Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளத்தூய்மை,சிந்தனைத் தெளிவு, செயல் துணிவுடன் தமிழினத்தை வழிநடத்திய தலைவர் தந்தை செல்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்தூய்மை,சிந்தனைத் தெளிவு, செயல் துணிவுடன் தமிழினத்தை வழிநடத்திய தலைவர் தந்தை செல்வா

sjvnk4.jpg

-மா.க.ஈழவேந்தன்-

* இன்று 110 ஆவது பிறந்ததினம்

இருள் படிந்த ஈழத்து அரசியல் வானில் இளஞாயிறு எனத்தோன்றியவர் தந்தை செல்வநாயகம் "மெல்ல மெல்ல பணிபுரியும் செல்வநாயகம் சொல்லுகின்ற பாதையிலே செல்கின்ற வீரர் நாம்". ஈழத்து பெண்கவிஞர் ஒருவர் உயர்ந்து பாராட்டுகின்ற அளவுக்கு ஈழத்து தமிழ் மக்களையெல்லாம் முழுமையாக ஆட்கொண்டு வழிநடத்திச் சென்றவர் அவர்.

விடுதலை தவறி பாழ்பட்டுக்கிடந்த தமிழ் மக்களையெல்லாம் ஒற்றுமைப்படுத்தி ஒளிபொருந்திய வாழ்வு நமக்கு உண்டு. தன்நம்பிக்கையுடன் வாழ், தன்மானத்துடன் வாழ் என்று புது வழி காட்டி புத்துணர்வாக்கிய பெருமை அவரையே சாரும். வரலாறு தரும் தீர்ப்பும் அதுவேயாகும். திசை தெரியாது தத்தளித்த தமிழ் மக்களுக்கு கலங்கரை விளக்கமாகவும், அரசியல் அநாதைகளாக ஆக்கப்பட்ட மக்களை அரவணைத்த தாயாகவும், தந்தையாகவும் விளங்கியவர் அவர். அவருடைய 110 ஆவது பிறந்த நாள் இன்றாகும்.

ஊதிவிட்டால் விழத்தக்க குச்சி வடிவம் தாங்கி நடுநடுங்கும் கைகாலுடன் நடுங்கும் மேனியுடன் நம் முன் காட்சியளித்த தந்தை செல்வா நடுங்காத கொள்கை இருந்ததால் இந்த நாட்டை ஆண்ட அரசுகள் அவரைக் கண்டு நடுங்கின. இந்திய வரலாற்றிலும், பாகிஸ்தான் விடுதலை வரலாற்றிலும் இருபெரும் தலைவர்கள் இத்தகைய வடிவம் கொண்டே விளங்கினர். ஒருவர் அண்ணல் காந்தி மற்றையவர் முகமது அலி ஜின்னா. முன்னயவர் பிரித்தானிய பேரரசை ஆட்டம் காணச்செய்தார். பின்னையவர் இந்திய அரசியலை ஆட்டிப்படைத்தவர். ஒரு நாட்டினைத் தலைமை தாங்குவதற்கு உடல் உறுதியை விட உள்ள உறுதியே முதன்மை வாய்ந்தது என்பதை இத்தலைவர்களின் வரலாறு எடுத்துக்காட்டுகின்றது.

ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய தலையாய பண்புகள் உள்ளத்தூய்மையும், சிந்தனைத் தெளிவும், செயல் துணிவும் என்பதை மறக்காது இருத்தல் நலம். நெருக்கடிக்கு ஈடுகொடுக்கும் தலைவரிடம் இப்பண்புகள் குடியிருந்தால் தான் அவனால் வெற்றி பெற முடியும். இதனை ஃஞுச்ஞீஞுணூ டிண இணூடிண்டிண் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடலாம். இவை அனைத்திற்கும் மேலாக விலைபோக மறுக்கும் ஒரு உறுதிப்பாடும் ஒரு தலைவனிடம் நிலைப்பெற்றிருக்க வேண்டும். எம் தந்தை வேலுப்பிள்ளை செல்வநாயகத்திடம் இப்பண்பு நிறைந்திருக்கிறது.

பல பேசக் காமுறாது சில சொற்களையே அளந்து பேசியவர் தந்தை செல்வநாயகம். சொற்கள் மீது காதல் கொண்டு என் வழக்கை இழக்க நான் ஆயத்தமில்லை என்பது அடிக்கடி அவர் வாயிலிருந்து வரும் சொற்கள். மேற்கூறிய சொற்களோடு வாயில் புன்னகை பூத்த நிலையில் அவர் கூறும் மற்றைய சொற்தொடர் வழக்கில் வெற்றி பெறுவது எளிது. ஆனால் கொள்கையில் வெற்றி பெறுவது கடினம் என்பதுவே ஆகும். தந்தைசொல் மந்திரமாக தந்தை செல்வாவின் கூற்றுக்கள் அமைந்திருந்தன.

வேறு சொற்களில் விளம்பின் தந்தை செல்வா பேசியது மிகக்குறைவு எழுதியது அதைவிட குறைவு. ஆனால் எம் நிலைபற்றி ஆழ்ந்து சிந்தித்து செயலாற்றினார். ஆகவே தான் அவரது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் தமிழ் மக்கள் உன்னிப்பாக கவனித்தனர். "உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினில் ஒளி பிறக்கும். என்பது பாரதியின் கூற்று. பாரதியின் கூற்றிற்கு அமைய தந்தையின் கூற்றுக்கள் தாரக மந்திரமாகவே அமைந்திருந்தன. தந்தையை பொறுத்தவரை மாறுபடும் கருத்துக்களை பொறுமையோடு செவிமடுப்பார். ஆனால் தான் ஆழ்ந்த சிந்தனையோடு எடுத்த முடிவுகளை விட்டுக்கொடுத்ததில்லை. மாற்றாரின் புன்முறுவலோ, மயக்கும் மொழிகளோ தந்தையை என்றும் மயக்கியதில்லை. மாறாக தானும் புன்முறுவல் பூத்து தன் கருமத்தில் கண்ணாயிருந்தவர். எதிர்த்து அழிக்க முடியாத தலைவர்களை அணைத்து புகழ்மாலை சூட்டி பட்டம் பதவி வழங்கி அழிப்பது அரசியல் எதிரிகள் கையாளும் ஒரு சூழ்ச்சி, அரசியலில் நிறைய அனுபவம் பெற்ற தந்தை அவர்கள் இந்த நிலையற்ற மாயைகளில் மயங்க மறுத்தார். தந்தையின் வழிவந்தவன் என்ற முறையில் தான் அண்மையில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட உரையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாவிடின் உங்கள் பதவி காப்பாற்றப்படும் என அமைச்சர் பெர்னான்டோ புள்ளே அளித்த உறுதிமொழியை தூக்கியெறிந்து பாராளுமன்ற பதவியை பறிகொடுத்தேன். ஆனால் தமிழ் மானத்தை இறுதி வரை காப்பாற்றினேன். வரலாறு இந்நிகழ்ச்சியை மூடி மறைக்க முடியாது.

சட்டத்துறையில் மிக உன்னத நிலையில் இருந்த போதும், அரசியல் வழக்கறிஞராக விளங்கிய போதும் நான் என்ற அகந்தை நான் என்ற செருக்கு அவரை ஆட்கொண்டதில்லை. காட்சிக்கு எளியவராய், கடுஞ்சொல் அற்றவராய், வன்சொற்கள் பொழியப்பட்ட போதும், தமக்குரிய புன்முறுவல் பூத்து தன்னடக்கத்தின் திருவுருவமாய் விளங்கியவர் தந்தை செல்வநாயகம். தந்தையை எவரும் எளிதில் கோபத்திற்கு ஆளாக்க முடியாது. ஆனால், அவரின் கோபத்தை தூண்டக்கூடிய செயல் ஒன்று இருந்ததென்றால் அது நம்பிக்கைத்துரோகச் செயல் ஒன்று தான். குறிப்பாக தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து அனுப்பிய தலைவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்தால் அவர் பல்லை நெருடிக் கோபித்த காட்சிகள் இன்னும் எமக்கு நினைவுக்கு வருகின்றன. தந்தை செல்வா தனிமனிதரை எல்லை மீறி புகழ்வதையோ தனிமனித வழிபாட்டையோ விரும்பியதில்லை. மாறாக வெறுத்தார் என்றே கூற முடியும்.

தலைவர்கள் தடம்புரண்டாலும் கொள்கையில் நிலைத்து வாழ வேண்டும் என்பது அவரின் நிலையான கோட்பாடு. ஆகவே, தான் இன்று தோன்றி நாளை மறையக்கூடிய தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து தத்துவத்தை வழிபடுங்கள் என அடிக்கடி வலியுறுத்தியதுண்டு.

"நானோ கிழவன் நாளை நான் சாகக் கூடும். ஆகவே என்னைக் கும்பிடாதீர்கள் . என் கொள்கையை கும்பிடுங்கள் என மீள மீள வலியுறுத்தியுள்ளார். அறிஞர் அண்ணா கூட தலைவனைச் சுற்றி வராதீர்கள் . தத்துவத்தைச் சுற்றி வாருங்கள் என்று கூறிய கூற்று இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

ஓரினம், மொழி, உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் இழந்தாலும் மீண்டும் வாழ்வு பெற வாய்ப்புண்டு. ஆனால், தம் தாயகத்தை, வாழ்வகத்தை,பாரம்பரிய பிரதேசத்தை பறிகொடுக்குமாயின் அந்த இனத்திற்கு எதிர்காலமே இல்லை. ஓரினம் தன்னைத்தானே உணர்த்துவதற்கு மட்டுமல்ல தன் உயிர் பாதுகாப்பிக்கு நிலப்பாதுகாப்புத் தேவை என்பதை உணர்த்தியவர் தந்தை செல்வநாயகம்.

இவரின் சிந்தனையை முழுமையாக ஏற்று சிந்தித்து செயலாற்றிய மூன்று தமிழ் தலைவர்களை இங்கு நினைவு கொள்ள வேண்டும். "ஒருவர் வாழ்கவகத்தைக் காத்து வண்டமிழை வாழ்வித்த வன்னிய சிங்கம்." மற்றையவர் "பொல்லா விலங்குகளுக்கும் கீழ்ப்பறவைகளுக்கும் இருக்கும் பாதுகாப்பு கூட தமிழனுக்கு இல்லையே என கண்ணீர் விட்டு கதறிய டாக்டர் நாகநாதன். சுதந்திரத்துக்காக மட்டும் நாம் சுதந்திரம் கேட்கவில்லை. எம் தமிழ் மண்ணில் விளைந்த சோற்றை பிறர் பறிக்காது உண்பதற்கும் சுதந்திரம் வேண்டும் என்று குரலெழுப்பிய சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளை இன்னொருவர் . எனவே, தான் சோறு உண்பதற்கும் சுதந்திரம் வேண்டும் என்று அவர் கூறினார்.

இணைப்பாட்சிக்காக 25 ஆண்டுகள் ஓங்கி குரலெழுப்பிய தந்தை செல்வா ஆட்சி பீடத்தில் அமர்ந்த ஒவ்வொரு சிங்கள அரசினாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டவர். கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் மைகாய்வதற்கு முன்பே கிழித்தெறியப்பட்டன. பண்டா - செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட நிலையில் கிழித்தெறியப்பட்ட காரணத்தை விளக்கி பண்டாரநாயக்க அனுப்பிய கடிதத்தோடு அன்றைய நிதி அமைச்சர் ஸ்டான்லி டி.சொய்சா தந்தை செல்வாவைக் கண்டு அவர் இல்லத்தில் உரையாடிய போது நான் தந்தை செல்வாவுக்கு அருகில் வீற்றிருந்தேன். ஸ்டான்லி டி சொய்சாவை பார்த்து தந்தை செல்வா கூறியவை "செய்தியை நேர்மையுடன் அறிவித்த பண்டாரநாயக்கவுக்கு நன்றி கூறுங்கள்.ஆனால் நாட்டில் விரைவில் இரத்தக்களரி ஏற்படப்போகிறது" என்று அவர் கூறியதற்கமைய 1958 இல் ஏற்பட்ட தமிழின படுகொலையை நாம் எளிதில் மறக்கமுடியாது.

அறவழியில் தமிழீழத்தை அடைய தந்தை செல்வா முயன்றார். இதனை சிங்கள இனம் மறுத்தது. காலச்சூழ்நிலைக்கேற்ப கடைப்பிடிக்கப்படும் வழி முறைகள் மாற்றத்திற்குள்ளாகின.வேலுப்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.