Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவே வாய் திறந்து பேசு

Featured Replies

இலங்கையில் வரலாறு காணாத கோர முகத்துடன் இன்று யுத்தம் வாய் பிளந்து நிற்கின்றது. சிங்களப்படைகளின் கோரத்தாண்டவம் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர் உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கின்றன. அப்பாவி மக்களின் வாழ்விடங்களின் மேல் சிங்களப்படைகளின் விமானத்தாக்குதலில்

உடலம் கிழிந்து உதிரம் சொரிந்து உயிர் துறக்கும் ஓலம் தினம் கேட்டுக்கொண்டிருக்கின்றது.

சர்வதேச நாடுகளின் மனிதாபிமானக் கோரிக்கைகள் எதனையும் காது கொடுத்துக் கேளாது சிங்களப்படைகள் போர் முரசம் கொட்டி ஆர்ப்பரித்து நிற்கின்றன. சிங்களப்படைகளின் தளபதி இவ்வாறு அறிக்கை விடுத்து நிற்கின்றார்.

கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா

சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2008,

வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிளிநொச்சிப் பகுதியை நிச்சயம் மீட்போம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

53, 55, 57, 58, 59 ஆகிய படையணிகள் வன்னியைச் சுற்றிவளைத்து விட்டன. இதனால் எமது கவனத்தை திசைதிருப்ப விடுதலைப் புலிகள் முனைகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் அத்தகைய நோக்கங்களைக் கொண்டவையே ஆகும்.

இத்தகைய தாக்குதல்களைக் கண்டு நாம் பின்வாங்கப் போவதில்லை. கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம். வன்னியில் உள்ள 2 லட்சம் மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விரைவில் மீட்போம்.

இராணுவத்தில் 33,000 பேரை கடந்த வருடம் மட்டும் இணைத்திருக்கின்றோம். மேலும் 15,000 பேரை இந்த வருடம் சேர்க்கத் திட்டமிட்டிருக்கின்றோம். இராணுவத்திற்கு ஆட்திரட்டுவது தற்போது இலகுவான விடயமாகி உள்ளது//

சிங்களப் பேரினவாதத் தளபதியின் அகங்காரம் இவ்வாறு இருக்கின்றதென்றால் அரசியல் வாதிகளின் எகத்தாளமோ எல்லை மீறிப்போய்விட்டது. சர்வதேச நாடுகளின் கோரிக்கையான அமைதிப்பேச்சு வார்த்தையை தொடங்கி சமஸ்டி அமைப்பிலான தீர்வை அடைவதற்கான எத்தனங்களைச் செயற்படுத்துங்கள் என்பதைப் புறந்தள்ளி கொக்கரித்து நிற்கின்றார்கள்.

//விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு அரசிற்கு விருப்பமில்லை: நிமல் சிறிபால டீ சில்வா

06 பெப்ரவரி 2008,

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

நாங்கள் விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு அக்கறை கொள்ளவில்லை. சமஸ்டி முறையிலான தீர்வை வழங்குவதற்கும் நாம் தயாரில்லை. அதிகாரப் பகிர்வு தீர்வையே முன்வைக்க முடியும். //

மூன்றாந்தரச் சிங்களக் கட்சிகளின் நிலைப்பாடோ நேரடி இனவாதத்தைக்கக்கி தமிழ் மக்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பதையே மறுக்கின்றனர்.

//தமிழர்களுக்கு சிறப்பு அடையாள அட்டைகள் வழங்குங்கள்: கெல உறுமய

10 பெப்ரவரி 2008,

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தனியாக சிறப்பு அடையாள அட்டைகளை வழங்குமாறு ஜாதிக கெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் பேச்சாளர் நிசந்த சிறீ வர்ணசிங்க நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது: தமிழர்களுக்கு சிறப்பான அடையாள அட்டைகளை வழங்குமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்கவுள்ளோம். இது தொடர்பான திட்டத்தையும் நாம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக நாம் இதனைக் கோரி வருகின்றோம். தற்போதுள்ள நிலமையில் இது மிக அவசியமானது என்றார் அவர்//

இதேநேரம் சிங்களப் பேரினவாத பேயாட்சி நடத்தும் மகிந்த ராஜபக்ஸ பிணந்தின்னும் ஆட்சியின் நோக்கங்களை சர்வதேச மனித நேய வரைகறைகளையெல்லாம் கருத்துக் கெடுக்காத அலட்சியத்துடன் தான் தோன்றித்தனமாக காட்டாட்சித்தத்துவமாக வெளிப்படுத்துகின்றார்.

`இந்தியா ருடே' நிர்வாக ஆசிரியர் ராஜ் செல்லப்பாவுக்கு அலரிமாளிகையில் நீண்ட பேட்டியில்,

//அரசியல் தீர்வு விவகாரத்துக்கு வந்தால், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களின் துன்பங்களுக்கு பரிகாரம் காண சிபார்சு செய்திருக்கிறது. 13 ஆவது திருத்தம் 1987 இல் மேற்கொள்ளப்பட்டதாகும். மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கவே இது மேற்கொள்ளப்பட்டது. 20 வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டதை ஏன் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

பதில்: ஏன் அவர்களால் முடியாது? இந்தத் திருத்தம் ஒருபோதும் அமுல்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னைய அரசும் புலிகளும் இணங்கியிருந்தனர். இது ஆரம்பத்திற்கான சிறந்த வழியாக இருக்குமென நான் நம்புகிறேன். நாங்கள் அமுல்படுத்தக்கூடிய ஏதாவதொன்றை முதலில் தொடங்கவேண்டும். இதனைச் செய்வதற்கு எனக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை இல்லை. இதுவொரு ஆரம்பம். பின்னர் சர்வகட்சிக்குழுவால் சில புதிய யோசனைகளை எனக்கு சமர்ப்பிக்கமுடியும். அவற்றை நாம் பரிசீலிப்போம். நடைமுறைச்சாத்தியமற்றதும், சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தக் கூடியதுமான தீர்வுகளை முன்வைத்து எனது நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. அவை பார்வைக்கு சிறப்பானதாக இருக்கக் கூடும். ஆனால், பாராளுமன்றத்தில் எரிக்கப்பட்டுவிடும். கலகங்கள் ஏற்படும்.

கேள்வி: தீர்வுப் பொதி எவ்வளவு தூரம் விரைவாக அமுல்படுத்தப்படும்?

பதில்: நான் ஏற்கனவே அமைச்சரவை ஆலோசனைக் குழுவை நியமித்திருக்கிறேன். அவர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறேன்.

அந்த அறிக்கை கிடைத்தவுடன் துரிதமாக அது அமுல்படுத்தப்படும்.

கேள்வி: 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க அதிகமானவற்றை தமிழர்களுக்கு கொடுக்கப்போவதாக தாங்கள் கூறியிருந்தீர்களே?

பதில்: குழுவானது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை காத்திருக்கின்றேன். அதன் பின் தீர்மானிக்கப்படும். அதேசமயம், சகலரினதும் ஆசீர்வாதத்துடனேயே நாங்கள் ஒன்றை அமுல்படுத்த வேண்டும். முன்னைய அரசாங்கம், புலிகள், ஏனைய தமிழ் கட்சிகளின் ஆசீர்வாதமும் வேண்டும். 1987 இல் இல் இலங்கை -இந்திய உடன்படிக்கையின் கீழ் ஏதோவொன்றை பெற்றுக்கொள்வதற்கு ராஜீவ்காந்தி உதவியிருந்தார். மேலதிகமாக உத்தியோகபூர்வமொழி அமுலாக்கக் கொள்கையை அமுலாக்கம் செய்வதை மேம்படுத்த நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். நிர்வாகத்தில் தமிழைப் பயன்படுத்தவும் கற்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸிலும் தமிழர்களை சேர்த்து வருகிறேன். பயங்கரவாதிகளுடன் மட்டும் நாம் போரிடுகிறோம் என்று நினைக்க வேண்டாம்.

கேள்வி: இதனை அமுல்படுத்துவது தொடர்பாக சிங்களக் கட்சிகள் மத்தியில் உங்களுடன் கருத்தொருமைப்பாடு உள்ளதா?

பதில்: 13 ஆவது திருத்தத்தை தமது அரசாங்கமே நிறைவேற்றியிருக்கையில் அதனை ஐ.தே.க. எவ்வாறு எதிர்க்க முடியும்? ஜே.வி.பி. மட்டுமே பிரச்சினையாகும். ஆனால், மாகாணங்களுக்கு அதிகளவு அதிகாரங்களை ஜே.வி.பி. கோரியதுடன் மாகாண சபைகளிலும் பங்குபற்றியிருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

கேள்வி: வடக்குடன் இணைய வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்க விடுவிக்கப்பட்ட கிழக்கு மாவட்டங்களில் ஏன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவில்லை? உடன்படிக்கையில் இது தொடர்பாகப் பரிசீலனை செய்யப்படுவதற்குரிய விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

பதில்: ஏன் நான் செய்ய வேண்டும்? மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கு இப்போது நீங்கள் சென்றால் இதனை அவர்கள் எதிர்ப்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இந்த நாடு பிளவுபடுவதற்கு நான் இடமளிக்கமாட்டேன்.

கேள்வி: இந்தியாவில் போன்று சமஷ்டி முறைமையை ஏன் மேற்கொள்ள முடியாது?

பதில்: சமஷ்டி பற்றிய கதை முடிந்ததொன்று, இப்போது அது பற்றிப் பேச்சு இல்லை. வரலாற்று ரீதியாக சமஷ்டி என்ற சொல்லானது சந்தேகமானதும் பிரிவினைவாதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டதுமாகும். ஒற்றையாட்சிக்குள் அதிகபட்சம் அதிகாரப் பரவலாக்கத்திற்கான மக்கள் ஆணையை நான் பெற்றுள்ளேன். அதனை நான் அமுல்படுத்தப்போகின்றேன்.

அதே நேரம் தனது அனைத்து முடிவுகளுக்கும் இந்தியாவின் ஆதரவும் பின்புலமும் இருப்பதாகவும் பகிரங்கப்படுத்துகின்றார்.

//`இந்தியா ருடே' நிர்வாக ஆசிரியர் ராஜ் செல்லப்பாவுக்கு அலரிமாளிகையில் நீண்ட பேட்டியொன்றை அளித்திருக்கும் மகிந்த ராஜபக்‌ஷ இந்தியா தங்களுடன் இருப்பதாகவும் தனது ஆதரவை இந்தியா வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி: 2005 இல் தாங்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது இந்தியா அதிகளவு செய்யுமென எதிர்பார்த்திருப்பதாகத் தாங்கள் கூறியிருந்தீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு இந்தியா உயிரூட்டம் அளிக்கிறதா?

பதில்: இந்தியாவின் அணுகுமுறை மிகச் சாதகமானதாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் உள்ளது. எமது உறவு மிகச்சிறப்பான நிலையில் உள்ளது.

கேள்வி: ஆனால், புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை உங்கள் அரசாங்கத்துக்கு விற்பனை செய்ய இந்தியா விரும்பவில்லை?

பதில்: ஆயுதங்களை நாம் எங்கும் வாங்கமுடியும். ஆனால், நல்ல நண்பனை வாங்கமுடியாது. நல்ல நண்பனே எமக்குத் தேவை. இந்தியா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நாடு. பலம் வாய்ந்த இந்தியாவால் அயல் நாடுகளின் அபிவிருத்திக்காக நிரம்பச் செய்ய முடியும். இலங்கைக்கு மட்டுமல்லாமல் ஏனையோருக்கும் அதனை மேற்கொள்ள முடியும். இந்தியா எங்களுடன் உள்ளது. அவர்களின் ஆதரவை அவர்கள் எமக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

கேள்வி: யுத்தத்தின்போது உங்கள் அரசாங்கத்தால் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய நாடுகளும் குற்றம் சாட்டுகின்றனவே?

பதில்: கிழக்கில் சில குற்றச்சாட்டுகள் உள்ளன. இவைதொடர்பாக நாம் விசாரணை மேற்கொண்டோம். ஆனால், ஒருவருமே முறைப்பாடு தெரிவிக்க விரும்பவில்லை. பிரபல்யம் வாய்ந்தோரை உள்ளடக்கிய ஆணைக்குழுவை நாம் நியமித்தோம். இந்தக் குற்றச் சாட்டுகள் தொடர்பாக ஆராய இக் குழு நியமிக்கப்பட்டது. ஆனால், எமக்கு முறைப்பாடுகள், ஆதாரம்,சாட்சிகள் தேவையாகும். இந்த மாதிரியான வழக்குகளில் இவை இருந்தால் நாம் நடவடிக்கை எடுப்போம். //

//இலங்கை இராணுவத்தின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று 5 தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் பூனே நகருக்கு இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இந்திய இராணுவத்தின் உயர் பாதுகாப்பு நிறுவனங்களில் இந்த அதிகாரிகள் குழுவுக்கு நவீன புலனாய்வுத்துறை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

அவரின் கூற்றை மெய்ப்பிப்பதைப் போன்றே இந்திய இராணுவ இராஜதந்திர நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன என்ற சந்தேகம் நடப்பு நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது அப்பாவி ஈழத்தமிழருக்கு உருவாகின்றது.

இந்திய தேசிய பாதுகாப்பு கல்வி நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை அதிகாரிகள் குழுவுக்கு ஆரம்பகட்ட பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாக `ரைம்ஸ் ஒவ் இன்டியா' பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது

பாக்குநீரிணையிலும் மன்னார் குடாவிலும் கடற்புலிகளின் படகுகள் நடமாட்டம் தொடர்பாக இந்தியக் கடற்படையும் கரையோரக் காவற்படையும் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொண்டதாக அண்மையில் இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புகளின் பின்னணியிலேயே இலங்கை அதிகாரிகள் குழுவின் விஜயம் முக்கியத்துவம் பெறுவதாக ஊகிக்கப்படுகின்றது//

ஈழத்தமிழ் மக்கள் தம் தொப்பூள் கொடி உறவுகளாக நினைத்திருந்த தாய்த்தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளோ வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல அல்லல் படும் ஈழத்தமிழரை இன்னும் வேதனையில் ஆழ்த்துகின்றது.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனது ஆட்சிக்காலத்தில் இது சொர்க்கமாக திகழ்ந்தது. இப்போது விடுதலைப் புலிகளின் வேட்டைக்காடாக மாறியுள்ளது.//

தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி,

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக தங்கள் மீது வீண்பழி சுமத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் அந்த ஆட்சிமாற்றத்தை சந்திக்க தாம் தயாராகவிருப்பதாகத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, தமிழகம் புலிகளின் வேட்டைக் காடாகிவிட்டதாக காங்கிரஸார் பொய் பிரசாரம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்ஏதோ,தமிழ்நாடு புலிகளின் வேட்டைக்காடாகிவிட்டதுபோல் காங்கிரஸ் கட்சியினர் பேசிவருகின்றனர். கிருஷ்ணசாமி, அமைச்சர் சிதம்பரம் போன்றோர் எம்மீது வீண் பழி சுமத்துகின்றனர்.//

தமிழக அரசியல் கட்சிகளின் பரப்புரை இவ்வாறு இருக்கையில் தமிழகக் காவல் துறையின் அறிக்கை நிலமையைத் தெளிபு படுத்துகின்றது.

//தமிழகத்தில் புலிகள் ஊடுருவுவதாக பத்திரிகைகள் மட்டுமே கூறுகின்றன

*அப்படி எதுவுமில்லையென்கிறார் பொலிஸ் ஆணையர்

மதுரை: தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல் இல்லை என்று தமிழக பொலிஸ் ஆணையர் பி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் என பத்திரிகைகளில் மட்டுமே செய்திகள் வருகின்றன. அவ்வாறான சம்பவம் ஏதும் இல்லை. கடலோரப் பகுதிகளில் கியூப் பிரிவு மற்றும் கடலோரக் காவல் படையினரின் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது//

யுத்த அனர்த்தம் கட்டுமீறிப்போய் உயிர்காக்க ஓடி உலையும் அப்பாவிமக்கள் இன்னும் குலையாத நம்பிக்கையுடன் தாய்த்தமிழகத்தை நோக்கி ஓடிவருகிறார்கள். கடலிலே கண்ணிவெடியைப் புதைத்து விட்டு பிணந்தின்னிப்பேய்கள் போலக் காத்திருக்கும் சிங்களக் கடற்படையைத்தாண்டி தமிழகக் காவற்படையையும் தாண்டி தமிழக மண்ணில் கால் பதிப்பது என்பது மறு பிறப்பு எடுப்பதைபோல் என்பது தெரிந்திருந்தும் அவர்கள் ஓடிவருகின்றார்கள் என்றால் எத்தனை கொடூரம் ஈழத்து மண்ணில் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

//10 இலங்கை அகதிகள் தமிழகம் வருகை

இராமேஸ்வரம் : இலங்கையிலிருந்து 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

இலங்கையின் கடந்த சில மாதங்களாக இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதனால் இலங்கையிலிருந்து தமிழர்கள் மீண்டும் அகதிகளாக தமிழகத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் அகதிகளாக விமானம் மூலமும் சென்னை வந்தனர்//

இத்தகைய அவலங்களை எதிர்கொள்ளும் மக்களுக்காக இன்னும் நெஞ்சில் ஈரம் உள்ள தமிழக மக்களும் அமைப்புகளும் குரல் கொடுக்கத்தான் செய்கின்றன.

//சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துக: இந்திய அமைச்சரிடம் பெ.தி.க. நேரில் வலியுறுத்தல்

07 பெப்ரவரி 2008

சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று 10 லட்சம் தமிழ் மக்கள் கையெழுத்திட்ட படிவங்கள் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் இன்று வியாழக்கிழமை நேரில் கையளிக்கப்பட்டது.

புதுடில்லியில் ஏ.கே.அந்தோணியின் இல்லத்தில் இன்று முற்பகல் 10:15 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, பொதுச் செயலாளர்களான விடுதலை இராசேந்திரன், கோவை கு.இராமகிருட்டிணன், பெரியார் தி.க. தலைமைக் குழு உறுப்பினர் சட்டத்தரணி சா.துரைசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏ.கே. அந்தோணியை சந்தித்தனர்.//

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த எம்.ஜி.ஆரை மிரட்டினார் ராஜீவ்: புலவர் புலமைப்பித்தன்

//நான் ராஜீவ் கொலையை இரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட ஏழாயிரம் தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா? அண்ணல் காந்தியை மதவெறியன் கோட்சே, அவனது கையில், "இஸ்மாயில்" என்று பச்சை குத்திக்கொண்டு சுட்டுக் கொன்றான். அவன் யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்வாதிகாரியான சாவர்க்கரின் சீடன். வாரிசு. அந்த இயக்கத்தின் தத்துப்பிள்ளையாக வந்த பாரதிய ஜனதா, கோட்சேயின் குருவான சாவர்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்ததே. அதை காங்கிரசால் ஏன் தடுக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் வெட்கப்படவில்லை? இந்திரா காந்தியைக் கொன்ற பியாந்த்சிங்குக்கு என்ன நடந்தது? இந்திரா நினைவு நாளை காங்கிரஸ் கொண்டாடிய அதே நாளில், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பியாந்த்சிங் நினைவு நாளை கடைப்பிடித்தது. அவனது இரண்டு பிள்ளைகளை பிரபந்தக் கமிட்டி தத்தெடுத்துக் கொண்டது. இதற்காக காங்கிரசாருக்கு வெட்கப்படவோ, வேதனைப்படவோ தெரியவில்லை. இதைத் தடுக்க அவர்களால் முடியவில்லை. அது மட்டுமா? மன்மோகன்சிங் பிரதமராக வந்த போது, இந்திரா காந்தி படுகொலையின் போது பறிக்கப்பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட என் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா?//

இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து காருண்யம் காட்ட வேண்டிய இந்திய மத்திய அரசு என்ன செய்கின்றது. சிங்களப் பேய்களின் பிணம் தின்னும் ஆட்சியில் அவதிப்படும் தமிழ் மக்களுக்காக என்ன செய்யப்போகின்றது. வெத்து வேட்டு அறிக்கைகள் மட்டும் போதுமா?

இதுவே ஒரு தமிழனல்லாத சாதிக்கு நிகழ்ந்திருந்தால் இந்தியா இவ்வாறுதான் மெளனம் சாதித்து நிற்குமா?

சர்வதேச நாடுகள் எல்லாம் சமஸ்டி பற்றிப் பிரலாபிக்கும் போது 20 வருடங்களுக்கு முன்மொழியப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி அவதானம் தெரிவிப்பதாக கண்துடைப்பு பேட்டி கொடுப்பது சரியானதா?

சர்வதேச சமூகமாக எங்கோ இருக்கும் நாடுகளுக்கு தமிழ் மக்கள் மேல் இருக்கும் அக்கறைகூட இல்லாது இந்தியா இருப்பது ஏன்?

13ஆவது திருத்தம் அமுலாவதைஊன்றி அவதானிக்கிறது இந்தியாபுதுடில்லியில் ரணிலிடம் தெரிவிப்பு

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இடைக்கால நடவடிக்கையாக அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல் செய்யப்போவதாக அறிவித்திருக்கும் இலங்கை அரசு, அதனை எப்படி எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்த விழைகின்றது என்பதை இந்தியா ஊன்றிக் கவனிக்கும்.இவ்வாறு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் புதுடில்லி அதிகார வர்க்கம் தெரிவித்திருப்பதாக நம்பகமாக அறியப்படுகின்றது

பதின்மூன்றாவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதில் மஹிந்தவின் அரசு இதயசுத்தியுடன் ஈடுபடுமா அல்லது முன்னர் வரதராஜப்பொருமாள் தலைமையிலான வடக்கு கிழக்கு மாகாணசபை செயற்பட்ட காலத்திலேயே அதற்கு உரிய அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்காமல் இழுத்தடித்தமை போன்று கொழும்பு நிர்வாகம் நடந்துகொள்ளுமா என்பதை இந்தியா ஊன்றிக் கவனிக்கத் தயாராகக் காத்திருக்கின்றது என்ற தகவலும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக அறியவந்தது.

இந்தியாவே நீ என்ன செய்யப்போகின்றாய்..?

தர்மத்தின் பேரால் அசோகச்சக்கரத்தைகொண்ட இந்தியாவே... அகிம்சையின் பேரால் சகிப்புத்தன்மையைப் போதித்த இந்தியாவே... அன்பைப்போதிக்கும் மதங்களைத் தந்த இந்தியாவே...

உன் மண்ணில் உதித்த மதத்தைப் பின்பற்றும் நாங்கள் கேட்கின்றோம்...

உன் மண்ணில் பேசுகின்ற மொழியைப்பேசும் நாங்கள் கேட்கின்றோம்....

உன்னோடு தொப்பூள் கொடி உறவு பூண்ட நாங்கள் கேட்கின்றோம்...

கொலைக்களத்தில் சிக்கிச் சீரழிந்து உதிரத்தைச் சொரிந்து உறவைத் தொலைத்து உயிரை இழந்த வேதனையைச் சுமந்து நிற்கும் ஈழத்தமிழினம் கேட்கின்றோம்..

இந்தியாவே வாய் திறந்து பேசு....

நன்றி:http://www.ravusura.blogspot.com/

இந்தியாவே நீ என்ன செய்யப்போகின்றாய்..?

இந்தியா எதுவும் செய்யாது. சிங்களத்திற்கு ஆயுத மற்றும் தகவல் பரிமாற்றங்களை செவ்வனே செய்யும்.

தர்மத்தின் பேரால் அசோகச்சக்கரத்தைகொண்ட இந்தியாவே...

ம்.. :wub::wub: அசோகச் சக்கரம் எல்லாம் சும்மா. தர்மம் என்று ஒன்றிருந்திருந்தால் சுதந்திரம் கிடைத்த பின் மாகாத்மா 6 மாதத்தில் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார். இந்தியா மட்டுமல்ல எந்தநாடும் "தர்மம்" என்பதை கடைப் பிடிக்க முடியாது. தர்மம் என்ற பேச்சு ஒரு முகமூடி.

அகிம்சையின் பேரால் சகிப்புத்தன்மையைப் போதித்த இந்தியாவே...

எப்போது? யாருக்கு போதித்தார்கள்?

அன்பைப்போதிக்கும் மதங்களைத் தந்த இந்தியாவே...

எந்த மதமும் அன்பை போதிப்பதில்லை. ஆனால் "அன்பு" என்ற வார்த்தையை மிகத் தாராளமாக பயன்படுத்துகிறார்கள்.

உன் மண்ணில் உதித்த மதத்தைப் பின்பற்றும் நாங்கள் கேட்கின்றோம்...

உன் மண்ணில் பேசுகின்ற மொழியைப்பேசும் நாங்கள் கேட்கின்றோம்....

உன்னோடு தொப்பூள் கொடி உறவு பூண்ட நாங்கள் கேட்கின்றோம்...

முதலில் இந்தியா, இந்திய தேசியம், இந்திய ஒருமைப்பாடு இவற்றை எல்லாம் கடந்து தமிழ்நாடு, தமிழர், தமிழ்ப் பண்பாடு என்ற வட்டத்துக்குள் வர நீண்ட காலம் எடுக்கும். எனவே கேள்விகளை கேட்பதிலும் பார்க்க நாமே செயற்படுவது நல்லது.

கொலைக்களத்தில் சிக்கிச் சீரழிந்து உதிரத்தைச் சொரிந்து உறவைத் தொலைத்து உயிரை இழந்த வேதனையைச் சுமந்து நிற்கும் ஈழத்தமிழினம் கேட்கின்றோம்..

கொலைக் களத்தில் நிற்பவன் கேட்க மாட்டான். செயற்படுவான். :)

இந்தியாவே வாய் திறந்து பேசு....

என்றைக்கு இந்தியா பேசியது (நேர்மையாக)? இன்றைக்கு பேசுவதற்கு.

Edited by Eelathirumagan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.