Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகப் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்க செயற்பாட்டின் கீழ் சிறீலங்காவுக்கு ஆயுத உதவி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கள்" இப்படித்தான் உலக வல்லாதிக்க சக்திகள் தங்கள் சர்வதேச வல்லாதிக்க விரிவுபடுத்தல் செயற்பாடுகளுக்கு இடைச்சலாக உள்ள அமைப்புக்கள் அனைத்தையும் உச்சரித்து வருகின்றன.

2001 செப் 11 க்குப் பின்னர் சர்வதேசப் பயங்கரவாதத்துக்கு எதிரான நேரடிப் போரை அமெரிக்கா ஆரம்பித்து ஆப்கானிஸ்தான் ஈராக் என்று தனது நலனுக்கு ஒத்திசையாத நாடுகளை தனது இராணுவ இயந்திரத்தின் பலத்தைப் பிரயோகித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் தொடர்சியாக பல இலட்சம் அப்பாவி மக்களும் பல்லாயிரம் அமெரிக்கப்படையினரும் தங்கள் உயிர்களை இழந்தனர். பலர் ஊனமுற்றனர்.

இன்று அதே அமெரிக்க புஷ் நிர்வாகம் கொடிய இனவாத அரசும் தமிழினப் படுகொலையை தெரிவு செய்து மேற்கொண்டு வரும் சிங்களப் பேரினவாத அரசுக்கு நவீன கடற்கலங்களை சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை திருகோணமலை துறைமுகத்தில் ஒழுங்கு செய்து அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

சர்வதேசப் பயங்கவாததுக்கு எதிரான யுத்தத்தின் ஓரங்கமாக இந்த உதவி சிறீலங்காவை வந்தடைந்திருக்கிறது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் ஆயுத வழங்கல் கடற்கலங்களை கண்டறியவும் அவற்றை அழிக்கவும் என்று இவை அமெரிக்காவால் இலவசமாக அதாவது அன்பளிப்பாக சிங்களப் பேரினவாத அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக அமெரிக்க றோனால் ரேகன் நிர்வாகத்தில் இருந்து இன்றைய புஷ் நிர்வாகம் வரை மாறாத கொள்கையையே கொண்டிருக்கின்றன என்பதையும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த அரச நிர்வாகம் முதலைக்கண்ணீர் மட்டும் வடித்து உலகை ஏமாற்றி வருகின்றது என்பதும் இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது..!

தமிழ் மக்களின் தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்டமானது இதன் மூலம் புதிய பரிமானத்துக்குள் நுழைந்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. சிங்களப் பேரினவாத சக்திகளை மட்டும் எதிர்கொள்ள வேண்டிய நிலையைக் கடந்து இந்தியா போன்ற பிராந்திய மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதை உலகத் தமிழ் மக்கள் இத்தருணத்தில் உணர்ந்து, தமிழினம் இந்த ஆதிக்க சக்திகளின் ஒரு பக்கச்சார்பான தமது சுயநலன் நோக்கிய நகர்வுகளுக்குள் சிக்கி உலகில் இருந்து சிதைந்து விடாது பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு உலகத் தமிழனுக்கும் உள்ளது என்பதை கண்டறிந்து தங்கள் தங்கள் பங்களிப்புகளால் இவர்களின் கபடத்தனமான நகர்வுகளை முறியடிக்க ஒத்துழைக்க வேண்டும்.

எனவே தமிழ் மக்களை நோக்கி வீசப்பட்டுள்ள இந்தச் சவாலை எதிர்கொண்டு அனைத்து வல்லாதிக்க சக்திகளின் கபடத்தனமான நகர்வுகளையும் முறியடித்து சுதந்திர தமிழீழத்தை நிர்மாணிப்போம் என்று இத்தருணத்தில் உலகத்தமிழ் மக்கள் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்..! இந்த வல்லாதிக்க சக்திகளை எதிர் கொள்ள சர்வதேச அளவில் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய தேவையும் இதனால் உலகில் எழுந்துள்ளது..!

08_11_07_us_65180_200.jpg

U.S. Ambassador Robert O. Blake, Jr. and Vice Admiral Wasantha Karannagoda, Commander of the Sri Lanka Navy at the November 8 ceremony in Trincomalee to turn over equipment that will support Sri Lanka’s maritime security. [Photo: U.S. Embassy]

rhib_65189_200.jpg

The rugged, seaworthy, versatile 36-foot RIB has a 200 nautical miles range at 32 knots, with a 45 knot top speed. It can carry 3,200 lbs payload, and is C-130 transportable.

us_navy_rhib_65184_200.jpg

U.S. Navy Rigid-hulled inflatable boats are high-speed, high-buoyancy all weather boats specifically designed to transport fully equipped team of eight Naval personnel.

U.S. radars and dinghies to fight LTTE

[TamilNet, Thursday, 08 November 2007, 13:24 GMT]

Radar-based maritime surveillance system and several Rigid Hull Inflatable Boats (RHIBs) were donated to Sri Lanka Navy by U.S. Ambassador to Sri Lanka Robert O. Blake in a ceremonial function at Trincomalee on Thursday. Ambassador Blake expressed U.S. Government's hope that the radar system and the inflatable boats would help the Sri Lankan Navy to interdict arms shipments to the LTTE. The donation was part of U.S. programme to assist partner nations to deter global terrorist activity .Mr. Blake also urged Colombo to pursue a negotiated settlement and respect human rights, a press release issued by the U.S. Embassy in Colombo said

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23727

Edited by nedukkalapoovan

சிங்கள பேரின வாத அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய 30 வருட போராட்டத்தை வழி நடத்திய 'தமிழர் தலைமை' இன்று புதிய சூழலை முகம் கொள்கிறது. கடந்த ஒரு வருட கால நிகழ்வுகளின் தொடர்சியாகவே இன்று அமெரிக்க அரசின் 'தற்காப்பு' இராணுவ தளபாடங்கள் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 30 வருட காலம் தமிழர் தலைமை ஈய்ந்த தியாகங்கள் அர்த்த புஷ்டியுள்ளதாக அரசியல் பரிமாணம் பெற்றால் அன்றி தமிழரின் இழப்புகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். இந்த ஆபத்தை முற்றாக நாம் தவிர்க்க பழைய வழிமுறைகள் எமக்கு உதவ மாட்டாது.

புதிய உலக ஒழுங்கின் போக்குக்கு இசைவானதாக எமது போராட்டம் தகவமைக்கப்பட வேண்டும். இது குறித்த ' காய்தல் உவத்தல்' இல்லாத விவாதம் மேலும் பயன் சேர்க்கும்.

இவற்றின் உச்ச உபயோகம் '''சொந்த''' நாடுகளில் மட்டும்தான் பார்க்கலாம். நம்நாட்டு முராஜ், சூடை போன்றவற்றின் முரட்டு தாக்குதலுக்கு இப்படகுகள் ஈடுகொடுக்கமுடியாதவை. :o

ஆனால் கிழக்குக்கான ஆயுத வினியோகம் பதிக்கப்படலாம். :lol:

ஆயுதங்கள் வந்து சேர்ந்துவிட்டன. ஆனால் புலிகளின் மனோபலத்தின் முன் இவைகள் எம்மாத்திரம். ஆயுதங்களைக் கொடுக்கம் அமெரிக்கா இலங்கைக்கு மனேபலத்தையும் கொடுக்கமா? இந்த ஆயுதங்களின் பிரயோசனப்படுத்தம் முறையைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஆழமற்ற இடங்களில் பயணிப்பதற்கு ஏற்ற படகுகளும் இதில் அடக்கம். இவ்வகைப் படகுகள் ஏற்கனவே புலிகளிடமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ராடர், அதிவேகப் படகுகளை அமெரிக்கா இலங்கை கடற்படைக்கு அன்பளிப்பு புலிகளின் போக்குவரத்தை கட்டுப்படுத்த உதவுமென தூதரகம் நம்பிக்கை

வீரகேசரி நாளேடு

கடற்கண்காணிப்பு ராடர் தொகுதியையும் அதிவேகப்படகுகளையும் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபட் ஒ.பிளெக் திருகோணமலை கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கருணாகொடவிடம் அவற்றை உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு சட்டத்தின் உலகளாவிய பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரண உதவியும், பயிற்சியும் வழங்குதல் என்ற பிரிவு 1206இன் அடிப்படையிலேயே இவ்வுதவியை இலங்கைக்கு வழங்கப்படுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் அதிகரித்துச்செல்லும் சட்டவிரோத கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த உதவி இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்த இந்த ராடர் தொகுதிகளும், அதிவேகப்படகுகளும் உதவுமென தாம் நம்புவதாக அமெரிக்க தூதகரம் தெரிவித்தது.

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படைக்கு வழங்கிய உதவி மனித உரிமை மீறல்களை அங்கீகரிப்பதாக அமையாது அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் கூறுகிறார்

வீரகேசரி நாளேடு

மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்று அமெரிக்கா இலங்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இலங்கை கடற்படைக்கு நேற்று முன்தினம் அமெரிக்கா வழங்கிய உதவியானது அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துவதாக அமையாது. என்று கொழும்பில் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கத்தை குற்றஞ்சாட்டும் அதே வேளை கடற்படைக்கு இராணுவ உபகரண உதவிகளை வழங்கும் அமெரிக்காவின் இரு வேறுபட்ட செயற்பாடுகள் குறித்து வினவியபோதே அமெரிக்க தூதரக பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த அமெரிக்க தூதரகப் பேச்சாளர் மேலும் கூறியதாவது : 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் பயங்கரவாத அமைப்பின் வகைப்டுத்தப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுதக் கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தவே இவ்வுதவிகள் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்க பாதுகாப்பு சட்டங்களுக்கு அமைவாக, பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட நட்புநாடுகளை வலுப்படுத்தும் பிரிவின் கீழே இவ்வுதவிகள் அமைகின்றன. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான அணுகுமுறை தீர்வாக அமையாது என்பதனாலும் , பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் எனவும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா மிகவும் கவலையடைந்துள்ளது. மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வரும் அதேவேளை மீறல்களுக்கு பொறுப்பானவர்களை எவ்வித பாகுபாடுமின்றி நீதியின் முன்னால் நிறுத்தவேண்டுமென வலியுறுத்தி வருகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்த் தீவிரத்துக்கும் உதவிக் கொண்டு பேச்சுக்கும் வற்புறுத்தும் இரட்டை வேடம்

சர்வதேச அரசியலில் வல்லாதிக்க சக்தியான அமெரிக்காவின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் என்பன எப்போதுமே சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கப்படுகின்றன.

பிற நாடுகள் எல்லாவற்றிலும் வெளியில் பார்வைக்கு தட்டிக்கொடுப்பது போல நடந்துகொண்டு மறைவில் குழிபறிப்பதுதான் வாஷிங்டனின் பொதுவான இராஜதந்திரம் என்பது அம்பலமான அப்பட்டமான உண்மை.

இப்போதும் கூட அந்தப் போக்கில் மாற்றமில்லை என்பதையே இலங்கை விடயத்திலும் அமெரிக்கா நிலைநிறுத்தி வருகின்றதோ என்ற சந்தேகம் தமிழர்களுக்கு எழுந்திருக்கின்றது. இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் செயற்பாடு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்ற போக்கு மாதிரியே தோன்றுகின்றது.

இலங்கையில் அமைதி முயற்சிகளுக்கான வாய்ப்புகள் அடியோடு கருகிவிட்டன. தற்போதைய அரசுத் தலைமை யுத்த சந்நதம் கொண்டு, போர் உருவேறி, புதிது புதிதாகச் சமர்க்களங்களைத் திறக்க வெறி கொண்டு நிற்கின்றது.

சமாதான எத்தனங்களுக்குப் பெரும்பாலும் சாவு மணி அடித்தாகி விட்டது என்பதை அரசுத் தலைவர்களின் வெட்டவெளிச்சமான அப்பட்டமான பேச்சுகள் எடுத்தியம்பி வருகின்றன.

கடந்த புதனன்று இலங்கையின் அரசுத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் நிதி அமைச்சர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் தாம் சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டஉரையிலேயே இவ்விவகாரத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதைத் தெளிவாகவும் ஐயந்திரிபறவும் கோடிகாட்டி விட்டார். ""புலிகளின் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதைத் தவிர எமக்கு வேறு மாற்றுவழி இல்லை'' என்று அங்கு பிரகடனப்படுத்தியதன் மூலம் போர் வழித்தீர்வே இராணுவப் போக்கே தமது ஒரே உத்தி என்பதை அவர் வெளிப்படையாகவே கோடிகாட்டிவிட்டார். மேலும் அவரது வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதியை ஒதுக்கியதன் மூலம், ஒரு "யுத்த பட்ஜெட்' டைச் சமர்ப்பித்து, தமது அரசின் வழித்தடத்தை அவர் சர்வதேச சமூகத்துக்கு மிகக் குறிப்பாக உணர்த்தி விட்டார்.

ஜனாதிபதிக்கு அடுத்து நாட்டில் இராணுவ, பாதுகாப்பு விவகாரங்களில் அதிக செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசின் நகர்வு உத்தி எப்படியிருக்கும் என்பதைத் தொடர்ந்து தாம் முன்வைக்கும் தமது கருத்துகள் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றார்.

ஆக, இப்போது யுத்தத் தீர்வையே கடுஞ்சமர் நடவடிக்கையையே தனது ஒரே இலக்காகவும், பாதையாகவும் இலங்கை அரசுத் தலைமை வகித்துக்கொண்டுவிட்டது என்பதும் அந்தப் போர் வெறித் தீவிரப் போக்கிலிருந்து சரியான பாடம் படித்துத் தெளியும் வரை பட்டறிவு பட்டுத் திருந்தும் வரை அரசுத் தலைமை மாறப்போவதில்லை என்பதும் இலங்கை விவகாரங்களை அவதானித்துவரும் அனைத்துத் தரப்பினருக்குமே நன்கு தெரிந்த அம்சம்தான். இது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் கூட தெரிந்து தான் இருக்கும். இல்லை என்று கூற முடியாது.

போர் வெறிப் போக்கில் இலங்கை அரசுத் தலைமை அதி தீவிரமாக இருப்பதன் காரணமாகவும், மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்து, அவற்றில் ஈடுபடத் தனது படைகளைத் தூண்டி, அனுமதித்து வருகின்றது அரசுத் தரப்பு என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதனாலுமே, இலங்கைக்கான ஆயுதத் தளபாட உதவிகளை அமெரிக்கா அடியோடு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வற்புறுத்தலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் மத்தியில் இப்போது வலுத்து வருகின்றன என்பதும் கண்கூடு.

இப்படி நிலைமை இருக்க இது தெரியாதவர்போல ஒருபுறம் இலங்கைக் கடற்படையின் கரையோர ரோந்து மற்றும் காவல் நடவடிக்கைகளுக்கு மேலதிக வலுச்சேர்க்கும் நோக்கில் ராடர் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கருவிகளையும், ஒரு தொகுதி நவீன படகுகளையும் அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்து இலங்கைப் படைகளின் போர்த் தீவிரப் போக்குக்கு உதவிக் கொண்டு, மறுபுறம் அதே நிகழ்வில் ""இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுகள் மூலமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுங்கள்!'' என்று இலங்கை அரசைப் பார்த்து வலியுறுத்தியிருக்கின்றார் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்.

போர்வெறிப் போக்கில் மூழ்கிக் கிடக்கும் இலங்கையை அந்தத் தடத்திலிருந்து அமைதி முயற்சி வழிக்குத் திருப்பவேண்டுமானால் அதற்கேற்ப உறைப்பாக அதற்கு (இலங்கை அரசுக்கு) சமாதானப் போக்குக் குறித்து உரைக்க வேண்டும். இலங்கை அரசு உறைப்பாக அவ்விடயத்தை உணரவேண்டுமானால், இராணுவ ரீதியிலான தடைகளை இக்கட்டை முட்டுக்கட்டையை அதற்குப் போட்டாக வேண்டும். அதன் மூலம் இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அக்கறையை இலங்கை அரசுத் தலைமைக்கு உறைப்பாகவும் சூடாகவும் உணர்த்த முடியும்.

அதை விடுத்து, மேலும் இராணுவத் தீவிரப் போக்குக்குத் தூண்டி, ஊக்கமளிக்கும் விதத்தில் ஆயுதத் தளபாட உதவிகளை இலங்கைக்கு வழங்கிக்கொண்டு, மறுபுறம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, அமைதி வழித்தீர்வுக்கு முயலுமாறு பேச்சுக்குச் செல்லுமாறு வற்புறுத்துவது சுத்த முட்டாள்தனம். அத்தகைய போக்கை "பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் செயலாக, கருதுவதில் என்ன தப்பிருக்க முடியும்.

- சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

போர்த் தீவிரத்துக்கும் உதவிக் கொண்டு பேச்சுக்கும் வற்புறுத்தும் இரட்டை வேடம்

அது ஒன்றும் இல்லை அப்பு வல்லரசு எல்லாம் சிட்னியில வாழ்கிற எங்களை போல தான் இரட்டை வேடம் போடுறது நாங்கள் ஈழதிற்கு ஆதரவு சிறிலங்கா கிரிகேட் வந்தா சிறிலங்கா கிரிகேட்டிற்கும் ஆதரவு தமிழ்செல்வனின் கண்ணீர் அஞ்சலிக்கு போவோம் எஸ்.பி யின்ட கச்சேரிக்கும் போவோம் எங்களை மாதிரி வல்லரசுகளும் இரட்டை வேடம் :wub:

1997 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் பயங்கரவாத அமைப்பின் வகைப்டுத்தப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுதக் கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தவே இவ்வுதவிகள் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்க பாதுகாப்பு சட்டங்களுக்கு அமைவாக, பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட நட்புநாடுகளை வலுப்படுத்தும் பிரிவின் கீழே இவ்வுதவிகள் அமைகின்றன.

விடுதலைப் புலிகள் = பயங்கரவாதிகள்

இலங்கை = நட்புநாடு

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான அணுகுமுறை தீர்வாக அமையாது!

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும்!

அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துவதாக அமையாது!

இலங்கை = மனிதஉரிமைகளை மதிக்காத சட்டவிரோத அரசு

விடுதலைப் புலிகள் = இனப்பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய ஒரு தரப்பு.

yarlusacp2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வு பற்றிய அமெரிக்க போதனையும் இராணுவ உதவியும்

[10 - November - 2007]

இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா இராணுவ உதவிகளை வழங்குவதென்பது ஒன்றும் புதுமையான விடயம் அல்ல. உள்நாட்டுப் போர் வரலாற்றில் இலங்கைக்கு இராணுவ உதவிகளைச் செய்துகொண்டிருக்கும் வல்லாதிக்க நாடுகளில் அமெரிக்கா முன்னணியில் விளங்குகிறது.

ஆனால், இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வைக் காண்பது சாத்தியமானதேயல்ல என்று அடிக்கடி கூறுகின்ற இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் பிளேக் நேற்று முன்தினம் வியாழக்கிழமை திருகோணமலை கடற்படைத் தளத்தில் வைத்து அதி நவீன ராடார் கருவிகளையும் ரோந்துப் படகுகளையும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் கையளித்த வைபவம் அமெரிக்காவின் இராணுவ உதவிகள் பற்றி மீண்டும் எமது கவனத்தைத் தூண்டியிருக்கிறது. இலங்கையின் கடல் வலய பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவே இந்த உதவிகள் வழங்கப்படுவதாக அமெரிக்கத் தூதுவர் அந்த வைபவத்தில் அறிவித்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பிளேக் தெரிவித்திருந்த கருத்துகளை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்குமென்று நம்புகின்றோம். `கடந்த பல மாதங்களாக இலங்கை அரசாங்கம் முக்கியமான சில வெற்றிகளைச் சாதித்திருக்கிறது. கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றியமையும் அண்மையில் விடுதலைப் புலிகளின் பல கப்பல்களை நடுக்கடலில் மூழ்கடித்தமையும் வேறு பல சம்பவங்களும் முக்கியமான இராணுவ வெற்றிகளைக் குறிக்கின்றன. ஆனால், இந்த இராணுவ வெற்றிகள் இராணுவ வழிவகைகளின் ஊடாக நெருக்கடியை வெற்றி கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை வளர்க்கும் வகையிலான ஆசையை அரசாங்கத்துக்கு ஊட்டக்கூடாது' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

உலக ஒப்பாசாரத்துக்கு அரசியல் தீர்வு முயற்சிகள் பற்றிப் பேசிக் கொண்டு இராணுவ வழிவகைகளின் ஊடாக இன நெருக்கடியை வெற்றிகொள்ள முடியுமென்ற நம்பிக்கையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக பெருமளவில் இராணுவ உதவிகளைச் செய்துகொண்டு இராணுவத் தீர்வு சாத்தியமானதேயல்ல என்று போதனை செய்வதில் இருக்கக்கூடிய அபத்தத்தை அமெரிக்கத் தூதுவர் புரிந்துகொள்வார் என்று நாம் நம்பவில்லை.

இராணுவத் தீர்வில் நம்பிக்கை வைக்காதிருப்பதற்கு இலங்கை அரசாங்கத்தைத் தூண்டக்கூடிய அல்லது நிர்ப்பந்திக்கக்கூடிய நடவடிக்கைகளை அமெரிக்கா உட்பட வல்லாதிக்க நாடுகள் மேற்கொள்ளத் தவறியதன் விளைவாகவே இன்று இலங்கை நிலைவரம் முன்னென்றுமில்லாத அளவுக்குப் படுமோசமாக சீர்குலைந்திருக்கிறது. இலங்கை அரசாங்கத்தை சமாதான பேச்சுவார்த்தைகளுக்குப் போகுமாறு தூண்டுவதுபோல காட்டிக்கொண்டாலும், உண்மையில் அரசாங்கப் படைகளின் தாக்குதல்களினால் விடுதலைப் புலிகள் பலவீனமடைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பையே அமெரிக்கா கொண்டிருக்கிறது என்ற உண்மை புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

இலங்கையில் அரசியல் மற்றும் இராணுவ நிகழ்வுப் போக்குகள் மேலும் படுமோசமான சீரழிவுத் திசையில் சென்றுகொண்டிருப்பதை தடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் முன்னரங்கப் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற வல்லாதிக்க நாடுகள் எதையுமே உருப்படியாகச் செய்யுமென்று தமிழ் மக்கள் இனிமேலும் எதிர்பார்ப்பது விவேகமானதல்ல.

http://www.thinakkural.com/news/2007/11/10...l_page39966.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.