Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் இழப்பு தொடர்பான எண்ணிக்கையை கூட்டினால் அது வடக்கு மக்களின் இரண்டு மடங்காக இருக்கும் இக்பால் அத்தாஸ் தெரிவித்த கருத்தை பி பி சி செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Featured Replies

புலிகளின் இழப்பு தொடர்பான எண்ணிக்கையை கூட்டினால் அது வடக்கு மக்களின் இரண்டு மடங்காக இருக்கும் இக்பால் அத்தாஸ் தெரிவித்த கருத்தை பி பி சி செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வடக்கு முன்னரங்க காவல்நிலைகளில் தமிழிழ விடுதலைப்புலிகளும் இலங்கைப்படையினரும் தொடர்ந்தும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது 35 தமிழீழ விடுதலைப்புலிகளும் இரண்டு படைவீரர்களும் பலியானதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த இழப்பு அறிவிப்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பி பி சியின் கொழும்பு செய்தியாளர் ரோல்ணட் பேர்க் தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசாங்கம் யுத்தம் தொடங்கிய காலம் முதல் தெரிவித்து வருகின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் இழப்பு தொடர்பான எண்ணிக்கையை கூட்டினால் அது வடக்கு மக்களின் இரண்டு மடங்காக இருக்கும் என சண்டே டைம்ஸ் ஊடகத்தின் பாதுகாப்பு பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லிக்கு தெரிவித்த கருத்தை பி பி சி செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு மீண்டும் யுத்தம் தொடங்கியது முதல்இன்று வரை அரசாங்க பாதுகாப்பு ஊடக மையத்தின் தகவல்படி ஆறாயிரத்து 867 தமிழீழ விடுதலைப்புலிகள் பலியாகினர்.படையினர் தரப்பில் ஆயிரத்து 501 வீரர்கள் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இழப்புகள் தொடர்பில் வித்தியாசமான கணக்குகள் காட்டப்பட்டுள்ளன.போர் நிறுத்தக்கண்காணிப்பாளர்கள் நாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் வடக்கின் யுத்தப்பிரதேசத்திற்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்தநிலையில் தகவல்களை இடைமறித்துக்கேட்டபோது தமிழிழ விடுதலைப்புலிகளின் இழப்புகளை தெரிந்துக்கொண்டு தெரிவிப்பதாக படைத்தரப்பு கூறுகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தத்தில் தமது உறுப்பினர்கள் பலியானவுடன் அது தொடர்பான ஏனையவர்களுக்கு அறிவிப்பார்கள். இது சங்கேத பாஸையில் அமைந்திருக்குமானால் அதனை அறிந்துக்கொள்ள சற்று நேரம் எடுக்கும். இதன் அடிப்படையிலேயே தமிழிழ விடுதலைப்புலிகளின் இழப்புகளை தெரிந்துக்கொள்ள முடிகிறது என இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் படையினரின் கணக்குப்படி தமிழிழ விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களின் தொகை 12 ஆயிரத்தில் இருந்து ஆறாயிரமாக குறைந்துள்ளதாக அவர் குறிப்பி;ட்டுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெகுவிரைவில் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெற்றிபெறப்போவதாக உறுதியளித்துள்ளார்.

இந்தநிலையில் படையினர் தமிழிழ விடுதலைப்புலிகளின் இழப்புகள் குறித்து வெளியிடும் தகவல்கள் தென்னிலங்கையில் உள்ள சிங்களவர்களை அரசாங்கத்தின் நம்பிக்கைகொள்ள உதவியாக உள்ளதாக பி பி சி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இரண்டாம் உலக யத்தத்தின் போது பிரித்தானிய பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில் இறுதிவெற்றிக்காக இரதத்தையும் கண்ணீரையும் தருவதாக தெரிவித்ததை முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் நீங்கள் இறுதி வெற்றிக்காக என்ன செய்கிறீர்கள் எனத்தெரிந்துக்கொண்டால்அவர்

இறைவன்!

எனகு என்னமோ... இந்த செய்தியில புதுசா ஒண்டும் இருக்கிற மாதிரி தேரியேல்ல...

பழய இறப்பரை திரும்பவும் இழுத்து அடிக்கிறமாதி தான் கிடக்கு... :wub:

அதே செய்தியில் புலிகள் கொடுக்கும் இராணுவ உயிரிழப்பு தகவல்களும் மிகைப்படுத்தப்பட்டவை என்கிறார்..

If you add up all the figures given by the government from the beginning of the separatist war until now, it would have wiped out the population of the north twice over," says Iqbal Athas, consultant editor and defence correspondent of the Colombo Sunday Times and correspondent for Jane's Defence Weekly.

"Similarly if one were to adopt the figures put out by the Tamil Tiger rebels, that would have depleted the ranks of the military considerably."

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7307349.stm

  • கருத்துக்கள உறவுகள்
:wub: சரிதான், போரில் முதல் பலியாவது உண்மை என்று சும்மாவா சொன்னார்கள் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.