Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான போட்டி ஜனநாயகக் கட்சியில் பராக் ஒபாமா முன்னணியில்

[05 - January - 2008]

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை தெரிவு செய்வதன் பொருட்டு ஐஓவா மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட போட்டியில் ஜனநாயகக் கட்சி சார்பில் செனட்டர் பராக் ஒபாமா வெற்றிபெற்றுள்ளார்.

இத் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா தனது பிரதான அரசியல் போட்டியாளர்களான செனட்டர்கள் ஹிலாரி கிளின்டன் மற்றும் ஜோன் எட்வேட் ஆகியோரை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ள அதேவேளை, குடியரசுத் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹுக்காபே மிற் ரோம்னியை தோற்கடித்துள்ளார்.

இத் மாநிலத்தில் பெரும்பாலான வாக்குகள் எண்ணிமுடிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா 38% மான வாக்குகளையும் ஜோன் எட்வேட் 30% மான வாக்குகளையும் ஹிலாரி கிளின்டன் 29% மான வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அர்கன்சாஸ் மாநில ஆளுநரும் மத போதகருமான ஹுக்காபே 34 வீதமான வாக்குகளையும் முன்னாள் மஸாசுசெற் ஆளுநரான மிற் றொம்னி 26 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஆதரவாளர்களிடையில் தனது வெற்றியைப் பகிர்ந்து கொண்ட ஒபாமா, அச்சத்தையும் பிரிவினையையும் தோற்கடித்து நம்பிக்கையையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமெனத் தெரிவித்துள்ளதுடன் அமெரிக்காவில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏனைய செனட்டர்களான ஹிலாரியும் எட்வேட்டும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் தொடர்ந்து போட்டியிடப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

மறுபுறத்தில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹுக்காபே அமெரிக்க அரசியல் தொடர்ந்தும் மக்களின் கரங்களிலேயே தங்கியுள்ளதென்பதை இப்பெறுபேறுகள் நிரூபித்திருப்பதாக தெரிவித்தார்.

ஹுக்காபேயின் வெற்றி தேர்தல் பிரசாரங்களுக்காக பத்தாயிரம் மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக செலவழித்த றொம்னிக்கு பாரிய அடியென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜனநாயகக் கட்சிக்கு 220,000 இற்கும் அதிகமான ஆதரவாளர்களும் குடியரசுக் கட்சிக்கு 110,000 இற்கும் அதிகமான ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

ஐஓவா மாநிலத்தில் நீண்டகாலமாக முன்னணியில் திகழ்ந்த ஹிலாரிக்கும் எட்வேட்டுக்கும் இத்தோல்வி பாரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஈராக் போரை கையாண்ட விதத்தினால் புஷ்ஷினது செல்வாக்கு பெருமளவில் சரிவடைந்துள்ள நிலையில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றியடைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இருந்தபோதும் பிரசாரக் கூட்டங்களில் ஈராக் விடயம் பெரிதாக ஆதிக்கம் செலுத்தவில்லையெனவும் வாக்காளர்கள் பொருளாதாரம், குடிவரது போன்ற விடயங்களுக்கே அதிகளவான முக்கியத்துவத்தை கொடுப்பதாகவும் நிருபர்க்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சிகள் தமது வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்கு அமெரிக்க மாநிலங்கள் முழுவதும் இவ்வாறான வாக்கெடுப்புக்கள் நடத்தப்படுவது வழக்கமாகும்.

http://www.thinakkural.com/news/2008/1/5/f...s_page43583.htm

அமெரிக்கா தேர்தலில நம்ம ராஜபக்ச மாத்தையா பங்குபற்றி இருந்தா எப்படி இருந்திருக்கு நினைத்து கூட பார்க்க முடியவில்லை........ :D

அப்ப நான் வரட்டா!!

  • 3 weeks later...

கிலாரி கிளிங்டனா தபோது முன்னிலை வகிப்பது???

ம்.. :wub::wub:

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை நடந்திராத மிக இறுக்கமான போட்டி. ஒபாமா 13 மாநிலங்களில் வென்றாலும், கிளிங்டன் அம்மையார் மக்கள் தொகை அதிகமான கலிபோர்ணியா, நியூயோர்க் போன்ற மாநிலங்களில் வென்றிருக்கிறார். இருந்தாலும் ஒபாமா momentum வேலை செய்வதாகவே தெரிகிறது. வரும் மார்ச் மாதம் 4ம் திகதி நடைபெறைருக்கும் டெக்ஸ்ஸஸ் போன்ற மாநிலங்கள் ஒபாமாவிற்கு சார்பாக இருந்தால் nomination கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இனி ஒவ்வொரு delegates இற்கும் இவர்கள் போட்டி போட்டு கவர்ந்தெடுக்க போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹிலாரி, மெக்கைன் முன்னிலை

06.02.2008 / நிருபர் எல்லாளன்

அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் நியூயார்க் முன்னாள் மேயர் ஜான் மெக்கைனும் முன்னிலை பெற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் மற்றும் கருப்பு இனத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா ஆகியோர் போட்டியிட்டனர்.

அதிபர் பதவிக்கு போட்டியிடுவது யார் என்பதை முடிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நகரங்களான நியூயார்க், நியூஜெர்சி, டகோடா, இல்லினாய்ஸ், கனெக்டிகட் உள்ளிட்ட மாகாணங்களில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

சூப்பர் டியூஸ்டே என்று வர்ணிக்கப்பட்ட இந்த வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் நியூயார்க், நியூஜெர்சி மற்றும் மசாஷ?0;ெட்ஸ் மாகாணங்களில் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார்.ஓக்லஹோமா, டென்னசி, அர்க்கன்சாஸ் ஆகிய இடங்களிலும் ஹிலாரி முன்னிலை பெற்றுள்ளார்.

எனினும் வடக்கு டகோடா, டெலாவேர், அலாபாமா ஆகிய இடங்களில் ஒபாமா முன்னிலை பெற்றுள்ளார். இதனிடையே குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நியூயார்க் முன்னாள் மேயர் ஜான் மெக்கைன் முன்னிலை பெற்றுள்ளார்.

நியூயார்க் டெலாவேர், கனெக்டிக்கெட், இல்லினாய்ஸ் மற்றும் நியூஜெர்சியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். நேற்று வாக்கெடுப்பு நடைபெற்ற மாகாணங்களில் இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களது ஆதரவு ஹிலாரிக்கு இருப்பதாக தெரிகிறது.

நேற்று நடைபெற்ற சூப்பர் டியூஸ்டே வாக்கெடுப்பு முடிவுகளின்படி அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் மெக்கைனும் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் வாக்கெடுப்பு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 24 அமெரிக்க மாநிலங்களில் இடம்பெற்றது. இதுவரை வெளியான 21 மாநிலங்களிலான ஜனநாயகக் கட்சியின் வாக்குகளின் பெறுபேறுகளின் பிரகாரம் பாரக் ஒபமா 13 மாநிலங்களிலும் ஹிலாரி கிளின்டன் 8 மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் மேற்படி மாநிலங்களில் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் பெற்றுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கையை கருத்திற் கொள்ளும்போது ஹிலாரி கிளின்டன் 25 பிரதிநிதிகளைப் பெற்று தனது எதிராளியான பாரக் ஒபமாவைவிட முன்னணியில் திகழ்கிறார். ஹிலாரியைவிட அதிக மாநிலங்களில் வெற்றிபெற்ற பாரக் ஒபமா 625 பிரதிநிதிகளை மட்டுமே பெற்றுள்ளார். அதிக அளவான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட முக்கிய மாநிலங்களாக கலிபோர்னியா, நியூயோர்க் மற்றும் இலினொயிஸ் ஆகியன விளங்குகின்றன.

இந் நிலையில் நேற்று முன்தினம் கரோலினாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பெற்ற வெற்றியானது ஹிலாரி கிளின்டனுக்கு மாபெரும் பரிசாக அமைந்தது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையானது கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு களம் அமைத்துத் தரும் முக்கிய நாளாக அமைந்தது. தெரிவு செய்யப்பட வேண்டிய அனைத்து பிரதிநிதிகளில் 42 சதவீதமானவர் இந்த 24 மாநில வாக்கெடுப்பின் மூலமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன் பிரகாரம் ஒக்லஹொமா, அர்கன்ஸாஸ், டென்னனெஸி, நியூயோர்க், மாஸாசுசெட்ஸ், நியூஜெர்ஸி, அரிஸோனா மற்றும் கலிபோர்னியா ஆகிய 8 மாநிலங்களில் ஹிலாரி கிளின்டனும் ஜோர்ஜியா, இலினொயிஸ், டெலாவார், அலபமா, உதாஹ், வட தகோடா, கன்ஸாஸ், கனக்ரிகட், மின்னெஸோரா, கொலராடோ, அடஹோ, அலாஸ்கா, மிஸ்ஸோரி மாநிலங்களில் பாரக் ஒபமாவும் வெற்றிபெற்றுள்ளனர்.

அதே சமயம் அமெரிக்கக் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பில் ஜோன் மக்கெயின் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான நியமனத்தை வெற்றி கொண்டுள்ளார். 21 மாநிலங்களிலான வாக்கெடுப்பின் பிரகாரம் மக்கெயிஸ் 468 பிரதிநிதிகளையும் மிட்ரொம்னி 158 பிரதிநிதிகளையும் மைக் ஹக்காபி 132 பிரதிநிதிகளையும் வென்றெடுத்துள்ளனர். மேலும் இதுவரை நடைபெற்ற அனைத்து வாக்கெடுப்புகளைக் கருத்திற் கொள்ளும்போது மக்கெயின் 570 பிரதிநிதிகளையும் ரொம்னி 251 பிரதிநிதிகளையும் ஹக்காஸ் 175 பிரதிநிதிகளையும் வென்றெடுத்துள்ளன.

sankathi.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருட முடிவில் நடைபெறப்போகும் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெல்ல வாய்ப்பே இல்லை என்றுதான் அமெரிக்க வாழ் தமிழர்கள் கருதுகிறார்கள்.

அமெரிக்கா ஒரு மாற்றத்துக்குத் தயாரில்லை என்பது தெரிகிறது.

வருட முடிவில் நடைபெறப்போகும் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெல்ல வாய்ப்பே இல்லை என்றுதான் அமெரிக்க வாழ் தமிழர்கள் கருதுகிறார்கள்.

அமெரிக்கா ஒரு மாற்றத்துக்குத் தயாரில்லை என்பது தெரிகிறது.

பின் மாறி என்னத்தை செய்யிறது சிங்கிள் டீ க்கு டிங்கி அடிக்கிறதா ???

:icon_mrgreen::lol::wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக கட்சியின் சனிக்கிழமை வாக்கெடுப்பில் 3 மாநிலங்களில் பாரக் ஒபமா வெற்றி வாகை பிரதிநிதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஹிலாரி முன்னிலையில்

2/10/2008 5:37:23 PM

வீரகேசரி நாளேடு - வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரைத் தெரிவு செய்யும் பொருட்டு நேற்று முன்தினம் சனிக்கிழமை நடத்தப்பட்ட ஜனநாயக கட்சியின் வாக்கெடுப்பில், பாரக் ஒபமா 3 மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இலினொயிஸ் மாநில செனட் சபை உறுப்பினரான பாரக் ஒபமா வாஷிங் டன், லூசியானா மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்களில் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அமெரிக்க வேர்ஜின் தீவுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் முன்னணியிலுள்ளார்.

ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் பெறுவது தொடர்பில் பாரக் ஒபமாவுக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கும் கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இதுவரை நடந்த வாக்கெடுப்பின் பிரகாரம், ஜனநாயக கட்சியின் வேட்பாளரான பாரக் ஒபமா 18 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் ஹிலாரி கிளின்டன் 13 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

மாநிலங்கள் அடிப்படையில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஹிலாரி கிளின்டன், வென்றெடுத்த பிரதிநிதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முன்னணி நிலையிலுள்ளார்.

இதன் பிரகாரம் ஹிலாரி கிளின்டன் 13 மாநிலங்களில் 1095 பிரதிநிதிகளையும், பாரக் ஒபமா 18 மாநிலங்களில் 1070 பிரதிநிதிகளையும் பெற்றுள்ளனர்.

வேர்ஜினியாவில் தனது ஆதரவாளர்கள் வீதியில் உரையாற்றிய பாரக் ஒபமா, சனிக்கிழமை தேர்தல் பெறுபேறுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள வேர்ஜினியா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான நமபிக்கையைத் தந்துள்ளதாக கூறினார்.

""நாங்கள் வடக்கிலும் தெற்கிலும் அதற்கு இடைப்பட்ட இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். ஆதலால் எங்களால் இறுதியான வெற்றியை எட்ட முடியும்'' என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குடியரசு கட்சியின் லூசியானா மாநில வாக்கெடுப்பில் மைக் ஹக்காபி ஜோன் மக்கெயினை தோற்கடித்துள்ளார். எனினும் வாஷிங்டனில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜோன் மக்கெயின் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இதுவரை இடம்பெற்ற வாக்கெடுப்புகளின் பிரகாரம் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜோன் மக்கெயின், 12 மாநிலங்களில் 719 பிரதிநிதிகளையும் மைக் ஹக்காபி 7 மாநிலங்களில் 234 பிரதிநிதிகளையும் ரொன் போல் எந்த மாநிலத்திலும் வெற்றி பெறாத போதும் 14 பிரதிநிதிகளையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 3ஆம் இடத்தைப் பெற்றுள்ள ரொன் போலை மேற்படி ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும்படி பல தரப்பிலும் அழுத்தங் கொடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மெயினில் ஜனநாயக் கட்சியின் வாக்கெடுப்பு நடைபெற்றது. தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை மேரிலான்ட் வேர்ஜினியா மற்றும் வாஷிங்டன் டிசியில் ஜனநாயகக் கட்சியினதும் குடியரசு கட்சியினதும் வாக்கெடுப்புகள் நடைபெறவுள்ளன.

மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி டெக்ஸாஸ் மற்றும் ஒஹியோ மாநிலங்களில் வாக்கெடுப்புகள் நடைபெறவுள்ளன.

ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொரு வாக்கெடுப்பின் போதும் பிரசார நடவடிக்கைகளுக்கான நிதியை அதிகரிப்பது தொடர்பில் கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஒபமா தனது பிரசாரத்துக்கான நிதியை 7 மில்லியன் அமெரிக்க டொலராகவும் ஹிலாரி கிளின்டன் 6.4 மில்லியன் அமெரிக்க டொலராகவும் உயர்த்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வேர்ஜினியா, மேரிலான்ட், வாஷிங்டன் டி.சி. மாநிலங்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஒபமா வெற்றி

2/13/2008 6:01:20 PM

வீரகேசரி இணையம் - அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளøரத் தெரிவு செய்யும் பொருட்டு வேர்ஜினியா மேரிலான்ட் மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டம் என்பனவற்றில் இடம்பெற்ற ஜனநாயக கட்சியின் வாக்கெடுப்பில் பாரக் ஒபமா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதே சமயம் மேற்படி மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தில் இடம்பெற்ற குடியரசு கட்சியின் வாக்கெடுப்பில் ஜோன் மக்கெயன் தனது போட்டியாளரான மைக் ஹக்காபியை தோற்கடித்து வெற்றியை தனதாக்கியுள்ளார்.

இந்நிலையில் பாரக் ஒபமா தனது ஜனநாயக கட்சி போட்டியாளரான ஹிலாரி கிளின்டனை வென்றெடுத்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கையில் மட்டுமல்லாது பெற்றுள்ள பிரதிநிதிகளின் அடிப்படையிலும் இரண்டாமிடத்திற்கு தள்ளியுள்ளார். இவ்வாக்கெடுப்புகளின் போது பெறும் பிரதிநிதிகளே ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளரைத் தெரிவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விஸ்கொன்ஸினில் நடைபெறவுள்ள ஜனநாயக கட்சியின் வாக்கெடுப்புக்கான பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஒபமா அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில்உரையாற்றுகையில் தனது தேர்தல் பெறுபேறுகள் குறித்து திருப்தி தெரிவித்தார்.

நாங்கள் மேரிலான்ட் மாநிலத்திலும் வேர்ஜினியா பொதுநலவாயத்திலும் வெற்றி பெற்றுள்ளோம். அதேபோன்று வாஷிங்டன் டிசியிலும் எமது வெற்றியை நிலை நாட்டியுள்ளோம். எமது மாற்றத்திற்கான பயணம் தொடரும் என பாரக் ஒபமா தெரிவித்தார்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஹிலாரியை முந்துகிறார் பராக் ஒபாமா

21.02.2008 / நிருபர் குளக்கோட்டன்

விஸ்கான்சின், ஹவாய் மாகாணங்களில் பராக் ஒபாமா அமோக வெற்றி பெற்று ஹிலாரி கிளிண்டனை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2008 நவம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக இருகட்சிகளிலும் பலர் முட்டி மோதுகின்றனர்.

தற்போதைய அதிபர் புஷ்ஷின் 8 ஆண்டு கால ஆட்சியால் அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்புகள் மிக, மிக குறைவு என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

எனவே ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவர் அதிபர் பதவியில் அமருவது உறுதி என்று உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரியும் (நியூயார்க் செனட்டர்), அமெரிக்க ஆப்பிரிக்கரான பராக் ஒபாமாவும் (இலினாய்ஸ் செனட்டர்) உள்கட்சி தேர்தல் களத்தில் நேருக்குநேர் மோதுகின்றனர்.

பல்வேறு மாகாணங்களில் நடந்த உள்கட்சி வாக்கெடுப்பில் ஹிலாரியும், ஒபாமாவும் சமபலத்துடன் இருந்து வந்தனர். இந்நிலையில் சமீபத்திய தேர்தல்களில் ஹிலாரியை பின்னுக்குத் தள்ளி விட்டு நாலுகால் பாய்ச்சலில் பராக் ஒபாமா முன்னேறி வருகிறார்.

புதன்கிழமை வெளியான விஸ்கான்சின், ஹவாய் மாகாணங்களின் தேர்தல் முடிவுகளும் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. ஹிலாரியின் கோட்டை என்றழைக்கப்பட்ட விஸ்கான்சின் மாகாணத்தில் ஒபாமா அமோக வெற்றி பெற்றுள்ளார். அதுபோல், தனது சொந்த மாகாணமான ஹவாயிலும் அவர் மிக எளிதாக வெற்றிக்கனியை தட்டிப் பறித்துள்ளார்.

இதனால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஹிலாரி மார்ச் 4-ம் தேதி நடைபெறும் ஒஹையோ, டெக்ஸ�ஸ் மாகாணங்களின் தேர்தலை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார்.

வெள்ளை இன மக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த மாகாணங்களில் ஹிலாரிக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டக்காற்று ஒபாமா பக்கம் வீசி வருவதால் அந்த மாகாணங்களிலும் ஒபாமா வெற்றி பெறுவது உறுதி என்று நம்பப்படுகிறது.

ஹிலாரிக்கு தோல்வி ஏன்? இன பாகுபாடு அதிகம் நிறைந்த அமெரிக்காவில் பராக் ஒபாமா அதிபர் வேட்பாளர் தேர்வில் வெற்றி பெறுவது கடினம் என்று முதலில் கூறப்பட்டது. இதனால் முன்னாள் அதிபரின் மனைவி ஹிலாரிக்கு வெற்றிவாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. ஆனால் அமெரிக்க அதிபர் வேட்பாளரை நிர்ணயிப்பதில் மதநம்பிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்நாட்டில் வசிக்கும் பெரும்பான்மை கிறிஸ்தவர்கள், தங்கள் அதிபர் மிகுந்த மதநம்பிக்கை உடையவராகவும், ஒழுக்கமுள்ளவராகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஹிலாரியின் கணவர் கிளிண்டன் அதிபராக இருந்தபோது மோனிகா லெவின்ஸ்கி காதல் விவகாரத்தில் சிக்கி சீரழிந்தார். இதனால் அவரது குடும்பத்தின் மீது அமெரிக்க மக்களுக்கு சிறிது வெறுப்புணர்ச்சி காணப்படுகிறது. மேலும், ஹிலாரிக்கு சுத்தமாக கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஹிலாரி கடவுள் நம்பிக்கை உடையவர் என்று 16 சதவீதம் பேரும், அவருக்கு ஏதோ கொஞ்சம் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று 53 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். முன்னோர்கள் காலத்தில் முஸ்லிம் மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய பராக் ஒபாமா அதிக மதநம்பிக்கை உடையவர் என்பது அவரது வெற்றிக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

அவர் மிகுந்த மதநம்பிக்கை உடையவர் என்று 24 சதவீதம் பேரும், கொஞ்சம் மதநம்பிக்கை உடையவர் என்று 60 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

இது தவிர பராக் ஒபாமா அறிவித்துள்ள பொருளாதார கொள்கைகள் அமெரிக்க மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. எனவே 2009 ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்பது உறுதி என்று அரசியல் நோக்கர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.

குடியரசு கட்சி தேர்தல்: ஆளும் குடியரசு கட்சி சார்பில் நடத்தப்பட்ட உள்கட்சி தேர்தல்களில் ஜான் மெக்கைன் முன்னிலையில் உள்ளார். புதன்கிழமை வெளியிடப்பட்ட விஸ்கான்சின் மாகாண தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.

அவருக்கு அடுத்து 2-வது இடத்தில் மைக் ஹக்கபீயும், 3-வது இடத்தில் ரோன் பௌலும் உள்ளனர்.

ராஸ்முஷன் கருத்துக் கணிப்பு: இதற்கிடையில், ராஸ்முஷன் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெறும் என்று ஆரூடம் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா முழுவதும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில், ஜனநாயக கட்சிக்கு 284 எலெக்டோரல் வாக்குகளும், ஆளும் குடியரசு கட்சிக்கு 216 எலெக்டோரல் வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிபர் பதவியைக் கைப்பற்ற 270 எலெக்டோரல் வாக்குகள் இருந்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

sankathi.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிலாரிக்கு ஆதரவாக பிரசார களத்தில் மகள் செல்ஸியா

[22 - February - 2008]

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான களத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் செனட்டர் ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவாக மகள் செல்ஸியா பிரசாரத்தில் குதித்துள்ளார். ஹிலாரியின் கடும் போட்டியாளரான செனட்டர் பராக் ஒபாமா ஹிலாரிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியவாறு மாநிலங்களுக்கான ஆரம்பக் கட்ட தேர்தல்களில் வெற்றி நடைபோடுகின்றார்.

இதனால் டெக்ஸாஸ் மற்றும் ஒஹியோ மாநிலங்களில் எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றி பெற வேண்டிய அவசியம் ஹிலாரிக்கு எழுந்துள்ளது.

இதன் காரணமாக கிளின்டன் - ஹிலாரி தம்பதிகளின் மகளான செல்ஸியா தாய்க்கு ஆதரவாகப் பிரசார களத்தில் குதித்துள்ளார்.

வெளியுலக தொடர்பை விரும்பாத செல்ஸியா நியூயோர்க்கிலுள்ள நிதி நிறுவனமொன்றில் பணியாற்றி வருகின்றார். ஹிலாரி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த போது செல்ஸியா விலகியே இருந்தார்.

ஆனால் ஒபாமா பெற்றுள்ள தொடர் வெற்றிகளால் கிளின்டன் குடும்பமே கவலைக்கு உள்ளாகியுள்ளது. இந் நிலையிலேயே ஹிலாரிக்கு உதவ செல்ஸியா முன்வந்துள்ளார். நிதி நிறுவனப் பணியை இராஜிநாமாச் செய்து விட்டுத் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளார்.

ஒஹியோ மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகம். இவர்களின் வாக்குகளைப் பெற செல்ஸியாவைக் களத்தில் இறக்கியுள்ளனர்.

ஒஹியோ மாகணத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் ஒபாமாவின் வாக்கு வங்கியாகக் கருதப்படுகிறது. இதை உடைக்கும் நடவடிக்கைகளிலேயே தற்போது செல்ஸியா ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக இம் மாகாணத்தின் கல்லூரியொன்றில் நடைபெற்ற 90 நிமிட நிகழ்ச்சியொன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் கேள்விகளுக்கு செல்ஸியா பதிலளித்துள்ளார்.

http://www.thinakkural.com/news/2008/2/22/...s_page46310.htm

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு தனக்கென்டால் சுளகு படக்கு படக்கு என்டுமாம்...... . :wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.