Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்

போயிங் KC-135

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க விமானப்படையின் போயிங் KC-135 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் (பிப்ரவரி)

இராக்கில் ஒரு அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளானதை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது இரண்டு விமானங்கள் தொடர்புடைய ஒரு சம்பவம் என்றும், அதே சமயம், ‘எதிரி நாடு அல்லது நட்பு நாட்டின் தாக்குதலால்’ இது நடக்கவில்லை என்றும் அமெரிக்கா கூறுகிறது. இந்தச் சம்பவத்தில் ராணுவத்தின் KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது.

மேற்கு இராக்கில் ‘மீட்பு முயற்சிகள் நடந்து வருகின்றன’ என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் கூறுகிறது.

சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் ஒரு அறிக்கை கூறுகிறது.

விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர், ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா? விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் என்ன? சம்பவம் எப்போது நடந்தது - மீட்பு நடவடிக்கைகள் சரியாக எங்கு நடைபெறுகின்றன?, ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை.

KC-135 போன்ற எரிபொருள் நிரப்பும் விமானங்கள் போர்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன, போர் விமானங்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் இலக்கை அடைய நீண்ட தூரம் பறக்க வேண்டியிருக்கும் போது அவற்றுக்கு தேவையான எரிபொருளை நடுவானில் இவை வழங்குகின்றன.

எரிபொருள் நிரப்பும் பணிகளின் போது, எதிரிகளால் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக விமானங்களின் விளக்குகள் முற்றிலுமாக அணைக்கப்படலாம்.

இது இராக் வான்வெளியில் நடந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது, ஆனால் அந்தப் பகுதி அண்டை நாடான இரானிலிருந்து எவ்வளவு தூரம் என்பது இதுவரை தெரியவில்லை.

KC-135 விமானம் பொதுவாக மூன்று பேர் கொண்ட குழுவைக் கொண்டிருக்கும்- ஒரு விமானி, ஒரு துணை விமானி மற்றும் ஒரு பூம் ஆபரேட்டர்.

இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக் வான்வெளியில் அமெரிக்க எரிபொருள் நிரப்பு விமானம் விபத்து : தாக்குதல் காரணமல்ல என அறிவிப்பு

Published By: Priyatharshan

13 Mar, 2026 | 09:58 AM

image

அமெரிக்காவின் United States Central Command (USCENTCOM) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமெரிக்காவின் Boeing KC-135 Stratotanker எரிபொருள் நிரப்பு விமானம் ஒன்று ஈராக் நாட்டின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

USCENTCOM வெளியிட்ட செய்திக்குறிப்பில், “Operation Epic Fury” என்ற நடவடிக்கையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒன்றான KC-135 விமானம் மேற்கு ஈராக் பகுதியில் விழுந்ததாகவும், மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் எதிரி தாக்குதல் அல்லது நட்பு படையினரின் தவறான தாக்குதல் காரணமாக ஏற்பட்டதல்ல எனவும் அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் தெளிவுபடுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தைச் சேர்ந்த பணியாளர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், சம்பவத்தின் முழுமையான விவரங்களைத் திரட்டுவதற்கு அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்குமாறு USCENTCOM பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், இந்த விபத்து குறித்து சேவையாற்றும் இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தெளிவான தகவல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/240856

  • கருத்துக்கள உறவுகள்

மிக அண்மையில் மகளின் குழு ஆளில்லாத எரிபொருள் நிரப்பும் விமானத்தை வெற்றிகரமாக இயக்கினார்கள்.

அதன் காணொளியைத் தேடினேன் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தது, இரு விமானங்கள் தரை இறங்கியதாக.

ஓன்று தாக்குதல் ஏவுகணையில் இருந்து விலத்த, மற்ற்றத்தை எகனை தாக்கியது என்று.

அதை விட , இன்னோர் நாட்டின் அமெரிக்கா விமான தளத்தில் நின்று இருந்த இப்படியான சில விமானங்களும்

தாக்குதலில் அழிக்கப்பட்டதாக.

என்றாலும், எந்த உறுத்திப்படுத்தலும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரான் போரில் அமெரிக்காவின் 4வது விமானம் நொறுங்கியது - என்ன நடந்தது?

பிப்ரவரி மாதம் இஸ்ரேலில் காணப்பட்ட அமெரிக்க விமானப்படையின் போயிங் கேசி-135 ஸ்ட்ரேடோடேங்கர் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் (கோப்புப் படம்)

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,(கோப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • கிளேர் கீனன்

  • 13 மார்ச் 2026, 10:26 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த ஆறு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.

கேசி-135 விமானம் விழுந்து நொறுங்கியதில் எதிரிகளின் தாக்குதலோ அல்லது தவறுதலான நட்பு நாடுகளின் தாக்குதலோ காரணமல்ல என்றும் அமெரிக்கா கூறியது.

முன்னதாக விமானத்தில் இருந்த 6 பேரில் 4 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா கூறியிருந்த நிலையில், தற்போது மேலும் இருவர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

இரானுக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகளில் இந்த எரிபொருள் நிரப்பும் விமானம் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு விமானங்களில் இது ஒன்று என்றும் சென்ட்காம் தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டாவது விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்று அமெரிக்கா கூறியது.

இராக்கில் நெருங்கிய அமெரிக்க விமானத்தை தாக்கியது  இரானா?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,(கோப்புப் படம்)

இரான் கூறியது என்ன?

போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள், நடுவானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டவை.

இவை அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. போர் விமானங்கள் பறக்கும் தூரத்தை அதிகரிப்பதற்காக முதல் வளைகுடா போரின்போது இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.

கேசி-135 விமானத்தில் வழக்கமாக ஒரு விமானி, ஒரு துணை விமானி மற்றும் விமானத்தின் எரிபொருள் நிரப்பும் பகுதியை இயக்குவதற்குப் பொறுப்பான ஒரு பூம் ஆபரேட்டர் (boom operator) என குறைந்தது மூன்று பணியாளர்கள் இருப்பார்கள்.

இந்த விபத்து நட்பு நாடுகளின் வான்பரப்பில் நடந்ததாக சென்ட்காம் விவரித்துள்ளது. இருப்பினும், இராக்கின் இந்தப் பகுதியில் இரான் ஆதரவு போராளிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

ஒரு கூட்டணி குழு ஏவுகணை மூலம் இந்த விமானத்தை இலக்கு வைத்ததாக இரானின் அரசுத் தொலைக்காட்சி கோரியுள்ளது.

இரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் வெடித்ததில் இருந்து, இதுவரை ஏழு அமெரிக்க வீரர்கள் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய போரின்போது அமெரிக்க ராணுவம் இதுவரை குறைந்தது நான்கு விமானங்களை இழந்துள்ளது.

4வது விமானம்

இந்த மாத தொடக்கத்தில், குவைத் வான் பரப்பில் "தவறுதலான நட்பு நாட்டுத் தாக்குதலில்" மூன்று F-15 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அதிலிருந்த ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறினர்.

போயிங் நிறுவனம் 1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் அமெரிக்க ராணுவத்திற்காக கேசி-135 ஸ்ட்ரேடோடேங்கர் விமானங்களைத் தயாரித்தது.

இது அமெரிக்க ராணுவத்தின் வான்வழி எரிபொருள் நிரப்பும் பிரிவின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. மேலும், போர் விமானங்கள் தரை இறங்க வேண்டிய அவசியம் இல்லாமல் நீண்ட தூரப் பணிகளை மேற்கொள்ள இது அனுமதிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg8yknyn4po

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.