Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாத்மா ஒரு 'மாயை'பிரிட்டிஷாரின் வரலாற்று அறிவு

Featured Replies

மகாத்மா ஒரு 'மாயை'பிரிட்டிஷாரின் வரலாற்று அறிவு

திங்கள்கிழமை, பிப்ரவரி 4, 2008

gandhibw4.jpg

லண்டன்: மகாத்மா காந்தி ஒரு மாயை. வின்ஸ்டன் சர்ச்சில் என்று ஒருவர் இருந்ததே இல்லை....இது தான் பல இங்கிலாந்து நாட்டில் பலரது வரலாற்று அறிவாக உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு டிவி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிய வந்துள்ளது. 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள்தான் இப்படித்தான் கூறியுள்ளனராம்.

மகாத்மா காந்தி, வின்ஸ்டன் சர்ச்சில், கிளியோபாட்ரா, புளோரன்ஸ் நைட்டிங்கேல் ஆகியோர் ஒருபோதும் இருந்ததில்லை. அவர்கள் எல்லாம் வெறும் மாயை, கற்பனையான கதாபாத்திரங்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனராம்.

இங்கிலாந்தின் மிகப் பெரிய தலைவர் என்று அறியப்பட்டவர் சர்ச்சில். ஆனால் அவரையே கற்பனைக் கதாபாத்திரம் என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை விட காமெடி என்னவென்றால், கற்பனைக் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ்தான் உண்மையான மனிதர் என்றும் பெரும்பாலானவர்கள் ெதரிவித்தது தான்.

இந்தக் கருத்துக் கணிப்பு குறித்து பிரபல இங்கிலாந்து வரலாற்றியலாளர் காரெலி பர்னட் கூறுகையில், பெரும்பாலான இங்கிலாந்து மக்களுக்கு பொது அறிவே இல்லை என்பதையே இது காட்டுகிறது. கடந்த காலங்களில் வாழ்ந்த மாபெரும் தலைவர்களை அவர்கள் அவமானப்படுத்தியுள்ளனர்.

இங்கிலாந்துக் கல்வி முறையில் பெரிய ஓட்டை இருப்பதையே இது காட்டுகிறது. இல்லாதவர்களை இருப்பதாக கூறுவதும், உலகில் மாபெரும் சாதனைகளைப் படைத்த மகாத்மா காந்தி போன்றவர்களை கற்பனைக் கதாபாத்திரம் என்று கூறுவதும் கேலிக்கூத்தாக உள்ளது.

ராபின் ஹூட் குறித்த ஒரு சீரியல் சமீபத்தில் டிவியில் ஒளிபரப்பானது. எனவே ராபின் ஹூட் போன்றவர்கள் உண்மையிலேயே இருந்தார்கள் என்று இங்கிலாந்து மக்கள் நம்புவதில் ஆச்சரியம் இல்லை என்றார் அவர்.

உலகையே கட்டி ஆண்ட வெள்ளையர்களில் இப்படியும் சிலரா?

நன்றி தற்ஸ்தமிழ்

என்னைப் பொறுத்தமட்டில் "மகாத்மா" ஒரு மாயை என்பது சரியானதே :rolleyes:

ஆங்கிலேயர்களாலும், ஊடகங்களாலும் கட்டியமைக்கப்பட்ட ஒரு மாயத்தோற்றம் தான் மகாத்மா. இன்றும் இந்திய மேலாதிக்கவாதிகளாலும் ஊடகங்களாலும் மெருகேற்றப்பட்டு பாதுகாக்கப்படுகிற மாயை தான் மகாத்மா. பிரிட்டிஷார் உண்மை பேசுகிறபோது இந்தியர்களால் தங்கள் மனதில் பதியவைக்கப்பட்டிருக்கிற மகாத்மா என்கிற பிம்பம் உடைந்துவிடும் என்கிற பயம் ஏற்பட்டுவிட்டது. அதனால் பிரிட்டிஷாரின் வரலாற்றறிவு பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். முதலில் தங்களின் வரலாற்றறிவை சரிபார்த்துக்கொள்ளட்டும். :unsure:

  • தொடங்கியவர்

என்னைப் பொறுத்தமட்டில் "மகாத்மா" ஒரு மாயை என்பது சரியானதே :lol:

ஆங்கிலேயர்களாலும், ஊடகங்களாலும் கட்டியமைக்கப்பட்ட ஒரு மாயத்தோற்றம் தான் மகாத்மா. இன்றும் இந்திய மேலாதிக்கவாதிகளாலும் ஊடகங்களாலும் மெருகேற்றப்பட்டு பாதுகாக்கப்படுகிற மாயை தான் மகாத்மா. பிரிட்டிஷார் உண்மை பேசுகிறபோது இந்தியர்களால் தங்கள் மனதில் பதியவைக்கப்பட்டிருக்கிற மகாத்மா என்கிற பிம்பம் உடைந்துவிடும் என்கிற பயம் ஏற்பட்டுவிட்டது. அதனால் பிரிட்டிஷாரின் வரலாற்றறிவு பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். முதலில் தங்களின் வரலாற்றறிவை சரிபார்த்துக்கொள்ளட்டும். :lol:

இளைஞன்

நீங்கள் விடயத்தை முழுவதும் புரிந்தீர்களா என்பது எனக்குப் புரியவில்லை. காரணம் இங்கு இங்கிலாந்து மக்கள் நிஜமாக வாழ்ந்தவர்களை கற்பனைக் கதாபாத்திரமென்றும் கற்பனையாக உருவாக்கப்பட்டவையை நிஜமானவை என்றும் கருத்துக் கூறியிருப்பதையே சுட்டிக் காட்டியுள்ளளது இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு டிவி நிறுவனம். அதுமட்டுமன்றி இக்கருத்துக் கணிப்பு பற்றிய தமது கருத்தையும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் தான் கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி தான் தற்ஸ்தமிழ் இணையத்தளத்திலும் வந்துள்ளது . முதலில் செய்தியை முழுவதுமாக வாசியுங்கள். நீங்கள் ஏதோ உங்கள் கற்பனையில் ஏதோவெல்லாம் எழுதுகின்றீர்கள். கொஞ்சம் புத்திசாலித்தனமாக சிந்திப்பவர் நீங்கள் என்று இதுவரை நான் எண்ணியிருந்தேன். ஆனால் நீங்களும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்தியை முழுவதுமாக வாசிக்காது கருத்தெழுதியது எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது.

வசம்பு...

செய்தியை நான் சரியாகவே வாசித்து உள்வாங்கியிருக்கிறேன். செய்தி உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்ளாத அல்லது உண்மையை கற்பனையெனவும் கற்பனையை உண்மையெனவும் நம்புகிற பிரித்தானியர்கள் தொடர்பானது என்பதை சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறேன். UKTV Gold television நடத்திய கருத்துக்கணிப்பு தொடர்பான செய்திக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் இந்திய ஊடகங்களாகவே எனக்குப் பட்டது. காரணம் காந்தி பற்றி குறிப்பிடப்பட்டமையே.

நான் இரண்டு விடயங்களை வெளிப்படுத்த முனைந்திருந்தேன். சிலவேளை அது சரியாக உங்களால் உள்வாங்கப்படவில்லையோ தெரியாது.

1. ஒருவர் அல்லது ஒரு தலைவர் தொடர்பான விம்பம் என்பது அவர் மூலம் நன்மையடைய விரும்பும் ஒரு குழுமத்தால் கட்டியமைக்கப்பட்டு, பின்னர் தேவைக்கேற்ப மெருகூட்டப்படுகிறது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர் உண்மையில் வாழ்ந்த ஒருவராக இருந்தாலும், "மகாத்மா காந்தி" என்பவர் ஆங்கிலேய அரசின் தேவைக்கேற்ப கட்டமைக்கப்பட்டு இன்று இந்திய மேலாதிக்கவாதிகளின் நலன்களுக்கேற்ப கட்டிக்காக்கப்படுகிற ஒரு விம்பம். மாயை.

ஒருவர் தொடர்பாக போலித்தனமான விம்பங்களை உருவாக்கி வளர்த்தெடுப்பதால் தானோ என்னவோ மக்களால் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையிலான எல்லைகளை வகுக்க முடியாது போகிறது என்று நினைக்கிறேன். மக்களின் வரலாற்றறிவு தொடர்பாக அந்த ஆய்வு அமைந்திருந்தாலும், "மகாத்மா ஒரு மாயை" என்று தற்ஸ்ரமில் இட்டிருக்கிற தலைப்பு உண்மையானதாக எனக்குப்பட்டதால் தான் மேற்கண்ட கருத்தை நான் எழுதியிருந்தேன். (சிரிக்கிற அடையாளம் கூட போட்டிருந்தேனே)

2. ஆய்வு பிரித்தானிய ஊடகத்தால் நடாத்தப்பட்டிருந்தாலும் அந்த ஆய்வை தமது நலன்களுக்கும், தமது தேவைகளுக்கும் ஏற்பவே ஒவ்வொரு ஊடகமும் கையாள்கிறது. அந்தவகையில் தற்ஸ்ரமில் இணையத்தளமும் செய்தியின் முடிவில் தனது கருத்தையும் தெரிவித்திருக்கிறது: "உலகையே கட்டி ஆண்ட வெள்ளையர்களில் இப்படியும் சிலரா?".

இதனால் தான் பிரித்தானியர்களின் வரலாற்றறிவு தொடர்பாக கவலைப்படும் இவர்கள் தம்மவரின் வரலாற்றறிவை சரிபார்த்துக்கொள்ளட்டும் என்று. இதே ஆய்வை இந்தியாவில் நடத்தினாலும் இதுபோன்ற கற்பனைக்கும் உண்மைக்கும் இடையிலான வேறுபாட்டை உணராத் தன்மை வெளிப்படும். இதற்கு ராமன், கிருஸ்ணன் விஸ்ணு அவதாரங்கள் ஒரு உதாரணம். ராமன், கிருஸ்ணன் போன்றவர்கள் உண்மையாக வாழ்ந்தவர்களாகக் கூட இருக்கலாம். ஆனால் இன்று அது கற்பனையா உண்மையா என்கிற குழப்பமும் மோதல்களும் இடம்பெறுகிறது என்றால் அதற்குக் காரணம், சிலர் தமது நலன்களுக்கு ஏற்ப அவற்றின் மீது போலித்தனமான பிம்பத்தைக் கட்டியெழுப்பிக் காப்பாற்றுவதே.

சினிமாவில் வரும் கற்பனைப் கதாபாத்திரங்களை உண்மையான கதாபாத்திரங்களாக உருவகம் பண்ணி பின்பற்றும் இளைஞர்கூட்டம் இந்தியாவில் உள்ளது. சினிமா மூலம் தம்மைப் பற்றிய ஒரு விம்பத்தை கட்டியெழுப்புகிற நடிகர் கூட்டம் இந்தியாவில் உள்ளது. சினிமாவில் வருகிற கதாபாத்திரத்தை உண்மையாக நம்பி வோட்டுப் போடுகிற மக்கள் கூட்டம் இந்தியாவில் உள்ளது. அந்நியனையும், பாபாவையும் உண்மையில் வாழ்ந்தவர்களாக இந்திய சமூகம் ஒருநாள் கொண்டாடக்கூடும்.

இன்று நாம் வாழும் காலத்திலேயே பல உதாரணங்களைப் பார்க்கிறோம். ரஜினி என்கிற உண்மையான மனிதன் இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், ரஜினி மீது ஊடகங்களாலும் அரசியல் தலைவர்களாலும் ஏன் ரஜினியாலும் கூட போலித்தனமான விம்பம் கட்டியமைக்கப்படுகிறது. அதேபோல், அப்துல் கலாம் என்கிற நல்ல மனிதர் இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவர் மீதும் ஊடகங்களாலும் சில தலைவர்களாலும் தமது நலனுக்கேற்ற போலித்தனமான விம்பம் கட்டியமைக்கப்பட்டுள்ளது.

இவற்றைத்தான் குறிப்பிட முனைந்திருந்தேன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஞரே!

அந்த மாதிரி வெளுத்துவாங்கியிட்டியள்.

அது உண்மை.

வாழ்த்துக்கள் :lol:

  • தொடங்கியவர்

இளைஞன்

நீங்கள் குறிப்பிடும் அந்த மாயை என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உண்டு. ஏன் நம்மவர்கள் கூட பலர் அதைத்தான் இன்றும் செய்கின்றார்கள். மேல் நாட்டவர்கள் பல பாடகர்கள் நடிக நடிகையர் மேலே இது போல் மாயை வைத்திருப்பதை நீங்கள் காணவில்லையா?? தம்மை ஸ்பைடர் மானாகவும் சுப்பர் மானாகவும் நினைத்துக் கொண்டு எத்தனை பேர் வாழுகின்றார்கள். ஒருவர் பற்றிய மிதமிஞ்சிய மெருகூட்டலிற்கும் அவர் வாழ்ந்தாரா இல்லையா என்பதற்கும் வேறுபாடில்லையா?? அதுபோல் கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட மிதமிஞ்சிய மெருகூட்டலை விட அவை ஒன்றும் அதிகமில்லையே?? அப்படிக் கற்பனையாக மெருகூட்டி வடிவமைக்கப்பட்ட கதா பாத்திரங்களை நிஜமென நினைக்கின்றார்களே?? மேலே மகாத்மாவை மட்டுமல்ல வின்ஸ்டன் சர்ச்சில் போன்றவர்களைக் கூட கற்பனை என்று எண்ணுகின்றார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன??

இராமன், கிருஸ்ணன் போன்றவர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுவதற்கு ஆதாரங்களாக எதுவுமில்லை. ஆனால் மேலேயுள்ளவர்கள் வாழ்ந்ததற்கு அவர்களோடு பழகியவர்கள், அவர்களின் நிகழ்வுகள் சம்பந்தமான வீடியோ ஆதரங்கள் போன்ற பல உண்டு. நீங்கள் இரண்டையும் ஒப்பிட்டது எந்தளவு பொருந்தும் என்று நீங்களே சற்று யோசியுங்கள்.

தற்ஸ்தமிழ் இந்திய இணையத்தளம் என்பதனால் கட்டுரையில் குறிப்பிட்ட காந்தியை மையமாக தலையங்கத்தை எழுதியது. அதே போல் இதையே ஒரு இங்கிலாந்துப் பத்திரிகையோ அல்லது இணையத்தளமோ வெளியிடும் போது வின்ஸ்டன் சர்ச்சிலை வைத்து தலையங்கம் எழுதியிருக்கும்.

மொத்தத்தில் நீங்கள் உங்கள் மனதில் இந்தியா பற்றி வைத்திருக்கும் ஒரு தவறான நோக்கையே இங்கு திணித்திருக்கின்றீர்களே தவிர மேலே நான் பதிந்த விடயம் சம்மந்தமான கருத்தையல்ல.

நண்பர்களே மற்றும் இளஞன் வசம்பு வர்களுக்கும்,

இளஞரின் கருத்தோடு என் கருத்தும் ஒதுபோகிறது.

உலக வரலாற்றின் ஆரம்பங்களே சுட்டிக்காட்டுகிறது, தலைவர்களின் மாயைவிம்பங்களை.

பாபிலோனியரகள் வல்லரசாக இருந்தபோது, வரலாற்று பதிவாலர்கள், தங்கள் தவறுகளையும் தர்மசங்களையும் பதிவதை தவிர்தனர்.

இது மேதோ பேசியர்களானாலும்சரி (கோரேசு)

கிரேக்கர்களாக இருந்தாலும் சரி(அலக்சண்டர்)

ரோமர்களாக இருந்தாலும் சரி, ராஜ்ச பதிப்பாலர்களின் பதிவுகளில் இவ்வாறே மாயையின் விம்பம் தெரிகிரது(இதில் ஒரு விதி விலக்கு, சரித்திர ஆசிரிகர்களின் சுகந்திர பதிவுகள் அவர்களின் அப்பட்டமான தோல்விகளையும் வெற்றிகளையும் சரிவர எடுத்துரைக்கிறது)

இங்குலாந்தவர்களின் வரலாறும் சரி( ஆங்கிலோஅமேரிக்கர்கள் செவ்விந்தியர்களை அழித்த வறலாறு எந்த வரலாற்று புத்துகதிலும் இடம் பெறவில்லை. சுகந்திர பதிவுகளில் மட்டுமே இவை காணபடுகிறது. பாடனூல்கலில் அல்ல)

கிட்லரின் காலாத்தில் கிட்டலர் ஓர் ஹீரோவேதான். ஆட்சி கவுண்டதும் பிசாசு ஆனவர் அந்த கிட்ட்லர்.(இவரின் செயலை நியாய படுத்த நான் விரும்பவில்லை, காரணமு இல்லை)

ஆம் இவாறு காந்த், மண்டேல,மாவோ, அப்புதுல் கலாம்( கலாம் என்னத்தை கண்டு பிடித்தார், அவர் எடுத்த நகலுக்கு கிடைக்கும் பாராட்டு பாரபட்ச்சமானது. ஒவ்ரு வேதியல் மாணவனாலும் அணுக்குண்டை தயாரிக்க முடியும். அதர்க்கான பொருட்கள் கிடைக்க வழி இருக்குமானால். ஏன் உங்களானும் முடியும்.)( அனுபிலவை கண்டு பிடித்தவர் யூதபொன் ஏலேனி, பரிசு பெற்றவர் ஜேர்மனிய ஓற்றோ என்பவர், புகழ் பெற்றவர் அல்பர்ட் அயன்ஸ்டைன்)

ஆகவே காதி அல்லது சந்திரபொஸ் கட்டபொம்மன் போன்றவர்கள் இந்திய சிகந்திர போராட்டங்களிலிருந்து தள்ளி நின்றவர்களே.

இதற்க்கு பின்னால் இருக்கு மாயையை பற்றி எலுதுவதற்கு தனியாக ஒரு கட்டுறை எழுதி வருகிறேன்.

தலைவர்கள் தங்கள் குடும்பங்களை எவ்வாறு நடத்தினர் என்று பார்க்க போனால் நீங்கள் இவர்களுக்கு மனனோயோ என்று சிந்திப்பீர்கள்.

சந்திப்பொம் சிந்திப்போம்.

www.tamil.2.ag thalaivarkaL pakuthiyil kaawthi thaaththavai sawthizumgkal

Edited by cawthaman

  • கருத்துக்கள உறவுகள்

கௌதமன்

மாயை பற்றி எழுதப்போகும் கட்டுரையை வாசிக்கக்காத்திருக்கும் எனது தலைவிதியை நினைக்கக் கவலையாயிருக்கிறது. தயவு செய்து கொஞ்சம் தமிழில் கவனம் செலுத்தி எழுதினால்தான் நான் தப்பலாம் இல்லாவிட்டால் செத்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப் பொறுத்தமட்டில் "மகாத்மா" ஒரு மாயை என்பது சரியானதே

ஆங்கிலேயர்களாலும், ஊடகங்களாலும் கட்டியமைக்கப்பட்ட ஒரு மாயத்தோற்றம் தான் மகாத்மா. இன்றும் இந்திய மேலாதிக்கவாதிகளாலும் ஊடகங்களாலும் மெருகேற்றப்பட்டு பாதுகாக்கப்படுகிற மாயை தான் மகாத்மா. பிரிட்டிஷார் உண்மை பேசுகிறபோது இந்தியர்களால் தங்கள் மனதில் பதியவைக்கப்பட்டிருக்கிற மகாத்மா என்கிற பிம்பம் உடைந்துவிடும் என்கிற பயம் ஏற்பட்டுவிட்டது. அதனால் பிரிட்டிஷாரின் வரலாற்றறிவு பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். முதலில் தங்களின் வரலாற்றறிவை சரிபார்த்துக்கொள்ளட்டும்.

இதையே நானும் சொல்ல நினைச்சன்!!!

Edited by பிறேம்

இந்தியாவே ஒரு பெரிய மாயை!

அந்த பெரிய மாயையை தாங்கி நிற்கும் பலவீனமான மாயத் தூண்களான மதசார்பின்மை, கூட்டாற்சி, ஜனாநாயகம் போன்றவற்றில் ஒன்று தான் இந்த மகாத்மா என்ற மாயை!

மகாத்மாவின் மாயை ஏற்கனவே திலீபனின் தியாக தீபத்தில் பொசுங்கிப்போய் விட்டது!

செய்தியின் உண்மையான முலம் குறித்த தொலைகாட்சியிடமிருந்தோ அல்லது ஆங்கில ஊடகம் ஒன்றிலிருந்து பெற்றால்தான் ஆராயலாம்!

இராணுவத்தினர் திருப்பி தாக்கியதில் 500 புலிகள் பலி, பிரபாகரன் சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு தப்பியோட்டம் என்று தலைப்பிடும் பத்திரிகைகளின் செய்திகளை வைத்து விவாதிப்பது நேர விரயம்.

ஆங்கிலேயர்கள் உலகை கட்டியாண்ட போது இந்தியர்களின் அறிவு எந்த மட்டத்தில் இருந்தது என்பதை தட்ஸ்தமிழ் ஒரு முறை நினைவு மீட்டிப்பார்ப்பது சிறந்தது. எனெனில் இன்று ஆங்கிலேயர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று புரிந்து கொள்ள இந்தியர்களுக்கு இன்னும் 6 தசாப்தங்கள் செல்லலாம்!

:icon_mrgreen:

ஹேராம் படத்தில் கூட கமல் எவ்வளவு அழகாக இந்த மாயையை தோலுரித்து காட்டியிருக்கிறார்.....பிறகு படம் வெளிவர வேண்டும், இந்த ஜனநாயக நாட்டில் வெளியில் நடமாட வேண்டும், உயிர்வாழ வேண்டும் என்ற காரணத்தினால் என்னவோ கடைசியில் உச்சக்கட்டத்தில் முடிவை மாற்றி அமைத்திருக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியா காந்தீயமா அல்லது ரெண்டுமா மாயை எண்டிறதையும் ஆராயுங்கோ!

காந்தித் தாத்தா வாங்கித் தந்த சுதந்திரம்

யாழ்ப்பாணம் டவுனுக்கு செல்லும் போதெல்லாம் யாழ் போதனா மருத்துவமனைக்கு முன்பாகவுள்ள அந்த முதியவரின் சிலையை நான் அடிக்கடி கண் வெட்டாமல் பார்த்துக் கொள்வது வழக்கம். வளைந்த முதுகுடன் கோலை ஊன்றி அவர் நிற்கும் அழகு அந்தச் சின்னஞ் சிறு வயதிலேயே ஒரு வித ஈர்ப்பை எனக்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒரு நாள் எனது தாத்தாவுடன் அவரது கையைப் பிடித்துக்கொண்டு டவுனுக்குச் செல்லும்போது அவரைப் பற்றிக் கேட்டேன். அவர்தான் காந்தித் தாத்தா இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் என்றார் தாத்தா. அன்றிலிருந்து யாழ்ப்பாணம் டவுன் என்றதும் எனக்கு காந்தித் தாத்தாவும் நினைவுக்கு வந்து விடுவார். அதன் பின்னர் எனது மாமா ஒருவர் காந்தியடிகளின் கதையைச் சொன்னதாக ஞாபகம்.

ஒரு முறை எனது தந்தையார் இந்தியாவுக்குச் சென்றபோது காந்தி மகான் கதை என்ற நூலை எனக்கு வாங்கி அனுப்பியிருந்தார். அஹிம்சை என்ற சொல்லை முதன் முதலாக காந்தியடிகளின் வரலாற்றைப் படிக்கும்போதுதான் தெரிந்து கொண்டேன். இந்தியாவின் விடுதலைக்கு காந்தியடிகளின் அஹிம்சைதான் காரணம் என நான் படித்த பாடசாலைகளிலும் கற்பிக்கப் பட்டது. கத்தியின்றி இரத்தமின்றி போராடிய காந்தியடிகளின் போராட்டமும் இந்திய விடுதலைக்கு அவர் ஆற்றிய பங்கும் எனக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தின..

காந்தியடிகளின் அஹிம்சைக் கோட்பாட்டைப் காட்டி இந்தியத் தேசிய வாதிகள் ஈழப் போராட்டத்தை சிறுமைப் படுத்திப் பேசி வருகிறார்கள். மகாத்மா காந்தி அஹிம்சை வழியில் போரடி வெற்றி பெற்றது போன்று ஈழத்தமிழர்களும் போராட முடியாத என அவர்கிளின் மேல் மட்டங்களிலிருந்து குரல்கள் இன்றளவும் ஒலிக்கின்றன.

அஹிம்சை உண்மையிலேயே ஒரு நாட்டுக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்து விடுமா?

உண்மையில் அஹிம்சை என்பது மக்களுக்கு ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமே தவிர விடுதலைக்கு ஒரு போதும் வழி சமைத்துக் கொடுக்காது. இலெனின், ஹோசமின், ஃபிடல் கஸ்ட்றோ போன்று உலகப் போராட்ட வரலாற்றில் தனி இடத்தைப் பிடித்தவர்கள் அனைவரும் நடத்தியது வீரம் செறிந்த ஆயுதப் போராட்டங்களே. ஆஹிம்சைப் போரட்டத்தை எதிரிகள் நசுக்கக்கூடத் தேவையில்லை கண்டு கொள்ளாமல் விட்டாலே போதும் அது பல ஆண்டுகள் நீடித்து வெற்றி பெறாமலே போய்விடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

அப்படி என்றால் இந்தியா எப்படி வெற்றி பெற்றது?

இந்தியாவின் முதல் விடுதலைப்போர் 1857 ஆம் ஆண்டு நடைபெற்றதாக இந்திய வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் அதற்கு ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே 1755 ஆம் ஆண்டு திருநெல்வேலி சிவகிரி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டான் செவ்வாலைத் தலைநகராமாகக் கொண்டு ஆட்சிசெய்த புலித்தேவன் என்ற தமிழ் மன்னன் வெள்ளையனே வெளியேறு என்ற வீர முழக்கத்தை எழுப்பினான். விடுதலையின் முதல் குரல் புலித்தேவனிடமிருந்துதான் ஒலித்தது. அவனைத் தொடர்ந்து வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர் போன்றவர்கள் விடுதலைப் போரில் ஈடுபட்டார்கள். இவர்கள் நடத்திய போராட்டங்கள்; அனைத்தும் இரத்தம் சிந்திய ஆயுதப் போராட்டங்களே. இவர்களின் போராட்டங்கள் 1806 ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சியுடன் முடிவுற்றது. அது மட்டுமல்ல இவர்கள் யாரும் இந்திய உணர்வுடன் போராடவில்லை. ஏங்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த வீரபாண்ய கட்டப்பொம்மனை எடுத்துக் கொள்வோம். கட்டப்பொம்மன் யார்? திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி என்ற சிறு பகுதியை ஆண்டு வந்த குறுநில அரசன். அவனுக்கு இருந்த கவலை தன்னுடைய ஆளுமைக்கு உட்பட்டிருந்த பாஞ்சாலங்குறிச்சி வெள்ளையர்கள் கைக்கு போய்விடக்கூடாது என்பது மட்டுமே.

அதேபோன்று வடபுலங்களை எடுத்துக் கொண்டால் வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதப் போராட்டங்களை மேற்கொண்ட ஜான்சி ராணி லட்சிமிபாய், ராணா பிராதாப்சிங் போன்றவர்களும் தங்கள் நாட்டு உணர்வுடன் போரிட்டார்களேயன்றி இந்திய உணர்வுடன் அல்ல. 1755 ஆம் ஆண்டு தொடங்கிய ஆயுதப்போராட்டம் 1945 இல் நேதாஜி மறையும்போதும் கனன்று கொண்டுதான் இருந்தது. இவ்வாறு தனித்தனியே நடந்த போராட்டங்களையே பிற்காலத்தில் காந்தியடிகள் ஒன்றாக இணைத்து இந்தியத் தேசியப் போராட்டமாக மாற்றினார். 1920 ஆம் ஆண்டிலிருந்து இந்திய விடுதலைப் போராட்டம் காந்தியடிகளின் தலைமையின் கீழ் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. இருந்தாலும். இந்திய விடுதலைக்கு அவரது அஹிம்சை காரணமில்லை என்பதே வரலாறு காட்டும் உண்மை.

அஹிம்சை இந்தியவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது உண்மை என்றால் பிரிட்டனின் கொலனி ஆதிக்கத்தில் இருந்த இலங்கை, பர்மா (தற்போது மியான்மார்), மலேசியா போன்றவற்றின் விடுதலைக்கும் அஹிம்சையா காரணம்?

உண்மையில் காந்தியடிகள் ஒரு மிதவாதத் தேசியவாதியாகவே தன்னை வெளிக்காட்டி நின்றார். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு அவரிடம் காணப்படவில்லை. அவரது போராட்டம் பிரித்தானியாவுக்கு அழுத்தத்தையோ தலையிடியையோ கொடுக்கவில்லை. தேசியத்தை தெய்வீகத்துடன் இணைத்து ஆன்மீக அரசியல் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது இரபிந்திரநாத் தாகூர் காந்தியடிகளிடம் ஆன்மீகம் வேறு அரசியல் வேறு, தேசியம் வேறு தெய்வீகம் வேறு எனவே இரண்டையும் ஒன்றாக்க வேண்டாம் என வேண்டிக்கொண்டார். ஆனால் காந்தியடிகளோ அதைக் கேட்காமல் ராமராச்சியம் காண வெளிக்கிட்டார்.. எனவே அவரது ஆன்மீக அரசியல் மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டது என்று சொல்வது நகைப்புக்குரியது

இந்திய விடுதலைக்கு எது உண்மையான காரணம் என்பதை John Kenneth Galbraith என்ற கனடிய-அமரிக்க பொருளாதார அறிஞர் தனது A Journey Through Economic Time என்ற நூலில் விரிவாக அலசுகிறார். கொலனியாதிக்கத்தில் உள்ள நாடுகளில் நடந்த போராட்டத்தை மறுத்து பொருளாதாரமே இந்திய விடுதலைக்கு அடிப்படைப் காரணம் என்று கூறுகிறார்.

அவரது கருத்து வரலாற்றைக் கூர்ந்து கவனிக்கும்போது மிகச் சரியாகவே தென்படுகிறது. தனிப்பட்ட மனித வாழ்வில் தொடங்கி அரசுகள் வரை அனைத்திற்கும் முதுகெலும்பாக விளங்குவது பொருளாதாரக் காரணிகளே. இந்தியா, இலங்கை, பார்மா போன்ற நாடுகளை அடிமை கொண்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கொம்பனி என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலையாய நோக்கம் ஆசிய நாடுகளைச் சுரண்டி தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான். வணிக நோக்கில் வந்தவர்கள் அடுத்து நாடுகளை அடக்கியாளத் தொடங்கினார்கள்.

1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் உலக அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் தென்பட்டன. அமரிக்காவும் சோவியத் யூனியனும் மிகப் பெரிய வல்லரசாக மாறத் தொடங்கின. இரு வல்லரசுகளுக்குமிடையில் பனிப்போர் தொடங்குகியது. அதுவரைக்கும் சூரியன் மறையாத பேரரசு என்ற இறுமாப்புடன் இருந்த பிரிட்டன், இரண்டாம் உலகப்போரில் நேரடியாக பங்கெடுத்ததன் விளைவால் பாரிய பொருளாதார வீழ்ச்சியைக் கண்டது. எனவே தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய வரலாற்றுத் தேவை பிரிட்டனுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தனது நாட்டிலிருந்து வெகு தூரத்தில் உள்ள இந்தியா என்ற மிகப் பெரிய நிலப்பரப்பை நிர்வாகம் செய்ய முடியவில்லை. இந்தியாவுக்கு விடுதலையைக் கொடுக்க அவர்கள் முடிவுசெய்கிறார்கள். இதுதான் இந்திய விடுதலையில் ஒளிந்திருக்கும் உண்மைக் காரணம்.

எனவே காந்தித் தாத்தாவால் சுதந்திரம் கிடைத்தது என்ற கருத்து மிகைப் படுத்தப் பட்டது என்பது மட்டுமல்ல வரலாற்றுக்கு முரணானதும் கூட..

www.tamil.2.ag

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியர்களும் பகுத்தறிவாளர்கள்(??) ஆகிவிட்டார்கள் என்பதை நினைக்கின்றபோது மகிழ்ச்சியாக இருக்கின்றது. தாங்கள் கண்ணால் காணாத எதுவுமே உண்மையில்லை என்ற பகுத்தறிவுக் கொள்கையின்(??) வெளிப்பாடு தான் காந்தியையும், சர்சிலையும் காணாதபோது அது பொய் என்று சொல்ல வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் பகுத்தறிவுக் கொள்கை(??) பரவுதோ இல்லையோ, பிரித்தானியாவில் கால் வைத்து விட்டதே!!!!!!

இராமன் இராவணன் தொடங்கி புத்தர் அல்லா வரை இந்த இலகத்தில் எல்லாமே மாயைதான். மாயையைத்தான் தலை மேல் வைத்துக் கொண்டு, ஆடிகிறார்கள். இன்று பிரித்தானியர்களுக்கு வந்த பகுத்தறிவு நாளை உலகம் முழுவகுக்கும் வரும்

  • தொடங்கியவர்

பிரித்தானியர்களும் பகுத்தறிவாளர்கள்(??) ஆகிவிட்டார்கள் என்பதை நினைக்கின்றபோது மகிழ்ச்சியாக இருக்கின்றது. தாங்கள் கண்ணால் காணாத எதுவுமே உண்மையில்லை என்ற பகுத்தறிவுக் கொள்கையின்(??) வெளிப்பாடு தான் காந்தியையும், சர்சிலையும் காணாதபோது அது பொய் என்று சொல்ல வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் பகுத்தறிவுக் கொள்கை(??) பரவுதோ இல்லையோ, பிரித்தானியாவில் கால் வைத்து விட்டதே!!!!!!

இராமன் இராவணன் தொடங்கி புத்தர் அல்லா வரை இந்த இலகத்தில் எல்லாமே மாயைதான். மாயையைத்தான் தலை மேல் வைத்துக் கொண்டு, ஆடிகிறார்கள். இன்று பிரித்தானியர்களுக்கு வந்த பகுத்தறிவு நாளை உலகம் முழுவகுக்கும் வரும்

இங்கிலாந்தின் மிகப் பெரிய தலைவர் என்று அறியப்பட்டவர் சர்ச்சில். ஆனால் அவரையே கற்பனைக் கதாபாத்திரம் என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை விட காமெடி என்னவென்றால், கற்பனைக் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ்தான் உண்மையான மனிதர் என்றும் பெரும்பாலானவர்கள் ெதரிவித்தது தான்.

அட உங்கள் போன்றவர்கள் கணிப்பில் பகுத்தறிவு என்பது இதுதானோ?? பேஷ் பேஷ்.

  • கருத்துக்கள உறவுகள்

அட உங்கள் போன்றவர்கள் கணிப்பில் பகுத்தறிவு என்பது இதுதானோ?? பேஷ் பேஷ்.

பகுத்தறிவு என்பது எது என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் பகுத்தறிவாளர்கள் எனப் படம் காட்டுகின்றவர்கள் செய்கின்ற கூத்தைத் தான் சொல்ல வருகின்றேன். இது வடிவாகச் சொல்லப் போனால்.. போராட்டம் என்றால் காசு அடிக்கவும், பணம் பறிக்கவும் தான் என்று அடித்துக் கொண்டு வெளிநாடு ஓடினவர்களின் போராட்டம் என்பது போலத் தான் இவர்களின் பகுத்தறிவு வாதமும்... நன்றாகப் புரியுதா?

அது சரி. எல்லாத்தைக் கண்டாடும் ஏன் "பொச்"சடிக்கின்றீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.