Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும், தமிழரும்!

Featured Replies

தமிழ் காட்டு மிராண்டி மொழி – ஏன்? எப்படி?

தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.

ஆங்கிலத்துக்கு ஆதரவு

ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும் முயற்சித்தும் வந்திருக்கிறேன்.

அக்காலத்தில் எல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100க்கு சுமார் 5 முதல் 10பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களாகவே இருந்தாலும் நூற்றுக்கு 75 பேர்கள் போல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஆனதால் அவர்களிலும் 100க்கு 90 பேர்கள் போல் பகுத்தறிவற்ற மக்களாக இருந்து வந்ததால் அவர்களுக்கு மதப்பற்று, கடவுள் பற்று, பழைய பழக்க வழக்க பற்று, குறிபற்று எப்படி முரட்டுத்தனமான பற்றாக இருந்து வந்ததோ – வருகிறதோ அது போன்றே தமிழ் மொழிப் பற்றும் முரட்டுத்தனமாக இருந்து வந்தது, வருகிறது.

தமிழ்ப்புலவர்கள் நிலை

அதிலும் தமிழ் படித்த தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்துவான்களாக… தமிழ்ப்புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும், பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.

புலவர்களின் மூட நம்பிக்கையும், பிடிவாதமும்

மற்றும் புலவர், வித்துவான் என்ற பெயரால் யார் வாழ்ந்தவராக, வாழ்பவராக இருந்தாலும் அவர்கள் பெரிய மதப் பற்றுள்ளவர்களாகவும், மதவாதிகளாகவும் இருந்து வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டதால் புலவர், வித்துவான் என்றால் மேலும் மூடநம்பிக்கைக் காரர்களாகவும், பிடிவாதக் காரர்களாகவுமே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.

பகுத்தறியும் தத்துவ விசாரணை அறவே இல்லாதவர்கள்

அதிலும் கொஞ்ச காலத்திற்கு முன்வரையில் புலவர்கள், வித்துவான்கள் என்றால் 100க்கு 90 பிச்சை எடுத்தே அதாவது இச்சகம் பேசி பிச்சை வாங்கும் தொழில் உடையவர் என்று ஆகிவிட்டதால் பொய்யோ, புளுகோ, கற்பனையோ, ஏதேதோ பேசி பணம் பெறுவதிலேயே கவலையுள்ளவர்களாகவே வாழ்ந்ததால் தத்துவ விசாரணை என்பது அவர்களுக்கு வெகுதூரமாகவே இருக்க வேண்டியதாகி விட்டது.

ஆகவே தான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர் வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்காக அல்லாமல், மற்றெதற்கும் பயன்படுவதற்கு இல்லாதவர்களாகவே ஆகிவிட்டார்கள்.

ஆசிரியர், மாணவர் நிலையும் பகுத்தறிவைத் தரவில்லை

புலவர்களை நீக்கிவிட்டால் மற்ற ஆசிரியர்கள் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனர்களாகவே சமீப காலம் வரை அமர்ந்திருக்கும்படியாக நம் நாடு இருந்து வந்ததால், அவர்களிடம் பயின்ற எந்த மாணவனுக்கும் பகுத்தறிவு என்றால் எத்தனை படி? என்று கேட்கும் நிலை தான் மாணவர்களது நிலையாக ஆகிவிட்டது.

விஞ்ஞானம் பயிற்றுவிக்கும் ஆசிரியனும், விஞ்ஞானம் பயிலும் மாணவனும் அதில் முதல் வகுப்பாக பாஸ் பெற்ற மாணவனும் கூட நெற்றியில் முக்கோடு சாம்பல் பட்டை அணிந்தவனாக இருந்து கொண்டுதான் பயிலுவான். என்னய்யா அக்கிரமம் நீ சயின்சு படிக்கிறாய்; தத்துவ சாஸ்திரம் படிக்கின்றாய்; நெற்றியில் சாம்பல் பட்டை போட்டிருக்கிறாயே என்றால் சிறிதும் வெட்கமில்லாமல் இதற்கும், அதற்கும் என்னய்யா சம்பந்தம்? நீ என்ன நாத்திகனா? என்று கேட்பான்.

இந்த நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், குறிப்பாக புலவர் வித்துவான்களுக்கும் இவருடன் உழல்வோருக்கும் தமிழை, தமிழ் மொழியைப் பற்றிய அறிவு எவ்வளவு இருக்க முடியும்?

மக்கள் சிந்தனைக்கு முட்டுக்கட்டை

“அயோக்கியர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு கடைசி மார்க்கம் அரசியல் துறை” என்பது ஆக ஒரு மேல்நாட்டு அறிஞர் சொன்னதுபோல் அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள் மக்களின் மடமையை நிறுத்தி அறிந்ததன் காரணமாய் அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாகக் கொண்டு தாய்மொழிப்பற்று வேஷம் போட்டுக்கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம் மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.

சிந்திக்காத எதிர்ப்புப் பேச்சுக்கள்

இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்லுகிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. “வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம்” என்பதைத் தவிர அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலேயே பேசிவருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் “தமிழ்மொழி 3000 – 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி” என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள்.

நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கிய காரணமாய் சொல்லுகிறேன்.

அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணினியாகட்டும் மற்றும் எவன் தானாகட்டும் இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லாவிட்டால் நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனா?

பிரிமிட்டிவ் (Primitive) என்றால் அதன் தத்துவமென்ன? பார்பேரியன் (Barbarian), பார்பரிசம் (Barbarism) என்றால் அதன் பொருள் என்ன?

3000 – 4000 ஆண்டுகளுக்கு முன் என்பதற்கு பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பரிசம் என்பதற்கும் அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பவற்றிற்கும் என்ன பேதம் கற்பிக்க முடியும்?

(தொடரும்)

நன்றி : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்

50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007.

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்கிருதத்தை எதிர்த்து தமிழ் வளர்க்க்ப புறப்பட்ட *** ராமசாமி எனத் தம்பட்டம் அடிப்பவர்களுக்கு நல்ல பதில் லக்கி. ஆங்கிலத்துக்கு வக்களாத்து வாங்கித் தமிழைச் சிதைக்க வழி செய்ய ஒரு துரோகத்தை இனம் காட்டியிருக்கின்றீர்கள்.

பெற்ற தாயிற்கு சமூக அறிவு இல்லை என்றால் யாராவது அவரைக் காட்டுமிராண்டி எனத் திட்டுவார்களா? அத் தாயிற்குப் போதுமான மரியாதையைக் காப்பாற்றி, அவளை உயர்நிலைக்கு மதிக்கும்படி செய்வார்கள்.

ஒரு உண்மையான தமிழன் என்றால் என்ன செய்வான்?

தமிழில் இருக்கின்ற தேவைகளைத் தீர்வு செய்து அதை மேலே என்னும் வளப்படுத்தவே சிந்திப்பான்.

இவருக்குத் தான் தமிழ் பெற்ற தாய் தமிழில்லை, பிழைக்கவந்த மொழி தானே தமிழ். எம் தாய்மொழியைக் பார்த்துக் காட்டுமிராண்டி எனத் திட்ட இவர் யார்?

அந்த மனிதர் திட்டுகின்றாராம். வக்காளத்து வாங்குபவர்கள் பெருமையோடு இங்கே இணைக்கின்றார்களாம். சங்கராச்சாரியார் தமிழை நீசமொழி என்று திட்டிவிட்டு இப்படி ஒரு காரணம் சொல்ல எவ்வளவு நேரமாகும். அப்போது மட்டும் ஏதோ தமிழ் உணர்வாளர்கள் போல நாடகம் போட்டீர்களே?

தமிழைத் திட்டிய பின் ஏற்பட்ட எதிர்ப்பினைச் சமாளிக்கவே அந்தக் *** இப்படி ஒரு சமாளிப்பை வெளியிட்டிருப்பார் போலும்.

Edited by வலைஞன்

  • தொடங்கியவர்

பெற்ற தாயிற்கு சமூக அறிவு இல்லை என்றால் யாராவது அவரைக் காட்டுமிராண்டி எனத் திட்டுவார்களா?

நமது தாய் காட்டுமிராண்டியாக இருந்தால் காட்டுமிராண்டி என்றுதானே சொல்லமுடியும்? நாகரிக மங்கை என்று பொய் சொல்ல சொல்கிறீர்களா? :lol:

  • தொடங்கியவர்

பழமையில் பிடிப்பு இன்னும் நீங்கவில்லையே?

இன்று நமது வாழ்வு, மதம், கடவுள், மொழி, இலட்சியம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தன்மை பொருந்தியவை தவிர வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம்? எதை குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம்?

நான் நாற்பதாண்டுகளுக்கு மேலாகவே சொல்லி வருகிறேன், எழுதி வருகிறேன் (குடிஅரசு பத்திரிகையை பார்)

“கடவுளை கற்பித்தவன் முட்டாள்,

பரப்பினவன் அயோக்கியன்,

வணங்குகிறவன் காட்டுமிராண்டி”

என்று! அதற்காக கோபப்படாத அரசியல்வாதிகள் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றால் இவனுக்கு என்ன பெயர் இடுவது என்றே நமக்கு புரியவில்லை.

தமிழை சீர்திருத்தி வளர்க்க எவனும் முன்வரவில்லையே?

தமிழை, தமிழ் எழுத்துக்களை திருத்த வேண்டும் என்று 1927 வாக்கில் கருத்து கொடுத்தேன்; வகை சொன்னேன். ஒருவனாவது சிந்திக்கவில்லை. பார்ப்பனர்கள் கூட ஏற்றுக் கொண்டார்கள்; நம் காட்டுமிராண்டிகள் சிறிது கூட சிந்திக்கவில்லை.

பிறகு தமிழ் மொழிக்கு (கமால் பாட்சா செய்தது போல) ஆங்கில எழுத்துக்களை எடுத்துக் கொண்டு காட்டுமிராண்டிக்கால எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன். இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டை செய்யவே இல்லை. இந்நிலையில் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஒரு இலட்சத்து ஒன்றாவது தடவையாக சொல்லுவதற்கு ஏன் ஆத்திரம் காட்டுகிறாய்? கூலிக்கு மாரடிக்கும் அழுகைத் தொழிலில் வாழ்பவர்கள் போல ஏன் அடித்துக் கொள்ளுகிறாய்?

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?

தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்கு பாதகம் என்ன?

இங்கிலிஷினால் சிறுமை என்ன?

தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?

நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியமானவனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால் பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது? என்று கேட்கிறேன்.

நம் மக்கள் வளர்ச்சியில் நாட்டம் வேண்டும்?

நம் மக்கள் வளர்ச்சி அடையவேண்டிய நிலை இன்னும் வெகுதூரம் இருக்கிறது. அதனால் வேகமாய்ச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழ் காட்டுமிராண்டி மொழி – ஏன்? எப்படி?

புலவர்களுக்கு (தமிழ் படித்து தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்று பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கிற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆகவேண்டி இருக்கிறது.

இத்தனைக் காலமும் தமிழ் தோன்றிய 3000, 4000 ஆண்டுகாலமாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால் எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இதுவரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

முக்கிய புலவர்களும், மத உணர்வுள்ள ஆரிய அடிமைகளே!

இன்று தமிழ் உலகில் தமிழ்ப் புலவர்களில் 2, 3 புலவர்களின் பெயர்கள் அடிப்படுகின்றன. அவர்கள் தொல்காப்பியன், திருவள்ளுவன், கம்பன்.

இம்மூவரில்

தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி.

திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்றவகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றார்.

கம்பன் இன்றைய அரசியல்வாதிகள், தேசபக்தர்கள் பலர் போல அவர் படித்த தமிழ் அறிவை தமிழ் எதிரியாகிய பார்ப்பனர்க்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழு பித்தலாட்டக்காரன். தன்னை பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்ல பயப்படும் கருத்துக்களையெல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான்!

சாதியை சாதித்தொழிலை ஆதரித்தவர்கள்

இம்மூவர்களும் சாதியையும், சாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர்களே ஆவார்கள்.

சந்தர்ப்பம் நேரும் போது இக்கருத்தை நல்ல வண்ணம் விளக்க காத்திருக்கிறேன். இவர்களை விட்டு தமிழர்கள் இனி எந்த புலவனை, எந்த இலக்கியத்தை தமிழன் நன்மைக்கு ஆதாரமாக எடுத்துக்காட்ட தமிழபிமானிகள் என்பவர்கள் முன்வரப்போகிறீர்கள் என்று கேட்கிறேன்.

(தொடரும்)

நன்றி : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்

50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007.

[தமிழ்ப்புலவர்கள் நிலை

அதிலும் தமிழ் படித்த தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்துவான்களாக… தமிழ்ப்புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும், பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.

நல்ல கண்டு பிடிப்பு லக்கி...! திருவள்ளுவர் தொடங்கி கண்ணதாசன் வரை பகுத்தறிவு இல்லாதவர்களாகத்தான் இருந்தார்கள்.....

பெரியாரின் அறிவுரையை கேட்ட பயனாக ஆங்கிலம்( தமிங்கிலம்) படித்து அறிவாளிகளாகி கல்யாணம்தான் கட்டிகொண்டு ஓடிப்போலாமா ஓடிப்போய் கல்யாணம் கட்டி கொள்வோமா எண்டு மிகவும் பகுத்தறிவு மிக்க பாடல்களை சினேகனும் , பா விஜயும் எழுதுகிறார்கள்...!!

  • தொடங்கியவர்

தயா!

தந்தை பெரியார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சிந்தனைகள் இவை. இச்சிந்தனைகளை அந்த காலக்கட்டத்தோடு பொருந்திப் பார்க்க வேண்டும். அக்காலக்கட்டத்தில் இச்சிந்தனைகளின் பால் இருந்த நியாயத்தை தமிழன் உணர்ந்ததாலேயே இன்று ஓரளவுக்கு கணினிக்கு முன்பு தமிழில் தட்டச்சக்கூடிய அளவிலான முன்னேற்றமாவது எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

தயா!

தந்தை பெரியார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சிந்தனைகள் இவை. இச்சிந்தனைகளை அந்த காலக்கட்டத்தோடு பொருந்திப் பார்க்க வேண்டும். அக்காலக்கட்டத்தில் இச்சிந்தனைகளின் பால் இருந்த நியாயத்தை தமிழன் உணர்ந்ததாலேயே இன்று ஓரளவுக்கு கணினிக்கு முன்பு தமிழில் தட்டச்சக்கூடிய அளவிலான முன்னேற்றமாவது எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

அப்போ பெரியாரின் ஐம்பது ஆண்டுக்கு முந்தய ஓவ்வாட்த சிந்தனையை இப்போ ஏன் தூக்கி பிடிக்கிறீர்கள்..??

அது இப்போதும் ஒவ்வாதது என்பது புரியவில்லையா...? அப்போதும் அது ஒவ்வவில்லை எனும் உண்மை தெரியவில்லையா...?

பெரியாரின் வருகைக்கு முன்னமே தமிழ் வேண்டிய பல மாற்றங்களை கொண்டு வந்து விட்டது... சங்கம் வளர்த்த மதுரை எண்று கேள்விப்பட்டதோடு நிக்காமல் அப்போ என்ன செய்தார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்... இண்றைக்கும் தமிழன் ஆதிகால தமிழ் பிராமி எழுத்துக்களேடு இல்லை... மாற்றம் காலத்துக்கு காலம் வந்து கொண்டுதான் இருக்கிறது..

கணனிக்கு தேவையான இப்போதைய கலைச்சொற்கள் எல்லாம் பெரியார் அருளியதும் இல்லை...

Edited by தயா

  • தொடங்கியவர்

அப்போ பெரியாரின் ஐம்பது ஆண்டுக்கு முந்தய ஓவ்வாட்த சிந்தனையை இப்போ ஏன் தூக்கி பிடிக்கிறீர்கள்..??

பெரியார் சிந்தனைகளை அப்படியே இயந்திரத்துக்கு பொருத்துவது மாதிரி இப்போதைய காலக்கட்டத்துக்கு யாரும் பொருத்தவில்லை. பெரியாரின் சிந்தனைகள் மீதான கட்டமைப்பை ஏற்படுத்தி எங்களது சிந்தனைகளை பட்டை தீட்டி வருகிறோம். தந்தை பெரியாரே சொன்னதுபோல அவரது எழுத்துக்களையும், பேச்சுக்களையும் பலமுறை மறுவாசிப்பு செய்து காலத்துக்கு தகுந்தது போல அவர் சொன்னதை பிரச்சாரம் செய்துவருகிறோம்.

தந்தை பெரியார் சொன்ன விஷயங்களில் கடவுள் மறுப்பு, பார்ப்பனீய எதிர்ப்பு, பெண் விடுதலை போன்றவை காலத்துக்கும் பொருந்தக்கூடியவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் சிந்தனைகளை அப்படியே இயந்திரத்துக்கு பொருத்துவது மாதிரி இப்போதைய காலக்கட்டத்துக்கு யாரும் பொருத்தவில்லை. பெரியாரின் சிந்தனைகள் மீதான கட்டமைப்பை ஏற்படுத்தி எங்களது சிந்தனைகளை பட்டை தீட்டி வருகிறோம். தந்தை பெரியாரே சொன்னதுபோல அவரது எழுத்துக்களையும், பேச்சுக்களையும் பலமுறை மறுவாசிப்பு செய்து காலத்துக்கு தகுந்தது போல அவர் சொன்னதை பிரச்சாரம் செய்துவருகிறோம்.

தந்தை பெரியார் சொன்ன விஷயங்களில் கடவுள் மறுப்பு, பார்ப்பனீய எதிர்ப்பு, பெண் விடுதலை போன்றவை காலத்துக்கும் பொருந்தக்கூடியவை.

பெரியார் 50 -60 வருடங்களுக்கு முன்னர் சொன்னவை கேட்டவை தற்போது தான் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது என்பது ஈழத்தமிழர்களுக்கு தெரியுமோ தெரியாதா என எனக்கு தெரியாது.

உதாரணமாக அனைவரும் அர்ச்சகர் திட்டம், ஈரோடு மாநாகராட்சி ஆதல் போன்றவை சமீபத்தில் நடந்தவை.

திருவள்ளுவரின் காலத்தைக் கொண்டு பார்க்கின்ற போது அவருடைய சிந்தனைகள் பிரமிக்க வைப்பவை. வெறும் எழுத்தோடு நின்று விட்டதால், ஒரு புத்தர் போன்று அவரால் வர முடியாமல் போய் விட்டது.

கண்ணதாசனிடம் நல்ல தமிழறிவு உண்டு. ஆனால் பகுத்தறிவு இல்லை. "அர்த்தமுள்ள இந்து மதம்" என்று தலைப்புப் போட்டு விட்டு இந்து மதம் பற்றி ஒன்றுமே எழுதாமல் விட்டதே அதற்கு ஆதாரம்.

  • தொடங்கியவர்

கண்ணதாசனிடம் நல்ல தமிழறிவு உண்டு. ஆனால் பகுத்தறிவு இல்லை. "அர்த்தமுள்ள இந்து மதம்" என்று தலைப்புப் போட்டு விட்டு இந்து மதம் பற்றி ஒன்றுமே எழுதாமல் விட்டதே அதற்கு ஆதாரம்.

கண்ணதாசனிடமும் பகுத்தறிவு ஒரு காலத்தில் இருந்தது. சமயங்களை வைத்து சம்பாதிக்க முடியும் என்பதை அறிந்துகொண்டதும் பகுத்தறிவை கழற்றி வைத்துவிட்டு பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்கு பாதகம் என்ன?

இப்படி ஒரு கேள்வியைக் கேட்பவர் பகுத்தறிவுவாதி...???! முடியல்ல..??!

தமிழ்மொழிக்கு எழுத்துச் சீர்திருத்தம் அவசியமென்பது.. கணணி மொழிப்பாவனை சார்ந்து தேவைப்பட்ட ஒன்று. அத்தெத் தேவைகள் எழும் போது மொழி என்பது அதன் அடிப்படை மாறாது மெருகேறுவது இயல்பு.

பழைய ஆங்கிலம் படிக்கக் கடினமானது. சேக்ஸ்பியரின் நூல்களை இலகுவாக படித்து விளங்க முடியாது. ஆனால் நவீன ஆங்கிலம் இலகுவான விளங்கக் கூடியது.

அதே போல் பழங்கால கடின செய்யுள் தமிழை இலகு நடைக்கு மாற்றியவர்களில் பாரதி போன்ற புலவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அது தமிழின் பாவனையில் முக்கிய ஒரு திருப்புமுனை என்றால் மிகையல்ல.

தமிழர் தமிழ் என்று இன்று கூறிக் கொண்டு பகுத்தறிவை அவர்களை நோக்கி விதைக்க ஒரு மொழி வடிவம் இருக்கு என்றால் அதைத் தந்த பெருமை நாவலர் போன்ற இலகு தமிழ் இலக்கணங்களை வகுத்த மொழியறிவாளர்களைச் சாரும்.

அதைவிடுத்து தமிழை ஒதுக்கி வைப்பதால் என்ன நட்டம் என்று அவர்கள் ஆங்கில மொழி ஆதிக்கம் தமிழைச் சுவீகரிக்க அனுமதிக்கவில்லை.

தமிழுக்கு எழுத்துச் சீர்திருத்தம் மட்டுமல்ல வேண்டப்பட்டது. தமிழ் நவீன சொல்லாடல்களுக்கான பதங்களை உருவாக்குவதில் சிரமப்பட்டுக் கொண்டது. இன்றும் அந்த நிலை தொடர்கிறது. அதுதான் போக்கப்பட வேண்டும். தமிழ் அறிவியல் கற்க முடியாத மொழியல்ல. நிர்வாகம் செய்ய முடியாத மொழியல்ல.

சீனர்களும் ஜப்பானியர்களும் ரஷ்சியர்களும் ஜேர்மனியர்களும் பிரஞ்சுக்காரரும்.. தங்கள் மொழிகளை ஒதுக்கி வைச்சிட்டு ஆங்கிலம் படிக்க என்று முடிவுகட்டவில்லை. தமது மொழியை வளப்படுத்திக் கொள்ள அனைத்தையும் செய்து கொண்டு.. தங்கள் மொழித் தேசியத்தை நிறுவிக் கொண்டுதான் ஆங்கிலத்தையும் படிக்க போயினர்.

அவர்கள் ஒரு போதும் தங்கள் மொழியை இரண்டாம் நிலைக்கு கொண்டு செல்லவோ.. அல்லது ஒதுக்கவோ அல்லது ஒதுக்கினால் என்ன நட்டம் என்றோ கேட்கும் அறிவிலிகளாக இருக்கவில்லை.

தமிழன் அன்று மொழியை ஒதுக்கி இருந்தால் இன்று தமிழ் மற்றும் தமிழர் என்ற இனம் இருந்திருக்காது. எல்லோரும் மலையாளிகளாக.. அல்லது கர்நாடகத்தவராக.. அல்லது தெலுங்கராக.. ஆங்கிலத்தில் "பீற்றிங்" கொண்டு திரித்திருப்பார்கள்..!

தமிழ் தமிழர் தமிழர் தேசம் என்பதன் அடையாளத்தின் இருப்பே மொழி சார்ந்துதான் பெருதும் அமைகிறது. இந்தச் சிறிய உண்மையைக் கூட உணராத உளறல்கள் எல்லாம் பகுத்தறிவாக தமிழர்கள் முன் வருகிறது..!

சீர்திருத்தம் தேவையற்ற நேரத்தில் எழுத்துக்களைச் சீர்திருத்துவது அவசியமில்லை. மொழி சீர்த்திருத்தப்பட அதற்கு அவசியமான தேவை எழ வேண்டும். ஆனால் சொல்லாடல் என்பது காலத்துக்கு காலம் தேவையோடு பெருகும் போதுதான் மொழி வளமிக்கதாக உணரப்படும். தமிழ் அதிலிருந்து வேறுப்பட்டதாகத் தெரியவில்லை.

அணுவைக் கூட பிளந்தவள்... ஒளவை. அவள்.. கற்பனையில் கண்டதைத் தான் பின்னர் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். எமது புலவர்கள் மூடர்கள் அல்ல. அவர்கள் வாழ்வியல் சமூகவியல் அரசியல் அறிவியல் என்று பல தளங்களிலும் தமது சிந்தனையை சிதறவிட்டே இருந்துள்ளனர். ***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

அவ்வை கண்ட அணு என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட செய்தி. தமிழில் மிக மிகச் சிறியதை "அணு" என்பார்கள். பின்பு அறிவியல் Atomஐ கண்டுபிடித்த போது தமிழர்கள் அதற்கு தமிழில் இருந்த பொருத்தமான சொல்லாகிய அணு என்பதை சூட்டினார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வை கண்ட அணு என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட செய்தி. தமிழில் மிக மிகச் சிறியதை "அணு" என்பார்கள். பின்பு அறிவியல் Atomஐ கண்டுபிடித்த போது தமிழர்கள் அதற்கு தமிழில் இருந்த பொருத்தமான சொல்லாகிய அணு என்பதை சூட்டினார்கள்

அது மிகைப்படுத்திய செய்தியல்லவே. அணு மிக மிகச் சிறியது என்பதுதான் அறிவியல் யதார்த்தமும். ஒளவை அதை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகின் அடிப்படை துணிக்கையின் பரிமானம் பற்றி தமிழில் அறிமுகம் செய்துள்ளதாக எடுத்துக் கொள்வதில் தவறில்லை..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அணு மிக மிகச் சிறியது என்பதுதான் அறிவியல் யதார்த்தமும். ஒளவை அதை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகின் அடிப்படை துணிக்கையின் பரிமானம் பற்றி தமிழில் அறிமுகம் செய்துள்ளதாக எடுத்துக் கொள்வதில் தவறில்லை

எல்லாருமே சால்ஜாப்பு கதைகள் சொல்வதில் கில்லாடிகளாக இருக்கின்றனர். தான் செய்ததை கவிண்டு பிரன்டாவது சரியெண்டு சொல்லிடோணும் எண்டதில எல்லாருமே மன்னர்கள்தான்

பலே பலே

தொடரட்டும் ஆட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக்கூர்வாய்ச் செங்கால் நாராய்

நீயும் உன் மனைவியும் தென் திசைக் குமரியாடி

வட திசைக்கு ஏகுவீராயின்

எம்மூர்ச் சத்திமுத்தி வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரை கனைகுரல் பல்லி

பாடுபார்த்திருக்கும் எம்மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதிகூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்

ஏழையாளனைக் கணடனம் எனுமே

நாரையே நாரையே! சிவந்த கால்களைக்கொண்ட நாரையே!

பனம்பழத்திலிருந்து தோன்றிய பனங்கிழங்கை நெட்டுவாக்கில்

பிளந்தது போன்ற பவள நிறத்து கூரிய வாயையுடைய செங்கால்

நாரையே!

நீயும் உன் மனைவியும் தென் திசையில் உள்ள குமரிக்கடலில்

நீராடிவிட்டு, வட திசையை நோக்கிச் செல்வீர்களாயின் நீங்கள்

போகும் வழியில் உள்ள எங்கள் ஊராகிய சத்திமுற்றத்தின்

சத்திமுத்தி தடாகத்தில் தங்குங்கள். என் மனைவி நனைந்துபோன

சுவற்றின் கூரையில் இருக்கும் கனத்த குரல் கொண்ட கவுளி என்ன

மாதிரியான சகுனத்தைச் சொல்கிறது என்று எதிர்பார்த்தவாறு இருப்பாள்.

அவளைக் கண்டு இதைச் சொல்லுங்கள்:

'எங்கள் அரசன் மாறன் வழுதியின் கூடல் மாநகரத்தில் உடுத்திக்கொள்ள

ஆடையின்றி வாடைக் குளிரிலிருந்து தப்புவதற்காகக் கையைக் கொண்டு

உடலைப் பொத்திக்கொண்டு, காலை மடக்கி உடலுடன் ஒட்டித்தழுவி,

பாம்புப்பெட்டிக்குள் அடைபட்டு முடங்கிக்கிடந்து மூச்சு விட்டுக்

கொண்டிருக்கும் பாம்பைப்போன்ற நிலையில் உள்ள ஏழையாளனைக்

கண்டோம்' என்று அவளிடம் சொல்லுங்கள்.

இது ஒரு தமிழ் புலவனின் பாடலும் பொருளும்.

இதனை சாதாரணமாகப்படிக்கும் ஒருவருக்கு நாரையை புலவன் தற்செயலாக தேர்வு செய்து தூது அனுப்பினான் என்பதாகத் தான் தெரியும். ஆனால் இதன் பின்னால் உள்ள அறிவியல் உண்மை ஒன்று புலப்படுவது இலகுவில்லை.

பறவைகளுக்கு பார்வைப்புலன் மிகுந்த விருத்திக்குரியது. அவற்றின் பார்வைக்குரிய மூளையின் பகுதி சிறப்பு விருத்தியைக் காண்பிப்பது. அவை இரை துல்லியமாக நோக்க என்று அவ்வாறு உள்ளன. இந்த உண்மையை இயற்கையில் அவதானித்த புலவன்.. வறுமையால் வேயப்படாது செல்லரித்துப் போன தன் வீட்டுக் கூரையின் துவாரம் வழி மழை பெய்து சுவர் நனைந்த வீட்டிடை இருந்து தனக்காய் ஏங்கும் மனைவிக்காய் தூது அனுப்புவது என்பது.. நாரை பறந்து கொண்டே தூவரத்தினூடு வீட்டை அடையாளம் கண்டு கொள்ளும் தன்மையது என்ற அறிவியல் சார் உண்மையை இலாவகமாகக் கையாண்டிருப்பது புலனாகும்..!

இப்படி எமது புலவர்கள்.. லேசுப்பட்டவர்கள் அல்ல. இயற்கையின் சிறந்த அவதானிப்பார்களாக இருந்துள்ளனர். எனது ஆசிரியர் ஒருவர் சொல்லுவார்.. don't say opinion without having observation.. என்று. மனிதன் இயற்கையை கூர்ந்து அவதானித்ததன் விளைவுதான் இன்றைய அறிவியல்...! :lol:

பெரியார் சிந்தனைகளை அப்படியே இயந்திரத்துக்கு பொருத்துவது மாதிரி இப்போதைய காலக்கட்டத்துக்கு யாரும் பொருத்தவில்லை. பெரியாரின் சிந்தனைகள் மீதான கட்டமைப்பை ஏற்படுத்தி எங்களது சிந்தனைகளை பட்டை தீட்டி வருகிறோம். தந்தை பெரியாரே சொன்னதுபோல அவரது எழுத்துக்களையும், பேச்சுக்களையும் பலமுறை மறுவாசிப்பு செய்து காலத்துக்கு தகுந்தது போல அவர் சொன்னதை பிரச்சாரம் செய்துவருகிறோம்.

தந்தை பெரியார் சொன்ன விஷயங்களில் கடவுள் மறுப்பு, பார்ப்பனீய எதிர்ப்பு, பெண் விடுதலை போன்றவை காலத்துக்கும் பொருந்தக்கூடியவை.

கடவுள் மறுப்பு, பெண் வி்டுதலையை எல்லாம் பெரியாருக்கும் முந்தய சமதர்மவாதிகள் சொல்லி செண்றுவிட்டார்கள்...!! கார்ள்ஸ் மாஸ்க் சொன்னதுகளையும் மாவோ போண்றவர்கள் சாதித்தியும் விட பெரியதாக ஒண்றையும் பெரியார் சாதித்து விடவில்லை..

கம்யூனிச தத்துவங்களை திருடி எடுத்து அது பெரியாரின் தத்துவம் எண்று சொல்ல உங்களுக்கு ஆதீதமான தைரியம் வேண்டும்...!!

பெரியார் சொன்ன, செய்தவைகளில் சிறப்பானவை இடது சாரிகளுக்கு உரியது... அதை எங்கிருந்து பெற்றார் என்பது பெரியாருக்கும் தெரியும்...! நீங்கள் பெரியார்தான் அறிமுகப்படுத்தினார் எண்று நினைப்பது அறியாமை...

பெரியார் தானாக செய்தது பார்ப்பணீய எதிர்புதான்... அது இப்போ நடை முறைபடுத்த படுகிறது எண்றால் கடந்த தேர்தல்களில் திமுக பாஜக வோடு கூட்டு வைத்து இருந்திருக்க முடியாது... இனிமேலும் கூட்டு வைக்காது என்பதுக்கு உத்தரவாதமும் கிடையாது....

(இரண்டு நாட்களுக்கு வேறு இடம் செல்ல இருப்பதால் உங்களுக்கு பதில் எழுத முடியாது)

  • தொடங்கியவர்

கம்பனுக்கு சிலை வைத்தது மானம் கெடுவதா?

உலகில் ஒரு மாபெரும் மானம் கெட்ட சமுதாயம் என்றால் அது கம்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறும் கூட்டமேயாகும்.

இன்று நம் நாட்டில் சமதர்மம் என்பது ஜாதியில், செல்வத்தில், பொருளில் என்பது மாத்திரம் அல்லாமல் குணத்திலும் சமதர்மம் என்பதாக கருதப்படுகிறது.

பார்ப்பானும், பறையனும் சமம்; முதலாளியும், பிச்சைக்காரனும் சமம் என்பதோடு யோக்கியனும், அயோக்கியனும் சமம். தமிழர் சமுதாயத்திற்கு நன்மை செய்தவனும், கேடு செய்து கூலிவாங்கி பிழைப்பவனும் சமம், சாணியும், சவ்வாதமும் சமம் என்ற அளவுக்கு இன்று நம் நாட்டில் சமதர்மம் தாண்டவமாடுகிறது.

மக்களிடம் சமத்துவம் ஏற்படுவதற்கு முட்டுக்கட்டை போடுவதா?

இது ஒருபுறம் இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக கீழ்மைப்படுத்தப்பட்டு இழிநிலையில் இறுத்தப்பட்ட தமிழன் விடுதலை பெற்ற மனிதத் தன்மை அடைந்த மற்ற உலக மக்களுடன் சரிசமமாய் வாழவேண்டுமென்று உயிரைக் கொடுத்து சிலர் பாடுபடுகிற போது இந்த தமிழ்ப் புலவர் கூட்டமும், அவர்களால் முட்டாள்களாகப்பட்ட தமிழர் கூட்டமும், தமிழ், தமிழ் மொழி, தமிழர் சமுதாயம் என்னும் பேரால் முட்டுக்கட்டை போடுவது என்றால் இந்தக் கூட்டத்திற்கு என்றைக்குத் தான் தன்மான உணர்ச்சி வந்து மனிதத்தன்மை ஏற்படப் போகிறது?

பார்ப்பான் உன் தமிழை ஏற்கிறானா? ஏன்?

அட முட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சாஸ்திரங்களில் எழுதிவைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி அடித்ததோடு மாத்திரமில்லாமல் உன்னையும் உள்ளே புகவிடாமல் தீண்டத்தகாதவான வைத்திருக்கிறானே?

இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா? உங்களப்பன் வெட்கப்பட்டாரா? அவனை விட்டு விட்டு என்னிடம் வந்து மோதிக்கொள்கிறாயே? இதற்கு அறிவில்லை என்று பெயரா? மானமில்லை என்று பெயரா? “நீ யாருக்கு பிறந்தவன்?” என்று என்னைக் கேட்கிறாய்; நான் கேட்கிறேன், உன் தமிழையும், உன்னையும் உள்ளே விடாமல் இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பார்ப்பான் செய்கிறான். நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று குனிந்து கும்பிடுகிறாயே? மடையா! மானங்கெட்டவனே! நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன்.

தமிழ்ப்படித்ததன் பலன் இதுதான்!

புலவனே! நீ கெடுவதோடு தமிழ் மக்களை ஒவ்வொருவனையும் பார்த்து “நீ யாருக்கு பிறந்தவன்?” என்று கேட்கும்படி செய்கிறாயே? இதுதானே உன் தமிழின், தமிழ் சமுதாயத்தின் பெருமை?

தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானது எப்படி?

தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதிவைத்து, “கீதை” வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பொண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே? நீ நாக்கைப் பிடுங்கிக் கொண்டாயா? நீ யாருக்கு பிறந்தாய் என்பது பற்றி சிறிதவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்க மாட்டாய்.

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றி கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது – தம்பீ! உன்னாலும், அதாவது நீ யாருக்கு பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்ல முடியாது; அந்தப் பிரச்சினையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும் தான் தேவை.

மனிதனுக்கு மானம் தேவை!

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா? என்னிடம் இருக்கிறதா? என்பது தான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.

அதையும் விட தமிழ் மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்கு தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கியமான, முதலாவது கேள்வி.

ஈனசாதியாக்கிய முட்டாளை வணங்குவது ஈனமல்லவா?

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் உனக்கு பொத்துக் கொண்டது. ஆனால் தமிழன் ஈனஜாதிப்பயன் என்று கூறி உன்னை ஈனஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் பொத்துக் கொள்ளவில்லை! அது மாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்னை ஈனஜாதியாய் நடத்துகின்றவர்கள் காலில் விழுகிறீர்கள். அவனை சாமி என்று கூறுகிறீர்கள், பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ளுகிறீர்கள்.

சிந்தித்துப் பார்! நீ யார், நீங்கள் யாரென்று?

“வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட சமத்துவ சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக் ஒண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளியும், அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப் பாருங்கள்.

உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளாய் இருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ்சாதியார் என்பவர்களுக்கு சம சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தின் இடமிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாய் வாழ வேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும், நமது சகோதரிகள் விஷயத்திலும் நம் பெண் குழந்தைகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா?

(முற்றும்)

நன்றி : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்

50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.