Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் பிரச்சனைகளைக் கையாள்வதில் நீங்கள் எப்படியான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

02 கருத்துக் கணிப்பிற்களிற்கும் ஒரேநேரத்தில் பதில் அளிக்கவும்! நன்றி! 7 members have voted

  1. 1. உங்கள் பிரச்சனைகளைக் கையாள்வதில் நீங்கள் எப்படியான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றீர்கள்? [கீழ் உள்ள கேள்விக் கொத்தை செய்யும்முன் நீங்கள் எந்தப்பிரிவின் கீழ் வந்தீர்கள்?]

    • மற்றவர்களிற்கு நான் அதிக அழுத்தம் கொடுப்பேன்!
      2
    • பிரச்சனையில் இருந்து நான் விலகி நிற்பேன்!
      1
    • மற்றவர்களுடன் நான் சமரசம் செய்துகொள்வேன்!
      0
    • மற்றவர்கள் சொல்கேட்டு நான் நடப்பேன்!
      0
    • மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்தும் மற்றும் எனது தனித்தன்மை மூலம் பிரச்சனையை அணுகுவேன்!
      4
  2. 2. உங்கள் பிரச்சனைகளைக் கையாள்வதில் நீங்கள் எப்படியான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றீர்கள்? [நீங்கள் கீழ் உள்ள கேள்விக்கொத்தை செய்துமுடித்தபின் எந்தப் பிரிவின் கீழ் நீங்கள் வந்துள்ளீர்கள்?]

    • மற்றவர்களிற்கு நான் அதிக அழுத்தம் கொடுப்பேன்!
      1
    • பிரச்சனையில் இருந்து நான் விலகி நிற்பேன்!
      1
    • மற்றவர்களுடன் நான் சமரசம் செய்துகொள்வேன்!
      0
    • மற்றவர்கள் சொல்கேட்டு நான் நடப்பேன்!
      0
    • மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்தும் மற்றும் எனது தனித்தன்மை மூலம் பிரச்சனையை அணுகுவேன்!
      5

Please sign in or register to vote in this poll.

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

நான் அண்மையில் தலைமைத்துவம் சம்மந்தமான ஒரு மாநாட்டில் கலந்துகொண்டேன். அங்கு பயனுள்ள பல விடயங்களை அறிந்துகொண்டேன். அங்கு நான் கற்றறிந்த சுவாரசியமான ஒரு விடயத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இங்குள்ள விசயத்த வாசிச்சு விளங்கி பயன்பெற நீங்கள் விரும்பினால் உங்களுக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். உங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு நீங்கள் இப்போது சுமார் 12 நிமிடங்களை செலவளிக்க தயாராக இருந்தால் மட்டும் தொடர்ந்து வாசிக்கவும்.

*** *** *** *** *** ***

நான் கூறப்போகும் விசயம் "உங்கள் பிரச்சனைகளைக் கையாள்வதில் நீங்கள் எப்படியான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?" என்பது பற்றியது. விசயத்திற்கு போகும்முன், கீழ்வரும் கேள்வியை வாசித்து அதற்கு உங்கள் மனதில் இருந்து இப்போது என்ன விடைவருகின்றது என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பிரச்சனைகளைக் கையாள்வதில் நீங்கள் எப்படியான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றீர்கள்?

1.மற்றவர்களிற்கு நான் அதிக அழுத்தம் கொடுப்பேன்!

2. பிரச்சனையில் இருந்து நான் விலகி நிற்பேன்!

3. மற்றவர்களுடன் நான் சமரசம் செய்துகொள்வேன்!

4. மற்றவர்கள் சொல்கேட்டு நான் நடப்பேன்!

5. மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்தும் மற்றும் எனது தனித்தன்மை மூலம் பிரச்சனையை அணுகுவேன்!

இனி கீழ்வரும் கேள்விகளை வாசித்து அவற்றிற்கு விடை அளித்து உண்மையில் "உங்கள் பிரச்சனைகளைக் கையாள்வதில் நீங்கள் எப்படியான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றீர்கள்?" என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

சிலவேளைகளில் நீங்கள் ஆரம்பத்தில் மனதில் நினைத்த உங்கள் பிரிவும் (பிரச்சனைகளை எப்படி அணுகுகின்றீர்கள் என்பது பற்றிய), பின் கேள்விக்கொத்திற்கு பதில் அளித்தபிறகும் வரும் உங்கள் பிரிவும் (பிரச்சனைகளை எப்படி அணுகுகின்றீர்கள் என்பது பற்றிய) ஒரேமாதிரி இருக்கலாம் அல்லது வெவ்வேறாக வந்து இருக்கலாம்.

கீழ் உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதிலாக பின்வரும் எண்களை குறித்துகொள்ளவும்.

குறிப்பிட்ட இந்த கருத்தை நீங்கள் எப்போதும் பின்பற்றினால் 05 என்ற எண்ணை பதிலாக கொடுக்கவும்,

குறிப்பிட்ட இந்தக் கருத்தை நீங்கள் சிலவேளைகளில் பின்பற்றினால் 03 என்ற எண்ணை பதிலாக கொடுக்கவும்.

குறிப்பிட்ட இந்த கருத்தை நீங்கள் எப்போதாவது பின்பற்றினால் அதாவது மிகவும் அரிதாகப் பின்பற்றினால் 01 என்ற எண்ணை பதிலாக கொடுக்கவும்.

1. நான் எனது நிலையில் இருந்து விட்டுக்கொடுக்காமல் வாதாடுகின்றேன்!

__________

2. நான் மற்றவர்களின் தேவைகளிற்கு எனது தேவைகளைவிட முக்கியத்துவம் கொடுக்கின்றேன்!

__________

3 நான் பிரச்சனைப்படும் இரண்டுபகுதிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்மானத்திற்கு வருகின்றேன்!

__________

4. நான் பிரச்சனைகளில் தலையைக் கொடுப்பதில்லை!

__________

5. நான் பிரச்சனைகளை மிகவும் ஆழமாகவும், மற்றவர்களுடன் சேர்ந்தும் ஆராய்கின்றேன்!

__________

6. நான் பிரச்சனைப்படும் மற்றவர்களின் நிலையில் பிழைகள் இருப்பதை கண்டுபிடிக்கின்றேன்!

__________

7. நான் சந்தோசத்தை உருவாக்குவதற்கு பாடுபடுகின்றேன்!

__________

8. நான் கூறிய பெற்றுகொள்ளவேண்டிய எனது பகுதியை பெறுவதற்கு (உதாரணமாக காசு, நிலம்) பிரச்சனைப்படுபவருடன் ஒரு உடன்படிக்கைக்கு வருகின்றேன்!

__________

9. திறந்தமனதுடன் பிரச்சனைப்படுபவர்களுடன் கலந்துரையாடுவதை நான் தவிர்க்கின்றேன்!

__________

10. நான் திறந்தமனதுடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு பிரச்சனைப்படுபவர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றேன்!

__________

11. நான் எனது வாதாட்டங்களில் - கருத்துக்களில் வெற்றிபெறுவதை அனுபவித்து மகிழ்கின்றேன்!

__________

12. நான் மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளின்படி செயற்படுகின்றேன்!

__________

13. நான் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடுவுநிலமையை தேடுகின்றேன்!

__________

14. கசப்பான உணர்வுகளை தவிர்த்துக் கொள்வதற்காக நான் எனது உண்மையான உணர்வுகளை எனக்குள் மறைத்து வைக்கின்றேன்!

__________

15. நான் திறந்தமனதுடன் தகவல்களை கூறுவதை, பகிர்வதை, அலசுவதை, ஆராய்வதை வரவேற்கின்றேன்!

__________

16. நான் கூறுவது அல்லது செய்வது தவறானது என்று மற்றவர்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்வதில்லை!

__________

17. நான் மற்றவர்கள் தமது முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஒருவருடன் ஒருவர் கலந்து ஆலோசிக்காமல் இருப்பதை தவிர்ப்பதற்கு உதவுகின்றேன்!

__________

18. நான் விட்டுக்கொடுப்புக்களால் கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றிகூறி பிரச்சனைப்படுபவர்களிற்கு அழுத்தம் கொடுக்கின்றேன்!

__________

19. பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தலமைதாங்குவதற்கு அல்லது பிரச்சனைகளை தீர்க்க பொறுப்பேற்பதற்கு நான் மற்றவர்களை ஊக்குவிக்கின்றேன்!

__________

20. நான் பிரச்சனையை தீர்ப்பதற்கு பிரச்சனை பற்றிய எனது நிலைப்பாட்டை மட்டும் கூறுகின்றேன்!

__________

இப்போது நீங்கள் மேலே கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதிலாக கொடுத்த எண்களை கீழ்வருமாறு கூட்டிக்கொள்ளவும்:

அ. கேள்விகள் 1, 6, 11, 16 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை =

__________

ஆ. கேள்விகள் 2, 7, 12, 17 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை =

__________

இ. கேள்விகள் 3, 8, 13, 18 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை =

__________

ஈ. கேள்விகள் 4, 9, 14, 19 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை =

__________

உ. கேள்விகள் 5, 10, 15, 20 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை =

__________

இப்போது உங்களைப்பற்றி நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்:

மேலே நீங்கள் கூட்டிப்பெற்ற மொத்ததொகைகளில் எந்தப்பிரிவுக்கு நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுக்கொண்டீர்கள் என்பதை கண்டறியுங்கள்:

நீங்கள் அதிகமதிப்பெண்கள் பெற்றது பிரிவு "அ" ஆக இருந்தால்...

பிரச்சனைகளை கையாளும்போது நீங்கள் மற்றவர்களிற்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றீர்கள்!

நீங்கள் அதிகமதிப்பெண்கள் பெற்றது பிரிவு "ஆ" ஆக இருந்தால்...

பிரச்சனைகளை கையாளும்போது நீங்கள் மற்றவர்கள் சொல்கேட்டு நடக்கின்றீர்கள்!!

நீங்கள் அதிகமதிப்பெண்கள் பெற்றது பிரிவு "இ" ஆக இருந்தால்...

பிரச்சனைகளை கையாளும்போது நீங்கள் மற்றவர்களுடன் சமரசம் செய்துகொள்கின்றீர்கள்!

நீங்கள் அதிகமதிப்பெண்கள் பெற்றது பிரிவு "ஈ" ஆக இருந்தால்...

பிரச்சனைகளை கையாளும்போது நீங்கள் பிரச்சனையில் இருந்து விலகி நிற்கின்றீர்கள்!

நீங்கள் அதிகமதிப்பெண்கள் பெற்றது பிரிவு "உ" ஆக இருந்தால்...

பிரச்சனைகளை கையாளும்போது நீங்கள் மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்தும் மற்றும் உங்கள் தனித்தன்மை மூலமும் பிரச்சனையை அணுகுகின்றீர்கள்!

பொறுமையுடன் மேலே உள்ள விடயங்களை வாசித்தவர்கள் தயவுசெய்து கருத்துக்கணிப்பிலும் பங்குபற்றவும். இதன்மூலம் ஒவ்வொன்றிலும் எத்தனை பிரிவு ஆக்கள் யாழில் இருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ள சற்று உதவியாகவும் இருக்கும், மேலும் சுவாரசியமாகவும் இருக்கும்.

இந்தக்கருத்தாடல் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். ஏதாவது சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் அல்லது நான் மேலே கூறியவை ஏதாவது தெளிவில்லாமல், விளங்காமல் இருந்தால் கேட்கவும்.

நன்றி! வணக்க்கம்!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

12 நிமிசத்தில வீட்டில இருக்கிற சட்டி,பானை எல்லாம் கழுவி போடுவேன் என்ன விளையாட்டோ :lol:

  • தொடங்கியவர்

இல்லை புத்துமாமா, விரைவாக வாசிப்பவர்களிற்கு உண்மையில் ஒரு ஐந்து நிமிடங்கள் காணும் இதைவிளங்கிக்கொள்வதற்கு.

சட்டி, பானைய எப்பவும் கழுவலாம். ஆனா எங்கள கழுவாமல் இருந்தால் வாழ்க்கையே நாறிப்போகுமே? பரவாயில்லையா? ஏதோ நீங்கள் சுத்தமாய் இருந்தால் சரி. :)

  • கருத்துக்கள உறவுகள்

1. நான் எனது நிலையில் இருந்து விட்டுக்கொடுக்காமல் வாதாடுகின்றேன்! ===== 5

2. நான் மற்றவர்களின் தேவைகளிற்கு எனது தேவைகளைவிட முக்கியத்துவம் கொடுக்கின்றேன்! ===== 1

3 நான் பிரச்சனைப்படும் இரண்டுபகுதிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்மானத்திற்கு வருகின்றேன்! ===== 5

4. நான் பிரச்சனைகளில் தலையைக் கொடுப்பதில்லை! ===== 1

5. நான் பிரச்சனைகளை மிகவும் ஆழமாகவும், மற்றவர்களுடன் சேர்ந்தும் ஆராய்கின்றேன்! ===== 5

6. நான் பிரச்சனைப்படும் மற்றவர்களின் நிலையில் பிழைகள் இருப்பதை கண்டுபிடிக்கின்றேன்! ===== 5

7. நான் சந்தோசத்தை உருவாக்குவதற்கு பாடுபடுகின்றேன்! ===== 3

8. நான் கூறிய பெற்றுகொள்ளவேண்டிய எனது பகுதியை பெறுவதற்கு (உதாரணமாக காசு, நிலம்) பிரச்சனைப்படுபவருடன் ஒரு உடன்படிக்கைக்கு வருகின்றேன்! ===== 5

9. திறந்தமனதுடன் பிரச்சனைப்படுபவர்களுடன் கலந்துரையாடுவதை நான் தவிர்க்கின்றேன்! ===== 1

10. நான் திறந்தமனதுடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு பிரச்சனைப்படுபவர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றேன்! ===== 5

11. நான் எனது வாதாட்டங்களில் - கருத்துக்களில் வெற்றிபெறுவதை அனுபவித்து மகிழ்கின்றேன்! ===== 5

12. நான் மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளின்படி செயற்படுகின்றேன்! ===== 3

13. நான் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடுவுநிலமையை தேடுகின்றேன்! ===== 5

14. கசப்பான உணர்வுகளை தவிர்த்துக் கொள்வதற்காக நான் எனது உண்மையான உணர்வுகளை எனக்குள் மறைத்து வைக்கின்றேன்! ===== 1

15. நான் திறந்தமனதுடன் தகவல்களை கூறுவதை, பகிர்வதை, அலசுவதை, ஆராய்வதை வரவேற்கின்றேன்! ===== 5

16. நான் கூறுவது அல்லது செய்வது தவறானது என்று மற்றவர்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்வதில்லை! ===== 3

17. நான் மற்றவர்கள் தமது முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஒருவருடன் ஒருவர் கலந்து ஆலோசிக்காமல் இருப்பதை தவிர்ப்பதற்கு உதவுகின்றேன்! ===== 5

18. நான் விட்டுக்கொடுப்புக்களால் கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றிகூறி பிரச்சனைப்படுபவர்களிற்கு அழுத்தம் கொடுக்கின்றேன்! ===== 3

19. பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தலமைதாங்குவதற்கு அல்லது பிரச்சனைகளை தீர்க்க பொறுப்பேற்பதற்கு நான் மற்றவர்களை ஊக்குவிக்கின்றேன்! ===== 1

20. நான் பிரச்சனையை தீர்ப்பதற்கு பிரச்சனை பற்றிய எனது நிலைப்பாட்டை மட்டும் கூறுகின்றேன்! ===== 5

இப்போது நீங்கள் மேலே கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதிலாக கொடுத்த எண்களை கீழ்வருமாறு கூட்டிக்கொள்ளவும்:

அ. கேள்விகள் 1, 6, 11, 16 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை ===== 18

ஆ. கேள்விகள் 2, 7, 12, 17 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை ===== 12

இ. கேள்விகள் 3, 8, 13, 18 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை ===== 18

ஈ. கேள்விகள் 4, 9, 14, 19 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை ===== 4

உ. கேள்விகள் 5, 10, 15, 20 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை ===== 20

நான் பிரச்சனைகளின் போது மற்றவர்களுக்கு அழுத்தம் கொடுப்பேன் என நினைத்திருந்தேன். (என்னை தனிப்பட்ட முறையில் எவ்வளவு பாதிக்குது என்பதை பொறுத்து எனது அழுத்தம் இருக்கும்.) ஆனால் பிரச்சனைகளுக்கு விலகி எப்போதும் போனதில்லை (இது நிறைய கெட்ட பெயரை சம்பாதித்து தரும்).

கலைஞனின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த கூட்டை பார்க்கும் போது மற்றவர்களுடன் கலந்தாலோசித்து சுமூகமான முடிவை எடுப்பேன் என வருகுது. (நம்பவே முடியவில்லை)

இதைப்பதிந்த கலைஞனுக்கு நன்றி.

ஜெனரல்!!

இப்படி என்ட பொறுமையை சோதித்து போட்டீங்க நல்லாவே இல்லை சொல்லிட்டேன் :lol: ....ம்ம்ம் வாசித்தனான் எல்லாம் நல்லா இருக்கு பட் எனக்கு பொறுமையா இருந்து கோடிட்ட இடம் அது தான் நம்பர் எல்லாம் போட ஏலாது உது தெரியாதோ :( ...அக்சுவலா என்ட பொறுமைக்கு நல்ல உதாரணம் அக்கவுன்ட்ஸ் செய்து கொண்டிருப்பேன் அரைவாசியில பிழைத்து போயிட்டு என்றா அவ்வளவும் தான் பிறகு எங்கே பிழை என்று கண்டு பிடித்து செய்வோம் என்ற பொறுமையே நேக்கு இல்லை :D ....அக்சுவலா எக்சாம் கோலிலையும் இப்படி செய்து போடுறனான் என்றா பாருங்கோ கணக்கை வடிவா செய்து கொண்டு போவேன் அரைவாசியில பிழைத்தா அவ்வளவும் தான் அதற்கு பிறகு மூடி வைக்கிறது தான் :( இப்படிபட்ட என்னிட்ட பொறுமை வெகு தூரம் தான் ஜெனரல் :( ...எனிவே என்ட பிரச்சினையை எப்படி கையாள்வேன் என்று கேட்டு இருந்தீங்க அல்லோ அக்சுவலா என்ட பிரச்சினையை நான் தான் முடிப்பேன் வேற யாரும் அதுகுள்ள தலையிடுறது எனக்கு சுத்தமா பிடிகாது :( அப்படி பிரச்சினையை தீர்க்க முடியாத கட்டத்தில மற்றவையிட்ட ஆலோசணை கேட்பேன் ஆனா இறுதி முடிவை என்றைக்கு நான் தான் எடுப்பேன் :lol: ...இப்படி செய்றபடியா வீட்டை ஏச்சு விழுறது ஆனா இதால எனக்கு பல வெற்றிகள் சில தோல்விகள் மட்டுமே சோ தொடர்ந்தும் அதையே தான் நான் வலோ பண்ணுவேன்... :(

அக்சுவலா எனக்கு பொறுமை வாறதிற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசணை சொன்னா நல்லா இருக்கும் :( ...அநேகமா காதில பாட்டை கேட்டு கொண்டிருந்தன் என்றா பொறுமையா இருப்பேன் இல்லாட்டி நமக்கு பொறுமைக்கும் வெகுதூரம் அல்லோ!! :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நன்றி சபேஸ், யமுனா.

பொறுமையா இருக்கிறதுக்கு என்ன வழி எண்டு என்னிடம் கேக்கிறீங்களோ? ஒரு பெண்ணை காதலித்து பாருங்கோ. அப்போது சிலவேளைகளில் பொறுமை உங்களுக்கு வரக்கூடும்.

பொறுமையா இருக்கிறதுக்கு என்ன வழி எண்டு என்னிடம் கேக்கிறீங்களோ? ஒரு பெண்ணை காதலித்து பாருங்கோ. அப்போது சிலவேளைகளில் பொறுமை உங்களுக்கு வரக்கூடும்.

ம்ம்ம்...உங்களை பார்த்தா நல்ல பொறுமையான ஆள் போல இருக்கு அது தான் கேட்டனான் :) ...அக்சுவலா பொறுமைக்காக யோகா செய்ய அனுப்பினவை பட் எனக்கு யோகா பொறுமையா இருந்து செய்ய ஏலாம வந்துட்டேன் ஏனென்றா செம போரிங் :( ...ஓ நீங்க சொல்லுற யோசணை நல்லா தான் இருக்கு அப்ப ஒன்று செய்வோமா நீங்களே எனக்கு நல்ல பொண்ணா பார்த்து சொல்லுங்கோ நான் காதலித்து பார்கிறேன் :lol: எனக்காக இதை கூட செய்யமாட்டியளா என்ன :) ...ஆவலுடன் என் காதலியை எதிர்பார்த்தபடி!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நீங்கள் தானே லக்ஸா எண்டு யாரையோ காதலிக்கிறதாய் இன்னொரு திரியில சொல்லிக்கொண்டு இருக்கிறீங்கள்? :unsure:

நீங்கள் தானே லக்ஸா எண்டு யாரையோ காதலிக்கிறதாய் இன்னொரு திரியில சொல்லிக்கொண்டு இருக்கிறீங்கள்? :unsure:

ஓ லக்சிகாவோ அந்த கதையை நீங்க வடிவா வாசிக்கவில்லை போல இருக்கு :o ...அக்சுவலா அது நடந்த உண்மை கதை பட் அதில கதாநாயகன் நானில்லையப்பா :blink: லக்சிகா வந்து என்ட பெஸ்ட் பிரண்டப்பா மறுபடி கதையை வடிவா வாசித்து பாருங்கோ விளங்கும் :wub: ....அது சரி எனக்கு காதலி தேடுற படலம் எந்த கட்டத்தில இருக்கு...ஆவலுடன் என் காதலியை எதிர்பார்த்தபடி!! :huh:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி எனக்கு காதலி தேடுற படலம் எந்த கட்டத்தில இருக்கு...ஆவலுடன் என் காதலியை எதிர்பார்த்தபடி!! :lol:

இந்தாளைக் கேக்கிறதை விட்டுட்டு அனா இவாநொவிச் ஆசியில தானே நிக்கிறா... அவாவை சைற் அடிச்சு றை பண்ணுங்கோ... :(

Edited by Sabesh

  • தொடங்கியவர்

ஓ லக்சிகாவோ அந்த கதையை நீங்க வடிவா வாசிக்கவில்லை போல இருக்கு :lol: ...அக்சுவலா அது நடந்த உண்மை கதை பட் அதில கதாநாயகன் நானில்லையப்பா :lol: லக்சிகா வந்து என்ட பெஸ்ட் பிரண்டப்பா மறுபடி கதையை வடிவா வாசித்து பாருங்கோ விளங்கும் :) ....அது சரி எனக்கு காதலி தேடுற படலம் எந்த கட்டத்தில இருக்கு...ஆவலுடன் என் காதலியை எதிர்பார்த்தபடி!! :wub:

அப்ப நான் வரட்டா!!

அது நீங்கோ இல்லியா? :( அப்ப உங்களுக்கு ஒவ்வொரு திரியிலையும் காதலிக்கிறதுக்கு வேற, வேற ஆக்கள் வேணுமோ? குழப்பமா இருக்கிது. உங்களிட்ட உங்கள் பிரச்சனைகளைக் கையாள்வதில் நீங்கள் எப்படியான அணுகுமுறைய பின்பற்றுகின்றீர்கள் எண்டு கேட்டது பிழையாப் போச்சிது போல இருக்கிது. :lol:

இந்தாளைக் கேக்கிறதை விட்டுட்டு அனா இவாநொவிச் ஆசியில தானே நிக்கிறா... அவாவை சைற் அடிச்சு றை பண்ணுங்கோ... ^_^

ஓம் இந்தாளிட்ட - என்னட்ட கேட்ட நேரத்துக்கு நீங்களா ஒண்ட தேடிப்பிடிச்சு இருந்தா இப்ப சபேஷ மாதிரி ஒரு குழந்தையையும் பெத்துப்போட்டு இருக்கலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் இந்தாளிட்ட - என்னட்ட கேட்ட நேரத்துக்கு நீங்களா ஒண்ட தேடிப்பிடிச்சு இருந்தா இப்ப சபேஷ மாதிரி ஒரு குழந்தையையும் பெத்துப்போட்டு இருக்கலாம். :lol:

இந்த நக்கல் தானே வேண்டாம்கிறது....

இந்தாளைக் கேக்கிறதை விட்டுட்டு அனா இவாநொவிச் ஆசியில தானே நிக்கிறா... அவாவை சைற் அடிச்சு றை பண்ணுங்கோ... :(

எல்லாம் சரி மாம்ஸ் நாம சைட் அடிக்கிறதில பிரச்சினையே இல்லை அவா நம்மளை சைட் அடிக்க வேண்டுமே உது தானே பிரச்சினையே... :lol:

அப்ப நான் வரட்டா!!

அது நீங்கோ இல்லியா? அப்ப உங்களுக்கு ஒவ்வொரு திரியிலையும் காதலிக்கிறதுக்கு வேற, வேற ஆக்கள் வேணுமோ? குழப்பமா இருக்கிது. உங்களிட்ட உங்கள் பிரச்சனைகளைக் கையாள்வதில் நீங்கள் எப்படியான அணுகுமுறைய பின்பற்றுகின்றீர்கள் எண்டு கேட்டது பிழையாப் போச்சிது போல இருக்கிது.

அட..அது நான் இல்லையப்பா...ஒவ்வொரு திரியிலையும் காதலிக்க ஒவ்வொரு ஆட்களோ கேட்க நல்லா தான் இருக்கு ஆனா கடைசியில எல்லாரிட்டையும் சேர்ந்து அல்லோ உதை விழும் :D ....குழப்பமோ ம்ம் வடிவா எஸ்பிளைன் பண்ணிவிடுறேன் அதாவது ஜெனரல் அந்த கதை வந்து உண்மையாகவே நடந்த ஒரு சோக கதை பட் நேக்கு நடக்கவில்லை என்னுடைய பிரண்டிற்கு தான் நடந்தது :wub: அவா தான் அந்த கதையில லக்சிகாவா வாறா...அந்த கதையை தான் நகைசுவையாக எழுதி இறுதியில அந்த சோக சம்பவத்தையும் கொண்டு வந்து முடித்தனான் :lol: ...அந்த கதை படி பார்த்தா இப்ப ஜம்முபேபி மேல போயிருக்க வேண்டும் அல்லோ... :lol: (அட என்னை மேல அனுப்புறதிலையே குறியா இருக்கிற மாதிரி இருக்கு )...இப்ப எல்லாம் விளங்கிசோ நான் நல்ல பிள்ளையப்பா....ஜெனரல் ஒன்று செய்வோமே உங்கள் பிரச்சினைகள் இங்கே தீர்த்து வைக்கபடும் என்று பெரிசா ஒரு போர்ட் ஒன்று போட்டு வாறவையின்ட பிரச்சினை எல்லாம் தீர்த்து வைப்போமே இதற்கும் நீங்கள் தான் குரு நான் வந்து சிஷ்யன் இதை பற்றி என்ன நினைக்கிறீங்க கிடைக்கிற அமோண்டில பாதி பாதி வெட்டி கொள்வோம் :wub: ...பட் எனக்கு காதலி தேடுற படலத்தை மறந்து போயிடாதையுங்கோ ஆவலுடன் என் காதலியை பார்த்த வண்ணம்..!! ^_^

அப்ப நான் வரட்டா!!

ஜெனரல் இதையும் ஒருக்கா வாசியுங்கோ இதனை எனக்கு ரொம்பவும் பிடித்த விசயம் என்று சொல்லலாம்....இதை ஒருக்கா வாசித்து பார்த்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கோ என்ன... :)

ONE PARAGRAPH THAT EXPLAINS LIFE!!

88008690zq7.png

Arthur Ashe, the legendary Wimbledon player was dying of AIDS which he got due to infected blood he received during a heart surgery in 1983. :(

From world over, he received letters from his fans, one of which conveyed: "Why does GOD have to select you for such a bad disease"? :lol:

To this Arthur Ashe replied:

" The world over -- 50 million children start playing tennis, 5 million learn to play tennis,

500,000 learn professional tennis, 50,000 come to the circuit, 5000 reach the grand slam,

50 reach Wimbledon, 4 to semi final, 2 to the finals, :lol:

when I was holding a cup I never asked GOD 'Why me?'.

And today in pain I should not be asking GOD 'Why me?' "

Happiness keeps you Sweet,

Trials keep you Strong,

Sorrow keeps you Human,

Failure keeps you humble and Success keeps you glowing, but only Faith & Attitude Keeps you going...!!

  • கருத்துக்கள உறவுகள்

அ. கேள்விகள் 1, 6, 11, 16 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை =

__08________

ஆ. கேள்விகள் 2, 7, 12, 17 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை =

____18______

இ. கேள்விகள் 3, 8, 13, 18 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை =

____14______

ஈ. கேள்விகள் 4, 9, 14, 19 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை =

______10____

உ. கேள்விகள் 5, 10, 15, 20 இவற்றிற்கு நீங்கள் பதிலாக கொடுத்த எண்களை கூட்டும்போதுவரும் மொத்த தொகை =

___20_______

wow. பிரச்சனைகளை கையாளும்போது நீங்கள் மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்தும் மற்றும் உங்கள் தனித்தன்மை மூலமும் பிரச்சனையை அணுகுகின்றீர்கள்!

நன்றி கலைஞன். முடிவு என்னோடு ஒத்து போகின்றது.

Edited by nunavilan

  • தொடங்கியவர்

அட..அது நான் இல்லையப்பா...ஒவ்வொரு திரியிலையும் காதலிக்க ஒவ்வொரு ஆட்களோ கேட்க நல்லா தான் இருக்கு ஆனா கடைசியில எல்லாரிட்டையும் சேர்ந்து அல்லோ உதை விழும் :D ....குழப்பமோ ம்ம் வடிவா எஸ்பிளைன் பண்ணிவிடுறேன் அதாவது ஜெனரல் அந்த கதை வந்து உண்மையாகவே நடந்த ஒரு சோக கதை பட் நேக்கு நடக்கவில்லை என்னுடைய பிரண்டிற்கு தான் நடந்தது :wub: அவா தான் அந்த கதையில லக்சிகாவா வாறா...அந்த கதையை தான் நகைசுவையாக எழுதி இறுதியில அந்த சோக சம்பவத்தையும் கொண்டு வந்து முடித்தனான் :lol: ...அந்த கதை படி பார்த்தா இப்ப ஜம்முபேபி மேல போயிருக்க வேண்டும் அல்லோ... :lol: (அட என்னை மேல அனுப்புறதிலையே குறியா இருக்கிற மாதிரி இருக்கு )...இப்ப எல்லாம் விளங்கிசோ நான் நல்ல பிள்ளையப்பா....ஜெனரல் ஒன்று செய்வோமே உங்கள் பிரச்சினைகள் இங்கே தீர்த்து வைக்கபடும் என்று பெரிசா ஒரு போர்ட் ஒன்று போட்டு வாறவையின்ட பிரச்சினை எல்லாம் தீர்த்து வைப்போமே இதற்கும் நீங்கள் தான் குரு நான் வந்து சிஷ்யன் இதை பற்றி என்ன நினைக்கிறீங்க கிடைக்கிற அமோண்டில பாதி பாதி வெட்டி கொள்வோம் :wub: ...பட் எனக்கு காதலி தேடுற படலத்தை மறந்து போயிடாதையுங்கோ ஆவலுடன் என் காதலியை பார்த்த வண்ணம்..!! ^_^

அப்ப நான் வரட்டா!!

ஜெனரல் இதையும் ஒருக்கா வாசியுங்கோ இதனை எனக்கு ரொம்பவும் பிடித்த விசயம் என்று சொல்லலாம்....இதை ஒருக்கா வாசித்து பார்த்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கோ என்ன... :)

ONE PARAGRAPH THAT EXPLAINS LIFE!!

88008690zq7.png

Arthur Ashe, the legendary Wimbledon player was dying of AIDS which he got due to infected blood he received during a heart surgery in 1983. :(

From world over, he received letters from his fans, one of which conveyed: "Why does GOD have to select you for such a bad disease"? :lol:

To this Arthur Ashe replied:

" The world over -- 50 million children start playing tennis, 5 million learn to play tennis,

500,000 learn professional tennis, 50,000 come to the circuit, 5000 reach the grand slam,

50 reach Wimbledon, 4 to semi final, 2 to the finals, :lol:

when I was holding a cup I never asked GOD 'Why me?'.

And today in pain I should not be asking GOD 'Why me?' "

Happiness keeps you Sweet,

Trials keep you Strong,

Sorrow keeps you Human,

Failure keeps you humble and Success keeps you glowing, but only Faith & Attitude Keeps you going...!!

ஓ வெரி ஸாரி. நீங்கள் அங்க எழுதி இருக்கிறது உண்மைக்கதையா? இதால பாதிக்கப்பட்டவர் உங்கள் நண்பியா? அனுதாபங்கள். நான் அதை முழுவதுமா வாசிக்க இல்லை. நீங்கள் எழுதி இருந்த முதல் கருத்தை மட்டுமே வாசித்து இருந்தேன். சரி, அப்ப நீங்கள் அச்சாப்பிள்ளை எண்டு சொல்லிறீங்கள் போல இருக்கிது.

டென்னிஸ் பிளேயரின் கதை வாசிச்சேன். சிந்திக்க வைக்கின்றது. உயர்வும், தாழ்வும் வாழ்க்கையில மாறி, மாறி வரும் எண்டுறதுக்கு உதாரணமா இருக்கிது. இதாலதான் வெற்றி வரும்போது சும்மா துள்ளிக்குதிக்காதை, தோல்வி வரும்போது அழுதுகொண்டு இருக்காதை எண்டெல்லாம் அறிவுரை கூறி இருக்கிறாங்கள்.

வேதனைகள் வரும்போது நாங்கள் இன்னும் இன்னும் துன்பத்தை, தோல்விகளை நினைத்து அழுது கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால் நிலமை இன்னும் மோசமாகப் போகுமொழிய வேற ஏதாவது முன்னேற்றம் வராது. இதாலதான் இடுக்கண் வந்தால் நகுக எண்டு ஏதோ சொல்லி இருக்கிறாங்கள்.

நான் இனியவளின் மொன்மொழிகளில் எண்டபகுதியில எனக்கு மிகவும் பிடிச்ச அறிவுரை ஒண்ட எழுதி இருந்தன். அத மீண்டும் இஞ்ச எழுதுறன்.

அண்மையில் சிக்குப்பட்ட என்னை மிகவும் கவர்ந்த அறிவுரை ஒன்று:

WHAT PERSON, ALIVE OR DEAD, WOULD YOU WANT TO SPEND A DAY WITH?

உயிருடன் உள்ளவனாகவா அல்லது பிணமாகவா? எப்படியான ஒரு மனிதனாக இன்றைய பொழுதை நீ கழிக்கவிரும்புகின்றாய்?

நன்றி நுணாவிலான். மற்றது நீங்கள் சொன்னமாதிரி விரைவில உங்கள் பிரச்சனைகளை தீர்க்க ஆலோசனை வழங்கப்படும் எண்டு ஒரு பகுதிய ஆரம்பிக்கிறன். பாப்பம் அது எப்பிடி போகிது எண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.