Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!

அண்மையில் இளங்குமரன் பற்றி பதிவு போட்டதும் திடீரென NPP யிட்ட காசு வாங்கிட்டார் என்று கொஞ்சபேர் பேச தொடங்கிட்டினம். நான் முகநூலில் எழுதுவதை குறைக்க நினைப்பதற்கான காரணம் இதுதான். இங்கே இருக்கும் அநேகமான வாசிப்பாளர்களுக்கு யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் ஆர்வமில்லை .

தங்களுக்கு தேவையான பொய்களையும், புரட்டுகளையும் மட்டுமே எதிர்பார்ப்பவர்களாக பெரும்பாலானோர் மாறிவிட்ட சமூகமாகிவிட்டோம். இளங்குமரன் பற்றி நான் அவதானிப்பை வெளியிட்டேன். கட்சி அவரை பயிற்சி கொடுத்து வளர்த்து எடுக்கிறது என்று அவரது நடவடிக்கைகளை பார்த்து கூறி இருந்தேன்.

அதற்குப்பிறகு நடந்த ஒரு நேர்காணலில் இளங்குமரனே அதை ஒத்துக்கொண்டு உள்ளார். பாராளுமன்ற நாட்களில் இரவு 11 மணிவரை கூட வகுப்பு வைத்து கட்சி அவர்களுக்கு பயிற்சி வழங்குவதாக சொல்லி உள்ளார். அந்த நேர்காணலில் கட்சி எப்படி வடகிழக்கில் கால் ஊன்றுகிறது என்று தெளிவாக சொல்லி இருந்தார்.

அது கூட நான் பல தடவை சொன்னதுதான். ஒவ்வொரு பிரதேச மட்டத்திலும் இணைப்பாளர்கள் உள்ளார்கள். அரசியலுக்கு அப்பால் கட்சியை வளர்ப்பதில் கபிலன் போன்றோர் கடுமையாக உழைக்கிறார்கள்.

இளங்குமரன் அந்த பேட்டியில், "கபிலன் இங்கே இருந்து செயற்படுவதால் தான் எங்களால் ஓரளவு நிம்மதியாக கொழும்பிலே சென்று பாராளுமன்றத்தில் கலந்துகொள்ள முடிகிறது" என்று சொல்லியிருந்தார்.

தமிழ் எந்திரன் என்ற யூ டியூப் தளத்தில் அந்த பேட்டி உள்ளது. பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள், சில மாதங்களுக்கு முன் வாய் தடுமாறி உளறிக்கொட்டி ஊரெல்லாம் மீம்ஸ் ஆன ஒருத்தர் குறுகிய காலத்திற்குள் எப்படி இப்படி ஒரு பேட்டி கொடுக்க கூடிய ஆளாக மாற முடிந்தது?

நான் ஒரு ஊகத்தில்தான் எழுதினேன். ஆனால், சத்தியமாக பாராளுமன்றத்தினுள்ளேயே எக்ஸ்ரா கிளாஸ் வச்சு வகுப்பு எடுக்கும் அளவுக்கு யோசிக்கவில்லை. ஏதோ நான் எழுதுவதெல்லாம் உண்மை என்று சொல்வதற்காக இதை எழுதவில்லை.

எச்சரிக்கை மணிகளை புரிந்து கொள்ளுங்கள்.

சுமந்திரன் மாகாண சபை தேர்தலில் நின்றால் படு கேவலமாகத் தோற்பார்.

சைக்கிள் கட்சி தனித்து நின்றாலும் படு கேவலமாக தோற்கும்.

கஜேந்திரகுமார் மற்றும் மற்றைய கட்சிகள், (மறைமுகமாக) சிறீதரனின் ஆதரவுடன் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் போன்ற ஒருவரை முன்நிறுத்தினால் மட்டுமே மாகாண சபை தேர்தலில் வடக்கில் NPP நிறுத்துபவர் முதலமைச்சர் ஆவதை தடுக்க முடியும் என்று நான் எழுதியது போன வருசம்.

இளம்செழியனுக்கு கருத்து கணிப்பு நடத்தி ஆறு மாதம் ஆகிவிட்டது.

ஆனால், மாகாண சபை தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்று தமிழ் தலைவர்கள் யோசிக்கத் தொடங்க முன்னமே NPP ஒரு பல்கலைக்கழக விரிவுரைளாளரை மாகாண சபை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தி மக்கள் மத்தியில் நன்கு தெரியப்பட்ட ஆளாக வளர்த்து எடுத்துள்ளது.

இப்போதைய நிலைமையில் வடமாகாண சபை தேர்தலில் NPP யை தோற்கடிப்பது கடினமாகிவிட்டது.

கடைசி நேரத்தில் விக்னேஸ்வரன் போன்று ஒருத்தரை திடீரென ஃபேமஸ் ஆக்கி கைகாட்டினால் சனம் வாக்கு போடும் என்று சினிமா தன அரசியலையே நம்மட ஆட்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், NPP நேர்த்தியாக திட்டமிட்டு தன்னை வளர்த்தெடுத்து அரசியல் சித்தாந்த வகுப்பெடுக்கிறது.

ஜே.வி.பி. என்ற சிங்கள கட்சி யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்து அங்கே தமிழ் நூலகம் வச்சு இங்கே எந்தநாளும் எவரும் வந்து புத்தகத்தை எடுத்து போகலாம். இங்கே வேறு எந்த பாதுகாப்பும் இல்லை என்று சொல்லுகிறது என்பதைவிட அந்தக் கட்சியின் அரசியல் திட்டமிடலை விபரிக்க வேறு என்ன தேவை?

இப்போதைய நிலையில் NPP முன் நிறுத்தும் ஆள்தான் வட மாகாண முதலமைச்சர்.

கபிலனை விட இன்னும் அதிக தகுதியானவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்து நாங்கள் பதவிக்காக அரசியல் செய்பவர்கள் இல்லை என்று அதிரடி காட்டுவது பற்றியும் அந்த கட்சி யோசிக்கிறது.

தமிழ் தேசிய கட்சிகளுக்கு இருக்கும் ஒரே வழி கூட்டணி வச்சு பொது வேட்பாளரை நிறுத்தி, கணிசமான அளவு புதிய வேட்பாளர்களை நிறுத்துவது மட்டும்தான். அதுவும் இப்போதே செய்யவேண்டும். கடைசி நேரம் வரை காத்திருந்தால் அரோகரா தான்தான்.

சினிமா பாணியில் கடைசி நேரத்தில் திடீர் கூட்டணி அமைச்சு அதிரடி காட்டி, புதுசா ஒருத்தரை வேட்பாளராக காட்டி திடீர் முதல்வர் ஆக்கலாம் என்ற தேய்ந்து போன மக்களை முட்டாளாக்கும் அரசியல் இனி சரி வராது.

ஏனென்றால் உங்களுக்கு போட்டியாக இருப்பது சாதாரண ஆள் அல்ல!

NPP என்ற, வெளியே காட்டிக்கொள்ளாத அறிவுஜீவிகளால் நடத்தப்படும் பெரிய அமைப்பு!

திரும்பவும் சொல்லுறன், இது NPP யிற்கு சொம்பு தூக்கும் பதிவல்ல, தமிழ் அரசியலின் தற்போதைய நிலையை விளக்கும் பதிவு.

ஆறு மாதங்களுக்கு முன் நீதிபதி இளம்செழியனை முன்நிறுத்தி கருத்து கணிப்பு நடத்தியபோது பலர் திட்டி இருந்தார்கள். அப்போது அதை நான் செய்ய காரணம் இப்படி நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான்.

இன்னும் ஆறு மாதம் கழித்து இந்த பதிவை காட்டி நான் இதை அப்போதே சொல்லி விட்டேன் கேட்டீர்களா என்று எழுதும் நிலை வந்தால், வடமாகாணத்தில் NPP யின் முதலமைச்சரே இருப்பார்.

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!

சிவச்சந்திரன் சிவஞானத்தின் முகநூல் பக்கத்தில் இருந்து...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசியக் க(கா)ட்சிகள் எதிர் என்பிபி என இருக்கும் என நினைத்தால் என்பிபி எதிர் தமிழ்தேசியக் க(கா)ட்சிகள் என மாறிவிட்டதா?!

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பார்த்தால் - தெற்கில் என் பி பி தோற்றாலும் வடக்கில் வெல்லும் போல இருக்கிறது.

கிழக்கில் கஸ்டம்.

அங்கே தமிழர்களும், முஸ்லிம்களும், தத்தம் இனச்சார்பு அரசியலின் அவசியத்தை, அரசியல்வாதிகளின் கோமாளித்தனத்தையும் தாண்டி, புரிந்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

வடமாகாண சபையை என் பி பி கைப்பற்றினால் - யாழ்கள ஊர்புதினம் பகுதியில் comments ஐ disable பண்ணி விடலாம்😂.

வட்டுகோட்டை தீர்மானத்தோடு ஆரம்பித்த வட்டம் (பூச்சியம்) வந்த இடத்துக்கே மீள வந்து தன்னை பூர்த்தி செய்த இடமாக அந்த வெற்றி இருக்கும்.

வட மாகாணசபையை என் பி பி கைப்பற்றினால் - முதலாவது தீர்மானம்…

மாகாணசபை ஒழிப்பை கோருவதாக அமையக்கூடும்.

பிகு

கடக்கும் ஒவ்வொரு வருடமும் 1987 இல் எந்த பெரிய தவறை விட்டோம் என்பதை ஒவ்வொரு மடங்கு அதிகரித்தே, காட்டி செல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழ் எந்திரன் என்ற யூ டியூப் தளத்தில் அந்த பேட்டி உள்ளது. பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள், சில மாதங்களுக்கு முன் வாய் தடுமாறி உளறிக்கொட்டி ஊரெல்லாம் மீம்ஸ் ஆன ஒருத்தர் குறுகிய காலத்திற்குள் எப்படி இப்படி ஒரு பேட்டி கொடுக்க கூடிய ஆளாக மாற முடிந்தது?

ஆரம்பத்தில் இளங்குமரனின் சில பேட்டிகளையும், பேச்சுகளையும், பாராளுமன்ற உரையையும் கேட்ட பின், இவர் எப்படி அந்தக் கட்சியில் ஒரு முக்கியஸ்தர் ஆனார் என்றே தோன்றியது. ஆள் சுத்தமானவர் போல, அதனால் தான் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் போல என்று நினைக்கவைத்தார். பின்னர் அவரின் பேட்டி, பேச்சு எதையும் பார்க்கவில்லை.

அவர் இந்த விடயத்திலும் கற்றுத் தேர்வது நல்ல ஒரு விடயம்..................👍.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தமிழ்தேசியக் க(கா)ட்சிகள் எதிர் என்பிபி என இருக்கும் என நினைத்தால் என்பிபி எதிர் தமிழ்தேசியக் க(கா)ட்சிகள் என மாறிவிட்டதா?!

1 hour ago, goshan_che said:

வட மாகாணசபையை என் பி பி கைப்பற்றினால் - முதலாவது தீர்மானம்…

எமது தமிழ் தேசியக் கட்சிகளே இவர்களை வெல்ல வைப்பார்கள்.

47 minutes ago, ரசோதரன் said:

அவர் இந்த விடயத்திலும் கற்றுத் தேர்வது நல்ல ஒரு விடயம்....

கிராமங்கள் தோறும் கிழமைக்கு கிழமை மக்களை சந்தித்து பிரசாரம் செய்கிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள்.

இளங்குமரனும் வகுப்பில் கலந்து கொள்கிறார்.

அதனால் முன்னரை விட தெளிவாக பேசுகிறார்.

எங்கடை எம்பி மாருக்கு யாரும் வகுப்பு எடுக்க முடியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 1/11/2025 at 06:16, ஈழப்பிரியன் said:

எங்கடை எம்பி மாருக்கு யாரும் வகுப்பு எடுக்க முடியுமோ?

வடக்கின் முதலமைச்சர் சுமந்திரன், கிழக்கின் முதலமைச்சர் சாணக்கியன். இது அவர்களின் கனவு. அதற்காக சில போலி அறிக்கைகள், சந்திப்புகள் தயாராகி இருக்கிறது. மக்கள் இன்னும் மூடர்கள் என்கிற மிதப்பு இவர்களுக்கு. தமிழரசுகட்சியென்றாலே; ஏமாற்றுக்கட்சி, மக்களை உசுப்பேத்தும் கட்சி என்பதை மக்கள் புரிந்துள்ளார்கள். வேறு தெரிவில்லாமலே அனுரா அரசை ஆதரிக்கிறார்கள் மக்கள். இத்தனை கட்சிகளை உள்ளிழுத்து விட்டவர்களே தமிழரசுக்கட்சிதான். பின் மக்களை குறை கூறுவார்கள். மக்களுக்கு கடமை செய்யாதவர்களுக்கு உரிமை இல்லை. எதுவும் செய்யாமல் கதிரையில் தொடர்ந்து இருக்க நினைப்பது சுத்த சுயநலம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.