Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்!

11 Feb, 2026 | 11:35 AM

image

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புப் பிரிவினரின் தகவல்படி, உயிரிழப்புகள் மூன்று வெவ்வேறு இடங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

டம்பிளர் ரிட்ஜில் உள்ள உயர்தர பாடசாலை ஒன்றிற்குள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வீடு ஒன்றிலிருந்து மேலும் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை நடத்திய சந்தேகநபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் தாக்குதலில் காயமடைந்த சுமார் 25 பேர் உள்ளூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிதாரி கொல்லப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாடசாலை மற்றும் குடியிருப்புப் பகுதிக்கு இடையிலான தொடர்பு மற்றும் தாக்குதலின் பின்னணி குறித்து கனேடிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/238366

  • கருத்துக்கள உறவுகள்

gunnnn.png?resize=739%2C363&ssl=1

கனடாவில் பயங்கரம் : துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!

கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை நடத்திய சந்தேக நபரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தைப் பாதுகாப்பிற்குள் கொண்டுவந்துள்ள பொலிசார்,  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

உயிரிழந்தவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

https://athavannews.com/2026/1464244

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு –   10 பேர் பலி

adminFebruary 11, 2026

Global-33.png?fit=940%2C788&ssl=1

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் (BC) டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 10, 2026) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். வரலாற்றில் மிக மோசமான பள்ளித் துப்பாக்கிச் சூடுகளில் ஒன்றாக இச்சம்பவம் கருதப்படுகின்றது.

நேற்று மதியம் 1:20 மணியளவில், டம்பிளர் ரிட்ஜ் மேல்நிலைப் பா்சாலையில் (Tumbler Ridge Secondary School) துப்பாக்கித் தாரி ஒருவர் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளாா். மொத்தமாக 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாடசாலையின் உள்ளே 6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பாடசாலையுடன் தொடர்புடைய ஒரு வீட்டில் மேலும் இருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

துப்பாக்கிதார தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த நிலையில் பாடசாலையின் உள்ளே கண்டெடுக்கப்பட்டார். சுமார் 27 பேர் காயமடைந்துள்ளனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரி ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பழுப்பு நிற முடி (Brown hair) கொண்டவர் என்றும், ஒரு ஆடை (Dress) அணிந்திருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.காவல்துறையினா் அவரது அடையாளத்தை உறுதி செய்துள்ள போதிலும், தற்போதைய விசாரணைக் கட்டத்தில் அவரது பெயரை வெளியிடவில்லை.

பிரதமர் மார்க் கார்னி (PM Mark Carney) இச்சம்பவத்தால் தான் கடும் வேதனை அடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மாகாண முதல்வர் டேவிட் ஈபி (Premier David Eby) டம்பிளர் ரிட்ஜ் சமூகம் முழுவதுமே இன்று சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2026/228864/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா துப்பாக்கிச் சூடு ; 18 வயதுடைய நபர் சந்தேகநபராக அடையாளம் 

Published By: Digital Desk 3

12 Feb, 2026 | 12:25 PM

image

கனடாவின் மேற்கு மாநிலமான பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 08 பேர் உயிரிழந்ததோடு, 25 பேர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய நபர் சந்தேகநபராக பொலிஸாரால் அடையாள காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான ஜெஸ்ஸி வான் ரூட்ஸீலார் என்கின்ற இந்த நபர் சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்து கிடந்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

முதலில் தனது வீட்டில் தாய் மற்றும் தம்பி ஆகியோரைச் சுட்டுக் கொன்ற சந்தேக நபர், பின்னர் அருகிலுள்ள பாடசாலைக்குச் சென்று அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

சந்தேக நபர் ஆணாக பிறந்து திருநங்கையாக மாறியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில், 39 வயதுடைய பெண் கல்வியாளர் ஒருவரும், 12 வயதுடைய பெண் மாணவர்கள் மூவரும், 12 மற்றும் 13 வயதுடைய ஆண் மாணவர்கள் இருவரும் அடங்குவர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சந்தேக நபர்கள் இருப்பதாக நம்பவில்லை என ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் பிரதி ஆணையாளர் டுவைன் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பாதிப்புகளுக்காகப் பலமுறை பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் இவர்களது வீட்டிற்குப் பல சந்தர்ப்பங்களில் பொலிஸார் அழைக்கப்பட்டனர். இதில் சில அழைப்புகள் மனநலம் சார்ந்தவையாகவும், ஆயுதங்கள் தொடர்பான முறைப்பாடுகளாகவும் இருந்துள்ளன.

சந்தேகநபருக்கு துப்பாக்கி உரிமம் இருந்ததாகவும், அது காலாவதியானது எனவும் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் தாக்குதல் நடத்திய பாடசாலையை விட்டு 04 ஆண்டுகளுக்கு முன்பு பாதியில் விலகியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

https://www.virakesari.lk/article/238461

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.