Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புயல் பிரிட்டனை தாக்கிக் கொண்டிருக்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

stormuk10032008ka7.jpg

இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் உட்பட பிரிட்டனின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் எங்கனும் பலமான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. பேரிரச்சலுடன் காற்று வீசுவதுடன் மழையும் பெய்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே அத்திலாண்டிக் சமுத்திரத்தில் உருவான தாழமுக்கம் புயற் சின்னமா ஐயர்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் மேற்கு, தெற்கு கரைகளை நோக்கி நகர்ந்து வருவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

புயலுக்கு நேரடியாக முகங்கொடுக்கும் பகுதிகளில் மணிக்கி 80 மைல் அல்லது 130 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.

இதனால் மரங்கள் வேருடன் புடுங்கி எறியப்பட்டுள்ளன. கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.

லண்டனிலும் இரைச்சலுடன் பலமான காற்று வீசுவதுடன் மழையும் பெய்து கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் அவதானமாக இருக்கக் கேட்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் வாகனப் பயணங்களை தவிர்க்க அல்லது கூடிய அளவு நேரம் ஒதுக்கிச் செல்ல கேட்கப்படுகின்றனர்.

இன்று பிற்பகல் வாக்கில் வானிலை மிக மோசமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்படுகின்றனர்.

வாகனமோட்டிகள் அதி வேக காற்றினால் சிரமங்களை அனுபவிக்க நேரிடுவதுடன் விபத்துக்களும் நேரலாம் என்பதைக் கருத்தில் கொள்ளக் கேட்கப்படுகின்றனர்.

பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் இணையத்தில் அல்லது தொலைக்காட்சியில் (teletext யும் பாவிக்கலாம்) நேர மாற்றங்களை அறியக் கேட்கப்படுகின்றனர்.

http://www.teletext.co.uk/AboutUs/teletexton.aspx?id=378 -

Pic: news.bbc.co.uk

Main source:

http://news.bbc.co.uk/1/hi/uk/7285859.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்குவீட்டைத்தான் இருக்கனும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு வீட்டைத்தான் இருக்கனும்

நான் ஒரு 4 மணிக்கே எழும்பிட்டன். ஜன்னல் எல்லாம் இறுக்கிப் பூட்டி இருக்க.. வீட்டுக்க கதவு ஆடுது. வெளியில செம இரைச்சல்.. ரோட்டில சின்ன அற்ககோல் பொட்டில்கள்.. கோலா கான்கள் பறக்குது... பயந்துட்டன். இப்ப நான் வெளில நடந்தன் காத்து என்னைத் தூக்கிக் கொண்டு போயிடும்..! :wub::wub:

Edited by nedukkalapoovan

இண்டைக்குவீட்டைத்தான் இருக்கனும்

நான் ஒரு 4 மணிக்கே எழும்பிட்டன். ஜன்னல் எல்லாம் இறுக்கிப் பூட்டி இருக்க.. வீட்டுக்க கதவு ஆடுது. வெளியில செம இரைச்சல்.. ரோட்டில சின்ன அற்ககோல் பொட்டில்கள்.. கோலா கான்கள் பறக்குது... பயந்துட்டன். இப்ப நான் வெளில நடந்தன் காத்து என்னைத் தூக்கிக் கொண்டு போயிடும்..! :wub::wub:

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே!!!

:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே!!!

:( :( :D

அடப்பாவிகளா.. அவனவன் புயலின் அகோகரத்தை சொல்லிட்டு இருக்கிறது.. உங்களுக்கு சிட்டுக்குருவி முத்தம் கொடுத்த கணக்காவா தெரியுது. ரோதணை தாங்க முடியல்ல...! :wub:

கறுப்பி வந்து செருப்பத் தூக்க முதல் ஓடிடுங்க..! :D:wub:

Edited by nedukkalapoovan

எல்லாரும் யன்னல்களை இறுக்கி சாத்திப்போட்டிருங்கோ, புயல் வந்து அள்ளிக்கொண்டு போடும். :wub:

இந்த சூழ்நிலையும் ஒரு திரிலாகத்தான் இருக்கு ....எவ்வளவு காலமாச்சு ..இப்படியான இயற்கையின் நடனத்தை அனுபவிச்சு :wub:

அண்ணா புயலடிக்கிறத ரசிக்கிறீங்களா..

கார் பக்க கண்ணாடி முறிஞ்சிருக்கு..புயலா...பக்கத்

துவீட்டுபயலா தெரியலை

கார் பக்க கண்ணாடி முறிஞ்சிருக்கு..புயலா...பக்கத்

துவீட்டுபயலா தெரியலை

:wub::wub:

அண்ணா புயலடிக்கிறத ரசிக்கிறீங்களா..

கார் பக்க கண்ணாடி முறிஞ்சிருக்கு..புயலா...பக்கத்

துவீட்டுபயலா தெரியலை

யார் உடைச்சாலும் இன்சுரன்ஸ்காரனிட்டை புயல் என சொல்ல வேண்டியதுதானே :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

உதச் சாட்ட வச்சி கிடக்கிற பழங்கிடையனுகளிட கண்ணாடியள நொருக்கிப் போட்டு இன்சூரன்ஸ் கிளைம் பண்ணவேண்டியதுதான். இந்த நேரத்தில மூளை வேலைசெய்யாட்டி இனித் தமிழனக் கடவுள்தான் காப்பாத்த வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பக்கம் புயல் அடிச்ச மாதிரி தெரியல. நகைச்சுவைப்பக்கம் மாதிரி இருக்கு :)

_44480491_witts_exmouth.jpg

_44480518_wales_waves_pa.jpg

_44480458_exmouth_surge_416.jpg

_44480459_scilly_storm.jpg

_44480519_snow_co.durham_pa.jpg

_44480991_saundersfoot_js2_416.jpg

Storms are thrashing parts of the UK causing power cuts and flooding to some areas. James Stephens witnessed the strength of the storm in Saundersfoot, Pembrokeshire

_44480994_saundersfoot_js1_416.jpg

High winds hit parts of Pembrokeshire from 7.30 Monday morning. Photo by James Stephens.

_44481164_cardamage_kent_416.jpg

Winds of up to 82 mph have brought down trees. Rebecca Jack's sister in law suffered a lucky escape after finishing the school run.

படங்கள் bbc.com

http://news.bbc.co.uk/2/hi/in_pictures/7287249.stm

  • கருத்துக்கள உறவுகள்

உதச் சாட்ட வச்சி கிடக்கிற பழங்கிடையனுகளிட கண்ணாடியள நொருக்கிப் போட்டு இன்சூரன்ஸ் கிளைம் பண்ணவேண்டியதுதான். இந்த நேரத்தில மூளை வேலைசெய்யாட்டி இனித் தமிழனக் கடவுள்தான் காப்பாத்த வேணும்.

லண்டனில் குளிர்காலம் முடிஞ்சுதோ? அவசரப்பட்டு, உடைச்சுப் போட்டு, குளிருக்குள் இருந்து நடுங்கிக் கொண்டு இருக்காதையுங்கோ. எதுவும் பார்த்துச் செய்யுங்கோ. இந்த நேரத்தில் இன்சூரன்ஸ்காரனும் பிசியாக இருப்பான். ஆளைப் பிடிக்கக் கொஞ்சம் கஸ்டமாக இருக்கும்.

அட எல்லாரும் பத்திரமா இருக்கிறியளோ.... :( (அட புயலில இருந்து தப்புறதை பற்றியா யோசிக்கிறாங்க இன்சுரன்ஸ் கிளேம் பண்ணுறதை பற்றி தான் இந்த புயலிலையும் யோசிக்கிறாங்க :D )...என்னால முடியல :D ...எப்படி இப்படி எல்லாம் :o ....ஆனா நெடுக்ஸ் தாத்தா புயலிற்கு பயபிடுறார் என்றா கொஞ்ச ஓவராக்கும் பிகோஸ் நெடுக்ஸ் தாத்தாவை கண்டு புயல் தான் பயப்பிட வேண்டும்... :D (என்னால முடியல :lol: )..

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.