Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவுமுறை, எண்ணெய் வகைகள் பற்றிய புதிய தகவல்களுடன் மருத்துவர் பிரகாஸ்மூர்த்தியுடனான உரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை நாள் சந்தேகத்தை தெளிவா விளக்கிட்டார் மன்னார்குடி மருத்துவர்| Positivitea | Dr Prakashmurthy

Positivitea இன் இந்த எபிசோடில், டாக்டர் பிரகாஷ்மூர்த்தியுடன் பல உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி முக்கியமாக எண்ணெய், முட்டை மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி பேசினோம். ரேஷன் பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், செக்கு எண்ணெய் போன்றவற்றைப் பற்றி அவர் எங்களிடம் ஒரு சிறந்த நேர்காணலை வழங்கியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தகவல்கள் "புதியவை" என்று சொல்வதை விட "விசித்திரமானவை" என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

தெற்காசியர்கள் - இந்தியர், இலங்கையர், பாகிஸ்தானியர், வங்கதேசத்தினர் - வெள்ளையின மக்களையும், கிழக்காசிய மக்களையும் விட 4 மடங்கு இதய நோய் தாக்கும் ஆபத்துடையவர்கள் ! இதற்குக் காரணங்கள் அவர்களுடைய ஜீன்களிலேயே இருக்கின்றன.

  1. இரத்தம் இலகுவாகக் கட்டியாகும் நிலை (thrombosis).

  2. இரத்தக் கொழுப்பு ஆரோக்கியமற்ற நிலை (dyslipidemia).

  3. அழற்சி (inflammation) அதிகரிக்கும் நிலை

    ஆகிய 3 காரணிகள் இந்த 4 மடங்கு அதிகரித்த இதய நோய் வாய்ப்பின் காரணங்கள்.

    இந்த 3 காரணிகளுள் முதலாவதைக் கட்டுப் படுத்த மாத்திரைகள் தேவைப் படலாம் (blood thinners). ஏனைய இரண்டையும் கட்டுப் படுத்த உணவும், உடற் பயிற்சியும் பயன்படுத்தலாம்.

1. இரத்தக் கொழுப்பு நிலை: இதை நாம் உள்ளெடுக்கும் எண்ணையில் இருக்கும் கொழுப்பு பிரதானமாகத் தீர்மானிக்கும். தேங்காய் எண்ணை, பாம் எண்ணை என்பவற்றில் இருக்கும் நிரம்பிய கொழுப்பமிலம் இரத்தத்தின் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் காரணி. இவர் குறிப்பிடும் பாமோலின் எண்ணை கூட 50% வரை நிரம்பிய கொழுப்புக் கொண்டது. அதைச் சாதாரணமாக "விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஆலோசனை சொல்வது ஆபத்தானது.

2. PUFA இனைப் பொரிக்க/வதக்கப் பாவித்தால் அதில் இருந்து புற்று நோய் உருவாக்கும் காரணிகளும், அழற்சியைக் கூட்டும் பொருட்களும் உருவாகும் என்பது உண்மை. MUFA இனைச் சூடாக்கினால் இந்த ஆபத்துக்கள் குறைவு.

இந்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவு செய்யும் எண்ணை வகை ஒலிவ் எண்ணை: அதில் இருக்கும் கொழுப்பமிலம் பெருமளவு MUFA வகை. நிரம்பிய கொழுப்பும் குறைவு. இதை விட்டு விட்டு பாமோலின் எண்ணையை எடுத்துக் கொள்ளும் படி சொல்லும் ஆலோசனைக்கு என்ன விஞ்ஞான அடிப்படை இருக்கிறதெனத் தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இந்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவு செய்யும் எண்ணை வகை ஒலிவ் எண்ணை: அதில் இருக்கும் கொழுப்பமிலம் பெருமளவு MUFA வகை. நிரம்பிய கொழுப்பும் குறைவு.

அண்ணை, ஒலிவ் எண்ணையை அதிக சூடுபடுத்தக் கூடாதாமே?

Edited by ஏராளன்
தா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை, ஒலிவ் எண்ணையை அதிக சூடுபடுத்தக் கூடாதாமே?

இதை முன்னரும் நிழலி ஒரு தடவை கேட்டிருந்தார். மத்திய தரை (Mediterranean) நாடுகளில் ஒலிவ் எண்ணையை உணவின் மீது தெளித்து, சூடாக்காமல் பாவிப்பதால் இந்த தவறான புரிதல் என நினைக்கிறேன்.

சாதாரண வதக்கல் (frying), தீவிர வதக்கல் (deep frying): முட்டை பொரித்தல் அல்லது அல்லது எதையாவது கொஞ்ச எண்ணையில் வறுத்தல் போன்றவற்றிற்கு தூய ஒலிவ் எண்ணை (extra virgin olive oil) பாவிக்கலாம். எண்ணையின் smoke point ~400 F வரை இருப்பதால் கருகிய பக்க விளைவுகள் உருவாகாது.

அதை விட அதிக வெப்ப நிலை வேண்டும் மீன் பொரித்தல் போன்ற தேவைகளுக்கு light-tasting olive oil என்ற ஒரு வகை இருக்கிறது. இதன் smoke point ~470 F வரை இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு. இந்தப் பாதுகாப்பிலும் திருப்தி இல்லையெனில், அவகாதோ எண்ணை பொரிக்கப் பாவிக்கலாம். இதன் smoke point ~520 F வரை இருக்கும். அதே வேளை ஒலிவ் எண்ணையின் ஆரோக்கிய அம்சங்கள் அவகாதோ எண்ணையிலும் இருக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், எங்கள் அனேக சமையல் தேவைகளுக்காக ஒலிவ் எண்ணையைச் சூடாக்கலாம்.

43 minutes ago, Justin said:

வீட்டில் 80 வீதமான பொரியலுக்கு நாம் அவகாடோ எண்ணெய்யை பயன்படுத்துகின்றோம் இப்போது. மிகுதி 20 விகிதத்தில் 15 வீதம் நல்லெண்யையும் 5 வீதம் canola எண்ணெயையும் பயன்படுத்துகின்றோம்.

இறைச்சி, மீன் marinade பண்ண , salad போன்றவற்றுக்கு ஒலிவ் எண்ணையை பாவிக்கின்றோம்.

வீட்டில் பார்ட்டி, விருந்தினர்கள் கனக்க எனில் இருக்கவே இருக்கு சூரியகாந்தி பூ எண்ணெய்.😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.