Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

sumanthiran-721x470.webp

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றது. கட்சியின் 8 எம்.பிக்களில் சிறீதரனைத் தவிர மற்ற ஏழு பேரும் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பே இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் செயலாளர் என்ற முறையில் எஸ்.குகதாசன் இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருந்தார் எனத் தெரிகின்றது.

நாடாளுமன்றக் குழு இதற்கு முன்னர் இதேபோன்று தமது குழுவின் ஒரு சக உறுப்பினரான சிறீதரனுடன் இத்தகைய சந்திப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் நடத்தி இருந்தார் எனக் கூறப்படுகின்றது. அந்தச் சந்திப்பில் சாணக்கியன் எம்.பி. கலந்துகொள்ளவில்லை. அடுத்த கட்டக் கூட்டமே நேற்றுமுன்தினம் நடைபெற்றிருக்கின்றது.

கட்சிக்குள் நிலவும் இழுபறி நிலைகள், குழப்பங்கள் குறித்து இரு தரப்புகளுடன் பேசி சுமுகநிலையை ஏற்படுத்தும் ஒரு திட்டம் என்ற பெயரிலேயே இந்த நடவடிக்கை நாடாளுமன்றக் குழுவால் முன்னெடுக்கப்பட்டது.

முதலில் சிறீதரனுடனும், பின்னர் சுமந்திரனுடனும் கலந்தாலோசனை நடத்த நாடாளுமன்றக் குழு தீர்மானித்து இந்த நடவடிக்கையை எடுத்ததாகக் கூறப்படுகின்றது.

கட்சிக்குள் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக கட்சியின் வழக்கு, சிக்கல்கள், அரசமைப்புக் கவுன்ஸிலில் சிறீதரனின் செயற்பாடு, சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசியல் குழு எடுத்த தீர்மானம் ஆகியவை பற்றி எல்லாம் இந்தச் சந்திப்பில் விலாவாரியாகப் பேசப்பட்டதாக அறியவந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்படி விடயங்களில் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் சுமந்திரன் விளங்கப்படுத்தினார் எனத் தெரியவந்தது.

இந்தச் சந்திப்பின் போது இடையிடையே சிறீநேசனுடன் சுமந்திரன் முரண்பட்டுக் கருத்து மோதல் பட்டார் எனத் தெரிகின்றது. எனினும் கட்சியின் நிலைமை என்ன, சிறீதரன் ஆற்றிய செயற்பாடு யாது என்பவை பற்றி மிகத் தெளிவாகச் சுமந்திரன் விளக்கம் அளித்துள்ளார் எனக் கூட்டத்தில் பங்குபற்றிய எம்.பி. ஒருவர் தெரிவித்தார் என்று தமிழ்ப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://akkinikkunchu.com/358888/

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

இந்தச் சந்திப்பின் போது இடையிடையே சிறீநேசனுடன் சுமந்திரன் முரண்பட்டுக் கருத்து மோதல் பட்டார் எனத் தெரிகின்றது.

இவர் யாருடன் கருது மோதல் இல்லாமல் இருந்திருக்கிறார்? இவரை கட்சிக்குள் நுழைத்த சம்பந்தருடனேயே முரண்பட்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றது. கட்சியின் 8 எம்.பிக்களில் சிறீதரனைத் தவிர மற்ற ஏழு பேரும் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பே இடம்பெற்றது.

M._A._Sumanthiran.jpg

மக்களால்... நிராகரிக்கப் பட்ட, "பின் கதவு" சுமந்திரனுக்கு,

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்... என்ன அலுவல்

நாடாளுமன்றத்துக்குள்... "காலடி" எடுத்து வைக்க வேண்டாம் என்று தானே..

தமிழ் மக்கள் இவரை, வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். animiertes-gefuehl-smilies-bild-0333.gif

இதற்குப் பின்பும்... "நாலுகால் பிராணி" மாதிரி, நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு...

நாடாளுமன்றத்துக்குள் போக... வெட்கம், ரோசம், மானம் எதுவுமே இல்லையா? 🤓

சுத்துமாத்து சுமந்திரனுக்கு.. தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பதவியை, மத்திய குழு வழங்கவே இல்லை.

வைத்தியர் சத்தியமூர்த்தியின் பதவியை அடாத்தாக எடுத்து... "பதில் செயலாளர்" என்று ஆரம்பத்தில் சுத்துமாத்து விட்டு, இப்போ... தமிழரசு கட்சியின் செயலாளர் என்று, தனக்குத்தானே "லேபிள்" ஒட்டிக் கொண்டு திரியும், இந்தக் குழப்பவாதிக்கு... தமிழ் மக்கள், விரைவில் பாடம் படிப்பிப்பார்கள். animiertes-gefuehl-smilies-bild-0438.gif

இந்த மனிதன் செய்யும்... "நரக" வேலைகளால், தமிழ் மக்களின் முக்கியமான பல விடயங்கள் மழுங்கடிக்கப் பட்டுக் கொண்டிருப்பது... இந்தப் "பைத்தியக்காரனுக்கு" இன்னும் விளங்கவில்லையா. animiertes-gefuehl-smilies-bild-0429.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அண்ணை, வயசு போன காலத்தில கொஞ்சம் ஓய்வா இருப்பம் எண்டா…..

காலங்காத்தாலா கலர் கலரா கத்த வச்சிட்டானுவோ 😂

அடேய் சுமந்திரா…அண்ணனுக்கு ரத்த கொதிப்பு, மூல கொதிப்பு ஏதும் ஆச்சு…

அதுக்கு நீதான் பொறுப்பு அஹங்😂

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றில் சிவ்வப்பாய் இருக்கணும் அல்லது கருப்பாய் இருக்கணும் இந்த இரண்டுக்கும் இடையில் நின்று ஓப்ப்பாரி வைக்கும் அடிமை தொல்லை தங்க முடியலை .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.