Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு ஒரு சந்தேகம்.. தீர்ப்பீர்களா..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் பக்கத்திலிருப்பவர்களின் பாதுகாப்புக்காகத்தான் ஹீல்ஸ் போட்டு சத்தத்துடன் நடமாடுகிறார்கள். அது மட்டும் சத்தம் போடவில்லையெனில் பக்கத்தில் செல்லும் உங்கள் பாதனியும் புண்டு காலும் புண்ணாகிவிடும்.

நீங்கள் அச்சத்தத்தைக் கவனியாது நடந்தால் உங்கள் கால் அவகால்களில் பட்டு அவ இடறுப்பட்டு விழும் நேரத்தில் நீங்கள் அப்படியே அலாக்காகத் தாங்கிப்பிடிக்க உங்களின் பின்னால் முப்பதுபேர் வயிற்றில் உங்கள் படத்தை வரைந்துகொண்டு குலுக்கி , குலுக்கி பல்லேலுக்கா பாட, அங்கால முப்பது தேவதைகள் தந்தனனம்போட......... இதெல்லாம் தேவையா?

அதனால்தான் உங்கள் மேல் கருனைகொண்டு அவர்கள் சத்தம் போட்டுக் கொண்டு கொல்கிறார்கள் மன்னிக்கவும் செல்கிறார்கள். :rolleyes::wub:

  • தொடங்கியவர்

நீங்கள் திருமணமானவர் என்று நினைக்கிறேன். சமாளிப்புக்கேசன் பலமா இருக்குது அதுதான்..! :lol::lol:

உயரம் குறைவா இருக்கிறம் கொஞ்சமாவது உயரமாக் காட்ட குதியுள்ள சப்பாத்து அணியப்போய் அதுக்கு குதிய மரத்தால வைக்கப்போய் இப்ப அது நெடுக்ஸ் இன்ர மனத்த குடையிற கேள்வியாப் போச்சு ( நெடுக்ஸ் இன்ட மட்டுமில்ல நம்மடயும் தான்) அதுவும்் அமைதியான இடத்தில நடக்கும் போது அந்தச் சத்தம் எதிரொலிச்சு நிக்கவே நேரம் எடுக்கும்....

வாடாம்பி வா.. எனக்கு மட்டும் தான் உந்தப் பிரச்சனையோ என்று கொஞ்சம் தயங்கித் தான் கேட்டன். இப்ப பார்த்தா நிறையப் பேருக்கு.. உந்த சந்தேகம் உள்ளூர இருக்கத்தான் செய்யுது..! :wub:

இதெல்லாம் சின்ன விடயம். ஆண்கள் தங்களைத் திரும்பிப் பார்க்கவேண்டுமென்பதற்காகத் தான் இப்பிடிச் சத்தம் போடுகிற செருப்பைப் போடுறவை. ஊரிலை கால் சலங்கை மாதிரி இங்கை இது. வேறை பரம ரகசியம் ஒண்டும் இதிலை இல்லைப் பாருங்கோ ^_^:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சின்ன விடயம். ஆண்கள் தங்களைத் திரும்பிப் பார்க்கவேண்டுமென்பதற்காகத் தான் இப்பிடிச் சத்தம் போடுகிற செருப்பைப் போடுறவை. ஊரிலை கால் சலங்கை மாதிரி இங்கை இது. வேறை பரம ரகசியம் ஒண்டும் இதிலை இல்லைப் பாருங்கோ ^_^:D

நீங்களாவது கொஞ்சோண்டு உண்மையைப் பேசனுன்னு நினைச்சீங்களே. அபூர்வமா இருக்குது. :D

நெடுக்காலபோவான், இதிலை என்ன அபூர்வம் இருக்கிறது? உண்மையை ஒத்துக் கொள்வதில் எனக்கு எப்போதும் தயக்கம் இருப்பதில்லை. பெண்கள் ஆண்களைக் கவருவதற்கு, எத்தனையோ விதமான வழிகளைக் கையாளுகிறார்கள். அதேபோல், ஆண்களும் பெண்களின் கவனத்தைப் பெற பல வழிகளில் முயற்சிக்கிறார்கள் என்பதும் உண்மையே. என்னவொன்று, ஆண்களுக்கு சிறுவயதிலிருந்தே சுதந்திரம் கிடைப்பதால் அவர்கள் சாதாரண முறையிலேயே முயற்சிக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு ஆண்களோடு பேசிப் பழகுவதற்கான சுதந்திரம் கிடைப்பது மிகவும் குறைவு. எனவே, இப்படியான சமிக்ஞைகள் மூலம் முயற்சிக்கிறார்கள். :wub::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பெண்களின் டொக்கு டொக்கு சப்பாத்துச் சத்தத்தை இட்டு கேள்வி கேட்கிற நேரமாப் பார்த்து.. இத்தாலிய ஆய்வாளர்கள் உந்த குதிக்கால் உயர்ந்த செருப்புக்களை அணிவதால் என்ன பயன் என்று ஆராய்ந்தே பார்த்திட்டாங்க.

இப்ப சொல்லுறாங்க.. உதை அணிஞ்சா பெண்களின் இடுப்புப் பகுதி தசைகளின் செயற்பாடு அதிகரிப்பதால் அவங்க இடுப்புப் பகுதி நல்ல ஆரோக்கியமா இருக்குமாம். அதால அவங்க நல்ல விதமா பாலியல் வாழ்க்கையைக் கொண்டிருப்பாய்ங்கையாம்.

ஆனால் பாருங்கோ டொக்கு டொக்கு போடுற அந்த செருப்பு நிலத்தோட 15 பாகை அமைக்கிறதுதான் நல்லமாம். ஆனா பொண்ணுங்க 90 பாகை அமைக்கிறாப் போல எல்லோ போடுறாய்ங்க..! :lol:

இந்த வகை செருப்புக்களில் அதிக உயர குதி கொண்டவற்றை போட்டா (குள்ளமான பெண்கள் தங்களை உயரமாக் காட்ட போடுறாய்ங்கப்பா இப்படியான செருப்புகளை அதிகம்) அது சில நோய்களுக்கு இட்டுச் செல்லும் என்பது முன்னர் பிரேரிக்கப்பட்ட ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

The shoe has been linked to a range of problems - from corns to schizophrenia.

எனி சொல்லவும் வேணுமா.. பெண்கள் போடமாட்டன் என்றாலும் ஆண்கள் வேண்டிக் கொடுக்கய்ப் போறாய்ங்களே....

என்பாடு திண்டாட்டம் தான். டொக்கு டொக்கு சத்தம் மட்டுமல்ல அதோட குவா குவா சத்தமும் கூடப் போகுதே தவிர குறையாது போங்க..! :lol::lol:

High heels 'may improve sex life'

_41954060_heels203afp.jpg

Wearing higher heels - although perhaps not stilettos - may improve your pelvic floor muscles and in doing so boost your sex life, a study suggests.

http://news.bbc.co.uk/1/hi/health/7225828.stm

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.