் தொடர்ந்து 6ஆம் இலக்க வீரராக கமிந்து மெண்டிஸ் களம் நுழைந்த பின்னரே இலங்கை அணியின் ஆக்ரோஷம் வெளிப்பட்டது.

பவர் ப்ளேயின் கடைசிப் பந்தில் பவுண்டறி அடித்த இலங்கை அடுத்த 53ஆவது பந்திலேயே பவுண்டறி அடித்தது. அதுவரை பவுண்டறிகள் இலங்கைக்கு வராத நிலையில் அந்த பவுண்டறியை கமிந்து மெண்டிஸ் அடித்தார்.

தொடர்ந்து அதிரடியில் இறங்கிய கமிந்து மெண்டிஸ் 19 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரும் குசல் மெண்டிஸும் 5ஆவது விக்கெட்டில் 29 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

குசல் மெண்டிஸ் 43 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள் உட்பட 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஜோர்ஜ் டொக்ரெல் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெறி மெக்காத்தி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மொத்த எண்ணிக்கை 24 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரரும் அணித் தலைவருமான போல் ஸ்டேர்லிங் (6) ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிய மற்றைய ஆரம்ப வீரர் மார்க் அடயார் 34 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். (58 - 2 விக்.)

அடுத்து ஜோடி சேர்ந்த ஹெரி டெக்டர், லோர்க்கன் டக்கர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துனித் வெல்லாலகேயின் பந்துவீச்சில் லோக்கன் டக்கர் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஹெரி டெக்டரின் விக்கெட்டை வனிந்து ஹசரங்க வீழ்த்தினார். ஹெரி டெக்டர் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 120 ஓட்டங்களாக இருந்தபோது பென் காலிட்ஸ் (1), கெரத் டிலேனி (0), ஆகிய இருவரின் விக்கெட்களை மஹீஷ் தீக்ஷன அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்து இலங்கைக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்.

எட்டாவது ஓவரில் அடயாரின் விக்கெட்டைக் கைபற்றிய வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக சில ஓவர்கள் ஓய்வுபெற்றார். அவர் மீண்டும் களம் திரும்பி 2 ஒவர்களுக்கு பின்னர் 15ஆவது  ஓவரில் முதல் பந்தில் மேலும் ஒரு விக்கெட்டையும் கடைசி ஓவரில் 3ஆவது விக்கெட்டை யும்   கைபற்றினார்.

அதனைத் தொடர்ந்து எஞ்சிய 3 விக்கெட்களை துஷ்மன்த சமீர, மதீஷ பத்திரண ஆகியோர் கைப்பற்றி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: கமிந்து மெண்டிஸ்

kusal_mendis__2_.jpg

0802_maheesh_theekshana.png

kamindu_mendis.jpg

(பட உதவி: எஸ். நாதன்)

https://www.virakesari.lk/article/238174

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை

டி20 உலகக்கோப்பை, புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை

பட மூலாதாரம்,PCB

கட்டுரை தகவல்

  • மேத்யூ ஹென்றி

  • பிபிசி செய்தியாளர்

  • 9 பிப்ரவரி 2026, 02:35 GMT

    புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்

டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

இந்தியா, பாகிஸ்தான் உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் பதில் தேடும் கேள்வி இதுதான். இதற்குக் காரணம், ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு வருகை தந்திருப்பதுதான்.

லாகூரில் நேற்று (பிப்ரவரி 8, ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரிகள் சந்தித்தனர். டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது பற்றி விவாதிப்பதற்காகவே இந்த சந்திப்பு நடந்தேறியது.

ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் முபாஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியை சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாமும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பில் என்ன தீர்மானிக்கப்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

முன்னதாக, பாகிஸ்தான் வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி சல்மான் நசீர் வரவேற்றதாக, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிசிபி தெரிவித்திருந்தது.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில், "ஐசிசி துணை தலைவர் இம்ரான் கவாஜாவை லாகூர் விமான நிலையத்தில் பிசிபி தலைவரின் ஆலோசகர் அமீர் மிர் வரவேற்றார்." என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிவிட்டிருந்தது.

டி20 உலகக்கோப்பையில் தங்கள் அணியின் பாதுகாப்பு கருதி தாங்கள் விளையாடும் போட்டிகள் இந்தியாவுக்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை விடுத்தது. அவர்களின் கோரிக்கை ஐசிசியால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டியை தங்கள் அணி புறக்கணிக்கும் என, பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது.

பாகிஸ்தான் பிரதமர் ஷாஃபாஸ் ஷெரீஃப், வங்கதேசத்தை "ஆதரிப்பதற்காக" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணி அப்போட்டியை புறக்கணித்தால், அந்த அணி புள்ளிகளை இழக்க வேண்டியிருக்கும்.

அத்துடன், ஐசிசியின் தற்போதைய உரிம ஒப்பந்தங்கள் குறித்த சர்ச்சைக்கும் அது வழிவகுக்கும். தற்போதைய தொலைக்காட்சி ஒப்பந்தங்கள் 2027 உலகக் கோப்பைக்குப் பிறகு காலாவதியாவதால், தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை எதிர்கால ஒப்பந்தங்களைப் பாதிக்கலாம்.

டி20 உலகக்கோப்பை, புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை

பட மூலாதாரம்,X/PCB

என்ன சர்ச்சை?

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக முடிவெடுத்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி எச்சரித்திருந்தது.

'சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வை பிசிபி கண்டறிய வேண்டும் என எதிர்பார்ப்பதாக' ஐசிசி தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானின் முடிவு 'பெரும் விளைவுகளை' ஏற்படுத்தும் எனவும் ஐசிசி தெரிவித்திருந்தது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கியது. இந்த தொடர் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கால அட்டவணைப்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற வேண்டும்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி பாகிஸ்தான் அரசாங்கம் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணி கலந்துகொள்ளாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

டி20 உலகக்கோப்பை, புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை

பட மூலாதாரம்,Screen Grab

படக்குறிப்பு,இந்தியாவில் விளையாடுவதில்லை என்ற தனது முடிவு குறித்து விளையாட்டு ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும், இந்த முடிவை எடுப்பதற்கு என்ன காரணம் என்பதை பாகிஸ்தான் அரசு கூறவில்லை.

டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்ததில் இருந்து இந்த சர்ச்சை தொடங்கியது. இதையடுத்து, வங்கதேச அணியை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து அணியை இத்தொடரில் ஐசிசி சேர்த்தது.

இந்த விவகாரத்தில் வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்தது. "பாதுகாப்பு காரணங்களுக்காக எந்தவொரு அணியும் எந்தவொரு நாட்டிலும் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவிக்கலாம் என்றால், அந்த உரிமை வங்கதேசத்திற்கும் இருக்க வேண்டும்." என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

கடந்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட்அணி மறுப்பு தெரிவித்தது, இதையடுத்து இந்திய அணியின் போட்டிகள் துபையில் நடைபெற்றன. இதைத்தான் பாகிஸ்தான் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தது.

ஐசிசி கூறியது என்ன?

டி20 உலகக்கோப்பை, புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வங்கதேசத்தின் கோரிக்கைகளை ஐசிசி ஏற்காததால், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் அதை விமர்சித்தனர் (ஐசிசி தலைவர் ஜெய் ஷாவின் கோப்புப்படம்)

பாகிஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்ட சில மணிநேரத்திலேயே, ஐசிசி இதுதொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதில், பிசிபியிடமிருந்து தங்களுக்கு எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கப் பெறவில்லை என்றும், பாகிஸ்தானின் முடிவு உலகளாவிய கிரிக்கெட் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிக்கையில், "ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பது தொடர்பாக தங்கள் அணிக்கு உத்தரவிட்டுள்ள பாகிஸ்தான் அரசின் முடிவை ஐசிசி கருத்தில் கொண்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "பிசிபியிடமிருந்து ஐசிசிக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கப் பெறவில்லை. குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பது என்ற அணுகுமுறை உலகளாவிய நிகழ்வின் விளையாட்டு உணர்வுக்கு முரணானது, தகுதி பெறும் அனைத்து அணிகளும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட போட்டி அட்டவணைப்படி விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விளையாட்டு ஒருமைப்பாடு, போட்டி, நிலைத்தன்மை மற்றும் நியாயம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஐசிசி கிரிக்கெட் தொடர்கள் அமைந்துள்ளன. குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பது என்பது விளையாட்டு உணர்வு மற்றும் இத்தொடர்கள் மீதான நம்பிக்கையை குறைத்து மதிப்பிடுவதாக அமையும்." என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

"தேசிய கொள்கை தொடர்பான விவகாரங்களில் அரசாங்கங்களின் பங்கை ஐசிசி மதிக்கும் அதே வேளையில், இந்த முடிவு உலகளாவிய கிரிக்கெட் அல்லது பாகிஸ்தான் ரசிகர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் நலன்களுக்கு ஏற்றதாக இல்லை."

"இந்த முடிவின் தீவிரமான மற்றும் நீண்டகால தாக்கங்களை பிசிபி பரிசீலிக்கும் என்று ஐசிசி எதிர்பார்க்கிறது, ஏனெனில், இது பிசிபி உறுப்பினராகவும் பயனாளியாகவும் இருக்கும் உலகளாவிய கிரிக்கெட் கட்டமைப்பை பாதிக்கலாம்." என அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, நியாயமான தீர்வு கண்டறியப்படும் என தெரிவித்துள்ள ஐசிசி, "ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதே ஐசிசியின் முன்னுரிமை. இந்த பொறுப்பு பிசிபி உட்பட அனைத்து உறுப்பினர் வாரியங்களுக்கும் உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வை பிசிபி கண்டறியும் என ஐசிசி நம்புகிறது." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq8g2gepd2yo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண அறிமுக அணி இத்தாலியை இலகுவாக வெற்றிகொண்டது ஸ்கொட்லாந்து; இத்தாலி அணியில் இலங்கை வம்சாவளி கிரிஷான்

09 Feb, 2026 | 05:02 PM

image

(நெவில் அன்தனி)

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் இத்தாலியை எதிர்த்தாடிய ஸ்கொட்லாந்து 73 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

தமது அணியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிவித்து பங்களாதேஷ் அணியை இந்த உலகக் கிண்ணத்திலிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விலக்கிக்கொண்டதை அடுத்து அவ்வணிக்கு பதிலாக ஐசிசியினால் சி குழுவில் ஸ்கொட்லாந்து இணைத்துக்கொள்ளப்பட்டது.

0902_micheal_leask_scot_vs_italy.png

எட்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐரோப்பிய பிராந்திய உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இத்தாலியிடம் 12 ஓட்டங்களால் தோல்வி அடைந்த ஸ்கொட்லாந்து, இன்றைய போட்டியில் பதிலடி கொடுத்து அந்தத் தோல்வியை நிவர்த்திசெய்துகொண்டது.

ஜோர்ஜ் மன்சே, மைக்கல் ஜோன்ஸ், ப்றண்டன் மெக்முலென் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களும் மைக்கல் லீஸ்க் பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் ஸ்கொட்லாந்தின் இலகுவான வெற்றிக்கு வழிவகுத்தன.

0902_george_munsey_scot_vs_italy.png

இதேவேளை, இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் இத்தாலி அணித் தலைவர் வெய்ன் மெட்சன் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது இடது தோற்பட்டையில் கடும் உபாதை ஏற்பட்டதால் அவர் ஓய்வு பெற நேரிட்டது. இது இத்தாலி அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 207 ஓட்டங்களைக் குவித்தது. இதன் மூலம் இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 200 ஓட்டங்களைக் கடந்த முதலாவது அணி என்ற சாதனையை ஸ்கொட்லாந்து படைத்தது.

ஜோர்ஜ் மன்சே, மைக்கல் ஜோன்ஸ் ஆகிய இருவரும் 83 பந்துகளில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் 10 ஓட்டங்கள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜோர்ஜ் மன்சே 54 பந்துகளில் 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைக் குவித்தார்.

அவர் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் மைக்கல் ஜொன்ஸ் 37 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து ப்றெண்டன் மெக்முலென், அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலபபடுத்தினர்.

ப்றெண்டன் மெக்முலென் 18 பந்துகளில் 4 சிக்ஸ்கள் உட்பட 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ரிச்சி பெறிங்டன் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

மைக்கல் லீஸ்க் 5 பந்துகளில் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

208 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் ஜஸ்டின் மொஸ்கா (0) ஆட்டம் இழந்த பின்னர் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

ஆனால் மற்றையவர்கள் எல்லோரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் களம் விட்டகன்றார்.

அன்தனி மொஸ்கா (13), ஜோன் - ஜோன் ட்ரவோ மட்ஸ் (22) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (40 - 3 விக்.)

தொடர்ந்து ஹெரி மனென்டி (37), பென் மனென்டி (52) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததும் எஞ்சிய 5 விக்கெட்கள் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

இந்தப் போட்டியில் இத்தாலி சார்பாக இலங்கை வம்சாவளி வீரரான கிரிஷான் ப்ரியன்த பெர்னாண்டோ கலுகமகே விளையாடியமை விசேட அம்சமாகும். அவர் ஆட்டம் இழக்காமல் 3 ஓட்டங்களைப் பெற்றதுடன் பந்துவீச்சில் விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை.  

பந்துவீச்சில் மைக்கல் லீஸ்க் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க் வொட் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

sri_lankan_born_italian_chrishan_priyant

https://www.virakesari.lk/article/238239

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓமானை வீழ்த்தி அணிகள் நிலையில் இலங்கையை முந்தியது ஸிம்பாப்வே

Published By: Vishnu

09 Feb, 2026 | 07:33 PM

image

(நெவில் அன்தனி)

ஓமானுக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் 8 விக்கெட்களால் மிக இலகுவாக ஸிம்பாப்வே வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் பி குழுவுக்கான அணிகள் நிலையில் நிகர ஓட்ட வேகம் அடிப்படையில் இலங்கையை முந்திக்கொண்டு ஸிம்பாப்வே முதலிடத்தில் இருக்கிறது.

0902_sikkandar_raza_and_jatinder_singh_a

ப்ளெசிங் முஸராபனி, ரிச்சர்ட் எங்கரவா, ப்றட் இவான்ஸ் ஆகியோர் துல்லியமாக பந்துவீசி தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றி ஸிம்பாப்வே இலகுவாக வெற்றி பெற வழிவகுத்தனர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஓமான் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

முதல் ஐந்து வீரர்களில்  இருவர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்ததுடன் மற்றைய மூவரும் 5 ஓட்டங்களுக்கு அப்பால் பெறவில்லை.

ஸிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியில் ஓமான் சார்பாக விநாயக் ஷுக்லா (28), சுபியான் மெஹ்மூத் (25), நதீம் கான் (20) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

சுபியான் மெஹ்மூத், விநாயக் ஷுக்லா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் ஓமானின் நிலைமை இதைவிட மோசமாகி இருக்கும்.

0902_richard_ngarava_zimb_vs_oman.png

பந்துவீச்சில் ப்ளெசிங் முஸராபனி 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிச்சர்ட் எங்கரவா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றட் இவான்ஸ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 104 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 13.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

எவ்வாறாயினும் ஸிம்பாப்வேயின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஆரம்ப வீரர்களில் ஒருவரான டியொன் மயர்ஸ் (0), தடிவனாஷே மாருமணி (21) ஆகிய இருவரும் மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர்.

0902_brian_bennet_zimb_vs_oman.png

மற்றைய ஆரம்ப வீரர் ப்றயன் பெனெட், ப்றெண்டன் டெய்லர் ஆகிய இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை அண்மிக்க உதவினர். 

எனினும் அவர்கள் இருவரும்  68 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ப்றெண்டன் டெய்லர் உபாதை காரணமாக ஓய்வு பெற்றார்.

ஓட்டங்கள் பெறுகையில் அவர் நொண்டியவாறு ஓடியதை அவதானிக்க முடிந்தது.

ப்றெண்டன் டெய்லர் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

எனினும் அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட ஓட்டங்களை ஸிம்பாப்வெ சிரமப்படாமல் பெற்றது.

ப்றயன் பெனெட் 48 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

ஆட்டநாயகன்: ப்ளெசிங் முஸராபனி

https://www.virakesari.lk/article/238257

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுடனான போட்டியில் தென் ஆபிரிக்கா 57 ஓட்டங்களால் வெற்றி

Published By: Vishnu

09 Feb, 2026 | 11:47 PM

image

(நெவில் அன்தனி)

அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் கனடாவை தனது ஆரம்பப் போட்டியில் எதிர்த்தாடிய தென் ஆபிரிக்கா 57 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ஏய்டன் மார்க்ராம் குவித்த அரைச் சதம், லுங்கி நிகிடி பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தன.

கனடா சார்பாக தனித்து போராடிய நவ்நீத் தாலிவல் அரைச் சதம் பெற்று பலத்த பாராட்டைப் பெற்றார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த மொத்த எண்ணிக்கையானது இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஓர் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் அரைச் சதம் குவித்ததுடன் தனது ஆரம்ப ஜோடி குவின்டன் டி கொக்குடன் முதலாவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தர்ர்.

குவின்டன் டி கொக் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து 33 ஓட்டங்களைப் பெற்ற ரெயான் ரிக்ல்டனுடன் இரண்டாவது விக்கெட்டில் மேலும் 56 ஓட்டங்களை ஏய்டன் மார்க்ராம் பகிர்ந்தார்.

மார்க்ராம் 32 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார்.

0902_Dilon_Heyliger_canada_took_a_scream

ஏய்டன் மார்க்ராமின் மிகவும் கடினமான பிடியை இடதுபுறமாகத் தாவி டிலொன் ஹேலிகர் பிடித்த விதம் முழு அரங்கையும பிரமிப்பில் ஆழ்த்தியது.

அடுத்து களம் புகுந்த டிவோல்ட் ப்ரவிஸ் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

ஆனால், டேவிட் மில்லர், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.

டேவிட் மில்லர் 23 பந்துகளில் ஒரு பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 39 ஓட்டங்களுடனும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 19 பந்துகளில் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட    34 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

214 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்விக்கு மத்தியிலும் 20 ஓவர்களையும் தாக்குப் பிடித்த கனடா சர்வதேச ரி20 அரங்கில் தனது முன்னேற்றத்தை வெளிப்படுத்தியது.

லுங்கி நிகிடி தனது முதல் பந்தில் அணித் தலைவர் டில்ப்ரீத் பஜ்வாவை ஆட்டம் இழக்கச் செய்ததுடன் 3ஆவது ஓவரில் யுவ்ராஜ் சம்ரா (12), நிக்கலஸ் கேர்ட்டன் (4) ஆகியோரை களம் விட்டகழச் செய்து கனடாவை திணறவைத்தார்.

0902_navneet_dhaliwal_canada_vs_sa.png

ஆனால், நவ்நீத் தாலிவல், ஹார்ஷ் தக்கர் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் வெற்றியைத் தாமதிக்க செய்தனர்.

ஹார்ஷ் தக்கர் 29 பந்துகளில் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து சாத் பின் ஸபார் 11 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (133 - 6 விக்.)

மறுபக்கத்தில் மூன்றாம் இலக்க வீரர் நவ்நீத் தாலிவல் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 49 பந்துகளில் 7 பவண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 64 ஓட்டங்களைப் பெற்று எட்டாவதாக ஆட்டம் இழந்தார்.

0902_lungi_ngidi_sa_vs_canada.png

பந்துவீச்சில் லுங்கி நிகிடி 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்:  லுங்கி நிகிடி

https://www.virakesari.lk/article/238262

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஸ் டி லீட் சகலதுறைகளிலும் பிரகாசிக்க நமிபியாவை இலகுவாக வெற்றிகொண்டது நெதர்லாந்து

10 Feb, 2026 | 03:46 PM

image

(நெவில் அன்தனி)

நெதர்லாந்துக்கும் நமிபியாவுக்கும் இடையில் டெல்லி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் நெதர்லாந்து 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றியீட்டியது.

இந்த வருட ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானுக்கு சவால் விடுத்து தோல்வி அடைந்த நெதர்லாந்துக்கு இந்த வெற்றி உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

1002_bas_de_leede_ned_vs_nam.png

26 வயதான பாஸ் டி லீட் சகலதுறைகளிலும் வெளிப்படுத்திய ஆற்றல்கள், லோகன் வென் பீக்கின் துல்லியமான பந்துவீச்சு என்பன நெதர்லாந்தை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.

இந்தப் போட்டி முடிவு எத்தகையதாக இருந்தாலும் இரண்டு அணியினரும் 150 ஓட்டங்களுக்கு மேற்பட்ட மொத்த எண்ணிக்கையைப் பெற்றமை விசேட அம்சமாகும்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட  நமிபியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.

நமிபியா சார்பாக நால்வர் 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். அவர்களில் லொவ்டி-ஈட்டன் மாத்திரமே கணிசமான எண்ணிக்கையைப் பெற்றார். 

1002_logan_van_beek_ned_vs_nam.png

அவர்களைவிட மற்றைய ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர்.

ஜான் ப்ரைலின்க் (30), ஜான் நிக்கல் லொவ்டி-ஈட்டன் (42) ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேத்துடன் துடுப்பெடுத்தாடி இரண்டாவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு தெம்பைக் கொடுத்தனர்.

தொடர்ந்து அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 18 ஓட்டங்களையும் ஜே.ஜே. ஸ்மித் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

1002_loftie_-_eaton_nam_v_ned.png

பந்துவீச்சில் லோகன் வென் பீக் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 18 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

எவ்வாறாயினும் நெதர்லாந்தின் ஆரம்பம் எதிர்பார்த்தவாறு சிறப்பாக அமையவில்லை.

ஆரம்ப வீரர் மெக்ஸ் ஓ'தௌத் 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்றதுடன் மற்றைய ஆரம்ப வீரர் மைக்கல் லெவிட் 28 ஓட்டங்களைப் பெற்றார். (46 - 2 விக்.)

இதனைத் தொடர்ந்து பாஸ் டி லீட், கொலின் அக்கமன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் கொலின் அக்கமன் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் பாஸ் டி லீட், அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (18 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.

பாஸ் டி லீட் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 72 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஆட்டநாயகன்: பாஸ் டி லீட்.

https://www.virakesari.lk/article/238321

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக் கிண்ண இணைப்பாட்ட சாதனையுடன் ஐ.அ.இராச்சியத்தை இலகுவாக வென்றது நியூஸிலாந்து

Published By: Vishnu

10 Feb, 2026 | 08:29 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் டிம் சீபேர்ட் - பின் அலன் ஆகியோர் ரி20 உலகக் கிண்ணத்துக்கான இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை 10 விக்கெட்களால் நியூஸிலாந்து இலகுவாக வெற்றிகொண்டது.

அப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சார்பாக டிம் சீபேர்ட், பின் அலென் ஆகிய இருவரும் 15.2 ஓவர்களில் சாதனைமிகு 175 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணிக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

இந்த இணைப்பாட்டமானது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் சகல விக்கெட்களுக்குமான சாதனையாகும்.

இதன் மூலம் நான்கு வருடங்களுக்கு முன்னர் அடிலெய்டில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 170 ஓட்ட இணைப்பாட்ட சாதனை முறியடிக்கப்பட்டது.

டிம் சீபேர்ட் 42 பந்துகளில் 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 89 ஓட்டங்களுடனும் பின் அலன் 50 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 84 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் ஆரியன்ஷ் ஷர்மா (8) குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தபோதிலும் அணித் தலைவர் முஹம்மத் வசீம், அலிஷான் ஷராபு ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 107 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.

முஹம்மத் வசீம் 45 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களையும் அலிஷான் ஷராபு 47 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களை விட மயான்க் குமார் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மெட் ஹென்றி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: டிம் சீபேர்ட்

https://www.virakesari.lk/article/238352

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச போட்டியில் அமெரிக்காவை வென்றது பாகிஸ்தான்

Published By: Vishnu

10 Feb, 2026 | 10:55 PM

image

(எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் எஸ்எஸ்சி மைதானத்தில் முழு மின் ஒளிவெள்ளத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழுப் போட்டியில் பாகிஸ்தான் 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் 2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அமெரிக்காவிடம் அடைந்த தோல்வியை பாகிஸ்தான் நிவர்த்தி செய்துகொண்டது.

அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான தனது வாய்ப்பையும் பாகிஸ்தான் அதிகரித்துக்கொண்டது.

கொழும்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்களவர் விளையாட்டுக் கழக (SSC) மைதானத்தில் மின் ஒளிவெள்ளத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முதல் தடவையாக நடைபெறுவது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

ஸிம்பாப்வே - ஓமான் அணிகள் மோதிய ரி20 உலகக் கிண்ணப் போட்டி இதே மைதானத்தில் பகல் இரவு போட்டியாக 9ஆம் திகதி நடைபெற்ற போதிலும் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டியே முழுமையாக மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியாகும்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.

சய்ப் அயூப் (19), சாஹிப்ஸதா பர்ஹான் ஆகிய இருவரும் 31 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பவர்ப்ளே நிறைவில் பாகிஸ்தான் 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந் நிலையில் சாஹிப்ஸதா பர்ஹான், பாபர் அஸாம் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

இந் நிலையில் சாஹிப்ஸதா பர்ஹான், பாபர் அஸாம் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

1002_sahibzada_farhan_pak_vs_usa.png

ஆனால், அவர்கள் இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (143 - 4 விக்)

அவர்களில் முதலில் ஆட்டம் இழந்த பாபர் அஸாம் 46 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து சாஹிப்ஸதா பர்ஹான் 41 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் ஷதாப் கான் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றார்.

1002_shadley_van_schalkwyke_usa_v_pak.pn

பந்துவீச்சில் ஷட்லி வன் ஷோக்வைக் 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அமெரிக்கா சார்பாக நால்வர் மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

ஆரம்ப வீரர்களான ஷயான் ஜஹாங்கிர் 49 ஓட்டங்களையும் அந்த்ரீஸ் கௌஸ் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய வரிசையில் மிலிந்த் குமார் 29 ஓட்டங்களையும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷுப்ஹாம் ரஞ்சேன் 29 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் உஸ்மான் தாரிக் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷதாப் கான் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சாஹிப்ஸதா பர்ஹான்.

https://www.virakesari.lk/article/238356

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா வெற்றி; ஆப்கானிஸ்தானின் சுப்பர் 8 வாய்ப்பு ஊசலாட்டம்

Published By: Vishnu

11 Feb, 2026 | 06:36 PM

image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (18) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் தென் ஆபிரிக்கா இரட்டை சுப்பர் ஓவரில் வெற்றியீட்டியது.

இந்த உலகக் கிண்ணப் போட்டியில் சுப்பர் ஓவரில் முடிவடைந்த முதலாவது போட்டி இதுவாகும்.

இப் போட்டி முடிவுடன் ஆப்கானிஸ்தான் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் அதன் சுப்பர் 8 வாய்ப்பு ஊசலாடத் தொடங்கியுள்ளது.

1102_sa_win_in_super_ove_2.jpg

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரே மொத்த (187 ஓட்டங்கள்) எண்ணிக்கையைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிப்பதற்காக மத்தியஸ்தர்களால் சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களைப் பெற்றது.

தென் ஆபிரிக்கா ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றது.

இதனால் இரண்டாவது தடவையாக ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிகளின் பிரகாரம் சம்நிலையில் முடிவடையும் போட்டி, சுப்பர் ஓவரிலும் சமநிலையில் முடிவடைந்தால் வெற்றி அணி தீர்மானிக்கப்படும்வரை சுப்பர் ஓவர் தொடரவேண்டும்.

இதற்கு அமைய அமுல்படுத்தப்பட்ட இரண்டாவது சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்களையும் இழந்து 19 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சமநிலையில் போட்டி முடிவு

தென் ஆபிரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் (5) ஆட்டம் இழந்த பின்னர் குவின்டன் டி கொக், ரெயான் ரிக்ல்டன் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

ரெயான் ரிக்ல்டன் 28 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களையும் குவின்டன் டி கொக் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களையும் குவித்தனர்.

1102_ryan_rickleton_sa_vs_afghan.png

1102_quinton_de_kock_sa_vs_afghan.png

அவர்களை விட டிவோல்ட் ப்ரவிஸ் 23 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் மார்க்கோ ஜென்சன் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஷித் கான் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

188 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் ஆட்டம் சம நிலையில் முடிவடைந்தது.

கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கெகிசோ ரபடாவின் முதலாவது முதலாவது பந்து நோபோலானது. அடுத்த பந்து வைட் ஆக ப்றீ ஹிட் தொடர்ந்து. ஆனால், ப்றீ ஹிட்டை நூர் அஹ்மத் சரியாக பயன்படுத்தாததுடன் அந்தப் பந்தில் ஓட்டம் பெறப்படவில்லை.

அடுத்த பந்தில் நூர் அஹ்மத் பக்கவாட்டில் நகர்ந்து சிக்ஸாக விளாசினார்.

கடைசி 4 பந்துகளில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

மூன்றவாது பந்தில் ஓட்டம் பெறப்படவில்லை.

ரபடா வீசிய 4ஆவது பந்தும் நோபோலானதுடன் அந்தப் பந்தில் 2 ஓட்டங்களும் பெறப்பட்டது.

இப்போது கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

1102_rabada_run_outs_farahan_to_lead_int

அடுத்த பந்தை நூர் அஹ்மத் வைட் லோங் ஓன்னை நோக்கி பந்தை அடித்து 2 ஓட்டங்களைப் பெற முயற்சித்தார்.

ஆனால், களத்தடுப்பில் வேகமாக செயல்பட்ட மார்க்கோ ஜென்சன் பந்தைப் பிடித்து பந்துவீச்சாளர் ரபடாவுக்கு எறிந்தார்.

அதனைப் பிடித்த ரபடா மின்னேல் வேகத்தில் தாவி பந்துடன் இடது கையால் ஸ்டம்ப்களை தட்டி பஸால்ஹக் பாறூக்கியை ரன் அவுட் ஆக்க போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

1102_rahmanullah_gurbaz_afghan_vs_sa.png

ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அற்புதமாக துடுப்பெடுத்தாடி 42 பந்துகளில் 4 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைக் குவித்தார். அவரைவிட அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (22), அணித் தலைவர் ராஷித் கான் (20) ஆகிய இருவரே ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர். நூர் அஹ்மத் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் லுங்கி நிகிடி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அதன் பின்னர் முதலாவது சுப்பர் சம நிலையில் முடிவடைய இரண்டாவது சுப்பர் ஓவரில் தென் ஆபிரிக்கா வெற்றியீட்டியது.

https://www.virakesari.lk/article/238426

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி

Published By: Vishnu

11 Feb, 2026 | 07:32 PM

image

(நெவில் அன்தனி)

அயர்லாந்துக்கு எதிராக ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் 67 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றி பெற்றது.

1102_nathan_ellis_aus_vs_ire__1_.png

நேதன் எலிஸ், அடம் ஸ்ம்ப்பா ஆகிய இருவரும் மிகவும் துல்லியமாக பந்துவீசி தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தனர்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 7 ஓட்டங்களாக இருந்தபோது அதிரடி ஆட்டக்காரர் ட்ரவிஸ் ஹெட் (6) ஆட்டம் இழந்தார்.

1102_rsss_adair_bowled_by_ellis_aus_vs_i

எனினும் கெமரன் க்றீன் (21), ஜொஷ் இங்லிஸ் (37), ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணிக்கு ஓரளவு பலம் சேர்த்தனர்.

க்ளென் மெக்ஸ்வெல் 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். (88 - 4 விக்.)

அதன் பின்னர் மெட் ரென்ஷோ, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உரமூட்டினர்.

மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 45 ஓட்டங்களையும் மெட் ரென்ஷோ 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

கூப்பர் கொனலி, சேவியர் பாட்லட் ஆகிய இருவரும் தலா 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மார்க் அடயா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 16.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 115 ஓட்டங்ளைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜோர்ஜ் டொக்ரெல் (41), லோக்கன் டக்கர் (24) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் நேதன் எலிஸ் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3.5 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அடம் ஸ்ம்ப்பா 4 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/238429

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்

Published By: Vishnu

12 Feb, 2026 | 03:27 AM

image

(நெவில் அன்தனி)

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண வராற்றில் தலா இரண்டு தடவைகள் சம்பியனான இரண்டு அணிகளுக்கு இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (11) நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் இங்கிலாந்தை 30 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது.

ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் குவித்த அபார அரைச் சதம், குடாகேஷ் மோட்டி, ரொஸ்டன் சேஸ் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சுகள் என்பன மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை சுலபமாக்கின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர்களான ப்றண்டன் கிங் (1), அணித் தலைவர் ஷாய் ஹோப் (0) ஆகிய இருவரும் முதல் இரண்டு ஓவர்களில் ஆட்டம் இழந்ததால் மேற்கிந்தியத் தீவுகள் மோசமான நிலையில் இருந்தது. (8 - 2 விக்.)

இந் நிலையில் ஷிம்ரன் ஹெட்மயர் (23), ரொஸ்டன் சேஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 28 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ரொஸ்டன் சேஸ் 34 ஓட்டங்களைப் பெற்று நான்காவதாக ஆட்டம் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய ஷேர்ஃபேன் ரதஃபர்ட், 5ஆவது விக்கெட்டில் ரோவ்மன் பவலுடன் 51 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் ஜேசன் ஹோல்டருடன் 61 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை பலப்படுத்தினர்.

ரோவ்மன் பவல் 14 ஓட்டங்களையும் ஜேசன் ஹோல்டர் 17 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்களுடன் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் 42 பந்துகளில் 2 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

1102_sherfane_rutherford__windies_vs_eng

பந்துவீச்சில் ஆதில் ராஷித் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெமி ஓவர்ட்டன் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

196 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து தனது இன்னிங்ஸை வேகமாக ஆரம்பித்தபோதிலும் சிரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் சற்று தடுமாற்றம் அடைந்தது.

பில் சோல்ட், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 20 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதில் பில் சோல்ட் 30 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து ஜொஸ் பட்லர், ஜேக்கப் பெத்தெல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர 7ஆவது ஓவரில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஜொஸ் பட்லர் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்துடன் மேலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.

டோம் பென்டன் (2), ஜேக்கப் பெத்தேல் (33) ஆகிய இருவரே சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் அணித் தலைவர் ஹெரி ப்றூக் (17), சாம் கரன் ஆகிய இருவரும் ஐந்தாவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

ஆனால், இங்கிலாந்தின் கடைசி 6 விக்கெட்கள் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

மத்திய வரிசை வீரர் சாம் கரன் தனித்து போராடியபோதிலும் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை அவரால் தடுக்க முடியாமல் போனது. அவர் 30 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

1102_gudakesh_motie_celebrates_windies_v

பந்துவீச்சில் குடாகேஷ் மோட்டி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரொஸ்டன் சேஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்:ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட்

https://www.virakesari.lk/article/238431

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பெற்று ஓமானை 105 ஓட்டங்களால் வென்றது இலங்கை

12 Feb, 2026 | 03:29 PM

image

(பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி)

ஓமானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் இன்று வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சொந்த மண்ணில் சர்வதேச ரி20 மற்றும் ரி20 உலகக் கிண்ண போட்டிக்கான அதிகூடிய மொத்த எண்ணிக்கையைக் குவித்த இலங்கை 105 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் இன்றைய வெற்றியுடன் இரண்டு வெற்றிகளை ஈட்டியுள்ள இலங்கை பி குழுவில் 4 புள்ளிகளுடன் முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இன்றைய போட்டியில் சொந்த மண்ணில் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையை இலங்கை படைத்த அதேவேளை, தசுன் ஷானக்க சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கான அதிவேக அரைச் சத சாதனையை நிலைநாட்டினார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ரி20 போட்டியில் 20 பந்துகளில் அரைச் சதம் குவித்த தசுன் ஷானக்க இன்றைய போட்டியில் 19 பந்துகளில் அரைச் சததத்தைப் பூரத்திசெய்து தனது முந்தைய சாதனையைப் புதுப்பித்தார்.

ஓமானுக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது சொந்த மண்ணில் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கையின் இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

கென்யாவுக்கு எதிராக ஜொஹானெஸ்பேர்க் மைதானத்தில் 2007இல் 6 விக்கெட் இழப்புக்கு பெறப்பட்ட 260 ஓட்டங்களே சர்வதேச ரி20 கிரிக்கெட் மற்றும் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

ஆரம்ப வீரர்கள் காமில் மிஷார (8), பெத்தும் நிஸ்ஸன்க (13) ஆகிய இருவரும் மீண்டும் பிரகாசிக்கத் தவறினர். (42 - 2 விக்.)

என்றாலும் குசல் மெண்டிஸ் மூன்றாவது விக்கெட்டில் பவன் ரத்நாயக்கவுடன் பகிர்ந்த 94 ஓட்டங்களும் நான்காவது விக்கெட்டில் தசுன் ஷானக்கவுடன் பகிர்ந்த 63 ஓட்டங்களும் இலங்கையை பலமான நிலையில் இட்டது.

பவன் ரத்நாயக்க 28 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டநாயகனானார்.

தசுன் ஷானக்க பந்துகளில் 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களைக் குவித்து களம் விட்டகன்றார்.

குசல் மெண்டிஸ் 45 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று ரன் அவுட் ஆனார். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இது அவரது 19ஆவது அரைச் சதமாகும்.

கமிந்து மெண்டிஸ் 19 ஓட்டங்களுடனும் துனித் வெல்லாலகே 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஜித்தேன் ராமானந்தி 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

226 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 20 ஓவர்களையும் தாக்குப்பிடித்து 9 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஓமான் துடுப்பாட்டத்தில் இருவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

43 வயதான மொஹமத் நதீம் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவரை விட வசீம் அலி 27 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/238491

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.