Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2dpY.gif

அதென்ன குதிரை திறன்? ஏன் கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா?

எனது பள்ளி நாட்களில் நான் இப்படித்தான் சிந்தித்தேன்!

மிக அருமையான வினா!

குதிரையை விட வேகமாக ஓடி, அடித்துத் தின்னும் வலிமை படைத்த, புலி, சிங்கம் ஆகிய வலிமையான விலங்குகள் பெயரில் திறன்-அலகு தீர்மானிப்பதுதானே இயல்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்!

இன்னும் சொல்லப்போனால், சிறுத்தைகள், ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும்!

ஏன் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, குதிரைத்திறன் - HorsePower என்று சொன்னார்களோ?

ஒருவேளை, திறன்-அலகு தீர்மானித்தவர்கள், சைவர்களாக இருப்பார்களோ?

அப்போதும் உதைக்கிறதே!

குதிரையைவிட வேகமாக ஓடும் மான்கள் இருக்க, குதிரைக்கு ஏன் ஓட்டு விழ வேண்டும்?

ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும் சிறுத்தையும், மணிக்கு 60 மைல் வேகத்தில் ஓடும் சிங்கம், புலி போன்ற விலங்குகள், சில-நிமிட நேரத்திலேயே, சோர்வடைந்து, வேகம் குறைந்து நின்றுவிடும்.

இவற்றுக்கு, அதிக-வேக ஓட்டத்தை, வெகுநேரம் தாக்குப்பிடிக்கும் திறன் - STAMINA - இல்லை!

குறுகிய தூரத்துக்குள் அடிக்க இயலவில்லை என்றால், இவற்றின் இரை-விலங்குகள் தப்பிவிடும்!

மாறாக, மற்ற எல்லா விலங்குகளிடமும் இல்லாத ஒரு திறன் குதிரையிடம் உண்டு!

சீராக, ஒரே வேகத்தில், நீண்ட நேரம் ஓடக் கூடிய திறன் - STAMINA, குதிரையிடம் மட்டுமே உண்டு!

எனவேதான், குதிரைத்திறன் (HORSE POWER) திறன்-அலகாகக் கொள்ளப்படுகின்றது!

வெகுநேரம் தாக்குப் பிடிக்கும் திறனில், குதிரைக்கு இணையான விலங்குகள் இவ்வுலகில் இல்லை.

Umamahesvari Ck

இக் கட்டுரையை எழுதியவர் எப்படியெல்லாம் யோசித்துள்ளார் 😂

https://ta.wikipedia.org/wiki/குதிரைத்_திறன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குதிரைத் திறன் (HP) என்பது திறனை (Power) அளவிடும் ஒரு அலகு ஆகும். இது குறிப்பாக இயந்திரங்கள், மோட்டார்கள் மற்றும் வாகனங்களின் திறனை அளவிடப் பயன்படுகிறது.

குதிரைத் திறன் என்றால் என்ன?

* திறன் (Power): திறன் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் வேலையின் வீதம் ஆகும்.

* வரையறை: ஒரு குதிரைத் திறன் (1 \ HP) என்பது, ஒரு குதிரை தொடர்ச்சியாகச் செய்யக்கூடிய சராசரி வேலையின் அளவை அடிப்படையாகக் கொண்டது.

* இதன் அசல் வரையறையின்படி: 550 பவுண்டுகள் எடையுள்ள பொருளை ஒரு வினாடியில் 1 அடி தூரம் தூக்குவதற்கு ஒரு குதிரை பயன்படுத்தும் திறனுக்குச் சமம்.

* வாட்ஸுடனான தொடர்பு: குதிரைத் திறனின் சர்வதேச அலகு (SI) அமைப்பில் உள்ள அலகான வாட்ஸ் (Watts) உடன் ஒப்பிடும்போது,

* 1 \ HP \ \approx \ 746 \ \text{வாட்ஸ்} \ (W) அல்லது 0.746 \ \text{கிலோவாட்} \ (kW) ஆகும்.

குதிரைத் திறன் ஏன் என்று அழைக்கப்படுகிறது? (வரலாறு)

* ஜேம்ஸ் வாட்: ஸ்காட்டிஷ் கண்டுபிடிப்பாளரான ஜேம்ஸ் வாட் (James Watt) என்பவரால் 18-ஆம் நூற்றாண்டில் இந்த அளவீடு உருவாக்கப்பட்டது. இவர் தான் நீராவி இயந்திரத்தையும் மேம்படுத்தியவர்.

* தேவை: நீராவி இயந்திரங்களை அறிமுகப்படுத்தியபோது, அந்த இயந்திரங்களின் திறனைப் பற்றி மக்களுக்குப் புரியவைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்குப் பழக்கப்பட்ட ஒரு அளவுகோல் தேவைப்பட்டது.

* ஒப்பீடு: அப்போது, சுரங்கங்களிலிருந்து நீரை வெளியேற்றுவது போன்ற வேலைகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வந்த குதிரைகளின் வேலை செய்யும் திறனுடன் தனது நீராவி இயந்திரத்தின் திறனை வாட் ஒப்பிட்டார்.

* பெயர் காரணம்: ஒரு சராசரி குதிரை எவ்வளவு வேலை செய்ய முடியுமோ, அந்த அளவைத் தரநிலையாகக் கொண்டு, அதற்குச் சமமான இயந்திரத்தின் திறனைக் குறிக்க "குதிரைத் திறன் (Horse Power)" என்ற பெயரைத் தேர்வு செய்தார்.

இந்த வரலாற்றுப் பின்னணியின் காரணமாகவே, நவீன வாகனங்கள், மோட்டார்கள் போன்றவற்றுக்கு வேறு எந்த விலங்கின் பெயரையும் பயன்படுத்தாமல், இன்றளவும் குதிரைத் திறன் (HP) என்ற அலகே பயன்படுத்தப்படுகிறது.

Sujath

############### ######################

அதுமட்டுமல்ல :

முக்கியமான ஒரு பாயிண்ட்டை நீங்கள் விட்டுவிட்டீர்கள். *சிறுத்தை உணவு க்காக தனது இரையை துரத்திக் கொண்டு ஓடும்.

*மான் தனது உயிரை காத்துக் கொள்வற்காக தலை தெறிக்க ஓடும்.ஆனால்! இவையெல்லாம் முதுகில் அதிக எடைகளை சுமந்து கொண்டோ, அல்லது இழுத்துக்கொண்டோ ஓடுவதில்லை.

ஆனால்! குதிரை அப்படியில்லை. தனியே வேகமாய் ஓடும் திறனும் உண்டு. மனிதர்களை முதுகில் சுமந்து கொண்டு ஓடும் திறனும் உண்டு.வண்டியில் பூட்டி ஒட்டினாலும் அதில் வைத்த கனமான எடையையும் இழுத்துக் கொண்டு ஓடும் திறனும் உண்டு. அதனால் தான் மோட்டார், எஞ்சின், வண்டி, வாகனங்களை புல்லிங் பவர் அடிப்படையில் குறிப்பிடும் போது... இத்தனை "குதிரை சக்தி", அதாவது இவ்வளவு "horse power" என்று கெப்பாசிட்டி அடிப்படையில் குறிப்பிடுகிறார்கள்.

நசிகேதன் நடராஜன்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

திறன் என்பது பிழை. திறன் என்பது efficient or efficiency, பொதுவாக தசம தானத்தில் கதைப்போம். உதாரணம்80% திறன் / 80 % efficient இயந்திரம் .

வலு தான் சரியான சொல் (குதிரை வலு). உதாரணம் 10 குதிரை வலு படகு .

  • 10ம் வகுப்பில் “வேலை, வலு, சக்தி” (work, power and energy) என்று ஒரு அத்தியம் இருந்தது விஞ்ஞான பாடத்தில்.

  • க. பொ. த உயர் தரத்தில் பெளதிகவியலில் முதல் பாடம் அலகுகளும் பரிமாணங்களும்(units and dimensions)

குதிரை வலு ஏன் வந்தது எண்டால், குதிரை தான் முக்கியமான போக்குவரத்து வழி, அதனால குதிரை வலு ஒரு அலக்காகியது. எப்படி ஒரு ஆப்பிளின் நிறை 1 நியூட்டன் (விசைக்கு (force)அலகு) போல . (ஆனால் ஆப்பிள் ஒவ்வொன்றும் வேற எடையா இருக்கும், அதே மாதிரி ஒவ்வொரு குதிரையும் வேற வலு இருக்கும்.)

ஒரு பெரியவர் எனக்கு சொன்னார், A9 சாலைக் கரையில உள்ள கிராமங்கள் எப்படி வந்து எண்டு? (பிரிட்டிஷ் காலத்தில அல்லது அதற்று முதல்) குதிரைக்கு ஒவ்வொரு 6 மைல் போனதும் தண்ணி வேணும், 12 மைல் போனதும் ஓய்வும் உணவும் வேணும். அதனால தான் ஒவ்வொரு 6 மைல்க்கும் சின்ன கிராமங்களும், 12 மைல்க்கும் கொஞ்சம் பெரிய கிராமங்களும் வளர்ந்தது.

Edited by ரதன்
Correct a typo

  • கருத்துக்கள உறவுகள்

குதிரைவலு, குதிரைத்திறன், குதிரைவிசை இவைஎல்லாம் சிறு வயதிலிருந்தே அனைவருக்கும் மனதில் பதிந்தது. மாற்றுவது கடினம். மாற்றினாலும் என்னதான் நியாயமான வாதங்கள் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள மனம் உடன்படாது. இந்துசமயம் எங்கள் சமயமல்ல என்ற உண்மையான மறுக்கமுடியாத வாதங்கள் இன்று இருக்கிறது ஆயினும் அதனை மாற்றுவதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மாற்ற முயன்றால் அது எங்கள் மனதையே வருத்தும். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பதுபோல், மனதில் படிந்த குதிரையும் மாறாது.

சிறுவயதில் எங்களுக்கு ஏற்படும் எண்ணங்களுக்கான தகுந்த தீர்வை தரமுடியாது பெரியோர்களும் சிரமப்பட்டதை சிரமப்படுவதை நாங்களும் பெரியோராகியதும் கண்டு உணரமுடிகிறது.

சிறுவயதில் ஆண் பெண் வித்தியாசமின்றி அவர்களுக்குள் தோன்றும் எண்ணங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் சொல்லமுடியாது முழிப்பதும், அன்றுதொட்டு இன்றுவரை பெரியவர்கள், படித்தவர்கள், மேதைகள் என்று உள்ளவர்களும் விழிபிதுங்கி நிற்பதையும், அதனை சமாளிக்க அவர்கள் சிறுவர்களை அதட்டி ஒடுக்குவதையும் வேறொரவர் சொல்லியல்ல, நாங்களே எங்கள் கண்களாலேயே காணுகின்றோம்.

“அனா” என்று சொல்லித் தந்துவிட்டு “அ” என்றுமட்டும் எழுத சரி என்கிறீர்களே? அந்த “னா” எங்கே போயிற்று? என்ற என் பேர்த்தியின் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.

இங்கு பேர்லின் நகரிலுள்ள ஒரு தமிழ் கல்விக்கழகத்தின் பாடசாலையில் “யானைய்” என்று பாடம் சொல்லித் தந்து எழுதும்படி ஆசிரியை ஒருவர் பாடம் சொல்ல, சிறுவர்கள் “யானை” என்று எழுத, அது பிழை என்று ஒரு ஆசிரியையே பிழை போட்டாராம், “ய்” யன்னா சேர்த்து “யானைய்” என்று எழுதவேண்டுமாம். அரை குறையாகப் படித்தாலும் அ,ஆ தெரிந்து ஆசிரியராக வந்தவர்கள் இங்கு சிலர் உள்ளனர். பொது இடங்களில் பிள்ளைகள் “ரீச்சர்”என்று அவர்களைக் கூப்பிடும்போது அவர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இதனை உங்களில் பலரும் கண்டு பார்த்திருக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.