Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத் தமிழரும் அயலகத் தமிழரும் -பழ. நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத் தமிழரும் அயலகத் தமிழரும்

(பழ. நெடுமாறன்)

தமிழ்நாட்டில் ஆறு கோடிக்குச் சற்று மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் ஏறத்தாழ மூன்று கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள்.

சங்ககாலத்தில் இலங்கை ஈழம் என்றே அழைக்கப்பட்டது. பட்டினப் பாலையில் காவிரிப்பூம்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கிய பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் "ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கநூலான இதில் இலங்கை என்ற பெயர் சுட்டப்படவில்லை. அப்போதிருந்து அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழரின் ஆட்சி அங்கு நிலைநாட்டப்பட்ட போது மேலும் தமிழர்கள் அங்கு குடியேறினார்கள் என்பது வரலாறு ஆகும். சிங்களர் அந்த நாட்டுக்கு வந்தேறிகள் என்பதற்கும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் இன்றைய நிலை என்ன? ஈழத் தமிழர்கள் திட்டமிட்டு இனப் படுகொலைக்கு ஆளாகி வருகின்றனர். நாற்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களில் சுமார் பதினைந்து இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர். சிங்களரின் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழர்களுக்கு உதவ இந்தியா முன்வராமல் அவர்களின் முதுகில் குத்தும் செயலைப் புரிந்து வருகிறது. பிரதமராக இராசீவ் இருந்த போது இந்திய அமைதிப் படையை அங்கு அனுப்பி ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயன்றார். அம்முயற்சி படுதோல்வி அடைந்தது. ஆனாலும் சிங்களப் பேரினவாத அரசுக்குத் தொடர்ந்து ஆயுத உதவிகளை இந்தியா வழங்கி வருவதன் மூலம் ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைக்குத் துணை புரிந்து வருகிறது.

இலங்கையின் தேசிய வருமானத்தில் அறுபது சதவீத வருமானத்தை ஈட்டித் தரும் இரப்பர், தேயிலை தோட்டங்களைத் தங்கள் உழைப்பினால் உருவாக்கியவர்கள் தமிழர்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் இன்றைய நிலை என்ன? 1948ஆம் ஆண்டு இலங்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்மக்களின் குடியுரிமையை நிலைநாட்ட வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்ல பிற்காலத்தில் பெரும் துரோகமும் புரிந்தது. 1964ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் இலங்கைப் பிரதமர் சிரீமாவோ பண்டார நாயகாவும் செய்து கொண்ட உடன்பாட்டின்படி ஐந்தரை இலட்சம் மலையகத் தமிழர்களை ஏற்றுக் கொள்வதற்கு இந்தியா ஒப்புதல் வழங்கியது. எந்தத் தமிழர்கள் ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக உழைத்து உருக்குலைந்து அந்நாட்டுக்கு வளம் தேடித் தந்தார்களோ அந்தத் தமிழர்களைச் சிங்களர்கள் விரட்டி அடித்தபோது எதிர்ப்பில்லாமல் இந்தியா ஏற்றுக்கொண்ட அவலம் நிகழ்ந்தது. அத்துடன் அது நிற்கவில்லை. 1970ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா செய்து கொண்ட உடன்பாட்டின்படி மேலும் 75000 தமிழர்கள் இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டனர்.

இவ்வாறு அநீதியான முறையில் இந்தியாவுக்கு விரட்டியடிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்குத் தோட்டத் தொழில் தவிர வேறு தொழில் தெரியாது. தமிழ்நாட்டுக்கு வந்து அவர்கள் இந்திய அரசு இழப்பீடாக வழங்கிய சிறு தொகையைச் சிறிது காலத்திலேயே செலவழித்து விட்டு பிச்சை எடுக்கும் பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

1982ஆம் ஆண்டில் இந்திய அரசின் இந்தத் தவறான கொள்கையின் விளைவாக வாழ்விழந்த மலையகத் தமிழர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் அவர்களை அந்தமான் நிகோபார் தீவுகளில் குடியேற்றி குடும்பத்திற்கு பத்து ஏக்கர் நிலமும் விவசாயம் செய்வதற்கு நிதி உதவியும் வீடு கட்டிக் கொள்வதற்கு உதவியும் அளிக்க வேணடுமென்று அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் தில்லி சென்ற அனைத்துக் கட்சி தூதுக் குழு வலியுறுத்தியது. ஆனால் இந்தக் கோரிக்கை இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை.

மியான்மர்

பர்மா என முன்பு அழைக்கப்பட்ட மியான்மர் நாட்டுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கப்பல் கப்பலாகத் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்குள்ள ஐராவதி சமவெளிப் பகுதி சதுப்புநிலக் காடாகத் திகழ்ந்தது. அதை வெட்டிச் சீர்திருத்தி நன்செய் நிலமாக மாற்றுவதற்கு மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மலேரியா போன்ற கொடிய நோய்கள், சதுப்பு நிலக் கானகத்தில் வாழ்ந்த விலங்குகள், பாம்புகள் போன்றவற்றிற்கு இரையாகி ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் மாண்டனர். அவர்களின் உடல்களைப் புதைத்துத்தான் அப்பகுதி நல்ல நிலமாக மாற்றப்பட்டது. இன்று உலகிலேயே அதிகமான நெல் விளையும் பூமியாக ஐராவதி சமவெளிப் பகுதி விளங்குகிறது. ஆனால் இந்தத் தமிழர்களின் நிலை என்ன? இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு இத்தமிழர்களின் வழி வந்த மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு விரட்டப்பட்டனர். வேறு வழியே இல்லாமல் எஞ்சி வாழும் தமிழர்கள் இரண்டாம் தர மக்களாக தமிழ் மொழி, கலை, இசை போன்றவற்றை இழந்தவர்களாக அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மலேசியா

பண்டைத் தமிழர்கள் மலேசிய நாட்டை கடாரம் என்றும் காழகம் என்றும் அழைத்தனர். அந்நாட்டுடன் இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் தொடர்பு இருந்து வந்திருக்கிறது. பட்டினப்பாலை இந்நாட்டினைக் காழகம் என்ற பெயரால் சுட்டுகிறது.

மலாயா மொழியில் தமிழ் சொற்கள் பல கலந்துள்ளன. மலாய் என்னும் சொல்லே தமிழ் சொல்லாகும். இங்கு முதன்முதலாக குடியேறியவர்கள் தமிழகத்தின் கிழக்குமலைத் தொடரைச் சேர்ந்த பகுதிகளிலிருந்து வந்த தமிழர்கள். மலைப் பகுதியிலிருந்து வந்ததால் இவர்கள் கடாரத்தில் நிறுவிய இராச்சியங்களுக்கு மலை என்னும் பொருள்படும் மலேயா என்ற பெயரைச் சூட்டினார்கள். இந்நாட்டுடன் தமிழர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து ஏராளமான இலக்கியச் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. கி.பி.12ஆம் நூற்றாண்டில் இராசேந்திர சோழன் இந்நாட்டில் கைப்பற்றிய பகுதிகளைப் பற்றி அவனுடைய மெய்க்கீர்த்தி விரிவாகக் கூறுகிறது. அவனுடைய ஆட்சிக் காலத்தில் தான் கைப்பற்றிய நாடுகளில் தனது தளபதிகளை அரசர்களாக முடிசூட்டி ஆளவைத்தான். அவ்வாறு ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன் நீல உத்தமச் சோழன் ஆவான். இவனே சிங்கபுரத்தை (சிங்கப்பூர்) நிறுவியவன் என வரலாறு கூறுகிறது. கி.பி.1400 முதல் கி.பி. 1511 ஆம் ஆண்டு வரை மலாக்காவில் நடைபெற்ற மன்னராட்சி சோழர் வழி வந்தவர்களால் நடந்த ஆட்சி. இந்த ஆட்சியை நிறுவியவர் பரமேசுவர சோழன் ஆவான். பரமேசுவரனுக்குப் பின்னால் ஆண்ட அவனது சந்ததியினர் இசுலாமிய மதத்தைத் தழுவி உள்ளூர் பெண்களை மணந்தனர். எனவே இவர்கள் மலாக்கா சுல்தான்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் ஆட்சி தமிழில்தான் நடந்தது. கணக்குகளும் அரச கருமங்களும் தமிழில் எழுதப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

பிற்காலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மலேசியாவில் தோட்டத் தொழிலுக்கும் சுரங்கத் தொழிலுக்கும் ஏராளமான தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டு குடியேற்றப்பட்டனர். வணிகம் செய்யவும் பல தமிழர்கள் அங்கு சென்றனர்.

இரண்டாம் உலகப் போரின் போது நேதாசி சுபாசு சந்திர போசு அவர்கள் சிங்கப்பூரில் இந்திய தேசிய இராணுவத்தை நிறுவிய போது அதில் ஏராளமான மலேயத் தமிழர்கள் சேர்ந்தனர். சேர்ந்து தியாகம் புரிய முன் வந்தனர். அவர் நிறுவிய சுதந்திர அரசிலும் பல தமிழர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றிருந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் பிரிட்டிசு ஆட்சி ஏற்பட்ட போது மலேசியாவில் உள்ள தமிழர்கள், மலேயர்கள், மலேசியர்கள், சீனர்கள் ஆகிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி மாபெரும் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியவன் மலேயா கணபதி என்னும் தமிழன். அவன் நேதாசியின் இந்திய தேசிய இராணுவத்தில் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி அவரது அன்பைப் பெற்றவன். அவன் தலைமையில் இன வேறுபாடுகளுக்கு அப்பால் தொழிலாளிகள் ஒன்றுபட்டுப் போராடுவதைக் கண்ட வெள்ளை முதலாளிகள் பதட்டம் அடைந்தனர். பிரிட்டிசு அரசிடம் முறையிட்டனர். அதன் விளைவாக பொய் வழக்கு ஒன்றில் மலேயா கணபதி கைது செய்யப்பட்டு அவனுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவனுக்காகத் தமிழ்நாட்டில் பெரியார் இராமசாமி, அறிஞர் அண்ணா, கம்யூனிஸ்டு தலைவர் ஜீவா போன்றவர்கள் குரல் கொடுத்தார்கள். ஒட்டுமொத்த தமிழகம் அன்று ஒன்றுபட்டு குரல் கொடுத்திருக்குமானால் மலேயா கணபதியைத் தூக்கில் போடும் துணிவு வெள்ளை அரசுக்கு வந்திருக்காது. தனது கடமையைச் செய்யத் தாய்த் தமிழகம் தவறிவிட்டது. இதன் விளைவாக மலேய கணபதி தூக்கில் தொங்கினான். அவன் உருவாக்கிய தொழிற்சங்கம் சிதைக்கப்பட்டது.

இன்று என்ன நிலைமை? சீனர்கள், மலேயர்கள், தமிழர்கள் ஆகிய மூன்று இனத்தவர்களுக்கிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிசு அரசு கையாண்டு பிரித்தது. அவர்களுக்குள் மோதல்களை உருவாக்கியது. அது இன்றைக்கு வளர்ந்து முற்றி வெடித்துள்ளது. தமிழர்களின் வழி வந்தவர்கள் தாங்கள் என்பதை மறந்து போன மலேசியர்கள் தமிழர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். யாருடைய உழைப்பினால் மலேசியா இன்று வளம் கொழிக்கும் நாடாக மாறியதோ அந்தத் தமிழர்களை விரட்டியடிக்க அந்நாடு திட்டமிடுகிறது. அண்மையில் மலேசியாவில் நடந்த தமிழர்களுக்கு எதிரான அரசு அடக்குமுறைகள் இதற்கு சீரிய சான்றாகும்.

ஆனாலும் மலேசியத் தமிழர்களுக்கு நேர்ந்துள்ள இந்த அபாயத்தினைக் கண்டு கொதித்து எழவேண்டிய தமிழகம் உறங்கிக் கிடக்கிறது. எனவே இந்திய அரசு இப்பிரச்சினையில் செலுத்த வேண்டிய அளவுக்குக் கவனம் செலுத்தவில்லை. இலங்கையில் மலையகத் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டது போல மலேசியாவிலிருந்தும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்படும் நிலை உருவாகலாம்.

தென்ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்காவில் சுமார் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்நாட்டில் கரும்புத் தோட்டங்கள் அமைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் வழி வந்தவர்களே இன்றைய தென் ஆப்ரிக்க நாட்டுத் தமிழர்கள் ஆவார்கள். பத்து ஆண்டுகளுக்குக் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்த பிறகு அவர்கள் நாடு திரும்ப விரும்பினால் இலவசமாகக் கப்பல் பயணச் சீட்டு அளிக்கப்படும் என வெள்ளை முதலாளிகள் வாக்குறுதி கொடுத்திருந்தனர். பத்து ஆண்டுகளுக்கு இடையில் அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப முடியாது. எவ்வளவோ துன்பங்களைத் தாங்கிக் கொண்டு பத்து ஆண்டு காலம் பாடுபட்டு கரும்புத் தோட்டங்கள் மூலம் வெள்ளை முதலாளிகள் செல்வச் செழிப்பில் உயர வழி வகுத்தவர்கள் தமிழர்கள். ஆனால் பத்து ஆண்டு காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க ஊர் திரும்ப கப்பல் பயணச் சீட்டுகள் அளிக்கப்படவில்லை.விரல்விட்ட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு மிக்க நன்றி கந்தப்பு! பழ. நெடுமாறனின் கட்டுரை மிக அருமை!! கட்டுரையில் தென் ஆப்பிரிக்காவில் தமிழர்கள் வளமாக வாழ்கிறார்கள் என்ற போது மகிழ்ந்தேன்.ஆனால் அவர்கள் தமிழை மறந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.உலகில் உள்ள அனைத்து நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் தமிழ் கற்றுக்கொடுக்க தாய் தமிழகம் உதவி செய்ய வேண்டும்.அதற்கு தமிழகத்தில் தமிழ் உணர் உள்ள மிக அருமையான ஒரு தலைவர் ஆட்சிக்கு வர வேண்டும்!!!குறிப்பாக இன்றைய தேதிக்கு ஒரு தமிழ் வெறியரே ஆட்சிக்கு வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசு வெளிநாட்டில் வாழும் தமிழர்களுடனான தொடர்பை மேம்படுத்த ஒரு தனி அமைச்சை உருவாக்கிச் செயல்பட்டால் அதனால் வரும் பயன்கள் மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசு வெளிநாட்டில் வாழும் தமிழர்களுடனான தொடர்பை மேம்படுத்த ஒரு தனி அமைச்சை உருவாக்கிச் செயல்பட்டால் அதனால் வரும் பயன்கள் மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

உது நடைமுறையில் நடக்க கூடிய விசயமோ தமிழக அரசு என்ற பதமே பிழை அது வெளிநாட்டில் ஏதாவது செய்ய வேண்டுமெனில் மத்திய அரசின் காலில் விழவேண்டும் என்பது கூட தங்களிற்கு தெரியாதா. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.