Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் வரவு செலவுத் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளையில் பாராளுமன்றத்தின் மீது புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தலாம்

வீரகேசரி நாளேடு

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளையில் பாராளுமன்றத்தின் மீது புலிகள் தம்வசமுள்ள விமானங்கள் மூலமாக தற்கொலைத் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இதனை விட முக்கிய இடங்கள் மீதும் புலிகள் தாக்குதலை நடத்தக் கூடும் என்று அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.

தமிழ் மக்களுடன் எமக்கு எத்தகைய விரோதமும் இல்லை. எனினும் புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

அன்று காலி துறைமுகத்திற்கு மீனவர் படகுகளில் ஊடுருவியே தாக்குதல் நடத்தினர். அதேபோல் அனுராதபுர விமானப் படைத்தளம் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். நாங்கள் அவ்வழியாக சென்று திரும்புகின்ற போது கூட எமக்கு சந்தேகம் ஏற்பட்டது என்றோ ஒருநாள் புலிகள் இந்த வேலிக்குள் நுழையக் கூடும் என்று நாம் சந்தேகப்பட்டோம். அதேபோல பல்வேறு இடங்கள் தொடர்பிலும் சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

எமக்கு தமிழ் மக்களுடன் எவ்விதமான விரோதமும் இல்லை. எனினும் புலி பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட வேண்டும். காலை வேளைகளில்தான் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர் என்பது கடந்தகால அனுபவங்களாகும். எனினும் சோதனைச்சாவடிகளில் கடமையில் இருக்கின்ற பாதுகாப்பு படையினர் ????? நித்திரை செய்கின்றனர்.

முக்கிய இடங்கள் உள்ளிட்ட குறிப்பாக பாதுகாப்பு இடங்கள் மற்றும் பாராளுமன்ற பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். நாம் நினைக்காத இடங்களிலிருந்து தான் புலிகளுக்கு ஆதரவு கிடைக்கின்றன.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பணத்திற்காக புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவி ஒத்தாசை வழங்குகின்றனர் என்பதனால் எந்நேரமும் எல்லோர் மீதும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட்டு விட்டு நடப்பதற்கு முன்னரே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதவாச்சி உட்பட பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்படுகின்ற பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக கவனம் செலுத்துமாறு கோரியிருந்த போதும் உரிய தரப்பினர் இன்னும் கவனம் செலுத்தவில்லை.

பாராளுமன்ற பாதுகாப்பு தொடர்பில் அதிகளவான கவனம் செலுத்த வேண்டும். வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்ற நேரத்தில் புலிகள் தம்வசமுள்ள விமானத்தை கொண்டு பாராளுமன்றத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்கின்ற எதிர்க்கட்சியினர் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல் தொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் கூறுவதே இல்லை

கய்யோ கய்யோ இவங்கட காமெடிய தாங்க முடியல இவர்களுக்கு சொன்னாலும் ஏறுதில்ல புலிகளின் தளபதிகள் எல்லாரும் சொல்லிப்போட்டினம் இவியட உ

யிர்கள் தமிழ்ச்செல்வனுடைய உயிருக்கு ஈடாகாது எண்டு வேற இருந்தா யோசிச்சு பார் சிங்களமே :lol:

*** பண்பற்ற முறையில் எழுதப்பட்டது திருத்தப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

விமானத்தின் மூலம் தற்கொலைத்தாக்குதல் செய்து, அதனுடன் போராட்டத்தை மழுங்கடித்து மகிழ்ச்சியடையலாமென எதிர்பார்க்கின்றார்கள். அதுதான் தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டதே, ஈழத்தை வென்றெடுப்பதற்கான உறுதியைக் கொண்டிருப்பதுதான் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கான பதிலென்று. ஆகவே நீங்கள் பாராளுமன்றத்தினுள் கூட்டங்களை நடத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு ஏன் குண்டை கொண்டு போய் போட்டு சாகடிக்க வேண்டும்? பயந்தே செத்திடுவாங்கள் போல இருக்கு.

ஆமாம் உண்மை தான் உங்கள கணிப்புகள் எப்போதும் பிழைக்காது. ஏன் என்றால் எல்லாம் முடிந்தவுடன் நீங்கள் வைக்கும் ஒப்பாரி தான் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இப்போது எந்த இடம் மீதியாய் இருக்கிறதோ எல்லாத்தயும் பட்டியல் போட்டு கத்தி கூச்சல் போடுகிறீர்கள்.

போடுங்கள் கூச்சல் போடுங்கள் .

தமிழனின் இரத்தம் குடித்த நீங்கள் ,

இனியெலாம் நித்தம் வெந்து சாவீர்கள்.

தமிழனின் அடிதனை தரனி இனி உணரட்டும்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்ட அறிக்கையை அடுத்து நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வரவு செலவுத் திட்ட வேளை படை நடவடிக்கை தீவிரமாகும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அர சின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடா ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் நிறை வேற்றுவதில் அரசு கோட்டை விட்டால் அரசு கவிழ்ந்த மாதிரித்தான். எனவே, எப்படியாவது இந்த வரவு செல வுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறை வேற்றிவைக்கவேண்டிய இக்கட்டு நிலை அரசுத் தரப்புக்கு.

பல்வேறு உதிரிக் கட்சிகளுக்கும் அமைச்சர் பதவிகள் என்ற எலும்புத் துண்டுகளை வீசி, தன் பக்கத்தில் அடக்கி வைத் திருக்கும் அரசுத் தலைமைக்கு அதன் மூலம் ஒருவாறு இட்டுக்கட்டி பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேணமுடியும் என்ற நம்பிக்கை நப்பாசை நிறையவே உண்டு.

ஆனாலும், இப்போதும் அரசுப் பக்கம் நிற்கும் சில உதிரித் தரப்புகள் வரவு செலவுத் திட்ட சமயத்தில் அர சின் காலை வாரி விடலாம் என்ற செய்திகளும் சாடைமாடை யாகக் கசியத் தொடங்கியிருப்பது அரசுத் தரப்புக்கு ஆபத் தான விவகாரம்.

ஏற்கனவே, அரசுத் தலைமைக்கு எதிரான அதிருப்தி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் வளர்ந்திருப்பதால் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க அக்கட்சி பின்ன டிப்பதாகக் கட்சி வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசி யத் தொடங்கியிருக்கின்றன.

இந்நிலைமையில் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. ஆகியவற்றுடன் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு (மங்கள அணி) மற்றும் ஜாதிக ஹெலஉறுமயவின் அதிருப்திக் குழு ஆகியன ஒன்று சேர்ந்தால் வரவு செலவுத் திட்டத் தின்போது அரசை வீழ்த்திவிட கவிழ்த்துவிட நிறை யவே வாய்ப்புகள் உள்ளன.

ஆகவே, இந்த விடயத்தில் பிரதான எதிர்க்கட்சிகளான ஜே.வி.பியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஒன்றுபட விடாமல் பிரித்து வைப்பதன் மூலமே தன்னுடைய அர சைக் காபந்து பண்ணிக் கொள்ளலாம் என்பது அரசுத் தலை மைக்கு நன்கு தெரியும்.

இந்தப் பின்புலத்தில்தான் ஜே.வி.பியைத் தன்பக்கம் வளைத்துப்போடும் காய்நகர்த்தல்களை அரசுத் தலைமை நாசூக்காக மேற்கொண்டு வருகின்றது.

இன்றைய நிலைமையில் வரவு, செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றும் வரை ஜே.வி.பியை சீற்றமுற வைக்கக்கூடாது என்ற உள்நோக் கம் காரணமாகவே, இனப்பிரச்சினைக்குத் தென்பகுதி யின் தீர்வு யோசனைத் திட்டத்தைத் தயாரிக்கக் கூட்டப் பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத் தைக்கூட காலவரையறையில்லாமல் பெரும்பாலும் அடுத்த ஆண்டு முற்பகுதிவரை தள்ளிப்போட்டது அர சுத் தலைமை.

இந்தக் குழுவின் கூட்டம் மூலம், ஜே.வி.பிக்குத் திருப்தி தராத (பெரும்பாலும் அப்படித்தான் வரும்) யோசனைத் திட்டம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டால் அதன் காரண மாக ஜே.வி.பி. சீற்றம் கொண்டு அரசைக் கவிழ்க்க முழு முனைப்புடன் களத்தில் இறங்கிவிடும் என்ற அச்சம் அர சுக்கு உண்டு. அதனாலேயே அந்தக் கூட்டம் தன்பாட்டில் தள்ளிப்போகத் தாராளமாக இடமளிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு அரசியல் ரீதியாக ஜே.வி.பியைப் பகைத்துக் கொள்ளாமல், அதன் நாடியைத் தடவி, காரியத்தை நகர்த் தும் தனது தந்திரோபாயத்தை வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றும் விடயத்திலும் அரசு பயன்படுத்துகின்றது. இதற்காக ஜே.வி.பியை சமாளிக்கும் திருப்திப்படுத்தும் காரியங்களை அரசுத் தலைமை இப்போதைய கால கட்டத்தில் முன்னெடுக்கும் என்பது இலகுவாக ஊகிக் கத்தக்கதே.

பௌத்த, சிங்களத் தீவிரப் போக்கிலும் இனவாதத் திமி ரிலும் திளைத்து நிற்கும் ஜே.வி.பியை சமாளிப்பதற்காக இன்றைய நிலையில் அதன் சிந்தனைப் போக்கின் வழியே ஓடுவதே அரசுத் தலைமையின் செயற்பாடாக இருக்கும்.

""சதா சிரித்துக் கொண்டிருக்கும் பயங்கரவாதியான தமிழ்ச்செல்வனைக் கொன்றொழித்தமையுடன் அரசுப் படைகள் ஓய்ந்துவிடக் கூடாது. முழுப் புலிப் பயங்கரவாதி களையும் அழித்தொழிக்கும் வரை படைகள் முழு மூச் சுடன் செயற்பட வேண்டும்.'' என்று நாடாளுமன்றில் கொக்கரிக்கின்றார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ.

ஜே.வி.பியை "தாஜா' பண்ணும் வகையில் அதே சூளுரையை தமிழரின் விடுதலைப் போராட்ட சக்தியை அழித் தொழிக்கும்வரை ஓயமாட்டோம் என அரசின் பிரத மரிலிருந்து பாதுகாப்புச் செயலாளர் வரை அரசுத் தரப்பில் அனைவருமே விடுக்கின்றனர்.

நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டு அது பின்னர் குழு நிலை விவாதங்களையும் தாண்டி, இரண்டாம், மூன்றாம் வாசிப்புகளின் பின் முற்றாக நிறைவேறும் வரை இதே தீவிரப் போக்கு இன்னும் அதி தீவிர வெறிப் போக்காக அரசுத் தரப்பிலிருந்து வெளிப்படும் என நிச்சயம் நம்பலாம்.

தனது அரசியல் இருப்புக்கும், அரசியல் செல்வாக்குக் கும், குறுகிய அரசியல் இலாபங்களுக்கும் தன்னுடைய படை நடவடிக்கைகளையே நம்பியிருக்கும் மஹிந்தரின் அரசு, வரவு செலவுத் திட்டக் கண்டத்திலிருந்து மீளுவதற்கும் அதே தந்திரோபாயத்தையே நிச்சயம் பயன்படுத்தும் என்பதை வெளிப்படையாகவே ஊகிக்க முடியும்.

-உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா 2ம் உலகபோரின் போது ஜப்பான் மீது மேற்கொண்ட பாரிய தாக்குதலை போல, சிங்கள அரசின் மீது புலிகள் தாக்குதல் மேற்கொள்ளாமல், சர்வதேசம், சட்டங்கள் என்று கூறிகொண்டிருந்தால், புலிகள் முற்றிலும் அழிந்து போகவேண்டிய நிலை உருவாகும்.

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இன்று பாரளமன்றத்துக்கு பட்ஜெட் சமர்பிக்க செல்கிறார். அவர் ஹெலிகாப்டரில் சென்றார் ஆனால் ஹெலிகாப்டர் சென்றபாதையில் சகலவாகனங்களையும் நிறுத்திவிட்டார்கள். சரியான ட்ராபிக் ஜாம் இன்று. ஒரு அடிக்கு ஒரு பொலிஸ் இராணுவம் என சகல பாதைகளிலிம் பந்தோபஸ்து.

கொழும்பிலிருந்து நண்‍பர் ஒருவர் அனுப்பிய செய்திக்குறிப்பு

Edited by வலைஞன்
ஒருமையில் விளிப்பதைத் தவிர்க்கவும்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மூன்றாவதும் அடுத்த வருடத்திற்கானதுமான வரவு-செலவுத்திட்டத்தை சிறிலங்கா அரச தலைவரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ச இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<<This post has been edited by வலைஞன்: Today, 04:34 PM

Reason for edit: ஒருமையில் விளிப்பதைத் தவிர்க்கவும்>>

மன்னிக்கவும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் இனிமேல் இப்படியான தவறுகள் நடக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு செலவினம் 2 ஆயிரத்து 721 கோடி ரூபாவினால்அதிகரிப்பு

வீரகேசரி நாளேடு

வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவினமாக 16 ஆயிரத்து ஆறு கோடியே 44 இலட்சத்து ஏழாயிரம் ரூபா (1.48 பில்லியன் டொலர்) ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியினைவிட இத்தொகை இரண்டாயிரத்து 721 கோடியே 20 இலட்சத்து 9 ஆயிரத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் பாதுகாப்பு செலவினம் 139.4

பில்லியன் ரூபாவாகும். அதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு 176,474 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்ட அறிக்கையின் அட்டவணையின் ஒவ்வொரு அமைச்சுகளுக்குமான நிதி ஒதுக்கீட்டு விபரங்களும் அதிகரிக்கும் தொகைகளும் மதிப்பிடப்பட்டுள்ளன. 52 அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் அவற்றுக்கான செலவு தலைப்புகளும் மாத்திரமே அட்டவணையில் காண்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய சில அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் முக்கியமான மற்றும் தொடர்புபட்ட அமைச்சுக்களின் செலவு தலைப்புகளில் இணைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை ஜனாதிபதி செலவினம் அடுத்த ஆண்டுக்கான அட்டவணையில் காண்பிக்கப்படவில்லை. சில அமைச்சுக்களுக்கான சொந்த செலவினங்களும் காண்பிக்கப்படவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சிந்தனையின் கீழான மூன்றாவது பட்ஜெட் மக்களுக்கு விடுத்திருக்கும் செய்தி

[10 - November - 2007]

காலகண்டன்

மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் மூன்றாவது வரவு - செலவுத் திட்டம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதியே நிதியமைச்சராக இருப்பதனால் கடந்த இரண்டு வரவு - செலவுத் திட்டங்களை சமர்ப்பித்தது போன்று இம் முறையும் அவரால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழ் நிதி அமைச்சை ஜனாதிபதியே தம்வசம் வைத்திருப்பது ஏற்கனவே வழமையாகிவிட்டது.அவ்வாறு வைத்திருப்பதனால் எவ்வித அதிசயங்களும் இதுவரை நடந்ததில்லை. இனிமேலும் நிதித்துறையில் நடைபெறப்போவதுமில்லை.

இந்நிலையிலேயே, 2008 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. மொத்தச் செலவீனம் 104 ஆயிரத்து 418 கோடி ரூபாக்கள். வருமானம் 75 ஆயிரத்து 74 கோடி ரூபாக்கள். இதனால், துண்டுவிழும் தொகை 29 ஆயிரத்து 344 கோடி ரூபா எனவும் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. செலவீனத்தில் ஆகக்கூடிய தொகையாக 16 ஆயிரத்து 640 கோடி ரூபாக்கள் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருட பாதுகாப்புச் செலவுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 19 வீதத்தால் உயர்வடைந்திருக்கிறது. ஆனால், பாதுகாப்புச் செலவீனம் அடுத்த ஆண்டில் மேலும் பல குறைநிரப்புப் பிரேரணைகளால் பல கோடிகள் ஒதுக்கப்படும் என்பது திட்டவட்டமானதாகும்.

துண்டுவிழும் தொகையை ஈடுசெய்வதற்கு வெளிநாட்டு நிதி பெறுவதும் உள்நாட்டில் மறைமுக நேர்முக வரிகள் மூலம் பெற்றுக் கொள்வதற்கும் வழிவகை கூறப்பட்டுள்ளது. மதுபானம், சிகரெட் வகைகளுக்கு நேரடி விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, அத்தியாவசியமற்ற பொருட்களின் மீதான வரி 0.5 வீதத்திலிருந்து 1 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கப்பால் பல்தேசியக் கம்பனிகளுக்கோ, அவற்றின் சுரண்டிச் செல்லும் மூலதனங்களுக்கோ எவ்வித வரிகளும் விதிக்கப்படவில்லை. அதேவேளை, மக்கள் அனைவரும் இன்று சுமக்க முடியாது திணறி வரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு ஏற்ற எவ்வித நடவடிக்கையும் இவ்வரவு - செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் இன்றைய அதிகரித்த விலைகள் மேலும் மாதாமாதம் அல்லது நாளாந்தம் உயர்ந்து செல்லும் போக்கைத் தடுத்து நிறுத்தக் கூடிய எந்தவொரு திட்டமும் இவ்வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. குறிப்பாக, அரிசி, சீனி, கோதுமை மா, செத்தல் மிளகாய், தேங்காய், மரக்கறி வகைகள், மீன் என்பனவற்றின் விலை ஏற்றங்களுக்கு கட்டுப்பாடுகளோ, விதிமுறைகளோ முன்வைக்கப்படவில்லை. எனவே, அடுத்த ஆண்டில் அரைப்பட்டினி முழுப் பட்டினியாகக் கூடிய அபாயமே இவ் வரவு - செலவுத் திட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் மத்தியில் ஒரு கண்துடைப்பைச் செய்து கொள்ளும் வகையில் சிறுசிறு துண்டங்கள் எறியப்பட்டுள்ளன. அவற்றைக் கவ்விக் கொண்டு மக்கள் திருப்தியடைய வேண்டும் என்பதே வரவு - செலவுத் திட்டம் உணர்த்தும் செய்தியாகும். வருமானம் குறைந்தோருக்கு 100 ரூபா மண்ணெண்ணெய் மானியம், சிறிய கழிவு விலையில் ஓட்டோக்களுக்கு பெற்றோல், தோட்டத் தொழிலாளர்களுக்கு அரிசி, மா, மண்ணெண்ணெய் என்பனவற்றை சலுகை விலையில் பெற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கு ஜனவரி 2008 இல் இருந்து ஜூன் மாதம் வரை 375 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்கப்படும். இத்தொகை ஜூன் 2008 இல் இருந்து மேலும் 375 ரூபாவால் கூட்டிக்கொடுக்கப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பால் உற்பத்திக்கும் விவசாய உள்ளீடுகளுக்கும் விலை உயர்வும் மானியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு சளாப்பல் முன்மொழிவுகள், எதிர்பார்ப்புகளுடன் 2008 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இதனை முழுமையாக நோக்குமிடத்து, நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைத்து வாழும் அனைத்து மக்களையும் ஏமாற்றியுள்ள அவர்களது அன்றாட வாழ்வுப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறு நிழல் கூடத் தர முடியாத வரவு - செலவுத் திட்டம் என்றே கூறுதல் வேண்டும். அதேவேளை, பாதுகாப்புச் செலவீனத்திற்கு ஆகக் கூடிய தொகையை ஒதுக்கியதன் மூலம் வடக்கு - கிழக்கில் யுத்தத்தை மேலும் முனைப்பாக்கி நிற்கும் ஒரு இராணுவத்தன்மை கொண்ட வரவு - செலவுத்திட்டம் என்றும் கூறலாம். இதனை நியாயப்படுத்தவே ஜனாதிபதி தமது வரவு - செலவுத் திட்ட முன்வைப்பு, உரையின் போது பயங்கரவாதத்தை ஒழிப்பதே சகலவற்றையும் விட முக்கியமானது எனக் கூறி இருந்தார். அதன்மூலம் உள்நாட்டு வளங்களை அபிவிருத்தி செய்யவும் அவற்றில் தங்கியிருக்கவும் முடியும் என்றும் கூறி இருந்தார்.

மேற்கூறிய இரண்டு விடயங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவைகளாகும். பயங்கரவாதம் எனக் குறிப்பிடப்படுவது யுத்தமாகி நிற்கும் தேசிய இனப்பிரச்சினையாகும். உள்நாட்டு உற்பத்தியில் தங்கியிருப்பது என்பது தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகும். முன்னையதற்கு அரசியல் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தை மூலம் வடக்கு - கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நியாயமான உரிமைகளையும் அவர்களது அபிலாசைகளையும் வழங்கவேண்டும். பின்னையதற்கு உலகமய நிகழ்ச்சி நிரலின் கீழ் ஏற்கனவே இலங்கையின் தேசிய பொருளாதார அடிப்படைகள் தகர்க்கப்பட்டுள்ளன. அவற்றை மீளக் கட்டியெழுப்பிக்கொள்ள மகிந்த சிந்தனையிடம் உரிய திட்டம் எதுவும் இல்லை. உள்நாட்டு வளங்களைத் தமது சொந்தக் கரங்களிலும் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க வேண்டுமெனில், தாராளமயத்தையும் தனியார் மயத்தையும் எதிர்த்து நிற்றல் வேண்டும். நவ தாராளவாதப் பொருளாதாரத்தையும் அதன் அழிவுகரமான திட்டங்களையும் நிராகரிக்க வேண்டும். ஒட்டுமொத்தத்தில் ஏகாதிபத்தியத்தையும் அந்நிய மூலதன ஊடுருவல்களையும் எதிர்த்து நிற்க வேண்டும். அதற்குரிய துணிவும் ஆற்றலும் ஜனாதிபதியிடமோ, இந்த அரசாங்கத்திடமோ இல்லை. பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டி வாழும் விலாங்குத்தன நிலைப்பாட்டால் நாட்டையும் மக்களையும் வழிநடாத்த முடியாது. உலக நாடுகளுக்கு பயணம் செய்யும்போதெல்லாம் அந்நிய மூலதனங்களுக்கு அழைப்பு விடுத்து அவற்றுக்கு செங்கம்பள வரவேற்புச் செய்து கொண்டு எவ்வாறு சொந்த வளங்கள் பற்றியும் அவற்றில் தங்கி இருப்பது பற்றியும் பேச முடியும்.

அதேபோன்று, சொந்த நாட்டின் ஒரு பகுதியில் யுத்தம் செய்து மக்களையும் வளங்களையும் நாளாந்தம் பயங்கரவாதத்தின் பெயரால் அழித்தொழித்துக் கொண்டு எவ்வாறு அபிவித்தி, சுபீட்சம் பற்றிப் பேசிக்கொள்ள முடியும். நாடும் மக்களும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பூதாகரமாக வளர்ந்து செல்கின்றன. ஆனால், ஆளும் வர்க்க சக்திகளாக உள்ளவர்களுக்கு அவை பற்றி எவ்வித அக்கறையும் கிடையாது. அவர்களின் குறிக்கோள் யாவும் எவ்வாறு ஆட்சி அதிகாரத்தில் நிலைத்து நீடித்து நிற்பது என்பதேயாகும். கடந்த அறுபது வருடகால பாராளுமன்ற ஆட்சி முறைமையின் கீழ் வருடா வருடம் வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்பட்டே வந்திருக்கிறது . ஆனால், ஏகப்பெரும்பான்மையான சாதாரண உழைக்கும் மக்கள் அவற்றால் பயன் எவற்றையும் பெறவில்லை. அப்படிப் பெற்றிருப்பின் இன்று இந்த நாடு தனக்குரிய வளங்கள், வாய்ப்பு வசதிகளுடன் கூடிய ஒரு சுபீட்சமடைந்த நாடாகத் திகழ்ந்திருக்கும்.

அதற்குப் பதிலாக வறுமையும் நோய்களும் உணவு, உடை இருப்பிடம் போன்றவற்றுக்கு ஏங்கி நிற்கும் நிலையும் வளர்ந்து வந்துள்ளமையைத்தான் காண முடிகிறது. வேலை இன்மையும் வேலைக்குரிய சம்பளமின்மையும் தொடரும் பிரச்சினைகளாகி உள்ளன. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைப்போரின் வாழ்க்கைத்தரம் எந்தளவில் உள்ளது என்பதே அடிப்படைக் கேள்வியாகும். இவற்றுடன் கூடவே கடந்த மூன்று தசா ப்தகால யுத்தம் தமிழ், முஸ்லிம் மக்களை வடக்கு, கிழக்கில் சின்னாபின்னமாக்கி வந்துள்ளது. அப்பிரதேச எல்லைப்புற சாதாரண மக்களான சிங்கள மக்கள் கூட இவ் யுத்தத்தால் பாதிக்கப்பட்டே வந்துள்ளனர்.

இவ்வாறு சகல முனைகளாலும் ஏகப்பெரும்பான்மையான மக்கள் தலைநிமிர முடியாத அளவுக்கு ஆளும் வர்க்க சக்திகளால் தொடர்ந்து அமுக்கி அடக்கி ஆளப்பட்டு வந்திருக்கிறார்கள். இன்றும் அந்த நிகழ்வுப் போக்கு நீடித்துச் செல்கிறது. அதேவேளை, சுரண்டல் ஊழல் மோசடிகள் மூலம் ஆளும்தரப்பினர் தமக்குரிய சகல வளங்களையும் பெற்று அனுபவித்து வருகின்றனர்.

யுத்தத்தின் மறைவில் எத்தனை விதமான ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன. ஒரு புறத்தில் நேரடி யுத்தத்தால் வடக்கு , கிழக்கு மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றனர். மறுபுறத்தால் பொருளாதார நெருக்கடிகளினால் தாங்க முடியாத துயரங்களுடன் வாழ்ந்து வர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.