Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீரும் குருதியுமாய் ஈழம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரும் குருதியுமாய் ஈழம் !

செந்நீரின் மையெடுத்து நம்

கண்ணீரின் கதையெழுதி

புண்ணாகிப் போன நெஞ்சின்

வலிகொண்டு கவிதை வரைந்தேன்

அந்நாளில் நானும் குழந்தையாய்

அம்மண்ணில் தவழ்ந்திருந்த

ஆனந்தமான பொழுதுகள்

அவை போன இடமெங்கே ?

என் சொந்தங்கள் தூக்கமின்றி

ஏக்கத்தில் வாழ்ந்திருக்கும்

எண்ணத்தின் சுமை கொண்டு

என் விழிகள் நிறையுதம்மா

எரிகின்றது என் ஈழத் தேசமம்மா

எண்ணை வார்க்க ஆயிரம் பேர்

எவருமில்லை தீயணைக்க, அழுவதின்றி

என் செய்வோம் ஆற்றாமையால் நாம் தவிப்போம்.

தவிக்கின்றார் தம்பி தங்கையர்

தமிழர் என்னும் ஒர் காரணத்தால்

தமைத் தாமே இழக்கின்றார்

தமிழன்னை பாராளோ ? பதிலொன்று கூறாளோ ?

சேறும் சகதியுமாய் நன்னிலங்கள்

சீரழிந்து போவதுண்டு.... என்னினமும்

கண்ணீரும் குருதியுமாய் வதைபட்டு

கரைந்து போனதாகச் சரித்திரம் மாறலாமோ ?

உயிர்களின் விலைகள் அங்கே

உருவற்றுப் போனதால் தானன்றோ

உயிர்வாழ வழியின்றித் தவிக்கின்றார்,

உறவுகள் ஈழத்தில், அவர்க்கொரு விடிவுகாலம் பிறக்காதோ

சக்தி சக்திதாசன்

கண்ணீர் வாழ்க்கை

களைந்திடவேண்டி

குருதியையும், உயிரையும்

கொடையளித்த வீரர்களே

இப்போதும் வடிகின்றன

எங்களின் கண்ணீர்.

இது

உங்களுக்காய்!

-- இப்னு ஹம்துன் (Ibnu Hamdun)

மரணமே

உன்னை நான்

வெறுக்கிறேன்

துரோகியென்கிறேன்

எம் மண்மீதும்

தமிழ் இனம்மீதும்

கொலைவெறிகொண்டு

அலைவதற்காய்

நீதிகளைக்கொன்றும்

நியாயங்களை விழுங்கியும்

இன்னும் எத்தனை

உயிர்களைத்தான் - தின்று

ஏப்பம் விடப்போகின்றாய்?

அப்பாவிகளைத்

தினமும்

கொன்று குவிக்கின்றாய்

வேதனையோடு

விதியென்கிறோம்

இன்னமும் ஏன்

விலைமதிப்பற்ற

எம் வேங்கைகளை

முழுங்க நினைக்கின்றாய்?

உன்கோரப்பசிக்கு

இரையாக நாம் எல்லாம்

உன் உணவுமேசையில்

குந்தியிருப்போம்

கவலைப்படாதே -ஆனால்

எம் மண்ணின்

விடுதலைவீரர்களின்

உயிர்களோடு மட்டும்

சீண்டிப்பார்க்காதே!

--எதிக்கா 02.11.2007

எனக்கென்றவொரு பாதையில் சென்றுகொண்டிருந்தேன்

அதே வழியில் என் தம்பியும்

அவனைத்தொடர்ந்து அவனது நண்பர்களும்

பாதையில் ஏதோ தடக்கி விழுந்துவிட்டேன்

உதவிக்காக கரமேதும் வரவில்லை

என்ன மனிதர்களென்று வெறுத்துக்கொண்டு

தலை து£க்கிய என் தலைக்குப்பின்னால்

அத்தனை தலைகளும் இரத்த வெள்ளத்தில்

என் தம்பி உட்பட.

-- நிர்வாணி

கண்ணீரும் குருதியுமாய் ஈழம்…….

சொந்த பூமியில் மக்கள் நிம்மதியாய்

குந்த வழியில்லை, குடியிருக்க வழியில்லை.

காபந்து அரசே மக்கள் உயிரை

கபளீகரம் செய்யும் நிலை.

மாபாதகம் தாய் மண்ணில்

மாபாவிகள் தமிழ் மக்களாய்

தாபரிக்கும் அரசே தமிழர்களை

தாக்கி அழிக்கும் நிலை கொடுமை.

தீக்குணம் கொண்டவர்கள் செய்யும்

தீமைகள் தாய் மண்ணில் தினம்

தீக்குண்டமாய் வளர்ந்து மக்களை

தீராத வேதனையில் அழுத்துகிறது.

தீந்தமிழுக்காய் படும் தீப்புண்கள்

தீர்க்கமான தொடர் நோயாகிறது.

தீவின் அமைதி யாருக்கோ

காவு கொடுப்பதாக இரத்தம் தோய்கிறது.

செருக்கள தாய்மண் பூமியில்

செம்புனலும் கண்ணீரும் கலந்து

செம்மண்ணாகிப் பூமி சேறாகிறது.

செய்வதறியாது திகைக்கும் நிலை.

தீமைகள் எரிய வேண்டும்! ஆம்!

தீமைகள் எரியட்டும், ஆனால்

தீபத்தையே உடைக்கும் எத்தனமானால்

தீபம் எப்படி எரியும்?

தீமை மட்டும்தான் செய்வோமெனும் அரச

தீர்மானம் தீர்வாகியே போகாது

தீர்ப்பான் ஒருவன் வந்து அமைதித்

தீர்த்தம் தெளிக்கட்டும் நாடு முழுதும்!

தீபாவளித் தீபத்தில் தீமைகள் எரியட்டும்.

தீராத எம் துன்பம் தீர்ந்து போகட்டும்!

தீக்கடவுளும் தமழனுக்குக் கருணை

தீபம் காட்டி சுபிட்சம் தரட்டும்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

6-11-2007.

எப்படி துனிகின்றது

மனம்..

நேற்று பெய்த மழைக்கு

கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு

பெய்த மழையின் ஈரம்

காயும் முன்..

மரத்தை வெட்டிச் சரிக்க..?

மரத்துப் போன இதயங்கள்

மட்டையால் அடித்து என்ன பயன்

மழைக்கு கடவுள் மரம்தான் என்று

எந்த கடவுள் வந்து சொன்னாள்

கேட்பார்கள் இவர்கள்..?

-- ஆ.முத்துராமலிங்கம்

பாலாறு தேனாறு ஓடிநின்ற பூமி!

படுபாவிகளி களினாலே

அழியுதடா சாமி!

யாழ்தன்னைப் பந்தாடத் துடிக்குதடா ‘ஆமி’!

யாரென்று உனைக்காட்ட

‘துவக்கெடுத்து’ காமி!

நாள்தோறும் நல்லவரை

‘கொட்டி’யென் றடைப்பார்

நடுறோட்டில் அவர்பின்னே

பிணமாக கிடைப்பார்!

காலாற நடந்தாலே

காணமல் போவோம்!

கண்ணிவெடி ‘கிளைமோரில்’

கால்பறந்து சாவோம்!

கோளாறு கொண்டோரை

கொன்றன்று வென்றோம்!

கோடாலிக் காம்புகளால்

பின்வாங்கிச் சென்றோம்!

ஏழாறு நாள்போதும்

மீண்டுமதை வெல்வோம்!

எமன்வந்து தடுத்தாலும்

அவனையுமே கொல்வோம்!

பாவிகளின் இடுப்பொடிக்க

ஒருபோதும் அஞ்சோம்!

புல்லிளித்து ஈழம்தா என்றும்நாம் கெஞ்சோம்!

ஆவிபறி போனாலும்

மீண்டும்நாம் பிறப்போம்

அடிவருடி களையொழிக்க

உயிருறவை துறப்போம்!

எம்மவனே எமையழிக்க

யூதாஸாய் போனான்!

எச்சிலைக்காய் வாலாட்டும்

நாய்போன்றே ஆனான்!

அம்மாவின் சேலையினை

‘துச்சாதன்’ உரித்தான்!

ஆஹாகா! மேலுமுரி எனப்பிள்ளை சிரித்தான்!

ஐவிரலும் ஒன்றல்ல!

அவன்பிள்ளை யல்ல!

ஐயையோ என்றலர்வான்

எதிரிகளே கொல்ல!

பொய்யுலர பூமலரும்

போரொருநாள் ஓயும்!

பொறுதமிழா! உன்வாழ்வில்

இன்பத்தேன் பாயும்!

--கவிஞர் ஈழநிலா

இலங்கை

00+94 0724679690

kavingerasmin@yahoo.com

என்ன செய்வாய் தமிழா

ஓவென்று ஒப்பாரிவை

இழிவுபட்டுச்சா

உலகத்தில் உன்னைவிட்டால்

ஈனப்பிறவியொன்று உண்டா

என்ன செய்கிறாய்... என்ன செய்தாய் நீ

வருடம் ஒருதடவை சிந்திக்கிறாய்

மற்றப்பொழுதுகளில்

அட்டையாய் சுருண்டுகிடக்கிறாய்

அழிகிறது எமது இனம் ஈழத்தில்

இப்போது இல்லாவிட்டால் எப்போது? சிந்தனை செய்

என்ன முடியும் உன்னால்? சிந்தி

தம்பிக்கு கைகொடு

அவனை நம்பு

திட்டங்கள் தீட்டு

ஒன்று சேர்

சிங்களவன் வஞ்சகங்களை தவிடுபொடியாக்கு

எமது இனம் தோற்றுவிடக்கூடாது..

அதற்கு நீ காரணமாகிவிடக்கூடாது

-- ஆதிபன்

http://www.vaarppu.com/padam_varikal.php

"கண்ணீருக் குருதியுமாய் ஈழம்" என்று பலகவிதை தொகுப்புகளை தந்துள்ளீர்கள் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு செய்திகளை சொல்லி செல்லும் விதம் அழகு இணைப்பிற்கு நன்றி நுணாவிலன் அண்ணா!! :o

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.