Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விவகாரத்தில் இந்தியா குளறுபடித்தனமான நிலைப்பாட்டில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரத்தில் இந்தியா

குளறுபடித்தனமான நிலைப்பாட்டில்

06.03.2008

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய சமிக்ஞைகள் மீண்டும் குளறுபடித்தனமாகவே வருகின்றன.

""இலங்கை விவகாரத்தை இந்தியா கையாளும்போது, இலங்கைத் தமிழர்கள் பற்றிய சிரத்தை இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் விடயமாகும். அதை விலக்கி இந்தியா நடந்து கொள்ளவே முடியாது.'' என்ற சாரப்பட இந்திய நாடாளுமன்றத்தில் அறிவிக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

அது வெறும் நாடாளுமன்றப் பேச்சு மட்டுமல்ல. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டை இந்திய நாடாளுமன்றத்துக்கும் இந்திய தேசத்துக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எடுத்துக் கூறும் கொள்கை விளக்க உரையாகும்.

இலங்கை விவகாரத்தில் இலங்கைத் தமிழரின் சிரத்தை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என்று தனது கொள்கை விளக்கத்தை ஒருபுறம் வெளியிடும் இந்தியா, மறுபுறம் இலங்கையில் தமிழரின் இருப்பையே வாழ்வாதார அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்கும் இலங்கை அரசின் தீவிர இராணுவ நெறிப்போக்குக்கு முண்டு கொடுக்கும் விதத்தில் சமிக்ஞைகளை வெளிப்படுத்தி நிற்கின்றது.

அதுவே இன்றைய விசித்திரமான நிலைமையாகும்.

விடுதலைப் புலிகளிடமிருந்து வன்னியை இதோ மீட்கிறோம் என்றும்

இந்த ஓகஸ்ட் மாதத்துக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் காலி செய்து விடுவோம் என்றும்

இனிமேல் அடுத்த பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்குப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கவே மாட்டார் என்றும்

வரிசையாக சூளுரைத்த கொழும்பு அரசின் பாதுகாப்புத்துறைத் தலைவர்கள், இப்போது தமது காலக்கெடுவை சுமார் ஒன்றரை வருடத்துக்குப் பின் நகர்த்தி அடுத்த வருட இறுதிவரை அதனைத் தள்ளிப் போட்டிருக்கின்றார்கள்.

முகமாலை முன்னரங்கிலும், மன்னாரிலும், மணலாறிலும் கடந்த ஒருவருடமாக முன்நகர்வு முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தராத விரக்தியில் தடுமாறும் பாதுகாப்புத் தரப்பு வெறும் அறிக்கைப் பிரசாரத்தை மட்டும் நம்பி இனிமேலும் மணலைக் கயிறாகத் திரிக்க முடியாது என்ற யதார்த்தம் விளங்கிய பின்னணியில் மீண்டும் புதுடில்லிக்குக் காவடி தூக்கத் தொடங்கியிருப்பது துலாம்பரமாகத் தெரிகின்றது.

அதைத்தான் அவர்கள் செய்யவேண்டும். வேறு மாற்று மார்க்கமில்லாததால் என்பது புரிகிறது.

ஆனால் அவர்களின் காவடி ஆட்டத்துக்கு ஏற்றாற்போல புதுடில்லி காவடிச்சிந்து இசைப்பதுதான், இவ்விவகாரத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் தரப்பான ஈழத் தமிழர்களுக்கு ஆச்சரியத்தையும், விசனத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

அதுவும், இலங்கைத் தமிழர்களின் நலன் பற்றிய சிரத்தையே எமக்கு முக்கியமானது என்று தனது வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டை வெளியிட்டுக்கொண்டே மறுபக்கத்தில், இலங்கைக்கு ஆயுத தளபாட வசதிகளையும் உதவிகளையும் வழங்கி, அங்கு தமிழர் விரோத யுத்தத் தீவிரத்துக்கு எண்ணெய்யும் வார்க்கின்றது பாரதம்.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரரும், இலங்கையில் ஜனாதிபதிக்கு அடுத்து பாதுகாப்புத் துறையில் அதி உச்ச அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவருமான கோட்டாபய ராஜபக்ஷவும், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவும் இந்தியாவில் டேராப் போட்டிருக்கின்றார்கள். இலங்கை இராணுவத் தளபதிக்கு இந்தியா விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதை கொடுக்கின்றது. இலங்கையின் வான் பாதுகாப்பு வலுவை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதத்தில் புதிய "ராடர்' வேவுக் கருவிகளை இலங்கைக்கு வழங்குகின்றது இந்தியா.

இதுமட்டுமல்ல. இவற்றுக்கும் அப்பால் மேலும் பல ஆயுத தளபாட வசதிகளையும் இந்தியா வழங்கப்போவதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இந்தியப் பத்திரிகைகளுக்கு அண்மையில் அளித்த பேட்டிகளில் இந்தியாவைப் புகழ்கின்றார் இலங்கை ஜனாதிபதி. அதேபோல அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவும் இந்தியாவை விதந்துரைக்கின்றார். இலங்கை இராணுவத் தளபதியும் அதேமாதிரி இந்தியாவுக்குக் குஞ்சம் கட்டுகின்றார்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இத்தகைய நிகழ்வுகள், ஒழுங்குகள், செயற்பாடுகள் மூலம் இந்தியா வெளிப்படுத்தும் அதன் இரட்டைவேட கருத்து நிலைப்பாடு ஆரோக்கியமானதல்ல.

" இலங்கையில் விடுதலைப் புலிகளின் கைகள் ஓங்குவதற்கு இந்தியா அனுமதிக்கக்கூடாது.' என்ற சாரப்பட இந்திய உயர் இராணுவ அதிகாரி ஒருவர் அண்மையில் வெளியிட்டவை எனக் கூறப்படும் கருத்துகள், இந்தியாவின் இன்றைய நிலைப்பாட்டின் உட்பக்கத்தைப் பிரதிபலிக்கும் அம்சமாகக் கொள்ளத்தக்கன.

எது, எப்படியென்றாலும், இந்த இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமக்கு மிக நெருக்கமான நம்பிக்கைக்குரிய அயலவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதில் இந்தியா தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றது என்றே தோன்றுகின்றது.

இராஜதந்திர அரசியலில் கௌரவத்தைப் பார்ப்பதை விட நியாயபூர்வமான நீதியை நிலைநாட்டுவதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இலங்கை விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு நீதி செய்வதை விடுத்து, கௌரவம் பார்க்கின்றது பாரதம். அதனால்தான் அது கொழும்பை அரவணைத்து நின்று, மீண்டுமொரு வரலாற்றுக் குற்றத்தை இழைக்கின்றது.

http://www.sudaroli.com/editorial.htm

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடுமட்டும் இல்லாவிட்டால் இந்தியா இலங்கையோடு சேர்ந்து இலங்கைத் தமிழரை இனக்கொலை செய்து பூண்டோடு அழிக்கவும் தயங்காது. நாம் செய்த புண்ணியம் தமிழ் நாடு எமக்கு ஓரளவாவது காவலாக நிற்கிறது. மற்றும்படி இந்தியா தமிழீழத்தின் பகை நாடாகவே தன்னைக் கருதுகிறது. இலங்கைத் தமிழர்கள் இந்துக்களாகப் பெரும்பான்மையாக இருந்தாலும் அவர்கள் இராவணன் வழிவந்த அரக்கர் கூட்டம் என்பதே வடநாட்டு இந்துக்களின் நம்பிக்கை. அவர்கள் எமது மூக்குகளை அரிந்து எம்மைப் படுகொலை செய்ய ஒருபோதும் தயங்கமாட்டார்கள். அந்த வன்மத்தினாலேயே சிங்களவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி எம்மைக் கொல்லச் சொல்கின்றார்கள். சோ, இந்துராம், ஜெயலலிதா, சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களின் உள்மனதிலும், இந்தியக் கொள்கை வகுப்பளர்களின் மனதிலும் இந்த எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாடுமட்டும் இல்லாவிட்டால் இந்தியா இலங்கையோடு சேர்ந்து இலங்கைத் தமிழரை இனக்கொலை செய்து பூண்டோடு அழிக்கவும் தயங்காது. நாம் செய்த புண்ணியம் தமிழ் நாடு எமக்கு ஓரளவாவது காவலாக நிற்கிறது. மற்றும்படி இந்தியா தமிழீழத்தின் பகை நாடாகவே தன்னைக் கருதுகிறது. இலங்கைத் தமிழர்கள் இந்துக்களாகப் பெரும்பான்மையாக இருந்தாலும் அவர்கள் இராவணன் வழிவந்த அரக்கர் கூட்டம் என்பதே வடநாட்டு இந்துக்களின் நம்பிக்கை. அவர்கள் எமது மூக்குகளை அரிந்து எம்மைப் படுகொலை செய்ய ஒருபோதும் தயங்கமாட்டார்கள். அந்த வன்மத்தினாலேயே சிங்களவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி எம்மைக் கொல்லச் சொல்கின்றார்கள். சோ, இந்துராம், ஜெயலலிதா, சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களின் உள்மனதிலும், இந்தியக் கொள்கை வகுப்பளர்களின் மனதிலும் இந்த எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

தமிழ் நாடு இல்லாவிட்டால் தமிழீழத்தை இந்தியா எப்பவோ உருவாக்கியிருக்கும்.

இல்லை தமிழ் நாடு வட இந்தியாவில் இருந்தால் கூட இந்தியா தமிழீழத்தை உருவாக்கியிருக்கும்.

இந்திய ஆளும் வர்க்கத்துக்கு இன்னொரு சந்தேகம் புலிகள் இரட்சிப்பார்கள் பக்கம் சார்பாகவே உள்ளார்கள் என்பதும்

தவறு...பழியை இந்தியா மேல் போடுவதை விட்டு விட்டு நம் பக்கம் இருக்கும் சில தவறுகளை சற்று சரி செய்வது நன்று ...!

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இந்தியா என்பது ஒரு பல இன மக்கள் வாழும் நாடு.. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முன்பு 1987 போல் முடிவு எடுக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தவறு...பழியை இந்தியா மேல் போடுவதை விட்டு விட்டு நம் பக்கம் இருக்கும் சில தவறுகளை சற்று சரி செய்வது நன்று ...!

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இந்தியா என்பது ஒரு பல இன மக்கள் வாழும் நாடு.. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முன்பு 1987 போல் முடிவு எடுக்கமுடியாது.

அப்படியே என்ன தவறுகள் திருத்தக் கிடக்கின்றன என்றும் சொன்னால் உதவியாயிருக்குமெல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='tamillinux' date='Mar 5 2008, 10:04 PM' post='388236'

இந்திய ஆளும் வர்க்கத்துக்கு இன்னொரு சந்தேகம் புலிகள் இரட்சிப்பார்கள் பக்கம் சார்பாகவே உள்ளார்கள் என்பதும்

  • கருத்துக்கள உறவுகள்

1987 போல் முடிவு எடுக்கமுடியாது.

லீ, எடுத்த என்ன முடிவு தவறானது என விளக்கம் தாருங்கள்?. நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை யில் இருந்து மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் புலம் பெயர்ந்துவிட்டனர்

(என்ன கொடுமை, தமிழ் இனத்தையே அழிப்பது, இந்தியா அதற்கு ஒத்துழைப்பது)

இலங்கை யில் இருந்து மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் புலம் பெயர்ந்துவிட்டதாக, அந்த நாட்டைச் சேர்ந்த தமிழ்க் கவி ஞரும் கனடா நாட்டு "வின்ஸர்' பல்கலைக்கழகப் பேராசிரியருமான சேரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல் கலைக்கழக தமிழ்த் துறை சார்பில் "எட்டுத் திக்கும் எம் தமிழர்' என்ற தலைப்பில் செவ் வாய்க்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் சேரன் பேசியதாவது: யாழ்ப் பாணத்தில் இருந்து 1987 ஆம் ஆண்டு நான் புலம்பெயர்ந் தேன். அப்போது இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கார ணமாக, அங்கு நிறைய துயர சம்பவங்கள் நடந்தேறின. புலம் பெயர்வு என்பது தமிழர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, தமிழகத்தில் இருந்து தமிழர்களை பிஜி தீவு, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை போன்ற நாடுகளுக்கு தோட்ட வேலைகளுக்கு அடி மைகளாக ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்றனர்.

பின்னர், நாடு சுதந்திர மடைந்த பிறகு சாதிய ஒடுக்கு முறைகளாலும், பின்னர் மத ஒடுக்குமுறைகளாலும் மக்கள் புலம்பெயர்ந்தனர். 1948-க்குப் பிறகு இலங்கையில் தமிழர் களின் உரிமைகள் பறிக்கப் பட்டன; அடக்குமுறை கையா ளப்பட்டது. மெல்ல மெல்ல தமிழர்களை இலங்கை அரசு கொடுமைப்படுத்தத் தொடங் கியது.

1983 இல் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனப் படுகொலைக்கு பின்னர் தமி ழர்கள் லட்சக்கணக்கில் அங் கிருந்து புலம்பெயரத் தொடங் கினர். இவ்வாறு 9 லட்சம் தமிழர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். இது இலங்கை யில் வசிக்கும் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுக்கான புகலிடத்தைச் சேருவதற்கு 3 ஆண்டுகள்கூட ஆனது. இந்தக் காலகட்டத்தில் அவர்கள் கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத துன்பங்களை அனுபவித்தனர். ஆனால், இங்குள்ள சில ஊட கங்கள், புலம்பெயர்ந்த தமிழர் கள் அனைவரும் மிகவும் நன் றாக இருப்பது போன்ற தோற் றத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அகதிகளாகச் சென்ற தமிழர்கள் மிகுந்த நெருக்கடி யான நிலையிலேயே உள்ளனர் என்றார்.

- http://thamilar.blogspot.com/2008/03/blog-post_9945.html

அப்படியே என்ன தவறுகள் திருத்தக் கிடக்கின்றன என்றும் சொன்னால் உதவியாயிருக்குமெல்லோ?

லீ, எடுத்த என்ன முடிவு தவறானது என விளக்கம் தாருங்கள்?. நன்றி.

அதை தான் நமது தலைமைகளும் சரி, சம்மந்தப்பட்ட இந்திய தலைவர்களும் கூறிவிட்டார்களே...!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் மத்தியில் தம்மீது நம்பிக்கை ஏற்படவேண்டுமென்று இந்திய மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் ஈழத்தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு கொள்கை வகுப்போ செயல்திட்டங்களோ ஏற்படுத்தப்படவில்லை. எம்மைப் பற்றிய இளக்காரமே அதற்குக் காரணம். எமது பலம் ஒன்றுதான் நம்மைப்பற்றி இந்தியா கரிசனை கொள்ள வைப்பதற்குக் காரணியாக இருக்கமுடியும். இந்து சமுத்திரப் பிரதேசத்தில் இலங்கைக்குச் சமனான ராணுவ கடற்படை வான்படை வலிமைகளுடன் திருகோணமலையையும் பாக்கு நீரிணையில் எமது எல்லைப் பகுதியையும் நாம் முற்றாகக்; கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோமாயின் மட்டுமே இந்தியா எம்மை மதிக்கும். வல்லவனே வாழ்வான் அதுவே இன்று மட்டுமல்ல என்றுமே உலகதர்மமாயிருந்திருக்கின்ற

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: லீ என்பவர் 1987 இல் இந்திய ராணுவம் தொடங்கிய படுகொலைகளைத்தான் தவறு என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன். அல்லது அந்தப் படுகொலைகளுக்கு எதிராக புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலை தவறு என்று சொல்லுவாரோ தெரியவில்லை.எல்லாம் அவருக்கே வெளிச்சம் !
  • கருத்துக்கள உறவுகள்

இல்லயில்ல இவர் சுப்பிரமணியம் சுவாமி, சந்திரா சுவாமி ஆட்களெல்லாம் ஜெயின் கமிசனால விசாரிக்கப்பட்டு சி ஐ ஏ யுடைய கரங்கள் பின்னால நிண்டதைக்; கண்டு பிடிச்ச பிறகு பெரிய இடத்தோட சருவல் வைக்;கக் கூடாதெண்டு போட்டுக் கொஞ்சம் அப்பாவியளப் பிடிச்சுக் குற்றத்தைச் சுமத்தித் தண்டனையும் வழங்கி பைலைக் குளோஸ் பண்ணின அந்தக் கேஸைப்பற்றிச் சொல்லுறார். N;கக்கிறவன் கேனையனா இருந்தா சொல்லுறவன் உலகமகா மேதாவியாகிடுவான். என்ன செய்யிறது நம்மட விதி அப்பிடியாப் போச்சுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.