Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்கில ஆண்டின் 18 ஆம் நாள்.

Featured Replies

இந்த திகதி என்னால் தெரிவுசெய்யப்பட்டது. அதில் ஒரு விசேடமும் இல்லை. எதாவது நடந்தாலும் அதற்கும் எனக்கும் தொடர்பும் இல்லை.

யாழ் கருத்துக்களத்தால் தமிழருக்கு ஏதாவது நன்மை ஏற்படுகிறாதா என்று கலைஞன் நேரம் இருந்தால் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால் நல்லது. எனது பதில் இல்லை.

காரணம் என்ன?

எமது கருத்துக்களால் இங்கு மேலும் பிரிந்தே போகின்றோம். தனிப்பட்ட விரோதம் கொள்கின்றோம். கருத்துக்களை கருத்துகளாக பார்காததும் கருத்துக்களை தனிப்பட்ட தாக்குதல்களாக வைப்பதும் காரணமாக இருக்கக் கூடும்.

ஆரோக்கியமான விவாதம் இங்கு பல காலம் நடைபெறவில்லை.

காரணம் என்ன?

நான் இந்து

நான் பெரியார் மதம்

நான் ஆரியம் கலக்காத இந்து

நூறு சாதி

இலங்கையில் இப்ப சாதி அழியுது அதை வளக்கிறதுக்கு இங்க கருத்துக்களம் நடக்குது.

நாங்கள் பிரியுறதுக்கு கன விடயம் இருக்கு

இணையுறதுக்கு இருக்கும் ஓரே விடயம்

தமிழ்

இணைவோம்.

ஜமுனா தூயவன் நாரதர் புத்தன் சுண்டல் குறுக்கால நெடுக்கால வெண்நிலா தூயா கு.மா ஆதிவாசி கலைஞன் தயா வினித் வானவில் சபேசன் பரணி குட்டித்தம்பி தூயா ரசிகை ஈழவன் சினேகி நுனாவிலான் தமிழ்தங்கை வல்வை சாத்திரி டக்ளஸ் மற்றும் நண்பர்களே

இது வாதாடும் காலமல்ல போராடும் காலம்.

நண்பர்களே இப்படி வெட்டிவேலை செய்யும் நேரத்துக்கு வேலைக்கு போய் அதில் வரும் சிறுதொகையாவது போராட்டத்துக்கு கொடுத்து எம்மை முழுமைப்படுத்துவோம்.

Edited by வாசகன்

  • கருத்துக்கள உறவுகள்

இது வாதாடும் காலமல்ல போராடும் காலம்.

உறவே உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனாலும் இந்த பாழா போன மனசு சொல்லு கேட்குதில்லை.ஊரில மதவடியிலையும்,கோயில் மண்டபத்திலையும் வெட்டி பேச்சு பேசின பழக்கம் புலத்தில வந்தவுடனே கணணிக்கு முன்னால இருந்து,கையில ஒரு உற்சாக பானத்தோட வெட்டி பேச்சு பேச சொல்லுது.போராடும் காலம் (வயசில) நான் வாதாடின கோஷ்டி நேரம் காலம் வரும் போது கையை காலை பிடித்து புலதிற்கு ஓடி வந்தனான்,இங்கே வந்து கொஞ்சம் வசதி வாய்புகளுடன் இருக்கும் போது போராட மனம் சொல்லுமோ வாதாட தான் மனம் சொல்லும் என்ன நான் சொல்லுறது சரியோ. :rolleyes:

இன்னுமொரு விசயம் நான் இங்கே அரச மானியத்தில வாழுறேன் ஒருத்தருக்கும் சொல்லிபோடாதையுங்கோ இந்த இலட்சணத்தில நான் என்னவென்று தேசியத்திற்கு காசு கொடுக்கிறது அது போக இப்ப காசு கொடுக்கிறான் என்று சொன்னா பொலிஸ் பிடிக்குதாம் என்று சொல்லீனம் உண்மையே. :rolleyes:

18 திகதிக்கு பிறகு பார்போம் அதுவரை காத்திருப்போம்

வாசகன் வணக்கம்,

யாழ் களத்தால தமிழருக்கு நன்மை இல்லை எண்டு யார் சொன்னது?

நீங்கள் தாயகத்த மட்டும் போகஸ் பண்ணுறீங்கள். வெளிநாட்டில வாழுற தமிழ் ஆக்கள் பற்றி ஒண்டும் அக்கறைப்பட வேண்டாமா? வெளிநாட்டில இருக்கிற தமிழ் ஆக்கள் மனுசர் இல்லையா? அவேக்கு வாய், வயிறு, வாழ்க்கை இல்லையா?

தாயகம் எமது வாழ்க்கையின் ஒரு பகுதியே. தாயகமே வாழ்க்கை இல்லை. தாயகம்தான் வாழ்க்கை எண்டு வாய்ப்பேச்சுக்கு கூறலாம். ஆனா நடைமுறைக்கு சரிவராது. அப்படி தாயகம்தான் வாழ்க்கை எண்டு வெளிநாட்டில யாராவது வாழுறீனம் எண்டு நான் நினைக்க இல்லை.

வெளிநாட்டில இருக்கிற தமிழ் ஆக்களிக்கே மனம் சரியில்லை, உடல்நலம் சரியில்லை, வீடுகளில பிரச்சனை, மனத்தாபங்கள், பிடுங்குப்பாடுகள். பல்வேறு உளவியல் உபாதைகளில் தவித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இப்படியான நிலையில் உள்ளவர்களிற்கு யாழ்களம் ஒரு வைத்தியசாலையாக இருக்கிது எண்டு நான் நினைக்கிறன்.

வெளிநாட்டில வாழுற தமிழ் ஆக்களிண்ட வீடுகளில எத்தன, எத்தன பிரச்சனைகள்! விவாகரத்து, வெட்டு கொத்து, போலிஸ், வழக்கு, சிறை எண்டு ஒரே இழுபறியா இருக்கிது. தாயகத்தில் நடைபெறுவது தமிழரின் உடலில் ஏற்பட்டுள்ள வெளிகாயம் எண்டு வைத்தால், இங்கு நடைபெறுவது தமிழர் உடலில் ஏற்பட்டுள்ள உட்காயம். வெளிகாயம் எப்படி உயிர் ஆபத்தை விளைவிக்குமோ அதுமாதிரியே உட்காயமும் ஆபத்தானது.

தாயகத்தை மாத்திரம் ஒருமைப்படுத்தி யாழ்களத்தை மாற்றி அமைப்பது யாழில் வெற்றியை கொண்டுவரும் எண்டு நான் நினைக்க இல்லை. தாயகம் பற்றிய பார்வை ஒரு பகுதியாக மட்டுமே இருக்கவேண்டும்.

இதை எனது யாழ் அனுபவம் மூலம்தான் சொல்லிறன். நான் யாழில் ஆரம்பத்தில் எல்லாவிடயங்கள் பற்றியும் பொழுபோக்காக எழுதிவிட்டு பின் சிறிதுகாலத்தில் கொஞ்சம் சீரியசாக யாழில் எழுத துவங்கியபோது பல பிரச்சனைகளிற்கு முகம்கொடுக்க வேண்டி வந்தது. பலருடன் மனஸ்தாபப்பட வேண்டிவந்தது. நாங்கள் சீரியசாக ஏதாவது செய்ய வெளிக்கிட்டால் கடைசியில் அது உள்ளதையும் கெடுத்துவிடும் என்பதே எனது அபிப்பிராயம்.

தாயகத்தில இருக்கிற மக்களுக்கு உதவுறதுக்கு முதலில நாங்கள் உளம், உடல் ஆரோக்கியமா இருக்கவேண்டும். நாங்களே நோயாளிகளாக, வியாதிக்காரராக இருந்துகொண்டு தாயக மக்களிற்கு உதவிக்கரம் நீட்டுவது எப்படி?

முதலில் எங்கள் வாழ்க்கைகளை செழுமைப்படுத்துவோம். இதன்பின் நேரம், வசதி கிடைக்கும்போது தாயகம் பற்றியும் பார்ப்போம். தன்னை அறிந்து தானம் செய் எண்டு கூறுவார்கள்.

என்னைப் பொறுத்தவரை எனது ஆக்கங்கள் வெளிநாட்டில் வாழும் தமிழரை முதன்மைப்படுத்தி, அவர்களிற்கு உதவும்படியாகவே உருவாக்கப்படும்.

இதற்காக தாயகத்தை நான் கைவிட்டுவிட்டதாய் பொருள் அல்ல. நேரம் கிடைக்கும்போது தாயகமக்களிற்கு உதவக்கூடிய வகையிலான மற்றும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கக்கூடியதான ஆக்கங்களையும் உருவாக்குவேன். இதுவே எனது நிலைப்பாடு.

முடிவாக, யாழ் இணையம் வெளிநாட்டில் வாழும் தமிழருக்கு மட்டும் அல்ல, தாயகத்தில் வாழும் மக்களிற்கும் சிறந்த பல சேவைகளை செய்து வருகின்றது என்பதே எனது கணிப்பீடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பகுதியிலும் திரு.சபேசன் அவர்களை அன்போடு வரவேற்கின்றேன்.

இங்கேயும் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.

ஒ.. என்ட பெயரும் உதில இருக்கோ...வாசகன் அண்ணா நான் பேபியாக்கும் என்னை விட்டிடுங்கோ உந்த சபேசன் அங்கிள் கோஷ்டியினரை பிடியுங்கோ அவை தான் அரைத்த மாவையையே அரைத்து கொண்டு நிற்கீனம் :lol: ..எனிவே என்ட பெயரும் உதில வந்திருக்கிறபடியா வருங்கால கிஸ்ரியில என்ட பெயர் நிலைத்திடும் என்று சொல்லுங்கோ :mellow: ...மை டியர் டாடி நீங்க அடிகடி சொல்லுவியளே இருந்தோம் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை...எங்களின்ட பெயர் நிலைத்து நிற்கவேண்டும் என்று அப்ப நான் போய் மரத்தில என்ட பெயரை எழுதினான் இப்ப இங்கே நிலைத்து நிற்குது (உதை பற்றி என்ன சொல்லுறியள்).... :huh:

சரி வாசகண் அண்ணாவின்ட விசயதிற்கு வாரேன் அண்ணா மொண்டசூரியில போய் படித்து பிறகு வேலைக்கும் போயிட்டு தான் நான் உந்த பக்கம் வாரனான் இல்லாட்டி மொண்டசூரி அல்லது வேலையில இருந்து வாரனான் இல்லை என்று சொல்லவில்லை....அத்தோட பாருங்கோ எங்களின்ட யாழ்கள மெம்பர்ஸ் எவ்வளவு நல்ல தீர்மானத்தை எல்லாம் எங்களின்ட தேசியதலைவருக்கே சொல்லி கொடுக்கீனம் என்றா பாருங்கோ!! :D

அத்தோட மட்டுமில்லாம அங்கே அடி இங்கெ அடி என்று எவ்வளவு உற்சாகவரவேற்பு கொடுக்கீனம் இது எல்லாம் லேசுபட்ட காரியமா வாசகன் அண்ணா...அதோடமட்டுமில்லாம பிறகு சாதி என்று தொடங்கி இல்லாத சாதியை உருவாக்கிறோம் இது எல்லாம் எவ்வளவு கஷ்டமான விசயம் நீங்களே யோசியுங்கோ.. :(

இவ்வளத்தோட மட்டுமா நிற்கிறோம் ஒருபடி மேல போய் அமெரிக்ககாரங்களிற்கு எப்படி ரொக்கட் விடுறதும் என்று சொல்லி கொடுக்கிறோம் அல்லவா இது எல்லாம் எவ்வளவு கஷ்டமான விசயங்களப்பா...இவ்வளத்தோட நிற்காம ஒருத்தரை திட்ட ஒரு பெயர் அவரை புகழ்ந்து எழுத ஒரு பெயர் என்று எவ்வளவு சாதனைகளை செய்யிறோம் இது எல்லாம் லேசுபட்ட விசயமா... :(

இப்படி சொல்லி கொண்டே போகலாம் பிறகு வாசகன் அண்ணா எசுறாறோ தெரியவில்லை என்று முடித்து போட்டேன் இன்னும் சில விசயங்களும் இருக்கு அதையும் சொல்லிட்டே போகவோ...எங்கையோ இருக்கிற வாசகன் அண்ணாவையும் எங்கையோ ஒரு கரையில குப்பை கொட்டி கொண்டு இருக்கிற ஜம்மு பேபியை தமிழால இணைத்து இன்றைக்கு நாம இரண்டு பேரும் கருத்து எழுதி கொண்டு இருக்கிறோம் என்றா யாழ்களத்தாள தான் வாசகன் அண்ணா... :D அதை விட பல நல்ல உறவுகளை தந்திருக்கு என்றே சொல்லலாம் அக்சுவலா குடும்பத்தில ஒரு ஆள் போல கள உறவுகள் கண்காணித்து கொள்வார்கள் (எல்லாரையும் சொல்லவில்லை)...இப்படியான ஒரு நல்லவட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது எது வாசகன் அண்ணா... :lol:

சரி அந்த மாட்டரை விடுவோம் போராட்டதிற்கு யாழ்களம் தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று இல்லை தானே வாசகன் அண்ணா..இயன்றளவு பல திட்டங்களை செய்து கொண்டு தான் இருக்கிறது காலபோக்கில் பலதிட்டங்களை செய்யும் என்று நம்புகிறேன்... :lol:

பிறகு பாருங்கோ அண்ணா காலம எழும்புறோம் தேத்தனி குடிக்கிறோம் (அப்ப எல்லாம் எமது போராட்டத்தை பற்றி சிந்தித்து கொண்டா இருக்கிறோம்)..பதில் இல்லை ஏனென்றா அன்றாட அலுவல் இருக்கு அதை போல் தான் இந்த யாழ்களமும் இங்கையும் 24 மணித்தியாலமும் போராட்டத்தை பற்றி சிந்தித்து கொண்டிருந்தா...நான்,நீங்க எல்லாம் பேசாம அங்கே நின்று துவக்கை பிடித்திருக்கலாம் (எனக்கு துவக்கு தூக்கிறது என்றாலே பயம் விளையாட்டு துப்பாக்கி என்றா ஒகே)...

அங்கே நின்று போராடும் அண்ணண்மார்களுடம் எம்மை ஒப்பிடும் போது வெட்கி தலைகுனிகிறேன் ஆனால் யாழ்களத்தில் எழுதாமவிட்டால் மட்டும் நான் போராட்டத்தை முழு நேரம் நேசிக்கிறேன் என்று பொருள் கொள்ள முடியாது தானே..ஆகவே என் பதில் வெறி சாறி வாசகன் அண்ணா...

சோ....ஆங்கில ஆண்டின் 18 திகதி தற்போது சிட்னியில முடிந்து 19 திகதியும் வந்திட்டும் வாசகன் அண்ணா மீண்டும் உங்களையும் களத்திள் சந்திக்கும் வரை விடைபெருகிறேன்....கிஸ்ரியில என்ட பெயரையும் வரபண்ணிணதிற்கும் ரொம்ப தாங்ஸ்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வாழ்கையில நாம் கடந்து வந்த பாதைகளை மறக்ககூடாது அதற்காக அதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தா வரும் பாதைகளும் கடினமாகவே மாறும்"....

Edited by Jamuna

வாசகன் அண்ணா

இதே உங்கட பிரச்சினை

நான் ஏதோ என்னமோ என்டு நினைத்து

சரியாய் பயந்திட்டன். :mellow:

சொன்னால் நம்பமாட்டிங்க பாருங்கோ :D

இன்றைக்குத்தான்(ஆங்கில 18ம் நாள்) டோர்முன்ட் என்ற இடத்திலே

கோப்றா ஞானம் என்ற பெரிய கடை திறப்பு விழா நடந்தது.

எக்கச்சக்கமான விளம்பரங்கள். காலை 11 மணிக்கு திறப்பு விழா

வாற எல்லாருக்கும் மதிய உணவு இலவசம் :lol: , அன்பளிப்புக்கள் :lol: என்று

அசத்திப்போட்டாங்கள்.( நடிகை சிம்ரன் வந்து கடையை திறந்து வைக்கப்போவதாகவும்

என்னுடைய நண்பன் சொன்னான்) வந்தாவோ தெரியாது ஏனென்றால் நான் போக பிந்தி விட்டது.

குமாரசாமி தாத்தா,சபேசன் போன்ற யாழ் கள உறவுகள் போயிருப்பார்கள்.அவர்களைக் கேட்டால்தான் தெரியும். :D

நான் இதைத்தான் நீங்கள் 18ம் திகதி சொல்லபோறியளாக்கம் என்டும் நினைத்தனான். :huh:

Edited by marumakan

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் நம்பமாட்டிங்க பாருங்கோ

இன்றைக்குத்தான்(ஆங்கில 18ம் நாள்) டோர்முன்ட் என்ற இடத்திலே

கோப்றா ஞானம் என்ற பெரிய கடை திறப்பு விழா நடந்தது.

டோர்முன்ட் இந்த இடம் எங்கே இருக்குதுங்க

  • தொடங்கியவர்

உண்மையில் நன்றி கலைஞன் ஜமுனா. யாழ்களம் இல்லாவிடில் நாங்கள் சந்தித்ருக்க முடியாதுதான். களத்தின் நோக்கம் அதுதான என்று கேட்டால் அதற்கு கள முதல்வர்களே பதிலளிக்கமுடியும்.

கலைஞன் நீங்கள் சிந்தித்த படி நான் சிந்திக்கவேயில்லை. என்ட பிள்ளை தமிழ் கதைக்குமோ என்ட இடறுபாட்டில்தான் இன்டை வரைக்கும் வாழ்க்கை போகுது. அட அவன்தான் தமிழ் கதைக்கீறான் இல்லை பெயரையாவது தமிழ்லில் மாத்த எனது கட்டளைத்தளபதி விடுறா இல்லை. இதை போன்ற பல நிகழ்வுகளால் புலத்தில் இனி தமிழ் கெதியா சாகும் என்ற முடிவுக்கு நான் வந்துட்டன். எனது முடிவில் தவறு இருந்தால் மன்னிக்கவும் கலைஞன். ஆனால் அப்படித்தான் முடியும்.

ஜமுனா தம்பி உங்களை மாதிரி கேள்வி கேக்காட்டீ இங்க பல பேரை சாமாளிக்க முடியாது. தம்பி நானும் இன்னொருதனும்ஒரு நல்ல விடயம் செய்தனாங்கள். அதை வேறொருவன் செய்த மாதிரி இங்கு ஒண்டு கதை சொல்லுது. அதை நம்புறதுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு

ஒரு விடயம் நண்பர்களே

இதுதான்காலம்

எம் காலத்தில் கிடைக்காட்டீக்கு எமக்கு நாடு கிடைக்காது. மற்றைய விடயங்களை பிறகு பார்கலாம். உலகம் முழுதும் இலங்கை இராணுவத்துக்கு உதவி வழங்குது. எமது இராணுவத்துக்கு நாங்கள்தான் ஊட்டம் வழங்க வேண்டும்.

உண்மையில் உங்கள் கருத்துதவிகளிலும் பார்க்க உங்கள் பண உதவிதான் எமது " பழைய " தேசத்துக்கு ஒரு விடிவை கொண்டு வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசகன் அண்ணா

இதே உங்கட பிரச்சினை

நான் ஏதோ என்னமோ என்டு நினைத்து

சரியாய் பயந்திட்டன். :huh:

சொன்னால் நம்பமாட்டிங்க பாருங்கோ :D

இன்றைக்குத்தான்(ஆங்கில 18ம் நாள்) டோர்முன்ட் என்ற இடத்திலே

கோப்றா ஞானம் என்ற பெரிய கடை திறப்பு விழா நடந்தது.

எக்கச்சக்கமான விளம்பரங்கள். காலை 11 மணிக்கு திறப்பு விழா

வாற எல்லாருக்கும் மதிய உணவு இலவசம் :( , அன்பளிப்புக்கள் :lol: என்று

அசத்திப்போட்டாங்கள்.( நடிகை சிம்ரன் வந்து கடையை திறந்து வைக்கப்போவதாகவும்

என்னுடைய நண்பன் சொன்னான்) வந்தாவோ தெரியாது ஏனென்றால் நான் போக பிந்தி விட்டது.

குமாரசாமி தாத்தா,சபேசன் போன்ற யாழ் கள உறவுகள் போயிருப்பார்கள்.அவர்களைக் கேட்டால்தான் தெரியும். :lol:

நான் இதைத்தான் நீங்கள் 18ம் திகதி சொல்லபோறியளாக்கம் என்டும் நினைத்தனான். :D

எனக்கு வேறை வேலையில்லையே :mellow: சத்தியமாய் நான் போகேல்லையப்பா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டோர்முன்ட் இந்த இடம் எங்கே இருக்குதுங்க

ஜேர்மனியின் மத்தியில் ஈழத்துதமிழர்கள் வாழும் பெரிய பிரபல்ய நகரம் இது.

கலைஞன் நீங்கள் சிந்தித்த படி நான் சிந்திக்கவேயில்லை. என்ட பிள்ளை தமிழ் கதைக்குமோ என்ட இடறுபாட்டில்தான் இன்டை வரைக்கும் வாழ்க்கை போகுது. அட அவன்தான் தமிழ் கதைக்கீறான் இல்லை பெயரையாவது தமிழ்லில் மாத்த எனது கட்டளைத்தளபதி விடுறா இல்லை. இதை போன்ற பல நிகழ்வுகளால் புலத்தில் இனி தமிழ் கெதியா சாகும் என்ற முடிவுக்கு நான் வந்துட்டன். எனது முடிவில் தவறு இருந்தால் மன்னிக்கவும் கலைஞன். ஆனால் அப்படித்தான் முடியும்.

நீங்கள் நினைச்சால் பிள்ளைக்கு தமிழ் படிப்பிக்கலாம் தானே? இஞ்ச வெளிநாடுகளில மூண்டு பாசையில கதைக்கிறது பெரியவிசயம் இல்லத்தானே? ஆங்கிலம், தமிழ், மற்றது உங்கட நாட்டு மொழி இவ்வளத்தையும் குழந்தை கற்பது ஒரு பெரிய விடயமாக இருக்கும் எண்டு நான் நினைக்க இல்லை.

பலர் ஒண்டு, இரண்டு அல்ல பத்து, பதினைந்து மொழிகளில் கூட கதைக்கிறீனம். அவற்றில் மிகவும் பரீட்சயமாய் இருக்கிறீனம். நான் கூட இப்ப ஒரு மாதமா ஜேர்மன் படிக்கிறன். நினைச்சா ஒண்டும் செய்ய ஏலாது எண்டு இல்லை. உங்கட கட்டளைத்தளபதி என்ன வெள்ளையோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியின் மத்தியில் ஈழத்துதமிழர்கள் வாழும் பெரிய பிரபல்ய நகரம் இது.

எங்கே எண்டு சொன்னதுக்கு நன்றி குமாரசாமிமி.....................

தாயகத்தில் பிறந்து வளர்ந்த நாங்களே, தாயகத்திற்கு உதவி செய்வதற்குப் பின்னிற்கிறோம் என்றால், எமது எதிர்காலச் சந்ததி எப்படி எமக்கு உதவும். புலம்பெயர் நாடுகளில் வரும் பிரச்சனைகளுக்கு அவரவர்களே பொறுப்பு. வாழ்க்கை என்றால் எப்படி இருக்கவேண்டும் எனச் சிந்திக்காமல், அது கொண்டு போகிற வழியில் போனால் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். நாம்தான், எமது வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமெனக் கொஞ்சமாவது சிந்தித்தால் புலம்பெயர் நாடுகளில் உள்ள பல பிரச்சனைகள் வராது.

நாம் நிச்சயம் தாயகத்திற்கு உதவத்தான் வேண்டும். தாயகத்திற்கான பங்களிப்பைச் செய்வதற்கு இதுதான் எமக்குக் கடைசிச் சந்தர்ப்பம். இந்த நேரத்திலும், நாம் செய்யாவிட்டால், அதற்குரிய பலனை நாம் எதிர்காலத்தில் அனுபவிக்க வேண்டி வரும். தாயகம் கிடைத்தபின்பு குற்றவுணர்வை உணருவதைவிட, இப்போதே செய்துவிட்டோமானால், எமக்கு ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கும். ஏனெனில், தமிழீழம் கிடைப்பதற்கு நாம் வெகுகாலம் காத்திருக்கத்தேவையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.