Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பிரபாகரன்" திரைபடம் திரைக்கு வருமா ?

Featured Replies

வீரகேசரி இணையம் "பிரபாகரன்" என பெயரிடப்பட்ட சிங்களத் திரைப்படம் தமிழ் நாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பலகைகளுக்கு உட்பட்டுள்ளது. இத் திரைப்படத்துக்கு வெளியாகாத நிலையிலேயே எதிர்ப்புக்கிளம்பி விட்டால் வெளியிட்டால் எப்படி இருக்கும். அதிர்ந்து போனார் துஸார பீரீஸ்.

இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் இலங்கைத் தமிழர்களையும் அவர்களது உணர்வுகளையும் கொச்டைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது .

துஸார பீரீஸின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் இலங்கையில் திரையிடப்பட்டால் நிலைமை மேலும் சிக்கலுக்குள்ளாகும் . கொழும்புத் தமிழர்களின் பாதுகாப்பு கேள்ளிவிக்குறியாகும். இனத் துவேசத்தை தூண்டும் வகையில் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளன.

இவ்வாறு நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம்.பிரிவியூ தியேட்டரில் திருமாவளவன், நடிகர் சத்தியராஜ், இயக்குனர்கள் தங்கர்பச்சான், சீமான் , தயாரிப்பாளர் சங்கத தலைவர் ராம.நாராயணன் உட்பட பலர் படத்தை பார்த்து விட்டு தெரிவித்துள்ளார்கள்.

நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஜெமினி கலையகத்தில் "பிரபாகரன் " திரைப்ப்டச் சுருள்கள் பிரதியிடப்பட்டுக் கொண்டிருந்த சமயமே இத் திரைப்படத்தின் இயக்குனர் துஸார பீரீஸை இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள் சிலர் தாக்கி இருந்தனர்.

தாக்கப்பட்டவர் உடனேயே தாயகம் திரும்பி கொழும்பில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

தற்போது இவர் தனது சகல படச்சுருள்களையும் திருப்பி ஒப்படைக்கும் படி அவர் பிரதியிடுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ள ஜெமினி கலையகத்தை கேட்டுள்ளார்.

திரும்பிக் கொடுக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் நேற்று தெரிவித்திருந்தார் . இந்த படச்சுருள்களை மீளப் பெறுவதற்கான ஏற்பாடுகளில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளது.

இதே வேளை இத்திரைப்படத்தை தமிழ் நாட்டில் திரையிட அனுமதிக்கக் கூடாது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளோம் . இத்திரைப்படத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளோம் என தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் . இவ்வாறு இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

குமுதம் ரிப்போட் கூறியிருந்தது போல இப் படம் வெளிவந்தால் ஒரு பிரளயமே நடக்கும் என்பது படம் வெளிவருமுன்னே உண்மையாகிக் கொண்டிருக்கிறது.

படம் தமிழகத்தில் நிச்சயம் வெளியிடப்பட வேண்டும் அன்று சிங்களம் உணரும்

சிங்கள அரசின் பாதுகாப்பு அமைச்சின் வலையில் வந்த செய்தி

Mobs misled by LTTE inhumanely assault Director of "Prbhakaran” Film

--------------------------------------------------------------------------------

Sri Lankan film director Thushara Pieris was inhumanly assaulted at Gemini Colour Laboratory, in Chennai yesterday by a violent mob lead by LTTE supporters. Thushara Pieris, a young film director who had gone to India to complete the Tamil version of his maiden film "Prbhakaran" suffered serious injuries including cut wounds on his back as the mob laid hands on him as he was coming out of the laboratory.

Thushara told media that he had run to save his life while the mobsters chased him and assaulted him until he got unconscious for about 45 minutes. Indian Police had rescued him and rushed him to immediate medical attention. Thushara is now undergoing treatment at a private hospital in Colombo

The young film director came under the wrath of LTTE, a banned terrorist outfit in India as his maiden film "Prabhakaran" is based on a story of a Child soldier who was brain washed into suicide bomber by the outfit. As child soldiers and brain washed suicide bombers are commonly identified with LTTE terrorists, the film has been considered as a huge threat by the LTTE propagandists.

According to Thushara, there have been massive and misleading propaganda claiming that the film was anti Tamil, by certain Indian media. However, the film maker claimed that the film is not anti Tamil or even not against terrorism, to LTTE to get annoyed.

Before his return to Sri Lanka, the Indian officials had forced him to participate an intimidating meeting with some film producers, technicians and censor board officials. Still with his ailing wounds Thushara agreed screen the film at the lab and to censor out whatever the scene as demanded by some lower level technicians. The filmmaker retuned Sri Lanka allowing his work to be held at the lab.

சிங்கள இணையம் ஒன்றில் கொதிக்கும் சிங்களவர்கள்

http://www.elakiri.com/forum/showthread.php?t=71901

  • தொடங்கியவர்

ஈழவன் அது எலகிரி (பசும்பால்) அல்ல மீகிரி (எருமைப்பால்) குடித்தவர்களின் இணையம். பேரனவாதிகளின் உச்ச துவேசத்தை வெளிப்படுத்தும் இணையம்.

ஜானா

தமிழ் மொழி பேசும் பிரபாகரன் திரைப்படத்தை இலங்கையில் உள்ள தமிழ் திரையரங்குகள் திரையிட முடியாது என்பதை இச் சம்பவம் நடைபெறும் முன்பே அறிவித்து விட்ட நிலையில் இத் திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட இருந்ததாக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இத் திரைப்படம் குறித்தும் பீரிஸ் குறித்தும் இலங்கை சினிமா சம்பந்தப்பட்டவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை.

எனவே இது குறித்த விளம்பரம் தேடும் நோக்கத்துடன் ஆரம்பம் முதலே பல செயல்களில் பீரிஸ் ஈடுபட்டு வந்துள்ளார். தென்னிந்தியாவில் பிரபல்யம் தேட முயன்ற ஒரு செயல் இவருக்கு நல்ல பாடத்தை மட்டுமல்ல, அங்கு தமிழீழ ஆதரவை வெளிக்காட்டவும் உதவி இருக்கிறது.

இருந்தாலும் பல ஏக்கர் விசாலமான இடம் முழுவதும் ஓடியும் பலரது தாக்குதலுக்கு இலக்கானதாகவும்

தான் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவ மனையிலேயே கண் விழித்ததாகவும் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு

பீரிஸ் கதையளந்துள்ளார். அவர் சொல்லும் அளவு ஒன்றுமில்லை. சென்னையில ஒரு ரவுடி மாட்டினாலும்

இதுமாதிரி தட்டு விழுவது சகஜம்? :(

p01.jpg

பார்த்தா அப்படியா இருக்கு?

இது குறித்து சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததற்கு ஒப்பானது என சில அரசியல்வாதிகள் பீரிஸை திட்டித் தீர்க்கிறார்கள்? :wub:

ஜனாதிபதி பிரபாகரனை பார்க்க ஆவல் என்பதெல்லாம் இவரின் விளம்பர உத்தியாகவே சிங்கள சினிமா நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் "இலங்கை யுத்தம் குறித்து சிங்கள இயக்குனர்கள் உருவாக்கிய படங்களில் அநேகமானவை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவை" என சிங்கள இயக்குனர்களை வசைபாடி ஊடகமொன்றுக்கு செவ்வியளித்த பீரிஸ் " தமிழர்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ அல்லது விடுதலைப் புலிகளுக்கோ அல்லது அரசுக்கோ எதிரானதல்ல இத் திரைப்படம். யுத்தத்தால் பாதிக்கப்படும் பாமர மக்கள் படும் வேதனைகளை பேசும் படம் இது" என தமிழ் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிறார்.

சிங்கள ஊடகங்கள் கூட "சென்னையில் பிரபாகரன் இயக்குனருக்கு உதை" (சென்னைகி பிரபாகரன் அத்தியக்ஸட்ட குட்டி") என்ற கேலித்தனமான தலைப்பிலேயே செய்தி வெளியிட்டிருந்தன. அந்த ஊடகங்கள் கூட மக்கள் மனதில் அனுதாபம் ஏற்படும் விதத்தில் செய்திகளை வெளியிடவில்லை.

முதல் வாங்கிய உதை மறு நாளும் கிடைக்கும் எனும் பயத்தில் பீரிஸ், தமிழ் ஆர்வலர்களுக்கு திரையிட முன் சென்னையை விட்டு ஓடி வந்ததே உண்மை. ஜெமினி கலர் லேப் ஊழியர்களே திரைப்படத்தை கோடம்பாகத்தில் உள்ள MM பிரீவீவ் திரையரங்கில் தமிழ் ஆர்வலர்களுக்கு திரையிட்டுக் காட்டியுள்ளனர்.

ஜெமினி கலர் லேப் ஊழியர்கள் திரைப்படத்தை கோடம்பாகத்தில் உள்ள MM பிரீவீவ் திரையரங்கில் திரையிட்டுக் காட்டிய பின்னர் அதை எடுத்துச் சென்று விட்டார்கள். சினிமா தெரியாதவர்களுக்கு பீரிஸின் புளுகு விளம்பரம் எடுபடலாம். அது எல்லோரிடமும் எடுபடாது. அவர் சென்னை செல்ல உள்ள பயத்திலேயே

உண்ணாவிரதம் : கைப்பிற்றி விட்டார்கள் என்பது போன்ற பேச்சுகளை அவிழ்த்து விடுகிறார்.

தமிழ் சென்சாருக்கு காண்பித்து விட்டு சென்னையில் திரையிட ஒழுங்குகளை செய்திருந்த வேளையில் திரைப்படத்தை பறிமுதல் செய்துவிட்டார்கள் என்று சிங்கள ஊடகங்களுக்கு பீரிஸ் தற்போது கூறுவது முழுப் பொய்.

சென்னையில் தமிழ் திரைப்படம் ஒன்றை வெளியிடுவதற்கு உள்ள பிரச்சனை அங்குள்ள சினிமாக்காரர்களுக்கு தெரியும்?

சேரன் போன்ற இயக்குனர்களது படத்தை கூட வெளியிட முடியாமல் தவித்த கதை பலருக்கு தெரியும்?

இவர் பேசுபவை நகைப்பையே உண்டாக்குகிறது?

பிரதிகள் கூட சென்னை ஜெமினி கலர் லேப்பில் பத்திரமாக இருக்கிறது.

பணம் கொடுத்து அவற்றை அவர் எடுத்துச் செல்லலாம். திரையிடுவதற்கு அனுமதி கொடுப்பதும் மறுப்பதும்

வேறு பிரச்சனை?

தவிரவும் இலங்கை திரைப்படக் கூட்டுஸ்தாபன விதிகளின் படி ஏற்கனவே நிலுவையில் உள்ள திரைப்படங்கள் திரையிடப்பட்ட பின்னரே இவரது படத்தை திரையிட அனுமதி கிடைக்கும். இவையெல்லாம் இப்படி இருக்கும் போது பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

தவிரவும் ஏகப்பட்ட நடிகர்கள் தெளிவு இல்லாமையே இத் திரைப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டிருப்பது மற்றுமொரு விடயம்.

இவர் குறித்து நல்ல கருத்துகள் கூட இலங்கை சினிமா நண்பர்களிடம் இல்லை.

அது குறித்த தகவல்கள்:

http://www.ajeevan.ch/content/view/1405/1/

Edited by AJeevan

இதில எது ரவுசு எண்டு தெரியாமல் திரியுறன் யாராவது தெரிஞ்சவை வந்து விளக்கமா சொல்லுங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் அது எலகிரி (பசும்பால்) அல்ல மீகிரி (எருமைப்பால்) குடித்தவர்களின் இணையம். பேரனவாதிகளின் உச்ச துவேசத்தை வெளிப்படுத்தும் இணையம்.

ஜானா

நாங்கள் கொட்டியா கிரி ( புலிப்பால் ) இணையம் தொடங்கினால் போச்சு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.