Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வையிழப்பு ; கண்டுகொள்ளாத சிறை நிர்வாகம் - பாக். உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வையிழப்பு ; கண்டுகொள்ளாத சிறை நிர்வாகம் - பாக். உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

13 Feb, 2026 | 12:24 PM

thumb_large_.jpg

பாகிஸ்தான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது வலது கண்ணில் 85 சதவீத பார்வையை இழந்துள்ளதாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணியொருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

இம்ரான் கானின் நிலை தொடர்பாக அறிவதற்காக உச்சநீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சல்மான் சஃப்தார், கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இம்ரான் கானை சிறையில் சந்தித்து இரண்டு மணிநேரம் பேசியதாகவும் இம்ரான் கானின் தடுப்புக்காவல் கள நிலைமையை ஆராய்ந்து, அது தொடர்பாக அறிக்கையினை மறுநாள் புதன்கிழமை (11) நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. 

இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 15 சதவீத பார்வை மட்டுமே இருப்பதாகவும் அவரது வலது கண்ணில் நரம்பு அடைப்பு எற்பட்டிருப்பதாகவும் பெப்ரவரி 6 என திகதியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை அவரது பார்வை சீராக இருந்ததாகவும் கடந்த சில மாதங்களாகவே பார்வை மங்கத் தொடங்கியதாகவும் அவரது பார்வைக் குறைபாட்டு பிரச்சினையை சிறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் இம்ரான் கானுக்கு கண் தொடர்பான சிகிச்சை அளிக்காததே அவரது பார்வைக் குறைபாட்டுக்கு காரணம் என்றும் அந்த அறிக்கையில் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். 

கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாக உடலளவில் அவர் பெரிதளவு  பாதிப்பை எதிர்கொண்டிருப்பதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வானது, சட்டத்தரணியின் அறிக்கையை ஆய்வு செய்ததையடுத்து, எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் சிறப்பு மருத்துவக் குழுவை நியமித்து, இம்ரான் கானுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனைகளை நடத்தவும் அவர் தனது குடும்ப மருத்துவரை சந்தித்து மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் அடியாலா சிறை நிர்வாகம் அனுமதிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/238553

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பெரிய பெயரோடும் புகழோடும் இருந்த மனுஷன் ........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.