Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பதினால் மட்டும் அறிவு வளர்வதில்லை.

என்னடா விளையாட்டு வீட்டைபோய் படியிங்கோடா. அவன்  சித்தப்பாவின் அதட்டல் அவனையும் அவன் அண்ணனையும் மற்றும் நண்பர்களையும் நடுங்கி ஒடுங்கவைக்கும். அவர் கையில் அருகே இருக்கும் வேலியில் ஒடித்த நீண்ட கிளிசூரியோ பூவரசம் கம்பு ஒன்று மேலும் கீழும் ஆடி அண்ணன் தம்பி இருவரினதும் கால் கைகளைப் பதம்பார்க்கும். இது அவர்கள் பள்ளிக்கூடம் முடிந்த மாலை நேரங்களில், லீவு நாட்களில்கூட அவர்கள் விளையாடும் இடங்களில் நடக்கும் சம்பவம். சித்திரையில் அதுவும் வருடப்பிறப்பு அன்று தம்பி பிறந்த தோசம் காரணமாகவே சில மாதங்களில் அவர்கள் அப்பா இறந்துவிட்டதாக சொந்தங்களால் காரணம் கூறப்பட்டது. காரணம் எதுவக இருந்தாலும், பெரியப்பாக்களும் சித்தப்பாவுமே இவர்கள் குடும்பத்துக்கு உதவிகள் செய்து அவர்களைப் பாதுகாத்து வந்தார்கள். ஆனாலும் சித்தப்பா சற்று வித்தியாமானவர். தான் பெற்ற பிள்ளைகளை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்க்கும் அவர் தன் அண்ணனின் பிள்ளைகளை அதட்டி ஒடுக்கி வைத்திருப்பதில் கர்வம் கொள்பவர். அண்ணனின் பிள்ளைகள் என்றாலும் அவர்களைச் சீராக வளர்க்கிறேன் என்று தன்னை ஒரு சிறந்த காவலனாக காட்டிக்கொள்வதில் பெருமை கொள்பவராக இருந்தார். அண்ணனின் பிள்ளைகளை ஒரு டாக்டராகவோ, எஞ்சினியராகவோ வளர்த்தெடுப்பேன் என்று எல்லோரிடமும் சொல்லி இறுமாப்படைவார். ஆனால் “படிடா படிடா” என்று படுத்துபவருக்கு என்ன படிக்கவேண்டும் எப்படிப் படிக்கவேண்டும் என்று சொல்லவோ வழிகாட்டவோ தெரியாது.

ஒரு டாக்டர், எஞ்சினியர் என்றால் தன் பிள்ளைகளைத் தன்வழி வருவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து வளர்க்க முடியும். கடையொன்றில் சிப்பந்தியாக வேலைபார்க்கும் சித்தப்பாவால் உப்பு எப்படிக் கட்டுவது, சீனி, சக்கரை எப்படிச் சரை கட்டுவது என்பதைத்தவிர வேறென்ன சொல்லிக்கொடுக்க முடியும். “அடியாதமாடு படியாது” என்பது போன்ற முதுமொழிகளுகான விளக்கங்களை தனது பெரியப்பாவின் பிள்ளைகள்மூலமே பரிசோதனை செய்து விளங்கிக்கொள்வது வழக்கமான செயலாகியது.

கல்கி, குமுதம், ஆனந்தவிகடனில் வரும் கதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து தம்பிக்கு தானும் ஏதாவது எழுதவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும் அவன் கையெழுத்தை அவனாலேயே திரும்ப வாசிக்க முடியவில்லை. அத்தனை மோசமான எழுத்து வடிவங்கள். இருந்தும் சிறந்த எழுத்தாளர், திரைப்படங்களுக்கும் கதை வசனங்கள் எழுதி பாராட்டுகள் வாங்கும் கலைஞர் கருனாநிதியின் கையெழுத்து ரெம்பவும் மோசமானது என்பதையும், அவர் எழுதுவதை வாசிக்கக் கூடிய ஒருவரை உதவிக்கு வைத்துள்ளனர் என்ற செய்தியையும் அவன் அறியவந்ததும், வந்த தயக்கம் நீங்கியது. அவன் எழுத்தையும் வாசித்து அறியக்கூடியவர்கள் உலகில் இல்லாது இருப்பார்களா?

சூரியன் காலையில் பிரகாசமாக எழுந்தான், மாலையில் ஒளியிழந்து மறைந்தான், சந்திரன் மலர்ந்தான் என்று ஏதேதோ எழுதி வீரகேசரிக்கு அனுப்பும் எண்ணத்தோடு அண்ணா அக்காமாரிடம் காட்டினான், அவர்கள் அதனைச் சிரமத்தோடு வாசித்தாலும் பின்பு செய்த பரிகாசம் அவன் ஆர்வத்தை அடக்கிச் சோர்வடையச் செய்தது. அவ்வேளையில்தான் யாழ் இணையம் என்ற ஒரு களத்தை திரு மோகன் அவர்கள் ஆரம்பித்தார். களத்தில் இணையும் வழிமுறைகளும் இருக்கவே அவனும் இணைந்து உறுப்பினராகி எழுத ஆரம்பித்தான். சித்தப்பா பிள்ளைகளின் வேண்டுதலில், சித்தப்பா தன் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்த கணனியில், அவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் சென்று பயிற்சி பெற்றுவந்தது இணையத்தில் எழுத உதவியது. இணையம் அவனையும் அரவணைத்தது. சித்தப்பாவின் பிள்ளைகள் அவர்கள் அப்பனைப்போல் அல்லாது நண்பர்கள்போல் பழகினார்கள். யாழ்கள உறவுகளும் அவன் எழுதும் தமிழை வரவேற்றுப் பாராட்டவே வானத்தில் பறந்தான். இன்றும் பறக்கிறான். பறக்கும்போது அவன் சிந்தனையில் எழுந்த, தமிழின் பெருமைகளை அறிந்த, அறிந்தும் மறந்த சில விடயங்களைத் திரும்பவும் நினைவூட்ட விரும்பினான். அதனால் அவன் விருப்பமும் கீழே பதிவாகியுள்ளது.

தமிழினம்

முதல் தலைமுறை: நாம்

இரண்டாம் தலைமுறை: தாய் தந்தை

மூன்றாம் தலைமுறை: பாட்டன் பாட்டி

நான்காம் தலைமுறை: பூட்டன் பூட்டி

ஐந்தாம் தலைமுறை: ஓட்டன் ஓட்டி

ஆறாம் தலைமுறை: சேயோன் சேயோள்

ஏழாம் தலைமுறை: பரன் பரை

பரன்+பரை இதுவே பரம்பரை எனும் தமிழ்சொல்லாக மருவி வழக்கில் உள்ளது. ஒரு தலைமுறை என்பது தோராயமாக 60 வருடங்கள் என்றும், 7 தலைமுறை 480 வருடங்கள் என்றும் ஈரேழு தலைமுறை 960 வருடங்கள் என்றும்(கிட்டத்தட்ட 1000 வருடங்கள்) ஆக பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு பதின்நாங்கு தலைமுறையாக என்று பொருள் வருமாறு தமிழ் மொழி வகுத்துள்ளது. இப்படியான அமைப்பு வேறெந்த மொழிகளிலும் இருப்பதாகத் தெரியவில்லை.

எண்கணிதம்

1= ஒன்று -one

10= பத்து -Ten

100= நூறு -Hundred

1000= ஆயிரம் -Thouand

10000= பத்தாயிரம் -Ten Thousand

100000= நூறாயிரம் -Hundred Thousand

1000000= பத்துநூறாயிரம் -One Million

10000000= கோடி -Ten Million

100000000= அற்புதம் - One Hundred Million

1000000000= நிகரபுதம் - One Billion

10000000000= கும்பம் - Ten Billion

100000000000= கணம் - Hundred Billion

1000000000000= கற்பம் - One Trillion

10000000000000= நிகற்பம் - Ten Trillion

100000000000000= பதுமம் - Hundred Trillion

1000000000000000= சங்கம் - One Zillion

10000000000000000= வெல்லம் - Ten Zillion

100000000000000000= அன்னியம் - Hundred Zillion

1000000000000000000= அர்த்தம் - ? மேலும் எழுத ஆங்கிலத்தில் சொற்கள் தெரியவில்லை.

10000000000000000000= பராத்தம் - ?

100000000000000000000= பூரியம் - ?

1000000000000000000000= முக்கோடி - ?

10000000000000000000000= மகாயுகம் - ?

நாம் கெடுவதற்குக் காரணங்களை நமது ஒளவை மூதாட்டியாரும் அழகாகச் சொல்லியுள்ளார்.

01 பார்க்காத பயிரும் கெடும்

02 பாசத்தினல் பிள்ளையும் கெடும்

03 கேளாத கடனும் கெடும்

04 கேட்டால் உறவும் கெடும்

05 தேடாத செல்வம் கெடும்

06 தெகிட்டினால் விருந்தும் கெடும்

07 ஓதாத கல்வியும் கெடும்

08 ஒழுக்கமில்லா வாழ்வும் கெடும்

09 சேராத உறவும் கெடும்

10 சிற்றின்பம் பெயரும் கெடும்

11 நடாத நட்பும் கெடும்

12 நயமில்லா சொல்லும் கெடும்

13 கண்டிக்காத பிள்ளை கெடும்

14 கடன்பட்டால் வாழ்வு கெடும்

15 பிரிவால் இன்பம் கெடும்

16 பணத்தால் அமைதி கெடும்

17 சினமிகுந்தால் அறமும் கெடும்

18 சிந்திக்காத செயலும் கெடும்

19 சோம்பலினால் வளர்ச்சி கெடும்

20 சுயமில்லா வேலை கெடும்

21 மோகித்தால் முறைமை கெடும்

22 முறையற்ற உறவும் கெடும்

23 அச்சத்தால் வீரம் கெடும்

24 அறியாமையால் முடிவு கெடும்

25 உழாத நிலமும் கெடும்

26 உழைக்காத உடலும் கெடும்

27 இறைக்காத கிணறும் கெடும்

28 இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்

29 இல்லாளில்லா வம்சம் கெடும்

30 இரக்கமில்லா மனிதம் கெடும்

31 தோகையினால் துறவு கெடும்

32 துணையில்லா வாழ்வு கெடும்

33 ஓய்வில்லா முதுமை கெடும்

34 ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்

35 அளவில்லா ஆசை கெடும்

36 அச்சப்படும் கோழை கெடும்

37 இலக்கில்லா பயணம் கெடும்

38 இச்சையினால் உள்ளம் கெடும்

39 உண்மையில்லா காதல் கெடும்

40 உணர்வில்லாத இனமும் கெடும்

41 செல்வம் போனால் சிறப்பு கெடும்

42 சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்

43 தூண்டாத திரியும் கெடும்

44 தூற்றிப்பேசும் உரையும் கெடும்

45 காய்க்காத மரமும் கெடும்

46 காடழிந்தால் மழையும் கெடும்

47 குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்

48 குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்

49 வசிக்காத வீடும் கெடும்

50 வறுமை வந்தால் எல்லாம் கெடும்

51 குளிக்காத மேனி கெடும்

52 குளிர்ந்து போனால் உணவு கெடும்

53 பொய்யான அழகும் கெடும்

54 பொய்யுரைத்தால் புகழும் கெடும்

55 துடிப்பில்லா இளமை கெடும்

56 துவண்டிட்டால் வெற்றி கெடும்

57 தூங்காத இரவு கெடும்

58 தூங்கினால் பகலும் கெடும்

59 கவனமில்லா செயலும் கெடும்

60 கருத்தில்லா எழுத்தும் கெடும்

இந்த 60ஐயும் அறிந்துகொண்டால் நம் வாழ்க்கை கெடவே கெடாது.

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் ஐயா, இது கற்பனை புனைவோ அல்லது உண்மையோ? சித்தப்பாவிடம் அடிவாங்கி பின்னர் யாழ் இணையத்தில் இணைந்து கருத்துக்கள் பகிரும் அந்த உறவு யார்? இளம் வயது உடையவரோ?

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா தமிழின உறவு முறைகளில் தொடங்கி கணிதத்துக்குள் நுழைந்து ஒளவையின் மூதுரையில் இணைந்து ..... சூப்பர் .........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.