Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை


கவிஞர் வைரமுத்து ஒரு கவிஞர் இல்லை வெறும் பாடலாசிரியர், அவருக்கு ஞானபீட விருது கொடுத்தது தவறு என ஆசான் ஜெயமோகனும், இன்னும் பல படைப்பாளிகளும் முழங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக சில படைப்பாளிகளும், இலக்கியம் என்றால் என்னவென்று தெரிந்த அல்லது தெரியவே தெரியாத கற்றுக்குட்டிகளும் கம்புசுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்!

கவிஞர் வைரமுத்து காம உணர்வுகளை அழகியலோடு, சில நேரங்களில் அதையும் தாண்டி பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

உதாரணம் ஒன்று: ஜீன்ஸ் படத்தில் வரும் அன்பே அன்பே பாடலில்..

பெண்ணே உனது

மெல்லிடை பார்த்தேன்

அடடா பிரம்மன் கஞ்சனடி

சற்றே நிமிர்ந்தேன் தலை

சுற்றிப் போனேன் ஆஹா

அவனே வள்ளலடி


ஆசான் ஜெயமோகனும் தனது படைப்புக்களில் பெண்களை, காம உணர்வுகளை, கலவியை சமரசம் எதுவுமின்றி எழுதி வாசிப்பவர்களை பிரமிக்கவைத்துள்ளார்!

ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடர்களைப் பல வருடங்களாகப் படித்து வருகின்றேன் (26 இல் இன்னும் நான்கு நாவல்கள் படிக்க உள்ளன!). படிக்கும்போது குறிப்புக்கள் எடுப்பது வழக்கம். 😀

அவற்றில் காமரசம் ததும்பும் வரிகளை ஒன்றாக்கி AI மூலம் பாடல் ஒன்றை உருவாக்க கடந்த சில நாட்களாக முயற்சித்தேன்😍. தமிழில் லகர, ளகர, ழகர,  ந,ன, ண போன்ற இடையினம், மெல்லினங்களில் AI தடுமாறியதால் எதிர்பார்த்த மாதிரி பாடலைக் கொண்டுவருவது இலகுவாக இருக்கவில்லை. ஆனால் பொதுவான தமிழ்ச் சொற்களைக் கொண்டு பாடல் உருவாக்குவது இலகு என்று தெரிந்தது. AI எப்படி வேலை செய்யும் என்பது AI நிபுணர்களுக்கே தெரியாது என்பதால் எப்படியான இசை வாத்தியங்களை அது தேர்வு செய்யும், எப்படிப் பாடல் அமைக்கும் என்பதை அறியமுடியாது. கிடைப்பதில் விருப்பமானதுடன் திருப்தியடையவேண்டியதுதான்.

அதிகம் பொருத்தமான பாடல்களை உருவாக்க வேண்டும் என்றால் இலவசமான limited model களை விட்டுவிட்டு கட்டணம் செலுத்தி தரமான model களை, AI agent களைப் பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன். எனக்கு அப்படி எல்லாம் கட்டணம் செலுத்த மனமில்லை!

சரி எப்படிப் பாடலை உருவாக்கினேன் என்று கீழே விளங்கப்படுத்துகின்றேன்.

முதலில் AI tools களைப் பார்ப்போம்.

பாடல் வரிகளை உருவாக்க பொருத்தமான AI tools:

  • Claude AI (sonnet 4.6 extended) - இலவசம். கட்டணம் செலுத்தி இன்னும் நல்ல tools ஐ பாவிக்கலாம்

  • Gemini AI Pro: இலவசம் ஆனால் ஒரு நாளில் பல தடவைகள் பாவிக்கமுடியாது. கட்டண version உள்ளன.

பாடல் உருவாக்க பொருத்தமான AI Tools:

  • Suno AI: பாடல்களை இலகுவாக உருவாக்கலாம். வேறு சில AI tools உள்ளன ஆனால் நேரம் விரயமானதுதான் மிச்சம்.

படங்களை உருவாக்க: 

  • Gemini AI pro, Copilot

படங்களில் இருந்து காணொளிகளை உருவாக்க: 

Grok, Meta AI, Runway போன்றவற்றை 5 செக்கன் காணொளிகளை உருவாக்கப் பாவிக்கலாம்.

பாடல்வரிகளை உருவாக்குதல்:

நான் Claude, Gemini Pro இரண்டையும் பாவித்தாலும் Gemini Pro தான் பிடித்திருந்தது. எனது கேள்விக்குப் பின்னர் வெண்முரசு நாவல்களில் இருந்து எடுத்த குறிப்புக்களை அப்படியே ஒட்டிவிட்டேன்!

கொடுத்த Prompt:

Suno AI இல் ஒரு பாடல் கீழே உள்ள குறிப்புக்களைக் கொண்டு உருவாக்கவேண்டும். அழகிய இளம்பெண்ணைக் காணும் இளைஞன் ஒருவனின் ததும்பும் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் நான்கு நிமிடங்கள் வரக்கூடிய பாடலாக உருவாக்க உதவி தேவை.

Suno AI இல் உணர்வு பூர்வமாகவும், சரியான தமிழ் உச்சரிப்புடனும் பாடலை உருவாக்க பொருத்தமான பாடல் வரிகளையும், தேவையான tags களையும், பாடலுக்குப் பொருத்தமான Styles களையும் தரமுடியுமா?

அவள் இடையிலிருந்து நீலப்பட்டாடை முழுமையாக நழுவிச்சரிய, வெண்பளிங்குயானையின் மத்தக முழையென விரிந்த இடையும் மலர்தார் தொடைகள் நடுவே மான்குளம்பென அல்குலுமாக அவள் நின்றாள். மழைக்கால மலைகள் அருவிகளை அணிந்திருப்பதுபோல நகைகள் மட்டுமே அணிந்திருந்தாள்.

மூச்சில் முலைகள் மெல்ல ஏறியிறங்கின. முலைக்கண்களின் கருவட்டத்தில் மயிர்ப்புள்ளிகள் சிலிர்த்திருந்தன. விலாவெலும்புகள் வெண்தோலுக்குள் பாலைநில மணலலைகள் போல தெரிந்தன. அவள் விழிகள் அவனை நோக்கி ஒருசொல்லும் இல்லாமல் வெறுமனே விரிந்திருந்தன.

நீரைப்பிளந்து எழுந்து கரைநோக்கிச் சென்ற ஒரு செந்நிறப்பேரழகியைக் கண்டான். அவள் உடல் தழலாக இருந்தது. கூந்தல் அதன் புகையென நெளிந்தது. செந்தாமரை இதழிலென நீர்த்துளிகள் ஆடையற்ற அவள் உடலில் ஒளியுடன் உருண்டு வழிந்தன.

மலர் சுமந்த பனித்துளிகள் போல முலைகள் ததும்பின. இரையை இறுக்கும் மலைப்பாம்பு போல அசைந்தது இடை. நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத்தசைகள். செம்பொற்தாலத்தில் ஏந்திய அகல்விளக்கின் சுடரென அல்குலின் செந்நிற மென்மயிர்.

வைரத்தால் செதுக்கப்பட்ட பெண்ணுடல்

Gemini AI தந்த பாடல்வரிகள். 

சில இடங்களில் பொருத்தமான சொற்களை நான் மாற்றினேன்.. கீழே உள்ளது பிந்திய வரைபு..

[Intro]

[Seductive Flute with Deep Bass]

[Chorus]

அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை...

நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...!

உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய...

என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...!

[Verse 1]

நீலப் பட்டாடை இடையில் மெல்ல நழுவ...

வெண்யானை மத்தகம் என விரிந்தது அவள் இடை...!

மலர்தார் தொடைகள் நடுவே மான் குளம்பு சிமிட்டக் கண்டேன்...!

என் மூச்சே உறைந்தது ஒரு கணம்..!

[Build Up]

என் நெஞ்சினிலே... புரவிக் குளம்பு ஓசை!

[Pre-Chorus]

செந்தாமரை இதழில் பனித் துளிகள் போலே...

ஆடை இல்லா மேனியில் நீர்த் தாரை உருள...

தழல் உடலோடு அவள் என்னை நோக்க...

பனியாகக் கரைந்து போனேன்... அந்த அனலின் சூட்டிலே...!

[Chorus]

அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை...

நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...!

உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய...

என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...!

[Verse 2]

மூச்சில் மார்புகள் மெல்ல மெல்ல ஏறி இறங்க…

மலர் சுமந்த பனித்துளிகள் போல அவை ததும்ப…!

மலர்முலை கண்களில் மென் மயிர்கள் சிலிர்க்க….!

வெண்மேனி விலாவினிலே பாலை மணல் அலை ஆகுதே…!

[Verse 3]

இரையினை இறுக்கும் பாம்பென நெளிந்தது இடை….!

நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத் தசைகள்…!

செம்பொன் தட்டில் தவழும் விளக்கின் சுடரென…

செந்நிற மென் மயிர் தூவல் என் தேகத்தை அனலாய் சுடுதே….!

[Bridge]

அவள் விழிகள் என்னை நோக்கி அகல விரிந்தன…!

என் ஆண்மை சிறகு விரித்தது…!

காம நெருப்பின் கலசமே…!

என் தாகம் தீர்க்கும் நதியே…!

உன் தீண்டலில் உயிர்த்தெழ ஏங்கித் துடிக்கின்றேனே...!

[Chorus]

அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை...

நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...!

உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய...

என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...!

[Outro]

தழல் உடலே...! ஆஹா...!

பனித்துளியே...! ம்ம்ம்...!

வைரம் தகிக்கும் கனலே...!

என் உயிரே...!

உன் விரிந்த விழிகளில்..

நான் வீழ்ந்தேனே...!

[Fade out: Sensuous flute and echoing vocals]


Styles:

Passionate Male Tenor Vocal, Sensual Tamil Cinematic Pop, Seductive Groove, Deep Bass, Traditional Indian Percussion With Modern Synth, Carnatic-Inspired Strings, Tabla Rhythm, Flute Melody, Romantic, Emotional Intense Erotic Vibe, A.R. Rahman Style Fusion, Young Expressive Voice, Accurate Tamil Diction. Pronounce Tamil Words Clearly Without Mistakes, Native Tamil Phonetics. No Accidental Hindi/English Accent In Tamil Lyrics

பாடலை உருவாக்குதல்:

Suno AI இல் Simple மற்றும் Custom என்று இரு தெரிவுகள் உள்ளன.

Custom தெரிவுக்குள் உள்ள Lyrics பெட்டிக்குள் Gemini Pro தந்த பாடல்வரிகளை (tags உடன்) ஒட்டவேண்டும்.

சரியான தமிழ் உச்சரிப்பு வர நான் சில இடங்களில்:

 - (hyphen) - syllables ஐ சரியாகப் பிரிக்க

, காற்புள்ளி - இடைவெளி விட

! ஆச்சரியக்குறி - நிறுத்த

… (ellipses) - நீட்டிப் பாட

பாவித்திருந்தேன்.

இவற்றை பாடல்களின் Suno இணைப்புக்களில் பார்க்கலாம்.

Styles பெட்டிக்குள் Gemini AI தந்த styles களை அப்படியே ஒட்டவேண்டும்.

பின்னர் Advanced Options இல்:

Style Influence: 100 

80 க்கு மேல் கொடுத்தால் கேட்ட style களுக்கு கிட்டவரும் 

Weirdness: 0

10க்கு கீழ் கொடுத்தால் AI வித்தியாசமாக முயற்சி செய்வதைக் குறைக்கும்

 எனத் தெரிவு செய்தேன். ஆனால் இவற்றை இப்படியான extreme ஆக தெரிவு செய்வதும் நல்லதல்ல.

பாடலுக்கு ஒரு தலைப்பையும் Titles இல் கொடுக்கலாம்.

இரண்டு பாடல்களை உருவாக்கினேன். 

அவற்றை தரவிறக்கி Files இல் சேமித்த பின்னர்,

Copilot AI ஐப் பாவித்து ஒரு பொருத்தமான படத்தை  உருவாக்கினேன்.

படத்திற்கான prompt ஐ ஆசானின் வரிகளை Claude AI இல் கொடுத்துக் கேட்டிருந்தேன்😁

Prompt:

Create an image of A Tamil girl, a red enchantress rising from the water. Her body like fire, her hair coiling like smoke, a fiery beauty burning with love. A blue silk saree gently slipping from her waist, revealing her hips like a white elephant’s forehead. Water droplets like dewdrops on red lotus petals, streams of water rolling on her body. Her fiery body gazes at me, and I melt like snow in the heat of that fire. Her reddish black hair floats in the breeze 

கிடைத்த படத்தை Meta AI, Runaway AI ஐப் பாவித்து 5 செக்கன்கள் வீடியோ உருவாக்கி, அதையே loop ஆக ஓடவிட்டு iMovies இல் காணொளிகளைக் தயாரித்தேன்.

கீழே உள்ள பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்துள்ளது என்பதைச் சொல்லுங்கள்😊

ஒன்று 4 நிமிடங்கள் 19 செக்கன்கள்

Suno: https://suno.com/s/PsdURePRy1Ahzj8b

இரண்டு: 6 நிமிடன்கள் 28 செக்கன்கள்

Suno: https://suno.com/s/GohzmvqVFQbeBnvc

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவே தலையை சுத்துது.

எப்படி இதையெல்லாம் தயாரிப்பது?

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான முயற்சி ........ கவிதையும் நன்றாக இருக்கு...... அதை நீங்கள் திருத்திய 2 வது கவிதை சிறப்பு.....! 👍

நான் "வீதியோரம்" கதைக்கு AI யால் படங்கள் போட முயற்சி செய்தேன். அது நன்றாக வந்தது. ஆனால் பலமுறை முயற்சித்தும் யாழில் ஓட்ட முடியவில்லை....... பின்பு தான் கூகுள் படங்களை எடுத்து ஓட்டினேன் .......!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

மலர்தார் தொடைகள் நடுவே மான் குளம்பு சிமிட்டக் கண்டேன்...!

நானும் கண்டேன். காட்சியில் அவள் நடந்து வர, ஆடை சற்று நகர, காட்சி மீண்டும் ஆரம்பத்துக்கு வரும் அந்த நொடியில் அவள் முகம் ஆடை நகர்ந்த இடத்தில் தோன்றுவது அருமை.

பாடகர் சிறீநிவாசனை நினைவுட்டும் குரல். நன்றாக வந்திருக்கிறது.

8 hours ago, கிருபன் said:

கவிஞர் வைரமுத்து காம உணர்வுகளை அழகியலோடு, சில நேரங்களில் அதையும் தாண்டி பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இடத்தில் கொஞ்சம் சறுக்கிறது.

‘ஓர் அழுகை ஆதரவு தேடுகிறதுஎன்ற பெயரில் கவிதை நூல் ஒன்றை அரங்கராசன் என்பவர் வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதை நூலில் இருந்ததுதான் இந்தக் கவிதை

“பிரம்மனை கஞ்சன் என்றுதான்

நினைத்தேன்

உன் இடையைப் பார்த்தபோது

சற்று நிமிர்ந்தபோதுதான் தெரிந்தது

அவன்

வள்ளலாகவும் இருக்கிறான்?…”

கவிப்பேரரசு சுட்டதுதான் ஜீன்ஸ் படத்தில் வந்தது. எல்லாப் புகழும் வைரமுத்துவுக்கே.

9 hours ago, கிருபன் said:

சரி எப்படிப் பாடலை உருவாக்கினேன்

இப்படியான விளக்கங்கள் நல்ல உதவியாக இருக்கும். பலர் இந்த வழியில் ஈடுபட தூண்டுதலாக இருக்கும். நன்றி!

உங்கள் காலத்துப் பாடல். அதுதான் உங்களுக்குப் மிடித்திருக்கிறது. என் காலத்துப் பாடல் என்பதால், “மடல் வாழை தொடையிருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க படைத்தவனின் திறமையெல்லாம் முழுமை பெற்ற அழகி…”😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.