Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் சொன்னதால் மகளை மணந்த தந்தை வேறெங்கும் அல்ல இந்தியாவில் தான் இந்த கூத்து..........

Featured Replies

இது ஒரு நாகரீகத்திற்கு முரணாண சம்பவம். இந்த சம்வத்தில் சம்மந்தப்பட்டவர்களோ அல்லது சட்டமோ அதை பாரதூரமாக எடுக்கவில்லை , சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஆதாரங்கள் குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதை செய்தியின் கடைசிப் பந்தி காட்டுகின்றது.

ஆனால், போலீஸ் போட்ட வழக்கில், அபசுதீன் மீது பாலியல் வல்லுறவு குற்றச் சாட்டை எழுப்பவில்லை. அதனால், கிரிமினல் குற்றம் எதுவும் இல்லாததால், அவர்களை விடுவித்தார் நீதிபதி.நீதிபதி கூறுகையில், இந்த விஷயத்தில், போலீஸ் திடமான குற்றச்சாட்டுக்களை சொல்லவில்லை. போதிய ஆதாரமும் காட்டவில்லை. மேலும், இது குறித்து பாதிக்கப் பட்ட பெண்ணிடம் இருந்து புகாரும் வரவில்லை. அதனால், வேறு வழியின்றி விடுவிக்க வேண்டியதாகிவிட்டது' என்று கூறினார்.

பாலியல் வல்லுறவு என்று இச்செய்தியில் கூறப்படும் பாலியல் வன்புணர்வு என்பதில் வன்புணர்வில் ஈடுபட்டவர் உளவியல் நோயாளியாக இருந்தால் அவரின் செயற்பாட்டை குற்றம் என கருத முடியாது. அவரின் நோய்க்கு சிகிச்சை அளித்து அவருக்கு மறுவாழ்வு கொடுப்பதே வழமை. இவ்வாறான சம்பவங்களை வாசித்து ஆத்திரப்படுவதோ அல்லது அருவருப்பதோ அல்லது வாசிக்கவே கூடாது என்பதை விடுத்து நிதானமாக அணுகுவதே நல்லதென்பது எனது கருத்து.

முன்பு ஒரு சம்பவம் அறிந்திருக்கின்றேன் அதுவானது ஊனமான தனது தங்கைக்கு பல வருடங்களாக திருமணம் செய்ய முயற்சித்த அண்ணன் அந்த முயற்சியில் தோற்றுப்பபோகின்றான். அதன் நிமர்த்தம் விரக்தி அடைந்து விரக்தி ஒரு வெறியாக மாறி அந்த அண்ணன் தங்கையை திருமணம் செய்தனர். அவர்கள் சூழலில் திருமணம் முக்கியமானது. அதே அண்ணன் தங்கை வேறு ஒரு சூழலில் வாழ்பவர்களாக இருந்திருந்தால் அவை நிகழாமல் போயிருக்கலாம். அவர்களை வெட்டு குத்து என்பதில் என்ன பயன்? தங்கை சுமங்கலியாய் இருக்க வேண்டும் என்பது அவனின் விருப்பமானது. அந்த விருப்பம் அவனுக்கு ஏற்பட சமூக கலாச்சார அழுத்தம் காரணமானது. இவ்வாறு அதன் காரணங்கள் விரிந்து செல்லும்.

இந்த சம்பவத்திற்கு தூண்டுதல் என்ன உண்மைத்தன்மை என்ன சம்மந்தப்பட்டவர்களின் மனநிலை என்ன அவர்களின் பாதிப்புகள் என்ன என்று எமக்கு எதுவும் தெரியாது ஆகவே இதை ஒரு வித்தியாசமான செய்தியாக அணுகவேண்டியது தான். வித்தியாசமான செய்திகளை பகிர்ந்து கொள்வதில் தவறேதும் இல்லை.

இந்த சம்பவத்திற்கு தூண்டுதல் என்ன உண்மைத்தன்மை என்ன சம்மந்தப்பட்டவர்களின் மனநிலை என்ன அவர்களின் பாதிப்புகள் என்ன என்று எமக்கு எதுவும் தெரியாது ஆகவே இதை ஒரு வித்தியாசமான செய்தியாக அணுகவேண்டியது தான். வித்தியாசமான செய்திகளை பகிர்ந்து கொள்வதில் தவறேதும் இல்லை.

சுகனின் இந்தக் கருத்து பொருத்தமானது. இதுபோன்ற செய்திகளை இணைப்பதில் தவறில்லை. ஆனால் இதுபோன்ற செய்திகளை இணைத்துவிட்டு அதனைத் தொடர்ந்து அபத்தமான முறையில் அரட்டையடிப்பது கீழ்தத்தரமான செயலென்றே நினைக்கிறேன். சமூக அக்கறை உள்ளவர்கள் இந்த செய்தியை விவாதத்துக்குரியதாக மாற்றவேண்டும். சமூக உளவியல் தளங்களில் இவற்றை ஆராயவேண்டும். அதைவிடுத்து செய்தியை அரட்டையாக்கி அதில் சுயஇன்பம் காணல் கவலைக்குரியது. சொல்லப்போனால் இது ஒருவகை ஊடக வன்முறை. மேற்கத்தைய ஊடகங்கள் இதனைத்தான் செய்கின்றன. குறிப்பாக அமெரிக்க ஊடகங்கள். இன்னொரு வகையில் இங்கு மற்றவர்கள் சொன்னது போல, இதுபோன்ற செய்திகளை பிரசுரிக்கிற பத்திரிகைகள் தொடர்பிலும் நாம் கவனம்செலுத்தவேண்டும். அவை ஏன் இப்படியான செய்திகளை பிரசுரிக்கின்றன? இவற்றின் நோக்கம் என்ன? இதுபோன்ற 4 சம்பவங்கள் பத்திரிகையில் வந்தால் அதில் ஒன்று எழுதுபவரின் கற்பனையில் தோன்றிய செய்தியாகக்கூட இருக்கலாம். ஆனால் சாதாரண மக்கள் இவற்றை நம்புவார்கள். இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வருவதன் மூலமாக மக்களின் மனதில் உளவியல் ரீதியான மாற்றங்களை நிச்சயமாக அவர்கள் நிகழ்த்துவார்கள். எனவே செய்தியின் உண்மைத்தன்மையும் முக்கியமானது. பத்திரிகைகளின் நோக்கம், பின்னணி போன்றவற்றையும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள

  • கருத்துக்கள உறவுகள்

கலாசாரம்.. பண்பாடு.. நாகரிகம் என்று கருத்துப் பகர்ந்தவர்களை கலாசாரக் காவலர்கள் என்று எள்ளி நகையாடினீர்கள் இப்போ சமூக அக்கறை என்பதனூடு எடுத்திருக்கும் சமூகக் காவலர்கள் தகுதி என்பது எதனை அடிப்படையாகக் கொண்டு எழுகிறது...??!

பேசாப் பொருளை பேசத் துணிந்தோம் என்று பேசாப் பொருளை பேச என்று ஒரு தனிப் பகுதியே திறந்து அங்கு சமூக அக்கறை என்று சொல்லி பேசக் கூடாதது என்றிருந்ததையெல்லாம் பேச முடியும் என்றிருப்பின்.. ஏன் சுண்டல் பிபிசி உள்ளிட்ட செய்தி ஸ்தாபனங்கள் வெளியிட்ட ஒரு செய்தியின் அடிப்படையில் மக்களிடம் கருத்துக் கோர முடியாது. ஏன் அதில் சமூக அக்கறை இல்லை என்று கருதுகிறீர்கள்..??!

உதாரணத்துக்கு கீழே உள்ள இணைப்பில். சகோதரி சினேகிதி சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தின் கீழ் தந்தையால் கற்பமான சிறுமி பற்றி செய்தியை வெளியிட்டிருக்கிறார்.. அதைப்பற்றி பேசாப் பொருளைப் பேசிறம் என்று பேசி சமூக அக்கறை அல்லது விழிப்புணர்வை உண்டு பண்ண எண்ணிய நாம் ஏன் சுண்டலின் செய்தியோடு அதை இணைக்க மறுக்கிறீர்கள்...??!

http://www.yarl.com/forum3/index.php?showt...=28211&st=0

இதுவும் ஒருவகை சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் தான். இனங்காணப்படாத அல்லா சொன்னார் என்று சொந்த மகளையே திருமணம் செய்தது.. அதுவும் சிறுமியை திருமணம் செய்தது அப்பட்டமான சிறுவர் பாலியல் வன்முறைக்குள் அடங்கும் செயல். இதை குறித்த சமூகத்துக்குச் சொல்ல வேண்டிய கடமை.. உலகுக்கு உணர்த்த வேண்டிய கடமை சமூக அக்கறையில்லையா..??! இப்படியான நிகழ்வுகளை சொல்லி இவை தொடரக் கூடாது என்று உணர்த்துவது சமூக அக்கறை இல்லையா..??!

பாலியல் கல்வி என்று ஆணும் பெண்ணும் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் 10 வயதில் சொல்லிக் கொடுத்திட்டு விழிப்புணர்வு புறக்கும் என்று அதைப் புரட்சிகர அணுகுமுறையாப் பாக்கிற நாம் ஏன் இதை மட்டும் சமூக அக்கறையற்ற செய்தியாக இனங்காணுறம்..??!

அண்மைய ஆய்வென்றின் படி பெறப்படும் பாலியல் கல்வியை பரிசோதிக்கப் போயே அதிக சிறுமிகள் கற்பமாகியுள்ளனர். இதை ஏன் பாலியல் கல்வியை புகட்ட முனையேக்க சிந்திக்கேல்ல..அதை உணர்த்திய போதும் ஏன் கருத்தில் எடுக்கேல்ல.. இப்ப இப்படி புலம்புறாங்க...???!

இங்கு எல்லாம் வளர்த்தவர்கள் தானே இருக்கிறீங்க. அப்படியான இடத்தில் இப்படியான சமூக வெளிப்படை நிகழ்வுகளைச் சொல்லி அவை சமூகத்தவறுகளாக இனங்காட்டப்படுவது சமூக அக்கறையில்லையா. இதில் குற்றவாளிகள் யார் என்பதைப் பற்றி பேசுவது தவறா..??! அதில் சமூக அக்கறையில்லையா..??!

இதே வகையில் திருமணமே கூடாது.. பெண் தன் உணர்ச்சிக்கு வடிகாலாக சுதந்திர பாலியல் புணர்ச்சி வைக்க பல ஆண்களோடும் கூட்டுச் சேரலாம் என்று கருத்தை யாரோ ஒரு கிழவர் சொன்னார் என்று சொல்லி திணிக்கும் போது எங்கே போனது சமூக அக்கறை என்பது..???!

ஆக சுண்டலின் தலைப்போடாவது சமூக அக்கறை புறந்திச்சே என்பதையிட்டு சுண்டல் பெருமைப்பட வேண்டும்..! பேசாப் பொருளை பேசத் துணிந்த சுண்டலை நாம் புறக்கணிக்க முடியாது. அதற்குள் உள்ள சமூக அக்கறையை நாம் தான் வெளிப்படுத்த வேண்டுமே தவிர சுண்டலை திட்டிறதால எந்த விழிப்புணர்வும் சமூகத்தைச் சென்றடையாது..!

ஆளாளுக்கு வசதியா சமூக அக்கறையைப் பட்டியல் படுத்தாம செய்தி சொல்ல முனையும் சமூக அக்கறையை வெளிப்படுத்த முனையுங்கள்.

***

*** நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் நடக்கும் செய்திகளை ஒட்டியதற்கே இவ்வளவு காரசாரமா????ஐயோ நெடுக்கு சாமி அப்பப்ப இரத்தினச்சுருக்கமாய் இரண்டொரு கருத்துக்களையும் முன் வையுங்கோவன் :D

நிர்வாகத்திற்கும் உறவுகளுக்கும்... தயவு செய்து இந்த மாதிரி குப்பைச்செய்திகளை இங்கே அனுமதிக்காதீர்கள் போடாதீர்கள்...காட்டுவாசிக் கூட்டமாக மாறிக்கொண்டிருக்கும்.. வியாபார நோக்கில்.. விளம்பர நோக்கில் ஏதோ பினாத்திக்கொண்டிருக்கும் சில கேவலமான மனிதர்கள் பற்றி தெரிந்து கொண்டு இந்தச் சேற்றை களத்தில் பூசாதீர்கள் தயவு செய்து.

கவியின் கருத்தே எனதும்..


உங்களின் வீட்டு அசிங்கம் என்று செய்தி வராத வரை எல்லாமே செய்திகள் தான். 

உங்கள் வீட்டு அசிங்கம்

எங்கள் வீட்டு அசிங்கம்

மற்ரவர்களுக்கு செய்திதான்

இந்தச் செய்தியை போடக்கூடாதென்பது அலி செய்ததை மறைமுகமாக நீங்கள் அங்கீகரிக்கின்றீர்கள்

அச்செய்தியை போடுவதும் விமர்சிப்பதும் இப்படியானவர்கள்பற்றி விழிப்பாக இருக்க உதவும்

தற்பொழுது அலியின் மகள் அலி முலம் கெற்பம் பிறக்கப் போவது பெண் முழந்தையெனில் 15 வருடங்களுக்குப்பின் கடவுள் வந்து மீண்டும் அலியின்ர கனவில சொல்லுவார் அப்புறமென்ன தன்முலம் மகளுக்குப்பிறந்த மகளை மணந்த கொள்வார்

இது தொடர் கதை ஆகாதா?

நாளை அயல் வீட்டுக்காரிய கற்பழிக்கச் சொல்லி கடவுள் சொன்னார் எண்டு அலிபோய் கற்பழிப்பார் நீங்கள் பாத்துக்கொண்டிருங்கோ கதைக்காதீங்கோ

மனிதனின் மனதை ஒரு நிலைப்படுத்தி அவனை நல்வழிப்படுத்துவதற்கே, கடவுள் என்ற ஒருவர் இருப்பதாக நம்பப்படுகிறது ,ஆனால் இந்த மனிதன் என்ன என்றால் கடவுளின் பெயரால் இவ்வளவு கேவலமான செயலைச் செய்றான்

இலங்கையில் இப்படியானத நான் கேள்விப்பட்டிருக்கிறன், :icon_idea::D

இப்போவந்து இன்னான்னா றோட்ல நடந்து போறம் போற வழில மாட்டு சானி இருக்கு அது போற வழில இருக்கென்றதுக்காக அதை மிதிச்சிட்டா போறம் இல்ல தானே அதை தான்டி கடந்து இல்லது சற்று விழத்தி போறம் சோ பிடிக்கலனா இந்த ஏரியா பக்கமே வரமா அப்பிடியே ஒடிபோய்டுங்க எங்களுக்கு சொல்லி தராதீங்க என்ன போடுறது போட கூடாதுன்னு..

றோட்டில சாணியிருந்தால் தாண்டிப்போறம் என்பது நியாயம்தான். ஆனால் அதே சாணி வீட்டுக்குள்ள இருந்தால் என்ன செய்யுறம்..தாண்டிப்போறது மட்டுமல்லாது.அள்ளி வெளியில வீசுறம் இல்லையா..? இதே போலத்தான் யாழ்களமும் நமது வீடு போன்றதே.....தேவையில்லாததை தூக்கி வெளியில போட்டால் நல்லதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகள் வெளிவருகின்றபோது மக்களுக்கு விழிப்புனர்வு ஊட்ட யாழ் களத்டதிற்கும் எடுத்துவரப்படும் என்பதனை மிகவும் மகிழ்சியுடன் தெரியபடுத்தும் அதேவேளை இப்படியான செய்திகளை கொண்டுவரவேண்டாம் என்று கருத்து கூறிய உறவுகள் அனைவருக்கும் நன்றியை கூறிககொள்ள விரும்புகின்றேன்;இப்படியான செய்திகளை இன்னும் யாழுக்கு எடுத்து வரவேண்டும் என்று ஒரு ஊக்கத்தை தந்க்கின்றீர்கள்..மற்றது இந்த செய்தியை வைத்தே 2 பக்கத்திற்கு கொண்டுபோக வைத்திருக்கின்றீர்கள்...

மீண்டும் நன்றி நன்றி நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகளையும் அதன் பின்னர் வரும் விமர்சனங்களையும் இரு வகைக்குள் அடக்கலாம்.

1. கிளுகிளுப்பான செய்திகள்.. வாசிப்பவர்கள் செய்தியை அருவருப்பாகப் பார்க்காமல் வீணீர் ஒழுகும் வண்ணம் பந்திபந்தியாக சம்பவத்தை வருணிப்பது.

2. சம்பவத்தை சில வரிகளில் தந்து, அதன் பின்னால் உள்ள மனித அவலத்தையும், உளவியல் பிரச்சினைகளையும் ஆராய்வது..

எந்தவகையான செய்தி இதுவென்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகளையும் அதன் பின்னர் வரும் விமர்சனங்களையும் இரு வகைக்குள் அடக்கலாம்.

1. கிளுகிளுப்பான செய்திகள்.. வாசிப்பவர்கள் செய்தியை அருவருப்பாகப் பார்க்காமல் வீணீர் ஒழுகும் வண்ணம் பந்திபந்தியாக சம்பவத்தை வருணிப்பது.

2. சம்பவத்தை சில வரிகளில் தந்து, அதன் பின்னால் உள்ள மனித அவலத்தையும், உளவியல் பிரச்சினைகளையும் ஆராய்வது..

எந்தவகையான செய்தி இதுவென்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!

வாசகன் ஒருவனின் சுய திறனாய்வுத் தன்மையில் தான் உள்ளது ஒரு எழுத்தை வீணீர் வடிய நோக்கனுமா இல்லை அதையே சமூக நலன் நோக்கில் பார்க்கனுமா என்பது. விசமிகள்... வீணீர் வடியத் தக்கதாக வடியத்தாகததைக் கூடக் காட்ட முடியும்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை

பா. தீனதயாளன்

பதிப்பாளர்: கிழக்கு

பக்கங்கள்: 140

ISBN: 978-81-8368-333-3

கிடைக்குமிடம்: உலகெங்கும்

அவர் கடித்துப் போட்ட ஆப்பிள் ஆயிரக்கணக்கில் ஏலம் போயிற்று. அவர் நடித்துக் கொடுத்த படங்கள் நூறு நாள் இலக்கை அநாயாசமாகத் தாண்டின. தமிழ் சினிமாவில் வந்து போன கவர்ச்சி நடிகைகளுள் நன்று ஆடி ஜெயித்தவர் சிலுக்கு ஸ்மிதா. அவரது வாழ்வி லும் மரணத்திலும் நிறையவே உண்டு மர்ம முடிச்சுகள். ஆராய்ந்து பார்த்தால் வியப்பின் உச்சிக்கே செல்கிறோம்.ஒரு காலகட்டத்தில் சிலுக்கு நடிக்காத படத்தை வாங்கவே மறுத்தார்கள் வினியோகஸ்தர்கள். முன்னணிக் கதாநாயகிகளை விட அவருக்குக் கூடுதல் ரசிகர்கள் இருந்தனர். முழுப் படத்துக்கு ஒரு கதாநாயகி வாங்கிய சம்பளத்தைவிட ஒரே பாடலுக்கு சிலுக்கு பெற்ற சம்பளம் அதிகம்.திரையுலகில் சிலுக்குக்கு நண்பர்களாக இருந்தவர்கள் குறைவு. சிலுக்கு தன் பாதுகாப்புக்குப் போட்டுக்கொண்ட இரும்புத் திரை அது என்பார்கள். ஆனால் நெருங்கியவர்களுக்கு அவர் ஒரு தேவதையாகத்தான் இறுதிவரை இருந்திருக்கிறார்.ஏழைமை; கடும் உழைப்பு; திடீர் வாய்ப்பு; பெரும் புகழ்; பணம்; அந்தஸ்து; ஆகவே காதல்; பின்னர் கசப்பு; மன முறிவு; தற்கொலை&பல நடிகைகளின் வாழ்க்கை இந்தத் திரைக்கதையில் அமைந்திருக்கலாம். ஆனால் சிலுக்கின் மரணம் உலுக்கியது போல இன்னொன்றில்லை. ஏன்?நடிகையாக அல்ல; சிலுக்கை ஒரு பெண்ணாக அணுகி அவரது வாழ்வை ஆராயும் நூல் இது!

http://www.anyindian.com/product_info.php?products_id=26235

இந்தப் புத்தகத்தை படிக்கும் மூன்றாம் தர வாசகர் சிலுக்கு என்ற பெண்ணின் அவலத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார் என்று கொள்ளலாம். யாழில் உள்ளோர் இப்படியானவர்கள் அல்ல என்றே நினைக்கிறேன். எனினும் சமூக விழிப்பூட்டல் என்ற போர்வையில் கிசுகிசுக்களை ஒட்டுவோரும் உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒரு சம்பவம் அறிந்திருக்கின்றேன் அதுவானது ஊனமான தனது தங்கைக்கு பல வருடங்களாக திருமணம் செய்ய முயற்சித்த அண்ணன் அந்த முயற்சியில் தோற்றுப்பபோகின்றான். அதன் நிமர்த்தம் விரக்தி அடைந்து விரக்தி ஒரு வெறியாக மாறி அந்த அண்ணன் தங்கையை திருமணம் செய்தனர். அவர்கள் சூழலில் திருமணம் முக்கியமானது. அதே அண்ணன் தங்கை வேறு ஒரு சூழலில் வாழ்பவர்களாக இருந்திருந்தால் அவை நிகழாமல் போயிருக்கலாம். அவர்களை வெட்டு குத்து என்பதில் என்ன பயன்? தங்கை சுமங்கலியாய் இருக்க வேண்டும் என்பது அவனின் விருப்பமானது. அந்த விருப்பம் அவனுக்கு ஏற்பட சமூக கலாச்சார அழுத்தம் காரணமானது. இவ்வாறு அதன் காரணங்கள் விரிந்து செல்லும்.

இந்த சினிமாத்தனமான கதை என்பது ஒரு நொண்டிச் சாட்டு. தன்னுடைய தங்கையைச் சுமங்கலியாக (***) வைத்துக் கொள்வதற்காகத் திருமணம் செய்தார் என்பது மிகவும் அருவருக்கத் தக்கது. ஒரு சகோதரன் அவளுக்குப் பாதுகாவலாக இருக்க வேண்டுமென்றால், கட்டாயம் திருமணம் செய்து தான் இருக்க வேண்டுமென்ில்லை. சுண்டல் தந்த அசிங்கத்தைப் போன்றதொரு அசிங்கமே உங்களின் கருத்தும்.

உங்கள் வீட்டு அசிங்கம்

எங்கள் வீட்டு அசிங்கம்

மற்ரவர்களுக்கு செய்திதான்

இந்தச் செய்தியை போடக்கூடாதென்பது அலி செய்ததை மறைமுகமாக நீங்கள் அங்கீகரிக்கின்றீர்கள்

அச்செய்தியை போடுவதும் விமர்சிப்பதும் இப்படியானவர்கள்பற்றி விழிப்பாக இருக்க உதவும்

தற்பொழுது அலியின் மகள் அலி முலம் கெற்பம் பிறக்கப் போவது பெண் முழந்தையெனில் 15 வருடங்களுக்குப்பின் கடவுள் வந்து மீண்டும் அலியின்ர கனவில சொல்லுவார் அப்புறமென்ன தன்முலம் மகளுக்குப்பிறந்த மகளை மணந்த கொள்வார்

இது தொடர் கதை ஆகாதா?

நாளை அயல் வீட்டுக்காரிய கற்பழிக்கச் சொல்லி கடவுள் சொன்னார் எண்டு அலிபோய் கற்பழிப்பார் நீங்கள் பாத்துக்கொண்டிருங்கோ கதைக்காதீங்கோ

ஏதோ யாழ்களத்தில் இந்தச் செய்தியைப் போட்டவுடன் நண்பர் vvsivaளோ, அல்லது மற்றவர்களோ போய் உடனே அலியை வெட்டி விட்டு வருவது போலவும், தர்மத்தைக் காப்பாற்றப் புறப்படுவார்கள் என்ற மாதிரியுமல்லவா கதை போகின்றது. அதில் அந்த வீரர்களை நான் தடுத்து நிறுத்துகின்றேனாம். :):)

இங்கே எல்லோரும், சுட்டுப் பொசுக்கவேணும், வெட்டவேணும், குத்தவேணும், என்றோ அல்லது கண்ணீர் வடிப்பது போலவும் காட்டுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்.

இங்கே போட்டால் விழிப்புணர்ச்சி வரும் என்கின்றீர்கள்.

காலம் காலமாகப் பாலியல் வல்லுறவு தொடர்பாக வீணி வடிய, வடிய விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றார்கள். அது நின்ற மாதிரித் தெரியவில்லையே. எமக்குத் தான் அந்தச் செய்திகளைப் படித்துப் படித்து, ஏதோ காலைக்கடன் செய்வது போலச் சனம் செய்யுது என்ற மாதிரி பழகிப் போய்விட்டது.

இப்படியான செய்திகள் வெளிவருகின்றபோது மக்களுக்கு விழிப்புர்வு ஊட்ட யாழ் களத்

திற்கும் எடுத்துவரப்படும் என்பதனை மிகவும் மகிழ்சியுடன் தெரியப்படுத்தும் அதேவேளை இப்படியான செய்திகளை கொண்டுவரவேண்டாம் என்று கருத்து கூறிய உறவுகள் அனைவருக்கும் நன்றியை கூறிகொள்ள விரும்புகின்றேன்;இப்படியான செய்திகளை இன்னும் யாழுக்கு எடுத்து வரவேண்டும் என்று ஒரு ஊக்கத்தை தந்க்கின்றீர்கள்..மற்றது இந்த செய்தியை வைத்தே 2 பக்கத்திற்கு கொண்டுபோக வைத்திருக்கின்றீர்கள்...

சுண்டல்

உங்களுடைய சமுதாயப்பொறுப்பை தாங்கள் திறம்படவே செய்கின்றீர்கள். வாழ்த்துக்கள். எழுத்துப்பிழை விட்டு எழுதுவதை விட அப்பணியே உயர்வாகத் தோன்றுகின்றது

*** அவசியமற்ற கருத்துத் திணிப்பு நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடயா நன்றிகள் தூய்ஸ் தொடர்ந்து என்னை உற்சாக படுத்திகொண்டிருக்கின்றீர்க

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களின் தலைப்பா? :):)

முன்பு தான் ஊரில் வெறும்காணியாக, ஆட்கள் இல்லாமல் கிடந்த காணியாகக் கிடந்ததைப் பிடித்து தங்களுடையது என தட்டிப் பறித்துக் கொள்ளுவார்கள். அந்த மாதிரி யாழ்களத்தில் என்னுடைய தலைப்பு இது. இதில் நான் விரும்புற ஆட்கள் தான் சப்பை கொட்டலாம் என்று நினைத்துவிட்டீர்களா :)

நாங்களும் சும்மா நேரம் கடத்துறதற்கு உதவுகின்றோம். :)

எனி வரும் காலங்களில் பயங்கரக்கொலை, திகில் சம்பவம், அநியாயச் செயல், என்ற சொற்பிரயோகங்களூடாக கிளுகிளுக் கதைகளைத் தருவதூடாக யாழ்களத்தில் நிர்வாகத்தின் கண்களில் இருந்து தப்பிக் கொள்ளுவீர்கள் என்ற ஆலோசனையையும் வழங்குகின்றோம்.

வாழ்க உங்களின் பணி!

வாழ்த்துக்கள்

கள விதிகளுக்கமைய தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன

Edited by இணையவன்


இங்கே போட்டால் விழிப்புணர்ச்சி வரும் என்கின்றீர்கள்

இதற்கு பதில் உங்களுக்கு முன்னரும் சொன்ன அதே வாழப்பழக் கதைதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.