Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான்புலிகள் தோற்றுவித்த புதிய அச்சுறுத்தல் - வேல்ஸிலிருந்து அருஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வான்புலிகள் தோற்றுவித்த புதிய அச்சுறுத்தல் - வேல்ஸிலிருந்து அருஷ்

உலக சந்தையில் அதிகரித்துவரும் விலை உயர்வுகளில் எரிபொருட்களின் விலை உயர்வுக்கு அடுத்த நிலையில் அரிசியின் விலை உயர்ந்து வருவது மூன்றாம் உலக நாடுகளை அதிகம் பாதித்து வருகின்றது.

இந்த விலை உயர்வு மேற்கத்தைய நாடுகளைவிட அரிசி உணவு வகையில் அதிகம் தங்கியுள்ள ஆசிய நாடுகளையே அதிகம் பாதித்துள்ளது. அரிசியை குறைந்தளவில் நுகர்ந்துவரும் பிரித்தானியாவிலும் அதன் விலை கடந்த வாரம் இரு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரியல் எரிபெருட்களுக்கான பயிர்ச்செய்கை, வறட்சி என்பன அரிசி உற்பத்தியை அதிகம் பாதித்துள்ள காரணிகள். இந்தக் காரணிகளால் குறைவடைந்துள்ள அரிசி உற்பத்தி ஆண்டுக்கான உலகின் தேவையாகிய 430 மில்லியன் தொன் அளவை நிறைவுசெய்யப் போதுமானது அல்ல. எனினும் தமது மக்களின் உணவு நெருக்கடிகளை சீர்செய்வதற்கு அதிக நிதியை ஒதுக்கவேண்டியது அரசுகளின் கடமையாக உள்ள போதும் இலங்கையில் தீவிரமடைந்துவரும் போர் முனைப்புக்கள் மக்களை மேலும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

கடந்தவாரம் முகமாலை களமுனையில் படையினர் சந்தித்த மூன்றாவது தோல்வி பல மட்டங்களில் சூடான விமர்சனங்களை ஏற்படுத்தி வருவதுடன், படைத்தரப்பிலும் பல கருத்து மோதல்களை அது உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 23 ஆம் திகதி முகமாலையில் நடைபெற்ற இந்த சமர் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாது என்ற கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில் இராணுவத்தளபதி அதனை மறுத்துள்ளார். விடுதலைப்புலிகளின் பலத்தை தாம் குறைத்து மதிப்பிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படை நடவடிக்கையில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து அவர் அதிகம் எதுவும் தெரிவிக்காதபோதும், 165 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 450 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கடந்த வார நடுப்பகுதியில் கொழும்பில் இருந்து வெளியாகிய வாரஏடு ஒன்று இராணுவ உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும் மேற்படி படை நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்விக்கான பழிச்சொல் 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சமந்த சூரியபண்டாரவின் தலையில் வீழ்ந்துள்ளதுடன், அவரின் பதவியும் பறிபோயுள்ளது. தோல்வியுறும் படை நடவடிக்கைகளில் இருந்து உயர் அதிகாரிகள் தப்புவதற்காக கட்டளைத் தளபதிகளின் பதவிகளைப் பறிப்பது இலங்கையில் வழமையான ஒன்று.

கடந்த ஆண்டு மன்னார் களமுனையில் விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளில் நடைபெற்ற சமரில் படையினர் சந்தித்த இழப்புகளை தொடர்ந்து 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுமித் மானவடு பதவிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் வன்னியில் நடைபெற்ற நீர்சிந்து படை நடவடிக்கை தோல்வியில் முடிந்த போது அதனை வழிநடத்திய மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா அதன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இவ்வாறு நீக்கப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது.

எனினும் படைத் தளபதிகளின் மறுசீரமைப்பில், 53 ஆவது படையணிக்கு தற்போதைய 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் கமால் குனரத்தினவும், 55 ஆவது படையணிக்கு பிரிகேடியர் பிரசன்னா டி சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவியேற்பு வைபவங்கள் வடபோர்முனையின் பலாலி படைத்தளத்தில் கடந்த வாரம் மிகவும் எளிமையாக நடைபெற்று முடிந்துள்ளது.

எனினும் இந்த நியமனங்கள் படைத்தரப்பில் பல கேள்விகளை தோற்றுவித்துள்ளது. ஏனெனில் இலங்கைப் படைத்தரப்பில் சிறப்பு படையணியின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியிருந்த பிரிகேடியர் பிரசன்னா டீ சில்வா கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இராணுவத்தலைமையகத்தால் ஓரங்கட்டப்பட்டிருந்தார்.

கிழக்கில் வாகரை மீதான சிறப்பு படை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வந்த கேணல் (அன்று கேணல் தர அதிகாரி) சில்வாவிடம் சிறப்பு படையணியின் சில கொம்பனித் துருப்புக்களை மன்னார் களமுனைக்கு அனுப்புமாறு இராணுவத்தளபதி அன்று கோரியிருந்தார். ஆனால் கேணல் சில்வா அதற்கு மறுத்ததனால் அவரை கட்டாய ஓய்வில் செல்லுமாறு இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா கோரியிருந்தார்.

எனினும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அதில் தலையிட்டு பிரசன்ன டீ சில்வாவை இராணுவத்தின் நிர்வாகப் பிரிவுக்கு மாற்றியதால் இந்த கருத்து மோதல் முடிவுக்கு வந்தது.

வாகரை படைநடவடிக்கை தொடர்பான வெற்றிவிழா பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் கொண்டாடப்பட்டபோதும் அன்றைய 23 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் சிறப்புப் படைக் கட்டளை அதிகாரி கேணல் பிரசன்னா டீ சில்வா ஆகியோர் பாதுகாப்புசபை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது பிரிகேடியர் பிரசன்ன டீ சில்வா மீண்டும் முன்னணி களமுனையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது இராணுவத் தளபதியின் செல்வாக்கு குறைய ஆரம்பித்துள்ளதா என்ற சந்தேகத்தை பல மட்டங்களில் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறு முகமாலை களமுனையின் இழப்புக்கள் பலத்த சர்ச்சைகளை உருவாக்கி வருகையில், அந்த சமர் நடைபெற்று மூன்று தினங்கள் கடந்த நிலையில் மணலாறு களமுனையின் உக்கிரம் அதிகாரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மணலாறு களமுனையில் உள்ள படையினர் மண்கிண்டிமலை, கொக்குத்தொடுவாய் நோக்கி முன்நகர முற்பட்டபோது அவர்களின் நிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய செறிவான பீரங்கித் தாக்குதல்களில் நான்கு படையினர் கொல்லப்பட்டும், 45 இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தும் உள்ளதாக படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

இந்த எறிகணை வீச்சுக்களைத் தொடர்ந்து 27 ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவில் உள்ள விடுதலைப்புலிகளின் தளம் ஒன்றில் இருந்து புறப்பட்டு சென்ற வான்புலிகளின் இரண்டு சிலின்143 இலகுரக விமானங்கள் மணலாறு, கல்குளமா, சிங்கபுர பகுதிகளில் உள்ள 23 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட்டின் தலைமையகம் மற்றும் பல்குழல் உந்துகணைச் செலுத்திகள், பீரங்கிகளின் தளங்கள் மீது 3 குண்டுகளை வீசிவிட்டு திரும்பியுள்ளன.

நடைபெற்றுவரும் நான்காவது ஈழப்போரில் வான்புலிகள் நடத்திய ஆறாவது தாக்குதல் இதுவாகும். எனினும் தரைத்தாக்குதலுக்கு ஆதரவாக வான்புலிகள் ஆதரவுத் தாக்குதலை நடத்தியது இது இரண்டாவது தடவையாகும். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீதான தாக்குதலின் போதும் வான்புலிகள் ஆதரவுத் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

கடந்தவாரம் நடைபெற்ற வான்தாக்குதலில் தமக்கு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், ஒரு படைச்சிப்பாய் காயமடைந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்து வருகின்றபோதும் அதனை உறுதிப்படுத்துவது சிரமமானது. அதிக பாதுகாப்பு கொண்ட இராணுவ வலயத்திற்குள் நடைபெற்ற இந்த தாக்குதலின் இழப்புக்கள் வெளிவருவது மிகவும் கடினமானது.

எனினும் வான்புலிகளின் இந்த தாக்குதல் உளவியல் தாக்கங்களை தென்னிலங்கையில் உண்டுபண்ணியுள்ளது. வான்புலிகளின் தாக்குதல் வலிமையை முறியடிக்கும் நோக்குடன் தாக்குதல் விமானங்கள், மற்றும் உலங்குவானூர்திகளை கடந்த ஒரு வருடமாக நவீனமயப்படுத்தி வரும் அரசுக்கு இந்த தாக்குதல் பலத்த ஒரு அடியாக வீழந்துள்ளதாகவே கருதப்படுகின்றது.

நவீன ராடர்கள், வான் எதிர்ப்பு பீரங்கிகள், கனரகத் துப்பாக்கிகள், குறுந்தூர விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்பவற்றை அரசு கடந்த ஒரு வருடத்தில் அதிகமாக கொள்வனவு செய்ததுடன், எம்.ஐ24 மற்றும் எம்.ஐ35 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளையும் நவீனமயப்படுத்தியிருந்தது.

விடுதலைப்புலிகளின் விமானங்களை இடைமறித்து தாக்குவதற்கு தன்னிடம் உள்ள எப்7 ரக தாக்குதல் விமானங்களை மறுசீரமைத்ததுடன், சீனத் தயாரிப்பான புதிய நவீன எப்7 மற்றும் ரஷ்யாவின் மிக்29 ரக தாக்குதல் விமானங்களின் கொள்வனவுகளும் முடுக்கிவிடப்பட்டிருந்தன.

அரசின் இந்த ஓராண்டு காலப்பலப்படுத்தல்களின் மத்தியில் விடுதலைப்புலிகள் ஆறாவது தடவையாகவும் வான் தாக்குதலை நடத்தியதும், அவர்களின் விமானங்கள் வெற்றிகரமாகத் தளம் திரும்பியதும் தென்னிலங்கையில் பலத்த சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. இந்த தாக்குதலின் பின்னர் அரசின் படை பலம் தொடர்பாக தனது சந்தேகத்தையும் வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் விமானங்கள் வான்படையினரின் ராடர் திரைகளில் அவதானிக்கப்பட்டபோதும் அவை குறுகிய காலத்திற்குள் தாக்குதலை நடத்திவிட்டு திரும்பியதால் தம்மால் அவற்றை தாக்க முடியவில்லை என இந்த தாக்குதலை தடுக்கமுடியாதது குறித்து கருத்து தெரிவிக்கையில் இலங்கை விமானப்படை பேச்சாளர் அன்× விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எனினும் இரவில் தாக்குதல் நடத்தும் சிறந்த பயிற்சி பெற்ற விடுதலைப்புலிகளின் விமானிகளும், அவர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுமே வான் தாக்குதல் வெற்றிகளின் இரகசியம் என படைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விமானப் படையினரை பொறுத்தவரையில் இரவில் தாக்குதல் நடத்தும் வல்லமையில் அவர்கள் இன்றுவரை மேலோங்கவில்லை என்ற கருத்துக்களும் பலமாக எழுந்துள்ளன.

அதிகாலை 1.25 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து வானில் எழுந்த விடுதலைப்புலிகளின் இரு விமானங்கள் நெடுங்கேணிக்கு மேலாக பறந்து சென்று மணலாறு, கல்குளமா மற்றும் சிங்கபுர பகுதிகள் மீது குண்டுகளை வீசிவிட்டு அதிகாலை 1.50 மணியளவில் தளம் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் தொடர்பாக விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக எதுவும் தெரிவிக்காதபோதும் இது ஒரு வழமையான வான்தாக்குதல் என விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

படையினரின் ராடர் திரைகளில் குழப்பங்களை உண்டுபண்ணும் நோக்கத்துடன் விடுதலைப்புலிகளின் உலங்குவானூர்தி ஒன்றும் பறப்பில் ஈடுபட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றபோதும், தமது விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனேயே உலங்குவானூர்தி பறப்பில் ஈடுபட்டதாக வேறு சில தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் படையினரின் முன்னணிக் களமுனைகள் மீது வான்புலிகள் தாக்குதலை நடத்தியது படையினரின் வான் எதிர்ப்பு பலம் தொடர்பான பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. மணிக்கு ஏறத்தாள 240 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த விமானங்கள் முல்லைத்தீவில் இருந்து மணலாற்றை 8 தொடக்கம் 10 நிமிடங்களில் அடைந்துவிடும் எனவும் எனவே அவற்றை துரத்திச் சென்று தாக்குவது கடினம் எனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் தொடர்ச்சியாக நடைபெறும் வான் தாக்குதல்கள், விடுதலைப்புலிகளின் விமானங்களை சிறியரக ஆயுதங்களால் சுட்டுவீழ்த்த முடியும் என்ற படைத்தரப்பின் நம்பிக்கைகளில் பலத்த வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் தாழ்வாகப் பறக்கும் இந்த விமானங்களை சாம்16 ரக ஏவுகணைகளால் குறிவைப்பதும் கடினம் என படைத்துறை அவதானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது மரங்களுக்கு மேலாக தாழ்வாகப் பறக்கும் இந்த விமானங்களை ஏவுகணைகள் தமது தாக்குதல் இலக்கிற்குள் கொண்டு வருவதற்கு சிறிது நேரம் எடுக்கும். அந்த இடைவெளியில் விமானம் வேறு மரங்களையும் தாண்டி சென்றுவிடும் என்பது அவர்களின் வாதம்.

கடந்த ஆண்டு கொலன்னாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலின் போது வான்புலிகளின் விமானங்களை வீழ்த்துவதற்கு படையினர் சாம்16 ஏவுகணைகள் மூலம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததும் அறிந்தைவையே.

எனினும் வான்புலிகள் தொடர்ச்சியாக இலங்கை அரசின் அதி உயர் பாதுகாப்புக்களைக் கொண்ட கட்டுநாயக்கா, அனுராதபுரம் போன்ற முன்னணி வான்படைத் தளங்களையும் , பலாலி கூட்டுப்படைத்தளத்தையும் , கொலன்னாவ, முத்துராஜவெல பொருளாதார மையங்களையும் , மணலாறு முன்னணி நிலைகளையும் தாக்கிவிட்டு வெற்றிகரமாகத் திரும்பியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

புலிகளின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் உயர் தொழில்நுட்பங்கள், மற்றும் நுணுக்கமான உத்திகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை இது என்பதை மறுக்க முடியாது.

இதனிடையே உக்கிரமடைந்துள்ள மணலாற்று களமுனையில் விடுதலைப்புலிகள் கடந்த புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக எறிகணை தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர்.

ஜனகபுர, கிரிபன்வேவா, ஜாயா 11, பதவிசிறீபுர ஆகிய பகுதிகளில் வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலில் 25 இராணுவத்தினர் காயமடைந்திருந்தனர் என்று புலிகள் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதிகளில் வசித்து வந்த சிங்களக் குடியேற்றவாசிகளும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

மேலும் கடந்த வியாழக்கிழமை கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் உள்ள துத்துவௌõ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதும் எல்லைக் கிராமங்களில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

வடபோர்முனையின் எல்லைக் கிராமங்களின் பாதுகாப்பு கருதி கிழக்கில் இருந்த சிறப்பு அதிரடிப்படையினர் கெப்பிட்டிக்கொல்லாவ, அனுராதபுரம் பகுதிகளுக்கு அண்மையில் நகர்த்தப்பட்டிருந்தனர். ஆனால் கிழக்கின் களமுனைகளின் தன்மைகள் வேறு வடக்கு போர்முனைகள் வேறு எனபதை தான் இந்த தாக்குதல் எடுத்து காட்டியுள்ளது.

முகமாலையில் ஆரம்பித்த தாக்குதல்கள் தென்னிலங்கையின் பிலியந்தலைவரை சென்று தற்போது மணலாறில் மையங்கொண்டுள்ளது. மணலாற்று களமுனையில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 59 ஆவது படையணியையும், அவர்களுக்கு ஆதரவு வழங்கிவரும் 23 ஆவது படையணியின் 3 அவது பிரிகேட் படையினரையும் குறிவைத்து விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் எறிகணை வீச்சுக்கள் அப்பகுதியில் பெரும் சமர் ஒன்று விரைவில் ஆரம்பிக்க போகின்றது என்பதை எதிர்வுகூறி நிற்கின்றது.

அண்மையில் முல்லைத்தீவில் உள்ள சாலை கடற்பரப்பில் வைத்து ஒரு தொகுதி எறிகணைகளையும், வேறு பல நவீன ஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் தரையிறக்கி உள்ளதாகவும், அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் எறிகணை வீச்சுக்கள் அதனையே உறுதிப்படுத்துவதாகவும் படையினரின் புலனாய்வுத்துறை அண்மையில் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும் படையினர் தற்போது எதிர்கொண்டு வரும் பல முனை தாக்குதல்களுக்கு மத்தியில் வான்புலிகளின் தாக்குதல்கள் புதிய அச்சுறுத்தல்களை அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த அச்சுறுத்தல்களில் இரண்டு முக்கியமானவை.

ஓன்று முல்லைத்தீவில் இருந்து எழுந்த வான்புலிகள் 10 நிமிடங்களில் மணலாற்றை தாக்கியுள்ளனர் என்றால் திருமலையில் உள்ள படைநிலைகளை தாக்குவதற்கு அவர்களுக்கு அதிக சிரமங்கள் இருக்கப்போவதில்லை.

இரண்டாவது தொடர்ச்சியாக நடைபெறும் வான் தாக்குதல்கள் மூலம் வான்புலிகள் ஒரு போரியல் அங்கீகாரத்தை பெற்றுவிடுவார்கள் .

-நன்றி - வீரகேசரி-

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=8&

போரினால் தமிழரை அச்சமூட்ட புறப்பட்டவர்கள், இன்று அச்சப்படுகிறார்களா? அதுதான் "லங்காதீப" பொறாமைப்பட்டிருக்கிறது.

வணக்கம்,

இதற்கு தலைப்பு வான்புலிகளால் அச்சுறுத்தல் என்று கொடுத்துள்ளார்கள், இத்தலைப்பை மட்டுமே பார்ப்பவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரிடும் என்பதை கட்டுரையாளரின் கவனத்திற்க்கு கொணர்கிறேன். அவர்கள் யாருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்? அடிக்கடி அச்சுறுத்தல் அச்சுறுத்தல் என்று மொட்டையாக தலைப்பிடாதீர்கள்.

நன்றி

சிவராஜா

கட்டுரையாளரின் தலையங்கம் ஏதோ கொஞ்சம் பிறழ்வானதாத்தான் இருக்கு.. அதுக்கு தலையங்கம்தான் பிழை எண்டில்லை... பந்திகூட பிறழ்வா இருக்கலாம்... வன்புலிகள் பற்றி கடைசீலதான் கதைச்சு இருக்கு..

தலையங்கத்தை சரியாமாத்தலாம் அல்லது பந்தியை மாத்தி எழுதலாம்... இது எனது பக்க கருத்தே ஒழிய இதுதான் சரியெண்டில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.