Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த்ரிஷா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol: :P
  • Replies 534
  • Views 45.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

த்ரிஷா காட்டில் பேய் மழை!

trisha_420.jpg

தமிழில் இப்போது முன்னணி ஹீரோயின் யார் என்றால் அது நிச்சயம் த்ரிஷா தான். அதே நேரத்தில் அவரது கைவசம் ஒரு படம் கூட இல்லை.

என்ன ரொம்ப குழப்பமா இருக்கா?. மேலே படிங்க... த்ரிஷா நடித்த படங்கள் எல்லாம பிச்சுக்கிட்டு ஓடுவதால், ராசி முத்திரையை 'பச்சக்' என்று குத்திவிட்டது கோடம்பாக்கம். இதனாõல் அவருக்கு அட்வான்ஸ் தரவும் கால்ஷீட் வாங்கவும் தினமும் ஒரு தயாரிப்பாளராவது போன் போட்டு விடுகிறார்.

ஆனால், இப்போது அம்மணி தெலுங்குப் பக்கமே தனது பார்வையை முழு அளவில் திருப்பியிருக்கிறார். இதனால் முழுக்க ஹைதராபாத் பக்கமே சூட்டிங்கில் இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வந்தே பல வாரங்களாகிவிட்டன.

திருப்பாச்சி மற்றும் ஜி படங்களுக்குப் பிறகு இப்போது தமிழில் எதிலும் அவர் நடிக்கவில்லை.

தெலுங்கிலும் மார்க்கெட் சும்மா புல் பார்மில் இருப்பதாலும், சம்பளமும் குண்டக்க மண்டக்க தரப்படுவதாலும் அங்கேயே கவனம் செலுத்தி வருகிறார். தமிழோடு தெலுங்கிலும் இவர் தான் நம்பர் ஒன் ஹீரோயின். தமிழை விட தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள். இதனால் இவர் கேட்பதைவிடவும் கூடவே சம்பளம் கொடுக்கிறார்கள் ஆந்திராவாலாக்கள்.

அங்கு லேட்டஸ்டாக ஒரு படத்துக்கு த்ரிஷா வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ரூ. 80 லட்சமாம். அம்மாடியோவ்... விரைவில் அவர் ரூ. 1 கோடியை எட்டினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

தமிழில் இதில் பாதி தான் கிடைக்கிறது. இப்போ புரியுதா தமிழில் மார்க்கெட் இருந்தும் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தும் த்ரிஷா ஏன் ஊரப் பக்கமே திரும்ப மறுக்கிறார் என்று.

சம்பாதிக்கும் காசை அப்படியே அசெட்களை வாங்கிப் போட்டு நடிகைகளுக்கே ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார் த்ரிஷா. ஹைதராபாத்தில் ஒரு மாபெரும் பங்களாவை வாங்கிப் போட்ட கையோடு, போயஸ் கார்டனில் ஒரு வீட்டை வாங்கினார். இப்போது சென்னை சென்டாப் சாலையில் ஒரு பெரும் பங்களாவை வளைத்துப் போட்டுள்ளார்.

இவை எல்லாம் சில பல கோடிகளை மதிப்பாகக் கொண்டவை.

தெலுங்கில் நடித்தாலும் தமிழை விடவே மாட்டேன் என்கிறார் த்ரிஷா. தமிழில் தான் நல்ல கதைகள், நல்ல டெக்னீசியன்கள் எல்லாம் இருக்கிறார்கள். என் தாய் வீடு அது தான். தெலுங்கில் சில படங்களை முடித்துவிட்டு தமிழுக்கு வருவேன். தெலுங்கில் பெரிய அளவில் பணம் கிடைப்பது உண்மை தான், ஆனால், எல்லாமே கிளாமர் ரோல்ஸ் என்று மனம் கசக்கிறார்.

சமீபத்தில் காதல் படம் பார்த்துவிட்டு அசந்து போனாராம் த்ரிஷா. உடனே சந்தியாவுக்கு போனைப் போட்டு, ரொம்ப நல்லா நடிச்சுருக்கே என்று பாராட்டவும் செய்திருகிறார்.

பி.எல்.தேனப்பன் தயாரிக்க தான் நடிக்கவுள்ள மலை படத்தில் ஹீரோயினாக த்ரிஷாவையே புக் செய்யச் சொல்லிவிட்டாராம் சிம்பு.

இந்த இருவரும் நடித்த அலை படம் ஊத்திக் கொண்டாலும் மலை படத்தை வெற்றியாக்கிக் காட்டுகிறேன் என்கிறாராம் சிம்பு.

அலை படத்தின்போது சிம்புவால் 'டார்ச்சருக்கு' உள்ளானாதாகக் கூறப்பட்ட த்ரிஷா, கால்ஷீட் தருவாரா என்று பலரும் சந்தேகப்பட, மன்மதனுக்குப் பின் சிம்புவுக்கு தனி மரியாதை வந்துவிட்டதால், கால்ஷீட் கொடுப்பதாக சொல்லிவிட்டாராம் த்ரிஷா.

Thats Tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உஜாலாவுக்கு மாறேல்லை. ஆனால்.. Orange Fanta க்கு மாறிட்டன். நீங்கள் ஒருத்தரும் மாறத்தேவையில்லை எண்டும் வேறை நினைக்கிறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

த்ரிஷா காட்டில் பேய் மழை!

ச்சோ. தடிமன் வந்திடாதோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol: :P சொன்னால் திரிஷா லெம் சிப்.. அனுப்பிவிடுவாவே.. சுவீஸில் இருந்து.. என்ன வருமோ தெரியாது.. :wink: :P
  • தொடங்கியவர்

லெம் என்றால் என்ன என்று சயந்தனுக்கு தெரியுமோ? அப்பிடி அனுப்பினாலும் நீங்கள் போட்டு கொடுக்காவிட்டால் சரி, :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சே சே நமக்கு அப்படி எல்லாம் நல்ல குணம் இல்லை போட்டுக்கொடுக்கிறதுக்கு ( சும்மா ஆளைத்தெரிஞ்சால் தானே) :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வசி. இனி Orange Fanta தான் குடிக்கணும் அதை குடிச்சா slim & cute கிடைக்கும். :P

குடியுங்கோ குடியுங்கோ கோலாக்கை ஏதாவது மிக்ஸ்பண்னாட்டி சரி :lol:

குடியுங்கோ குடியுங்கோ கோலாக்கை ஏதாவது மிக்ஸ்பண்னாட்டி சரி :lol:

ஆமா நல்ல மிக்சிங் தான் நடக்குது பொல...... :lol::lol:

ஆஆ நான் இன்னும் கரப்பான் பூச்சியை மறக்கேல்லை.. :shock: :shock:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆ நான் இன்னும் கரப்பான் பூச்சியை மறக்கேல்லை..

நல்லம் அப்ப அதுக்கு பிறகு பன்டாவில தொடவே இல்லையா..?? :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா நல்ல மிக்சிங் தான் நடக்குது பொல...... :lol::lol:

நாங்கள் ஓடியோ மிக்சிங் மட்டும்ட் தான்.. :lol:

[

நாங்கள் ஓடியோ மிக்சிங் மட்டும்ட் தான்.. :lol:

நானும் அதபற்றி தான் சொன்னனான்....ஆமா நீங்க என்னத்த நினைச்சீங்க........ :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் அதபற்றி தான் சொன்னனான்....ஆமா நீங்க என்னத்த நினைச்சீங்க........

_________________

ஆகா ஆகா ஓகோ ஓகோ.. தம்பியவை இரண்டுபேரும் நல்லாய் மாத்திறியள் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

த்ரிஷா.. உன்னைப் பாக்காட்டில் சா.. நினைக்காட்டி சா.. இந்த ரண்டும் இல்லையெண்டால் இன்னொரு சா.. ---

இப்படி ஈழநாதத்திலை ஏ9 ஏரம்பு எழுதியிருந்தவர். அவர் எதக்கு எழுதினாரோ தெரியா.. ஆனால் எனக்கு பிடிச்சுக் கொண்டு விட்டது

ஆஆ நான் இன்னும் கரப்பான் பூச்சியை மறக்கேல்லை.. :shock: :shock:

என்ன பன்ராவிலயொ....அல்லது ...தி....

பன்ராவில எண்டா சத்துக்கு சேர்திருப்பினம்.......

  • தொடங்கியவர்

த்ரிஷாவுக்கு கல்யாணமா?

trish-400.jpg

பாத்ரூம் குளியல் வீடியோ விவகாரம் இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. அதற்குள் இன்னொரு வதந்தி கோடம்பாக்கத்தை சுனாமியாய் சுற்றிச் சுற்றி வருகிறது. எல்லாம் த்ரிஷாவைச் சுற்றித்தான்.

முன்னாள் மிஸ். சென்னையான த்ரிஷா நடிக்க வந்த நாள் முதல் வதந்திகளாலேயே அவர் அதிக பிரபலமானார். முதலில் தெலுங்கு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் தெலுங்கு அரசியல் விஐபிக்கள் சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து த்ரிஷாவை சந்திப்பதாக பேச்சு.

பிடித்தமான நடிகர்கள், இயக்குனர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து வைத்துக் கவனிப்பதாக த்ரிஷாவின் பெயர் அடிபட்டது.

சென்னை ஹோட்டலில் அம்மாவோடு சேர்ந்து உற்சாக பானம் அடிக்கிறார், இவரது அப்பா இன்னும் ஹோட்டலில் வேலை பார்க்கிறார் என்று ஏகப்பட்ட ஐயிட்டங்கள் கிளம்பிக் கொண்டே இருந்தன.

அத்தோடு கால்ஷீட் பிரச்சினை, கூடுதல் காசு கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டுகிறார் என்று தொழில்ரீதியிலும் இவரைச் சுற்றி பரபரப்புகள்.

வதந்திகளின் உச்சமாக பாத்ரூம் குளியல் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'அது' நான் இல்லை த்ரிஷா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இப்போது த்ரிஷா குறித்து இன்னொரு வதந்தி வேகமாக பரவி வருகிறது. அதாவது அவருக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டதாம்.

சிங்கப்பூரைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவர் த்ரிஷாவை கட்டிக் கொள்ள முன் வந்துள்ளதாகவும், இதற்காக அவரது அம்மாவை சந்தித்துப் பேசியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அவரது பண பலம் பார்த்து மயங்கிப் போன அம்மாவும், சரியென்று கூறி விட்டாராம். இன்னும் 2 வருடம் த்ரிஷா நடிக்கட்டும். அதன் பிறகு கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறி பாக்கு வெத்திலை மாத்திவிட்டதாக சொல்கிறார்கள்.

வந்து செல்பவர்கள் எல்லாம் த்ரிஷாவின் அம்மாவிடம் இதையே கேட்டுவைக்க,

இந்த செய்தியில் சற்றும் உண்மையில்லை என்று அவர் தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்.

த்ரிஷாவின் வளர்ச்சி பொறுக்காத சிலர்தான், குறிப்பாக சில நடிகைகள்தான் இந்த மாதிரி வதந்தியை பரப்பி விடுகிறார்கள். அவர்கள் யார் என்று மட்டும் தெரியட்டும், அப்புறம் வைக்கிறேன் வேட்டு என்று அவர் கருவிக் கொண்டிருக்கிறார்.

சரி, சிம்ரன் இடத்தை த்ரிஷா ஒரு வழியாகப் பிடித்து விட்டார் தெரியுமா?

நடிப்பிலோ, கவர்ச்சியிலோ இல்லை, விளம்பரப் படத்தில் நடிப்பதில்!. பேன்டா நிறுவனத்தின் விளம்பரத்தில் இதுவரை சிம்ரன் மட்டுமே நடித்து வந்தார். அவரது காண்டிராக்ட் முடிந்து போய் விட்டதால், அவருக்குப் பதில் ஒரு வருடத்திற்கு த்ரிஷாவைப் புக் செய்திருக்கிறார்கள்.

இதற்காக பெரும்ம்...ம் தொகை கைமாறியிருக்கிறது.

ஒப்பந்தப்படி, த்ரிஷா ஒரு வருடத்திற்கு கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாதாம். அது சரி...

thats tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த ஒரு வருட ஒப்பந்தத்தை இன்னும் ஐஞ்சாறு வருடங்களுக்கு நீடிக்க சொல்லுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சயந்தன் அதுக்குள்ள உங்களுக்கு சான்ஸ் கிடைக்கும் என்று நப்பாசையோ..?? :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

த்ரிஷா.. உன்னைப் பாக்காட்டில் சா.. நினைக்காட்டி சா.. இந்த ரண்டும் இல்லையெண்டால் இன்னொரு சா.. ---

இப்படி ஈழநாதத்திலை ஏ9 ஏரம்பு எழுதியிருந்தவர். அவர் எதக்கு எழுதினாரோ தெரியா.. ஆனால் எனக்கு பிடிச்சுக் கொண்டு விட்டது

எதை ? ஈழநாதத்திலை ஏ9 ஏரம்பு எழுதியிருந்ததையா..? அல்லது திரிசாவையா ..? :lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

த்ரிஷாவை 'படம் புடிக்கும்' அம்மா

trisha-friends-400.jpg

என்னுடைய எந்த சொந்தக் காரியமாக இருந்தாலும் அம்மாவை (அவருடைய அம்மாவைத் தான்) கேட்காமல் நான் முடிவெடுப்பதில்லை என்கிறார் த்ரிஷா.

பெரும்பாலும் நடிகைகள் அனைவருமே அம்மா சொல்லைத் தட்டாத பிள்ளைகளாகத் தான் இருப்பார்கள். இதில் நம்ம த்ரிஷா ஒரு படி மேல். அம்மா கிழித்த கோட்டைத் தாண்டவே மாட்டாராம்.

எனக்கு அம்மா தான் எல்லாம். நான் சம்பந்தப்பட்ட எந்தக் காரியமாக இருந்தாலும் நான் அம்மாவைக் கேட்காமல் முடிவெடுக்க மாட்டேன்.

சில விஷயங்களில் மட்டும் நீயே முடிவெடு என்பார். அப்போது மட்டும் நான் களத்தில் இறங்குவேன் என்று கூறும் த்ரிஷா தெலுங்கிலிருந்து நேராக மும்பையில் மையம் கொள்ளப் போகிறாராம்.

பாலிவுட்டில் ஹேமமாலினி, வைஜெயந்தி மாலா, ஸ்ரீதேவிக்குப் பிறகு தமிழ் நடிகைகள் யாருமே அந்த அளவிற்குப் புகழ் பெறவில்லை. அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைக்கலாம் என்கிறார்கள்.

இதனால் தானோ என்னவோ இப்போதெல்லாம் த்ரிஷா கலந்து கொள்ளும் படப்பிடிப்புகளில் இரண்டு பேரை கேமராவும், கையுமாக பார்க்கலாம். ஒருவர் படத்தோட கேமராமேனாக இருப்பார். இன்னொருவர் கேமரா வுமன். அதாவது த்ரிஷாவின் அம்மா.

கையில் ஹேண்டிகாமுடன் ஷýட்டிங் தளத்தில் வளைய வரும் த்ரிஷாவின் அம்மா, மகளை போகஸ் செய்து அவரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுடன் த்ரிஷாவை படம் பிடித்து வருகிறார். எதற்காம்?

வேறு ஒன்றுமில்லை, த்ரிஷாவை வைத்து ஒரு பிலிம் ஆல்பம் தயாரிக்கப் போகிறாராம் அம்மா. அதனால்தான் படப்பிடிப்புத் தளங்களில் அவரை படமெடுத்துத் தள்ளி வருகிறாராம்.

இந்த ஆல்பத்தை ஏதாவது தமிழ் மற்றும் தெலுங்கு டிவிக்களின் தலையில் பெரிய தொகைக்குக் கட்டிவிடும் திட்டமாம். த்ரிஷாவின் அம்மா என்பதால் சூட்டிங் ஸ்பாட்டில் சகல இடத்திலும் புகுந்து வெளியே வர முடிகிறது. இதனால் மிக எக்ஸ்க்ளூசிவ் காட்சிகளுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த த்ரிஷா அம்மா ஆல்பம்.

த்ரிஷா சிரிப்பது, நடிப்பது, நடப்பது, படிப்பது, தூங்குவது என ஒன்று விடாமல் சுட்டுத் தள்ளும் அவரது அம்மா, த்ரிஷாவை சந்திக்க வரும் நபர்களையும் சுட்டுவிடுகிறாராம்.

சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றுக்கு த்ரிஷா ரூ. 90 லட்சம் வாங்கியிருக்கிறார். இது கடந்த மாதம் இருந்த அவரது ரேட்டான ரூ. 80 லட்சத்தை விட 10 லகரம் அதிகம். விரைவில் பெரிய நோட்டு ஒன்னை கிராஸ் செய்துவிடுவார் த்ரிஷா என்கிறார்கள்.

தெலுங்கில் இப்படி அள்ளி அள்ளித் தருவதால் இப்போது கோலிவுட் நடிகைகள் அனைவருமே ஆந்திரா பக்கமாக பார்வையை குத்த வைத்துக் கொண்டுள்ளனர். இந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு கோபிகா. தமிழில் இதுவரை ரூ. 12 லட்சம் மட்டுமே வாங்கி வந்த கோபிகம் இப்போது அதை ரூ. 18 லட்சமாக உயர்த்திவிட்டார்.

அத்தோடு, எவ்ளோ கவர்ச்சி வேணுமோ எடுத்துக்கோ என்று பிளாட்டாக அனுமதியும் தந்துவிடுகிறார்.

எற்கனவே தெலுங்கில் நடித்திருந்தாலும், அதெல்லாம் அடக்க ஒடுக்கமான ரோல்கள். இப்போது கிளாமர் பூனையாக மாறிவிட்ட கோபிகா, தெலுங்கில் ரூ. 25 லட்சம் என்று ரேட்டை தானாகவே பிக்ஸ் பண்ணிக் கொண்டு ஆள் வைத்து ரோல் பிடிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

இங்கேயும் தமிழ் பாணி தான், ''எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ..''தான்

Thats Tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:wink:

  • தொடங்கியவர்

"திரிசங்கு' நிலையில் த்ரிஷா!

trish400.jpg

த்ரிஷாவின் கால்ஷீட் காட்டில் அடை மழை பெய்து வருவது தெரிந்த செய்தி. புதிய செய்தி, அவரை ஹீரோயினாக போட ஹீரோக்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறதாம்.

தெலுங்கில் "கோடி' தருவதால் தமிழை விட தெலுங்குக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் த்ரிஷா. பிறந்த வீட்டை மறக்கக் கூடாது என்பதற்காக தமிழிலும் அவ்வப்போது தலை காட்டி வருகிறார்.

தெலுங்கில் படு பிசியாக இருக்கும் த்ரிஷாவுக்கு இப்போது தமிழில் ஹீரோக்கள் மத்தியில் பயங்கர கிரேஸ் ஏற்பட்டுள்ளது. த்ரிஷாவுடன் ஜோடி போட ஹீரோக்கள் கடுமையாக ¬முயற்சித்து வருகிறார்கள்.

அப்படித்தான் இப்போது இரண்டு புதிய வாய்ப்புகள் வந்து த்ரிஷாவை திருகி வருகின்றன. மு¬தல் வாய்ப்பு ஏ.எம்.ரத்னத்திடமிருந்து வந்துள்ளது. இரண்டாவது வாய்ப்பு கவிதாலயாவிடமிருந்து வந்துள்ளது.

விஜய்யை வைத்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் த்ரிஷாவை ஜோடியாகப் போட விஜய்யே சிபாரிசு செய்துள்ளாராம். (மார்க்கெட்டை தக்க வைக்க வேறு வழி இல்லையோ என்னவோ)

இதனால் த்ரிஷாவை அணுகியுள்ளார் ரத்னம். அதேபோல, கவிதாலயா தயாரிப்பில் தான் நடிக்கப் போகும் புதிய படத்தில் த்ரிஷாவைப் போடுமாறு கோரியுள்ளாராம் ஜெயம் ரவி.

இரண்டு படத்தயாரிப்பாளர்களும் பெரிய ஆட்கள் என்பதால் யாருக்கு ஓகே சொல்வது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் த்ரிஷா. ரத்னம் படம் என்பதால் நிச்சயம் அது தெலுங்கிலும் டப் ஆகும் என்பதால் தனக்கு அது வசதியாக இருக்கும் என்று த்ரிஷா நினைப்பதாக கடைசியாக கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

அதேசமயம், கவிதாலயாவின் "சாமி' படம்தான் தனக்கு பெரிய பிரேக் கொடுத்தது என்பதால் அதையும் தட்ட த்ரிஷா விரும்பவில்லை. எனவே யாருக்கு கால்ஷீட் கொடுப்பது என்பதை இப்போதைக்கு ¬முடிவு செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளாராம் த்ரிஷா.

திரிசங்கு சொர்க்கத்தில் தவிப்பது என்பது இதுதானோ?

thats tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
60019655_small.jpg
  • தொடங்கியவர்

அட மஞ்சள் உடை நல்லா இருக்கே. எங்கே சுட்டீர்கள்? வோல் பேப்பர் இருக்கா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.