Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்?

Shyamsundar IUpdated: Tuesday, February 10, 2026, 15:40 [IST]

naam tamilar seeman

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (NTK) தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத 'மூன்றாவது சக்தியாக' உருவெடுத்திருந்தது. தீவிரமான தமிழ்த் தேசியப் பேச்சுகள் மற்றும் சீரான வாக்கு வங்கி வளர்ச்சியால் கவனத்தை ஈர்த்த இந்த கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை நெருங்கும் வேளையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மௌனமான நிலையை எட்டியுள்ளது.

Also Read

Trichy East: விருகம்பாக்கமோ விருத்தாசலமோ இல்லை! திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியா?

களத்தில் குறைந்த வேகம்?

வழக்கமாக தேர்தல் நெருங்கும் நேரங்களில் சீமானின் மேடைப் பேச்சுகளும், தொடர் பொதுக்கூட்டங்களும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கும். ஆனால், இந்த முறை 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்ததைத் தாண்டி, சீமான் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களையோ அல்லது மக்கள் சந்திப்புகளையோ (Makkal Sandhippu) இன்னும் தீவிரப்படுத்தவில்லை.

வழக்கம் போல தங்களது வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிப்பதிலும், அதில் 50% பெண்களுக்கு வாய்ப்பளிப்பதிலும் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகித்தது. இந்த முறையும் வேகமாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இருப்பினும், தற்போது கட்சியின் தேர்தல் வேலைகளில் பழைய வேகம் இல்லை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. கடந்த தேர்தல்களில் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரங்களும், சமூக வலைதளங்களில் தொண்டர்களின் தீவிரமான செயல்பாடுகளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும். ஆனால், தற்போது பொதுக்கூட்டங்களும், தெருமுனைப் பிரச்சாரங்களும் பெரிய அளவில் வேகம் எடுக்காமல் இருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே ஒருவித தொய்வை ஏற்படுத்தியுள்ளது.

சீமான் எப்போதும் டிரெண்ட் செட்டர், நர்ரேட்டிவ் செட்டர் ஆக இருப்பார். ஆனால் இந்த முறை சீமான் கடுமையாக அமைதி காத்து வருகிறார்.

Recommended For You

தமிழகத்தில் நாளை 3 மணி நேரத்திற்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது

அமைதிக்கான காரணங்கள்:அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு

சீமானின் இந்த "அமைதியான" ஆட்டத்திற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்:

விஜய் காரணி (The TVK Factor): நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இதுவரை சீமானிடம் இருந்த "மாற்று அரசியல்" வாக்குகள் பிரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விஜய்யின் வருகை ஏற்படுத்தியுள்ள சலசலப்பை உற்று நோக்கி, தனது அடுத்த கட்ட நகர்வை சீமான் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

You May Also Like

விஜய் தடுமாறுவது இங்கேதான்.. டேக்-ஆஃப் ஆக இருந்த தவெகவை லேண்ட் செய்த சீமான்.. நாம் தமிழர் சம்பவம்!

உள்கட்சி சீரமைப்பு:பொதுவெளியில் சத்தமாக கூட்டம் போடுவதை விட, இந்த முறை பூத் கமிட்டிகளை பலப்படுத்துவதிலும், வேட்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்துவதிலும் (சென்னை-போரூர் ஆலோசனைக் கூட்டங்கள் போல) அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தனித்து போட்டி - 50:50 முறை: இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் தனித்து போட்டி மற்றும் "ஆண்-பெண் சம பிரதிநிதித்துவம்" என்பதில் அவர் உறுதியாக இருப்பது அவரது பலமாகப் பார்க்கப்படுகிறது.

காத்திருக்கும் புயல்?

சீமானின் அமைதி குறித்து அவரது தம்பிகள் (கட்சித் தொண்டர்கள்) கூறுகையில், "அவர் அமைதியாக இல்லை. பேசிக்கொண்டுதான் இருக்கிறார். விஜய் மீடியாவால் பெரிதாக்கப்படுகிறார். மக்கள் என்னவோ சீமானுக்கே அதிக மதிப்பு தருகிறார்கள்.

நாங்கள் தேர்தலை வைத்து மட்டும் அரசியல் செய்ய மாட்டோம். அப்போது மட்டும் நாங்கள் அரசியல் பேசுபவர்கள் அல்ல, அதனால் நாங்கள் செய்வதை அமைதி என்றெல்லாம் நினைக்க வேண்டாம்" என்று கூறுகின்றனர்.

https://tamil.oneindia.com/news/chennai/the-quiet-before-the-storm-naam-tamilar-seeman-s-strategic-silence-in-the-2026-race-772597.html

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் ஆட்சி அதிகாரம், அண்ணன் சீமான் முதல்வர்
🇦🇺💪🔥 🇨🇦 💪🔥 🇪🇺💪🔥 🇺🇸 💪🔥🇱🇰 💪🔥

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருநாளும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். பல பேராட்டங்களை நடத்துகிறார். காவல்துறையால்கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மாநாட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். இதுவெல்லாம் ஒடகங்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. அவர்களுக்கு அத்தி பூத்தாற்போல பனையூர்தலைவர் வெளியே எப்போ வருவார் என்று கமராக்களுடன் பனையூரில் அடைகாத்து இருக்கிறார்கள். தனித்துக்களமாடி 8வீத வாக்குகளுக்கு மேல் பெற்று அங்கீகரிக்கப்பட் கட்சியை இந்த ஊடகங்கள் இன்னும் மற்றவர்கள் என்று வகைக்குள் திணித்து இருட்டடிப்புச் செய்கிறார்கள். போதததுக்கு விஜையின் வருகையால் நாதகவின் வாக்கு வங்கு சரியப் போகிறது என்று திடடமிட்டு பிரச்சாரம் செய்கிறார்கள். வரும் தேர்தலில் இருக்கின்ற 8 சதவீதத்தை நாதக தக்க வைத்துக் கொண்டால் அதற்கு நல்ல எதிர்காலம்இருக்கும். ஆனால் விஜை இந்தத்தேர்தலோடு நடிக்கப் போய்விடுவார்.அவரை நம்பி யாரும் கூட்டணி சேரவரவில்லை. கூட்டணிக்காக தவம் கிடந்து இப்போது வேறு வழியில்லாமல் தனித்துப்போட்டி என்று அறிவித்திருக்கிறார். எல்லாம் சினிமாத்தனமாக இருக்கிறது.இருந்தாலும் விஜையின் அரசியல் வருகையை நான் வரவேற்கிறேன். இன்னொரு கமலகாசனாக மாறமல் இருந்தால்சரி.இன்று கட்சிக்கான புதிய தொலைக்காட்சியை எங்கள்தேசம் தொலைக்காட்சி ஆரம்பித்து வைத்திருக்கிறார்.இங்குள்ள சீமான் எதிர்ப்பாளர்களும் அவரைப்பற்றிய எதிர்மறையான செய்திகளை பதிவிடுவது தமிழ்நாட்டு ஊடகஙகளின் போக்குக்கு ஒத்திசைவாகவே இருக்கிறது

https://www.youtube.com/live/7HUexq_r_nA?si=mD0pvXkLR7cI4CyK

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புலவர் said:

அண்ணனுக்கு டிரைவராக வீட்டிலேயே தங்கி இருந்த தம்பியை அண்ணன் துரத்தி விட்டாராமே?

உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

பேஸ்புக்கில் நீங்கள் லிங்கை பகிரும் போது அது உங்கள் முழுபெயரையும் காட்டுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

இல்லை எனில் கவனத்தில் கொள்க🙏.

தெரியாது.சுட்டிக்காட்டியதற்கு நன்றி.நான் லிங்கை அழுத்தும் போது பதிவிட்டவரின் பெயர்தான் எனக்குத் தெரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

தெரியாது.சுட்டிக்காட்டியதற்கு நன்றி.நான் லிங்கை அழுத்தும் போது பதிவிட்டவரின் பெயர்தான் எனக்குத் தெரிகிறது.

ஓ… அப்போ அந்த படமும், பெயரும் உங்களது இல்லை போலும்👍.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.