Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இந்தியா

-தாரகா-

முன்னர் சிறுவர்களுக்காக வெளிவந்த ~அம்புலி மாமா| இதழில் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதாக ஒரு கதை வந்த ஞாபகம் இருக்கிறது.

எனது சிறுவயதில் அதனை படித்திருக்கிறேன். அந்த காலத்தில் பெரும்பாலும் அம்புலிமாமாவை படிக்காத சிறுவர்களை காண்பது கடினம். அந்தளவிற்கு ~அம்புலிமாமா| சிறுவர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தது.

விக்கிரமாதித்தியன் என்ற மன்னனிடம் கதைகளை கேட்டுவரும் வேதாளம், அந்த கதைகளில் சற்றும் திருப்தி கொள்ளாமல் மீண்டும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும், அதனை கீழிறக்குவதற்கு சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தியன் மீண்டும், மீண்டும் கதைகள் சொல்வதுமாக நீளும் அந்த வேதாளக் கதை.

தற்போது மீண்டும் இந்தியா இலங்கை அரசியலில் அதிகளவில் தலையீடு செய்ய முயல்வதாக வெளிவந்த செய்திகளை படித்த போது சிறுவயதில் படித்த அந்த வேதாளத்தின் கதைதான் எனது ஞாபகத்திற்கு வந்தது.

ஒரு வகையில் இந்தியாவின் இலங்கை அரசியல் மீதான தலையீடு என்பது, குறிப்பாக தமிழர் விடுதலை அரசியல் மீதான குறுக்கீடு என்பது, அந்த வேதாளத்தின் கதை போன்றதுதான். தமிழர் தேசம் தனது தரப்பு நியாயங்களை தொடர்து சொல்லி வருவதும் ஆனால் இந்தியாவோ, மீண்டும் மீண்டும் சிங்களத்தின் முதுகில் ஏறிக்கொள்வதுமாக தொடர்கிறது இந்தியாவிற்கும் நமக்கும் இடையிலான பிரச்சினைகளின் கதை.

2006 இன் இறுதிப் பகுதியிலிருந்து யுத்த நிலைமைகள் தீவிரமடைந்தன. சிங்களத்திற்கும் தமிழர் தேசத்திற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருக்கும் போதே சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் ஒன்றை விடுதலைப் புலிகள் மீது தொடுத்தது.

இறுதியில் இவ்வருட ஆரம்பத்தில் உத்தியோக பூர்வமாகவே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டதன் மூலம், சிறிலங்கா அரசு தனது போர் பிரகடனத்தை பகிரங்கப்படுத்தியது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அது நோர்வேயின் அனுசரணையுடனான புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தை, ஒரு அவதானிப்பாளர் நிலையிலேயே அணுகியது. ஆனாலும் இந்தியாவின் கடந்த கால அரசியல் அணுகுமுறைகளை கருத்தில் கொண்டு பார்ப்போமானால், நோர்வேயின் மத்தியஸ்த காலத்திலும் இந்தியா தனக்கே உரித்தான ஒரு பாதாள அரசியல் அணுகுமுறையையும் கைக்கொண்டிருக்கும் என்ற முடிவுக்கு நாம் வரமுடியும்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடையத் தொடங்கியதும் இந்தியா படிப்படியாக தனது பாதாள நிலையை தவிர்த்து வெளிப்படையாகவே களமிறங்கத் தொடங்கியது.

தற்போது சிறிலங்கா இராணுவத்திற்கான பயிற்சி, புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், பொருளாதார ரீதியில் மிக மோசமான வீழ்ச்சியை நோக்கி சரிந்து கொண்டிருக்கும் அரசிற்கு முண்டு கொடுத்தல் மற்றும் வர்த்தக முதலீடு என பல வழிகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள முயன்று வருகிறது இந்தியா.

தற்போது இந்தியா இலங்கை அரசியலில் அதிக ஈடுபாட்டைக் காட்டுவதற்கு வெளித் தெரியக்கூடிய இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று தனது பிராந்திய நலன்களுக்கு சவால் விடும் வகையில் அந்நிய சக்திகள் இலங்கை அரசியலில் தலையீடு செய்வதை தடுத்தல், மற்றையது குறிப்பாக சமீப காலமாக சீனா அதிகளவில் சிறிலங்கா அரசுடன் நெருங்கி வருவதை தடுத்தல்.

வெளித் தெரியக்கூடிய வகையில் இந்த இரண்டு காரணங்கள்தான் நமக்கு புலப்படுகின்றன. முதலாவது காரணத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததுதான் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதை நம்மில் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த இடத்தில் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, அந்நிய சக்திகளின் தலையீடுகளை தடுக்கும் நோக்கில்தான் தற்போது இந்தியா அதிகளவில் இலங்கை அரசியில் தலையீடு செய்ய முயல்கின்றது எனின், நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் ஏன் இந்தியா தன்னை பார்வையாளராக சுருக்கிக் கொண்டது?

உண்மையில் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிக்கு பின்னர்தான் இலங்கை அரசியலில் அமெரிக்க, ஜரோப்பிய தலையீடுகள்; முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு அதிகரித்தன. அதற்கு முன்னர் இலங்கையின் அரசியல் குறிப்பாக தமிழர்களின் பிரச்சனைகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால்தான் அதிகம் ஜரோப்பிய மயப்படுத்தப்பட்டது. ஆனால் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிக்கு பின்னர்தான் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகள் அமெரிக்க, ஜரோப்பிய அரசியல் மயப்பட்ட பிரச்சனையாக மாறியது. தவிர நோர்வேக்கு பின்னரான இக்காலகட்டம் தமிழர் விடுதலை அரசியலின் இராஜதந்திர பரிணாமத்திற்கான காலமாகவும் மாறியது.

எனவே அந்நிய சக்திகளின் தலையீட்டை தடுப்பதுதான் இந்தியாவின் நோக்கமாயின் அது நிச்;சயமாக நோர்வே பிரசன்னத்தின் போதே நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஒன்றும் நிகழவில்லை. மாறாக பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்ட பின்னர்தான் இந்தியா தனது கைவரிசைகளை காட்ட முற்படுகின்றது.

இங்கு நாம் ஒரு தெட்டத் தெளிவான உண்மையை தரிசிக்க முடியும். இலங்கை அரசியலில் தனக்கு சாதகமான சூழல் வரும் வரைக்கும் இந்தியா மிகவும் அமைதியாக காத்திருந்திருக்கிறது என்பதுதான் அந்த உண்மை.

தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதில் வேறு எவரைக் காட்டிலும் தடையாக இருக்கப்போவது தானே என்பதை இந்தியா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்து வந்திருக்கிறது.

மிகவும் சமீபத்தில் கூட அதனை இந்தியா நிரூபித்திருந்தது. 2000 இல் பலாலி இராணுவத் தளத்தை நோக்கி புலிகள் முன்னேறியது போது இந்தியா தனது படைபலத்தை காட்டி அச்சுறுத்தியது. பாகிஸ்தான் அரசு இராணுவத் தளபாடங்களை வழங்குவதற்கு அனுசரணையாக இருந்தது.

நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் ஜே.வி.பியின் அரசியல் நிகழ்சி நிரலின் பின்பலமாக தொழிற்பட்டது. இந்தியாவின் அரசியல் தலையீட்டை சுருக்கமாக சொல்வதானால், தமிழ்த் தேசிய இறைமையை அரசியல் அர்த்தத்தில் இல்லாதொழிப்பதுதான் இந்தியாவின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களினதும் உள்ளடக்கமாக இருக்கின்றது. ஆனால் இதில் இந்தியா தொடர்ந்தும் அவமானகரமான தோல்விகளையே சந்தித்து வருகின்றது.

இந்த இடத்தில் அது சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தியனாகவும் தொழிற்பட்டு வருகிறது. இதிலுள்ள சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா வேதாளமாகவும், விக்கிரமாதித்தியனாகவும் தொழிற்படுவதுதான்

நான் மேலே குறிப்பிட்ட இந்திய தலையீட்டிற்கான காரணங்கள் பொதுவாக இந்திய நலனை பாதுகாத்தல் என்ற அர்த்ததிலேயே முதன்மை பெறுகின்றது. ஆனால் இதிலுள்ள முரண்நகை அரசியல் என்னவென்றால் எப்போதுமே இந்தியா தனது பிராந்திய நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பலிக்கடாக்களாக கையாள்வது ஈழத் தமிழர்களைத்தான்.

எனவே மீண்டும் நாம் ஒரு கேள்விக்கு செல்லலாம், இந்தியா தனது பிராந்திய நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏன் சிங்களத்தை பலிக்கடாவாக கருதவில்லை? அது ஏன் மீண்டும், மீண்டும் தமிழ்த் தேசிய இறைமையின் மீதே மேலாதிக்கம் செலுத்த முற்படுகின்றது? இதில் இந்திய கொள்கை வகுப்புப் பிரிவினருக்கு இருக்கும் பிரத்தியேக ஈடுபாடு என்ன?

சமீபத்தில் இந்திய தலையீடு குறித்து இந்தியாவினை எச்சரிக்கும் தொனியில் எழுதியிருந்த முன்னாள் ‘றோ’ அதிகாரியும் உத்திகள் தொடர்பான கற்கைகள் அமைப்பின் (னுசைநஉவழச ழக வுழிiஉயட ளுவரனநைள) இயக்குநருமான இராமன் தற்போதைய இந்திய தலையீட்டிற்கான இரண்டு காரணங்களை குறிப்பிட்டிருக்கிறார். ஒன்று, ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டுமென இந்தியா கருதுகிறது. மற்றையது, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைளில் இந்தியா தொடர்ந்தும் ஆற்றலுடன்தான் இருக்கிறது என்பதை நிரூபிப்பது. உண்மையில் இராமன் குறிப்பிடும் இந்த இரண்டுமே மிகவும் மேலோட்டமானது என்பதுடன் இந்திய தலையீட்டில் மறைந்து கிடக்கும் காரணங்களை திட்டமிட்டு மறைக்கும் நோக்கம் கொண்டதாகவும் தெரிகிறது.

ஆரம்பத்தில் இந்தியாவின் இலங்கை அரசியல் மீதான மேலாதிக்கம் என்பது, சிங்கள ஆட்சியாளர்களை எப்போதுமே தனது கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்வதும், சிங்கள ஆட்சியாளர்கள் தனது எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் செல்லும் போது அதனை கட்டுப்படுத்துவதற்கான வலுவான ஆதரவுத் தளமொன்றை இலங்கையில் வைத்திருப்பதும் என்ற இரண்டு நோக்கங்களைக் கொண்டதாக இருந்தன.

இந்த பின்புலத்தில்தான் ஈழப் போராளிக் குழுக்களுக்கு பயிற்சியளித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்றது. விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து இயக்கங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் இந்தியா வெற்றியும் பெற்றது. 1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்ற பேரில் சட்ட ரீதியாகவே இலங்கை அரசியலில் நேரடியாகத் தலையிடும் அதிகாரத்தைப் பெற்றது. இறுதியில் மிகவும் அவமானகரமான தோல்வி அனுபவங்களுடன் இந்தியா வெளியேறியது.

அன்று விடுதலைப் புலிகள் குறித்து மிகவும் சாதாரணமான மதிப்பீட்டைக் கொண்டிருந்த இந்திய உளவுப்பிரிவான ‘றோ’ தனது தோல்வி அனுபவங்களில் புலிகள் தொடர்பான தமது மதிப்பீடையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. விடுதலைப் புலிகள் ஒருபோதும் பலம்பொருந்திய இந்தியப் படைகளுடன் மோத முற்படமாட்டார்களென்றும் அவர்களை சாதாரணமாக அச்சுறுத்தி அடிபணிய வைத்துவிடலாம் என்றுமே இந்திய கொள்கை வகுப்பினர் கருதியிருந்தனர்.

இந்த அடிப்படையில்தான் தீட்சித் 'எனது சுங்கான் பற்றி முடிவதற்குள் உங்களை இருந்த இடம்தெரியாமல் ஆக்கிவிடுவோம்" என புலிகளின் தலைவர் பிரபாகரனை எச்சரித்தார்.

ஆனால் புலிகளோ இந்தியப் படையுடன் மோதியது மட்டுமல்லாமல், இந்தியாவின் இராணுவ நகர்வுகளின் வரலாற்றிலேயே ஒரு கெரில்லா அணியிடம் படுமோசமான தோல்வியைச் சந்தித்த அனுபவத்தையும் இந்தியப் படைகளுக்கு வழங்கினர். இந்திய ஆய்வாளர்களின் கருத்துப்படி 1962 சீன - இந்திய எல்லலைப்புற யுத்தத்திற்கு பின்னர் இந்தியா அடைந்த படுமோசமான வரலாற்றுத் தோல்வி இலங்கையில் புலிகளிடம் தோல்வியடைந்ததுதான் என குறிப்பிடுகின்றனர். எனவே இந்த இடத்தில் மீண்டும் ஒரு கோள்வி தவிர்க்க முடியாததாக இருக்கின்றது.

தொடர்ந்தும் இந்தியா தனது பிராந்திய மேலாதிக்க அரசியலின் பலிக்கடாக்களாக, ஈழத் தமிழர்களை கையாளமுற்படும் கொள்கை முன்னெடுப்பின் பின்னணியில், அதன் கடந்த கால அவமானகரமான தோல்வி அனுபவம் செல்வாக்கு செலுத்தி வருகின்றதா? அதுவே இந்தியா தொடர்ந்தும் திரைமறைவிலும், பகிரங்கமாகவும் விடுதலைப் புலிகள் பலப்படுவதையும், தமிழர்கள் தமது உச்ச இலக்கை அடைவதையும் எப்பாடுபட்டேனும் தடுத்துவிட கங்கணங்கட்டிக் கொண்டிருப்பதன் பின்னணியா?

நான் இப்படி ஒரு கேள்வியை எழுப்புவதற்கு காரணங்கள் உண்டு. புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையாக இருந்தது இராணுவ வலுச்சமநிலையாகும்.

ஒருவரை ஒருவர் வெல்ல முடியாதவாறான இராணுவ வலுவைக் கொண்டிருக்கின்றனர் என்பதே இராணுவ வலுச்சமநிலையின் அடிப்படையாகும். உண்மையில் ஒப்பந்த காலத்தில் இந்தியா இலங்கையில் அமைதி நிலவ வேண்டுமென்பதில் தான் அக்கறையுடன் இருப்பது போன்று பாசாங்கு காட்டினாலும், இராணுவ வலுச்சமநிலை அடிப்படையிலான பேச்சுவார்த்தையை விரும்பியிருக்க வாய்பில்லை. ஏனெனில் இராணுவ வலுச்சமநிலை வாதமானது விடுதலை இராணுவத்திற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரத்தை மறைமுகமாக வழங்கி விடுகின்றது.

இதனை நிச்சயமாக இந்தியா விரும்பியிருக்காது. அதேவேளை சிறிலங்கா படைத்தரப்பு கணிப்பாளர்கள் போலல்லாது இந்தியப் புலனாய்வுதுறையினர் புலிகள் குறித்தும், குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரன் குறித்தும் துல்லியமான சில கணிப்புக்களை கொண்டிருப்பர்.

புலிகள் இதனை ஒரு தந்திரோபாயமாக கைக்கொள்வர் என்ற பயம் இந்தியாவிற்கு நிச்சயமாக இருந்திருக்கும். எனவே இவற்றை கூட்டிக் கழித்து பார்த்தால், இலங்கை அரசியலில் மீண்டும் மோதல் சூழல் வலுவடைய வேண்டுமென்பதில் இந்தியா மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்தது என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.

இவ்வாறு நான் குறிப்பிடுவதற்கு பிறிதொரு முக்கியமான காரணமும் உண்டு. இந்தியா தன்னைச் சுற்றி இருக்கும் நாடுகளில் சுமூகமான நிலைமை இருக்க வேண்டும் என்பதையே தனது பிராந்திய நலனுக்கு சாதகமான விடயமாக குறிப்பிடுவதுண்டு. அதேவேளை இந்தியா அந்த காரணத்தினையே தன்னை சுற்றி இருக்கும் நாடுகளில் தலையீடுவதற்கான வாய்பாகவும் பயன்படுத்திக் கொள்கின்றது.

இலங்கையில் ஒரு முரண் அற்ற சூழல் நிலவ வேண்டும் என்பதே தனது அக்கறையென இந்தியா அடிக்கடி கூறிவந்தாலும் அது தனது மேலாதிக்க கண்காணிப்பின் கீழே நிகழ வேண்டுமென்றே இந்தியா கருதுகிறது. ஆனால் நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் பெருமளவிற்கு இந்தியா தலையீடுவதற்கு வாய்பற்ற சூழலே காணப்பட்டது, ஏற்கனவே கையை சுட்டுக்கொண்ட அனுபவத்தைக் கொண்ட இந்தியாவால் அதிகம் அந்தச் சூழலில் தலையீடு செய்ய முடியவி;ல்லை.

இன்று மீண்டும் இலங்கை அரசியல் யுத்தத்திற்கு மாறியிருக்கும் சூழலில் முரண் தணிப்பு என்ற பேரில் மீண்டும் தனது வலுவான தலையீடுகளை செய்வதற்கு இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்பிற்காகவே இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் மிகவும் சாதுவாக நடந்து கொண்டது.

இன்று இந்தியாவின் வலுவான தலையீடுகளின் பின்புலமாக இருப்பது இந்தியா சமீப கால நிலைமைகள் தொடர்பாக அச்சப்படுவதுதான்.

தற்போதைய சூழலில் இந்தியா இரண்டு விடயங்கள் குறித்து அச்சப்படுகின்றது. ஓன்று, சிறிலங்கா அரசு தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மத்தியில் தோன்றியிருக்கும் பாதமான அபிப்பிராயங்கள். மற்றையது கள நிலைமைகள் தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் இராணுவ நிலைப்பட்ட சுய மதிப்பீடுகள். சர்வதேச அளவில் புதிய தேசங்களின் உதயம் தொடர்பான விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. கொசோவோ சுதந்திர அரசு அங்கீகாரத்தின் பின்னர் தனியரசு குறித்த விவாதங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தச் சூழலில் சிறிலங்கா அரசு நாளுக்கு நாள் சர்வதேச அளவில் மதிப்பிழந்து வருகின்றது. இந்த இரண்டு விடயமும் ஒரு நேர்கோட்டில் சந்தித்து விடுமோ என இந்தியா பயப்படுகின்றது. அதேவேளை கிழக்கில் கருணா விடயத்தைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் பெற்ற வெற்றிகளை இந்தியா கருத்தில் கொண்டாலும் கள நிலைமைகள் தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்புகளின் மத்திபீடுகளை பெருமளவு இந்தியா கருத்தில் கொள்ளவில்லை.

கள நிலைமைகள் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக இருப்பதாகவே இந்தியா அச்சப்படுகின்றது. ஏனெனில் சிறிலங்கா படைத்தரப்பு கொள்கையாளர்கள் போன்று உணர்ச்சிவசப்பட்ட ஆய்வுகளை இந்திய படைத்துறை ஆய்வாளர்கள் கொண்டிருக்கவில்லை.

ஓப்பந்த காலம் விடுதலைப் புலிகளின் போராற்றலை பெருமளவு பாதிக்கும் என்ற ஆய்வுகள் சில சர்வதேச அனுபவங்களின் வழியாக எதிர்பார்க்கபட்டிருந்தாலும

  • கருத்துக்கள உறவுகள்

:D குறுக்கர்,

நீங்கள் இணைத்த இணைப்புக்கு நன்றி. ஆனால், அதில் பெரும்பகுதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி சரித்திரத்தில் ஏற்பட்ட விசேடமான ஏகாதிபத்திய பேரரசுகளோடு ஒப்பிடப்பட்டும், பிற்பகுதியில் இந்திய அவ்வாறான ஒரு உலக வல்லரசாகவோ அல்லது பேரரசாகவோ இன்னும் வரவில்லை என்றும், அது தன்னைச் சுற்றியுள்ள சிறு நாடுகளுடனான பிணக்குகளைத் தீர்க்கப்போராடிக் கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

இதை இங்கு இணைத்ததன் நோக்கம் என்ன ?

என்ன தாரகா இந்தியாவைப் பத்தி, ரெம்பப் பயமூட்டுறாங்க. அண்ணா, இனி இந்தியாவையுங் கடந்து செயற்படும் காலமிது. தமிழகத் தமிழரின் உதவி கோரப்பட்டதோடு, இந்தியா என்ற நாடு கடக்கப்பட்டுவிட்டது. உதவி செய்யாத நிலையில் இந்தியாவில் தொங்கிக் கொண்டிருப்பதால் பயனில்லை.

இந்தியாவின் ஆலோசனைக்கு அமைவாகத்தான் இலங்கை நடந்து கொள்கிறதெனின் இந்தியாவும் இலங்கையும் அதில் தோற்றுவிட்டது, என்பதுதான் என் முடிவு.

மன்னார்க் களம், விடுதலைப்புலிகளுக்கு சாதகமற்றது, சுடு திறனைக் குறைத்தல், இவ்வாறான உபாயங்களால் விடுதலைப் புலிகளை இராணுவ வலிமையில் குறைவடையச் செய்யலாம் என்ற எதிர்பார்ப்புகள் தப்பாகிவிட்டன. மன்னார்க் களத்தில் அரச படையினருக்கு ஈடாக படைக்கலச் சுடுதிறன் விடுதலைப்புலிகளால் நடத்தப்படுகிறது.

இந்த வலிமையைப் புலிகளின் உள்நாட்டுத் தயாரிப்புகளால் மட்டும் ஈடு செய்ய முடியாது. பணம் கொடுத்தும் ஈடுசெய்ய முடியாது. அப்படியானால் அது எவ்வாறு நடைபெறுகிறது. என்ற விடயம் இந்தியாவைக் குழப்பமடைய வைக்கிறது.

அதானால்தான் இலங்கை அரசை இராணுவ ரீதியில் தொய்வடைய விடப் போவதில்லை என்றதும், இராணுவத் தளபதிக்கு இரத்தினக் கம்பள வரவேற்புக் கொடுத்ததும். ஆகவே இந்தியாவை மீறிய செயற்பாடுதான்.

இந்த வலிமையைப் புலிகளின் உள்நாட்டுத் தயாரிப்புகளால் மட்டும் ஈடு செய்ய முடியாது. பணம் கொடுத்தும் ஈடுசெய்ய முடியாது. அப்படியானால் அது எவ்வாறு நடைபெறுகிறது. என்ற விடயம் இந்தியாவைக் குழப்பமடைய வைக்கிறது.

நீங்களும் குறுக்கர் மாதிரி ஆயுதங்களை கடல் கடந்து கொண்டு போகவேணும் ஏண்டு கற்பனையை கிளப்ப வெளிக்கிட்டுடாதேங்கோ....!

ஆயுதங்கள் எப்போதும் உபயம் இலங்கை அரசாங்கம்தான்... சொன்னவர் தமிழ்செல்வன் அண்ணா...!

  • கருத்துக்கள உறவுகள்

:lol: தயா,

முல்லைத்தீவிலையும், ஆனையிறவிலயும் எடுத்த சாமான் எல்லாம் கிட்டத்தட்ட முடியிறக் கட்டத்தை அடைந்திருக்கும் எண்டு நினைக்கிறன். கன காலமா ஒரு பெரிய தாக்குதலும் நடை பெற இல்லை. அப்படியெண்டால் ஆயுதம் வெளியிலிருந்து தானே வர வேணும் ? ஏனெண்டால் மன்னாரில நடக்கிற ஷெல் மழையைப் பாத்தால் புதுச் சாமான் வந்திருக்கும் போலத்தான் கிடக்கு.

அதுதான் இறைவன் அப்படிச் சொல்லியிருப்பார் எண்டு நினைக்கிறன்.

ரகுநாதன்..! உதிலை ஒரு சிக்கல் இருக்கு... ஆயுதங்கள் புலிகள் கடலாலை கொண்டு போகிறார்கள் எண்டதை புலிகள் எப்போதும் சொன்னது இல்லை....! அதுக்கு முக்கிய காரணம் புலம்பெயர் தேசத்திலை சேர்க்கும் பணம்தான் புலிகளின் சண்டைக்கு மிண்டு கொடுக்கிறது எனும் சர்வதேச நிலைப்பாட்டுக்கும் இலங்கை பிரச்சாரத்துக்கும் அடி கோலுகிறது...! அதை தடுத்தாலே புலிகளை பலவீனப்படுத்தி விடலாம் எனும் செயற்பாட்டை எல்லா தரப்பும் ஊக்குவித்து இருக்கிறது....!!

புலம்பெயர் நாட்டில் சேர்க்கும் பணம் தமிழ் மக்களின் இறைமையை பலப்படுத்தவே பயன் படுகிறது... புலிகளுக்கான வளங்கல் இலங்கை படைகளால் தான் நிகழ்கிறது ...

Edited by தயா

நான் கடற்போகுவரத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அரச தரப்புச் செய்திகளின் படி விடுதலைப்புலிகள் ஆயுதவளங்கள் மிக்கவர்களாகக் காணப்படுகிறார்கள் என்கிறது செய்தி. படைக்கல சுடு திறன் குறைவில்லாதுள்ளது. ஆகவே ஆயுதவழங்கல் ஏதோ ஒரு விதத்தில் தடையின்றிக் கிடைக்கிறது என்பதுதான் எனது கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.