Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் ஈரானின் எண்ணெயைக் கைப்பற்றுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஆனால் அமெரிக்காவிலுள்ள சிலர் நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்? எனக் கேட்கிறார்கள். அந்த கேள்வி முட்டாள் தனமானது என்றும் அவர் கூறியுள்ளார். 

கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து ட்ரம்ப் குறிப்பிடுகையில், ஒருவேளை நாங்கள் கார்க் தீவைக் கைப்பற்றலாம், அல்லது செய்யாமல் விடலாம். 

எங்களிடம் பல விருப்பங்கள் உள்ளன. இதன் பொருள் நாம் சில காலம் கார்க் தீவில் இருக்க வேண்டியிருக்கும் என அவர் கூறியுள்ளார். 

அத்தீவின் ஈரானியப் பாதுகாப்பு குறித்துக் கேட்டபோது, அவர்களிடம் எந்தப் பாதுகாப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களால் அதை மிக எளிதாகக் கைப்பற்ற முடியும் என்றார். 

மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் அதிகரித்தால் அமெரிக்கப் படைகள் ஈரானியத் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், மேலதிகமாக 3,500 அமெரிக்கப் படையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் தூதுவர்கள் ஊடாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், போர்நிறுத்த ஒப்பந்தம் விரைவில் எட்டப்படுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். 

ஒரு ஒப்பந்தத்தை மிக விரைவாகச் செய்துகொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

No image preview

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் மசகு எண்ணெய் வளத்தையும், கார்க் தீவையும் அமெரிக்காவால் கைப்பற்ற முடியும் - ட்ரம்ப் தெரிவிப்பு

Published By: Digital Desk 3

30 Mar, 2026 | 09:02 AM

image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

ஈரானில் உள்ள மசகு எண்ணெயைக் கைப்பற்ற முடியும் எனவும், அந்நாட்டின் முக்கிய எரிபொருள் மையமான கார்க் தீவைக் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையைச் சொல்லப்போனால், ஈரானின் எண்ணெயை எடுத்துக்கொள்வதுதான் எனக்குப் பிடித்தமான விடயம். தனது இந்தத் திட்டத்தை எதிர்க்கும் அமெரிக்கர்கள் அறிவற்றவர்கள்.

ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவைக் கைப்பற்றுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும், சில நேரங்களில் நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம், சில நேரங்களில் இல்லாமலும் போகலாம்; நம்மிடம் பல தெரிவுகள் உள்ளன.

அத்தீவில் ஈரானிடம் பெரிய அளவில் பாதுகாப்பு வசதிகள் இல்லை, அமெரிக்காவால் மிக எளிதாக அதைக் கைப்பற்ற முடியும்.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே 3,500 அமெரிக்க வீரர்கள் அங்கு தரையிறங்கியுள்ளனர். கார்க் தீவைக் கைப்பற்றினால், அமெரிக்கப் படைகள் அங்கு நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.

அதேவேளை, பாகிஸ்தான் தூதுவர்கள் வழியாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றார்.

ஒரு ஒப்பந்தம் மிக விரைவாக எட்டப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், போர் நிறுத்தம் எப்போது ஏற்படும் என்பது குறித்து தெளிவான பதிலை அளிக்க மறுத்துவிட்டார்.

https://www.virakesari.lk/article/242270

அமெரிக்கா: தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை பயங்கரவாத முத்திரை குத்தி இறுதிவரைக்கும் தமிழின அழிப்பிற்காக துணை நின்ற, இந்தியாவுக்கு நிகரான நாடு.

ஈரான்: இறுதி யுத்த காலத்தில் கிளஸ்ரர் குண்டுகளை இலங்கைக்கு விற்ற நாடு. ரஷ்யாவும் ஈரானுமே இலங்கைக்கு இவ்வகையான குண்டுகளை கொடுத்தது.

இருவரும் அடிபடும் போது எந்த தரப்பு தோற்றாலும், எந்தத் தரப்புக்கு இழப்புகள் அதிகம் ஏற்பட்டாலும் மகிழ்ச்சி தான்.

ஆனால் உந்த காஸ் (gas / petrol) விலைதான் விசரை ஏற்றுது

  • கருத்துக்கள உறவுகள்

கார்க் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளில் கைவைக்க அமெரிக்கா தயங்குகிறதா? - ஈரானுக்கு ஏன் கார்க் முக்கியம்? - ஒரு பார்வை 

Published By: Nanthini

30 Mar, 2026 | 06:44 PM

image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

ஈரானின் முக்கியமான பொருளாதார மையமாக விளங்கும் கார்க் தீவில் உள்ள அனைத்து இராணுவ இலக்குகளையும் அமெரிக்க படைகள் முற்றாக அழித்துவிட்டன. அத்தீவை அமெரிக்கா விரைவில் கைப்பற்றும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவந்தாலும், கார்க் தீவின் உள்கட்டமைப்புகளை அழித்தாலோ தீவை முற்றாக கைப்பற்றினாலோ அதன் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பது குறித்து சிந்திக்கும் அவரது நிலைப்பாட்டில் ஒரு தளம்பல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (29) பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகைக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், "ஒருவேளை நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம் அல்லது கைப்பற்றாமலும் போகலாம். எங்களிடம் பல விருப்பங்கள் உள்ளன.

கார்க் தீவை கைப்பற்றினால் அமெரிக்க படைகள் அங்கு நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டியிருக்கும்...

அந்த தீவில் ஈரானிடம் பெரிய அளவில் பாதுகாப்பு வசதிகள் இல்லை. நாம் அதை மிக எளிதாகக் கைப்பற்ற முடியும்" எனக் கூறியுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி இத்தீவு தொடர்பாக பேசிய ட்ரம்ப், கார்க்கில் உள்ள அனைத்து இராணுவ இலக்குகளையும் அமெரிக்க படைகள் பரிபூரணமாக அழித்துவிட்டன. அதேசமயம், ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பைத் தாக்குவதை அமெரிக்க இராணுவம் இதுவரை தவிர்த்து வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இம்மாத தொடக்கத்தில் ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரானை வற்புறுத்துவதற்காக, அத்தீவை ஆக்கிரமிக்க அல்லது முற்றுகையிட அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை தடுப்பதோடு மட்டுமன்றி, அந்நாட்டின் நிலப்பரப்பு மீது தாக்குதல்களை நடத்தவும் ஒரு தளமாக பயன்படுத்த, கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச மட்டத்தில் பல்வேறு செய்தி ஊடகங்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.

அமெரிக்காவால் இலக்குவைக்கப்படும் கார்க் தீவு ஏன் ஈரானுக்கு முக்கியம்?

ஈரான் நாட்டின் பொருளாதார உயிர்நாடியான விளங்குவது கார்க் தீவாகும். இந்த தீவு ஈரான் கடற்கரை பகுதியிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய பாறைத் தீவு ஆகும். அத்தீவு சிறியதென்றாலும் ஈரானின் எரிபொருள், எரிசக்தி உள்கட்டமைப்பின் அமைவிடமாக உள்ளதோடு, ஈரானுக்கு எரிபொருள் மூலமாக அதிகப்படியான வருமான செழிப்பை ஏற்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.

ஈரானின் மசகு எண்ணெய் போக்குவரத்தில் 90 வீத செயற்பாடுகள் இந்த தீவில் உள்ள எரிபொருள் ஏற்றுமதி முனையத்திலேயே நடைபெறுகின்றன.

ஈரான் நாட்டின் மசகு எண்ணெய், பிரதான நிலப்பரப்பிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டுசெல்லப்பட்டு, இந்த தீவில் உள்ள முனையத்தின் வழியாகவே வருகிறது.

கார்க் தீவின் கடற்கரை ஆழமான நீர்ப் பகுதியை கொண்டிருப்பதால் 85 மில்லியன் கேலன் எண்ணெய் கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய எண்ணெய் தாங்கிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அத்தீவில் உள்ள இறங்குதளங்களுக்கு சென்று எண்ணெய் ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றன.

கார்க் தீவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைக்கு ஒரு பிரதான வருமான ஆதாரமாக விளங்குகிறது. 

ட்ரம்பின் எச்சரிக்கை

ட்ரம்ப் இத்தீவின் எண்ணெய் குழாய்களை தாக்குவது குறித்து பேசினாலும், இதனால் ஈரானின் பொருளாதாரத்துக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படக்கூடும் என்பது குறித்தும் சிந்திக்காமல் இல்லை. 

ஒரே ஒரு உத்தரவு கொடுத்தால் போதும். அந்த எண்ணெய்க் குழாய்கள் அழிந்துவிடும். அப்படி அழித்தால், அதை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்கும் என்றும் குறிப்பிட்டார். 

ஈரானின் பதிலடி

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் கூறுகையில், அமெரிக்க வீரர்கள் ஈரானில் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அமெரிக்க படைவீரர்கள் ஈரான் மண்ணில் கால் வைப்பதையே தமது படையினர் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறுகிறார். 

ஈரான் எல்லைக்குள் நுழைய முயலும் அமெரிக்க வீரர்கள் மீது “நெருப்பு மழை பொழியும்” என்று எச்சரித்துள்ளார். 

அத்தோடு, அமெரிக்கா ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவரும் நிலையில், ஈரான், எதற்காகவும் தாம் அடிபணியப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. தரைவழித் தாக்குதல் நடந்தால் செங்கடலில் கப்பல் போக்குவரத்து இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரானிய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அமெரிக்காவிடமிருந்து கார்க் தீவை பாதுகாக்க, வான்பாதுகாப்பு அமைப்புகளின் செயற்பாடுகளை முடுக்கிவிடுவது, கண்ணிவெடிகளை வைப்பது என ஈரான் மும்முரமாக களத்தில் இறங்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்கா கார்க் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை தாக்கினால் என்ன நடக்கும்? 

கார்க் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை அழிப்பது ஈரானுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்கா கூறிவந்தாலும், அமெரிக்கா காரியத்தில் முழுதாக இறங்குவதைத் தவிர்த்துவருவதற்கான காரணங்களும் பல தரப்பால் ஆராய்ந்து முன்வைக்கப்படுகின்றன.

போர் தீவிரம் - கார்க் தீவில் தாக்கி முற்றாக அழித்தால் வரலாறு கண்டிராத மாபெரும் போர் உலகளவில் வெடிக்கும். 

எண்ணெய் விலை உயர்வு - உலகெங்கும் எண்ணெய் விலைகள் கடுமையாக உயரும்

ஈரான் பதில் தாக்குதல் - மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மற்ற எரிசக்தி நிலையங்களை ஈரான் தாக்க வழிவகுக்கும். 

ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் - போர் ஆரம்பமாகி ஒரு மாத காலத்துக்குப் பிறகும் ஈரான் தனது அண்டை நாடுகள் மற்றும் கப்பல்கள் மீது குறைந்த விலை மற்றும் அதிக வெடிபொருள் கொண்ட ட்ரோன்களை ஏவும் திறனைக் கொண்டுள்ளது. தீவு அழிவுக்குட்படுத்தப்பட்டால் ஈரானின் மொத்த ஆக்ரோஷமும் பழிவாங்கலாக மாறி, பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

குடிநீர் ஆதாரம் - ஈரான் தனது இலக்குகளை விரிவுபடுத்தி, மில்லியன்கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்கும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களை தாக்கக்கூடும்.

இவ்வாறான பின்விளைவுகளை கருத்திற்கொண்டே அமெரிக்கா, கார்க் தீவின் மீது பரந்துபட்ட தாக்குதலை நடத்த இதுவரை பாரியதொரு இராணுவ நடவடிக்கையில் இறங்காதிருப்பதாக சர்வதே அளவில் பேசப்படுகிறது.

https://www.virakesari.lk/article/242339

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நிழலி said:

அமெரிக்கா: தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை பயங்கரவாத முத்திரை குத்தி இறுதிவரைக்கும் தமிழின அழிப்பிற்காக துணை நின்ற, இந்தியாவுக்கு நிகரான நாடு.

ஈரான்: இறுதி யுத்த காலத்தில் கிளஸ்ரர் குண்டுகளை இலங்கைக்கு விற்ற நாடு. ரஷ்யாவும் ஈரானுமே இலங்கைக்கு இவ்வகையான குண்டுகளை கொடுத்தது.

இருவரும் அடிபடும் போது எந்த தரப்பு தோற்றாலும், எந்தத் தரப்புக்கு இழப்புகள் அதிகம் ஏற்பட்டாலும் மகிழ்ச்சி தான்.

ஆனால் உந்த காஸ் (gas / petrol) விலைதான் விசரை ஏற்றுது

சாமியார்... இதே கருத்துத்தான் எனக்கும். ஆனாலும் எனக்கு இந்த "நாதன்யாஹு இஸ்ரரேலின்" கொட்டம் அடக்கப்பட்ட வேணும் என்கிற வெறியும் இருக்கிறது.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஈரான்: இறுதி யுத்த காலத்தில் கிளஸ்ரர் குண்டுகளை இலங்கைக்கு விற்ற நாடு. ரஷ்யாவும் ஈரானுமே இலங்கைக்கு இவ்வகையான குண்டுகளை கொடுத்தது.

இரான் ஆயுதம் கொடுக்கமுடியாதா நிலை. un தடையை கண்காணிக்க அமெரிக்கா நிபுணத்துவதுடன் , சில அமெரிக்கா / மேட்ற்கு தலைமையிலும் un இல் பிரத்தியேக குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்கொத்தி பாம்பாக இரான் கண்காணிக்கப்பட காலம்.

உண்மையில், அமெரிக்காவே, இஸ்ரேல் வழியாக cluster குண்டுகளை கொடுத்தது.

மற்றது , இரான் cluster குண்டுகளில் , மாற்றம் பொதுவாக குண்டு தொழில்நுட்ப்பதில் அக்கறை இல்லை, ஏனெனில் குண்டுகளை போட இரானுக்கு போர்விமான தொழில் நுட்பம் இல்லை.

அனால், இப்போதுலா ஏவுகணை cluster குண்டு அல்ல.

மேற்கு ஊடகங்கள் அவற்றுக்கு அனுதாபம் தேடுவகற்கு பொய்யாக அந்த ஏவுகணையை cluster குண்டு என்று பிரச்சாரம்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

கார்க் தீவில் எண்ணெய் / வாயு (சர்வதேச) விநியோகத்துக்கு வழங்கப்படும் இடம் (terminal), உற்பத்தியாகும் இடம் அல்ல.

(சர்வதேச) விநியோக வழங்கலுக்கு வருண் எண்ணை / வாயுவை இரான் நிறுத்தலாம்.

மற்றும் கார்க் தீவு மிகவும் சிறிது , எனவே இறங்கும் எந்த படைக்கும் கொலைக்களத்தில் இறங்குவது போல.

ஆனால், கார் தீவை சொல்லிக்கொண்டு, வேறு இலக்கே

இங்கே அமெரிக்காவிற்கு மேலும் அழிவு தாக்கம் , இரானுக்கு ஏறத்தாழ real-time துல்லிய உளவு கிடைப்பது.

எல்லா சகதிகளிடமும் (எதோ) ஆயுத பலம் இருக்கிறது,

ஆனால், மேட்ற்கு (இதுவரையில்) பொதுவாக மேலாண்மை நிலை நாட்ட மிக முக்கியமாக உதவியது துல்லிய, real-time உளவு.

மற்றும், துல்லிய உளவை பாவித்து துல்லியமாக ஆயுத பலத்தை குறிப்பிட்ட கோளத்தில் பிரயோகிக்க கூடிய நிலை

இவை இரானிடம் இருக்கிறது.

இரானுக்கு, கணிசமாக கிடைக்கும் துல்லிய உளவு , துல்லியமாக ஆயுத பலத்தை குறிப்பிட்ட கோளத்தில் பிரயோகிக்க கூடிய நிலை, களத்தை மேற்கிற்கு புரட்டி போட்டுள்ளது என்பதை மேற்கு சகிக்க முடியாமல் (இரத்தம்) கக்கும் நிலை.

Edited by Kadancha

1 hour ago, Kadancha said:

இரான் ஆயுதம் கொடுக்கமுடியாதா நிலை. un தடையை கண்காணிக்க அமெரிக்கா நிபுணத்துவதுடன் , சில அமெரிக்கா / மேட்ற்கு தலைமையிலும் un இல் பிரத்தியேக குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்கொத்தி பாம்பாக இரான் கண்காணிக்கப்பட காலம்.

உண்மையில், அமெரிக்காவே, இஸ்ரேல் வழியாக cluster குண்டுகளை கொடுத்தது.

என்னது, ஈரானால் வேறு நாடுகளுக்கு ஆயுதம் கொடுக்க முடியாதா? அப்ப ரஷியாவுக்கு Shahed வகை ட்ரோன்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் ஆயுதங்களை வழங்கும் செயலுக்கு பெயர் என்ன?

அத்துடன் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஏவுகணைகள் உட்பட பெருமளவு ஆயுதங்களை வழங்குவது யார்?

இன்று இஸ்ரேல் மீது ஏவப்படும் ஏவுகணைகளில் கிள்ஸ்ரர் குண்டுகளும் உள்ளன என காணொளி ஆதாரங்கள் நிறைய உள்ளன்வே.

ஈரான் இலங்கை யின் உற்ற நண்பன் என ஏற்றுக் கொள்வது ஈரானை ஆதரிக்கும் உங்களுக்கு அறச் சீற்றத்தை தரும் என்பதால் ஏற்க மறுக்கின்றீர்கள் என நினைக்கிறேன்.

2 hours ago, Sasi_varnam said:

சாமியார்... இதே கருத்துத்தான் எனக்கும். ஆனாலும் எனக்கு இந்த "நாதன்யாஹு இஸ்ரரேலின்" கொட்டம் அடக்கப்பட்ட வேணும் என்கிற வெறியும் இருக்கிறது.

ஓம் பாஸ், நெதன்யாஹுவின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

என்னது, ஈரானால் வேறு நாடுகளுக்கு ஆயுதம் கொடுக்க முடியாதா? அப்ப ரஷியாவுக்கு Shahed வகை ட்ரோன்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் ஆயுதங்களை வழங்கும் செயலுக்கு பெயர் என்ன?

அத்துடன் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஏவுகணைகள் உட்பட பெருமளவு ஆயுதங்களை வழங்குவது யார்?

அந்த நேரத்தில் - நாடுகளுக்கு இடையேயான ஆயுத விநியோகத்தில் - இரான் un தடைகளுக்கு இருந்த்தது.

சிறிலங்கா விடயத்தில் இரான் இரகசியமாக செய்ய முடியாது.

(ஹிஸ்புல்லாஹ், ஹூத்தி போன்றவைக்கு கொடுப்பது அனாமதேயம். ஏனெனில் அவை அரசு சாரா அமைப்புகள்)

ருசியாவுக்கு கொடுக்கும் போது இரானுக்கு UN தடைகள் இல்லை.

மேற்கு முறித்த jcpoa மூலம் தடைகள் விலக்கப்பட்டு இருந்தது

ஆனால். மேற்றுகின் தடை இருந்தது, மேற்கின் தடை UN கடை அல்ல.

இந்த வேறுபாட்டை , அதன் விளைவை இணையத்தில் ஹெடி அறிந்த்து கொள்ளலாம்.

இந்த வேறுபாட்டை , அதன் விளைவை இணையத்தில் ஹெடி அறிந்த்து கொள்ளலாம்.

13 minutes ago, நிழலி said:

இன்று இஸ்ரேல் மீது ஏவப்படும் ஏவுகணைகளில் கிள்ஸ்ரர் குண்டுகளும் உள்ளன என காணொளி ஆதாரங்கள் நிறைய உள்ளன்வே.

கொத்தாக தோற்றம் அப்பதால் அவை cluster குண்டு அல்ல.

(cluster ) குண்டு போடப்பட்ட பின் திசை, குறிவவைக்கப்பட்ட இலக்கை மாற்ற முடியாது.

இந்த ஏவுகணை 1 பெரியஅளவு, மற்றும் பிரியும் ஏவுகணைகள் சிறியவை, இறுதியான terminal phase இல் கூட திசை, இலக்கை மாற்றலாம் (maneuverable).

சிலவற்றில் ஒவ்வொரு சிறிய கணையையும் manoeuvre பண்ண முடியும்.

21 minutes ago, நிழலி said:

ஈரான் இலங்கை யின் உற்ற நண்பன் என ஏற்றுக் கொள்வது ஈரானை ஆதரிக்கும் உங்களுக்கு அறச் சீற்றத்தை தரும் என்பதால் ஏற்க மறுக்கின்றீர்கள் என நினைக்கிறேன்.

எது ஆயினும், நான் சொல்லியவை hardfacts. எனவே சொன்ன கருத்தை மாற்றாது.

அனால், இரான், சிறிலங்கா உறவு அந்த நேர வசதிக்காக. தேயிலை - எண்ணெய் வியாபாரத்தை வசதிப்படுதியது அமெரிக்கா பின் இருந்து.

வசதி. தேவை அற்றுப்போக உறவும் இல்லை

இஸ்ரேல் - சிறிலங்கா உறவே தத்துவத்தின் அடிப்படையில் - மகாவம்ச, விவிலிய கால வேறுபாட்டை தவிர்த்து ஒரே தன்மை அடிப்படையில் - நிரந்தரமானது.

மற்றது அவற்றின் பாதுகாப்பு வகிபாகம் - சிங்களதத்துக்கு எப்போதும் தமிழரால் அச்சுறுத்தல், இஸ்ரேல் அரபு (முஸ்லிம்களால்) அச்சுறுத்தல்

(அதன் நிகழ் கால மாற்றம் - கிந்தியா சிங்களத்துக்கு ஆதரவு, தமிழர் எதிர். அரபிகள் இஸ்ரேலுக்கு உள்ளால் மிகவம் நெருக்கம் (காரணம் இருக்கிறது), இரான் (பெர்சியன்) இஸ்ரேல் க்கு எதிர்.)

அனால், ஈடுபாடு அவ்வப்போது கூடும், குறையும்.

17 minutes ago, Kadancha said:

அந்த நேரத்தில் - நாடுகளுக்கு இடையேயான ஆயுத விநியோகத்தில் - இரான் un தடைகளுக்கு இருந்த்தது.

சிறிலங்கா விடயத்தில் இரான் இரகசியமாக செய்ய முடியாது.

(ஹிஸ்புல்லாஹ், ஹூத்தி போன்றவைக்கு கொடுப்பது அனாமதேயம். ஏனெனில் அவை அரசு சாரா அமைப்புகள்)

ருசியாவுக்கு கொடுக்கும் போது இரானுக்கு UN தடைகள் இல்லை.

மேற்கு முறித்த jcpoa மூலம் தடைகள் விலக்கப்பட்டு இருந்தது

ஆனால். மேற்றுகின் தடை இருந்தது, மேற்கின் தடை UN கடை அல்ல.

இந்த வேறுபாட்டை , அதன் விளைவை இணையத்தில் ஹெடி அறிந்த்து கொள்ளலாம்.

இந்த வேறுபாட்டை , அதன் விளைவை இணையத்தில் ஹெடி அறிந்த்து கொள்ளலாம்.

கொத்தாக தோற்றம் அப்பதால் அவை cluster குண்டு அல்ல.

(cluster ) குண்டு போடப்பட்ட பின் திசை, குறிவவைக்கப்பட்ட இலக்கை மாற்ற முடியாது.

இந்த ஏவுகணை 1 பெரியஅளவு, மற்றும் பிரியும் ஏவுகணைகள் சிறியவை, இறுதியான terminal phase இல் கூட திசை, இலக்கை மாற்றலாம் (maneuverable).

சிலவற்றில் ஒவ்வொரு சிறிய கணையையும் manoeuvre பண்ண முடியும்.

எது ஆயினும், நான் சொல்லியவை hardfacts. எனவே சொன்ன கருத்தை மாற்றாது.

அனால், இரான், சிறிலங்கா உறவு அந்த நேர வசதிக்காக. தேயிலை - எண்ணெய் வியாபாரத்தை வசதிப்படுதியது அமெரிக்கா பின் இருந்து.

வசதி. தேவை அற்றுப்போக உறவும் இல்லை

இஸ்ரேல் - சிறிலங்கா உறவே தத்துவத்தின் அடிப்படையில் - மகாவம்ச, விவிலிய கால வேறுபாட்டை தவிர்த்து ஒரே தன்மை அடிப்படையில் - நிரந்தரமானது.

மற்றது அவற்றின் பாதுகாப்பு வகிபாகம் - சிங்களதத்துக்கு எப்போதும் தமிழரால் அச்சுறுத்தல், இஸ்ரேல் அரபு (முஸ்லிம்களால்) அச்சுறுத்தல்

(அதன் நிகழ் கால மாற்றம் - கிந்தியா சிங்களத்துக்கு ஆதரவு, தமிழர் எதிர். அரபிகள் இஸ்ரேலுக்கு உள்ளால் மிகவம் நெருக்கம் (காரணம் இருக்கிறது), இரான் (பெர்சியன்) இஸ்ரேல் க்கு எதிர்.)

அனால், ஈடுபாடு அவ்வப்போது கூடும், குறையும்.

Did Iran supplied arms to Sri Lanka?

இந்த கேள்வியை Gemini யிடம் கேட்டுப் பார்த்து உங்களை update செய்து கொள்ளவும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

இந்த கேள்வியை Gemini யிடம் கேட்டுப் பார்த்து உங்களை update செய்து கொள்ளவும்.

தேயிலை - எண்ணெய் விற்பனை அடிப்படையில், இரான் கடன் கொடுகாதாக ஆயுதம் வாங்க.

இது சாத்தியம்.

(ஆனல், ஈரான் cluster குண்டு கொடுத்தது இதுவே எல்லாவறையும் குழப்புவது)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.