Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓலங்களும் கெஞ்சல்களும் நிறைந்ததே பிரபாகரனின் இந்த மாவீரர் தினச் செய்தி - விமல் வீரவன்ஸா

Featured Replies

புலிகளின் தலைவர் பிரபாகரன் நேற்று முன்தினம் ஆற்றிய உரை வெறும் ஓலங்களும், கெஞ்சல்களும் நிறைந்ததுதான்.

நேற்று நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய வேளை விமல் வீரவன்ஸ இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் :-

புலிப் பயங்கரவாதத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் வெளியிடப்பட்ட 'நம்பிக்கையின்மையின் வெளிப்பாட்டின் மீது' ஒரு சில காரணங்களுக்காகக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

எந்த முறையிலாவது நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தாலும் பிரபாகரனுடைய மாவீரர் தின அறிக்கை, அவரது நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அது வேதனை தரக்கூடிய படுதோல்வியிலிருந்து மீள்வதற்காக, வெளியிலிருந்து உதவிக்காகக் கெஞ்சும் நிர்காகதியான ஒருவரது ஓலமேயல்லாது வேறோன்றுமல்ல.

நம்பிக்கiயின்மையில் வீழ்ந்த அதன் மூலம் பரஸ்பர விரோத தேவைகளை ஒரே நேரத்தில் பிரதிநிதிப்படுத்தும் ஒருவரது மனக்குழப்பத்தின் வெளிப்பாடுதான் அவரது இந்த உரை.

பிரபாகரன் தனது 'பிறந்த தின பரிரசாக' மன்னார் பிளையாரடி தமிழப் பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் தலையில் 'மோட்டார்" குண்டுகளைப் போட்டிருப்பதன் மூலம் அவர் வீழ்ந்திருக்கும் மனக்குழப்பம் நன்றாகத் தெரிகிறது.

அதேபோன்று, அநுராதபுர மகவிலச்சிய பிரதேசத்தில் வாழ்ந்த நான்கு அப்பாவிகளை படுகொலை செய்ததன் மூலமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது 53 ஆவது பிறந்த தினம் கொண்டாடிய சந்தர்ப்பத்தில் அவரது மனநிலை நன்றாகத தெரியவருகிறது.

பிராபகரனின் போலி 'மாவீரர் தின' உரை கூட ஓலங்களினாலும், கெஞ்சல்களினாலும் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த ஓலங்களையும், கெஞ்சல்களையும் பிரபாகரன் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான போலி சர்வதேச சமூகத்திடம்மே விடுத்துள்ளார். சரியகக் கூறுவதாயின் தேசத்துரோகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தோடு ஆரம்பித்த தமிழீழப் பிரிவினைவாத பயங்கரவாதத்ததுக்கு இராஜதந்திர அந்தஸ்தை வழங்கும் போலி சமாதானச் செயற்பாட்டின் வசதிகசள் வழங்குவோராக அறிமுகப்படுத்தப்பட்ட புலிகள் சார்பு நோர்வே அரசும், இணைத்தலைமை நாடுகள் என்ற பெயரில் தம்மை அறிமுகப் படுத்திக் கொள்ளும் அமெரிக்காவும், ஜப்பானும், பிரிட்டனும் இந்த சர்வதேச சமூகத்தைச் சர்ர்ந்தவையாககும்.

ஏமாற்றத்தின் விளிம்பில் இருக்கும் பிரபாகரன் தான் பலியாகிக் கொண்டிருக்கும் விதியிலிருந்து மீள்வதற்காக தலையீடு செய்மாறு அந்த நாடுகளிடமிருந்தும் கெஞ்சுகிறார். கிழக்கு திமோரையும், கொஸோவாவையும் பிரித்ததைப் போன்றே தனது கற்பனை இராச்சியமான 'தமிழீழத்' தையும் உருவாககித் தருமாறு அந்த நாடுகளிடம் கேட்கின்றார்.

எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்காக ஏகாதிபத்தியவாதிகளால் அபிப்பிராய வாககெடுப்பின் மூலம கிழக்குத திமோர் இந்தோனேசியாவிலிருந்து பிரிக்கப்பட்டது. அதாவது, அபிப்பிராய வாக்கெடுப்பு என்ற ஆயுதத்தை ஏகாதிபத்தியவாதிகள் அதற்காகப் பயன்படுத்தினர். சேர்பியாவுக்கு சொந்தமான கொஸோவா பிரதேசத்தை பலவந்தமாகப் பிரித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பில் வைத்துக் கொண்டிருப்பது, 'நேட்டோ' என்ற ஏகாதிபத்திய இராணுவப் பலத்தை சேர்பிய அரச இராணுவத்துக்கு எதிராகப் பிரயோகித்ததன் மூலமாகவேயாகும்.

இப்போது ஏமாற்றத்தின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் பிரபாகரன் என்ற 'விடுதலைத் தலைவர்' இன்று ஏகாதிபத்தியபாதிகளிடம் தனக்கும் அந்த அகப்பையாலேயே பங்கிடும் படி பிச்சை கேட்கிறார். தனது மீட்சியாளராக யாரையுமே நம்பமுடியாத நிலையில் பிரபாகரன் இருப்பது இதன் மூலம் தெரிகிறது. தான் நம்பிக்கை வைக்க வேண்டியது தனது சர்வதேச எஜமானர்களிடம் மாத்திரமே என்ற நிலைக்கு பிரபாகரன் தள்ளப்பட்டுள்ளார். 'ஆர்.டூ.பி' அல்லது பாதுகாப்பதற்கான பொறுப்பு என்ற ஆயுதங்களோடு திடீரெனத் தாக்கும் போலி அமைதிகாக்கும் படை நடவடிக்கையின் மூலமாவது, ஏகாதிபத்திய சார்பு படுகுழியில் இலங்கை அரசையும் தள்ளக் கூடிய மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் - அது வடக்கு கிழக்கு மக்களின் விருப்பு வெறுப்புகளை மர்திரம் அறியும் அபிப்பிராய வாக்கெடுப்பாகுமென்பதை மறக்கக்க கூடாது.- மூலமாவது தனது கற்பனை இராஜ்ஜியத்தை நிர்மாணிக்க எண்ணும் நிலைக்கு பிரபாகரன் ஆளாகியுள்ளார்.

ஏமாற்றத்தின் வெளிப்பாட்டின் மூலம் இன்னொரு விடயத்தையும் பிரபாகரன் எம் முன்னால் வைத்துள்ளார். அது இலங்கை அரசு ஒரு தலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை மீறியிருக்கிறது என்பதாகும். அவருக்கேற்ப இலங்கை அரசு ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்தத்தன் மூலம் கொடூரமான யுத்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றது.

2002 பெப்பரவரி 2ம் திகதி ஒப்பமிடப்பட்ட ஒப்பந்தத்துக்கு நாங்களும் இப்போது பொறுப்புக் கூறவேண்டியதில்லை என்பதை புலிப் பயங்கரவாதத் தலைவர் சொல்லாமல் சொல்கிறார். போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படிருக்கிறன்து என்று கூறுவதன் மூலம் தற்போது அவ்வாறான ஒப்பந்தமொன்று இல்லையென்றே கூறுகின்றார்.

ஏமாற்றத்தின் மனோநிலையால் வழி நட்ததப்படும் பிரபாகரன் இதன் மூலம் பெற்றுக் கொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தை இந்த அரசு நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரபாகரன் இவ்வாறு கூறியிப்பதன் மூலம், போர்நிறுத்த கண்காணிப்பாளர்கத் தொடர்ந்தும் இந்த நாட்டில் காலம் கடத்தும் ஸ்கண்டினேவிய நாடுகளின் ஓய்வு பெறும் வயதைக் கடந்தவர்களை இந்த நாட்டில் தங்குவதற்கு சந்தர்ப்பமளிகத்திருப்பது ஏன்? போலி வசதிகள் வழங்குவோரின் பாத்திரத்தை உத்தியோ ரீதியில் ரத்துச் செய்வதற்கு பிரபாகரனால் வழங்கப்பட்டிருக்கும் இந்தச் சந்தாப்பத்தை நாம் பயன்படுதத வேண்டுமல்லாவா? உண்மையிலேயே நோயில் வீழ்ந்திருக்கும் தேசத் துரோகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை உத்தியோக ரீதியிரல் ரத்துச் செய்வது பிரிவனைவாத பஙக்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் இன்றியமையாத தேவையாகும்.

இதுவரை அரசு எடுக்கத் தவறிய முக்கியமான நடவடிக்கையை எடுப்பதற்கு இச் சந்தாப்பத்திலாவது முன்வர வேண்டும். போர்நிறுத்த ஒப்பந்தம் ஒழிக்கபட்டிக்கிறது என்ற அடிப்படையில் தாங்கள் செயற்படுகின்றனர் என வெளிப்படையாகவே பிரபாகரன் கூறியிருக்கும் போது, அதை உத்தியோகபூர்வ ரீதியில ஒழித்துக்கட்டும் பொறுப்பு இலங்கை அரசுக்கு இருக்கிறது. அந்தக் கடமையை அரசு இப்பொது செய்ய வேண்டும்.

குழப்பத்திலும், ஏமாற்றத்திலும் சிக்கி இருண்ட குகைக்குள் காலம் கடத்திக் கொணடிருக்கும் தனது சர்வதேச எஜமானிர்களின் சூரியக்கதிர்கள் வரும் வரை பார்த்திருக்கும் இந்தப் பயங்கரவாதத் தலைவர், தனது கொடு நோயின் அளவைத்தான் இன்று (அதாவது நேற்று) நாரஹன்பிட்டியிலும் காட்டியுள்ளார். மனக்குழப்பத்தினதும் ஏமாற்றத்தினதும் பலியாக ஆகியிருக்கும் பயங்கரவாதத் தலைவரோருவரின் நடத்தையின் மூலம் வேறு எதனை எதிர்பார்க்க வேண்டும்?

பிரபாகரனின் சர்வதேச எஜமானர்களின் நடத்தை தொடர்பாக இப்பொது நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்த முன்னணியின் போராட்டத்தினைச் சரியான முiயில் வழிநடத்தும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஒழிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு பிரபாகரனாலேயே தவறுதலாக திறந்து விடப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த இரண்டும் கெட்டான் நிலையிலிருந்து மீள்வதற்கு நாம் தயாரயிரப்பதை நிரூபிக்கக் கூடிய சந்தாப்பமமொன்று கிடைத்திருக்கிறது. நாம் அதனைதக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றோம். என்றார். அவர்

நன்றி : சுடர் ஒளி

பொல்லுக் கொடுத்து அடிவாங்க இந்த முன்னாள் பயங்கரவாதி விரும்புகிறாரோ? அகலக் கால் பரப்ப விட்டாச்சு. இனி இதையும் செய்தால் ஈழத் தமிழர் நன்றியுடையவராயிருப்போம் வீரவனசா.

அடிரா அடிரா . என்ன நடக்கப் போகுதோ எப்படி நடக்கப்போகுதோ விளக்கமில்லாதவரே. கொஞசம் பொறுத்திருங்கள்

ஒருமையிலான சொற்கள் திருத்தப்பட்டுள்ளன. - இணையவன

Edited by இணையவன்

ஆர்திருந்தினாலும் உவர் திருந்தார்... கட்டாயம் போடத்தான் வேனும்....

ஒருமையிலான சொற்கள் திருத்தப்பட்டுள்ளன. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் மாவீரர் உரையின் விரிவாக்கம் விரைவில் வெளிவரும் அல்லது அதைன் செயல்பாட்டை நாம் உணருவோம்.

அவரின் உரையின் ஒவ்வொரு வரிகளையும் நிதானமாக அவதானித்தோமென்றால் எதிர்காலத்தை நாமே புரிந்துகொள்ளலாம்.

தலைவரின் மாவீரர் உரையின் விரிவாக்கம் விரைவில் வெளிவரும் அல்லது அதைன் செயல்பாட்டை நாம் உணருவோம்.

அவரின் உரையின் ஒவ்வொரு வரிகளையும் நிதானமாக அவதானித்தோமென்றால் எதிர்காலத்தை நாமே புரிந்துகொள்ளலாம்.

பாவம் குரைக்கட்டும். விடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்திருந்தினாலும் உவர் திருந்தார்... கட்டாயம் போடத்தான் வேனும்....

சரியா சொன்னீங்க சுறாவளி. இன்று தொடக்கம் உங்கள் பெயர் சுனாமியா மாறட்டும் :huh::unsure:

மேற்கோள் காட்டப்பட்ட கருத்து திருத்தப்பட்டுள்ளது. - இணையவன

Edited by இணையவன்

நல்ல விசயம் ஒன்றைச்சொல்லியிருக்கின்றார

சிறப்பாக சொல்லி இருக்கிறார் விமல்.... ஜனாதிபதி சர்வதேச நாடுகளுக்கு எல்லாம் பிச்சை பாத்திரத்தோடை போனால் அது இறைமை... எங்களின் தலைவர் நடு நிலைமையாக செயற்படுமாறு மட்டும் வேண்டினால் அது பலவீனம் ஓலமிடுதல்.... அட்டக்காசமையா...!

சிங்களவருக்கு விமல் மாயை ஒண்றை தலைவரின் உரை சம்பந்தமாக ஏற்படுத்த நினைக்கிறார்... அதை விளக்கும் அளவுக்கு வல்லமை வாய்ந்த மாமனிதர் சிவராமின் இளப்பு இப்போ பெரிதாக தெரிகிறது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.