Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிலங்குளம் நுழைவாயில் ஆக்கிரமிப்பு இராணுவம் வசம்

Featured Replies

மன்னார் உயிலங்குளம் நுழைவாயிலை ஆக்கிரமிப்பு இராணுவம் கைப்பற்றியுள்ளதாக இராணுவாப் பேச்சாளன் உதய நாணயக்கார தெரிவித்ததாக தற்போது கொழும்பு ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் ஏழு பங்கர்களையும் அதன் போது அழித்ததாக பேச்சாளர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த வழித்தடம் மடு தேவாலயத்திற்குச் செல்லும் பாதை என்பதும் கூறிப்பிடத்தக்கது.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

17 SLA killed, 54 wounded, two-pronged SL operation thwarted in Mannaar - LTTE

[TamilNet, Saturday, 22 December 2007, 16:33 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) on Saturday thwarted a two-pronged Sri Lanka Army (SLA) movement towards Uyilangku'lam in Mannaar, Tiger officials at Mannaar Operations Command told media in Ki'linochchi. Backed with heavy artillery and Multi-Barrel Rocket Launcher fire, the SLA troops attempted to enter LTTE controlled area on two fronts, but were defeated after 12 hours of stiff resistance in which 17 SLA troopers were killed and 54 wounded. 3 LTTE fighters were killed in action, according to the Tigers.

The SLA operation was launched at 5:40 a.m. and the Tigers said they successfully repulsed the SLA units at 5:20 p.m. after heavy fighting.

Meanwhile, SLA officials in Colombo Saturday noon claimed that they had captured LTTE bunkers. According to the SLA claim only one SLA soldier was killed and six wounded while they put the casualty figure of the Tigers at eight.

  • கருத்துக்கள உறவுகள்

"புலிகள் தங்களது தலைவருக்கு வைத்தியம் தேடிறதில மினெக்கட வழிநடத்தல் எதுவும் இன்றி முன்னரங்க நிலைகளில் நிக்கிற போராளிகள் பின்வாங்க சிறீலங்கா இராணுவம் வேகமாக வன்னிக்குள்ள முன்னேறப் போகுது போல கிடக்கு."

குறுக்ஸ் சொல்வது இதையா?.

நான் இன்று தான் இது பற்றி வாசித்தேன்.

Tamil Tiger leader 'hurt in raid'

The government has vowed to kill Mr Prabhakaran

The Sri Lankan military has said that Tamil Tiger leader Velupillai Prabhakaran was injured in a strike by the air force last month.

The strike targeted Mr Prabhakaran at the rebel headquarters in northern Kilinochchi district on 26 November, a military statement said.

There has so far been no comment from the rebels on the claim.

Fighting between troops and the rebels, who want autonomy for minority Tamils in the north and east, has worsened.

Observers say the two sides are gearing up for major confrontation in the north.

A military statement said that the four aircraft had carried out a "successful air strike" on a bunker in Jayanthinagar in Kilinochchi.

"Intelligence had confirmed that the bunker complex was frequented by Mr Prabhakaran," the statement said.

Last month, an air force strike killed the rebels' political chief, SP Thamilselvan, who was at a meeting with other leaders at Kilinochchi.

Soon after, the government marked Prabhakaran's 53rd birthday with a vow to kill him.

Defence Secretary Gotabhaya Rajapaksa told the AFP news agency: "We are after him [Prabhakaran]. We are specifically targeting their leadership."

A Norwegian-brokered 2002 ceasefire broke down two years ago, resulting in renewed fighting that has killed more than 5,000 people.

At least 70,000 people have died since the war began in 1983.

மன்னார் உயிலங்குளப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று காலை 10 மணியளவில் உயிலங்குளம் - ஆண்டான்குளப் பகுதிகளில் வலிந்த தாக்குதல்களை நடத்த வந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது படையினர் தரப்பில் 15 பேர்கொல்லப்பட்டதோடு மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

-Pathivu-

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாகத் தமிழ்நெட்டில் வந்த செய்தியின்படி உயிலங்குளம் பகுதியில் இரு முனைகளினூடாக ஊடுருவ முயன்ற படைகள் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 17 படையினர் கொல்லப்பட்டதோடு இன்னும் 53 பேர் படுகாயமடைந்ததாக இருக்கிறது.

மேலும் ராணுவம் தனது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டுள்ளதாகவும் இருக்கிறது.

7 புலிகளின் பங்கர்களைக் கைப்பற்றினோம் என்பதெல்லாம் இலங்கை பாதுகாப்புச் செயலகத்திலிருந்து வந்தவை. வழக்கம்போல இவை என்னவென்று உங்களுக்குத் தெரியும்தானே ??!!!!!!!! :(:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் உயிலங்குளத்தில் மோதல்கள்: 17 படையினர் பலி! 54 படையினர் காயம்

[saturday December 22 2007 04:04:28 PM GMT] [யாழ் வாணன்]

மன்னார் உயிலங்குளப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று காலை 10 மணியளவில் உயிலங்குளம் - ஆண்டான்குளப் பகுதிகளில் வலிந்த தாக்குதல்களை நடத்த வந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது படையினர் தரப்பில் 17 பேர்கொல்லப்பட்டதோடு மேலும் 54 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது

http://tamilwin.net/article.php?artiId=585...;token=dispNews

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sun Dec 23 9:10:00 2007

உயிலங்குளத்தில் நேற்று 12 மணி நேரம் பெரும் சமர் இரு தரப்புக்களும் முரண்பட்ட தகவல்

மன்னார், உயிலங்குளம் பகுதியில், நேற்றுச் சனிக்கிழமை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில், ஒரே தொடர்ச்சியாக இடைவெளி இன்றி 12 மணி நேரமாகப் பெரும் சமர் நடைபெற்றது.

நேற்று அதிகாலை 5.40 மணிக்குத் தொடங்கிய இந்தச் சண்டை கடும் சமராக மாறி மாலை 5.20 மணிக்கே ஓய்ந்ததாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டன.

இதேவேளை கடும் சமரின் விளைவு குறித்து இரண்டு தரப்புகளும் முரண்பாடாக வெவ்வேறு தகவல்களை வெளியிட்டுள்ள தாகவும் செய்திச் சேவைகள் குறிப்பிட்டுள்ளன.

நேற்றைய சமரின்போது இராணுவத் தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டதாக வும் 54 பேர் காயமுற்றதாகவும் படையின ரின் முன்னேறும் முயற்சி முறியடிக்கப்பட் டதாகவும் விடுதலைப் புலிகளின் தரப் பில் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் கட்டளைத் தளபதிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களின் பிரகா ரம்

இரண்டு முனைகளிலிருந்து உயிலங் குளம் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன் னேற முயன்ற இராணுவத்தினர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்

அவர்கள் துரத்தி அடிக்கப்பட்டதாகவும் கிளிநொச்சியில் தெரிவிக்கப்பட்டது.

பல்குழல் எறிகணைகள் மற்றும் ஆட் லறித் தாக்குதல்களுடன் படையினர் மேற் கொண்ட முன்னேற்ற முயற்சி முறியடிக் கப்பட்டதாகவும் புலிகள் தரப்பில் மூவர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

http://www.uthayan.com/

  • கருத்துக்கள உறவுகள்
<_< முடிந்தால் இந்தத் தலைப்பை மாற்றிவிடுங்கள். இது இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையல்லவா ? உண்மை வேறொன்ராக இருக்கும்போது நாம் எதற்கு எதிரியின் பிரச்சாரத்தை மீள்பதிப்புச் செய்ய வேண்டும் ?

உயிலங்குளம் முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி- 50 பேர் காயம்

மன்னார் உயிலங்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு தாக்குதல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இம்மோதலில் 15-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

மன்னார் உயிலங்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை முதல் சிறிலங்காப் படையினர் செறிவான பீரங்கி, ஆட்லெறி எறிகணைச் சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான படை முன்நகர்வை மேற்கொண்டனர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.

10 மணிநேரம் நீடித்த இம் முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் பாரிய இழப்புக்கள் மற்றும் சேதங்களுடன் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இம் முறியடிப்புச் சமரில் 15-க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

http://www.puthinam.com/

  • கருத்துக்கள உறவுகள்

உயிலங்குளம் பகுதியில் இருதரப்பும் கடும் மோதல்

[23 - December - 2007]

* புலிகளின் சோதனைச்சாவடியை கைப்பற்றியதாக படையினர் தெரிவிப்பு

மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் உயிலங்குளம் பாதையிலுள்ள புலிகளின் சோதனை நிலையத்தைக் கைப்பற்றும் நோக்கில் நேற்று சனிக்கிழமை காலை படையினர் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளனர்.

எனினும், சுமார் 12மணி நேரம் நடைபெற்ற இந்த இரு முனைப் படை நகர்வைத் தாங்கள் முறியடித்துள்ளதாக வும் இதில் 17 படையினர் கொல்லப்பட்டதுடன் 54 படையினர் படுகாயமடைந் துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை பத்து மணியளவில் படையினர் பெருமெடுப்பில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

கடும் ஷெல் தாக்குதலையும் பல்குழல் ரொக்கட் தாக்குதலையும் நடத்தியவாறு நூற்றுக்கணக்கான படையினர் இந்தப் பாரிய நகர்வு முயற்சியில் ஈடுபட்டனர்.

விடுதலைப் புலிகளும் கடும் பதில் தாக்குதலை நடத்தவே உக்கிர மோதல் வெடித்தது.

புலிகளும் கடும் ஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் நடத்தியவாறு படையினரின் முன்னேற்ற முயற்சிக்கு எதிராக கடும் பதில் தாக்குதலை நடத்தவே அப்பகுதியில் நீண்ட நேரம் கடும் சமர் நடைபெற்றது.

புலிகளின் பதுங்கு குழிகள் மற்றும் முன்னரங்க காவல் நிலையங்கள் மீது இந்த முன்கூட்டிய தாக்குதலைத் தாங்கள் மேற்கொண்டதாக படையினர் தெரிவித்தனர்.

இந்தச் சமர் குறித்து பாதுகாப்பு அமைச்சு கூறுகையில்;

உயிலங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலையிலிருந்த ஐந்து பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டு அவை கைப்பற்றப்பட்டதுடன் புலிகளின் ஏனைய நிலைகள் மீது முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட படையினர் கடும் ஷெல் தாக்குதல்களை நடத்தி பலத்த சேதங்களை ஏற்படுத்தினர்.

இந்த மோதலின் போது ஆறு புலிகள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தது அவர்களது தகவல் தொடர்பு சாதனங்களை இடைமறித்துக் கேட்ட போது தெரிய வந்தது. படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஆறு படையினர் படுகாயமடைந்தனர்.

கடும் மோதலையடுத்து உயிலங்குளம்- ஆண்டான்குளம் வீதியிலுள்ள புலிகளின் சோதனை நிலையத்தை கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் கூறுகையில்;

உயிலங்குளத்தில் எமது கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி நேற்று அதிகாலை 5.40 மணியளவில் படையினர் இரு முனைகளில் பாரிய படைநகர்வை மேற்கொண்டனர்.

கடுமையான ஷெல் தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதலுடன் இந்த இரு முனைகளில் படையினர் நகர முயன்ற போது புலிகளும் பலத்த எதிர்த் தாக்குதலை மேற்கொண்டனர்.எனினும், சுமார் 12 மணிநேரம் நடைபெற்ற மிக உக்கிர மோதலில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்தச் சமரில் 17 படையினர் கொல்லப்பட்டதுடன் 54 படையினர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சமரில் எமது தரப்பில் மூன்று போராளிகள் உயிரிழந்தனர்.

அதிகாலை 5.40 மணியளவில் ஆரம்பமான இந்தச் சமர் மாலை 5.20 மணியளவில் முடிவுக்கு வந்தது. படையினரின் இந்த இரு முனை முன் நகர்வு முயற்சியும் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், நேற்று பிற்பகல் மூன்று மணி முதல் மன்னார்- மதவாச்சி வீதியில் மன்னார் முதல் பறையனாலங்குளம் சந்தி வரையான வீதிப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தது.

http://www.thinakkural.com/news/2007/12/23...s_page42883.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.