Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பின் அடிக்குறிப்பு.

Featured Replies

வணக்கம் யாழ் உறவுகளே,உங்கள் அணைவரையும்

அன்பின் அடிக்குறிப்பு என்னும் ஆக்கத்திற்க்குள் அழைத்துச்செல்கின்றேன்............

வாருங்கள், படியுங்கள் ,சிந்தியுங்கள் :o

அன்பின் அடிக்குறிப்பு

அன்பிற்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை.

அதுதான் அன்பின் அழகு. அதுதான் அன்பின் சுதந்திரம்.

வெறுப்பு ஒரு பந்தம். ஒரு சிறை. உங்கள் மீது திணிக்கப்படுவது.

வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும். வெறுப்பையே கிளறிவிடும். ஒருவரை நீங்கள் வெறுக்கும் பொழுது அவர் மனதில் உங்களுக்கெதிரான வெறுப்பை உருவாக்கி விட்டுவிடுவீர்கள்.

உலகமே வெறுப்பிலும் அழிவிலும் வன்முறையிலும் போட்டியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருவர் குரல்வளையை ஒருவர் நெரித்துக் கொண்டிருக்கிறார்கள். செயலாலோ மனதாலோ ஒவ்வொருவரும் மற்றவரைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒரு சொர்க்கம் ஆகக்கூடிய இந்த உலகை நரகமாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

அன்பு செய்யுங்கள்.

இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.

அன்பின் எல்லையற்ற அழகே..அதற்கு அடிக்குறிப்பு தேவையில்லை என்பதுதான். அன்பு காரணமில்லாது நிகழ்வது. அது உங்கள் பரவச வெளிப்பாடு. உங்கள் இதயத்தின் பகிர்வு. உங்கள் இருப்பின் பாடலைப் பங்கிட்டுக் கொள்வது. உங்கள் மகிழ்வைப் பகிர்ந்து கொள்வது.

உண்மை அன்பு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு. அதைப் பகிர்ந்து கொள்வதற்கும்,

பொழிந்து கொள்வதற்கும் காரணமே தேவயில்லை. பகிர்ந்து கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.

காலையில் பறவைகள் பாடுகின்றன. ஒரு குயில் தூரத்திலிருந்து அழைக்கிறது. காரணம் இல்லாமல்தான். இதயத்தில் நிறைந்த மகிழ்ச்சி ஒரு பாடலாக வெடித்துப் பீரிடுகிறது.

நான் சொல்லும் அன்பு அதுவே.

அப்படிப்பட்ட அன்பின் பரிமாணத்திற்குள் நீங்கள் பிரவேசிக்க முடியுமானால்..அதுவே சொர்க்கம். அப்போது நீங்கள் பூமியில் ஒரு சொர்க்கத்தைப் படைத்து விடுவீர்கள்...!!

நன்றி சூரியகுமார்

(ஆதாரம்> தம்மபதம் பற்றிய ஓஷோ வின் சொற்பொழிவு.

பக்கம் 44,45)

Edited by இனியவள்

  • தொடங்கியவர்

அன்பின் அடிக்குறிப்பு.........2

ஆரம்ப ஆதார யதார்த்த இருப்பு

எப்போதும் உன்னிடமே இருக்கிறது.

உனக்குள் மறைந்திருப்பது

சத்தியம்..சிவம்..சுந்தரம்

உண்மை..தெய்வீகம்..அதன் அழகு.

அதுதான் விதை...!

அதைக் கவனி.

விரைவில் உனக்குள் எழும் பெரிய மரம்.

அது எல்லாத்திசைகளிலும் கிளைகள் பரப்பும்.

இலட்சக் கணக்கான பூக்கள்

பூத்துக் குலுங்கும்.

.......முன் கூட்டியே தயாரிக்கப்பட்ட விடைகளின் அடித்தளத்தின் மீதுதான் நமது முழு கல்வித்துறையே நின்று கொண்டிருக்கிறது. இவ்வகை விடைகள் உங்கள் புத்திசாலித்தனத்தை வளர்க்க உதவாது. நீங்கள் கேள்வி கேட்டவுடனேயே..அதற்கான பதிலைத் தர எங்கோ ஒரு கொம்யூற்றர் காத்திருக்கும்..........!

...திறமையுள்ளவராக, பிரக்ஞையுள்ளவராக, தயார்நிலையிலுள்ளவராக, சுயமாகச் சிந்திப்பவர்களாக..நீங்கள் இருப்பீர்களேயானால்...

உங்களுக்கு விடை தெரிந்துவிடும்.

அது ஒரு தீச்சுடராய் பிரகாசிக்கும். ஏனெனில் அது உங்களுடையது.

உங்களுக்கு நம்பிக்கையும், உறுதியும்,சந்தேகமின்மையும் இருப்பதால்..அந்த விடை உங்கள் சொந்த விடை.

ஆகவேதான்..........நீயே ஆரம்பம்.

அன்பிலிருந்து..இப்பொழுதே நீ ஆரம்பிக்கலாம்.

(ஆதாரம்>sathyam-sivam-sundram. by Osho page 9,10,11)

புத்திசாலித்தனத்தை பற்றியும் மேல ஏதோ சொல்லப்பட்டு இருக்கு.

நானும் ஒண்டு சொல்லிறன் கேளுங்கோ.

புத்திசாலித்தனத்துக்கும் அன்புக்கும் சம்மந்தம் இல்லை. புத்திசாலித்தனத்தையும் அன்பையும் சம்மந்தப்படுத்தவும் கூடாது.

புத்திசாலியாய் வாழவிரும்புபவர்களால் நிச்சயம் உண்மையான அன்புடன் இருக்கமுடியாது.

உண்மையான அன்பு செலுத்தி வாழவிரும்புபவர்கள் என்னை மாதிரி முட்டாள்களாக இருக்க வேண்டும்.

நாங்கள் புத்தியை பாவிக்க வெளிக்கிட்டால் அது அன்பான உறவுகளை வெறுக்கவைக்கும் என்பதே எனது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு.

புத்தியை புத்தியை பாவிக்க வேண்டிய இடங்களில் பாவிக்க வேண்டும். எங்கள் உறவுகள் மீது உதாரணமாக தாய், தந்தை, அக்கா, அண்ணா, காதலி இவர்கள் மீது புத்தியை பாவித்து பழகமுடியாது.

புத்தியை பாவிக்கவேண்டிய இதர விடயங்களில் உதாரணமாக படிப்பில் புத்தியை பாவிக்கலாம். ஆனால், ஆக்களில் பிரயோகிக்ககூடாது.

எனக்கு ஒரு நல்ல நண்பன் இருந்தான். அவன் பிசுனஸ் படித்து தொழிற்துறையில் அந்தமாதிரி செழிப்புடன் உள்ளான். நான் அவனுடனான தொடர்பை இப்போது நன்றாக குறைத்துவிட்டேன். மற்றைய நண்பர்களும் அப்படியே செய்து உள்ளார்கள்.

ஏனென்றால், அவன் தான் படித்த பிசினஸ் தத்துவங்களை பாவித்து எம்முடன் பழக வெளிக்கிட்டான். அதாவது அன்பில் பழகாது புத்தியை பாவித்து உறவுகளை அணுகினான்.

என்னால் எனது உறவுகளுடன் அன்பாக பழகமுடிகின்றது. ஏனென்றால் நான் ஒரு முட்டாளாக இருக்கின்றேன். அதாவது நான் புத்தியை பாவித்து பழகுவதில்லை.

அன்பை அன்பினாலேயே அடையமுடியும்.

  • தொடங்கியவர்

அன்பை அன்பினாலேயே அடையமுடியும்.

உங்கள் நட்பையும் அன்பால் மீட்டுப்பார்க்கலாமே??

Edited by இனியவள்

உங்கள் நட்பையும் அன்பால் மீட்டுப்பார்க்கலாமே??

மீட்பு முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம்தான். எனக்கு அதில் ஏதோ ஈடுபாடு வரவில்லை. அவனும் திருமணம் செய்து பிசியாகிவிட்டான்.

நான் அவனைப்பற்றி கதைக்க வெளிக்கிடும்போது எனது மற்றைய நண்பர்கள் இவன் ஒரு மனுசனா என்று அவனை திட்டுவார்கள். சில நண்பர்களுடன் அவன் ஏதோ பிசினசு செய்து சுத்துமாத்தும் செய்துவிட்டான்.

நான் அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, காதலி இவர்களுடனேயே புத்தியைப் பாவித்து பழகமாட்டேன் என்று கூறினேன். இதைவிட நல்ல இனிய நண்பர்களுடனும் புத்தியை பாவித்து பழகுவதில்லை.

ஆனால், அன்பால் எனது பழைய நண்பனுடனான நட்பை மீட்கும் அளவுக்கு அவனுடனான நட்பின் பலம் காணாதுபோல இருக்கிது.

  • தொடங்கியவர்

ஆனால், அன்பால் எனது பழைய நண்பனுடனான நட்பை மீட்கும் அளவுக்கு அவனுடனான நட்பின் பலம் காணாதுபோல இருக்கிது.

உண்மையான நட்புக்கு பலன் இருந்திருக்கலாம்................

அன்பின் அடிக்குறிப்பு..3

..உங்களை நீங்கள் நம்புகிறீர்களா?

ஆம் என்றால்..

அதற்கொரு காரணமே தேவையில்லை.

நிபந்தனையற்ற நம்பிக்கையாக அது இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனையற்ற நம்பிக்கையிலிருந்து பல கிளைகள் வளரும்.

நீங்கள் பசுமை விரிந்த பெரிய மரங்கள் ஆகி விடுவீர்கள்.

அன்பை நம்ப வேண்டும்.

உண்மையை நம்ப வேண்டும்.

தெய்வீகப் பண்பை நம்ப வேண்டும்.

அழகை நம்ப வேண்டும்.

உங்கள் இதயத்தில் நம்பிக்கை குடிகொண்டிருப்பதால் எல்லாவற்றையும் நம்ப வேண்டும்.

அவ நம்பிக்கை கொள்ள ஒரு நிழல் கூட இருக்கக் கூடாது.

அப்போது நீங்கள் அவ நம்பிக்கை கொள்ள முயன்றாலும் கூட உங்களால் முடியாது போய்விடும்.

அந்த நிலையில்தான் உங்கள் இருப்பின் மையமாக நீங்கள் இருக்க முடியும்.

அங்கிருந்துதான் நம்பிக்கை மேலேழுகிறது.

அதுதான் வாழ்வின் மீதும் மக்கள் மீதும், ஏனைய உயிரினங்கள் மீதுங்கூட நம்பிக்கை வைக்கச் செய்கிறது.

அங்கே எந்த நிபந்தனையும் இருக்காது.

அவ்வகை நம்பிக்கை ஒரு பாக்கியம்.

ஒரு பரவசம்.!

ஒரே ஒருமுறை தன்னம்பிக்கை வந்துவிட்டால், அப்புறம் பிரபஞ்சதின் மீதே நம்பிக்கை வந்துவிடும்.

உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையே அவ்வளவு பெரிதாக இருக்குமானால்...

எல்லாவற்றையும் நம்பும் நம்பிக்கை என்பது எவளவு பெரிதாக இருக்கும் தெரியுமா..???

எல்லாவற்றுக்கும் அன்புதான் அடிப்படை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நட்பையும் அன்பால் மீட்டுப்பார்க்கலாமே??

எங்கடை மகிந்துவை அன்பினால் மாற்ற முடியும் என நினக்கிறீர்களா இனியவள்?

அன்பின் அடிக்குறிப்பு..3 வாசிக்க நல்லா இருக்கு.

உண்மையான அன்பு உள்ள இடத்தில் சந்தேகம் இருக்காது. அன்பாய் இருப்பதற்கு மூளை, புத்தி தேவையில்லை, ஆனால் நிச்சயம் நல்ல உள்ளம் இருக்க வேண்டும். விருத்தி அடையாத உள்ளத்தில் அன்பின் பூரணத்துவத்தை காணவோ அனுபவிக்கவோ முடியாது.

நாங்கள் நாளாந்தம் பெறும் அனுபவங்கள் மூலம் எமது உள்ளத்தையும் வளர்த்து எடுக்க வேண்டும். ஆனால், இது இலகுவான விசயம் இல்லை.

எல்லாரிடமும் உண்மையான அன்புடன் இருக்காவிட்டாலும், ஒரு சிலருடன் உண்மையான அன்புடன் இருப்பதே பெரிய விசயம்.

  • தொடங்கியவர்

எங்கடை மகிந்துவை அன்பினால் மாற்ற முடியும் என நினக்கிறீர்களா இனியவள்?

வணக்கம் நுனவிலன்,

என உங்களுக்கு நாங்கள் பேசுவது புறியவில்லையா, நாங்கள் அன்பை பெற்றி பேசிக்கொண்டுல்லோம்,

அன்பு செலுத்துவதுக்கு மகிந்தர் என்ன உங்கள் நண்மணா. குங்கள் குடும்பத்தவரா ,அல்ல நண்பணாகப்பேவவரா??ரோட்டில் இருந்து ஒருவனை கூட்டிக்கொண்டு வந்து அன்பு காட்டு என்று நாங்கள் கூறவில்லை,முதல் அன்பு என்றால் என்ன ,அதின் அடிப்படை என்ன என்று கூற வந்தோம்!!!

களைஞன் கூறுவது பேல நாங்கள் நாளாந்தம் பெறும் அனுபவங்கள் மூலம் எமது உள்ளத்தையும் வளர்த்து எடுக்க வேண்டும். ஆதனால் இப்படிபட்ட ஆக்கங்களும் இதை புறிந்து கொள்ள உதவும் என்பது எனது நம்பிக்கை!!!

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

நல்ல தகவல்களை தந்திருக்கிறீங்க. நன்றிகள் இனியவள்.

இனி அன்பை பற்றி நல்ல படிபிக்கிறீங்க நல்லா இருக்கு தொடர்ந்து அன்பை பற்றி சொல்லுங்கோ கேட்போம் :D .........ம்ம்ம் அன்பால ஒரு கெட்டவனை கூட நல்லவனாக மாற்றமுடியும் அதே நேரம் அன்பால் ஏங்கி தவிர்த்து கெட்டவர்களாக அல்லது வாழ்கையை சீரழித்தவர்களை பற்றி நன்றாக அறிவேன் :D .........சிலர் அன்பை வெளிபடையாக காட்டுவார்கள் சிலர் அதனை நேரடியாக காட்டமாட்டார்கள் இப்படி என்று பல வகை இருக்கிறது என்றே சொல்லலாம்! :lol: !ஆனா இந்த உலகில் தாயின் அன்பிற்கு எதுவும் ஈடாகது............ :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"எதையும் எதிர்பாராம செலுத்தும் அன்பு தான் நிறைந்த தூய அன்பு" :lol:

  • தொடங்கியவர்

ஆனா இந்த உலகில் தாயின் அன்பிற்கு எதுவும் ஈடாகது............ :lol:

இந்த அன்புக்கு ஏன் எதுவும் ஈடாகாது என்ற ஒரு அழகிய விழக்கத்தை

மா. கணேசன் அன்புன் உறவும் என்னும் கட்டுறையில் கூறுகின்றார் ,இது என்னை சிந்திக்கவைக்கின்றது,...................

... :lol:

இரத்த - உறவுகளின் இயல்பு

மனித ஜீவிகள் மனித பெற்றோர்களின் வழியே பிறக்கிறார்கள். இந்த அங்க தொடர்புதான் இரத்த உறவுகளை உருவாக்குகிறது. இந்த உறவுகள் பிராணியபாசத்தின் விளைவாகும். இந்த பாசத்தை இந்தக் கட்டத்தில் அன்பு என்று கொள்ளவியலாது. ஏனெனில் இந்தக் கட்டத்தில் ஜீவிகள் யாவும் பிரதானமாக இயல்பூக்கங்களினால் இயக்கப்படுகின்றன. இனப் பெருக்க வழிமுறையானது முற்றிலும் நனவற்ற நிலையில் மேற்கொள்ளப் படுவதாகும். இது ஒரு தானியங்கித் தனமான அனிச்சை செயல் போன்ற பிரதி-வினையாகும். அதாவது, ஒரு உயிரினமானது அற்றுப் போவதிலிருந்து பாதுகாக்கப்படவும், தொடர்ந்து பெருகி நிலைத்து ஜீவித்திடவுமான மிகவும் இயற்கையானதொரு தேவையை முன்னிட்டு எழும் பதிலளிப்பாகும். எனினும் இந்த நனவிலிமயமான பிராணிய-பாசம் தான் பின்னர், மனித ஜீவியானவன் உளவியல் ரீதியாக வளர்ந்திடும், முதிர்ச்சியடையும் வழியில் அல்லது போக்கில் பிரக்ஞையுடன் கூடிய மானிட - அன்பாக மலர வேண்டிய ஒன்றாகும். இந்த அன்பானது உயிரின் உலகம், சடப் பொருளின் உலகம் என யாவற்றையும் தழுவிச் செல்வதாகும்.

இரத்த - உறவுகள் மீதான ஒருவரது பாசம், ஈடுபாடு உண்மையில் அன்பல்ல. குறிப்பாக, ஒருவர் தனது குழந்தைகளின் மீது கொள்ளும் பாசம் அன்பல்ல. ஏனெனில் ஒருவரது குழந்தைகள் என்பவை உண்மையிலேயே ஒருவருடையவையே. அதாவது ஒருவரது பகுதியே அல்லது நீட்சியே. குட்டி என்பது தாயின் நீட்சியே. ஆகவே இவ்விடத்தில் தோன்றுவது உடமைபூர்வமான பாசம் தானே தவிர அன்பல்ல. இதை நாம் சுய-அன்பு (நங்ப்ச்-கர்ஸ்ங்) என்றழைக்கலாம். சுய-அன்பு என்பது அன்பல்ல.

ஏனெனில் சுய-அன்பு என்பது ஒரு ஜீவியானது தன்னை பாதுகாத்துக் கொள்ள விழையும் மிகவும் இயற்கையான இயல்பான ஒரு உணர்வு ஆகும். ஆக தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அந்த உணர்வு தான் தனது அங்கம் அல்லது நீட்சி போன்ற குட்டி (குழந்தை) குறித்தும் ஏற்படுகிறது. அதில் உண்மையில் நனவு பூர்வமான “தொடர்பு படுத்துதல்” என்பது தனக்கு வெளியிலுள்ள ஏதோவொன்றுடனோ அல்லது தன்னுள்ளேயுள்ள எதனுடவோ கூடவும் இல்லை. இவ்வாறு தொடர்பு படுத்துதல் என்பது எழாமலேயே விளையும் உறவுகளே இரத்த-உறவுகள் ஆகும்.

தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் உணர்வினை சுய-அன்பு எனக் குறிப்பிடுவோமெனில் தனது அங்கம் அல்லது பகுதி போன்ற தனது குழந்தையை பாதுகாக்கத் துடிப்பதும் அதே சுய-அன்பு தான், அல்லது சுய-அன்பின் நீட்சியே தான் எனலாம். இதே சுய-அன்பானது தனது குழந்தைகட்கும், பிற நெருங்கிய குடும்ப உறவுகட்கும், சற்று தொலைவான குடும்ப உறவுகட்கும் நீட்டிக்கப்படுகிறது. பிறகு அது தனது இனம், சனம், சாதி, குலம் என நீட்டிக்கப்படுகிறது.

இரத்த உறவுகள் என்பது முதலில் குடும்ப-ரீதியாகவும், பிறகு சமூக ரீதியாகவும் (சாதி, சனம் என்று) அமைகிறது. இவை உபயோகமானவை, எந்த அளவிற்கு குடும்பம் மற்றும் சமூகக் கோளங்களின் புறவாழ்க்கை கோருகிறதோ, செல்கிறதோ அந்த அளவிற்கு இவை உபயோகமானவை. அதற்கு மேல் இவ்வுறவுகள் எவ்வகையிலும் இறுதியானவை யல்ல. ஏனெனில், குடும்பம் சமூகம் என்பவை இயற்கையாக அமைந்த, அளிக்கப்பட்ட அடிப்படை நிலைமையாகும். ஒரு துவக்கப் புள்ளி போல. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இந்த துவக்கப் புள்ளியைத் தாண்டி சிறிதும் நகர்வதேயில்லை.

Edited by இனியவள்

இந்த அன்புக்கு ஏன் எதுவும் ஈடாகாது என்ற ஒரு அழகிய விழக்கத்தை

மா. கணேசன் அன்புன் உறவும் என்னும் கட்டுறையில் கூறுகின்றார் ,இது என்னை சிந்திக்கவைக்கின்றது,...................

... :lol:

நிச்சயமாக ஈடாகது என்று சொல்ல முடியும் சும்மா விளக்கங்கள் பல கொடுக்கலாம் :D ஆனா மற்றவர்கள் ஒரு வரையரையில் தான் அன்பை செலுத்த முடியும் அன்பை பெற்றுகொள்ள முடியும் ஆனா தாய் அன்பு அவ்வாறு இல்லை என்றே கூறலாம் :lol: ..........நாம் உலகில் பூத்தது மகிழ்ச்சியுடன் அன்புடன் அரவணைத்து அன்று தொடக்கம் அன்பை வாறி வழங்கும் தாயிற்கு முன் மற்றவை எல்லாம் சிறிய புள்ளி என் பார்வையில்!! :D

அப்ப நான் வரட்டா!!

நிச்சயமாக ஈடாகது என்று சொல்ல முடியும் சும்மா விளக்கங்கள் பல கொடுக்கலாம் :) ஆனா மற்றவர்கள் ஒரு வரையரையில் தான் அன்பை செலுத்த முடியும் அன்பை பெற்றுகொள்ள முடியும் ஆனா தாய் அன்பு அவ்வாறு இல்லை என்றே கூறலாம் :rolleyes: ..........நாம் உலகில் பூத்தது மகிழ்ச்சியுடன் அன்புடன் அரவணைத்து அன்று தொடக்கம் அன்பை வாறி வழங்கும் தாயிற்கு முன் மற்றவை எல்லாம் சிறிய புள்ளி என் பார்வையில்!! :(

அப்ப நான் வரட்டா!!

தம்பி நல்லா விளக்கம் கொடுத்திருக்கிறீங்க. ஆனால் தாயின் அன்பை விட ஏனைய எல்லாமேஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ சிறிய புள்ளி என சொல்லி காயப்படுத்துட்டீங்க. என்னையில்லை அவாவை. அதுதான் உங்கள் மல்கோவா அன்பின் அரசி "அன்பரசி :rolleyes::rolleyes::unsure:

தம்பி நல்லா விளக்கம் கொடுத்திருக்கிறீங்க. ஆனால் தாயின் அன்பை விட ஏனைய எல்லாமேஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ சிறிய புள்ளி என சொல்லி காயப்படுத்துட்டீங்க. என்னையில்லை அவாவை. அதுதான் உங்கள் மல்கோவா அன்பின் அரசி "அன்பரசி :unsure::):(

"தாயின் அன்பிற்கு முன்" மற்றது எல்லாம் குறைய தானே நிலா அக்கா ஆனா ஒருத்தரையும் காயபடுத்தவில்லையே :rolleyes: .......பேபியை பற்றி அவாவிற்கு நல்லா தெரியுமே அவாவிற்கு கூட அம்மா இருக்கு அல்லோ சோ அந்த அன்பின் முன் எதுவும் நிகர் ஆகாது என்பதை அவா அறிவா தானே :rolleyes: நான் சொன்ன அவா வந்து மல்கோவா மாதாவை நிலா அக்கா :rolleyes: அது சரி யார் அக்கா "அன்பரசி" உங்க பிரண்டா சொல்லி இருந்தா நான் போகக்க பார்த்து கொண்டு வந்திருப்பனல!! :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நுனவிலன்,

என உங்களுக்கு நாங்கள் பேசுவது புறியவில்லையா, நாங்கள் அன்பை பெற்றி பேசிக்கொண்டுல்லோம்,

அன்பு செலுத்துவதுக்கு மகிந்தர் என்ன உங்கள் நண்மணா. குங்கள் குடும்பத்தவரா ,அல்ல நண்பணாகப்பேவவரா??ரோட்டில் இருந்து ஒருவனை கூட்டிக்கொண்டு வந்து அன்பு காட்டு என்று நாங்கள் கூறவில்லை,முதல் அன்பு என்றால் என்ன ,அதின் அடிப்படை என்ன என்று கூற வந்தோம்!!!

களைஞன் கூறுவது பேல நாங்கள் நாளாந்தம் பெறும் அனுபவங்கள் மூலம் எமது உள்ளத்தையும் வளர்த்து எடுக்க வேண்டும். ஆதனால் இப்படிபட்ட ஆக்கங்களும் இதை புறிந்து கொள்ள உதவும் என்பது எனது நம்பிக்கை!!!

மகிந்த என்பவர் இலங்கை நாட்டின் தலைவருங்க.தமிழ் மக்கள் அந்த நாட்டின் பிரஜைகளுங்க.ஒரு நாட்டின் தலைவர் தம் பிரசைகள் மீது அன்பு கொள்வது அவசியம்.இவர் அன்பு கொள்ளாமல் மாறாக கொன்றொழிக்கிறார். இவருக்கு அன்பை போதித்து அல்லது அன்பை வளர்கமுடியுமா?

தாயின் அன்புக்கு நிகரேது. வரவேற்கிறேன். ஆனால் தாயின் பின் தாரம். ஆனால் நீங்கள் எல்லாமே சின்ன புள்ளி என்பதால் கொஞ்சம் கோவம் வந்திடிச்சு ஜம்மு. ஆண்களாஇ நம்பிவரும் பொண்ணுகளுக்கும் அன்பு இருக்கு என்று நினைச்சால் எவ்வளாவு இனிமை தெரியுமா? எனவே தாயின் அன்பை விட ஏனைய அனைத்தும் சின்ன புள்ளியானாலும் தாரத்தின் அன்புக்கும் குறைவில்லை என்றே சொல்லலாமே :rolleyes:

தாயின் அன்புக்கு நிகரேது. வரவேற்கிறேன். ஆனால் தாயின் பின் தாரம். ஆனால் நீங்கள் எல்லாமே சின்ன புள்ளி என்பதால் கொஞ்சம் கோவம் வந்திடிச்சு ஜம்மு. ஆண்களாஇ நம்பிவரும் பொண்ணுகளுக்கும் அன்பு இருக்கு என்று நினைச்சால் எவ்வளாவு இனிமை தெரியுமா? எனவே தாயின் அன்பை விட ஏனைய அனைத்தும் சின்ன புள்ளியானாலும் தாரத்தின் அன்புக்கும் குறைவில்லை என்றே சொல்லலாமே :rolleyes:

தாயின் பின் தாரமாக இருக்கலாம் :unsure: அக்கா ஆனா தாய் தந்த அன்பை தாரத்தால் தரமுடியாது அதே போல் தாரமும் தாயிடம் பெற்ற அன்பை எம்மிடம் பெறுவது கடினம் தான் அக்கா :rolleyes: !!இது தான் ஜதார்த்தம் அக்கா அதை தான் நானும் கூறினேன் :rolleyes: !!நிச்சயமாக என்னை நம்பி வரும் பெண்ணிற்கு அன்பு இல்லை என்று சொல்லவில்லை அவாவிற்கு அவாவின் தாய் கொடுத்த அன்பை என்னால் கொடுக்கமுடியாது :( !!இல்லை அக்கா ஒரு பெரிய வட்டத்தில் ஒரு புள்ளி வந்தா அந்த புள்ளி பெரிதா ஆகிடுமா அதை போல் தான் தாய் அன்பு!! :)

அப்ப நான் வரட்டா!!

இரத்த - உறவுகள் மீதான ஒருவரது பாசம், ஈடுபாடு உண்மையில் அன்பல்ல. குறிப்பாக, ஒருவர் தனது குழந்தைகளின் மீது கொள்ளும் பாசம் அன்பல்ல. ஏனெனில் ஒருவரது குழந்தைகள் என்பவை உண்மையிலேயே ஒருவருடையவையே. அதாவது ஒருவரது பகுதியே அல்லது நீட்சியே. குட்டி என்பது தாயின் நீட்சியே. ஆகவே இவ்விடத்தில் தோன்றுவது உடமைபூர்வமான பாசம் தானே தவிர அன்பல்ல. இதை நாம் சுய-அன்பு (நங்ப்ச்-கர்ஸ்ங்) என்றழைக்கலாம். சுய-அன்பு என்பது அன்பல்ல.

:wub::lol::lol:

ஆ... அப்பிடியா... அப்ப நான் எண்ட மொம்மி டாடியில வச்சு இருக்கிறது உண்மையான அன்பு இல்லையா? அது வம்பா?

ஐயோ குழப்புறீங்கள். இதுக்கு மேல ஆராய்ச்சி செய்தால் எனக்கு ஏற்கனவே லூசாகி இருக்கும் நட்டு கழன்று விழுந்துவிடும். பிறகு எண்ட பாட்டில எந்த நேரமும் நான் சிரிச்சுக்கொண்டு இருக்க வேண்டியதுதான். :) :) :lol:

  • தொடங்கியவர்

அன்பின் அடிக்குறிப்பு.......4

நம்பிக்கையின் இன்னொரு பரிமாணம் அன்பு.

இதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

அன்பில் அளவு கிடையாது.

அது ஒரு வகைப் பண்பு.

இத்தனை கிலோ அன்பு வத்திருக்கிறேன் என்றோ, இத்தனை மீற்றர்..நீளமான அன்பு வைத்திருக்கிறேன் என்றோ எவரும் சொல்வதில்லை.

சொல்லவும் முடியாது.

அன்பை அளக்க முடியுமா என்ன?

இந்த >அளவு< என்பதுதான் எல்லாவற்றையும் குளப்புகிறது.

அன்பு அளவுகளுக்குள் கட்டுப்படுவதில்லை.

அதில் கூட, குறைய என்றெல்லாம் இல்லை.

அன்பின் அற்புதமான உயர்ந்த நறுமணமே..நம்பிக்கை.

எமது உள் அனுபத்தாலும், பரவசத்தாலும், சமாதானத்தாலும்,

அமைதியாலும் இயற்கையை நோக்கி எம்மால் சிறகு விரிக்கமுடியும்.

மக்களை நோக்கியும், நம்பிக்கை நோக்கியும் சிறகுவிரிக்க விரிக்கமுடியும்.

அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்ததல்ல. இடைவெளிகள் குறுகுகிற ஒரு நாளில் தானாக வந்து சேர்வது அது.

பாலைவனத்தில் அப்படித்தான். எத்தனையோ மைல்கள் தூரம் ஒட்டகக்கூட்டம் நடந்து நடந்து, பின் சட்டென ஒரு நாளில் தன் குறிப்பிட்ட இடத்தை சேர்ந்துவிடும். எவ்வளவோ சிரமத்தின் மத்தியில் நம்பிக்கை தளர்வதில்ல அவை.

இது போலவே நம்பிக்கையின் பரிமாணமாகிய அன்பும்..தளர்வதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அன்பிற்கு பலரும் பலவிதமான விளக்கங்களை வழங்கியுள்ளீர்கள்.

சிலர் சிலர்மீது அன்பிருந்தும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் வெளிக்காட்டாமல் இருப்பவர்களும் உண்டு.

அன்பு, பாசமில்லாது இருப்பதுபோல் நடிப்பவர்கள் பலரும் உண்டு.

நல்ல ஆரோக்கியமான ஆக்கத்தை பதிவு செய்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள்!

  • தொடங்கியவர்

அன்பின் அடிக்குறிப்பு..5

..சொற்கள் எனக்கு மேலும் மேலும் சிரமமாக இருக்கின்றன. மிகவும் சிரமப்பட்டே பேசவேண்டியிருக்கிறது.

அன்பிற்கும் சொற்களுக்கும் இடையே தொடர்பிருக்கிறதா?

எனக்கு ஏதோவொன்றைப் பகிர வேண்டியிருப்பதால், நான் சொற்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

நான் உன்னுடன் பகிர முனைந்தது அன்பு தான்.

அதற்கான ஒரு மீடியாதான் இந்த சொல் விளையாட்டு.

சில வேளைகளில் நான் மெளனமாகிவிடக்கூடும்.

நீ தயாராக இரு.

நான் சொற்களை நிறுத்திவிடக்கூடும்.

பேச்சை..மொழியையே நான் நிறுத்திவிடக்கூடும்.

என்னை என் அன்பை வார்த்தைகளால் புரிந்துகொண்டவர்க்காக இதை சொல்கிறேன்.

அன்பின் மீடியா என்ன என்பது பலருக்கும் புரிவதில்லை.

நான் சொல்வதைக் கவனமாகக் கேள்.

இந்த உலகில் அன்புப்பாலம் எப்படியோ எல்லாவற்றுடனும் பிணைக்கப்பட்டுத்தானிருக்கி

  • தொடங்கியவர்

அன்பின் அடிக்குறிப்பு....6

...உன் எண்ணங்களை அன்பினூடாக நீ பார்க்கும் பொருட்களின் நிலமைக்குக் கொண்டு வந்துவிட்டால்..

மனதில் உன்னை அரித்துக்கொண்டிருக்கும் தீய எண்ணங்கள் உன்னை ஆட்படுத்த முடியாது.(ஞானதீபம்...விவேகானந்

தர்)

அதுதான் மனதிலிருந்து கழற்றிக் கொள்வது என்பது.

மனித இருப்பில் மனம் தான், மிக நுண்ணிய இயந்திரம்.

பரிணாமத்தால் நுண்ணிய அதை மிகச் சிறப்பாகக் கையாளவேண்டும்.

நீ ஒரு எசமானாக வேண்டும். இல்லையேல் அது சாத்தியமில்லை (தம்மபதம்...ஓஷோ. பக்.408)

இங்கே வேடிக்கை என்னவென்றால்....

ஒரு car, அதன் driver ஐ செலுத்திக் கொண்டிருக்கிறது.

வாகனத்தை சாரதி செலுத்துவதுதான் நடைமுறை.

சாரதியை வாகனம் செலுத்தமுடியுமா?

இது ஏன் அப்படி நடக்கிறது?

காரணம்..

அன்பின்மை.

அன்பினால் உன்னால் கட்டுப்படுத்த முடியாத எதுவும்...

உன்னைக் கட்டுப்படுத்தும் என்பதே பேருண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படைப்பு, தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீ

பறவைகளை

நேசிப்பது நிஜமெனில்

அதை சுதந்திரமாகப்

பறக்கவிடு

உன்னில்

அன்பிருந்தால்

அது நிச்சயம்

உன்னிடம்

திரும்பி வரும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.