Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு

image_ec997cd199.jpg

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05)  காலை 8.30 மணியளவில் குளவி  கூடு கலைந்து மாணவர்கள்  குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலை காணப்பட்ட பெரிய குளவி கூடு ஒன்று  கலைந்துள்ளது. வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு  மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

 இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,  மாணவர் தலைவர்கள் ஏனைய மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

  பின்னர் மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி ரோட்ரிக்கோ மைதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள்   நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குளவி கூட்டின் ஆபத்து குறித்தும்  அதை அகற்ற வேண்டும்  என்று  இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை நிர்வாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

https://www.tamilmirror.lk/செய்திகள்/கிளிநொச்சியில்-குளவி-கொட்டு-39-மாணவர்கள்-பாதிப்பு/175-372041

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcSJrftYKz0cABYM1qvNoDw

thumb_large_78.jpg

வந்த பின் காக்கும் சிஸ்டம்

************************************

அறிவுபூர்வமாக சிந்திக்கும் ஒரு சமூகம் அல்லது முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் ஒரு சமூகம் அல்லது நிர்வாக கட்டமைப்பு அல்லது அரசு ஒரு சம்பவம் நடந்த பின் என்ன செய்தீர்கள் என்று விசாரணை செய்யாது. மாறாக அச் சம்பவம் நடக்கும் முன் அதனை தடுத்து நிறுத்தவே முயற்சிக்கும் வருமுன் காப்பதனையே விரும்பும். சிறந்த திட்டமிடல் என்பது வரமுன் காப்பதே. வந்த பின் காப்பது தோல்வியின் அடையாளம்.

இன்று காலை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியத்தில் 50 க்கு மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 39 மாணவர்கள் வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டனர் பிரதி அதிபர் உட்பட இரண்டு ஆசிரியர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்தின் போது மாணவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாக்கியுள்ளனர். பதற்றமடைந்துள்ளனர் தங்களது கற்றல் உபகரணங்கள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு குலைகளை முறித்தும் கையில் அகப்பட்ட பொருட்களை கொண்டும் குளவிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போராடியிருக்கின்றார்கள். யுத்த காலத்தில் விமானத்தாக்குதலின் பின் அச்சூழல் எப்படியிருக்குமோ அதையொத்த நிலைமை அங்கு காணப்பட்டது.

பாடசாலையில் குளவி கூடு காணப்படுகிறது. இது மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தாக அமையலாம் எனவே இதனை உடனடியாக அகற்றி தருமாறு பாடசாலை நிர்வாகம் சம்மந்தப்பட்ட தரப்பினர்களிடம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே எழுத்து மூலம் அறிவித்திருந்தனர். ஆதாவது வருமுன் காப்பதற்கு பாடசாலை முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

ஆனாலும் இன்று சம்பவம் இடம்பெறும் வரை சம்மந்தப்பட்டவர்கள் இக் கோரிக்கை தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. சம்பவம் நடைப்பெற்ற பின்னரே விழுந்தடித்து ஒடிவந்து குளவி கூட்டை அகற்றுவது பற்றி ஆலோசிக்கின்றனர்.

இது கவலைக்குரியது. அதிஸ்டவசமாக ஆபத்தான நிகழ்வுகள் எதுவும் இன்று நடந்தேறியிருக்கவில்லை. ஏதேனும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்புக் கூறுவது? ஏன் இயலுமான விடயங்களில் வர முன் தடுக்க கூடிய திட்டமிடல்கள் இல்லை? போன்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் உண்டு.

சம்பவத்தின் பின் வனஜீவராசிகள் திணைக்களம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, பாதுகாப்பு படையினர், கல்வி அதிகாரிகள், என பலர் வந்து நிலைமைகளை ஆராய்ந்தனர். குளவி கூட்டை அகற்றுவது பற்றி திட்டமிட்டனர்.

நோய் வந்த பின் மருத்துவமனை.

பேரழிவு வந்த பின் நிவாரணம்.

அநியாயம் நடந்த பின் விசாரணை. என்பதனை விட இவற்றை வருமுன் தடுப்பதே புத்திசாலித்தனம்.

Murukaiya Thamilselvan

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர், பழைய மாணவர் இணைந்தே தீர்வு கண்டிருக்கலாம்.

குளவிக் கூடு கொழுத்த எல்லாம் வலயத்தின் அனுமதி தேவையா?!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பெற்றோர், பழைய மாணவர் இணைந்தே தீர்வு கண்டிருக்கலாம்.

குளவிக் கூடு கொழுத்த எல்லாம் வலயத்தின் அனுமதி தேவையா?!

இலங்கையிலும் குளவிக்கூடு கொழுத்துவது தண்டனைக்கு உரிய குற்றம் என வாசித்தேன்.

பாடசாலை நிர்வாகம் ஏற்கெனவே சில காலத்திற்கு முன் கல்வித் திணைக்களத்திற்கும், வனவிலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து இருந்தும்.. அரச உத்தியோகத்தரின் அசமந்த போக்கினால்… பலர் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போனகிழமை செய்தியில் படித்தேன் இதே பகுதியில் படிக்கும் மாணவர் ஒருவரின் தந்தை இறந்துள்ளார்.இதே பிரச்சனை தான்.இந்தப் பள்ளியில் தானோ கவனிக்கவில்லை.அவரும் ஒரு கவ்லி தொடர்பான பணியாளர் தான்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையிலும் குளவிக்கூடு கொழுத்துவது தண்டனைக்கு உரிய குற்றம் என வாசித்தேன்.

பாடசாலை நிர்வாகம் ஏற்கெனவே சில காலத்திற்கு முன் கல்வித் திணைக்களத்திற்கும், வனவிலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து இருந்தும்.. அரச உத்தியோகத்தரின் அசமந்த போக்கினால்… பலர் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.

அண்ணை தேடும்போது கீழுள்ளவாறு AI தகவல் போட்டுள்ளது.

AI Overview

இலங்கையில் குளவி கூடுகளைக் கொளுத்துவது நேரடியாக ஒரு பெரிய குற்றமாகப் பார்க்கப்படாவிட்டாலும், குடியிருப்புப் பகுதிகளில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தீ மூட்டுவது தண்டனைக்குரியது. குளவிகள் சுற்றுச்சூழலுக்கு நன்மையானவை மற்றும் பயிர் பூச்சிகளை வேட்டையாடுபவை, எனவே அவற்றைக் கலைப்பதற்கு பாதுகாப்பான வழிகளைப் பின்பற்றுவது அவசியம் Kalki Online.

பாதுகாப்பு முக்கியம்: குளவி கூடுகளைக் கொளுத்துவது பெரும் தீ விபத்துகளுக்கு வழிவகுக்கலாம், இது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

பரிந்துரை: கூடுகளை அப்புறப்படுத்தத் தேவைப்பட்டால், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் அல்லது நிபுணர்களின் உதவியுடன், பெரும்பாலும் இரவில் குளவிகள் அமைதியாக இருக்கும் நேரத்தில் அகற்றுவது நல்லது, தீயிட்டு கொளுத்துவதைத் தவிர்ப்பது சிறந்தது.

8 hours ago, யாயினி said:

போனகிழமை செய்தியில் படித்தேன் இதே பகுதியில் படிக்கும் மாணவர் ஒருவரின் தந்தை இறந்துள்ளார்.இதே பிரச்சனை தான்.இந்தப் பள்ளியில் தானோ கவனிக்கவில்லை.அவரும் ஒரு கவ்லி தொடர்பான பணியாளர் தான்.

மாங்குளத்தில் குளவி கொட்டியதில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் உயிரிழப்பு - 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

on Tuesday, January 27, 2026

By Batticaloa

v.jpg

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார்.

உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.

மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழைய கொலணிப்பகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கிய சமயம் அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை குறித்த குளவிகள் கொட்டியுள்ளன.

குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளான 5 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
https://www.battinews.com/2026/01/5_14.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.