Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தமிழ்நாடு - சுப.சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

              இது தமிழ்நாடு

                              - சுப.சோமசுந்தரம்

           தோழர் திருமுருகன் காந்தியின் தலைமையிலான மே 17 இயக்கம் இந்தி ஆதிக்க எதிர்ப்பினைத் தீவிரமாகக் கையிலெடுத்திருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்றுதானே ! மொழி ஈகியர் தாளமுத்து நினைவு நாளான மார்ச் 11 ஆம் தேதி இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஏன் இப்போது என்று கேட்பவர்களுக்கு 'இதற்கு வேறு நல்ல நாள் எது ?' என்று வினாவெதிர் வினாவைத்தான் பதிலாகக் கூற முடியும். இப்போது ஆரம்பிப்பதற்கு ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும் என்பது உண்மையாக இருந்தால் கூட, இருந்துவிட்டுப் போகட்டுமே ! அப்படியாவது நல்லது நடக்கட்டுமே ! தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுத் துறைகளில் எல்லாம் வடவரை மட்டுமே வைத்து நிரப்புவது எவ்வகையில் சரி ? தமிழ்நாட்டில் வங்கியின் சேவை முகப்பில் (counter) கூட இந்திக்காரர்களை அமர வைப்பதின் நோக்கமென்ன ? தொடர் வண்டிகளில் பயணச்சீட்டு பரிசோதகராகக் கூட (TTE) வடவர்கள் ஏன் ? நம் ஆட்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றால் குறுகிய கால அளவிலேயே அங்கே உள்ள மொழியில் தேவையான அளவு பேசக் கற்றுக் கொள்வதைக் காணலாம். வடக்கிலிருந்து வருபவன் எத்தனைக் காலமானாலும் ஆங்கிலம் கூட பேச மெனக்கிடுவதில்லையே, ஏன் ? தன் மொழியே இந்தியாவின் மொழி என்ற மொழி ஆதிக்கத் திமிரன்றி வேறென்ன ? இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம் என்பது ஒவ்வொரு காலத்திலும் தமிழன் அவ்வப்போது கையிலெடுக்க வேண்டிய ஒன்றாகி விட்டது.

               இக்காலகட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். இந்தித் திணிப்பை எக்காலத்திலும் எதிர்க்கும் திராவிட இயக்கங்கள் - தற்காலத்தில் திக வும் திமுகவும் மட்டுமே - ஏன் அவருடன் கைகோர்க்கவில்லை ? தமிழ்த் தேசியம் (போலியாகவேனும்) பேசித் திரியும் நாதக வினர் எங்கே போனார்கள் ? திருமுருகன் காந்தி தலைமையில் போராட ஏதேனும் மனத்தடை இருக்குமானால், அவர் எந்தத் தலைமையின் கீழும் இப்போராட்டத்தை எடுத்துச் செல்லத் தயாராக இருப்பார். அவர் ஓட்டு அரசியல் செய்யவில்லை. காரியம்தான் முக்கியம்; வீரியம் முக்கியமில்லை என்பதை உணர்ந்தவர் திருமுருகன் காந்தி. அவரை ஓரளவு அறிந்தவர் எவருக்கும் இதனைச் சொல்லும் உரிமையுண்டு. அவருக்குப் புலம்பெயர் தமிழரிடமிருந்து பணம் வருகிறதாக்கும் என்று தனி நபர் விமர்சனத்தில் இறங்கி போராட்டங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம். அது உண்மையாகவே இருப்பினும், தவறென்ன ? பொருளில்லாமல் ஒரு புல்லைக் கூட இந்த பூமியில் பிடுங்க முடியாது. விமர்சனம் செய்பவர்கள் சமூகப் போராட்டங்களுக்குத் தங்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து விடுவதுதானே !

            மேலே குறிப்பிட்ட கட்சிகள் தேர்தல் கால வேலைகளைக் காரணம் சொல்லி இப்போராட்டத்தில்  இறங்கவில்லையாக்கும் என்றே வைத்துக் கொள்வோம். குறைந்தபட்சம் அக்கட்சித் தலைமைகள் ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கலாமே !அக்கட்சிகளின் பத்திரிக்கைகள் போராட்டத்தின் செய்தியையாவது மக்களிடம் கொண்டு சேர்க்கலாமே ! மொழிப்போராட்டம் என்பது தனி மனித பிம்பங்களைக் கட்டமைக்கும் ஒன்றல்ல. அது ஒரு சமூகப் போராட்டம். ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும்.

           Note the point Your Honour ! திராவிட இயக்க அரசியல் போல என் மனதிற்கு நெருக்கமான இடதுசாரி அரசியலை இங்கே நான் பேசவேயில்லை !

https://www.facebook.com/share/v/1B4uujnoAW/

https://www.facebook.com/share/r/18Pz9oLJnP/

Edited by சுப.சோமசுந்தரம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.