Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்ககு கிழக்கு இணைப்பை தனது அணி எதிர்க்கவில்ல - பின்ளையான்

Featured Replies

த.ம.வி.பு அமைப்பின் பிரதித் தலைவன் பிள்ளையான் கொழும்பில் தங்கி நின்று மஹிந்த மற்றும் பல அரசியல் தலைவர்களைச் சந்தித்த வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றும் தமிழ் அமைச்சர் ஒருவரையும் அவரது கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவரையும் சந்தித்த பிள்ளையான் அச்சமயம் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கு தமது கட்சி எதிரானது அல்ல என்ற தகவலை அவர்களிடம் தெரிவித்தார் என அறிய வந்துள்ளது.

அண்மையில் இடம் பெற்ற மட்டு. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமது கட்சியின் உறுப்பினர்களுடன் கொழும்பு வந்துள்ள பிள்ளையான், உயர் பாதுகாப்புடன் கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

அவரது கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அலரி மாளிகைக்குச் சென்று மஹிந்த முன்னிலையில் பதவிப் பிரமானம் செய்து கொண்டனர். அச்சமயம் அங்கு கட்சித் தலைவர் பிள்ளையான் பிரசன்னமாகியிருக்கவில்லை. எனினும், அவர் பின்னர் மஹிந்தவை தனியாகச் சந்தித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளார், எனக் கூறப்பட்டது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுக் கூட்டமைப்பில் த.ம.வி.பு கட்சி இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான இணக்கம் அப்போது எட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அந்தக் கூட்டமைப்புக்குள் தேர்தலில் ஆகக்கூடிய உறுப்பினர்களைப் பெறும் தரப்பிற்கு மாகாண முதல்வர் பதவியை வழங்குவது என்ற தமது தீர்மானத்தை அச்சமயமே மஹிந்த பிள்ளையானுக்கு தெரியப்படுத்தினார் என்று விடயமறிந்த வட்டாரங்கள் கூறின.

இதன் பின்னர் பிள்ளையான் தமது ஹோட்டலில் வைத்து பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து வருகின்றானா என்றும் கூறப்பட்டது.

அந்த வரிசையில் தமிழ் அமைச்சர் ஒருவரையும் அவரது அணியில் உள்ள பிரதியமைச்சர் ஒருவரையும் அவர் நேற்று சந்தித்திருக்கின்றார்.

முன்னர் புலி சார்புக் கருத்துக்களை வெளியப்படுத்தி வந்த இந்த அமைச்சரின் அணியினர் திடிரென பிள்ளையான் குழுத் தலவரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றமை அரசியல் வட்டாரங்களில் எதிர்பாராத விடயம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

த.ம.வி.பு அமைப்பின் லண்டன் கிளைத் தலைவர் சுப்பiயா என்பவரும் மேற்படி அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோர் பிள்ளையானைச் சந்தித்த சமயம் உடனிருந்தார் எனத் தெரிகிறது.

இந்தச் சந்திப்பின் போது பிள்ளையான் தரப்பால் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தெரிவந்தவை வருமாறு :

* த.ம.வி.பு அமைப்புக்கு கருணா அம்மானே தொடர்ந்தும் தலைவனாக இருக்கிறார். பிள்ளையான் பிரதித் தலைவர் பதவியையே வகிக்கின்றார்.

* தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட சமயம், அந்த அபிப்பிராயபேதத்தை விட்டுக் கொடுத்துப் பேசித் தீர்ப்பதற்கு வன்னித் தலைமைக்கு வாய்ப்புகள் இருந்தன. வன்னித் தலைமை அதைத் தவறவிட்டு நிலைமையை கெடுத்து விட்டது. அந்த தலைமையை மன்னிக்க இனி கிழக்கு மக்கள் தயாரில்லை.

எனினும், வடக்கு மக்களுக்கோ, வடக்கு கிழக்கு இணைப்புக்கோ த.ம.வி.பு எதிரானது அல்ல.

*கிழக்கில் தமிழர் தாயகமும், நிலங்களும் பறிபோக த.ம.வி.பு அமைப்பு அனுமதிக்காது.

அது குறித்து காத்திரமான நடவடிக்கைகளை அது எடுக்கும்.

*இளம் தமிழ் சமூகத்துக்கு எதிராகக் கொடூரமாக தவறுகளை இழைத்த காரணத்துக்காக சில அரச படை முகாம்களை கிழக்கில் இடம் மாற்றும்படி அல்லது அகற்றும்படி அரசுத் தலைமையை த.ம.வி.பு அமைப்பு வற்புறுத்தியிருப்பது உண்மையே. மேற்படி குற்றங்கள் குறித்து அரசுத் தலைமைக்கு விவரமாக விளக்கமளிக்கபட்டிருக்கினது

இவ்விடயங்கள் அச்சந்திபின் போது பிள்ளையான் தரப்பால் தெரிவிக்கப்பட்டன என அறிய வந்துள்ளது.

நன்றி : சுடர் ஒளி

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுக் கூட்டமைப்பில் த.ம.வி.பு கட்சி இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான இணக்கம் அப்போது எட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அந்தக் கூட்டமைப்புக்குள் தேர்தலில் ஆகக்கூடிய உறுப்பினர்களைப் பெறும் தரப்பிற்கு மாகாண முதல்வர் பதவியை வழங்குவது என்ற தமது தீர்மானத்தை அச்சமயமே மஹிந்த பிள்ளையானுக்கு தெரியப்படுத்தினார் என்று விடயமறிந்த வட்டாரங்கள் கூறின.

[

ஒரே கல்லில் பல மாங்காய்...!

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கும் கிழக்கும் இணைவதை எதிர்க்காதவர்கள் எதற்காக கிழக்குக்கு என்று மட்டும் நடத்தப்பட்ட தேர்தலில் பங்கேற்றனர்..??! இத்தேர்தலில் பங்கேற்றதன் மூலம் கிழக்கை நிர்வாக ரீதியில் வடக்குக்கிழக்கு இணைந்த மாகாணம் என்பதில் இருந்தே பிரித்துவிட்டனரே..??!

புலிகளின் தலைமை விசாரணைக்கு அழைத்த போது சென்று தவறுகளை ஒத்துக் கொண்டு மன்னிப்புக் கோரி இருக்கலாமே தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருப்பின். அதைவிடுத்து ஐ தே கட்சியுடனும் றோவுடனும் இணைந்து புலிகளைப் பலவீனப்படுத்தும் செயலில் இறங்கியது மட்டுமன்றி இதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் கைமாறியுள்ளன. பல கோடி ஆயுதங்கள் இராணுவத்தின் கைகளுக்குப் போயுள்ளது.

அடக்குமுறை இராணுவத்திடம் தமிழரின் நிலத்தை அடகுவைத்துவிட்டு.. இப்போ பதவிகளுக்காக அரசின் எடுபிடிகளாகவும் அந்நிய சக்திகளின் தேவைகளுக்காகவும் வாலாட்டும் இக்குழுக்கள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சில கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் ஊடகங்கள் பிள்ளையான் குழுவை ஜனநாயகக் குழு என்று காட்டும் நோக்கில் அரசு பிள்ளையானைக் கொண்டு வெளியிடும் போலி அறிக்கைகளுக்கு முக்கியம் கொடுத்து அரசுக்கு முண்டுகொடுக்கும் வேலையை ஆரம்பித்துள்ளன. இவ்வூடகங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

புலிகள் கொடுத்த விலைக்கு சுயநலத்தை அறுவடை செய்யும் இந்தக் காட்டிக் கொடுப்புக் கும்பல்களின் செயற்பாடு 1988,89,90 இல் வரதராஜப் பெருமாள் கும்பல் அடித்த கொட்டத்தை விட மோசமான.. தமிழர் தாயக் கோட்பாட்டையே சிதைக்கும் செயல் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து செயற்பட வேண்டும்..!

நிச்சயம் இவர்களுக்கு சரியான பாடத்தை சரியான தருணத்தில் மக்கள் அளிப்பர் என்று எதிர்பார்க்கலாம்..! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கும் கிழக்கும் இணைவதை எதிர்க்காதவர்கள் எதற்காக கிழக்குக்கு என்று மட்டும் நடத்தப்பட்ட தேர்தலில் பங்கேற்றனர்..??! இத்தேர்தலில் பங்கேற்றதன் மூலம் கிழக்கை நிர்வாக ரீதியில் வடக்குக்கிழக்கு இணைந்த மாகாணம் என்பதில் இருந்தே பிரித்துவிட்டனரே..??!

தனித்தனி வடக்கு கிழக்கு மாகாண சபைகளிடையே குறைந்த பட்ட்ச இணைப்பையாவது இந்தியா வலியுறுத்தி மகிந்த ஏறுக்கொள்ளும் வாப்பு இருக்கிறது என்பதுதான் இந்த பேட்டியின் சாராம்சம். பிள்லையானை கருணா ஆதரவாளர்கள் ஏற்றுகொள்ளும் வகையில் காரியங்கள் நடக்கின்றன. சந்தித்தது நண்பர் சந்திரசேகரமமும் ராதாகிருஸ்ணனும் எனில் புதிய உறவுகளின் நிபந்தனையாக பிள்ளையான் அணியுடன் பேசவேண்டும் என்கிற புதிய அயல் அழுத்தம் அதிகரிக்கின்றது என்பது மட்டும்தான் காரனமாக இருக்கும். அரசியல் நிரந்தர நட்ப்பு நிரந்தர பகை சார்ந்ததல்ல அரசியல் நிரந்தர நலன்கள் சார்ந்தது. நலன்கள் மட்டும்தான் வெற்றியின் திசை.

  • கருத்துக்கள உறவுகள்

*கிழக்கில் தமிழர் தாயகமும், நிலங்களும் பறிபோக த.ம.வி.பு அமைப்பு அனுமதிக்காது.

அது குறித்து காத்திரமான நடவடிக்கைகளை அது எடுக்கும்.

கிழக்கில் மூதூர் கிழக்கிலும், அம்பாறை தீகவாவிப் பகுதிகளும், மட்டக்களப்பில் குடும்பி மலையும் சிங்களப் பகுதிகளாக மாறாமால் பார்த்துக் கொள்ள ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தங்கள் நலன் சார்ந்த விடயங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்ப்படுகின்றது என்பது தமிழ் மக்களுக்குத் தெரியவரக் கனகாலம் இல்லை. கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகும் கனவுடன் உள்ளதால்தான் இப்படியான அறிக்கைகள்/வசனங்கள். எனினும் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் கட்சி ஒன்று பெரும்பான்மையாக வர சிங்களக் கட்சிகள் (மகிந்த, ரணில், ஜேவிபி) மற்றும் முஸ்லிம் கட்சிகள் (அதாவுல்லா, ஹக்கீம்) போன்றோர் இயன்றவரை முட்டுக்கட்டை போடத்தான் செய்வர்.. எனவே எதிர்ப்போரைப் "போட்டுத் தள்ளும்" செயலில் பிள்ளையான் குழுவினர் விரைவில் இறங்கத்தான் உள்ளனர்!

*இளம் தமிழ் சமூகத்துக்கு எதிராகக் கொடூரமாக தவறுகளை இழைத்த காரணத்துக்காக சில அரச படை முகாம்களை கிழக்கில் இடம் மாற்றும்படி அல்லது அகற்றும்படி அரசுத் தலைமையை த.ம.வி.பு அமைப்பு வற்புறுத்தியிருப்பது உண்மையே. மேற்படி குற்றங்கள் குறித்து அரசுத் தலைமைக்கு விவரமாக விளக்கமளிக்கபட்டிருக்கினது

அகற்றபட்ட அதிரடிப்படை முகாம்கள் இருந்த பிரதேசங்களில் பிள்ளையான் குழுவினரின் நாட்டாண்மை இருக்கவில்லை. மாறாக இனியபாரதி குழுவினரை அதிரடிப்படையினர் பாதுகாத்து வந்தனர். எனவே பாரதி கும்பலைக் கலைத்து தமது அதிகாரத்தை அம்பாறைப் பகுதிகளில் நிலைநாட்டத்தான் அதிரடிப்படை முகாம்களை அகற்றக் கேட்டு வெற்றியும் பெற்றுள்ளனர்.. இனிப் பாரதி மணலாற்றுப் பகுதிக்கு மூட்டை கட்டவேண்டியதுதான்!

கிழக்கில் கொலைகள், கடத்தல்கள், கப்பம் அறவிடுதல், சிறுவர்களைக் கடத்தி ஆயுதப் பயிற்சி அளித்தல், பிடித்த பெண்பிள்ளைகளைத் தூக்கிச் செல்லுதல் போன்றவை மேலும் அதிகரிக்கும்.. கேட்கத்தான் எவருமில்லை!

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான பிள்ளையான் குழுவுடன் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பெ.சந்திரசேகரன் மற்றும் ஆர்.இராதாகிருஸ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான பிள்ளையான் குழுவுடன் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பெ.சந்திரசேகரன் மற்றும் ஆர்.இராதாகிருஸ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

இனம் இனத்துடன் தானே சேரும்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான பிள்ளையான் குழுவுடன் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பெ.சந்திரசேகரன் மற்றும் ஆர்.இராதாகிருஸ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

இது உண்மையில் அதிகரிக்கும் சீன வருகையின் பின்னணியில் மாறிவரும் அயலகத்தின் புதிய அணுகுமுறையையும் புதிய நிபந்தனைகளையுமே சுட்டிக் காட்டுகிறது. மகிந்த நினைத்தபோது பிள்ளையானையும் அவரது அணியினரையும் தூக்கி வீச வசதியாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பிள்ளையான் அணியினரை தங்கள் கட்சிச் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தித்து வருகிறார். இது உண்மையில் சீன உளவுத்துறையின் அனுசரணையுடன் அயலக நகர்வுகளுக்கு எதிரான காய் நகர்த்தல்தான்.

இந்தப் பின்னணியில்தான் நண்பர் சந்திரசேகரதின் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. மலையக மக்களின் நலன்களுக்கு மட்டுமே அடுத்ததாக சதிரசேகரன் ஈழத் தமிழர் நலன்களில் அக்கறையுள்ளவர் என்பதிலும் வன்னியின் நண்பர் என்பதிலும் இரண்டாம் பேச்சுக்கு இடமில்லை.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

இனம் இனத்துடன் தானே சேரும்

அப்படிச் சொல்ல முடியாது. நாட்டின் அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப அவர்களும் சில நகர்வுகளைச் செய்துதான் ஆக வேண்டும். வெறுமனவே புலி ஆதரவு என்ற நிலைப்பாட்டில் நின்று கொண்டு அரசியல் ரீதியா பலவீனப்பட்டுப் போவதிலும்.. காலத்துக்கு தகுந்தாற் போல் நிலமைகளைச் சமாளிக்க சில நகர்வுகள் அவசியம்..! அதை அவர்களே தீர்மானிக்க விடுவது நல்லம். இருந்தாலும் மக்கள் அரசியல்வாதிகளின் நகர்வுகள் குறித்து அவதானமாக இருப்பது நல்லம். காரணம் அரசியல்வாதிகள் எதிரிக்கும் எதிரிநாடுகளுக்கும் எப்பவும் விலைபோகக் கூடியவர்கள்..! அவர்கள் போராளிகள் போன்றவர்கள் அல்ல..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையில் சீன உளவுத்துறையின் அனுசரணையுடன் அயலகத்துக்கு எதிரான காய் நகர்த்தல்தான்.

இதில் சீன உளவுத்துறையை விட இந்திய உளவுத்துறையின் நகர்வுகள் தான் அதிகம். இந்தியாவைப் பொறுத்தவரை.. புலிகள் அழிக்கப்பட வேண்டும். புலிகளை மக்களிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும். அதற்கு அவர்கள் தேடித்திரிந்த மிதவாதத்தமிழ் தலைவர்களாக பிள்ளையானும் அவனின் கும்பல்களும் தற்போது கிழக்கில் உருவாக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு இதில் சிங்கள அரசு தனக்கு உள்ள தேவையையும் பயன்படுத்தி வருகிறது. இந்திய சார்பு டக்கிளஸ்.. ஆனந்த சங்கரி.. ஈபிஆர் எல் எவ் வரதர் அணி.. சித்தார்த்தனின் புளொட்டை ஓரங்கட்டிட்டு.. பிள்ளையான் அணியை அரசு வளர்க்க காரணம்.. எதிர்காலத்தில் இந்தியாவுடனும் பேரம் பேசத்தான்..! இந்தியா தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டிட்டு இருக்கிறது. தேர்தல் நடந்தால் அங்கு ஜனநாயம் உதித்துவிட்டதாக உலகை ஏமாற்றி வரும் அமெரிக்கா போன்ற நாடுகளும் இதில் திருப்திப்படாமல் இல்லை..!

இதில் வேடிக்கை என்னவென்றால்.. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி என்று திரிந்தவரும் வடக்குகிழக்கு இணைந்த மாநிலம் என்றவரும் அதன் முதல்வரும் என்ற கனவில் வாழ்ந்து கொண்டிருந்தருவருமான டக்கிளசு மற்றும் அதன் ஆளுனர் என்ற கனவில் இருந்தவருமான சங்கரியாரும் கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்தவையும் பிள்ளையானால் ஓரங்கட்டப்பட்டதுதான் வேடிக்கை..! :lol::lol:

Edited by nedukkalapoovan

*கிழக்கில் தமிழர் தாயகமும், நிலங்களும் பறிபோக த.ம.வி.பு அமைப்பு அனுமதிக்காது.

அது குறித்து காத்திரமான நடவடிக்கைகளை அது எடுக்கும்.

கிழக்கை விடுதலை புலிகள் மீற்ப்பதை சொன்னானோ தெரியல :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிச் சொல்ல முடியாது. நாட்டின் அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப அவர்களும் சில நகர்வுகளைச் செய்துதான் ஆக வேண்டும். வெறுமனவே புலி ஆதரவு என்ற நிலைப்பாட்டில் நின்று கொண்டு அரசியல் ரீதியா பலவீனப்பட்டுப் போவதிலும்.. காலத்துக்கு தகுந்தாற் போல் நிலமைகளைச் சமாளிக்க சில நகர்வுகள் அவசியம்..! அதை அவர்களே தீர்மானிக்க விடுவது நல்லம்.

இது இன்றைய காலக் கட்டத்தில் மிகவும் முக்கியமானதும் எங்கள் தரப்பு முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டியதுமான அணுகுமுறை. நன்றி நெபோ

காய்நகர்த்தல்கள் தமிழ் தரப்புகளுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் ஒரு பல பரீட்சையாகலாம்...

என்ன இப்ப பிள்ளையான் இன்னொரு பகடைக்காய். சதுரங்க ஆட்டதில் இப்ப அவர் தான் ராணி. மற்றவர்கள் கௌரவ வேடம். காலத்துக்கு ஏற்ப வேடங்கள் மாறலாம்..

மேலே குறிப்பிட்ட அனைத்து அமைப்புகளும் ஆயுதம் மற்றும் கட்சி என்ர போர்வையில் தங்கள் செயற்பாடுகளை செயற்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் எதிர்பார்க்காததை எதிர்பாக்காத முடிவுகளை வடக்கு கிழக்கு மற்றும் புலம் பெயர் தமிழர்கள் வழங்குவார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.