Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ் செல்வன் ஹொந்த மினிகெக் "

Featured Replies

_40370067_thamilselvan_ap203ix.jpg

" எயா ஹொந்த மினிகெக் " (அவர் ஒரு நல்ல மனிதர்)"

தமிழ் செல்வன் குறித்து அப்துல் ஜப்பார்

தமிழகத்தில் ஏனைய ஊடகங்கள் செய்திகளைத் தருமுன்பே "முத்தமிழ்"

குழுமத்தில் படித்து விட்டேன்.

நான் தொட்டது கணினியா மின்சாரமா என்றொரு பேரதிர்ச்சி. நினைவுகள்

பின்னோக்கி நீங்கின.

2002 ஏப்ரல் 10ம் தேதி வன்னியில் தலைவர் பிரபாகரனுடனும் தத்துவாசிரியர்

அந்தன் பாலசிங்கதுடனும்

உலக ஊடகவியலாளர்கள் சந்திப்பு. மாலை ஐந்தே முக்காலுக்கு ஆரம்பித்து

ஏழேமுக்கலுக்கு முடிந்தது.

செய்திகளை உடனே அனுப்பும் வசதிகள் அங்கில்லாததால் பெரும்பாலானோர்

புறப்பட்டுச்சென்று விட்டனர்.

அதில் என்னை தங்களுடன் அங்கு அழைத்துச் சென்ற இலங்கை தினகரன் குழுவும் அடக்கம்.

மறுநாள் காலை கொழும்பு புறப்படும் நோக்கத்துடன் விடுதி பொறுப்பாளரிடம்

கிளினொச்சி வரை செல்ல

ஒரு வாகனம் ஏற்பாடு செய்து தர முடியுமா என்று கேட்டேன். "இல்லை உங்களை

இருக்கச் சொல்லி

இருக்கிறார்கள் " என்றார். யார் ? எதற்கு ? என்று என்னுள் எழுந்த

கேள்விக்கு பதில் சொல்லுமுகமாக பவநந்தன்

என்கிற இளைஞர் வந்தார். " ஐயா உங்களை தமிழ்ச் செல்வன் அண்ணா பார்க்க

விரும்புகிறார்" என்றார்

மீண்டும் என்னுள் ஆச்சரியம் கலந்த ஒரு குழப்பம். என்னையா, என்னைத்தானா,

ஏன், எதற்கு என்கிற

கேள்விகள். சற்று நேரத்தில் வண்டி வந்தது. தமிழீழ பொருண்மிய தலைமைச்

செயலகத்துக்கு அழைத்துச்

சென்றார். காத்திருந்தேன். சற்று நேரத்தில், வெள்ளை உடையில், ஊன்றுகோல்

உதவியுடன், ஆனால்

உள்ளத்திலும் எண்ணத்திலும் ஊனமில்லாத பளீர்ச்சிரிப்பு கவர்ச்சி இளஞர்

கூப்பிய கைகளுடன் என் முன்

வந்தார். அவர்தான் இன்று அமரராகிவிட்ட சுப. தமிச்செல்வன்.

லண்டன் ஐ.பீ.சி - தமிழ் வானொலியில் வாரம் தோறும் ஒலிபரப்பாகும் தங்கள்

இந்திய கண்ணோட்டத்தை

தலைவர் தவறாமல் கேட்பார். அவர் களத்திலிருக்கும் காலங்களில் ஒலிப்பதிவு

செய்து அனுப்பச் சொல்வார்.

உங்களைப் பற்றி அதற்கு முன் அதிகம் தெரியாது. ஆனால் ஒலிப்பதிவுக்காக

கேட்க நேர்ந்தபோது நான்

தலைவரைவிட உங்களது பெரிய ரசிகனாகிவிட்டென்" என்றார். ஒரு குழ்ந்தையின்

குதூகலத்துடன்.

இந்திய அரசியல் நடப்புகளை - அதிலும் குறிப்பாக தமிழக நடப்புகளை முழுமையாக

- துல்லியமாக - அதுவும்

பாரபட்சமில்லாமல் பதினைந்து நிமிடங்களுக்குள் கோர்த்துத் தருவது அருமை"

என்று பாராட்டினார். என்

ஊடகத் துறை வாழ்க்கையில் அது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக

இன்னும் கருதி வருகிறேன்

சுமார் ஒரு மணி நேரம் கலகலப்பான உரையாடல். விடை பெறப்போனேன். இல்லை

இருங்கள் நாளைதான்

நீங்கள் போகிறீர்கள். மீண்டும் என்னுள் கேள்விகள் ஏன் ? எதற்கு ?

"வாகனம் ஏற்பாடு செய்திருக்கிறேன். எங்கள் நாட்டின் இருப்பை - நடப்பை

சற்று அவதானித்து விட்டு

வாருங்கள். பிறகும் பேசலாம்" என்றார்.

அப்போதுதான், இலங்கை விமானப்படையின் மிருகத்தனமான தாக்குதலுக்கு இறையான "செஞ்சோலை"

சிறுவர் இல்லத்தையும் பார்த்தேன். வெயிலால் அல்ல, அலைச்சலால் அல்ல ஆனால்

நான் நேரில் கண்ட

துயர் மிகு காட்சிகளால் உள்ளமும் உடலும் சோர்வடைய கனத்த இதயத்துடன்

தலைமையகம் திரும்பினேன்

அப்போதுதான் தலவருடனான சந்திப்பு பற்றி தமிழ்ச் செல்வன் சொன்னார். மறக்க

முடியாத - உணர்ச்சி

மயமான அந்தச் சந்திப்பு நிகழவும் செய்தது. அது பற்றிய கட்டுரை 2002 மே

முத்ல் தேதி ஜூனியர் விகடனில்

அட்டைப்படக் கட்டுரையாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். ஆனால் இங்கிருந்து யார் சென்றாலும்

அவர்களிடமெல்லாம் என் நலன்

விசாரித்திருக்கிறார். அவர் ஜெனீவா வந்திருந்த போது ஐ.பி.சி நண்பர்களிடம்

என் நலம் விசாரித்ததாகச்

சொன்னார்கள். கூடவே இரண்டு பாராட்டுரைகளையும் சேர்த்தே சொல்வாராம்.

அத்தகைய நல்ல மனிதர்

அந்த அளவு அன்பைப் பெற அவருக்காக நான் எதையும் செய்து விடவில்லை என்பதுதான் உண்மை.

விடுதலைப் புலிகள் என்றால் கொழும்பில் நெருப்பை உமிழ்பவர்கள்

இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியிலும்

கூட தமிழ்ச் செல்வனுக்கு நல்ல மதிப்பு - மரியாதை. அவரைப் பற்றி ஒரு வெறி

பிடித்த சிங்களப் பேரின

வாதி சொன்ன வாக்கியம் இன்னும் என் காதுகளில் ரீங்கரிக்கிறது. " எயா

ஹொந்த மினிகெக் "

அவர் ஒரு நல்ல மனிதர் என்று பொருள்.

எதிரியின் வாயிலிருந்து கூட வந்த இந்த்ச் சொற்கள் தான் நாம்

அவருக்குச்சூட்டும் மிகப்பெரிய - மிகச்சிறந்த

புகழஞ்சலியாக இருக்கக் கூடும். அவரது நல்லாத்மா சாந்தியடைய பிரார்த்த்ப்போம்.

- சாத்தான்குளம். அப்துல் ஜப்பார்.

tamilcelvanhk6.jpg

கொழும்பு நோக்கி சமாதான பேச்சு வார்த்தைக்காக

உலங்கு வானூர்தியில் ஏறுவதற்கு முன் தன்மகனை அரவனைத்து மகிழ்ந்த ஒரு காட்சி

ஒரு பயங்கரவாதியாக கருதப்பட்ட ஒருவருக்காக

அதுவும் ஒரு எதிரிக்காக தங்களது வார்த்தைகளை

வடிக்காமல் விட்டதையும்

அவரது இழப்பில் மகிழ்வதை விடுத்து

அவரது இழப்பு செய்தியை மட்டுமே பிரசுரித்ததையும்

சிங்கள பத்திரிகைகள் கூட செய்தன என்றால்

அதை நான் அண்மைக் காலத்தில் கண்டது

தமிழ்செல்வனுக்காக மட்டுமே.............

இலங்கை அரசின் சிலரை தவிர

பெரும்பாலானவர்கள் இவரது கொலையை

ஏற்க மறுப்பது அதிலிருந்தே தெரிகிறது.

எனவேதான் இலங்கை அரசு

தொலைக் காட்சியில்

அவர் குறித்த இராணுவ உடைகளோடு இருந்த

காட்சிகளை முதன்மைபடுத்தியது?

இருந்தாலும்

அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அது கூட

அந்த புன்னகைக்குள் இப்படி ஒரு வீரமா என்று

சிங்கள மக்களையே வியக்க வைக்க உதவியிருக்கிறது.

இராணுவ தரப்பு கூட

தாக்கியது

தமிழ்செல்வன் என்று தெரியாமல் என்று

வாய் தவறி சொன்னாலும்

அதன் அர்த்தம் என்ன என்பது பலருக்கு புரியும்?

அது சிங்கள மக்களிடமே நியாயப்படுத்த முடியாத ஒன்றாகியிருக்கிறது?

எனக்கு தெரிந்த பல சிங்கள ஊடகவியலாளர்கள்

தமிழ்செல்வனோடு இணைந்து எடுத்துக் கொண்ட

புகைப்படங்களை மகிழ்வோடு காட்டியிருக்கிறார்கள்.

தமிழ்செல்வன் குறித்து பேசும் போதெல்லாம்

மகிழ்வோடு அவர் குறித்து பேசியதை கண்டிருக்கிறேன்.

எனக்கு அவை அன்று வியப்பையே தந்தது?

மேலே உள்ள புகைப்படத்தைக் கூட

சிங்கள ஊடகங்கள் இணைத்தது

தமிழ்செல்வன் மிக மென்மையான ஒருவர் என்று

வெளிபடுத்தும் நன்றியறிதலோடு என்றே

நினைக்க வைக்கிறது.

கொலையாளிகளாக இல்லாமல்

போராளிகளாக இருக்க முடியாது.

அவரது கடந்த காலத்தை வைத்து

அவரது நிகழ்காலத்தை குதற நினைப்பவர்கள்

நம்மில் மட்டுமே இருக்கிறார்கள்?

இருந்தாலும்

எதிரிகள் கூட மதிக்கும்

ஒரு மனிதனாக தமிழ்செல்வன் வாழ்ந்திருக்கிறார்.

அது அவரது புன்னகையும்

அவரது எண்ணமும் கொடுத்த கொடை.

தமிழ்செல்வனை அழிப்பதற்கு

யார் நினைத்திருந்தாலும்

அவர்கள்

அவரை மக்கள் மனங்களில் என்றென்றும்

வாழவே வழி செய்திருக்கிறார்கள்.

LTTE.sp_tamilselvan9.jpg

அனைத்தும் அழிந்து போகும்

உன் புன்முறுவல் நினைவுகள் அழியாது தமிழ் செல்வனே!

- அஜீவன்

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன், இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தசங்கர தேரர் மட்டும் கடந்த வார சண்டே ஒவ்சேவரில் பிரிகேடியர் தமிழ்ச் செல்வனின் இழப்புடன் புலிகள் பூச்சிய நிலைக்குபோய்விட்டார்கள் என எழுதியுள்ளார்.

நன்றி அஜீவன் அண்ணா

ஆம் இன மத பேதமில்லாமல் அனைவரும் நேசிக்கும் ஒரு நல் ஆத்மாவை இன்று

நாம் இழந்துவிட்டோம்.நெஞ்சம் கனக்கிறது.அவர் கனவு பலிக்க அவர் பணி நாம்

தொடர்வோம்.அவருடன் கழிந்த நாட்கள் என்றும் பசுமை

நன்றி அஜீவன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன், இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி அஜீவன் அண்ணா.

ஆனந்தசங்கர தேரர் மட்டும் கடந்த வார சண்டே ஒவ்சேவரில் பிரிகேடியர் தமிழ்ச் செல்வனின் இழப்புடன் புலிகள் பூச்சிய நிலைக்குபோய்விட்டார்கள் என எழுதியுள்ளார்.

:lol:^_^:):wub: நல்ல ஒரு பகிடி!!

அந்த கட்டுரை.....

p10sh1.jpg

ஏப்ரல் 10-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை யாளர் சந்திப்பு, ஏழேமுக்கால் மணிக்கு எந்த அசம்பாவிதமுமின்றி முடிவடைந்தது. பத்திரிகையாளர்கள் அவரவருக்குரிய வசதிகளை பயன்படுத்தி, உலகுக்குச் செய்தியை அனுப்பிவைக்கும் முயற்சிகளில் தீவிரமாயினர். நான் சென்ற பணி இரவு எட்டு மணிக்குத் தொடங்கியது. தொகுப்புரையோடு சேர்ந்து, மூன்று மணி நேரம் எனக்கான ஒலிபரப்பை முடித்தேன். நள்ளிரவில் தங்கும் வளாகம் திரும்பியபோது, பெரும்பாலான வர்கள் புறப்பட்டுச் சென்றிருந்தார்கள். இன்னும் சிலர் நல்ல உறக்கம்.

காலையில் எப்படித் திரும்புவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஐ.பி.சி-யின் உள்ளூர் நிருபர் பவனந்தன், ''விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்!'' என்று ஒரு ஆச்சரியக் குண்டு போட்டார்.

பயணத் திட்டத்தைத் தள்ளிப்போட்டேன். மறுநாள் காலை சென்றேன். உள்ளத்திலும் எண்ணத்திலும் ஊனமில்லாத, ஆனால், ஒரு கைத்தடியின் உதவியுடன் நடக்கும் பளீர் சிரிப்பு, கவர்ச்சி இளைஞர் தமிழ்ச்செல்வன். ''நான் உங்கள் பரம ரசிகன், ஐயா...'' என்று அவர் பங்குக்குக் குண்டு போட்டார். ''நாடகம், கிரிக்கெட் வர்ணனை, கவிதை கேளுங்கள், இந்தியக் கண்ணோட்டம், அரசியல் வர்ணனை ஆகிய உங்கள் நிகழ்ச்சிகள் வன்னியிலும் பிரசித்தம்...'' என்று அவர் சொன்னபோது, எனக்குப் பெருமை பூத்தது. ''புலிகள் இயக்கம் செய்யும் நலப் பணிகளைப் பார்வையிடுங்கள். மாலையில் இன்னொரு பரம ரசிகர் உங்களைச் சந்திப்பார்...'' என்று சஸ்பென்ஸ் வைத்தார் தமிழ்ச்செல்வன்.

p13akl1.jpg

விடுதலைப்புலிகளின் தலைமையகத்துக்கு மாலையில் சென்றேன். 'பரம ரசிகர் யாராக இருக்கும்..?' என்ற கேள்வி என்னைக் குடைந்தது. கூடவே, 'விடுதலைப்புலிகளின் தலைவரையும் பார்க்க முடிந்தால்...' என்று ஒரு ஆசை. கனவு எதற்கு என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

தலைமையகத்துக்குப் பலர் வருவ தும் போவதுமாக இருந்தார்கள். மாலை ஆறு மணிக்கு அதே டிரேட் மார்க் சிரிப்புடன் தமிழ்ச்செல்வன் வந்தார். ''எங்கள் தலைவர் யாரை, எங்கே, எப்போது சந்திப்பார் என்பதை நாங்கள் கடைசிவரை ரகசியமாக வைத்திருப்போம்...'' என்றார். 'தெரிந்த விஷயம்தானே... இதை எதற்கு நம்மிடம் சொல்கிறார்' என்று நான் யோசிப்பதற்குள், ''இன்னும் சிறிது நேரத்தில் எங்கள் தலைவர் சந்திக்கப்போவது உங்களைத்தான்!'' என்று சொல்லி, என்னை உறையவைத்தார்.

படீரென பிரதான கபாடம் (கதவு) திறக்கிறது. ஒரு வாகனம் வேக மாக உள்ளே வந்து நிற்கிறது. ஆயுதம் தரித்த சில இளைஞர்கள் தாவிக் குதித்து வெளியே வருகிறார்கள். கதவு திறக்கிறது. கம்பீர உருவம் வெளிப்படுகிறது.

நின்று, நிமிர்ந்து, நிதானமாக சுற்றுப்புறத்தின்மீது ஒரு விழி வீச்சு. பிரஸ் மீட்டில் சஃபாரி உடையில் பார்த்த புலித் தலைவர் பிரபாகரனை ராணுவ மிடுக்கோடு, ராணுவ உடையில் மிக அருகில் பார்த்தபோது, கனவில் சஞ்சரிப் பது போன்ற ஒரு பிரமை. அருகே வந்து அன்புடன் கரங்களைப் பற்றி மலர்ந்த முகத்துடன், ''நான் உங்கள் பரம ரசிகன் ஐயா...'' என்று அவர் சொன்னபோது, எனக்கு உடனடியாக வார்த்தை கள் எதுவும் வரவில்லை!

''வாருங்கள், சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம்...'' என்று அழைக்கிறார். எத்தனையோ அலுவல்கள், காத்திருக்கும் முக்கியஸ்தர்கள்... இதற்கு மத்தியில் என்னோடு தனியே பேச்சா?!

''உங்கள் தமிழ், உங்கள் குரல், நீங்கள் விஷயத்தைச் சொல்லும் விதம் ஆகியவை எனக்கு ரொம்பவே பிடிக்கும்...'' என்று அவர் சொன்னபோது, குளிர்ந்து போனேன். குதூகலத்திலும் கூச்சத்திலும் நெகிழ்ந்தேன், நெளிந்தேன்.

''உங்களுக்கு எத்தனை மக்கள்?'' என்று நேராகக் குடும்ப விஷயம் விசாரித்தார். ''ஆண், பெண், ஆண்...'' என்றேன். ''எனக்கும் அப்படித்தான்!'' என்றார், ஒரு குழந்தையின் குதூகலத்தோடு.

அவரே தொடர்ந்து, ''என் இளைய மகனிடம் 'உனக்குச் சமாதானம் விருப்பமா..?' என்று கேட்டேன். 'ஓம்' என்றார். 'ஏன் அப்படி..?' என்று கேட்டபோது, 'அப்போதுதானே அப்பா என்ற கூட அதிக நேரம் இருப்பீகள்...' என்றார்!'' எனக் கூறிவிட்டு, எதிலோ லயித்தவாறு மௌனமாக இருந்தார் பிரபாகரன்.

பிறகு, தமிழ் பற்றிதான் நிறைய பேசினார். ''இலங்கைத் தமிழ், இந்தியத் தமிழ், மலேஷியத் தமிழ், புலம்பெயர்ந்த மக்கள் தமிழ் என்றாகி, நாளடைவில் தமிழே தனித்தனி மொழிகளாகிப் போகுமோ என்று கவலையாக இருக்கிறது. மேலைநாடுகளில் வாழும் தமிழ் மக்கள், தங்கள் வாழ்க்கைக்காக, அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும், தமிழ் மீது ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் தமிழ் குரூரமாகச் சிதைக்கப்படுகிறது...'' என்று வேதனைப்பட்டவர், ''தமிழுக்கு வரும் புதிய கலைச்சொற்கள் இனிமை யானதாக இருக்க வேண்டும். ரெஃப்ரிஜிரேட்டருக்கு 'தன்மி' என்றும் ஏர்கண்டிஷனருக்கு 'குளிர்மி' என்றும் ஒரு ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அதே போல டெக்ஸ்டைல் டெக்னாலஜியை ஒரு மாணவர், 'துகிலியல்' என்று பிரமாதமாகக் குறிப்பிட்டிருக்கிறார்...'' என்றார் முகம் முழுக்கச் சிரிப்போடு.

உடனே நான், ''உங்களுக்கு எசகு பிசகு என்றால் பொருள் தெரியுமா?'' என்று கேட்டேன்.

''பிசகு என்றால் பிழை என்பது தெரியும். ஆனால், எசகு என்றால் தெரியாது...'' என்றார் பிரபாகரன்.

''AIDS என்பதன் தமிழ்தான் எசகு...'' என்று நான் சொல்ல, ''அதெப்படி என்றார்?''

''எய்ட்ஸ் என்பதே ஒரு நீண்ட பெயரின் சுருக்கம்தானே? அதற்குத் தமிழ் பொருள் எதிர்ப்புச் சக்தி குறைவு. அதைச் சுருக்கினால் எசகுதானே...'' என்று நான் சொல்ல, ''இதென்ன உங்கள் கண்டு பிடிப்பா?'' என்று கேட்டார். ''இல்லை... ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு ஆசிரியர் சொன்னது...'' என்றேன். நிறுத்தி நிதானித்து அர்த்தபுஷ்டியுடன் ஒரு பார்வை... பிறகு, அடக்கமாட்டாத சிறு புன்னகை.

அவரோடு நான் பேசிக்கொண்டிருந்த போதே, புலிகளுக்கு எதிராகத் தமிழகத்தில் ஜெயலலிதா பேசிய விவரங்கள் அங்கே வந்து சேர்ந்தன. தகவலைக் கூர்ந்து கேட்டு விட்டு என் பக்கம் திரும்பியவர், ''அந்த மனுஷிக்கு நாங்கள் என்ன தப்பு செய்தோம்? எதற்காகத் தொடர்ந்து இப்படி எங்களை எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்?'' என்றார் லேசான வருத்தத் தோடு.

பக்கத்திலிருப்பவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்களே தவிர, முழுக்க நாங்கள்தான் பேசினோம். 165 நிமிடங்கள் போனதே தெரியவில்லை. விடைபெற்ற போது உணவால் வயிறும் உணர்வால் மனதும் நிறைந்திருந்தது.

பதினாலு லட்சம் கண்ணிவெடிகள்!

தமிழர் புனர்வாழ்வு மையத்தையும் அங்கே பார்வையிட்டு திரும்பியிருக்கிறார் அப்துல் ஜப்பார். அதுபற்றி அவர் சொல்வது -

''அந்த மையத்தின் பிரதான பணியே வன்னி யெங்கும் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடி களை அகற்றுவதுதான். உலகத்திலேயே மிக அதிக அளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட இடம் வன்னிதான் என்கிறார்கள். பதினாலு லட்சத்துக் கும் அதிகம்!'' என்கிறார்.

''கண்ணி வெடிகள் அகற்றும் இயக்கம் உலகெங்கும் பிரசித்திப் பெற்றதும். இளவரசி டயானா இதில் நேரடி அக்கறை செலுத்திய போதுதான், இந்தப் பணியில் ஈடுபடுவோருக்கு விசேஷ அங்கிகள், கவசங்கள் ஆகியவற்றை சர்வதேச அமைப்பு வழங்கியது. ஆனால், வன்னியில் செயல்படுவது அங்கீகரிக்கப்படாத அமைப்பு என்பதால், பாதுகாப்பு உடைகள் தங்களுக்கு மறுக்கப்படுவதாக இந்த அமைப்பின் தொண்டர் ஒருவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு எதுவும் இல்லாமலே இளைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கண்ணி வெடிகள் உள்ள பகுதிகளில், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து நன்றாகச் சேறாகும் அளவுக்கு நனைத்து விட்டு, இரும்பு முள் கரண்டிகளால் மண்ணைப் பிறாண்டி பிறாண்டி கண்ணி வெடிகளை வெளியே எடுத்துச் செயலிழக்கச் செய்கிறார்கள். கொஞ்சம் கவனபிசகு ஏற்பட்டாலும் கண்ணோ, காலோ, கையோ ஏன் உயிரேகூடப் போகும் அபாயம் உண்டு.

'இந்தக் கண்ணி வெடிகள் விடுதலைப்புலிகள் புதைத்ததாகவும் இருக்கலாமே?' என்ற கேள்விக்கு, 'அதுவாயிருந்தால் எளிதாயிற்றே... புதைக்கப்பட்ட இடங்களின் வரைபடங்களை அவர்களிடமே வாங்கி மளமளவென்று அகற்றி விடுவோமே... அதுவும் தவிர, புலிகளின் மரத்தால் ஆன கண்ணி வெடிகளுக்கு ஆயுட்காலம் ஆறு மாதங்கள் மட்டுமே. ஆனால், இலங்கை படைக்கு சீனாகாரர்கள் வழங்கியிருக்கும் வெடிகளின் ஆயுள் 150 வருடங்கள். பாகிஸ்தானியரின் தயாரிப்புக்கு நூறு வருடங்கள்!' என்று என்னிடம் சொன்னவர்கள்,

'சாதாரண கண்ணி வெடி என்றால், அதை மிதித்தவருக்கு மட்டும்தான் ஆபத்து. ஆனால், அத்துடன் இணைக்கப்பட்ட சிறிய ராக்கெட்டும் சேர்த்து வெடித்தால், நூற்றுஇருபது மீட்டர் சுற்றள விலுள்ள அத்தனை பேருக்குமே ஆபத்து' என்றும் சொன்னார்கள்...''

சில நாட்கள் இலங்கையில் இருந்துவிட்டுத்தான் அப்துல் ஜப்பார் திரும்பியிருக்கிறார். விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் எடுத்து இருக்கும் நிலை பற்றி அங்கிருக்கும் தமிழர்களிடம் பேசினாராம். அது பற்றி இவர் -

''ஜெயலலிதா அம்மையாரின் அணுகுமுறையில் அவர்களுக்கு கோபம் என்பதைவிட ஏமாற்றமே மேலோங்கி நிற்கிறது. 'ஆதரிக்க வேண்டாம்... எதிர்க்காமலாவது இருந்திருந்தால் எங்கள் உள்ளத்தில் அவர் எவ்வளவு உயர்ந்திருப்பார்!' என்றார் ஒரு பெரியவர்.

அதேசமயம், கலைஞரின் நடுநிலைமை வகிப்பை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 'கலைஞர், கலைஞர் என்று நெஞ்சில் கொண்டு திரிஞ்சம் நாங்கள். அதுக்கு இது வேணும் டாப்பா' என்று ஒருவர் என்னிடம் ஆற்றாமையோடு கூறினார்!''

  • தொடங்கியவர்

இணைப்புக்கு நன்றி வசிசுதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

!!! அனைவர் மனதிலும் தமிழ்ச்செல்வன் அண்ணா நிறைந்தே இருக்கின்றார். அவர் எங்கும் போய்விடவில்லை ! விடுதலைத் தீயிற்கு நெய்யூற்றி இருக்கின்றார்.

அந்த புன்முறுவல்களுக்கு விடுதலை ஈழம் பரிசளிக்க வேண்டும்!..

ஒன்றாய்க்கூடி அனைவரும் செயற்படுவோம்!.

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாளன் மாத்தையா கொந்த மினியா தமாய்" என்று தான் துட்டகைமுனுவும் எல்லாளன் இறந்த பிறகு அவன் சமாதிக்கு மரியாதை செலுத்தும்படி மக்களை கேட்டு கொண்டவர் தானும் செலுத்தினவர் ஆனால் எல்லாளன் உயிருடன் இருக்கும் போது அவருடன் சண்டை பிடிக்க வேண்டும் என்று இனவாதத்தையும் கக்கி கொண்டு தான் இருந்தவர் அவர் கக்கிய இனவாதம் இன்றும் தொடர்ந்து கொண்டு போகிறது.ஆக மிஞ்சினா ஒரு 5% சிங்கள மக்கள் தமிழ்செல்வன் நல்லவர் என்று சொல்லுவார்கள் மிச்சம் 95% மக்களும் எதிரான கருத்தை தான் சொல்லுவார்கள்.நாங்கள் 5% மக்களின் அபிலாசையை பிரசாரபடுத்த வேண்டுமா? அல்லது அந்த 95% மக்களின் வெறுப்பை பிரசாடபடுத்தல் நல்லதா? :rolleyes:

  • தொடங்கியவர்

"எல்லாளன் மாத்தையா கொந்த மினியா தமாய்" என்று தான் துட்டகைமுனுவும் எல்லாளன் இறந்த பிறகு அவன் சமாதிக்கு மரியாதை செலுத்தும்படி மக்களை கேட்டு கொண்டவர் தானும் செலுத்தினவர் ஆனால் எல்லாளன் உயிருடன் இருக்கும் போது அவருடன் சண்டை பிடிக்க வேண்டும் என்று இனவாதத்தையும் கக்கி கொண்டு தான் இருந்தவர் அவர் கக்கிய இனவாதம் இன்றும் தொடர்ந்து கொண்டு போகிறது.ஆக மிஞ்சினா ஒரு 5% சிங்கள மக்கள் தமிழ்செல்வன் நல்லவர் என்று சொல்லுவார்கள் மிச்சம் 95% மக்களும் எதிரான கருத்தை தான் சொல்லுவார்கள்.நாங்கள் 5% மக்களின் அபிலாசையை பிரசாரபடுத்த வேண்டுமா? அல்லது அந்த 95% மக்களின் வெறுப்பை பிரசாடபடுத்தல் நல்லதா? :rolleyes:

என்றும் எதிரிகளாக வாழ்வதை விட

ஒருவர் நியாயமானவர் என்று ஒரு சிலர் பேசும் போது

அவர் வாழ்ந்த வாழ்கை

அல்லது

அவரது போராட்ட வாழ்வு நியாயமானது என்பதையே

நான் கருத்தில் கொள்கிறேன்.

தமிழ் செல்வன் நல்லவர் என்று நான்கு பேர் சொல்லும் போது

அவர் இருந்த போராட்ட வாழ்வு நியாயப்படுத்தப்படுகிதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.