Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு காங்கிரசை தடை செய்ய வேண்டும், கொளத்தூர் மணி

Featured Replies

தமிழ்நாடு காங்கிரஸ் -- சட்டவிரோத கட்சி !!!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை

சட்டவிரோத கட்சியாக அறிவித்து

நடவடிக்கைகளை முடக்குக!!

-- கொளத்தூர் மணி

தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்நாடு அரசையும் காப்பாற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களைத் தடை செய்ய வேண்டும். "ஆயுத கலாசாரமாகிவிட்டது சத்தியமூர்த்தி பவன்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தராஜ் அறிவித்திருப்பதால் சத்தியமூர்த்தி பவனுக்குள்ளும் காங்கிரஸ் தலைவர்களின் வீட்டிலும் தீவிர சோதனைகளை நடத்தி அந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதுடன் சத்தியமூர்த்தி பவனுக்கு சீல் வைத்து அக்கட்சியின் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கூட்டம் நடந்தாலும் மாவட்டக் கூட்டம் நடந்தாலும் மாநிலக் கூட்டம் நடந்தாலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தாலும் அகில இந்திய தலைவர்கள் எவர் வந்தாலும் வேட்டி-சட்டை கிழிப்பு- அடி-தடி-வெட்டு குத்து என்பது இல்லாமல் நடப்பதே இல்லை.தமிழ்நாடு காங்கிரசில் கிருஷ்ணசாமி கோஷ்டி, அவரது மகன் விஷ்ணு பிரசாத் கோஷ்டி, ஜி.கே. வாசன் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி, குமரி அனந்தன் கோஷ்டி, முன்னால் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடியின் மகன் கோஷ்டி, ஜெயந்தி நடராஜன் கோஷ்டி, பீட்டர் அல்போன்ஸ் கோஷ்டி என்று மாநில அளவிலும் மாவட்ட அளவில் உள்ளுர் கோஷ்டிகளுமாக உள்ளனர். இவர்களில் எத்தனை கோஷ்டி வைத்துக் கொண்டாலும் எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அறைக் கூட்டம் முதல் பொதுக்கூட்டம் வரை அனைத்திலுமே வன்முறை வெறியாட்டம்தான் நடந்து வருகிறது. கடந்தகாலங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை இங்கே நினைவுபடுத்துகிறோம்.

முதல்வர் ஜெயலலிதாவை "வானளாவ' புகழ்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., எஸ்.ஜி.வினாயகமூர்த்தியின் முகத்தில் சத்தியமூர்த்தி பவனில் வட சென்னை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ஓங்கி குத்தினார். தனக்கு இப்படி ஒரு "கும்மாங்குத்து' விழும் என்று சற்றும் எதிர்பாராத வினாயகமூர்த்தி கண் கலங்கினார். பிற்பகல் சாப்பிடாமல் மாலை வரை அவர் சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்தார்.

- தினமலர் (ஜுலை 15, 2005)

சென்னை, பூங்கா நகர் சட்டசபைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., எஸ்.ஜி.வினாயகமூர்த்தி. இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை, அண்ணா நகர் மேற்கு திருமங்கலம், 13வது மெயின் ரோட்டில் கனகதாரா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்ததற்காக வினாயகமூர்த்திக்கும், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோவுக்கும் கருத்து வேறுபாடு எழுந்து, கைகலப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் ,ரவு வினாயகமூர்த்தியின் வீட்டிற்கு வந்த மூன்று பேர் தங்கள் கைகளில் வைத்திருந்த சோடா பாட்டில்களை வீசி சரமாரியாக தாக்கினர். ,தை பார்த்த வீட்டிலிருந்தோர் அலறினர். அக்கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடி விட்டது. வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது டொயோட்டா குவாலிஸ் கார் கண்ணாடிகள் சோடா பாட்டில்களால் அடித்து நொறுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், திருமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தாக்குதல் சம்பவத்தை அடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து இரவோடு இரவாக, சாந்தோம் பகுதியில் வீட்டில் இருந்த ராயபுரம் மனோவை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி கராத்தே சந்துரு, ஆட்டோ மணி, ஆட்டோ மாரி மற்றும் ரமேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

- தினமலர் (ஜுலை 17, 2005)

சென்னை மெரீனா டவர் ஹோட்டலில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சந்தன் யாதவ் முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்ட மாநில இளைஞர் காங்கிரஸின் "துணைத் தலைவர்' தாஸ் பாண்டியன், "பொதுச்செயலாளர்" பாலாஜி, "செய்தித் தொடர்பாளர்" காண்டீபன் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்- ஜுன் 8, 2007

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது முதுகுளத்தூர் அருகே கடந்த அக்டோபர் 29ஆம் நாள் தாக்குதல்: வேல்கம்பால் குத்தப்பாட்டார். இச்செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதுகூட உள்கட்சி மோதலின் விளைவாக நடந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது நடந்த கொலை வெறித் தாக்குதல் திட்டமிட்ட கொலை சதி என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று நவம்பர் 5 , 2007 அன்று காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கே.விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

இதனில் உச்சகட்டமாக "சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு பட்டாக்கத்தி வெட்டு" என்று கடந்த சில நாள்களாக மக்களை பீதிக்குள்ளாக்கி வைத்துள்ளனர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் படுகாயம் என்று செய்திகளும்

"இரத்த களறியாக" சத்தியமூர்த்தி பவன் மாறிய படங்களும் வெளிவந்தன. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரின் மகனுமான விஷ்ணு பிரசாத் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினர் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்த விஷ்ணுபிரசாத் மீது இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் முன்னிலையில் கல்லெறியப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களும் அனைத்து ஏடுகளிலும் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் தொடர்பாக விஷ்ணு பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அமைச்சராக உள்ள ஜி.கே.வாசன் மாநில தலைவராக இருந்தபோது நான் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தேன். அப்போது சிலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். அதற்காக என் அலுவலகம் உடைக்கப்பட்டது. அவர் தலைவராக இருந்த காலத்தில்தான் சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்த செல்லக்குமார் தாக்கப்பட்டார். அவர் தலைவராக இருந்த காலத்தில்தான் மூத்த தலைவர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தி சத்தியமூர்த்தி பவனில் தாக்கப்பட்டார். கொடைக்கானலில் ஆலோசனை நடத்திய என்னை கொல்லவும் சதி நடந்தது என்று கூறியிருந்தார். இச்செய்தி நவம்பர் 12ஆம் நாள் திங்கள்கிழமையன்று அனைத்து தமிழ்நாளேடுகளிலும் வந்துள்ளது.

இதற்கும் மேலாக "சத்தியமூர்த்தி பவனில் ஆயுத கலாசாரம்" உருவாகியிருப்பதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவரான கோவிந்தராஜே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்."எங்கள் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதற்கு ஒட்டுமொத்தமாக கண்டனம் தெரிவிக்க கூட கட்சியினரிடையே ஒற்றுமையில்லை. எங்களுக்குள் சண்டை வந்தால் சட்டையை கிழிப்போம்; சேர்களை எறிவோம். இப்போது ஆயுத கலாசாரம் சத்தியமூர்த்தி பவனில் ஏற்பட்டுள்ளது.

- மதுரையில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் கோவிந்தராஜ் (தினமலர் நவ.17,2007 )

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் அல்லது வட்டார அல்லது மாவட்ட அலுவலகங்களில் எப்போது எந்த நேரத்தில் கோஷ்டி மோதல் வெடித்து அவர்களின் "ஆயுத கலாசாரம்" வெளிப்படும் என்று தெரியாத நிலையில் அப்பகுதிகளில் நடமாடுவதற்கே மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழ்நாடு இளைஞர்களை வன்முறை மற்றும் ஆயுத கலாச்சாரத்துக்கு தூண்டுகிற- தங்களின் வன்முறை மற்றும் ஆயுத கலாச்சாரத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை நாசப்படுத்தி வருகிற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சட்டவிரோத கட்சியாக தமிழ்நாடு அரசு அறிவிப்பதுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை பூட்டி சீல் வைத்து அவர்களின் நடவடிக்கைகளை முடக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பயங்கரவாதத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களையும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற அவப்பெயரிலிருந்து தமிழ்நாடு அரசையும் காப்பாற்ற முடியும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

-- கொளத்தூர் மணி

நன்றி: ஆர்குட்

தமிழக காங்கிரஸா? சிங்கள காங்கிரஸா?

தமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...

1. வாசன் குருப் - பாபநாசம் பண்ணையார் சொந்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்... இந்த பண்ணையாரின் அடிபொடிகள்... சுதர்சனம், ராணி, டாக்டர் ஜெயகுமார், பழனியாண்டி... இருக்கும் கோஷ்டிகளில் பலம் பெற்றது... இந்த பண்ணையார் கோஷ்டிதான்...

2. கிருஷ்ணசாமி குருப் - இவரது கோஷ்டியில் இவரும் இவரது மகன் விஷ்னுபிரசாத் மட்டும்தான்... துனைக்கு மருமகன் அன்புமணி, பேமானி பேச்சு புகழ் மருத்துவர் ராமதாஸ்

3. இளங்கோவன் குருப் - இவரது கோஷ்டியிலும் இவரும் இவரது மகன் திருமகன் மட்டும்தான் இருப்பார்கள்.

4. குமரி அனந்தன் - இவர் தனிமரம்... இவர் மகளை பாஜகவிற்கு அனுப்பி விட்டார்... அங்கு அவர் மகள் தமிழிசை மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு சென்று வருகிறார்...

5. செல்லகுமார் - இவரும் தனிமரம்...

6. மணிசங்கரய்யர் - இவரது கோஷ்டியில் இவரும்... இவரது கைத்தடியான ராஜ்குமார் மாயவரம் எம்.எல்.ஏ.வும்தான்... இவருக்கு ஓட்டு போட மட்டும்தான் மயிலாடுதுறை தொகுதி மக்கள் தேவை... இவருக்கு வேண்டியவர் சிங்கள தலைவர் ராஜபக்சே... வேண்டியவர்கள் சிங்கள மக்கள்...

7. சிதம்பரம் - இவரது கோஷ்டியில் இவர்... இவரது ம்கன் கார்த்தி... கைத்தடி காரைக்குடி எம்.எல்.ஏ. சுந்தரம்...

8. கிருஷ்ணசாமி வாண்டையார் - இவர் தஞ்சை காங்கிரஸின் குறுநில மன்னர்... கள்ளர் சாதிக்காரர்களின் இளவல் - பாபநாசம் பண்ணையார் மூப்பனார்களுக்கு பரம எதிரி - துனை அதிமுகவில் உள்ள 40 நாள் மந்திரியாக இருந்த இவரது சித்தப்பா அய்யாறு வாண்டையார்...

9. வசந்தக்குமார் - இந்தியாவின் நம்பர் ஒன் ஏஜெண்ட்... பொருட்களுக்கு... தனிமரம்...

10. ஜெயந்தி நடராஜன் - தனிமரம்... காசு கொடுத்து தனக்கு தானே போஸ்டர் அடித்து கொள்வார்...

11. டி.யசோதா - திருபெரும்புதூர் எம்.எல்.ஏ. - சொந்த கட்சியை விட ஜெவுக்கு விசுவாசம் அதிகம்...

12. ஆர்.பிரபு - தனிமரம்... நீலகிரியின் ரோஜா என ஊட்டியில் போஸ்டர் அடித்துக் கொள்வார்...

13. பிட்டர் அல்போன்ஸ் - தனிமரம் - காங்கிரஸிலே கொஞ்சம் பேச தெரிந்த நாகரீகமானவர்... சில ஆண்டுகளுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் இவரை... வாசன் குருப் நைய புடைத்த போது கேட்க ஆளில்லை... சட்ட மன்றத்தில் ஜெவை குறை கூறியதற்கு... 1995இல் தாமரைகனியால் தாக்கப் பட்டார்... நிறைய அடிவாங்கியவர்.... காங்கிரஸ் என்றாலே வடிவேல் போல அடிவாங்குப்வர்கள் என நிரூபிப்பவர்...

14. வேலூர் ஞானசேகரன் - தனி மரம்...

15. திருநெல்வேலி எம்.பி. ஆதித்தன் - சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தால்... கோஷ்டி தெரியவில்லை...

16. அன்பரசு - இவரது கோஷ்டியில் இவரும்... இவர் மகன் சோளிங்கர் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு... ஜெவின் உண்மை தொண்டர்... சிறப்பு தகுதி... சிங்களர்களிடம் இருந்து... விஜயரத்னே விருது பொறுக்கி வந்த பொறுக்கி...

17. வாழ்ப்பாடி ராமமூர்த்தி மகன் சுகந்தன் - இவர் பாஜ்கவில் இருந்து தாவி வந்தவர்... அவ்வப்போது தாவி கொண்டிருப்பார்...

18. எஸ்.ஜி.வினாயகமூர்த்தி - முன்னாள் எம்.எல்.ஏ. எழில் காத்த நாயகியே என ஜெவை புகழ்ந்தவர்...

19. சுதர்சன நாச்சியப்பன் - இவரும் தனி மரம்... தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டி கொள்வார்...

20. ஜெயலலிதா - இவர் தமிழ் நாடு காங்கிரஸில் இல்லாவிட்டாலும்... உண்மையில் இவருக்குதான் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் விசுவாசிகள் அதிகம்... அன்பரசு போன்றவர்கள்... இவர் சொந்த கட்சிகாரர்களை விட இவருக்குதான் சேவை செய்வார்கள்... மேலும் காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்களின் தலைவரும் இவரே..

.21. தங்கபாலு - 1960 களிலேயே வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கி மோசடி செய்த பேர்வழி... அமெரிக்காவில் இருக்கும் இவரது தம்பியை வைத்துதான் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெ பெயரை வைக்க ஏற்பாடு செய்த ஜெ விசுவாசி... கூடுதல் தகுதி முன்னாள் ரவுடி... முன்னாள் மாநில

அடைகலராஜ் மூப்ஸ் கோஷ்டியில் இருந்த ஆள்... இந்தியன் வங்கியில் பல கோடி... மூப்ஸ் ஆதரவோடு கடன் வாங்கி... ஏமாற்றிய பேர்வழி... இப்போது இருக்கிறாரா என தெரியவில்லை...

இவரது தங்கை எமிலி திருச்சி முன்னாள் மேயர்... இவரது சகோதரி மகன் ஜெரோம் கடந்த தேர்தலில் திருவரங்கத்தில் தோல்வி அடைந்தவர்... இப்போது வாசன் கோஷ்டியில் உள்ளார்கள்...

மேட்டுபாளையத்தில் உள்ள ப்ளாக் தண்டர் கூட அடைக்கலராஜுக்கு சொந்தமானதுதான்...

ஏதோ எனக்கு தெரிந்த காங்கிரஸ் கோஷ்டிகளை பற்றி சொல்கிறேன்... மற்றபடி தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களை விட கோஷ்டிகள் அதிகமாக இருக்கும்... திறந்த வீட்டில் நாய் வந்து போவது போல... எப்போது வேண்டுமானாலும் கட்சிக்கு வந்து விட்டு போகலாம்...

இப்போதைக்கு காங்கிரஸில் செல்வாக்கான தலைவர்கள்...

1. சிங்கள தலைவர் ராஜபக்சே...

2. ஜெயலலிதா...

3. மருத்துவர் ராமதாசு - கிருஷணசாமியின் சம்பந்தி என்பதால்...

மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி என்பதை... ஜெ காங்கிரஸ் கமிட்டி என்றோ... சிங்கள காங்கிரஸ் கமிட்டி என்றோ... ராஜபக்சே காங்கிரஸ் கமிட்டி என்றோ... கோத்தபயா காங்கிரஸ் கமிட்டி என்றோ மாற்றிக் கொண்டால்... அதன் செயல்பாடுகளுக்கு சரியாக இருக்கும்

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=9864

இதை ஈழத்தமிழரை கிந்திஇராணுவம் அனுப்பி கொன்ற நேரமே காங்கிரஸ் கட்சியை தமிழ் நாட்டில் இருந்து இல்லாமல் செய்திருக்க வேண்டும்.......................

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை

சட்டவிரோத கட்சியாக அறிவித்து

நடவடிக்கைகளை முடக்குக!!

சென்னையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி 18.11. 07 அன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்நாடு அரசையும் காப்பாற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களைத் தடை செய்ய வேண்டும். "ஆயுத கலாசாரமாகிவிட்டது சத்தியமூர்த்தி பவன்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தராஜ் அறிவித்திருப்பதால் சத்தியமூர்த்தி பவனுக்குள்ளும் காங்கிரஸ் தலைவர்களின் வீட்டிலும் தீவிர சோதனைகளை நடத்தி அந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதுடன் சத்தியமூர்த்தி பவனுக்கு சீல் வைத்து அக்கட்சியின் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கூட்டம் நடந்தாலும் மாவட்டக் கூட்டம் நடந்தாலும் மாநிலக் கூட்டம் நடந்தாலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தாலும் அகில இந்திய தலைவர்கள் எவர் வந்தாலும் வேட்டி-சட்டை கிழிப்பு- அடி-தடி-வெட்டு குத்து என்பது இல்லாமல் நடப்பதே இல்லை.தமிழ்நாடு காங்கிரசில் கிருஷ்ணசாமி கோஷ்டிஇ அவரது மகன் விஷ்ணு பிரசாத் கோஷ்டிஇ ஜி.கே. வாசன் கோஷ்டிஇ இளங்கோவன் கோஷ்டிஇ குமரி அனந்தன் கோஷ்டிஇ முன்னால் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடியின் மகன் கோஷ்டிஇ ஜெயந்தி நடராஜன் கோஷ்டிஇ பீட்டர் அல்போன்ஸ் கோஷ்டி என்று மாநில அளவிலும் மாவட்ட அளவில் உள்ளுர் கோஷ்டிகளுமாக உள்ளனர். இவர்களில் எத்தனை கோஷ்டி வைத்துக் கொண்டாலும் எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அறைக் கூட்டம் முதல் பொதுக்கூட்டம் வரை அனைத்திலுமே வன்முறை வெறியாட்டம்தான் நடந்து வருகிறது. கடந்தகாலங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை இங்கே நினைவுபடுத்துகிறோம்.

முதல்வர் ஜெயலலிதாவை "வானளாவ' புகழ்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.இ எஸ்.ஜி.வினாயகமூர்த்தியின் முகத்தில் சத்தியமூர்த்தி பவனில் வட சென்னை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ஓங்கி குத்தினார். தனக்கு இப்படி ஒரு "கும்மாங்குத்து' விழும் என்று சற்றும் எதிர்பாராத வினாயகமூர்த்தி கண் கலங்கினார். பிற்பகல் சாப்பிடாமல் மாலை வரை அவர் சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்தார்.

- தினமலர் (ஜுலை 15இ 2005)

சென்னைஇ பூங்கா நகர் சட்டசபைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.இ எஸ்.ஜி.வினாயகமூர்த்தி. இவர் தனது குடும்பத்தினருடன் சென்னைஇ அண்ணா நகர் மேற்கு திருமங்கலம்இ 13வது மெயின் ரோட்டில் கனகதாரா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்ததற்காக வினாயகமூர்த்திக்கும்இ வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோவுக்கும் கருத்து வேறுபாடு எழுந்துஇ கைகலப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு வினாயகமூர்த்தியின் வீட்டிற்கு வந்த மூன்று பேர் தங்கள் கைகளில் வைத்திருந்த சோடா பாட்டில்களை வீசி சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த வீட்டிலிருந்தோர் அலறினர். அக்கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடி விட்டது. வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது டொயோட்டா குவாலிஸ் கார் கண்ணாடிகள் சோடா பாட்டில்களால் அடித்து நொறுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும்இ திருமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தாக்குதல் சம்பவத்தை அடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து இரவோடு இரவாகஇ சாந்தோம் பகுதியில் வீட்டில் இருந்த ராயபுரம் மனோவை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி கராத்தே சந்துருஇ ஆட்டோ மணிஇ ஆட்டோ மாரி மற்றும் ரமேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

- தினமலர் (ஜுலை 17இ 2005)

சென்னை மெரீனா டவர் ஹோட்டலில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சந்தன் யாதவ் முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்ட மாநில இளைஞர் காங்கிரஸின் "துணைத் தலைவர்' தாஸ் பாண்டியன்இ "பொதுச்செயலாளர்" பாலாஜிஇ "செய்தித் தொடர்பாளர்" காண்டீபன் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்- ஜுன் 8இ 2007

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது முதுகுளத்தூர் அருகே கடந்த அக்டோபர் 29ஆம் நாள் தாக்குதல்: வேல்கம்பால் குத்தப்பாட்டார். இச்செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதுகூட உள்கட்சி மோதலின் விளைவாக நடந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது நடந்த கொலை வெறித் தாக்குதல் திட்டமிட்ட கொலை சதி என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று நவம்பர் 5 இ 2007 அன்று காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கே.விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

இதனில் உச்சகட்டமாக "சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு பட்டாக்கத்தி வெட்டு" என்று கடந்த சில நாள்களாக மக்களை பீதிக்குள்ளாக்கி வைத்துள்ளனர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் படுகாயம் என்று செய்திகளும்

"இரத்த களறியாக" சத்தியமூர்த்தி பவன் மாறிய படங்களும் வெளிவந்தன. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரின் மகனுமான விஷ்ணு பிரசாத் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினர் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்த விஷ்ணுபிரசாத் மீது இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் முன்னிலையில் கல்லெறியப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களும் அனைத்து ஏடுகளிலும் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் தொடர்பாக விஷ்ணு பிரசாத் வெளியிட்ட அறிக்கையில்இ மத்திய அமைச்சராக உள்ள ஜி.கே.வாசன் மாநில தலைவராக இருந்தபோது நான் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தேன். அப்போது சிலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். அதற்காக என் அலுவலகம் உடைக்கப்பட்டது. அவர் தலைவராக இருந்த காலத்தில்தான் சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்த செல்லக்குமார் தாக்கப்பட்டார். அவர் தலைவராக இருந்த காலத்தில்தான் மூத்த தலைவர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தி சத்தியமூர்த்தி பவனில் தாக்கப்பட்டார். கொடைக்கானலில் ஆலோசனை நடத்திய என்னை கொல்லவும் சதி நடந்தது என்று கூறியிருந்தார். இச்செய்தி நவம்பர் 12ஆம் நாள் திங்கள்கிழமையன்று அனைத்து தமிழ்நாளேடுகளிலும் வந்துள்ளது.

இதற்கும் மேலாக "சத்தியமூர்த்தி பவனில் ஆயுத கலாசாரம்" உருவாகியிருப்பதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவரான கோவிந்தராஜே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்."எங்கள் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதற்கு ஒட்டுமொத்தமாக கண்டனம் தெரிவிக்க கூட கட்சியினரிடையே ஒற்றுமையில்லை. எங்களுக்குள் சண்டை வந்தால் சட்டையை கிழிப்போம்; சேர்களை எறிவோம். இப்போது ஆயுத கலாசாரம் சத்தியமூர்த்தி பவனில் ஏற்பட்டுள்ளது.

- மதுரையில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் கோவிந்தராஜ் (தினமலர் நவ.17இ2007 )

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் அல்லது வட்டார அல்லது மாவட்ட அலுவலகங்களில் எப்போது எந்த நேரத்தில் கோஷ்டி மோதல் வெடித்து அவர்களின் "ஆயுத கலாசாரம்" வெளிப்படும் என்று தெரியாத நிலையில் அப்பகுதிகளில் நடமாடுவதற்கே மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழ்நாடு இளைஞர்களை வன்முறை மற்றும் ஆயுத கலாச்சாரத்துக்கு தூண்டுகிற- தங்களின் வன்முறை மற்றும் ஆயுத கலாச்சாரத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை நாசப்படுத்தி வருகிற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சட்டவிரோத கட்சியாக தமிழ்நாடு அரசு அறிவிப்பதுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை பூட்டி சீல் வைத்து அவர்களின் நடவடிக்கைகளை முடக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பயங்கரவாதத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களையும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற அவப்பெயரிலிருந்து தமிழ்நாடு அரசையும் காப்பாற்ற முடியும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

visit here : www.dravidar.org

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.